
எம். முஹம்மது ஸலீம், இறைவனின் நேசத்தை பெற்றவருடைய வாழ்க்கை, இம்மையிலும் மறுமையிலும் இறையருள் நிறைந்த இனிமையான வாழ்க்கையாக இருக்கும் என்பதில் எவ்விதமான சந்தேகமுமில்லை. ஆதலால் தான் அன்று முதல் இன்று வரை இறைநேசத்தை பெறுவதற்காக என்றே மக்கள், மனந்தளராமல் பல்வேறு விதமான காரியங்களை கடைபிடித்துக் கொண்டிருக்கின்றார்கள். துறவறம் மேற்கொள்வது, மனிதனை நரபலி கொடுப்பது, நேர்ச்சை காணிக்கை என்ற பெயரில் தேகத்தை வருத்திக்கொள்வது இன்னும் இதுபோன்ற காரியங்களையெல்லாம் இறைநேசத்தைப் பெற வேண்டும் என்பதை முதன்மையான நோக்கமாக வைத்தே செய்துகொண்டிருக்கின்றார்கள். அதேசமயம் ஆராய்ந்து பார்த்தால் "அதிகமதிகமான மக்கள்,...