
மனித உடலின் தலைமை செயலகம் மூளை.
உனக்கு மூளை இருக்கா ? என்று அறிவு இல்லாத செயல்களைச் செய்பவர்களைபார்த்து கேட்கின்றோம். மூளை செயலிழந்தது, மூளை இறப்பு அதனால் மற்றஉறுப்புகள் தானம் செய்யப்பட்டது என அண்மை காலங்களில் பத்திரிக்கைகளில்பார்க்கின்றோம். எனவே மூளை என்ற உறுப்பு, மற்ற உடல் உறுப்புகளின் செயல்இயங்கியல் நிகழ்ச்சிகளிலும், மனம் தொடர்பான அறிவு சார்பான இயக்கங்களிலும்முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை உணர முடியும்.மேல்நாட்டு மருத்துவர்கள் மூளையின் செயல்பாடுகளை பொறுத்து இரண்டு வகையாக பிரித்துள்ளனர்.1. உடல் இயக்கம் சார்ந்த மூளை (Anatomical brain)2. மன இயக்கம் சார்ந்த மூளை (Functional brain)இது தவிர மூளையானது அதன் அமைப்பை பொறுத்து பல பகுதிகளாகபிரிக்கப்பட்டுள்ளது....