அஸ்ஸலாமு அலைக்கும்,,,
உங்கள் தொலைபேசியில் 3ஜி சேவையை ஏற்படுத்துகிறோம் என தொலைபேசி அழைப்பு வந்தால் அதனை அப்படியே நம்பிவிடாமல் இருக்குமாறு பொது மக்களை மாநகரப் போலீஸôர் கேட்டுக் கொண்டுள்ளனர்.குற்றச் செயல்களை கட்டுப்படுத்த போலீஸôர் பல்வேறு புதிய புதிய உத்திகளை கண்டுபிடித்தாலும், குற்றங்களை இழைப்போரும் புதிய உத்திகளை கையாள தவறுவதில்லை.இந்த நிலையில் தொலைபேசி சேவையில் தற்போது 3ஜி சேவை பிரபலமடைந்து வருகிறது. பெரும்பாலான தொலைபேசி சேவை நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு 3ஜி சேவையை அளிப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.எனினும், செல்போன் வைத்திருப்பவர்களில் பெரும்பாலானோர் எத்தகைய போன்களில் 3ஜி சேவை அளிக்க முடியும் என்பது குறித்த விழிப்புணர்வு இல்லாதவர்களாக உள்ளனர். இதனை பயன்படுத்தி சிலர் பணம் பறிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.முதலில்...