மதீனாவின் மேற்பகுதியில் அப்துல்லாஹ் பின் சுபைர் (ரலி) அவர்களை (சிலுவையில் அறைப்பட்டவராக) நான் கண்டேன். குறைஷிகள் அவர்களைக் கடந்து சென்று கொண்டிருந்தார்கள்.
அப்போது அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அந்த இடத்தில் நின்று, "அபூகுபைபே! உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும்! அபூகுபைபே! உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும்! அபூகுபைபே! உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும்!'' என்று கூறி விட்டு, "அல்லாஹ்வின் மீது ஆணையாக! இதை (ஆட்சிப் பொறுப்பை) விட்டும் நான் உங்களைத் தடுக்கவில்லையா? இதை விட்டும் நான் உங்களைத் தடுக்கவில்லையா? இதை விட்டும் நான் உங்களைத் தடுக்கவில்லையா?'' என்று கேட்டார்கள்.
பிறகு, "அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் நோன்பாளியாகவும் தொழுபவராகவும் உறவினர்களுடன் இணங்கி வாழக் கூடியவராகவும் நான் உங்களை அறிந்துள்ளேன். அல்லாஹ்வின் மீது ஆணையாக! உம்மை எந்தச் சமுதாயம் தீயவனாகக் கருதுகிறதோ அந்தச் சமுதாயமே கெட்ட சமுதாயமாகும்''...