ஆணுக்குப் பெண் இங்கே இளைப்பில்லை காண்' என்று பெண்கள் எல்லாத் துறையிலும் சிறந்து விளங்கும் இந்தக் கணினி யுகத்திலும்கூட மானப் படுகொலைகள் நடக்கிறது என்பது வேதனையான உண்மை. பாகிஸ்தானில் மிக அதிக அளவில் இந்த மானப் படுகொலை நடைபெறுகிறது. சில ஆயிரம் பேர் இறந்து கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்தால், இந்தியாவில் அது அதிகமாக நடந்துகொண்டிருக்கிறது என்று அண்மைக்காலமாக நடைபெற்றுவரும் படுகொலைகளில் தெரியவந்துள்ளது. ஒரே கோத்திரத்தைச் சேர்ந்த ஆணும் பெண்ணும் திருமணம் செய்துகொண்டதற்காக கொலை செய்யப்பட்டனர். வேறுஜாதியைச் சேர்ந்த நபரைத் திருமணம் செய்துகொண்ட பெண், ஊர் பஞ்சாயத்து உத்தரவின்பேரில் கொல்லப்பட்டாள் என்று செய்திகள் வருகின்றன. ஆண்டுதோறும் வடஇந்தியாவில் சுமார் 900 பேரும், தென்னிந்தியாவில் 100 பேரும் குடும்ப மானத்தைக் காரணம்காட்டி கொல்லப்படுகிறார்கள் என்கிற தகவல் அதிர்ச்சி...