
Hot Coffee
சூடாக காப்பி, டீ குடிப்பவரா? சூடாக தேநீர் குடிப்பவரா நீங்கள்? அப்படி
என்றால், இனி கொஞ்சம் சூட்டை குறைத்துக்கொண்டு விடுங்கள்!
“மிகவும்
சூடாக டீ குடிப்பதால் உணவுக்குழாய் கேன்சர் வரும் ஆபத்து அதிகமாக
இருக்கிறது’ என்று இந்திய மருத்துவ நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வில்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.”
இந்த ஆய்வு முடிவை, சர்வதேச நிபுணர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
காபி, டீ மற்றும் சில வகை பானங்களை சூடாக சாப்பிடுவதை பலரும்
விரும்புகின்றனர்.
சிலர் தான், நன்றாக சூடு ஆறிய பின் குடிக்கும் பழக்கம் கொண்டுள்ளனர்.
இது ஒரு வகையில் உடலுக்கு மிகவும் நல்லது என்று தெரிகிறது.
தென் மாநிலங்களில், குறிப்பாக தமிழ் நாட்டில் தான் காபி குடிக்கும்...