
இலவசத் திட்டத்தை அரசு அறிமுகம் செய்தபின்னர், அதன் பலனை தொடர்புடையோர் அனுபவிக்க முடியாததுடன், அந்தப் பலனைப் பெறுவதற்கு முன்பு அவமானங்களைத்தான் சந்திக்க வேண்டியிருக்கும் என்றால், அத்தகைய திட்டத்தால் என்ன பயன் இருக்க முடியும்? அப்படியொரு திட்டமாக மாறி வருகிறது மாணவர்களுக்கான இலவசப் பேருந்துப் பயணத் திட்டம். பள்ளிக் குழந்தைகள் பேருந்து நிறுத்தத்தில் காத்துக் கிடந்தாலும், பேருந்துகள் நிற்காமல் அவர்களைக் கடந்து ஓடுவதும், மாணவர்கள் அப்பேருந்தை விரட்டிச் செல்வதும், பாதிப் பேர் ஏறியும், மீதிப் பேர் கீழே விழுவதுமான சம்பவங்கள் தமிழக நகர்ப்புறங்களிலும், ஊரகப் பகுதிகளிலும் அன்றாடக் காட்சிகளாகி வருகின்றன.அண்மையில் தஞ்சை...