தொழுகையில் ருகூஹ்வில் இருந்து எழுந்த பிறகு "ரப்பனா லகல்ஹம்து ஹம்தன் கசீரன் தையிபன் முபாரக்கன் பீஹி"என்று கூறுவது தேவையற்றது என்றும் மேலும் "ரப்பனா லகல் ஹம்து" அல்லது "ரப்பனா வ லகல் ஹம்து" அல்லது "அல்லாஹும்ம ரப்பனா லகல் ஹம்து" அல்லது ற"அல்லாஹும்ம ரப்பன வ லகல் ஹம்து" என்று கூறுவதே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டி தந்த வழி என்று தாங்கள் கூறுகிறீர்கள் . அதற்கு சாட்சியாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் சொல், செயல் என்பது தனி அந்தஸ்து உடையது என்றும் நபி (ஸல்) அவர்களின் அங்கீகாரம் தனி அந்தஸ்து உடையது என்றும் எனவே ரசூல் (ஸல்) அவர்களின் அங்கீகாரத்தை விட சொல் செயலே பிரதானமானது என்றும் வாதம் வைக்கின்றீர்கள்.என்றால் ஒட்டகம் குர்பானி கொடுப்பதில் நபி (ஸல்) அவர்கள் சொல்லியது, செய்தது எல்லாம் ஏழு நபர்களுக்கான அனுமதிதானே. பத்து நபர்கள் என்பது அங்கீகாரம்...