அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

செவ்வாய், 7 டிசம்பர், 2010

ஐஐடியில் பொறியியல் (B.E/B.Tech) படிக்க IIT-JEE 2011



   அதிக பணம் கொட்டி கொடுத்து தனியார் கல்லுரிகளில் மாணவரகளை B.E/B.Tech சேர்த்தாலும் தரமான கல்வி இல்லை, படித்து முடித்த பிறகு வேலை இல்லை, வேலை கிடைத்தாலும் படித்ததற்க்கான வேலை கிடைக்கவில்லை என்ற குறைபாடு முஸ்லீம் சமுதாயத்தில் அதிகமாகவே உள்ளது. கற்பனை செய்துபாருங்கள் : மிக குறைந்த செலவில் உலக தரத்தில் நல்ல தரமான கல்வி, கல்வி கட்டணம் (பீஸ்) கட்ட வசதி இல்லாத மாணவர்களுக்கு உடனடியாக இலவச கல்வி உதவி தொகை, படித்து முடிப்பதற்க்குள் மாதம் பல ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலைஇலவசமாக வெளி நாட்டில் மேல்படிப்பு படிக்க வாய்ப்பு, கேட்க எவ்வளவு நன்றாக இருக்கின்றது. இது கற்பனை அல்ல இப்படி ஒரு கல்வி நிறுவனம் இருக்கின்றது. அதுதான் மத்திய அரசால் நடத்தப்படும் சென்னை உட்பட நாட்டின் பல்வேறு பகுதியில் உள்ள ஐஐடி.

தனியார் கல்லூரிகளை விட இங்கு கல்வி கட்டணம் குறைவு, வசதி இல்லாத மாணவர்களுக்கு  மத்திய அரசின் இலவச கல்வி உதவி தொகை (ஐஐடி-யில் படிக்கும் முஸ்லீம் மாணவர்களுக்கு மத்திய அரசு சிறப்பான இலவச கல்வி உதவி திட்டத்தை அமல்படுத்தி வருகின்றது). இங்கு  உலக தரத்தில் கல்வி கற்று கொடுக்கப்படுகின்றது.  படித்து முடிப்பதற்க்குள் மாதம் பல ஆயிரம் சம்பளத்தில் வேலை (தற்போது ஐஐடி-யில் படிக்கும் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கான மாத சம்பளம்  ரூ.1,00,000 இருந்து ரூ.30 ஆயிரம் வரை). மாதம் இலட்சங்களை வாங்கிகொண்டு வெளி நாட்டில் மேல்படிப்பு படிக்க வாய்ப்புகள். இவை அனைத்தும் உள்ள ஒரே கல்வி நிறுவனத்தில் முஸ்லீம்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு.

இங்கு படிக்க நாம் என்ன செய்ய வேண்டும்?
இங்கு சேர மத்திய அரசு பல்வேறு நுழைவு தேர்வுகளை நடந்துகின்றது, அந்த நுழைவு தேர்வுகளில் தேர்ச்சி பெற்றால் போதும்,

இட ஒதுக்கீடு :  ஐஐடி-யில்   (முஸ்லீம்களையும் சேர்த்து) பிற்படுத்தபட்ட வகுப்பினருக்கா 27% இட ஒதுக்கீடு உள்ளது.

IIT-JEE 2011 : தற்போது ஐஐடி-யில் (IISc-யையும் சேர்த்து) +2 படித்த மாணவர்கள் 2011 ஆண்டு பொறியியல் படிப்பிற்க்கு  சேர்வதற்க்கான நுழைவு தேர்வின் (IIT-JEE 2011) விண்ணப்பம் விணியோகிகப்பட்டு வருகின்றது. (தேர்வை பற்றிய விபரங்கள் அட்டவணை இடம் பெற்றுள்ளது).  மேலும் விபரம் www.jee.iitm.ac.in இந்த இணையதளத்தில் உள்ளது
யார் இந்த தேர்வை எழுத முடியும்?
2010-ல் தேர்சி பெற்ற மாணவர்கள் மற்றும் 2011-ல் தேர்வு எழுத உள்ள மாணவர்கள் இந்த தேர்வை எழுதலாம். மாணவர் அதிகபட்சமாக இரண்டு முறை மட்டுமே IIT-JEE தேர்வு எழுத முடியும். +2-வில் கணிதம், இயற்பியல், வேதியியல்  படிக்கும் மாணவர்கள், +2 வொகேஷனல் (vocational) குரூப் படிக்கும் மாணவர்கள். 3 ஆண்டு டிப்ளமோ படித்த மாணவர்கள்.  +2-வில் குறைந்த்தது  60% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
இந்த தேர்வுக்கு தயாராவது எப்படி?
இது வருடா வருடம் நடக்கும் தேர்வாகும். எனவே கடந்த 5 ஆண்டு கேள்விதாள்களை பார்த்தால் பாடத்தின் எந்த பகுதியில் இருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றது என அறிந்து கொள்ளலாம். அந்த பாட பகுதிகளை நன்றாக ஆராய்ந்து படித்தாலே போதும். மேலும் CBSC-யின் +2 ஆம் வகுப்பு புத்தகங்கள் வாங்கிபடித்தால் இது போன்ற தேர்வுகளுக்கு பயன் உள்ளதாக இருக்கும்.

இந்த கேள்விதாள்கள், புத்தகங்கள் முக்கிய புத்தக கடைகளில் கிடைக்கும். குறிப்பாக சென்னை மூர்மார்க்கெட் பகுதியில் உள்ள புத்தக கடைகளில் கிடைக்கும்.
இந்த தேர்வை எழுதும் முஸ்லீம் மாணவரகளின் எண்ணிக்கை மிக மிக குறைவு, காரணம், இந்த நுழைவு தேர்வுகளை பற்றி முஸ்லீம் சமுதாயம் அறியாமல் இருப்பதும், அறிந்திருந்தாலும் இதெல்லாம் மிக கடினம் என்று ஒதுக்கி விடுவதாலும் தான், உண்மையில் நன்றாக படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இத்த தேர்வுகள் கடினமில்லை.  மாணவர்களே! தேர்வுகள் கடினம் என்ற தவறான சிந்தனையை குப்பையில் போடுங்கள்எந்த தேர்வையும் சந்தித்து சாதிக்க நம்மோடு அல்லாஹ் இருகின்றான், அல்லாஹ்விம் மீது நம்பிக்கைவையுங்கள் அவனிடம் வலியுத்தி கேளுங்கள், கடினமாக உழைத்து படியுங்கள் நிச்சயம் அல்லாஹ் நமக்கு வெற்றியை தருவான் இன்ஷா அல்லாஹ்.  தேர்வை பற்றி மேலும் விபரம் அறிய மற்றும் உங்கள் சந்தேகங்களுக்கு sithiqu.mtech@gmail.com  இந்த மெயிலுக்கு தொடர்புகொள்ளவும்
                                                                            
-  S.
சித்தீக்.M.Tech
IIT-JEE 2011 தேர்வை பற்றிய விபரம்
விண்ணப்பம் சமர்பிக்க கடைசி தேதி :

டிசம்பர் – 20   இன்ஷா அல்லாஹ்
(ஆன்லைனில் சமர்பிக்க கடைசி தேதி டிசம்பர் 15)
தேர்வு நடைபெறும் தேதி
ஏப்ரல் – 10 இரண்டு தேர்வுகள் (காலை மற்றும் மாலை) இன்ஷா அல்லாஹ்
தேர்வு முடிவுகள் வெளிவரும் தேதி
மே – 25 இன்ஷா அல்லாஹ்
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி
Chairmen, JEE, IIT Madras, Chennai - 600036
Phone : 044-22578220
விண்ணப்பங்கள் கிடைக்கும் இடம் :
சென்னை ஐ.ஐ.டி  மற்றும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள இந்தியன் வங்கி கிளைகள்
விண்ணப்பத்தின் விலை :
Rs.1,000, (ஆன்லைனில் சமர்பிக்கும் விண்ணப்பம் ரூ. 900)
ஆன்லைனில் விண்ணப் பங்களை பூர்த்தி செய்ய

வயது வரம்பு
அக்டோபர் 1, 1986 ஆம் ஆண்டிற்க்கு பிறகு பிறந்திருக்க வேண்டும்


திங்கள், 6 டிசம்பர், 2010

ஏன் இந்த இரட்டை வேடம்?



மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்திருக்கிறது. 1989-ல் போபால் விஷவாயுக் கசிவு வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய 470 மில்லியன் டாலர் இழப்பீட்டுத் தொகை உயர்த்தப்பட வேண்டும் என்பதுதான் அரசின் வேண்டுகோள். அப்போது உச்ச நீதிமன்றம் உண்மை நிலைமையை முழுமையாக உணர்ந்து கொள்ளாத நிலையில் ஊகத்தின் அடிப்படையில் இழப்பீடு வழங்கிவிட்டது என்றும், இப்போது அதை மறுபரிசீலனை செய்து இழப்பீட்டுத் தொகையை அதிகரிக்க வேண்டும் என்பதும் மத்திய அரசின் கோரிக்கை.
1984-ம் ஆண்டு நடந்த உலகையே உலுக்கிய அந்தச் சம்பவத்தின் 26-வது நினைவுநாளில் இந்தக் கோரிக்கை மனுவை மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறது. ""ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் இழப்பீட்டுக்காக வழங்கிய தீர்ப்பில் சுமார் 3,000 பேர் மட்டும் மரணமடைந்ததாகவும், 50,000 பேர் பாதிக்கப்பட்டதாகவும், 20,000 பேர்தான் தாற்காலிக ஊனமடைந்ததாகவும் உத்தேச மதிப்பீட்டின் அடிப்படையில் அந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டது. உண்மையான புள்ளிவிவரப்படி, 5,295 பேர் மரணமடைந்திருக்கிறார்கள். 5,27,894 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தாற்காலிக ஊனமுற்றோரின் எண்ணிக்கை 35,455. மேலும், இழப்பீட்டுத் தொகையின் வட்டியைக் கணக்கிட்டாலே பல மடங்கு அதிகம் தரவேண்டிவரும்'' என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்த மறுபரிசீலனை மனுவில் எதிர்த்தரப்பாக, இப்போது "டௌ' கெமிக்கல்ஸ் என்கிற குழுமத்தின் அங்கமாக விளங்கும் யூனியன் கார்பைட், அமெரிக்க யூனியன் கார்பைட், மெக்  லியாட் ரஸ்ஸல் இந்தியா, எவரெடி இண்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவனங்களை அரசுத் தரப்பின் சார்பில் அட்டார்னி ஜெனரல் ஜி.இ. வாகன்வதி குறிப்பிட்டிருக்கிறார்.
இது ஒருபுறம் இருக்க, "டௌ' குளோபல் டெக்னாலஜீஸýடனான ரிலையன்ஸ் பெட்ரோ கெமிக்கல்ஸின் தொழில்நுட்ப ஒப்பந்தம் ஜாம் நகரில் ஜாம்ஜாமென்று செயல்வடிவம் பெற்று வருகிறது. மத்திய வர்த்தக, தொழில் அமைச்சகம் ரிலையன்ஸ் பெட்ரோலியம் நிறுவனத்துக்கு போபால் விஷவாயு விபத்துக்குக் காரணமான யூனியன் கார்பைட் நிறுவனத்தின் உரிமையாளர்களான "டௌ' குளோபலுடன் இணைந்து ஜாம்நகர் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் ஒரு பாலி புரொபலின் தொழிற்சாலை அமைக்க அனுமதி வழங்கி இருக்கிறது.
2006 அக்டோபர் மாதம் "டௌ' பன்னாட்டுக் குழுமத்தைச் சேர்ந்த "டௌ' குளோபல் டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் அன்னியத் தொழில்நுட்பக் கூட்டு முயற்சிக்கான அனுமதியை ரசாயனம், உர அமைச்சகம்தான் ரிலையன்ஸ் பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனத்துக்கு அளித்தது என்றாலும், மார்ச் 2007-ல், தொழில் கொள்கை மற்றும் வளர்ச்சி ஆணையத்துக்கு, அந்த அனுமதியை மறுபரிசீலனை செய்யும்படி வேண்டுகோள் விடுத்தது. மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் "டௌ' கெமிக்கல்ஸ் மீது இழப்பீடு கோரும் வழக்கு நிலுவையில் இருப்பதால், இந்த அனுமதியை நாம் மறுபரிசீலனை செய்வது நல்லது என்று ரசாயன அமைச்சகம் கோரியது.
ஆனால், வர்த்தக அமைச்சகமோ ரசாயன அமைச்சகத்தின் கோரிக்கையைச் சட்டை செய்ததாகவே தெரியவில்லை. காலம் கடந்த வேண்டுகோள் என்றுகூறி ரசாயன அமைச்சகத்தின் வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டிருக்கிறது.
2007-ம் ஆண்டில் அப்போது வர்த்தகத்துறை அமைச்சராக இருந்த கமல்நாத், பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஒரு கடிதம் எழுதியிருப்பது இப்போது தெரியவந்திருக்கிறது. அந்தக் கடிதத்தில், அமெரிக்க முதலீட்டாளர்களுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் நல்லதொரு "சமிக்ஞை' அளிக்கும் விதத்தில், நாம் போபால் விஷவாயுக் கசிவுப் பிரச்னையில் "டௌ' கெமிக்கல்ஸிடம் கோரும் நஷ்டஈடு பற்றி சற்று யோசித்துச் செயல்படுவது நல்லது என்று குறிப்பிட்டதுடன் நின்றுவிடவில்லை. ரிலையன்ஸ் பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனத்துடனான தொழில்நுட்ப ஒப்பந்தத்தை நாம் அனுமதிப்பதேகூட அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு நல்லிணக்க வழிகாட்டியாக அமையும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
சமீபத்தில், இந்தப் பிரச்னை தொடர்பாக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் இன்னும் சில தகவல்கள் தெளிவாக்கப்பட்டிருக்கின்றன. ""அன்னியத் தொழில்நுட்ப ஒப்பந்தத்துக்கான அனுமதி மூலம், "டௌ' நிறுவனம் இந்திய அரசால் தடை செய்யப்பட்ட ஒன்று அல்ல என்பதை அன்னிய முதலீட்டாளர்களுக்குத் தெரியப்படுத்துவது ஒரு நல்ல அறிகுறி'' என்று வெளிவிவகாரத்துறை கருத்துத் தெரிவித்திருப்பது தெரியவந்துள்ளது. போபால் விஷவாயுக் கசிவுப் பிரச்னையில் யூனியன் கார்பைட் நிறுவனத்துக்கு எந்தவிதப் பொறுப்பும் இல்லை என்று நீதிமன்றங்களின் மூலம் இந்திய அரசு தெளிவுபடுத்தி, அந்த நிறுவனம் இந்தியாவில் முதலீடு செய்யவும், இயங்கவும் வழிகோல வேண்டும் என்று "டௌ' குழுமம் விழைவதும் தெரியவந்துள்ளது.
இன்னும் முழுமையாக "டௌ' நிறுவனத்திடமிருந்து இழப்பீடு பெறப்படவில்லை. யூனியன் கார்பைட் நிறுவனம் இருந்த விஷவாயுவால் பாதிக்கப்பட்ட பூமி முற்றிலுமாகச் சுத்தப்படுத்தப்படவில்லை. போபாலில் உள்ள நிலத்தடி நீரில் 26 ஆண்டுகளாகியும் விஷவாயுக் கசிவால் ஏற்பட்ட பாதிப்பு அகன்றபாடில்லை.
ஒருபுறம், போபால் விஷவாயுக் கசிவுக்கு "டௌ' குழுமத்தைச் சேர்ந்த யூனியன் கார்பைட் நிறுவனம் அளிக்க வேண்டிய இழப்பீடு போதாது என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுச் செய்கிறது. இன்னொருபுறம், ரிலையன்ஸ் பெட்ரோ கெமிக்கல்ஸýக்கு அதே நிறுவனத்துடன் தொழில்நுட்ப ஒப்பந்தம் செய்துகொள்ள அனுமதியும் வழங்குகிறது. ஏன் இந்த நிர்வாக முரண்?
தொழில் நிறுவனங்கள் அதனால் ஏற்படும் பாதிப்புகளுக்குப் பொறுப்பேற்கத் தயாராக இல்லை என்றால், அதனால் பாதிக்கப்படும் பொதுமக்களின் நிலைதான் என்ன, வருங்காலச் சந்ததியரின் ஆரோக்கியத்துக்கு யார்தான் உத்தரவாதம் தருவது?

விவாகரத்துக்கு காரணமாகும் ஃபேஸ்புக்!

ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத் தளங்கள் உலக அளவில் ஏராளமான மக்களை ஒன்றிணைப்பதாக ஒருபுறம் பெருமையுடன் பேசிக்கொண்டிருக்கையில், மறுபுறம் அமெரிக்காவில் நடக்கும் ஒவ்வொரு ஐந்து விவாகரத்திலும் ஒரு விவாகரத்துக்கு ஃபேஸ்புக் காரணமாக உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க திருமண வழக்கறிஞர்கள் சங்கம் நடத்திய ஆய்வில், விவாகரத்து வழக்கில் ஆஜராகும் வழக்கறிஞர்களில் 80 விழுக்காட்டினர், விவகாரத்து கோரி தங்களிடம் வரும் தங்களது கட்சிகாரர்களின் எதிர்பாலர் புழங்கும் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளத்தில் கிடக்கும் அவர்களது உண்மை முகங்களையே ஆதாரங்களாக காட்டியே விவாகரத்து வாங்கி கொடுப்பதாக தெரியவந்துள்ளது.
அதாவது தங்கள் கட்சிகாரருக்கு துரோகம் இழைக்கும்விதமாக வெறொரு பெண் அல்லது ஆணுடன் தொடர்பிலிருக்கும் விவரங்கள் மற்றும் அவர்களது பாலியல் இச்சைகள், வக்கிரங்களை ஃபேஸ்புக்கிலிருந்தே ஆதாரமாக காண்பித்து விவகாரத்து வாங்கிக் கொடுக்கிறார்களாம்
எதிர்காலத்தில் இப்படி ஒரு வில்லங்கம் வர வாய்ப்புள்ளது என்ற ஆபத்தை உணராமல், ஃபேஸ்புக்கில் உலா வருபவர்கள், தங்களது மனைவி அல்லது கணவனுக்குக் கூட தெரியாத அந்தரங்கமான விடயங்களை ஏற்றி வைக்க, பின்னாளில் அதுவே விவாகரத்து போன்ற சமயங்களில் வில்லனாக உருவெடுத்துவிடுகிறதாம்!
விவகாரத்து கோரி நீதிமன்றங்களின் படிக்கட்டுகளில் ஏறும் ஆண் அல்லது பெண் தனது மனைவி அல்லது கணவன், சமூக வலைத்தளங்களில் கொட்டி வைத்துள்ள அசிங்கமான தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் போன்றவற்றையே உதாரணமாக காட்டி, இப்படிப்பட்ட குணமுடையவருடன் சேர்ந்து வாழ முடியாது என கூற, நீதிமன்றமும் இத்தகைய அசைக்க முடியாத ஆதாரங்களின் அடிப்படையில் விவாகரத்து வழங்கிவிடுகிறது.
இவ்வாறு விவாகரத்து வாங்கி கொடுக்கும் வழக்கறிஞர்களில் 66 விழுக்காட்டினர், தங்களது விவாகரத்து வழக்கிற்கு முக்கிய ஆதாரமாக ஃபேஸ்புக் வலைத்தளங்களில் எதிர்தரப்பினர் கூறிவைத்துள்ளதையே காட்டுகின்றனராம்.
ஃபேஸ்புக்கை தொடர்ந்து 'மை ஸ்பேஸ்' தளம் 15 விழுக்காடும், 'ட்விட்டர்' தளம் 5 விழுக்காடும், இதர தளங்கள் 14 விழுக்காடும் வழக்கறிஞருக்கு ஆதாரம் அளிக்கும் தளங்களாக விளங்குகின்றனவாம்.
அமெரிக்கா க்தை இதுவென்றால், பிரிட்டனிலோ 20 விழுக்காடு விவகாரத்துக்கு ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களே காரணமாக உள்ளதாம்.
" இவ்வாறு விவாகரத்திற்கு ஆளாகுபவர்களிடம் பொதுவாக காணப்படும் ஒரு குணம், தங்களால் செய்ய இயலாத முறையற்ற பாலியல் செய்கைகள் குறித்து சமூக வலைத்தளங்களில் உரையாடுவது - "சாட்" செய்வது - தான்" என்று கூறுகிறார் பிரிட்டனை சேர்ந்த பிரபல விவாகரத்து இணைய தளத்தின் நிர்வாக இயக்குனர் மார் கீனன்!
இதற்கு நல்ல உதாரணம் கூறுவதென்றால் சமீபத்தில் பிரபல பாஸ்கட் பால் விளையாட்டு வீரர் டோனி பார்க்கர், தனது மனைவிக்கு தெரியாமல் ஒரு பெண்ணுடன் தொடர்பிலிருந்ததை அவரது ஃபேஸ்புக் தளம் மூலம் அறிந்து, அதனையே ஆதாரமாக காட்டி விவாகரத்து வாங்கியதைக் கூறலாம் என்கிறார் மார்க்.
அமெரிக்கா, பிரிட்டனில் காணப்படும் நிலை கூடிய விரைவில் நமது நாட்டிலும் ஏற்பட சாத்தியமுள்ளது.
எனவே ஃபேஸ்புக் போன்ற வலைத்தளங்களில் உலா வருபவர்கள் அடக்கி வாசிப்பது நல்லது. அதுவும் ஒருவகை ஏமாற்றுதான் என்பதால் தங்களது திருமண பார்ட்டனருக்கு விசுவாசமாக இருப்பதே நல்லது.

ஞாயிறு, 5 டிசம்பர், 2010

வரதட்சணை மற்றும் பித்அத்தான திருமணங்கள்



வரதட்சணை மற்றும் பித்அத்தான திருமணங்கள் நடைபெறும் வீடுகளிலிருந்து நமது வீட்டிற்கு உணவு வந்தால் சாப்பிடலாம் என்று எழுதி இருந்தீர்கள். இதே அடிப்படையில் பெண் பிள்ளை சடங்கு, கத்னா, திருமண நாள், வளை காப்பு என பித்அத் செய்யும் வீடுகளிலிருந்து நமது வீட்டுக்கு வரும் உணவை (பூஜிக்கப்படாத நிலையில்) சாப்பிடலாமா? விருந்தில் கலந்து கொள்ளக் கூடாது எனும் போது அந்த உணவு வீட்டுக்கு வந்தாலும் சாப்பிடக் கூடாது என்று தானே கூற வேண்டும்?
எம். (ஷாகுல்) அப்துல் ஹமீது
மேலப்பாளையம்
ஒரு உணவைச் சாப்பிடக் கூடாது என்று கூறுவதாக இருந்தால் அதை அல்லாஹ்வோ, அவனது தூதரோ தான் கூற வேண்டும். அல்லாஹ்வோ, நபி (ஸல்) அவர்களோ ஹராமாக்காத ஒன்றை நாமாக ஹராம் என்று கூறுவது அல்லாஹ்வின் அதிகாரத்தில் தலையிடும் செயலாகும். இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
விருந்துக்கு அழைக்கப்படும் இடத்தில் மார்க்கத்திற்கு முரணான காரியங்கள் நடைபெற்றால் அந்த விருந்தில் கலந்து கொள்ளக் கூடாது என்று நாம் கூறுகின்றோம். இது அந்த விருந்தில் வழங்கப்படும் உணவு ஹராம் என்பதற்காக அல்ல! அந்த நிகழ்ச்சி மார்க்கத்திற்கு முரணாக இருப்பதால் அங்கு செல்வது தடுக்கப்பட்டது என்ற அடிப்படையில் தான் இவ்வாறு கூறுகிறோம். இதையும் நாம் சுயமாகச் சொல்லவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு வழிகாட்டியுள்ளார்கள்.
நான் உணவைத் தயார் செய்து நபி (ஸல்) அவர்களை விருந்துக்கு அழைத்தேன். நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள். என் வீட்டில் உருவப் படங்கள் இருந்ததைக் கண்டு திரும்பி விட்டார்கள்.
அறிவிப்பவர்: அலீ (ரலி)
நூல்: இப்னுமாஜா (3360)
தீமை நடக்கும் ஒரு இடத்திற்குச் செல்லக் கூடாது என்பதால் அங்கு வழங்கப்படும் உணவு ஹராமாகி விடாது. ஒரு இடத்தில் பன்றி இறைச்சி அல்லது பூஜை செய்யப்பட்ட உணவுகளைக் கொண்டு விருந்து வழங்கப்படுகின்றது என்றால் அந்த உணவே தடுக்கப்பட்ட உணவாகும்.
ஆனால் வரதட்சணை, கத்னா, வளைகாப்பு போன்ற தீமைகள் நடக்கும் இடங்களில் இது போன்ற ஹராமான உணவு வகைகள் வழங்கப் படுவதில்லை. இந்த இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டைப் புரிந்து கொள்ள வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் விருந்துக்கு அழைக்கப்பட்ட போது அங்கு உருவப்படங்கள் இருந்ததால் திரும்பிச் சென்றார்கள். இந்த அடிப்படையில் வரதட்சணை, சடங்கு, கத்னா போன்ற நிகழ்ச்சிகளுக்குச் செல்லக் கூடாது; அங்கு நடக்கும் விருந்துகளில் கலந்து கொள்ளக் கூடாது என்கிறோம்.
ஆனால் அந்த நிகழ்ச்சிகள் நடைபெறும் வீடுகளிலிருந்து உணவுப் பொருள் வரும் போது அதை உண்ணக் கூடாது என்று கூறுவதாக இருந்தால் அதற்கு மார்க்கத்தில் தெளிவான ஆதாரம் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் அல்லாஹ் ஹலாலாக்கிய உணவை நாம் ஹராமாக்கிக் கொள்வது போன்றாகி விடும். எனவே தான் இந்த உணவுகளைச் சாப்பிடுவதற்குத் தடையில்லை என்று கூறுகிறோம்.
அதே சமயம், இது போன்ற உணவுகளைத் தருபவர்களிடம் குறிப்பிட்ட அந்த நிகழ்ச்சியின் தீமை பற்றி மார்க்க அடிப்படையில் விளக்குவது நமது கடமையாகும்.
"பூஜையோ, புனஸ்காரமோ செய்த பின் சாதாரண பொருட்களும் புனிதப் பொருட்களாக மாறிவிடும்' என்ற பிற மத மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப மவ்லிது, பாத்திஹா ஓதப்பட்ட பின் சாதாரண உணவும் "தபர்ருக்' (பிரசாதம்) என்று கருதப்படுவதால் அவ்வாறான உணவுகள் ஹராமாகும். அந்த உணவுகளை வீட்டுக்குக் கொடுத்து விட்டாலும் உண்ணக்கூடாது.


Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites