அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

வெள்ளி, 28 மே, 2010

இவர்களை தெரியுமா? பாகம் 3


உட்பிரிவுகள்:
அஷ்ஷைகிய்யா குருத்துவம்
அர்ரிஷ்திய்யா
இஸ்மாயீலிய்யா
நுஸைரிகள் ஃ அலவியர்கள் சிரியாவில் உள்ளனர்.
தகிய்யா:
ஷீஆக்களின் கொள்கைகளில் முக்கிய ஒன்றாக தகிய்யாவும் அமைந்துள்ளது. மக்களை ஏமாற்றுவதாகவே இக்கொள்கையைக் கடைபிடிக்கின்றனர். இதன் மறுவடிவம் நிபாக் நயவஞ்சகத்தனம் பொய் ஆகும். ஷீஆக் கொள்கை உள்ள ஒருவர் உள்ளொன்று வைத்துக் கொண்டு அதற்கு மாற்றமாக வெளிப்படையாக வேறொன்றைக் கூறுவதே தகிய்யாஎனும் நயவஞ்சகத்தனமாகும்.
தகிய்யாவை ஷீஆக் கொள்கையின் முக்கிய அடிப்படைகளில் ஒன்றாகக் கருதுகின்றனர். அதற்கான சில உதாரணங்கள்.
தகிய்யாஎன்பது எமது மார்க்கத்தின் அடிப்படை. அதனை மறுப்பவனுக்கு மார்க்கத்தில் இடமில்லை.
தகிய்யா என்னுடையதும் எனது முன்னோர்களினதும் வழிமுறை. அது இல்லாதவனுக்கு ஈமான் இல்லைஎன்று ஷீஆ இமாம்களில் ஒருவரான அபூ ஜஃபர் கூறுகின்றார். (அல்காபி 2 27)
தகிய்யாஎன்பது மார்க்கத்திற்கு கண்ணியம் தருகின்றது. அது இல்லாவிடில் மார்க்கத்திற்கு இழிவு என ஷீஆக்கள் நம்புகின்றனர்.
நீங்கள் பின்பற்றும் மார்க்கத்தை மறைத்து வைத்துக் கொண்டால் அல்லாஹ் உங்களை கண்ணியப்படுத்துவான்; அதனை வெளிப்படையாகப் பரப்பினால் அல்லாஹ் உங்களை இழிவடையச் செய்வான்என அபூ அப்தில்லாஹ் எனும் ஷீஆ அறிஞர் குறிப்பிடுகின்றார். (அல்காபி 2 176)
இஸ்மாயீலிய்யா:
இவர்கள் இமாமிய்யாவின் உட்பிரிவாக உள்ளனர். பன்னிரெண்டு இமாம்களில் முதல் ஆறு நபர்களையும் இவர்கள் நம்புகின்றனர். ஏழாவது இமாம் யார் என்பதில் ஏற்பட்ட கருத்து மோதல் இப்பிரிவுக்கு வழிகோலியது. ஜஃபர் அஸ்ஸாதிக் என்பவர் இவர்களின் ஆறாவது இமாம். இவருக்கு இரு பிள்ளைகள் இருந்தனர்.
1. இஸ்மாயீல். 2. மூஸா அல் காழிம்.
இஸ்மாயீலைத் தலைவராக ஏற்றவர்கள் இஸ்மாயீலிய்யாப் பிரிவினர் எனப்படுகின்றனர். மார்க்க விடயங்களில் வரம்பு மீறிச் சென்ற இக்குழு ஈராக்கில் தோன்றி வளர்ந்தது. இன்று ஈரான் குராஸான் இந்தியா பாகிஸ்தான் போன்ற நாடுகளில் வாழ்கின்றனர். எகிப்தில் தோன்றிய பாதிமியர் ஆட்சியும் இவர்களின் வழிமுறைகளுடையதே. இவர்கள் தமது 14வது இமாமாக ஆகாகானைநம்புகின்றனர்.
நுஸைரிய்யா:
இஸ்மாயீலிய்யாப் பிரிவின் உட்பிரிவாக உள்ள இக்குழுவினர் அலி (ரழி) அவர்களை அல்லாஹ்வின் அவதாரம் என நம்புகின்றனர். இவர்களை அலவிய்யாக்கள் எனவும் அழைப்பதுண்டு. இவர்கள் கிறிஸ்தவ மதத் தாக்கத்திற்குட்பட்டு அவர்களின் முக்கிய விழாக்களையும் பெருநாள் தினங்களையும் கொண்டாடுவதோடு கிறிஸ்தவப் பெயர்களைச் சூட்டிக் கொண்டுள்ளனர். இன்று இப்பிரிவினர் சிரியாவிலேயே அதிகமாக வாழ்கின்றனர். அங்கு நுஸைரிய்யா ஆட்சியே உள்ளது.
துரூஸிகள்:
இறைவன் இமாமின் வடிவில் வந்துள்ளான் என்கின்றனர். பாதிமிய்யா ஆட்சியாளனான அல்ஹாகிம் பீ அமிரில்லாஹ் என்பவன் தன்னில் இறைவன் அவதரித்துள்ளதால் தன்னை வணங்குமாறு மக்களைப் பணித்தான். பொதுமக்கள் ஆத்திரமடைந்தனர். உறவினர்கள் இவனைக் கொலை செய்துவிட்டனர்.
அல் ஹாகிம் பீ அம்ரில்லாஹ் கொலை செய்யப்பட்ட பின்னர் இவன் சாகவில்லை; மறைந்திருக்கின்றான்என்று பாரசீகப் பிரதேசத்தில் வாழ்ந்த ஹாமாஸ் அத்துரூஸி என்பவன் பிரசாரம் செய்தான்.
ஷீஆக்களின் கொள்கைகள்
  • அல்குர்ஆன்:
நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட 30 ஜுஸ்வுகள் அடங்கிய இன்றுவரை எந்த மாற்றமும் இல்லாமல் பாதுகாக்கப்படுகின்ற அல்குர்ஆனை ஷீஆக்கள் முழுமையான அல்குர்ஆனாக ஏற்பதில்லை. 40 ஜுஸ்வுகள் இருப்பதாக நம்புகின்றனர். இமாமுல் காயிப்என்பவரிடம் அது இருப்பதாகவும் அவர் வெளிவரும் போது கொண்டுவருவார் எனவும் அதன் பின்னர் அதையே பின்பற்ற வேண்டும் என்றும் நம்புகின்றனர்.
  • அல் ஹதீஸ்:
புகாரி முஸ்லிம் போன்ற ஹதீஸ் கிரந்தங்களை ஏற்றுக் கொள்வதில்லை. அலி (ரழி) அவர்களையும் இவர்கள் நம்பும் இமாம்களும் அறிவித்த அல் உஸ்லுல் காபியில் உள்ளவற்றையே நம்புகின்றனர்.
  • ஸஹாபாக்கள்:
நான்கு ஸஹாபாக்களைத் தவிர மற்ற அனைவரையும் காபிர்கள் என்கின்றனர்.
ஷீஆக்கள் பற்றி அறிஞர்கள்:
நான் ஷீஆக்களின் வழிகெட்ட பிரிவான ராபிழாக்களைத் தவிர மற்றவர்களிடமே ஹதீஸ்களை எடுத்தேன். ஏனெனில் ராபிழாக்கள் ஹதீஸ்களை இட்டுக்கட்டி பொய்களை மார்க்கம் என்பர்.
ஷகீக் இப்னு அப்துல்லாஹ் (ரஹ்)
பொய் சொல்வதிலும் மனோ இச்சைகளைப் பின்பற்றுவதிலும் முன்னிலைவகிக்கின்றவர்கள் ராபிழாக்களே ஆவர்.
இமாம் ஷாபிஈ (ரஹ்)
இந்த வழிகெட்ட ஷீஆக்களைப் பற்றி இமாம் மாலிக் (ரஹ்) அப்துல்லாஹ் இப்னுல் முபாறக் (ரஹ்) அபூ ஸர்ஆ (ரஹ்) இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) இப்னுல் கையிம் (ரஹ்) அர்ராஸி அத்தஹபி போன்றவர்களும் நவீன கால நல்லறிஞர்கள் பலரும் எச்சரித்துள்ளனர்.
இன்று எமது நாட்டில் பல்வேறு இயக்கங்கள் செயற்பட்டு வருகின்றன. அந்த இயக்கங்களின் செல்வாக்கு அவற்றிற்கிடையிலான முரண்பாடான கொள்கைகள் அரசியல் அதிகார வீச்சுக்கு முக்கியத்துவமளிக்கின்ற அசத்தியத்துடன் சமரசம் செய்து கொண்டு சத்தியத்தை தூக்கி எறிந்து விடுகின்ற இயக்கங்களின் அமைப்புகளின் அறிமுகம் என்பன இலங்கை முஸ்லிம்களின் சமகால சமய சமூக பண்பாடு அரசியல் நடவடிக்கைகளில் தவிர்க்க முடியாத நிகழ்வுகளாக மாறியுள்ளன. இயக்க நடவடிக்கைகளின் செல்வாக்கு ஒவ்வொரு தனிமனிதனையும் அசைத்து வரும் இக்கால கட்டத்தில் அவற்றை மதிப்பீடு செய்வதும் விமர்சனப் பார்வைக்குள் உட்படுத்துவதும் காலத்தின் தேவையாகும்.
இன்று இலங்கையில் காணப்படும் இயக்கங்கள் அவற்றின் சர்வதேச ஸ்தாபகர்களினதும் தலைவர்களினதும் குறிக்கோள்களையும் திட்டங்களையும் செயற்படுத்தும் நடவடிக்கைகளையே பெரும்பாலும் தீவிரமாக அனுஷ்டிக்கின்றன. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற நாடுகளிலேயே சாத்தியமற்றுப்போன அநியாயமாகப் பெறுமதியான பல உயிர்களைப் பலியெடுத்த கொள்கைகளை முஸ்லிம்கள் சிறுபான்மையிலும் சிறுபான்மையினராக வாழ்கின்ற இலங்கையில் அமுல்படுத்தி அதே நிலைமைகளைத் தோற்றுவிக்க முயற்சிக்கின்றனர்.
இஸ்லாத்தைப் பற்றியும் அதன்கிலாபத் ஜிஹாத்பற்றிய தெளிவான அறிவற்ற உணர்ச்சிக் கோஷங்களுக்கு அடிமைப்பட்ட தூய்மையான ஏகத்துவக் கொள்கையை சிதைத்துவிட்ட அற்பமான அரசியல் நோக்கம் கொண்ட நபி (ஸல்) அவர்களின் தூய்மையான ஸுன்னாவைக் கொச்சைப்படுத்துகின்ற கோமாளிக் கூட்டங்களினால் இன்றுவரை உலகில் எங்கும் இஸ்லாமிய ஆட்சியை நிலைநாட்ட முடியவில்லை. இவர்களால் நிலைநாட்டவும் முடியாது. ஏனெனில் நபி வழியைப் புறக்கனித்த எந்தக் கூட்டத்திற்கும் அல்லாஹ் தனது உதவியை வழங்கிய வரலாறுகள் இல்லை.
இஸ்லாமிய வரலாற்றின் துவக்க நூற்றாண்டில் தோன்றிய கவாரிஜ்கள் போன்று இன்று அல்ஜீரியாவிலும் எகிப்திலும் பாகிஸ்தானிலும் பன்னாயிஸமும் மௌதூதியிஸமும் ஏற்படுத்தியிருக்கின்ற இரத்தக் களறி பல்லாயிரம் முஸ்லிம் இளைஞர்களின் உயிர்களைப் பலியெடுத்து வருகின்றன. பன்னாயிஸம் பலவாயிரம் பேரை எகிப்தில் பலியெடுத்துள்ளது. எனினும் எத்தகைய பலனையும் கண்டதில்லை. பன்னாயிஸம் எகிப்திலும் மௌதூதியிஸம் பாகிஸ்தானிலும் மிகப் பெரும்பான்மை முஸ்லிம் மக்களுக்கு மத்தியில் எத்தகைய அரசியல் மாற்றங்களையும் இதுவரை ஏற்படுத்தவில்லை. ஒரு நூற்றாண்டு காலத்தை அண்மித்தும் அவர்களின் கொள்கை வெற்றிபெறவில்லை என்றால் அக்கொள்கை உயிரோட்டமற்ற சாத்தியமற்ற நடைமுறைச் சாத்தியமற்றவை என்பது புலனாகிறது.
பெரும்பான்மை முஸ்லிம்களுக்கு மத்தியிலேயே அந்த நாடுகளில் இவர்களின் அதிகார வீச்சு கிலாபத்கனவு ஏதோ சாத்தியவரைக்கோட்டின் எல்லை தாண்டிய ஏதோ ஒரு மங்கிய குழப்பமான புள்ளியில் நின்று கொண்டிருக்கும் போது மிகச் சிறுபான்மையினராக மாற்று மதத்தவர்களுக்கு மத்தியில் முற்போக்கும் ஆழமான இஸ்லாமிய அறிவும் இல்லாத அனைத்து அசத்தியக் கொள்கைகளுடனும் சமரசம் செய்துகொள்கின்ற இக்கொள்கை எந்த வகையிலும் சாத்தியமற்றது என்று துணிந்து கூறலாம்.
ஏகத்துவத்தையும் நபிவழியையும் அடிப்படையாகக் கொள்ளாத இன்றைய சில்லறை இயக்கங்கள் பற்றி விவாதிக்கப்பட வேண்டிய பல விடயங்களும் கருத்துக்களும் உள்ளன. எனினும் நாம் வரலாற்றில் தோன்றிய வழிகெட்ட ஷீஆக் கொள்கையுடன் பன்னாயிஸமும் மௌதூதியிஸமும் எவ்வாறு உடன் படுகின்றன ஒத்த பண்புக் கூறுகள் கொண்டுள்ளன என்பதை சுருக்கமாக இங்கு நோக்குவோம்.
அகீதா: ஷீஆக்கள் தங்களது கொள்கையை பகிரங்மாகச் சொல்வதில்லை. தெளிவான கொள்கையும் இல்லை. இதேபோல் பன்னாயிஸமும் மௌதூதியிஸமும் தூய இறை ஓர்மை வாதம் பற்றி அழுத்தமாகப் பேசவில்லை. புரட்சியில் நம்பிக்கையுள்ள அளவு ஏகத்துவத்தில் இவர்களுக்கு நம்பிக்கையில்லை. நபி (ஸல்) அவர்கள் மக்காவிலும் மதீனாவிலும் ஏகத்துவத்திற்கு அழுத்தம் கொடுத்துள்ளார்கள். ஆனால் இவர்கள் ஷீஆக்கள் போன்று அழுத்தம் கொடுப்பதில்லை. ஷீஆக்கள் தாங்கள் நம்பும் இமாம்களிடம் இறைவன் பேசுவதாகவும் இறைவன் அவர்களின் சிலர் மீது இறங்கி ஊடாடுவதாகவும் நம்புகின்றனர். இதே போன்ற அனைத்திறைவாதக் கொள்கையை குதுப் தனது சூறா இஃலாஸ் விரிவுரையில் குறிப்பிடுகின்றார்.

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites