அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

வியாழன், 30 டிசம்பர், 2010

தெரிந்து கொள்ளுங்கள்


இமாம் முஸ்லிம்
நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிகளை ஆதாரப்பபூர்வமாக தொகுத்தவர்களில் இரண்டாம் இடத்தை இமாம் முஸ்லிம் அவர்கள் பெற்றுள்ளார்கள்.
இயற்பெயர் : முஸ்லிம்
தந்தைபெயர் : ஹஜ்ஜாஜ்
பிறந்தஊர் : ஈரானில் உள்ள பெரிய பட்டணமான நைஸாபூர்
பிறந்தநாள் : ஹிஜ்ரீ 204
கல்வி: இமாம் முஸ்லிம் அவர்கள் பிறந்த ஊர் அதிகமான அறிஞர்களைப் பெற்றிருந்தது. முஸ்லிம் அவர்கள் ஹதீஸ்கலையில் வல்லுனராக மாற சிறந்த சூல்நிலை அங்கு காணப்பட்டது. தனது 14ஆம் வயதிலே இந்த அறிஞர்களிடமிருந்து கற்க ஆரம்பித்தார்கள்.
கல்விக்காக பயணம் செய்த ஊர்கள் : ஈரானைச் சுற்றியுள்ள சில ஊர்கள், ரய், இராக்கில் உள்ள கூஃபா, பஸரா, மற்றும் பக்தாத், ஹிஜாஸ், சிரியா, எகிப்து
ஆசிரியர்கள் : இமாம் புகாரீ, அப்துல்லாஹ் பின் மஸ்லமா, அஹ்மத் பின் ஹம்பல், இஸ்ஹாக் பின் ராஹவைஹி, யஹ்யா பின் மயீன், இஸ்ஹாக் பின் மன்சூர், அபூபக்ர் பின் அபீ ஷைபா, அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹ்மான், முஹம்மத் பின் அலா, முஹம்மத் பின் அப்துல்லாஹ், அப்து பின் þமைத் மற்றும் பலர்.
மாணவர்கள் : முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப், அபூஹாத்திம் முஹம்மத் பின் இத்ரீஸ், முஹம்மத் பின் நள்ர் அலீ பின் þஸைன், ஸாலிஹ் பின் முஹம்மத், அபூ ஈஸா திர்மிதீ, அஹ்மத் பின் ஸலமா, இப்னு þஸைமா, அபூஅவானா மற்றும் பலர்
இமாம் முஸ்லிம் அவர்களைப் பற்றி அறிஞர்களின் கருத்து :
முஸ்லிம்களுக்காக உன்னை அல்லாஹ் நிலைக்கச் செய்யும் போதெல்லாம் நாங்கள் ஓருபோதும் நன்மையை இழக்கமாட்டோம் என்று இவரது ஆசிரியர் இஸ்ஹாக் கூறியுள்ளார்.
அபூ ஸர்ஆவும் அபூ ஹாத்திமும், நம்பகத்தன்மை வாய்ந்த ஹதீஸ்களை அறிவதில் தங்கள் காலத்தில் வாழ்ந்த அறிஞர்களை விட முஸ்லிம் இமாமை முற்படுத்தினர் என்று அஹ்மத் பின் ஸலமா கூறியுள்ளார்.
தொகுத்த புத்தகங்கள் : ஸஹீஹ் முஸ்லிம், அல்குனா வல்அஸ்மா, அல்முன்ஃபரிதா(த்)து வல்வுஹ்தான், அத்தபகாத், ரிஜாலு உர்வதப்னி சுபைர், அத்தம்யீஸ்,அல்முஸ்னதுல் கபீர், அல்ஜாமிவுல் கபீர், அல்இலல், முஸ்னது மாலிக், அல்விஜ்தான், மஷாயிகுமாலிக்,அவ்லாதுஸ் ஸஹாபா.
இறப்பு : இமாம் முஸ்லிம் அவர்கள் ஹிஜ்ரி 261 ஆம் ஆண்டு ரஜப் மாதம் ஞாயிற்றுக்கிழமையன்று 56 வயதில்  நைஸாஃபூர் என்ற தன் ஊரிலே மரணம் அடைந்தார்கள்.


0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites