
உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை செலுத்துபவர்கள் மிகவும் குறைவு. சரிவிகித உணவு, உடற்பயிற்சி, உரிய மருத்துவ ஆலோசனை ஆகியவை உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.இது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த பல நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. மறுபுறம் இந்த பாதிப்புகள் குறித்த ஆய்வுகளும் நடந்த வண்ணம் உள்ளது.உடலில் அதிகரிக்கும் கொழுப்பால் மூளை பாதிக்கப்படும் ஆபத்து உள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. கொழுப்பு சேர்வதால் நரம்புகளில் உள்ள நியூரான்ஸ் என்ற நரம்பு செல்கள் பாதிக்கப்படுகிறது. இது மூளை செயல்பாடுகளை பாதிக்குமாம். முதல் பாதிப்பாக உடல் எடை அதிகரிக்கும், படிப்படியாக மற்ற பாதிப்புகள் ஏற்படும் என எச்சரிக்கின்றனர்.வாஷிங்டன்...