இஸ்லாமிய ஒழுங்குகள்- அமானிதம் -
நபிகளாரின் நாணயம்
அப்பாஸ் அலீ, எம்.ஐ.எஸ்.ஸி
அமானிதத்தைப் பேணுவது இறைத் தூதர்களின் பண்பாகும். ரோம மன்னர் ஹெர்குலிஸ், நபி (ஸல்) அவர்களைப் பற்றி விசாரித்த போது பெருமானாரின் நடத்தைகள் அவரிடம் எடுத்து உரைக்கப்பட்டது. அதில் அமானிதத்தை முறையாக ஒப்படைப்பதும் ஒன்று. இந்தக் குணங்களை வைத்து அவர் நபி (ஸல்) அவர்களை நல்லவர் என்றும் உண்மையாளர் என்றும் முடிவு செய்தார். ஒருவர் உண்மையாளரா அல்லது பொய்யரா என்று கண்டறிய அமானிதத்தைப் பேணுவது சிறந்த அளவுகோலாகும்.
(ரோம மன்னர் ஹிராக்ளியஸ் என்னிடம் சில கேள்விகளைக் கேட்டார். அதற்கு நான் அளித்த பதிலைக் கேட்டு விட்டு அவர் கூறியதாவது:) "உம்மிடம் "முஹம்மத் எதையெல்லாம் கட்டளையிடுகின்றார்?' என்று...