
1. சென்னை மண்ணடி எண்: 7, வடமரைக்காயர் தெருவிலுள்ள இரண்டு மாடி கட்டிடம் முஸ்லிம் ட்ரஸ்ட் பெயரில் அதன் ஆயுட்கால சேர்மன் பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்களது பெயரில் பதிவு செய்யப்பட்டதாகும்2. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்திற்கு பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் அமைப்பாளராக இருந்த காரணத்தினால் அந்த கட்டிடத்தின் முதல் மாடியில் தமுமுக அலுவலகம் இயங்குவதற்கு அனுமதி வழங்கியிருந்தார்.3. உணர்வு வார இதழை நிர்வகித்து வரும் முஸ்லிம் மீடியா ட்ரஸ்டின் சேர்மனாகவும் பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் இருந்த காரணத்தினால் அந்த கட்டிடத்தின் இரண்டாம் மாடியில் உணர்வு வார இதழ் அலுவலகம் இயங்குவதற்கும் அனுமதியளித்திருந்தார்.4. 2004ஆம் ஆண்டு தமுமுகவிலிருந்து பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்களும் அதன்...