
உரை : பி.ஜைனுல் ஆபிதீன்
எழுத்து வடிவில் : முஹம்மத் தாஹா,
கடையநல்லூர்
நபியவர்களுக்கு
யூதர்களால் சூனியம் வைக்கப்படுவதாகச் சொல்லப்படும் செய்தி, குர்ஆனிலுள்ள
பல்வேறு வசனங்களுக்கு நேரடியாக முரண்படுவதாலும், அது சம்பந்தமாக
அறிவிக்கப்படுகிற செய்திகளில் பல்வேறு முரண்பட்ட வார்த்தைகள்
இடம்பெற்றிருப்பதாலும் நபியவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டது என்ற செய்தி
சரியானதாக இல்லை. ஒரு மனிதரை சூனியம் செய்து அழிக்கவோ ஒழிக்கவோ முடியாது
என்பது தான் இதுவரை நாம் பார்த்ததின் சாராம்சம்.
இதன் தொடர்ச்சியாக, சூனியம் சம்பந்தமாக திருக்குர்ஆனின் 2 வது அத்தியாயமான சூரத்துல் பகராவின் 102 வது வசனம் தெளிவாகப் பேசுகிறது.
இன்று நம் காலத்தில் வாழ்கிற பெயர் தாங்கி ஆலிலிம்கள்...