மத்திய பிரதேசம் போபால் நச்சு வாயு அதனால் ஏற்பட்ட உயிர்ச்சேதம், ஊனமுற்ற பல்லாயிரக்கணக்கான மக்கள் பற்றிய நினைவு அனேகமாக மக்கள் மத்தியில் மறந்தே போயிருக்கும். ஆளும் வர்க்கம், முதலாளித்துவக் கூட்டம் காலம் கடத்துவதன் நுட்பமான இரகசியம் இதுதான். 1984 டிசம்பர் 2 நள்ளிரவு இந்த விபத்து நடந்தது. தூக்கத்திலேயே மரணத்தைத் தழுவிக் கொண்டவர்களின் எண்ணிக்கை அரசு கணக்குப்படி 3787 பேர். உண்மையில் 25 ஆயிரம் பேர் பலியானார்கள் என்று கூறப்படுகிறது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஊனமுற்றனர் புரியும்படி சொல்ல வேண்டுமானால் நடைப் பிணங்களாகக் கொல்லாமல் கொன்று விட்டனர். ...