அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

செவ்வாய், 3 ஆகஸ்ட், 2010

கைரேகை மூலம் புலனாய்வு


 கைரேகைப் பதிவு மூலம் குற்றவாளிகளைக் கைது செய்யும் நுட்பத்தை உருவாக்கியவர் எட்வர்ட் ஹென்றி. இவர் 1890 ஆம் ஆண்டு வாக்கில் வங்காளத்தில் காவல் துறைத் தலைவராக இருந்தவர். 1901 ஆம் ஆண்டில் ஸ்கொட்லாந்து யார்டில் குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரியாக ஹென்றி நியமிக்கப்பட்டார். அங்கு அவர் முதல் முறையாக கைரேகைப் பிரிவைத் தொடங்கினார்.

பின்னாளில் காவல் துறை ஆணையரான அவர் 1918 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார். காவல் துறையில் ஹென்றி ஆற்றிய பணிகளுக்காக அவருக்கு சேர்பட்டம் வழங்கப்பட்டது. ஆனால் அவர் சேர் ஹென்றிஎன அழைக்கப்பட்டது அரிது. அவர் பொதுவாக திருவாளர் கைரேகைஎன்று தான் அழைக்கப்பட்டார்.

கைரேகைகளை வகைப்படுத்து வதில் குறிப்பிடத்தக்க பங்காற்றிய மற்றொரு காவல்துறை அதிகாரி ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த ஜூவன் வுசெட்டிக்என்பவர். ஒருவரை அடையாளம் கண்டுபிடிப்பதற்கு மிகவும் நம்பத்தகுந்த ஆதாரமாக கைரேகை விளங்குகிறது. ஏனெனில் எந்த இரு மனிதர்களின் கைரேகையும் ஒரே மாதிரி இருப்பதில்லை.

அவர்கள் ஒன்றாகப் பிறந்த இரட்டையர்களாக இருந்தாலும் கூட! ஒரு குற்றச் சம்பவம் நடந்த இடத்தில் காவல்துறைத் தடயவியல் நிபுணர்கள் முதலில் கைரேகையைத்தான் தேடுவார்கள். பதிவான கைரேகை பளிச்சென்று தெரிவதில்லை. எனவே கைரேகை நிபுணர்கள் கைரேகை பதிந்திருக்கக்கூடும் என்று நினைக்கும் இடத்தில் அதற்கென உள்ள பொடியைத் தூவிப் பார்ப்பார்கள்.

கையில் இயல்பாகவே உள்ள எண்ணைப் பசையால் கைரேகைப் பதிவுகள் ஏற்படுகின்றன. பொடி தூவப்படும்போது அது எண்ணைய்ப் பசை பகுதியில் படிவதால் கைரேகைப் பதிவு நன்றாகத் தெரிகிறது.

அந்த கைரேகைப் பதிவுகள் புகைப்படம் எடுக்கப்பட்டு ஏற்கனவே காவல் துறையினரின் வசம் இருக்கும் குற்றவாளிகளின் கைரேகைகள் மற்றும் சந்தேகத்துக்கு இடமானவர்களின் கைரேகைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கப்படுகின்றன.

கைரேகைகளை விட்டுவிடக் கூடாது என்பதற்காக குற்றவாளிகள் கையுறைகளை அணிவது உண்டு. ஆனால் கையுறைகளின் பதிவுகளின் மூலமும் அவை வாங்கப்பட்டு எவ்வளவு நாட்களாகின்றன. அதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் நூல் என்ன தைக்கப்பட்டிருக்கும் விதம் என்ன என்பது போன்ற விவரங்களை அறியலாம்.

சந்தேகத்துக்கு இடமான ஒருவரிடம் கையுறைப் பதிவுகளுடன் ஒத்துப்போகும் கையுறை இருந்தால் அது குறிப்பிட்ட நபருக்கு எதிரான வலுவான ஆதாரமாகிவிடும்.
குர்ஆன் கூறும் உண்மைகள்
அவ்வாறில்லை! அவனது விரல் நுனி களையும் சீராக்க நாம் ஆற்றலுடையவர்கள்.        அல்குர்ஆன் 75 : 4
விரல் நுனிகளையும் சீராக்குதல்
மனிதனை மீண்டும் என்னால் படைக்க முடியும் என்று குறிப்பிடும் இறைவன், விரல் நுனிகளையும் என்னால் சீராக்க முடியும் என்று கூறுகிறான்.
விரல் நுனிகளைக் குறிப்பிட்டுக் கூறக் காரணம் என்ன? இதை விட முக்கியமான பகுதிகளெல்லாம் மனித உடலி-ல் இருக்கும் போது விரல் நுனிகளை மட்டும் குறிப்பிட்டுச் சொல்வதற்குரிய (திருக்குர்ஆன் 75:4) காரணம் என்னவென்றால், மனிதனின் எந்த அங்கமாக இருந்தாலும் அந்த அங்கம் குறிப்பிட்ட மனிதனுடையது தான் என்று அடித்துச் சொல்ல முடியாது.
ஏனென்றால் அது போல் பலரது அங்கங்கள் அமைந்திருக்கும். ஒரு மனிதனிடமிருந்து இன்னொரு மனிதன் முழுமையாக வேறுபடுவது விரல்களில் அமைந்திருக்கும் ரேகைகளால் தான்.
ஒருவரது ரேகைகள் போல இன்னொருவரது ரேகைகள் இருக்காது. இந்த ரேகைகளைக் கூட நாம் திரும்பக் கொண்டு வந்து விடுவோம் என்று இந்த அறிவியல் உண்மையை உள்ளடக்கி அல்லாஹ் கூறுகிறான்.

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites