அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

புதன், 5 டிசம்பர், 2012

அதிகரிக்கும் ஆண் மலடு - ஆய்வில் எச்சரிக்கை


இயற்கைக்கு எதிராக மனிதர்கள் மாறிவருவதால் இன்னும் 50 ஆண்டுகளில் விந்தணுக்கள் உள்ள மனிதர்களை பார்ப்பது அபூர்வம் என்று அதிர்ச்சிகரமான தகவலை ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர். தாமதமான திருமணங்களும், குழந்தை பிறப்பை தள்ளிப் போடுவதும் விந்தணு குறைபாட்டிற்கு காரணம் என்கின்றனர் மருத்துவர்கள்.
உலகெங்கும் மருத்துவ துறையில் உள்ள மிக முக்கிய பிரச்னையாக உருவெடுத்திருப்பது குழந்தையின்மை பிரச்னை தான். குழந்தையின்மைக்கு பெண்கள் தரப்பில் சில காரணங்கள் இருந்தாலும் ஆண்கள் தரப்பில் முக்கிய காரணமாக விளங்குவது போதுமான விந்தணுக்கள் இல்லாததே.
சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வின் படி மனிதனின் விந்தணு எண்ணிக்கை ஆண்டுக்காண்டு குறைந்து கொண்டே வருவதையும் இது கட்டுப்படுத்தப்பட வில்லையானால் 50 ஆண்டுகளில் போதிய விந்தணுக்கள் உள்ள மனிதர்களே இருப்பதே கடினம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
குறைபாட்டிற்கு காரணம்
விந்தணு குறைபாட்டுக்கு காற்று மாசுபடுதல், ஜங்க் உணவுகள், சுற்றுப்புற மாசு, உடல் பருமன், ஸ்டரஸ் என்று சொல்லப்படும் மன உளைச்சல் போன்றவை முக்கிய பங்கு வகிக்கின்றன. ஸ்காட்லாந்தில் எடுக்கப்பட்ட ஆய்வின் படி புகைத்தல், குடித்தல், உடல் பருமனோடு நாம் உபயோகப்படுத்தும் ப்ளாஸ்டிக் பொருட்கள் மூலம் வெளியாகும் ஈஸ்ட்ரோஜனை ஒத்த வேதியியல் பொருட்கள் மூலமும் விந்தணுக்கள் குறைகின்றன என்கிறது.
விந்தணு வீழ்ச்சி
இது குறித்து ஆய்வு மேற்கொண்ட மருத்துவர் பார்கவா, சராசரியாக ஓராண்டுக்கு 2% ஆண்களுக்கு போதுமான விந்தணு குறைந்து கொண்டே வருகிறது என்றும் இப்படியே போனால் 50 ஆண்டுகளில் போதுமான விந்தணு கொண்ட ஆண்களை பார்ப்பதே அபூர்வம் என்கிறார். மேற்கத்திய நாடுகளில் விந்தணு வீழ்ச்சி 90களிலேயே உணரப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார். இந்தியாவுக்கும் இது பொருந்தும் என்று கூறியுள்ள பார்கவா ஹைதரபாத்தை சேர்ந்த தலை சிறந்த மருத்துவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இயற்கைக்கு எதிரான நிலை
தாமதமான திருமணங்களும் குழந்தை பிறப்பை தள்ளி போடுவதும் விந்தணுக்கள் குறைவதற்கு முக்கிய காரணங்கள் என்கிறார் மருத்துவர் மல்பானி. ப்ளாஸ்டிக் பொருட்கள் உபயோகிப்பதன் மூலம் விந்தணுக்கள் குறைகின்றன என்பது நிரூபிக்கப்படவில்லை என்று கூறும் அவர், விந்தணுக்கள் பழைய படி மனிதனிடத்தில் வளமாய் இருக்க வேண்டுமெனில் மனிதன் இயற்கையான வாழ்வுக்கு திரும்ப வேண்டும் என்பதே.
இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் கூறியதைப்போல மண்ணில் அளவிற்கு அதிகமான ரசாயன உரங்களைப் போட்டு மண்ணை மலடாக்குவதாக கூறியுள்ளார். மண் மலடானால், மனிதர்களும் மலடாவார்கள் என்று கூறி நாடுமுழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இன்றைய இளம் தலைமுறையினர் இதை புரிந்து இயற்கையோடு இசைந்து வாழ்ந்தால் மட்டுமே எதிர்காலத்தில் சந்ததிகள் உருவாக முடியும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாகும்.
தூக்கக்குறையாடு ஆண்மையை பாதிக்கும் ஆய்வில் தகவல்
ஐந்து மணிநேரத்திற்கு குறைவாக உறங்கும் ஆண்களுக்கு ஆண்மையை தூண்டும் ஹார்மோன் சுரப்பதில் குறைபாடு ஏற்படும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒரு வாரம் தூக்கம் கெட்டாலே இந்த பாதிப்பை உணரலாம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆண்களின் பாலுணர்வை ஊக்குவிப்பதில் 'டெஸ்ட்டாஸ்ட்டுரோன்' என்னும் ஹார்மோனிற்கு முக்கிய பங்கு உண்டு. இந்த ஹார்மோன் குறிப்பிட்ட அளவு சுரந்தால் மட்டுமே ஆண்களுக்கு உற்சாகம், ஏற்படும். பாலுணர்வில் ஈடுபாடும், ஆர்வமும் அதிகரிக்கும். ஆனால் நாளொன்றுக்கு ஐந்து மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கும் இளைஞர்களுக்கு அவரது பாலியல் உணர்வை தூண்டும் பிரதான ஹார்மோனின் சுரப்பு குறைந்துவிடும் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். சிகாகோ பல்கலைக் கழகம் சார்பில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அந்த பல்கலைக் கழக வளாகத்தில் இருந்த சராசரியாக 24 வயது கொண்ட 10 பேர் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்கள், நல்ல ஆரோக்கியத்துடனும், ஒல்லியான தேகத்துடனும், பலவித உடல் பரிசோதனைகளும், உளவியல் பரிசோதனைகளுக்கும் உட்படுத்தப்பட்டனர். அதன் பிறகு இவர்கள் மூன்று நாட்களுக்கு இரவில் 10 மணி நேரம் வரை தூங்க வைக்கப்பட்டனர். அதன் பின்னர் எட்டு நாட்களுக்கு 5 மணி நேரத்திற்கும் குறைவாகவே தூங்க அனுமதிக்கப்பட்டனர்.
ஆய்வின் ஒவ்வொரு நாளின்போதும், 24 மணி நேரத்திற்கும் ஒவ்வொரு 15 முதல் 30 நிமிடங்களுக்கும் அவர்களது ரத்த மாதிரி பரிசோதனைக்கு உட்படுத்தபட்டது. இதில் குறைவாக தூங்கியதற்கு பின்னர் இவர்களது 'டெஸ்ட்டாஸ்ட்டுரோன்' அளவு குறைந்திருப்பது ஆய்வில் தெரியவந்தது. இந்த டெஸ்டோஸ்டெரோன் சுரக்கும் அளவுக்கும், ஆண்களின் சக்தி குறைவு, விறைப்பு தன்மை குறைதல், கவனக்குறைவு மற்றும் சோர்வடைதல் ஆகியவற்றுக்குமிடையே தொடர்பு இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
மேலும் உடல் பலம், தசைகள் மற்றும் எலும்பு வலுவடைதல் ஆகியவற்றிலும் இந்த 'டெஸ்ட்டாஸ்ட்டுரோன்' முக்கிய பங்காற்றுவதாக ஆய்வுக் குழுவில் இடம்பெற்ற ஈவ் வான் என்ற மருத்துவ துறை பேராசிரியர் தெரிவித்துள்ளார்.
மேலும், உடல் மற்றும் மனம் சுறுசுறுப்பு குறைவதற்கும், டெஸ்டோஸ்டெரோன் அளவு குறைதலுக்கும் தொடர்பு உள்ளது. இதேபோல் தூக்கமின்மை நிச்சயம் பாலியல் உணர்வை பாதிக்கும் என்று தெரிவித்துள்ளார். இந்த ஆய்வு முடிவு இரவில் அதிகநேரம் கண்விழித்து இருக்கும் நமது இளைய தலைமுறையினருக்கு ஒரு எச்சரிக்கை மணி அடித்துள்ளது.
அதிகமா ஜங்க் புட் சாப்பிடுவது ஆண்மைக்கு ஆபத்து ஆய்வில் தகவல்
பீட்ஸா, பர்கர், உள்ளிட்ட ஜங்க் புட் எனப்படும் நொருக்குதீனிகளை உட்கொள்ளும் இளைஞர்களின் உயிரணுக்களில் பாதிப்பு ஏற்படும் என்று சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த நொறுக்குத் தீனிகளில் உள்ள டிரான்ஸ் ஃபேட் எனப்படும் கொழுப்பே இதற்கு காரணம் என்று அந்த ஆய்வு எச்சரித்துள்ளது.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை கல்லூரிக்கோ, அலுவலகத்திற்கோ செல்லும் இளைய தலைமுறையினர், வீட்டில் இருந்து உணவை எடுத்துச்செல்வது வழக்கம். ஆனால் இன்றைக்கு பாஸ்ட் புட், ஜங்க்

செவ்வாய், 27 நவம்பர், 2012

மற்றவர்கள் பாஸ்வேர்டை திருட 10 நிமிடம் போதும்: அதிர்ச்சி தகவல்!

http://www.tamilspy.com/wp-content/uploads/2012/01/pw.jpg
ஒரு சில எழுத்துக்களும் எண்களும்தான் நம்முடைய வாழ்வையும், பாதுகாப்பையும் தீர்மானிப்பவையாக இருக்கின்றன. ஏடிஎம் கார்டுகள், கிரெடிட் கார்டுகள் உபயோகிக்கும் போதும், இணையத்தில் பொருள்களை வாங்கும்போதும், இணைய வங்கிக் கணக்கு, மின்னஞ்சல்களைத் திறக்கும் போதும் பாஸ்வேர்டு அல்லது பின் நெம்பர்களைப் பயன்படுத்துகிறோம். நாம் பயன்படுத்தும் பாஸ்வேர்டுகள் நமக்கு மட்டும் உரியதாக இருக்கவேண்டும். அப்படியில்லாமல் போனால் நம்முடைய பாதுகாப்பு கேள்விக்குரியதாகிவிடும்.
நீங்கள் பயன்படுத்தும் எழுத்துகள் எளிமையானதாக இருந்துவிட்டால் ஹேக்கர்கள் எனப்படும் இணையத் திருடர்களுக்கு கொண்டாட்டம்தான். உங்கள் வங்கிக் கணக்கும், மின்னஞ்சலும் அவர்களுக்கு ஒரு சில நிமிடங்களில் சொந்தமாகிவிடும்.
பொதுவாக உலகம் முழுவதுமே பாஸ்வேர்டுகளை/பின் எண்களைப் பயன்படுத்துவோர் ஆங்கிலத்தில் சிறிய எழுத்துக்களையே (Small Case) அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். அதுவும் ஆறு எழுத்துக்கள் என்ற அளவில் என்று கடந்த டிசம்பர் 2010ல் புளூம்பெர்க் (Bloomberg) நிறுவனம் நடத்திய பாஸ்வேர்டு பயன்பாடு குறித்த ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
எழுத்துக்களில் abc யும், எண்களில் 123456 ஆகிய பொதுவான வார்த்தைகளே உலகில் 50 சதவீதம் பேர் பாஸ்வேர்ட்களாக பயன்படுத்துகின்றனர் என்றும், இது போன்ற 6 இலக்க பாஸ்வேர்டை ஹேக்கர்கள் கண்டறிய பத்து நிமிடங்கள் போதுமானது என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
இதற்கு மாற்றாக ஆங்கிலப் பெரிய எழுத்துக்களுடன் (Upper Case) சிறப்புக் குறியீடுகளைச் சேர்த்துப் பயன்படுத்தினால் அதனைக் கண்டுபிடிக்க அதிகபட்சமாக 44,530 வருடங்கள் பிடிக்கும் என்று கணக்கிட்டுள்ளனர்.
மேலும் இந்த ஆய்வு பாஸ்வேர்டுகளை எப்படி அமைக்கலாம் என்றும் ஆலோசனை கூறியுள்ளது. அதன்படி பாஸ்வேர்டுகளை ஆறு இலக்கமாக வைக்க வேண்டாம் என்றும் அதனை குறைந்தபட்சம் ஒன்பது இலக்கமாக மாற்றிக் கொள்ள வேண்டும்.
அந்த எழுத்துக்கள் ஆங்கிலப் பெரிய எழுத்தில் இருப்பதும், அதில் எண்களுடன் கலந்திருக்கும்படியும் அமைக்க வேண்டும். அத்துடன் சிறப்புக் குறியீடுகள் (Special Symbols) கலந்து அமைப்பது மிகவும் நல்லது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எத்தகைய பாஸ்வேர்டு அமைத்தால் பாதுகாப்பு?
இதோ இந்தப் பட்டியலைப் பாருங்கள், உங்கள் பாஸ்வேர்ட் எத்தகையது என்பதை முடிவு செய்யுங்கள்.
6 எழுத்துக்கள் சிறிய எழுத்துக்கள் (Lower Case) : 10 நிமிடங்கள்
+
பெரிய எழுத்துடன் (Upper Case) : 10 மணி நேரம்
+ எண்கள், குறியீடுகள் (Num & Symbols) : 18 நாட்கள்
7 எழுத்துக்கள் சிறிய எழுத்துக்கள் (Lower Case) : 4 மணி நேரம்
+ பெரிய எழுத்துடன் (Upper Case) : 23 நாட்கள்
+ எண்கள்,குறியீட்டுடன் (Num & Symbols) : 18 நாட்கள்
8 எழுத்துக்கள் சிறிய எழுத்துக்கள் (Lower Case) : 4 நாட்கள்
+ பெரிய எழுத்துடன் (Upper Case) : 3 வருடங்கள்
+ எண்கள்,குறியீட்டுடன் (Num & Symbols) : 463 வருடங்கள்
9 எழுத்துக்கள் சிறிய எழுத்துக்கள் (Lower Case) : 4 மாதங்கள்
+
பெரிய எழுத்துடன் (Upper Case) : 178 வருடங்கள்
+ எண்கள்,குறியீட்டுடன் (Num & Symbols) : 44,530 வருடங்கள் நதிக்கரை

வியாழன், 18 அக்டோபர், 2012

2012-13 ஆண்டுக்கான கல்வி உதவிதொகைகள் அறிவிப்பு...


 
தமிழ்நாடு  கல்வி அறக்கட்டளை  (2012-13 ஆண்டுக்கான கல்வி உதவிதொகைகள் அறிவிப்பு)
 
தமிழகத்தில் சென்னை மற்றும் மற்ற மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் முதலாம் ஆண்டு ,கலை மற்றும் அறிவியல்  பட்டபடிப்புகளிலும் ,பட்ட மேற்படிப்புகளிலும் மருத்துவம் / பொறியியல் கலூரிகளில் தொழில் முறை படிப்புகளிலும் மற்றும் Ph.D., பயிலும் மாணவர்களிடமிருந்து மட்டும் தகுதி அடிப்படையில் 2012-13ஆம் ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
 
தகுதி
உதவித்தொகை விபரம்
விண்ணப்பிக்கவேண்டிய முறை
கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் மட்டும் இதற்கு விண்ணப்பிக்கலாம் . இரண்டாம் ,மூன்றாம்,நான்காம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் இந்த  கல்வி உதவிக்கு விண்ணபிக்க முடியாது

தேர்வில் முதல் வகுப்பில் 60 % மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்

குடும்ப (பெற்றோர்/பாதுகாவலர்) ஆண்டு வருமானம் 75000 மிகாமல் இருக்க வேண்டும்

வேறு எந்த அரசு கல்வி உதவியும் பெற்றிருக்க கூடாது

பொறியியல் டிப்ளமோ படிப்பில் தேர்ச்சிபெற்று பொறியியல் கலூரியில் 2-வது ஆண்டு(Lateral Entry) சேர்ந்துள்ள மாணவர்களும் இந்த கல்வி உதவி பெறலாம்

மாலை நேர கல்லூரி (Evening College) ,அஞ்சல் வழி(Correspondence course)  ,பகுதி நேரம் (Part Time) படிக்கும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியாது

முதலாம் அண்டில் கல்வி உதவி பெற்ற மாணவர்கள் அடுத்தடுத்த ஆண்டுகளுக்கு புதிப்பித்து கொள்ளலாம் .(முதல் அட்டெம்ப்ட் 1st-attemptல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்



இளங்கலை பட்டதாரிகளுக்கு (Graduate) – ரூ 4500
முதுகலை பட்டதாரிகளுக்கு(Post Graduate) – ரூ 5000
தொழில் முறை படிப்புகளுக்கு(Professional) – ரூ 5500
பி எச் டி(Ph.D.) மாணவர்களுக்கு – ரூ 6500
கெளரவ செயலாளர்,
தமிழ்நாடு கல்வி அறக்கட்டளை,
ராணி சீதை மன்றம் , 6 வது மாடி,
603, அண்ணா சாலை  
சென்னை-600006
   044-28293322
 
அவர்களுக்கு ரூ 10/- அஞ்சல் தலை ஓட்டபெற்று (Self Addressed Cover) 22.5 Cm X 10 Cmதமது முகவரி எழுதி உரையுடன் கூடிய கோரிக்கை கடிதத்தை அனுப்பி விண்ணப்பத்தை பெற்று கொள்ளவும். அல்லது நேரில் சென்று விண்ணப்பதை பெற்று கொள்ளலாம்
 
கடைசி நாள்:
 
விண்ணப்ப படிவம் பெறுவதற்கான கடைசி  தேதி –15/10/2012
 
உரிய முறையில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி  தேதி –31/10/2012
 
மேற்படி தேதிக்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்கபட மாட்டது
 
மேலும் விபரங்களுக்கு 044-28293322 தொடர்புகொள்ளவும்
 
                                                                                                        M.Y.உமர் பாரூக்.மாணவர் அணி-TNTJ

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites