அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

சனி, 29 மே, 2010

இவர்களை தெரியுமா? பாகம் 4



தரீக்கா ஃ சூபித்துவம்: உலகில் தரீக்காக்களைத் தோற்றுவித்து கப்ரு வணக்கங்களை அறிமுகப்படுத்தியவர்கள் யூத கிறிஸ்தவர்கள். ஷீஆ இயக்கம் யூதன் அப்துல்லாஹ் பின் ஸபாவினால் தோற்றுவிக்கப்பட்டது. இன்றுள்ள அனைத்துத் தரீக்காவும் ஷீஆக்களினால் தோற்றுவிக்கப்பட்டவைகளே! மவ்தூதியும் பன்னாவும் ஷீஆ ஆதரவாளர்கள். இருவரும் சூபித்துவ ஈடுபாடு உடையவர்கள். மவ்தூதி எழுதிய கவிதைகளில் சூபித்துவப் பிரதிபலிப்பைக் காண முடிகின்றது.
தரீக்காக்களின் சூபி ஷெய்க்மார்கள் தனக்கு செயற்கையாக கப்றுகளைத் தயார் செய்து அதனுள் இறங்கி மறுமை வாழ்வு பற்றிய அச்சத்தை உள்ளத்தில் பதிக்க பயிற்சி வழங்கினர்என பன்னாவே கூறியுள்ளார். எனவேதான் இந்த நாட்டிலுள்ள இவர்களின் இயக்கவாதிகள் தரீக்காக்களை இஸ்லாமிய ஆன்மீக தஃவா அமைப்பாக அங்கீகரித்து பகிரங்கமாகப் பேசியும் எழுதியும் வருகின்றனர்.
தகிய்யா: ஒரு ஷீஆ தனது கொள்கையைப் பகிரங்மாகச் சொல்லவே மாட்டான். தனக்கு மாற்றமான கொள்கை உள்ளவர்களிடம் அவர் கொள்கையை பின்பற்றுபவன் போன்று நடிப்பான். இந்த இயக்கவாதிகளும் இவ்வாறே நடிக்கின்றனர். பர்ளான தொழுகையின் பின்னர் கூட்டு துஆ இல்லை என்றிருந்தும் இவர்களிடம் கேட்டால் அப்படியும் இப்படியும் உள்ளது என்பர். இது வழிகெட்ட ஷீஆக்களின் தரங்கெட்ட வழிமுறை. பன்னா அனைவரையும் திருப்திப் படுத்தி அரசியல் செய்வதற்காக தூய்மையான கொள்கையைப் பலிபீடத்திற்கு அனுப்பினார். இதற்கு ஆதாரமாக அவர் ஏற்படுத்திய ஷீஆ அஹ்லுஸ்ஸுன்னா ஒருங்கிணைப்பு இயக்கம் உள்ளது. மவ்தூதி அனைத்து ஸஹாபாக்களையும் காபிர் என்ற பல வழிகெட்ட கொள்கைகளை பிரசாரப்படுத்திய ஆயதுல்லாஹ் குமைனியின் ஈரானியப் புரட்சியை இஸ்லாமியப் புரட்சி என்றும் அந்த வழிகெட்ட மூடப் புரட்சியை ஆதரிப்பது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் வாஜிப்என்றார்.
மீலாது விழா: இஸ்லாத்தின் எந்த மனிதனின் பிறப்பிற்கோ இறப்பிற்கோ எந்த முக்கியத்துவமும் இல்லை. இதற்கு சிறந்த உதாரணமாக ஹிஜ்ரத்அமைந்துள்ளது. எனினும் அல் இஃவானுல் முஸ்லிமூன் இயக்கத்தினர் அவர்களின் இயக்க முக்கியஸ்தர்களின் மண்ணறைக்குச் சென்று மவ்லீது தினங்களில் பாடல் பாடி வருகின்றனர்.
ஹிஜ்ரத் நபியவர்களின் பிறப்பு இஸ்ரா மிஃராஜ் முதலிய இஸ்லாமிய வரலாற்றில் முக்கியமான நிகழ்வுகளை நினைவு கூறும் முகமாக அவற்றுக்கு விழா எடுத்தல் ஃ அனுஷ்டித்தல் ஹராமாக்கப்பட்டுள்ளதுஎன யூசுப் கர்ளாவி கூறுகிறார். (மீள்பார்வை ஜுலை 2001 Page04) ‘மீலாத் தினத்தை எவ்வாறு கொண்டாடுவது?’ என்று ஆ.யு.ஆ. மன்சூர் பித்அத் ஒன்றுக்கு உயிரூட்ட வழிசொல்லியிருந்தார். மீலாத் தினத்தை உருவாக்கியவர்கள் ஷீஆ ஆட்சியாளர்களான பாதிமியர்கள்.
தவ்ஹீதின் வகைகள்: இறையாட்சியை நிலைநாட்ட வேண்டும் அதிகாரம் அல்லாஹ்வுக்கே என்பது கவாரிஜ்களின் கொள்கை. இது ஷீஆக்களிடமும் உண்டு. பன்னா இறையாட்சியை நிலைநாட்டப் போராடுவதாக வாதிட்டார். அதில் நபி வழி இருக்கவில்லை. உலகில் எந்த தூய அறிஞரும் சொல்லாத வகையில் ஹாகிமிய்யத்தவ்ஹீதின் நான்காவது வகை அதைப் புறக்கணிப்பவன் முஸ்லிமாக இருக்க முடியாது என்றார் மவ்தூதி. இதுவும் ஷீஆ வழிமுறையே!
இஸ்லாம் ஒரு புனிதமான பூரணத்துவமான வாழ்க்கை நெறி. அது ஏனைய அனைத்துக் கொள்கை கோட்பாடுகள் சிந்தனைகள் என்பவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. அதேபோல் அது தெளிவான வழிகாட்டல்களைக் கொண்ட ஒரே மார்க்கமாகவும் உள்ளது.
புனித இஸ்லாத்தின் சிறப்பை மாசுபடுத்துவதற்காக வரலாற்றில் பல வழிகெட்ட சிந்தனைப் பிரிவுகள் கொள்கைகள்இகோட்பாடுகள் தோற்றம் பெற்றுள்ளன. இதில் ஷீஆக் கொள்கை மிக முக்கிய இடத்தை வகிக்கின்றது. சென்ற நூற்றாண்டின் இறுதிக் காற்கூறில் ஈரானில் புரட்சி செய்து குமைனியால் அங்கு ஷீஆ அரசு நிறுவப்பட்டது. இப்புரட்சியை இஸ்லாமிய அடைமொழியுடன் பலர் நம் நாட்டில் பிரசாரம் செய்து வருகின்றனர்.
நபி (ஸல்) அவர்களை மட்டுமே வாழ்வின் அனைத்துத் துறைகளுக்கும் முன்மாதிரியாகக் கொண்டு செயல்படும் அரசுதான் இஸ்லாமிய அரசாக இருக்க முடியும். ஷீஆக்களால் ஏற்படுத்தப்பட்ட அரசு இஸ்லாத்திற்கு விரோதமானது. இதனை அவர்கள் மதிப்புமிக்கதாகக் கருதும் நூல்களிலுள்ள செய்திகள் மூலமாக அறிந்து கொள்ள முடியும். அவற்றில் சிலவற்றை இங்கு நோக்குவோம்.
தொழுகை தொடர்பாக வரும் அல்குர்ஆனிய வசனங்களுக்கு விளக்கம் கூறப் புகுந்த ஷீஆக்களின் விரிவுரையாளர்கள் அய்யாஷ் ஹுவைஸீ ஆகிய இருவரும் பின்வருமாறு கூறுகிறார்கள்.
‘(ஐந்து) தொழுகைகள் என்பது ரஸுல் (ஸல்) அலி (ரழி) பாதிமா (ரழி) ஹஸன் (ரழி)இஹுஸைன் (ரழி) ஆகிய ஐவராவர். நடுத்தொழுகை என்று விஷேசமாகக் குறிப்பிட்டது அலி (ரழி) ஆவார்.இதில் நபியை விட அலியை உயர்த்துகின்றனர்.
–(
அய்யாஷி தப்ஸீர் Page – 1 Page:128 நூருஸ்ஸகலைன் Page – 1 Page: 238)
ஷீஆக்களின் மற்றொரு தப்ஸீரில் நபி (ஸல்) அவர்கள் ருகூவு ஸஜ்தாச் செய்ய நான் பார்த்திருக்கின்றேன். அப்போது அவர்கள் இறைவா! உன் அடியார் அலியின் பொருட்டால் அவர்களின் கண்ணியத்தினால் என் உம்மத்தின் பாவிகளை மன்னிப்பாயாகஎன்று துஆச் செய்தார்கள் என்று இப்னு மஸ்ஊத் (ரழி) கூறினார்கள் என்று இட்டுக்கட்டியுள்ளனர்.
–(
அல்புர்ஹான் பீ தப்ஸீரில் குர்ஆன் Page – 1 Page: 226)
அலியின் பொருட்டால் நபி (ஸல்) அவர்களே துஆச் செய்தார்கள் என்று இட்டுக்கட்டி வம்பளக்கும் இவர்களின் புரட்சி இஸ்லாமியப் புரட்சியா? இன்னுமுள்ளது இது போன்ற குப்பைகள்.
நான் முஸா (அலை) ஹிழ்று (அலை) ஆகியோர் முன்னிலையில் இருந்திருந்தால் அவ்விருவரை விட நான் மிகவும் அறிந்தவன் என்று பிரகடனம் செய்திருப்பேன்என்று அலி (ரலி) கூறினார்களாம். ஷீயாக்களில் புகாரி இமாமைப் போல் மதிக்கப்படும் குலைனீ என்பவர் தமது நூலில் இவ்வாறு கூறுகின்றார்.
அல்உஸுல் காபீ கிதாபுல் ஹுஜ்ஜத் பாகம் 1 பக்கம் 261
உம்மைக் கொண்டே இறைவன் ஆதமை மன்னித்தான். உம்மைக் கொண்டே யூசுப் நபியை பாழுங் கிணற்றிலிருந்து காப்பாற்றினான். உம்மைக் கொண்டே அய்யூப் நபியை சோதித்தான்என்று அலி (ரலி) அவர்களை நோக்கி ஸல்மான் பார்ஸி (ரலி) கூறினார்களாம்.
அல்புர்ஹான் முன்னுரை பக்கம் 27
நபி (ஸல்) அவர்கள் மிஃராஜுக்குச் சென்று இறைவனை நெருங்கிய போதுமுஹம்மதே படைப்பினங்களில் நீர் யாரை விரும்புகின்றீர்? ‘ என்று இறைவன் கேட்டானாம். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அலிஎன்றார்களாம். முஹம்மதே திரும்பிப் பாரும்என்றானாம் இறைவன். திரும்பிப் பார்த்தால் அங்கே அலி (ரலி) நிற்கிறார்களாம்.
தஃப்ஸீருல் புர்ஹான் பாகம் 2இ பக்கம் 404
ஷீயாக்களின் பன்னிரெண்டு இமாம்களும் தாங்கள் எப்போது மரணிப்போம் என்பதை அறிவார்கள். அவர்கள் விரும்பிய நேரத்தில் மரணிப்பார்கள்.
அல் உஸுலுமினல் காபி பக்கம் 258
இந்தப் பன்னிரெண்டு இமாம்களிடமும் மலக்குகள் வந்து எல்லா விபரங்களையும் கூறிச் செல்வார்களாம்.
அல் உஸுலுமினல் காபி பக்கம் 393
இந்தப் பன்னிரெண்டு இமாம்களிடமும் விஷேசமான ஞானம் உள்ளதாம். அதை மலக்குகளும் நபியும் கூட அறிய முடியாதாம்.
மேற்படி நூல் பக்கம் 402
எந்த மனிதனின் பேச்சாயினும் பறவைகள் மிருகங்கள் மற்றும் உயிரினங்களின் பேச்சாயினும் அனைத்தையும் பன்னிரெண்டு இமாம்களும்அறிவர்.
குர்புல் இஸ்னாத் பக்கம் 146
எனக்கு முன் நபிமார்கள் உட்பட எவருக்கும் கொடுக்கப்படாத சிறப்புக்கள் எனக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. நடந்தது எனக்கு தெரியாமல் நடந்திராது. நடப்பவை என்னை விட்டும் மறையாது என்று அலி (ரழி) கூறினார்களாம்.
அல் உஸுலுமினல் காபி பாகம் 19 பக்கம் 197
பன்னிரு இமாம்களில் ஒருவராகிய ஜஃபர் சாதிக் அவர்கள் (பூரியான் பாத்தியா நாயகர் ) வானம் பூமியில் உள்ள அனைத்தையும் நான் அறிவேன்.
நடந்ததையும் நடக்கவிருப்பதையும் நான் அறிவேன்என்றார்களாம்.
அல் உஸுலுமினல் காபி பாகம் 1 பக்கம் 261
இறந்தவர்களை உங்களால் உயிர்ப்பிக்க இயலுமா? குஷ்ட ரோகிகளையும் பிறவிக் குருடரையும் உங்களால் குணப்படுத்த முடியுமா? என்று அபூ ஜஃபர் அவர்களிடம் கேட்ட போது முடியுமேஎன்றார்களாம்.
கிதாபுல் ஹுஜ்ஜா மினல் காபி பாகம் 1 பக்கம் 470
அல்லாஹ் அலி (ரழி) அவர்களைப் பற்றிப் பின்வருமாறு கூறினானாம்:
யார் அலியை அறிந்து கொள்கிறாரோ அவரை நான் நரகில் புகுத்த மாட்டேன். அவர் எனக்கு மாறு செய்திருப்பினும் சரியே. எனக்குக் கட்டுப்பட்டு நடந்தாலும் அலியை அறியாதவர்களை நான் சுவர்க்கத்தில் சேர்க்க மாட்டேன்.அல்லாஹ்வின் பெயராலேயே இப்படிப் பொய் கூறுபவர்களே ஷீயாக்கள்.
பஹ்ரானியின் புர்ஹான்எனும் தப்ஸீர் முன்னுரை பக்கம் 23
ஷீயாக்களாகிய உங்களில் இருவர் கூட ஏன் ஒருவர் கூட நரகிற்குச் செல்ல மாட்டார்கள்என்று ஜஃபர் சாதிக் கூறினார்களாம்.
அர்ரவ்லா மினல் காபி பாகம் 8 பக்கம் 78
ஷீயாவைச் சேர்ந்தவர் எந்த அமலும் செய்யாமல் தன் நன்மையை நிரப்பிக் கொள்வார்.என்றும் ஜஃபர் சாதிக் கூறினார்களாம்.
அர்ரவ்லா மினல் காபி பாகம் 8 பக்கம் 315
ஷீயாக்களின் எந்தப் பாவமும் பதியப்படுவதில்லை. மழை துளியளவுக்கும் கற்கள் மணல்கள் மரங்கள் முட்கள் எண்ணிக்கை அளவுக்கு பாவம் செய்தாலும் அவை பதியப்படுவதில்லை என்று ஷீயாக்களின் எட்டாவது இமாம் அபுல் ஹஸன் குறிப்பிட்டாராம்.
உயூனு அக்பாரிர் ரிளா பாகம் 2 பக்கம் 236
எல்லா நபிமார்களும் முஹம்மத் (ஸல்) அவர்களின் நுபுவத்தை ஏற்றது போல் எல்லா மலக்குகளும் ஜிப்ரீலும் ஏற்றது போல் என்னையும் அவர்கள் ஏற்றுள்ளனர்என்று அலி (ரழி) கூறினார்களாம்.
அல்உஸுலுல் காபி பாகம் 1 பக்கம் 197 198.




0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites