

தவ்ஹீத் இஸ்லாமியக் கல்லூரியின் முதல்வர் எம்.ஐ.முஹம்மத் சுலைமான் அவர்கள் தலைமை தாங்கினார். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்ட செயலாளர்அப்துஸ் ஸுப்ஹான், மாவட்டத் துணைத் தலைவர் அப்துல் வஹ்ஹாப் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
கல்லூரியில் பட்டம் பெறும் மாணவர்கள் முபாரக் அலீ, முஹம்மத் ஸைத் ஆகியோரும் உரையாற்றினர்.
பின்னர் கல்லூரி பேராசிரியர் முஹம்மத் தாஹா அவர்கள் கல்லூரியின் ஆண்டறிக்கை வாசித்தார்.
பட்டம்பெறும் அனைத்து மாணவர்களுக்கும் ஹதீஸ்,தப்ஸீர்,பிக்ஹு போன்ற குறுந்தகடுகள், நபிமொழி, தப்ஸீர் நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
ஹதீஸ்கள் நூல்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தம்மாம் மண்டலம் வழங்கியது.
பரிசுகளை சேலம் மாவட்ட நிர்வாகிகள் வழங்கினர்.
இறுதியாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலப் பொருளாளர் முஹம்மத் சாதிக் அவர்கள் பட்டங்களை வழங்கி வாழ்த்துரை வழங்கினார்.
இறுதியாக கல்லூரி பேராசிரியர் ராஜ் முஹம்மத் நன்றியுரை ஆற்றினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக