
ஒவ்வொரு நிமிடமும் உலகில் எங்காவது மூலையில் ஏதாவது விபத்துகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றது. ஒவ்வொரு விபத்துமே இழப்புக்களைத் தருபனவை. உலக சரித்திரத்திலே உயிர்களை அதிகளவில் பலிகொண்ட பல விபத்துக்கள் நிகழ்ந்திருந்தாலும், பணப் பெறுமதி அடிப்படையில் அதிக பொருள் சேதத்தை ஏற்படுத்திய மாபெரும் விபத்துகள் இவை.டைட்டானிக் கப்பல் விபத்துடைட்டானிக் திரைப்படம் மூலமாக உலகப் பிரசித்தி பெற்ற இந்தக் கப்பல் விபத்து 1912 ஆம் ஆண்டு இடம்பெற்றது. கட்டி முடித்த போது உலகின் மிகப் பிரமாண்டமான சொகுசுக் கப்பலாகக் கருதப்பட்ட டைட்டானிக் தனது வெள்ளோட்டத்தி லேயே பனிப்பாறையுடன் மோதுண்டு கடலுள் சங்கமமானது. 1500 பயணிகளையும் பலியெடுத்த டைட்டானிக் கட்டி முடிக்க ஏற்பட்ட மொத்த...