அல்குர்ஆன் கூறும் சூராவளிக் காற்று பற்றிய எச்சரிக்கை
பேரீச்சை மற்றும் திராட்சைத் தோட்டம் ஒருவருக்கு இருக்கிறது; அவற் றின் கீழ்ப்பகுதியில் ஆறுகளும் ஓடு கின்றன; அதில் அனைத்துக் கனிகளும் அவருக்கு உள்ளன; அவருக்குப் பலவீன மான சந்ததிகள் உள்ள நிலையில் அவருக்கு முதுமையும் ஏற்பட்டு விடுகிறது; அப்போது நெருப்புடன் கூடிய புயல் காற்று வீசி அ(த்தோட்டத்)தை எரித்து விடுகிறது. இந்த நிலையை உங்களில் எவரேனும் விரும்புவாரா? நீங்கள் சிந்திப்பதற்காக இவ்வாறே அல்லாஹ் சான்றுகளைத் தெளிவுபடுத்துகிறான். (அல்குர்ஆன் 2:266)
இங்கு நாம் சிந்திக்க கூடிய அறிவியல் உண்மை என்ன? என்பதையும் சூராவளிகளின் வகைகளையும் அவற்றின் வேகத்தையும் பற்றி ஆராய்ந்து பார்ப்போம் வாருங்கள்!
சூராவளி என்பது என்ன?
சூராவளி என்பது ஒருவகை சுழலும் காற்றாகும். இந்த காற்றின் கட்டுக்கடங்காத வேகத்தில் சுழன்றபடியே...