
அபூரபீஹா "அஷ்அரீ குலத்தினர் போரின் போது கையிருப்பிலுள்ள பயண உணவு (இருப்பு) குறைந்து விட்டால் அல்லது மதீனாவில் தங்கள் மனைவி மக்களின் உணவு (இருப்பு) குறைந்து போய் விட்டால், தங்களிடம் (எஞ்சி) இருப்பதை ஒரு துணியில் சேகரித்து பிறகு ஒரு பாத்திரத்தைக் கொண்டு சமமாக தங்களுடையே அதைப் பங்கிட்டுக் கொள்கிறார்கள். அவர்கள் என்னைச் சேர்ந்தவர்கள்; நான் அவர்களைச் சோந்தவன்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி)
நூல்: புகாரீ 2486
யமன் நாட்டைப் பூர்வீமாகக் கொண்ட குலத்தினர் தான் அஷ்அரீன் என்ற குலத்தினர். இவர்கள் மதீனாவிற்கு வந்து அங்கு குடியேறினர். ஆரம்ப காலத்தில் யமன் நாட்டிலிருந்து வந்து இஸ்லாத்தைத் தழுவியவர்களில் முக்கியமானவர்...