
உலகளவில் கடந்த இருபது ஆண்டுகளில் மின்சக்தியின் தேவை பல மடங்கு அதிகரித்திருக்கிறது. மக்கள் பெருக்கத்தின் காரணமாகவும், தொழில் முன்னேற்றத்தினாலும் மின்சக்திப் பயன்பாடு கூடிக்கொண்டே போகிறது.சக்திக்கான இயற்கை மூலங்களான பெட்ரோலியம், எரி வாயுக்கள், நிலக்கரி போன்றவை தொடர்ந்து கிடைத்துக் கொண்டிருக்க வாய்ப்பில்லை. தற்போது பூமியில் புதைந்திருக்கும் நிலக்கரிப் படிவுகள், வரும் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும் என்று கணக் கிடப்பட்டுள்ளது. நீர் மின்சார உற்பத்திக்கும் ஓர் அளவுண்டு என்பதை நாம் நடைமுறையில் பார்க்கிறோம். கோடைக் காலத்தில் அணைகளில் தண்ணீர் மட்டம் குறையும்போது நீர் மின்சார உற்பத்தியும்...