அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

சனி, 29 மே, 2010

திருக்குர்ஆன் வினாடி வினா - பாகம் 4


1.   கேள்வி :மலைகளை குடைந்து குகைகள் அமைத்து வாழ்ந்தவர்கள் யார்?
பதில் : ஸமூத் கூட்டத்தினர் (அல்குர்ஆன் 89 : 9)
2.   கேள்வி : மர்யம் (அலை) அவர்களின் தந்தை பெயர் என்ன?
பதில் : இம்ரான் (அல்குர்ஆன் 66:12)
3.   கேள்வி :மூஸா (அலை) அவர்கள் சமூகத்தைச் சார்ந்த, கணக்கிலடங்கா செல்வங்களைப் பெற்றவன் யார்?
பதில் : காரூன் (அல்குர்ஆன் 78 : 26)
4.   கேள்வி : காரூன் எவ்வாறு அழிக்கப்பட்டான்?
பதில் : இவனையும், இவனது வீட்டையும் பூமிக்குள் புதையுறச் செய்து அல்லாஹ் அழித்தான் (அல்குர்ஆன் 28 : 81)
5.   கேள்வி : துல்கர்னைன் அவர்கள் ஆட்சி காலத்தில் அட்டூளியங்கள் செய்த கூட்டத்தினர்கள் யார்?
பதில் : யஃஜூஜ், மஃஜூஜ் (அல்குர்ஆன் 18 : 94)
6.   கேள்வி : மதீனா நகரத்தின் முந்தைய பெயர் என்ன?
பதில் : யஸ்ரிப் (அல்குர்ஆன் 33 : 13)
7.   கேள்வி : அண்டை நாட்டில் ஒரு ராணி இருக்கிறாள் என்று உளவறிந்து நபி சுலைமான் (அலை) அவர்களிடம் சொன்ன பறவையின் பெயர் என்ன?
பதில் : ஹுýத் ஹுத் (அல்குர்ஆன் 27: 20-24)
8.   கேள்வி : இஸ்ரா என்றால் என்ன?
பதில் : ஒரு இரவில் மக்காவிலிருந்து ஜெருஸலத்தில் உள்ள மஸ்ஜிதுல் அக்ஸா வரை  நபி (ஸல்) அவர்கள் செய்த பயணத்திற்கு சொல்லப்படும். (அல்குர்ஆன் 17 : 1)
9.   கேள்வி :அதிக எண்ணிக்கை மீது நம்பிக்கை வைத்து அல்லாஹ்வை நபித் தோழர்கள் மறந்த போர் களம் எது?
பதில் : ஹுýனைன் போர் (அல்குர்ஆன் 9 : 25)
10.   கேள்வி : கஅபத்துல்லாவில் இணைவைப்பவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது?
பதில் : சீட்டி அடிப்பது , கைதட்டுவது (அல்குர்ஆன் 8 : 35)

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites