சமீபகாலங்களாக உலகத்தில் தீவிரவாதம் அதிகரித்துக் கொண்டு செல்வதை நாம் கண்டு வருகிறோம். உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்கள் பயத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அரசுக் கட்டுப்பாட்டில் இயங்கும் விமானம் இரயில் வண்டி பேருந்து போன்ற வாகனங்களில் அச்சத்துடன் பயனம் செய்து வருகிறார்கள். ஓன்றும் அறியாத பச்சிளம் குழந்தைகளும் பெரியவர்களும் அப்பாவி மக்களும் இந்த கொடூரத்திற்கு பலியாகுகிறார்கள். இதற்காக காலவ் துறையினரும் இரவு பகலாக எச்சரிக்கையுடன் பாடுபடுகிறார்கள். வெடிகுண்டுகளையும் வெடிமருந்துகளையும் கடத்துவது அதிகரித்துக் கொண்டே செல்கிறது .......