ஆன்லைன் மூலம் பள்ளிப்பாடம்
வள்ளியூரான்
ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் டூ வகுப்பு வரை உள்ள இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் உயிரியல் பாடங்களை மாதம் 150 ரூபாய்க்கு ஆன்லைனில் படிக்கலாம்.
பி.எஸ்.என்.எல். நிறுவனம், இணையதளம் மூலம் பள்ளி மாணவர்களுக்கு பாடங்களைக் கற்றுத்தரும் டில்லியில் உள்ள ‘கிரே செல்ஸ் 18 மீடியா’ என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து ஆன்லைன் மூலம் பள்ளிப்பாடம் நடத்தி வருகிறது. முதல் 15 நாட்களுக்கு ஆன்லைன் மூலம் பாடம் படிக்க இலவசம். மாணவர்கள் தொடர்ந்து இந்தச்சேவையைப் பயன்படுத்த விரும்பினால் மாதம் ரூ. 150 கட்டணம் செலுத்தவேண்டும்.
‘பி.எஸ்.என்.எல். டாப்பர் லேர்னிங்’ என்ற அந்த இணையதளத்தில் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் உயிரியல் பாடங்களையும், பிளஸ் ஒன் மற்றும் பிளஸ் டூ மாணவர்கள் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதப் பாடங்களையும்...