அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

8-தொழுகை -B


பாடம் : 55
435,436 ஆயிஷா (ரலி), அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) ஆகியோர் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இறப்பு நெருங்கிவிட்ட போது தம் முகத்தின் மீது வேலைப்பாடுகள் கொண்ட கருப்புத்துணி ஒன்றைப் போட்டுக் கொள்ளலானார்கள். வெப்பத்தை உணரும் போது அதைத் தம் முகத்திலிருந்து விலக்கிவிடுவார்கள். அதே நிலையில் அவர்கள் இருந்து கொண்டிருக்க, யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் அல்லாஹ் தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்தவானாக! தம் இறைத்தூதர்களின் அடக்கத்தலங்களை அவர்கள் வணக்கத்தலங்களாக ஆக்கிக் கொண்டார்கள் என்று கூறி, அவர்கள் செய்ததை(ப் போன்று நீங்களும் செய்து விடாதீர்கள் என தம் சமுதாயத்தாரை) எச்சரித்தார்கள்.
437 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ் யூதர்களைத் தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக! தம் இறைத் தூதர்களின் மண்ணறைகளை அவர்கள் வணக்கத்தலங்களாக ஆக்கிக் கொண்டார்கள் என அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள்.
பாடம் : 56
பூமி முழுவதும் எனக்குத் தொழுமிடமாகவும் சுத்தம் (தயம்மும்) செய்வதற்கேற்றதாகவும் ஆக்கப்பட்டுள்ளது எனும் நபி மொழி.
438 அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனக்கு முன்னிருந்த இறைத்தூதர்கள் எவருக்கும் வழங்கப்படாத ஐந்து விஷயங்கள் எனக்கு வழங்கப்பட்டுள்ளது:
1. (எதிரிகளுக்கும் எனக்குமிடையே) ஒரு மாத காலப் பயணத் தொலைவிருந்தாலும் அவர்களுடைய உள்ளங்களில் என்னைப் பற்றிய அச்சம் ஏற்படுவதன் மூலம் எனக்கு வெற்றி அளிக்கப்பட்டுள்ளது.
2. தரை முழுவதும் சுத்தம் (-தயம்மும்) செய்வதற்கேற்றதாகவும் தொழுமிடமாகவும் எனக்கு ஆக்கப்பட்டுள்ளது. (எனவே,) என் சமுதாயத்தாரில் யாருக்காவது தொழுகையின் நேரம் வந்து விட்டால் (அவர் எந்த இடத்தில் இருக்கிறாரோ அந்த இடத்திலேயே தயம்மும் செய்து கொள்ளட்டும்;)
3. (முந்தைய இறைத்தூதர்கள் எவருக்கும் அனுமதிக்கப்படாத) போரில் கிடைக்கப் பெறும் செல்வங்கள் எனக்கு (மட்டும்) அனுமதிக்கப்பட்டுள்ளது.
4. ஒவ்வோர் இறைத்தூதரும் தத்தம் சமூதாயத்தாருக்கு மட்டுமே தூதராக (நியமிக்கப்பட்டு) அனுப்பப்பட்டார்கள். (ஆனால்,) நானோ ஒட்டு மொத்த மனித குலத்திற்கும் இறைத்தூதராக (நியமிக்கப்பட்டு) அனுப்பப்பட்டுள்ளேன்.
5. (மறுமையில் என் சமுதாயத்தாருக்காக) பரிந்துரை புரியும் வாய்ப்புக் கொடுக்கப்பட்டுள்ளேன்.
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
பாடம் : 57
பெண்கள் பள்ளிவாச-ல் (தங்கி) உறங்குவது.
439 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு கருப்பு நிற அடிமைப்பெண் அரபு களில் ஒரு குடும்பத்தாருக்குச் சொந்தமான வளாயிருந்தாள். பின்னர் அவளை அவர்கள் விடுதலை செய்து விட்டனர். ஆயினும் அவர் களுடனேயே அவள் இருந்துவந்தாள். அந்தப் பெண் (தனது வாழ்வில் நடந்த நிகழ்ச்சி ஒன்றை பின்வருமாறு என்னிடம்) கூறினாள்:
(ஒரு நாள்) அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண் (மணமுடித்த புதிதில்) சிவப்புத் தோ-ல் முத்துக்கள் பதிக்கபட்ட அரையணித் தோள் பட்டிகை அணிந்து கொண்டு (குளியலறைக்குப்) புறப்பட்டாள். அப்போது அவள் அதை (ஓர் இடத்தில் கழற்றி) வைத்தாள் அல்லது (எதிர்பாராத விதமாக) அந்தப் பட்டிகை அவளிடமிருந்து (கழன்று) விழுந்து விட கீழே கிடந்த அதைக் கடந்து சென்ற பருந்துக் குஞ்சு ஒன்று அதை இறைச்சி என்று நினைத்துக் கொத்திச் சென்றுவிட்டது. அவர்கள் அதைத் தேடினர். ஆனால் அது கிடைக்கவில்லை. அந்தக் குடும்பத்தார் (அதை நான் தான் களவாடியிருப்பேன் என்று) என் மீது குற்றம் சாட்டி (என்னை வதைத்த)னர். (எந்த அளவிற் கென்றால்,) எனது பிறவி உறுப்பில் கூட சோதனையிட்டனர்.
அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் அவர்களுடன் நின்று கொண்டிருந்த போது பறந்து வந்த அந்தப் பருந்துக் குஞ்சு அந்தப் பட்டிகையைக் (கீழே) போட அவர்களுக்கு மத்தியில் அது விழுந்தது. (உடனே) நான் (அவர்களிடம்), நிரபராதியான என் மீது (திருட்டுக்)குற்றம் சாட்டி, (அதை நான் எடுத்து விட்டதாக)க் கூறினீர்களே அந்தப் பட்டிகை இதோ இங்கு இருக்கிறது என்று சொன்னேன். இதற்குப் பிறகு நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து இஸ்லாத்தை தழுவினேன்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:
(மஸ்ஜிதுந் நபவீ) பள்ளி வாச-ல் அந்தப் பெண்ணுக்கென ரோமத்தினாலான ஒரு கூடாரம் அல்லது சிறிய குடில் இருந்தது. (அதில் அவள் வசித்துவந்தாள்.)
அந்தப் பெண் என்னிடம் வந்து பேசிக் கொண்டிருப்பாள். அவள் என்னிடம் அமர்ந்திருந்த ஒவ்வோர் அமர்வி(ன்முடிவி)லும் அவள் (பின் வருமாறு) பாடாமல் இருந்ததில்லை:
எம் இறைவனின் விந்தைப் பட்டிய-ல்
அந்த அரையணிப்பட்டிகை நாளும் ஒன்றே!
எனை இறைமறுப்பின் பட்டியிலிருந்து
ஈடேற்றிக் காத்த நாளும் அன்றே!
(இந்நிலையில் ஒரு நாள்) நான் அவளிடம், நீ என்னுடன் அமரும்போதெல்லாம் இதை நீ சொல்லாமல் இருப்பதில்லையே! உனக்கு என்ன நேர்ந்தது? என்று கேட்டேன். அப்போது தான் அந்தப் பெண் (மேற்கண்ட) அந்தச் செய்தியை என்னிடம் கூறினாள்.:
பாடம் : 58
பள்ளியில் ஆண்கள் உறங்குவது.
உக்ல் எனும் குலத்தாரில் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தனர்; அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாச-ன்) திண்ணையில் (தங்கி) இருந்தனர் என அனஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.
திண்ணைத் தோழர்கள் ஏழைகளாக இருந்தனர் என அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.
440 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மணமாகாத, குடும்பமில்லாத இளைஞனாக நான் இருந்த போது நபி (ஸல்) அவர் களின் பள்ளிவாசல் (தங்கி) நான் உறங்கிக் கொண்டிருந்தேன்.
இதை நாஃபிஉ (ரஹ்) அவர்கள் அறிவிக்கி றார்கள்.
441 சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் புதல்விர் ஃபாத்திமா (ரலி) அவர்களின் இல்லத்திற்கு வந்த போது (மருமகனான) அலீ (ரலி) அவர்கள் வீட்டில் காணவில்லை. ஆகவே, உன் (தந்தையின்) பெரிய தந்தையின் புதல்வர் எங்கே? என்று கேட்க, அதற்கு ஃபாத்திமா (ரலி) அவர்கள், எனக்கும் அவருக்கும் இடையே சிறிய மனஸ் தாபம் ஏற்பட்டது. ஆகவே அவர் என்னைக் கோபித்துக் கொண்டு என்னிடம் ஏதும் சொல்லாமல் (வீட்டிலிருந்து) சென்றுவிட்டார் (அவர் பள்ளிவாசலுக்குள் இருக்கலாம்) என்று கூறினார்கள்.
உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மனிதரிடம், அவர் எங்கே என்று பாருங்கள் என்றார்கள். உடனே அந்த மனிதர் (சென்றுவிட்டு) வந்து, அவர் பள்ளிவாச-ல் உறங்கிக் கொண்டிருக்கிறார், அல்லாஹ்வின் தூதரே! என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பள்ளிக்குள்) வந்த போது அவருடைய மேலங்கி அவரது முதுகிலிருந்து (தரையில்) விழுந்து விட்டிருக்க அவரது மேனியில் மண் படிந்திருக்கும் நிலையில் அவர் ஒருக்களித்துப்படுத்திருக்கக் கண்டார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களின் மேனியிலிருந்த மண்ணைத் துடைத்தவாறே எழுந்திருங்கள், மண்ணின் தந்தையே! எழுந்திருங்கள், மண்ணின் தந்தையே!! என்று கூறலானார்கள்.
442 அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
திண்ணைத் தோழர்களில் எழுபது பேரை நான் பார்த்திருக்கிறúன். அவர்களில் ஒருவருக்குக் கூட மேலங்கி இருந்ததில்லை. (ஒரேயொரு ஆடைதான் அவர்களுக்கு இருந்தது.) ஒன்று அது வேட்டியாக இருக்கும்; அல்லது (அது) ஒரு துணியாக (மட்டும்) இருக்கும். அதை அவர்கள் தங்கள் பிடரியில் முடிந்து கொண்டிருப்பார்கள். அதில் சில துணி (பற்றாக் குறையால்) கணைக்கால்களின் பாதியளவே இருக்கும். இன்னும் சில (துணிகள்) கணுக்கால்களை எட்டுமளவிற்கு இருக்கும். அதை அவர்கள் (தொழும் போதும் மற்ற நேரங்களிலும்) தமது கரத்தால் சேர்த்துப் பிடித்துக் கொள்வார்கள். மறைக்க வேண்டிய தமது உறுப்புக்களை பிறர் பார்த்து விடக் கூடாதே! (அதற்காகத் தான் அவ்வாறு சேர்த்துப் பிடித்தனர்.)
பாடம் : 59
பயணத்திலிருந்து திரும்பியதும் தொழுவது.
நபி (ஸல்) அவர்கள் பயணத்திலிருந்து திரும்பியதும் முத-ல் பள்ளிவாசலுக்குச் சென்று தொழுவது வழக்கம் என கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
443 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(பயணத்தை முடித்துக் கொண்டு) பள்ளி வாச-ல் இருந்து கொண்டிருந்த நபி (ஸல்) அவர்களிடம் நான் வந்தேன். அப்போது அவர்கள் (என்னிடம்), (பயணத்திலிருந்து திரும்பிய நீங்கள்) இரண்டு ரக்அத்கள் தொழுவீராக! என்று சொன்னார்கள்.
எனக்கு நபி (ஸல்) அவர்கள் தரவேண்டிய கடன் (பாக்கி) ஒன்றும் இருந்தது. அப்போது அவர்கள் அதை எனக்குத் தந்தார்கள்; மேலதிகமாகவும் தந்தார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) மிஸ்அர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
(எமக்கு இந்த ஹதீஸை அறிவித்த) முஹாரிப் பின் திஃஸார் (ரஹ்) அவர்கள் முற்பகல் நேரத்தில் (நான் நபிகளாரிடம் சென்றேன்) என்று (ஜாபிர் (ரலி) அவர்கள்) கூறிய தாகவும் குறிப்பிட்டார்கள் என நான் எண்ணுகிறேன்.
பாடம் : 60
பள்ளிவாசலுக்குச் சென்றதும் இரண்டு ரக்அத்கள் தொழுவீராக.
444 அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் எவரும் பள்ளிவாசலுக்குள் நுழைந்தால் உட்காருவதற்கு முன்பு இரண்டு ரக்அத்கள் தொழட்டும்.
இதை அபூகத்தாதா (ஹர்ஸ் பின் ரிப்ஈ) அஸ்ஸலமீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
பாடம் : 61
பள்ளி வாச-ல் இருக்கும் போது (உளூவை முறிக்கக் கூடிய) சிறுதுடக்கு ஏற்படுதல்.
445 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் எந்த இடத்தில் தொழுவாரோ அந்த இடத்திலேயே அமர்ந்திருக்கும் வரை அவருக்காக வானவர்கள் பிராத்தனை செய்கிறார்கள். ஆனால் (உளூவை முறிக்கக் கூடிய)சிறு துடக்கு ஏற்படாமலிருக்க வேண்டும். அப்போது அவர்கள் இறைவா! இவருக்கு மன்னிப்பளிப்பாயாக! இறைவா! இவருக்கு கருணை புரிவாயாக! என்று பிரார்த்திக்கிறார்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
பாடம் : 62
மஸ்ஜிதுந்நபவீ பள்ளிவாச-ன் கட்டுமானம்.
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களது (காலத்தில் மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாச-ன் மேற்கூரை பேரீச்சமர ஓலைகளால் (வேயப்பட்டதாக) இருந்தது. உமர் (ரலி) அவர்களே (தமது ஆட்சிக் காலத்தில்) பள்ளிவாசலை (விரி வாக்கிக்) கட்டும்படி உத்தரவிட்டார்கள். (கட்டடப் பணி நடைபெறும் போது) மக்களை மழை நீரிலிருந்து பாதுகாக்கும் விதமாகக் கட்டுவீராக! சிவப்பு வர்ணமோ மஞ்சள் வர்ணமோ தீட்டவேண்டாமென உன்னை நான் எச்சரிக்கிறேன். அதனால் மக்களின் கவனம் திசை திரும்பிவிடக்கூடும் என்று (கட்டடப் பணியாளரிடம்) உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு காலம் வரும். அக்காலத்தில்) பள்ளி வாசல்களின் மூலம் மக்கள் பெருமையடித் துக் கொள்வார்கள். (வணக்க வழிபாடுகள் மூலம்) அவற்றை மிகக் குறைவாகவே புழங்குவார்கள்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:
யூத, கிறிஸ்தவர்கள் (தங்கள் ஆலயங்களை) அலங்கரித்தது போன்றே நீங்கள் பள்ளிவாசல்களை அலங்கரிக்கிறீர்கள் என்பது மட்டும் உறுதி.
446 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் மஸ்ஜிதுந்நபவீ பள்ளிவாசல் (உடைய சுவர்கள்) செங்கற்கற்களால் கட்டப்பட்டிருந்தன; அதன் மேற்கூரை பேரீச்சமர ஓலைகளாலும், அதன் தூண்கள் பேரீச்ச மரங்களாலும் அமைந்திருந்தன.
அபூபக்ர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சிக் காலத்தில்) அதில் எந்த விரிவாக்கமும் செய்யவில்லை. என்றாலும் உமர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சியில்) அதை விரிவு படுத்தினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்திலிருந்த கட்டட அமைப்பிலேயே செங்கல், பேரீச்சமர ஓலை ஆகியவற்றின் மூலமே அதைக் கட்டினார்கள். அதன் தூண்களை முன்போன்றே பேரீச்சமரங் களால் அமைத்தார்கள்.
பின்னர் (ஆட்சிப்பொறுப்பேற்ற) உஸ்மான் (ரலி) அவர்கள் அதில் மாற்றம் செய்தார்கள். அதில் அநேக விஷயங்களை அதிகப்படுத்தினார்கள்.
வேலைப்பாடுகள் பொறிக்கப்பட்ட கற்களாலும் சுண்ணாம்புக் காரையாலும் அதன் சுவர்களைக் கட்டினார்கள். வேலைப்பாடுகள் செய்யப்பட்ட கற்களால் அதன் தூண்களை எழுப்பினார்கள். தேக்கு மரத்தால் அதற்கு மேற்கூரை அமைத்தார்கள்.
பாடம் : 63
பள்ளிவாசல் கட்டும் பணியில் ஒருவருக் கொருவர் ஒத்துழைப்பது.
(அல்லாஹ் கூறுகின்றான்:)
குஃப்ரின் மீது தாங்களே சாட்சியம் சொல்லிக் கொண்டிருக்கும், இந்த இணை வைப்பாளர்களுக்கு அல்லாஹ்வின் மஸ்ஜிது களைப் பரிபாலனம் செய்ய உரிமையில்லை; அவர்களுடைய (நற்) கருமங்கள் (யாவும் பலன் தராது) அழிந்து விட்டன - அவர்கள் என்றென்றும் நரகத்தில் தங்கிவிடுவார்கள். அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளைப் பரிபாலனம் செய்யக் கூடியவர்கள்; அல்லாஹ்வின் மீதும் இறுதிநாள்மீதும் நம்பிக்கை கொண்டு தொழுகையைக் கடைபிடித்து ஸகாத்தை (முறையாகக்) கொடுத்து அல்லாஹ்வைத் தவிர வேறெதற்கும் அஞ்சாதவர்கள்தாம், இத்தகையவர்தாம் நிச்சயமாக நேர்வழி பெற்றவர்களில் ஆவார்கள். (9:17,18)
447 (இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அவர்களின் முன்னாள் அடிமையான)ன இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (பஸ்ராவின் ஆளுநராயிருந்த காலகட்டத்தில்) என்னிடமும் தம் புதல்வர் அலீ அவர்களிடமும், நீங்கள் இருவரும் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடம் சென்று அவருடைய ஹதீஸைச் செவிமடுங்கள் என்று கூறினார்கள். அவ்வாறே நாங்கள் சென்றோம். அப்போது அபூசயீத் (ரலி) அவர்கள் தோட்டத்தில் (நீர்பாய்ச்சி) அதை பராமரித்துக் கொண்டிருந்தார்கள். (அவர்கள் எங்களைக் கண்ட) உடன் தமது மேலாடையை எடுத்துப் போர்த்திக் கொண்ட பின் (பலஹதீஸ் களை) எங்களுக்குக் கூறத் தொடங்கினார்கள். கடைசியாக மஸ்ஜிதுந் நபவீ கட்டியது பற்றிய பேச்சுக்கு வந்த போது (பின்வருமாறு) அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறினார்கள்:
நாங்கள் (மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாச-ன்) செங்கற்களை ஒவ்வொன்றாக சுமந்து எடுத்துக் கொண்டு சென்றோம்.. அம்மார் (ரலி) அவர்கள் இரண்டிரண்டு செங்கற்களாக சுமந்த வண்ணமிருந்தார். அவரைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் (அவரது தலையில் படிந்திருந்த) புழுதியைத் தட்டிவிட்டு, பாவம் அம்மார்! அம்மாரை ஒரு கலகக் கூட்டத்தார் கொன்றுவிடுவார்கள். அம்மார், அவர்களை சொர்க்கத்தி(ற்கு காரணமான தலைமைக்கு கட்டுப்படுவத)ன் பக்கம் அழைக்க, அந்தக் கூட்டத்தாரோ அவரை நரகத்தி(ற்குக் காரணமாக அமையும் நல்ல தலைமைக்கு எதிராகச் செயல் படுவத)ன் பக்கம் அழைத்துக் கொண்டிருப்பார்கள் என்று கூறினார்கள். (இதைக் கேட்ட உடன்) அம்மார் (ரலி) அவர்கள், அந்தக் குழப்பங்களை விட்டும் அல்லாஹ்விடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன் என்று சொன்னார்கள்.
பாடம் : 64
சொற்பொழிவு மேடை (மிம்பர்) செய்வதற்கும் பள்ளிவாசல் கட்டுவதற்கும் தச்சர்கள் மற்றும் (தொழிற்) கலைஞர்களின் உதவியை நாடுதல்.
448 சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு (அன்சாரிப்) பெண்ணிடம் ஆளனுப்பி, நான் மக்களுக்கு உரையாற்றும் போது அமர்ந்து கொள்வதற்கு (ஏற்றவகையில் மேடை தயாரிக்க) எனக்கு மரச்சட்டங்களை செய்து தருமாறு தச்சு வேலை தெரிந்த உன் அடிமையைப் பணிப்பா யாக! என்று கூறினார்கள்.
449 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு (அன்சாரிப்) பெண்மணி, அல்லாஹ்வின் தூதரே! என்னிடம் தச்சு வேலை தெரிந்த ஓர் அடிமை இருக்கிறார்; நீங்கள் அமர்ந்து கொள்வதற்கேற்ப (மேடை) ஒன்றை நான் உங்களுக்கு செய்து தரலாமா? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நீங்கள் விரும்பினால் (செய்து கொடுங்கள்) என்று கூற, அப்பெண்மணி சொற்பொழிவு மேடை (மிம்பர்) ஒன்றை செய்(து கொடுத்)தார்.
பாடம் : 65
பள்ளி வாசல் கட்டியவர் (அடையப் பெறும் வெகுமதிகள்).
450 உபைதுல்லாஹ் அல்கவ்லானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உஸ்மான் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரது (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலை (நபியவர்களின்காலத்திலிருந்த அமைப்பை மாற்றி விரிவுபடுத்திக்) கட்டத் திட்டமிட்ட போது அது குறித்து மக்கள் (ஆட்சேபனை) கூறினர். அப்போது உஸ்மான் (ரலி) அவர்கள் (மக்களிடம்) நீங்கள் (உங்கள் எதிர்ப்பை) அதிகமாக்கிவிட்டீர்கள். யார் பள்ளிவாசல் ஒன்றைக் கட்டுகிறாரோ அது போன்ற ஒன்றை சொர்க்கத்தில் அவருக்காக அல்லாஹ் கட்டுகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவிமடுத்துள்ளேன் என்று கூறினார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) புகைர் பின் அப்தில்லாஹ் அல்அஷஜ் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
எமக்கு இந்த ஹதீஸை அறிவித்த ஆஸிம் பின் உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் திருப்தியை நாடி (யார் பள்ளிவாசல் ஒன்றைக் கட்டுகிறாரோ) என்று (நபியவர்கள்) கூறியதாகவே நான் கருதுகிறேன்.
பாடம் : 66
பள்ளியினுள் செல்லும் போது (கையில் அம்புகளை வைத்திருப்பவர்) அம்பின் முனைப் பகுதியை பிடித்துக் கொள்ள வேண்டும்.
451 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்குள் ஒருவர் அம்புகளுடன் நடந்து சென்றார். அப்போது அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவற்றின் முனைகளைப் பிடித்துக் கொள்! என்று சொன்னார்கள்.
பாடம் : 67
(அம்பின் முனையைப் பிடித்துக் கொண்டு) பள்ளிவாசலைக் கடந்து செல்லலாம்.
452 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அம்புடன் நமது பள்ளி வாசல்களிலோ நமது கடைவீதிகளிலோ நடந்து செல்பவர் அதன் முனையைப் பிடித்துக் கொள்ளட்டும்; தமது கையால் எந்த முஸ்-மையும் அவர் காயப்படுத்திவிட வேண்டாம்..
இதை அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
பாடம் : 68
பள்ளிவாச-ல் கவிபாடுதல்.
453 அபூசலமா பின் அப்திர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(பள்ளிவாசலுக்குள் கவிபாடுவதை உமர் (ரலி) அவர்கள் கண்டித்த போது கவிஞர்) ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களிடம், அல்லாஹ்வின் பெயரால் உங்களிடம் கேட்கிறேன்:
என்னிடம் நபி (ஸல்) அவர்கள், ஹஸ்ஸானே! அல்லாஹ்வின் தூதர் (ஆகிய என்) சார்பாக (எதிரிகளின் வசைக் கவிகளுக்கு) நீங்கள் (கவிகளாலேயே) பதிலளியுங்கள். இறைவா! ஹஸ்ஸானுக்கு ரூஹுல் குதுஸ் (தூய ஆத்மா வானவர் ஜிப்ரீல் மூலம்) துணைபுரிவாயாக! என்று கூறியதை நீங்கள் செவியுற்றிருக்கிறீர்களா? என்று கேட்டார்கள். அதற்கு அபூஹுரைரா (ரலி) அவர்கள், ஆம் (செவியுற்றிருக்கிறேன்) என்று பதிலளித்தார்கள்.
பாடம் : 69
பள்ளிவாச-ல் ஈட்டி வீரர்கள் (வீர விளையாட்டுகளில் ஈடுபடுவது).
454 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனது அறையின் வாச-ல் நின்று கொண்டி ருப்பதையும் அப்போது மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாச-(ன் வளாகத்தி)ல் அபிசீனியர்கள் (வீர விளையாட்டுக்கள்) விளையாடிக் கொண்டிருப்பதையும் நான் பார்வையிட்டேன். அவர்களின் விளையாட்டைப் பார்த்துக் கொண்டிருந்த என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது மேலங்கியால் (மற்றவர்கள் என்னைப் பார்க்காத வகையில்) மறைத்துக் கொண்டிருந்தார்கள்.
455 இப்ராஹீம் பின் முன்திர் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில், அபிசீனியர்கள் தமது ஈட்டிகளால் (வீரவிளையாட்டுக்கள்) விளையாடிக் கொண்டிருந்த போது நபி (ஸல்) அவர்களை (இவ்வாறு நிற்பதைக்) கண்டேன் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாக அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
பாடம் : 70
பள்ளிவாச-ல் உள்ள சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதிருந்தபடி விற்பது வாங்குவது பற்றிப் பேசுவது.
456 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(அடிமைப்பெண்) பரீரா, தனது விடுதலைப் பத்திரத்தின் விஷயத்தில் (அதில் குறிப்பிட்டுள்ள தொகையைக் கொடுப்பதற்காக உதவி கோரியபடி) என்னிடம் வந்தார். நான், நீ விரும்பினால் உன் எஜமானர்களுக்கு (முழுத் தொகையும்) நான் செலுத்திவிடு கிறேன். ஆனால், உன் வாரிசுரிமை எனக்கே உரியதாகிவிட வேண்டும் என்று கூறினேன். ஆனால் பரீராவின் எஜமானர்கள் என்னிடம், நீங்கள் விரும்பினால் பரீரா தர வேண்டிய பாக்கித் தொகையைத் தந்து (பரீராவை விடுதலை செய்து) கொள்ளலாம் என்று கூறினார்கள்.
- (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் மற்றொரு முறை அறிவிக்கையில் நீங்கள் விரும்பினால் அவரை விடுதலை செய்து கொள்ளலாம். ஆனால், (பரீராவின்) வாரிசுரிமை எங்களுக்கே உரியதாகி விடவேண்டும். என (பரீராவின் எஜமானர்கள் நிபந்தனையிட்டுக்) கூறியதாகச் சொன்னார்கள்.-
தொடர்ந்து ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்த போது நான் அதைப் பற்றி அவர்களிடம் கூறினேன். அப்போது அவர்கள், அவரை வாங்கி விடுதலை செய்து விடு! ஏனெனில் வாரிசுரிமை விடுதலை செய்தவருக்கே உரியது என்று சொன்னார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பள்ளி வாச-லுள்ள) சொற்பொழிவு மேடை மீது நின்று (உரை நிகழ்த்தலானார்கள்:), மக்களில் சிலருக்கு என்ன நேர்ந்து விட்டது? இறைச் சட்டத்தில் இல்லாத நிபந்தனைகளை விதிக்கின்றார்களே! எவர் இறைச் சட்டத்தில் இல்லாத நிபந்தனைகளை விதிக்கின்றாரோ அவருக்கு அதற்கான (அதை நிறைவேற்றக் கோரும்) உரிமை இல்லை; அவர் நூறு முறை நிபந்தனை விதித்தாலும் சரியே என்று குறிப்பிட்டார்கள்.
இன்னும் மூன்று அறிவிப்பாளர்தொடர் வழியாக இந்த ஹதீஸ் வந்துள்ளது.
மாலிக் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில் சொற்பொழிவு மேடை மீது நபி (ஸல்) அவர்கள் ஏறியது பற்றியக் குறிப்பு இல்லை.
பாடம் : 71
(பள்ளி வாசலுக்குள் கடனாளியிடம்) கடனைக் கேட்பதும், அதைத் திருப்பித் தருமாறு கட்டாயப்படுத்துவதும்.
457 கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(அல்லாஹ்வின் தூதர் ளஸல்ன அவர் களின் காலத்தில்) எனக்கு அப்துல்லாஹ் பின் அபீஹத்ரத் அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் தர வேண்டியிருந்த ஒரு கடனை (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாச-ல் வைத்து திருப்பித் தரும்படி கேட்டேன். (இது தொடர்பாக எங்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு) எங்கள் இருவரின் குரல்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வீட்டிலிருந்தபடியே அதைக் கேட்கும் அளவிற்கு குரல்கள் உயர்ந்தன. ஆகவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிருவரையும் நோக்கிப் புறப்பட்டார்கள். தமது அறையின் திரையை விலக்கி, கஅப்! என்றழைத்தார்கள். நான், இதோ வந்து விட்டேன், அல்லாஹ்வின் தூதரே! என்று பதிலளித்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், இதை (இந்த அளவை) உன் கடனிலிருந்து தள்ளுபடி செய்து விடு! என்று கூறி பாதியளவு கடனைக் குறைத்துக் கொள்ளும்படி (என்னிடம் விரலால்) சைகை செய்தார்கள். அவ்வாறே செய்து விட்டேன், அல்லாஹ்வின் தூதரே! என்று கூறினேன். பிறகு நபி (ஸல்) அவர்கள் (அப்துல்லாஹ் பின் அபீஹத்ரத் அவர்களை நோக்கி,) எழுந்து சென்று கடனை அடைப்பீராக! என்று சொன்னார்கள்.
பாடம் : 72
பள்ளிவாசலைப் பெருக்குவதும் துண்டுத் துணிகள், குப்பை, குச்சிகள் (கிடந்தால் அவற்றைப்) பொறுக்கியெடுத்து (அப்புறப்படுத்தி)விடுவதும்.
458 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலைப் பெருக்குபவராக இருந்த ஒரு கறுப்பு ஆண் அல்லது ஒரு கறுப்புப் பெண் இறந்து விட்டார். (அவர் இறந்த செய்தி நபி ளஸல்னஅவர்களுக்குத் தெரியாமலிருந்தது.) ஆகவே அவரைப் பற்றி (ஒரு நாள்) நபி (ஸல்) அவர்கள் விசாரித்தார்கள். அப்போது மக்கள், அவர் இறந்து விட்டார் எனக் கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், அது பற்றி (முன்பே) என்னிடம் நீங்கள் அறிவித்திருக்கக் கூடாதா? அவருடைய அடக்கத்தலத்தை அல்லது அந்தப் பெண்மணியின் அடக்கத்தலத்தை எனக்குக் காட்டுங்கள் என்று கூறிவிட்டு அவரது அடக்கத்தலத்திற்குச் சென்று அவருக்காக பிரார்த்தனைத் தொழுகை (ஜனாஸா) தொழுதார்கள்.
பாடம் : 73
மதுபானங்கள் விற்பது விலக்கப்பட்டது (ஹராம்) என்று பள்ளிவாசலில் அறிவிப்பது.
459 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்பகரா அத்தியாத்தின் (இறுதி) வசனங்கள் (2:275-281) அருளப்பெற்றபோது நபி (ஸல்) அவர்கள் (மஸ்ஜிதுந்நபவீ) பள்ளிவாசலுக்கு புறப்பட்டு வந்து அவற்றை மக்களுக்கு ஓதிக் காட்டினார்கள். பிறகு மது வியாபாரத்தைத் தடைசெய்தார்கள்.
பாடம் : 74
பள்ளிவாசலுக்கென சேவகர்கள் இருப்பது.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், என் கர்ப்பத்திலுள்ளதை உனக்கு முற்றிலும் அர்ப்பணிக்க நான் நேர்ந்து கொள்கிறேன் எனும் (3:35 ஆவது) வசனத்தி(ற்கு விளக்கம ளிக்கையி)ல் இந்த மஸ்ஜிது (ல் அக்ஸா பள்ளிவாலு)க்கு சேவகம் செய்வதற்காக (நேர்ந்து கொள்கிறேன்) என்று கூறினார்கள்.
460 அபூராஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலை ஒரு ஆண் அல்லது ஒரு பெண் பெருக்குபவராக இருந்தார். என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள். - ஒரு பெண்மணி என்று அவர்கள் கூறியதாகவே நான் கருது கிறேன்.- பிறகு அவரது அடக்கத்தலத்தில் நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனைத் தொழுகை தொழுதது பற்றிய (மேற்கண்ட 458 ஆவது) ஹதீஸைக் கூறினார்கள்.
பாடம் : 75
கைதிகளையும் குற்றவாளிகளையும் பள்ளிவாசலில் கட்டிவைப்பது.
461 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) நபி (ஸல்) அவர்கள், நேற்றிரவு முரட்டு ஜின் ஒன்று என் தொழுகையை (இடையில்) துண்டிப்பதற்காக திடீரென்று வந்து நின்றது என்றோ, அல்லது இதைப் போன்ற வார்த்தையையோ கூறினார்கள். பிறகு அதன் மீது அல்லாஹ் எனக்கு சக்தியை வழங்கினான். நீங்கள் அனைவரும் காலையில் வந்து அதைக் காணும் வரை இந்த (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாச-ன் தூண்களில் ஒன்றில் அதைக் கட்டிவைக்க நினைத்தேன். அப்போது இறைவா! எனக்குப் பின் வேறு எவருக்கும் நீ வழங்காதே ஓர் ஆட்சியை எனக்கு நீ வழங்குவாயாக (38:35) என்று என் சகோதரர் சுலைமான் (அலை) அவர்கள் செய்த வேண்டுதல் என் நினைவுக்கு வந்தது என்று கூறினார்கள்.
ரவ்ஹ் பின் உபாதா (ரஹ்) அவர்களின் அறிவிப்பில் ஆகவே, அதை நான் இழிந்த நிலையில் விரட்டி அடித்து விட்டேன் என்றும் இடம்பெற்றுள்ளது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
பாடம் : 76
இஸ்லாத்தைத் தழுவும் போது குளிப்பதும், பள்ளிவாச-ல் கைதியைக் கட்டிவைப்பதும்.
(கூஃபாவின் நீதிபதியாயிருந்த) ஷுரைஹ் பின் ஹர்ஸ் அல்கிந்தீ (ரஹ்) அவர்கள், குற்றவாளியைப் பள்ளிவாசலின் தூணில் கட்டிவைக்குமாறு ஆணையிடுவார்கள்.
462 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதவது:
நபி (ஸல்) அவர்கள் நஜ்த் பகுதியை நோக்கிக் குதிரைப்படை பிரிவொன்றை அனுப்பி வைத்தார்கள். அவர்கள் பனூ ஹனீஃபா குலத்தைச் சேர்ந்த (யமாமா வாசிகளின் தலைவரான) ஸுமாமா பின் உஸால் எனப்படும் ஒரு மனிதரைக் கொண்டு வந்தார்கள். அவரை (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாச-ன் தூண்களில் ஒன்றில் (மக்கள்) கட்டிவைத்தனர். நபி (ஸல்) அவர்கள் அவரை நோக்கி வந்த (நாட்களில் முன்றாம் நாளின்) போது, ஸுமாவை அவிழ்த்து விட்டு விடுங்கள் என்று கூறினார்கள். அவர் பள்ளி வாசலுக்கு அருகிலிருந்த ளஅபூதல்ஹா (ரலி) அவர்களுக்குச் சொந்தமானன பேரீச்சந் தோட்டத்திற்குச் சென்று குளித்தார். பிறகு பள்ளிவாசலுக்குள் வந்து அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் நான் உறுதி மொழிகிறேன் என்றார்.
பாடம் : 77
நோயாளிகளுக்காகவும் மற்றவர்களுக்காகவும் பள்ளிவாச-ல் கூடாரம் அமைப்பது.
463 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அகழ்ப் போரின் போது சஅத் பின் முஆத் (ரலி) அவர்கள் நாடி நரம்பில் (ஹிப்பான் பின் அரிஃகா என்பவனால்) தாக்குண்டார்கள். அப்போது அவரை அருகிலிருந்து நலம் விசாரிப்பதற்கு வசதியாக நபி (ஸல்) அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளி வாச-லேயே (அவருக்காக) கூடாரமொன்றை அமைத்தார்கள். (அவருடைய கூடாரத்திற்கு அருகில்) கூடாரம் இட்டிருந்த பனூ கிஃபார் குலத்தாரை நோக்கி வழிந்தோடிய சஅத் (ரலி) அவர்களின் இரத்தம் அவர்களை திடுக்கிடச் செய்து விட்டது. அப்போது மக்கள், கூடாரவாசிகளே! உங்கள் பகுதியிலிருந்து எங்களை நோக்கி(ப் பாய்ந்து) வருகிறதே, இது என்ன? என்று கேட்டுக் கொண்டே, அங்கே பார்த்த போது, தமது காயத்திலிருந்து இரத்தம் வழிய சஅத் (ரலி) அவர்கள் இருந்தார்கள். அ(ந்த நோயிலேயே அல்லது அந்த கூடாரத்) திலேயே சஅத் (ரலி) அவர்கள் இறந்தார்கள்.
பாடம் : 78
தேவை நிமித்தம் ஒட்டகத்தை பள்ளிவாசலுக்குள் கொண்டுவருவது.
நபி (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீது (அமர்ந்தபடி இறையில்லம் கஅபாவைச்) சுற்றி (தவாஃப்) வந்தார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.
464 உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நோயுற்றுள்ளேன் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் முறையிட்டேன். அதற்கு அவர்கள், மக்களுக்கப்பாலிருந்து வாகனத்தில் அமர்ந்து (கஅபாவைச்) சுற்றி (தவாஃப்) வருவாயாக! என்று சொன்னார்கள். அவ்வாறே நான், சுற்றி வந்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அத்தூர் எனும் (52ஆவது) அத்தியாத்தை ஓதியவாறு கஅபாவின் ஒரு பக்கத்தில் தொழுது கொண்டிருந்தார்கள்.
பாடம் : 79
465 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் இருவர் நபி (ஸல்) அவர்களிடமிருந்து (விடைபெற்று) இருள் கப்பிய ஓர் இரவில் (தம் இல்லங்களுக்கு) நடந்துசென்றனர். அவ்விருவருடனும் இரு விளக்குகளைப் போன்றவை அவர்களுக்கு முன்னால் ஒளி வீசிச் சென்றன. அவர்கள் (வழியில்) பிரிந்து சென்றபோது, அவர்கள் தம் வீட்டாரிடம் போய்ச் சேரும் வரை ஒவ்வொருவருடனும் ஓர் ஒளி (மற்றறொன்றை விட்டுப் பிரிந்து அவர்களுடன்) சென்றது.
பாடம் : 80
பள்ளிவாச-ல் நுழைவாயில் அமைப்பதும் நடைபாதை ஏற்படுத்துவதும்.
466 அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (இறப்பதற்கு முன் நோய்வாய்ப்பட்டிருந்த போது மக்களுக்கு) உரை நிகழ்த்தினார்கள். அதில், தூயோன் அல்லாஹ் ஓர் அடியாருக்கு இந்த உலகம் அல்லது தன்னிடமி ருப்பது - இவ்விரண்டில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் படி சுயாதிகாரம் அளித்தான். அ(ந்த அடியாரான)வர், அல்லாஹ்விடம் இருப்பதையே தேர்ந்தெடுத்துக் கொண்டார், என்று சொன்னார்கள்.
(இதைக் கேட்ட) உடன், அபூபக்ர் (ரலி) அவர்கள் அழுதார்கள். அப்போது நான் எனக்குள்ளே, அல்லாஹ் ஓர் அடியாருக்கு இந்த உலகம் அல்லது தன்னிடமிருப்பது - ஆகிய இரண்டில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள சுயாதிகாரம் அளித்த போது அ(ந்த அடியாரன)வர், அல்லாஹ் விடமிருப்பதை தேர்ந்தெடுத்துக் கொண்டால் அதற்காக இந்தப் பெரியவர் ஏன் அழவேண்டும்.? என்று வினவிக் கொண்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்தாம் அந்த (சுயாதிகாரம் அளிக்கப்பட்ட) அடியாராக இருந்தார்கள். (நபி (ஸல்) அவர்கள் தமது இறப்பைப் பற்றியே குறிப்படுகிறார்கள் என்பதை அபூபக்ர் (ரலி) அவர்கள் அறிந்து கொண்டார்கள். (ஏனெனில்) அபூபக்ர் (ரலி) அவர்கள் எங்களில் மிகவும் அறிந்தவராக இருந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், அபூபக்ர் அவர்களே! அழாதீர்கள் என்று கூறிவிட்டு தன் நட்பிலும் தனது செல்வத்தி லும் எனக்கு மக்களிலேயே பேருதவியாளராக இருப்பவர் அபுபக்ரேயாவார். (என் இறைவனல்லாத வேறு) ஒருவரை சமுதாயத்தாரில் நான் உற்ற நண்பராக ஆக்கிக் கொள்ள விரும்பியிருந்தால் அபூபக்ர் அவர்களேயே ஆக்கிக் கொண்டிருப்பேன். ஆயினும், (அதைவிடச் சிறந்த) இஸ்லாத்தின் சகோதரத்துவமும் அதனால் ஏற்படும் பாச உணர்வும் (எனக்கும் அபூபக்ருக்குமிடையே ஏற்கெனவே) இருக்கத் தான் செய்கிறது. (எனது) இந்தப் பள்ளிவாச-ல் எந்த வாசலும் அடைக்கப்படாமல் இருக்கவேண்டாம்; அபூபக்ரின் வாசலைத் தவிர என்று சொன்னார்கள்.
467 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின் போது தம் தலையில் ஒரு துணியால் கட்டுப் போட்டவர்களாக (தமது இல்லத்திலிருந்து) புறப்பட்டு வந்து சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீது அமர்ந்து அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்தார்கள். பிறகு, தன் நட்பிலும், தனது செல்வத்திலும் எனக்கு அபூபக்ரைவிட வேறெவரும் பேருதவி புரிந்தவர் கிடையாது. (இறைவனைத் தவிர) மக்களில் ஒருவரை நான் (என்) உற்ற நண்பராக ஆக்கிக் கொள்ள விரும்பியிருந்தால் அபூபக்ர் அவர்களையே உற்ற நண்பராக ஆக்கிக் கொண்டிருப்பேன். என்றாலும் (தனிப்பட்ட உதவிகளுக்காக நேசிப்பதைவிட) இஸ்லாமிய அடிப்படையிலான நேசமே சிறந்ததாகும் என்று கூறி விட்டு, இந்தப் பள்ளிவாச-ல் என்னிடம் வருவதற்காக உள்ள எல்லா நுழைவாயில் (சுவர்ப்புழை) களையும் அடைத்து விடுங்கள்; அபூபக்ரின் நுழைவாயிலைத் தவிர என்று கூறினார்கள்.
பாடம் : 81
கஅபாவுக்கும் இதர இறையாலயங்களுக்கும் கதவுகள் பூட்டுகள் அமைத்தல்.
இப்னு ஜுரைஜ் (அப்துல் ம-க் பின் அப்தில் அஸீஸ்-ரஹ்) அவர்கள் கூறியதாவது:
என்னிடம் இப்னு அபீ முலைக்கா ஸுபைர் பின் அப்தில்லாஹ் அத்தைமீ (ரஹ்) அவர்கள், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களது பள்ளிவாசல்களையும் அவற்றின் கதவுகளையும் நீங்கள் பார்த்திருக்க வேண்டுமே! (அவற்றின் தூய்மையையும் உறுதியையும் கண்டு வியந்து போயிருப்பீர்கள்) என்றார்கள்.
468 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (மக்காவை வெற்றி கொண்டு) மக்காவிற்கு வந்த போது உஸ்மான் பின் தல்ஹா அவர்களை வரச் சொன்னார்கள். அவர் (வந்து) இறையில்லம் கஅபாவின் கதவைத் திறந்தார். பிறகு நபி (ஸல்) அவர்களும், பிலால், உசாமா பின் ஸைத், உஸ்மான் பின் தல்ஹா (ரலி) ஆகியோர் உள்ளே சென்று கதவைத் தாளிட்டுக் கொண்டனர். அதில் சிறிது நேரம் இருந்து விட்டு பிறகு அனைவரும் வெளியே வந்தனர். நான் விரைந்து வந்து பிலால் (ரலி) அவர்களிடம்ள நபி (ஸல்) அவர்கள் கஅபாவினுள் தொழுதார்களா? என்றுன கேட்டேன். அதற்கு பிலால் (ரலி) அவர்கள், (ஆம்) அதனுள் தொழுதார்கள் என்று பதிலளித்தார்கள். எ(ந்தப் பகு)தியில் தொழுதார்கள்? என்று கேட்தற்கு இரண்டு தூண்களுக்கிடையே என்று பிலால் (ரலி) அவர்கள் கூறினார்கள். அப்போது எத்தனை ரக்அத்கள் தொழுதார்கள் என்று கேட்காமல் போய்விட்டேன்.
பாடம் : 82
இணைவைப்பாளர் பள்ளிவாச-ல் நுழைவது.
469 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நஜ்த் பகுதியை நோக்கி குதிரைப்படைப் பிரிவொன்றை அனுப்பி வைத்தார்கள். அவர்கள் (சென்று) பனூஹனீஃபா குலத்தாரைச் சேர்ந்த (யமாமாவாசிகளின் தலைவர்) ஸுமாமா பின் உஸால் எனப்படும் ஒரு மனிதரைக் கொண்டு வந்தார்கள். அவரை (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாச-ன் தூண்களில் ஒன்றில் கட்டி வைத்தனர்.
பாடம் : 83
பள்ளிவாச-ல் உரத்த குரலில் (வீண்பேச்சு) பேசுவது.
470 சாயிப் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாச-ல் நின்று கொண்டிருந்தேன். அப்போது யாரோ ஒருவர் என் மீது பொடிக் கல்லை வீசினார். நான் (திரும்பிப்) பார்த்த போது அங்கே (கலீஃபா) உமர் (ரலி) அவர்கள் இருந்தார்கள். நீர் சென்று (அதோ) அந்த இருவரையும் என்னிடம் அழைத்து வாருங்கள் என்றார்கள். அவ்வாறே நான் அவ்விருவருடனும் உமர் (ரலி) அவர்களிடம் வந்தேன். அப்போது உமர் (ரலி) அவர்கள் (அவ்விருவரிடமும்), நீங்கள் யார்? அல்லது நீங்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் இருவரும், நாங்கள் தாயிஃப்வாசிகள் என்று பதிலளித் தனர். அப்போது உமர் (ரலி) அவர்கள், (நல்ல வேளை! நீங்கள் வெளியூர்க்காரர் களாய்ப் போய் விட்டீர்கள்) நீங்கள் இந்த (மதீனா) நகரைச் சேர்ந்தவர்களாயிருந்திருந்தால் நிச்சய மாக நான் உங்கள் இருவரையும் (சவுக்கால்) நையப் புடைந்திருப்பேன்; (ஏனெனில்) அல்லாஹ்வின் தூதரது பள்ளி வாச-ல் நீங்கள் இருவரும் குரலை உயர்த்திப் பேசிக் கொண்டிருந்தீர்கள் என்று சொன்னார்கள்.
471 கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
எனக்கு அப்துல்லாஹ் பின் அபீஹத்ரத் (ரலி) அவர்கள் தரவேண்டியிருந்த கடன் ஒன்றை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாச-ல் வைத்து திருப்பிச் செலுத்தும்படி கேட்டேன். (இது தொடர்பாக எங்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு) எங்கள் இருவரின் குரல்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வீட்டிலிருந்தபடியே அதைக் கேட்கும் அளவிற்கு உயர்ந்தன. எனவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்க்ள் எங்கள் இருவரையும் நோக்கிப் புறப்பட்டார்கள். (இதற்காக) தமது அறையின் திரையை விலக்கி, கஅப் பின் மாலிக்! கஅப்! என்று அழைத்தார்கள். உடனே நான், இதோ வந்து விட்டேன், அல்லாஹ்வின் தூதரே! என்றேன். அப்போது அவர்கள் உன் கடனிலிருந்து பாதியைத் தள்ளுபடி செய்வீராக என்று சைகை செய்தார்கள். அவ்வாறே செய்து விட்டேன், அல்லாஹ்வின் தூதரே! என்று நான் கூறினேன். (பிறகு) நபி (ஸல்) அவர்கள் (அப்துல்லாஹ் பின் அபீ ஹத்ரத்தை நோக்கி), எழுந்து சென்று கடனைச் செலுத்துங்கள் என்றார்கள்.
பாடம் : 84
பள்ளிவாச-ல் அமர்வதும் வட்டமாக வீற்றிருப்பதும்.
472 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் சொற் பொழிவு மேடை (மிம்பர்)மீது இருந்து கொண்டிருக்கும் போது ஒரு மனிதர், இரவுத் தொழுகை பற்றித் தாங்கள் என்ன கூறுகின் றீர்கள்? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், (இரவுத் தொழுகை) இரண்டிரண்டு ரக்அத்களாகும். (அதன் நேரம் நுழைந்து விட்டது) பற்றி அஞ்சினால் (கடைசியில்) ஒரு ரக்அத் தொழுது கொள்ள வேண்டும். அவர் முன்னர் தொழுதவற்றை அது ஒற்றையாக ஆக்கிவிடும் என்றார்கள்.
(இதன் அறிவிப்பாளரான) நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
இப்னு உமர் (ரலி) அவர்கள், உங்களின் கடைசித் தொழுகையாக வித்ரை ஆக்கிக் கொள் ளுங்கள்; ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் இவ்வாறே பணித்தார்கள் என்று கூறுவார்கள்.
473 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீ பள்ளியில் அமர்ந்து கொண்டிருந்த மக்களுக்கு) உரையாற்றிக் கொண்டிருக்கையில் அவர்களை நோக்கி ஒரு மனிதர் வந்து, இரவுத் தொழுகை எவ்வாறு (தொழவேண்டும்)? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழவேண்டும்; சுப்ஹுத் தொழுகையை (அதன் நேரம் நுழைந்து விட்டது பற்றி) நீங்கள் அஞ்சினால் (கடைசியில்) ஒற்றையான ஒரு ரக்அத் தொழுது கொள்வீர்களாக! நீங்கள் தொழுது முடித்தவற்றை அது ஒற்றையாக அக்கிவிடும் என்றார்கள்.
474 அபூவாக்கித் அல்ஹாரிஸ் பின் மாலிக் அல்லைஸீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாச-ல் (மக்களுடன்) இருந்து கொண்டிருந்த போது மூன்று பேர் (அவர்களை நோக்கி) வந்தனர். (அவர்களில்) இருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை முன்னோக்கி வந்தனர். மற்றொருவர் (அலட்சியப்படுத்திவிட்டுச்) சென்றுவிட்டார். பிறகு அவ்விருவரில் ஒருவரோ (வட்டமாக அமர்ந்திருந்த அந்த அவையில்) ஓர் இடைவெளியிலிருப்பதைக் கண்டு அதில் அமர்ந்து கொண்டார். மற்றவரோ (வெட்கப்பட்டுக் கொண்டு) அவையினருக்குப் பின்னால் அமர்ந்து கொண்டார். மூன்றாமவரோ திரும்பிச் சென்றுவிட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது பேச்சை) முடித்ததும் கூறினார்கள்:
(சற்று முன்னர் வந்த) அந்த மூன்று பேரைப் பற்றி உங்களுக்கு நான் சொல் லட்டுமா?
அவர்களில் ஒருவரோ, அல்லாஹ்வின் (அருளின்) அளவில் ஒதுங்கினார்; அல்லாஹ் வும் அவரை அரவணைத்துக் கொண்டான். மற்றொருவரோ வெட்கப்பட்டு (அவையின் கடைக் கோடியில் உட்கார்ந்து) கொண்டார். எனவே அல்லாஹ்வும் அவர் விஷயத்தில் (கருணைக் கண் காட்ட) வெட்கப்பட்டான்.
மூன்றாமவரோ (காரணமின்றி கல்வி அவையை) அலட்சியப்படுத்தினார். எனவே அல்லாஹ்வும் அவரை அலட்சியம் செய்து விட்டான்.
பாடம் : 85
பள்ளிவாசலில் (ஓய்வெடுக்கும் போது) மல்லாந்து படுப்பதும் கால்களை நீட்டுவதும்.
475 அப்துல்லாஹ் பின் ஸைத் பின் ஆஸிம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாச-ல் ஒரு கா-ன் மேல் இன்னொரு காலைப் போட்டுக் கொண்டு (கீழாடை விலகாதவாறு) மல்லாந்து படுத்து (ஓய்வெடுத்துக்) கொண்டிருந்ததை நான் கண்டேன்.
சயீத் பின் அல்முஸய்யப் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
உமர் (ரலி) அவர்களும் உஸ்மான் (ரலி) அவர்களும் இவ்வாறு செய்பவர்களாக இருந்தார்கள்.
பாடம் : 86
மக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் பாதையில் பள்ளிவாசல் அமையவேண்டும்.
இதுவே ஹஸன் அல்பஸ்ரீ (ரஹ்), அய்யூப் அஸ்ஸக்தியானீ (ரஹ்), மாலிக் (ரஹ்) ஆகியோரின் கருத்தாகும்.
476 நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
 என் பெற்றோர் (அபூபக்ர்-உம்முரூமான்) எனக்கு விவரம் தெரிந்தது முதல் (இஸ்லாமிய) மார்க்கத்தை கடைப்பிடிப்பவர்களாகவே இருந்தனர். பக-ன் இரு பக்ககங்ளான காலையிலும் மாலையிலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வராமல் எங்களின் எந்த நாளும் கழிந்ததில்லை.
பிறகு அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு ஏதோ (யோசனை) தோன்றியது. தமது வீட்டு முற்றத்தில் தொழுமிடம் ஒன்றை உருவாக்கி அதில் தொழுது கொண்டும் குர்ஆனை ஓதியும் வந்தார்கள். அப்போது இனைவைப்பாளர்களின் மனைவி மக்கள் அபூபக்ர் (ரலி) அவர்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டு அவர்களைச் சூழ்ந்து (வேடிக்கை பார்த்துக் கொண்டு) நிற்பர். அபூபக்ர் (ரலி) அவர்கள் குர்ஆன் ஓதும் போது தமது கண்களைக் கட்டுப்படுத்த முடியாமல் (கண்ணீர் உகுத்த வண்ணம்) அதிகமாக அழக்கூடியவராக இருந்தார்கள். (அபூபக்ர் அவர்களின்) இந்த நடவடிக்கை (எங்கே தங்களது மனைவி மக்களை மதம் மாறச் செய்து விடுமோ என்ற அச்சம் இணைவைப்பாளர்களான குறைஷிகளை பீதிக்குள்ளாக்கியது.
பாடம் : 87
கடைத்தெருவிலுள்ள பள்ளிவாச-ல் தொழுவது.
கதவு மூடப்படும் ஒரு வீட்டுக்குள் அமைந்திருந்த பள்ளிவாச-ல் இப்னுஅவ்ன் (ரலி) அவர்கள் தொழுதார்கள்.
477 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் தமது வீட்டில் தொழுவதைவிட வும், தமது கடைத் தெருவில் தொழுவதை விடவும் ஜமாஅத்துடன் (கூட்டுத் தொழுகை) தொழுவது, மதிப்பில் இருபத்தி ஐந்து (மடங்குகள் தொழுகைகள்) கூடுதலாகும். ஏனெனில், உங்களில் ஒருவர் அங்கசுத்தி (உளூ) செய்து, அதை செம்மையாகச் செய்து, தொழுகின்ற ஒரே நோக்கத்துடன் பள்ளி வாசலுக்கு வந்தால் அவர் பள்ளி வாசலுக்குள் வரும் வரை எடுத்துவைக்கும் ஒவ்வோர் எட்டுக்கும் ஓர் அந்தஸ்த்தை அவருக்கு அல்லாஹ் உயர்த்துகின்றான்; ஒரு பாவத்தை அவரை விட்டு நீக்குகின்றான். (கூட்டுத்) தொழுகையை எதிர்ப்பார்த்து அவர் பள்ளிவாச-ல் இருக்கும் போது அவர் தொழுது கொண்டிருப்பவராகவே கருதப்படுகிறார். மேலும் அவர் (வெளியேறிவிடாமல்) எந்த இடத்தில தொழுகின்றாரோ அந்த இடத்திலேயே இருக்கும் வரை அவருக்காக வானவர்கள் பிராத்தனை செய்கிறார்கள். ஆனால், (அங்கசுத்தியை அகற்றிவிடக் கூடிய) சிறுதுடக்கு (காற்றுப்பிரிதல் மூலம்) அவர் பள்ளிக்குள் உபத்திரவம் செய்யாமல் இருக்க வேண்டும்.. அப்போது வானவர்கள், இறைவா! இவருக்கு கருணை புரிவாயாக! என்றுபிரார்த்திக்கின்றார்கள்.
பாடம் : 88
பள்ளிவாசல் முத-யவற்றில் இரு கைவிரல்களை (ஒன்றுடனொன்றை) கோத்துக் கொள்வது (குற்றமன்று).
478,479 இப்னு உமர் அல்லது இப்னு அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தமது இரு கைவிரல்களையும் கோத்துக் காட்டினார்கள்.
480 அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(நபி ளஸல்ன அவர்கள் தமது இரு கைவிரல்களையும் கோத்துக் காட்டி) அப்துல்லாஹ் பின் அம்ரே! மக்களில் மகா மட்டமானவர் களுடன் இப்படி நீ வாழநேர்ந்தால் உனது நிலை எப்படியிருக்கும்? என்று கேட்டார்கள்.
481 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறை நம்பிக்கையாளர்கள் (மூமின்கள்) ஒருவருக் கொருவர் (துணைநிற்கும் விஷயத் தில்) ஒரு கட்டடத்தைப் போன்றவர்கள் ஆவர். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதிக்கு வலுவூட்டுகின்றது.
(இப்படிக் கூறும் போது) நபி (ஸல்) அவர்கள் தமது இரு கைவிரல்களை ஒன்றுடன் ஒன்றை கோத்துக் காட்டினார்கள்.
இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
482 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு மாலைத் தொழுகை களில் ஒன்றை (லுஹ்ர்/அஸ்ர்) தொழுவித்தார்கள். - (இதன் அறிவிப்பாளரான) முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அந்தத் தொழுகையின் பெயரை அபூஹுரைரா (ரலி) அவர்கள் குறிப்பிட்டார்கள். ஆனால் நான் அதை மறந்து விட்டேன்.- (நான்கு ரக்அத்துடைய அத்தொழுகையில்) எங்களுக்கு இரண்டு ரக்அத் தொழுவித்து விட்டு சலாம் கொடுத்து விட்டார்கள். உடனே எழுந்து பள்ளிக்குள் அகலவாட்டில் போடப்பட்டிருந்த ஒரு மரக்கட்டையை நோக்கிச் சென்று ஏதோ கோபத்திலிருப்பவர்போன்று அதில் சாய்ந்து கொண்டார்கள். தமது வலக் கரத்தை இடக் கரத்தின் மீது வைத்து, கைவிரல்களை பின்னிக் கோத்துக் கொண்டார்கள். மேலும் தமது வலக் கன்னத்தை இடது புறங்கையின் மீது வைத்துக் கொண்டார்கள். அவசரமாகச் செல்பவர்கள் பள்ளியின் வாயில்கள் வழியாக வெளியேறிய போது தொழுகை குறைக்கப்பட்டுவிட்டது (போலும்) என்று கூறினர். அந்தக் கூட்டத்தில் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரும் இருந்தனர். ஆனால் (இது பற்றி) நபி (ஸல்) அவர்களிடம் பேச அவர்களிருவர் (மரியாதை கலந்த) பயத்தில் இருந்தனர். அந்தக் கூட்டத்திலேயே நீளமான இருகைகளுடைய ஒரு மனிதர் இருந்தார். அவர் துல்யதைன் (இரு கையாளர்) என்று அழைக்கப்படு வார். அவர், நீங்கள் மறந்து விட்டீர்களா, அல்லது தொழுகை சுருக்கப்பட்டுவிட்டதா, அல்லாஹ்வின் தூதரே? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், நான் மறக்கவுமில்லை; (தொழுகை) சுருக்கப்படவுமில்லை என்று கூறிவிட்டு (மக்களைப் பார்த்து), துல்யதைன் சொல்வது சரிதானா? என்று கேட்க, மக்கள் ஆம் (சரிதான்) என்று பதிலளித்தனர்.
உடனே (தொழுமிடத்தை நோக்கி) முன்னேறிச் சென்று விடுபட்டதைத் தொழுது சலாம் கொடுத்தார்கள். பிறகு தக்பீர் (அல்லாஹு அக்பர் என்று) சொல்லி (வழக்கமாக) தாம் சஜ்தா (சிரவணக்கம்) செய்வது போன்று அல்லது அதைவிட நெடிய (நேரம்) சஜ்தா செய்தார்கள். பிறகு (சஜ்தாவிலிருந்து) தமது தலையை உயர்த்தித் தக்பீர் சொன்னார்கள். பின்னர் தக்பீர் சொல்லி (வழக்கமாகத்) தாம் செய்யும் சஜ்தாவைப் போன்று அல்லது அதைவிட நெடிய (நேரம்) (மறதிக்குரிய) சஜ்தா செய்தார்கள். பிறகு தமது தலையை உயர்த்தியவாறு தக்பீர் சொன்னார்கள்.
மக்கள் சில சந்தர்ப்பங்களில் முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்களிடம், (கடைசியாக நபி -ஸல்) அவர்கள் சலாம் கொடுத்தார்கள் என்று (அபூஹுரைரா தமது அறிவிப்பில்) கூறினார்களா? என்று கேட்பார்கள். அதற்கு முஹம்மத்
பின் சீரீன் (ரஹ்) அவர்கள், இம்ரான் பின் ஹுஸைன் அவர்களிடமிருந்து எமக் கெட்டிய ஹதீஸில்தான் (மறதிக்குரிய சஜ்தா செய்த) பின்னர் நபியவர்கள் சலாம் கொடுத்தார்கள் என்று இடம் பெற்றுள்ளது. (அபூஹுரைராவின் அறிவிப்பில் அவ்வாறு இல்லை) என்று பதிலளிப்பார்கள்.
பாடம் : 89
(மக்காவிலிருந்து) மதீனாவின் சாலைகளில் அமைந்துள்ள பள்ளிவாசல்களும் நபி (ஸல்) அவர்கள் தொழுத பல்வேறு இடங்களும்.
483 மூசா பின் உக்பா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
சாலிம் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் சாலையோரத்தில் அமைந்த சில இடங் களைத் தேடிப்பிடித்து அங்கே தொழுவதை நான் பார்த்திருக்கிறேன். மேலும் தம் தந்தை (அப்துல்லாஹ் பின் உமர்-ரலி) அவர்கள் அந்த இடங்களில் தொழுதுவந்ததாகவும் அவ்விடங்களில் நபி (ஸல்) அவர்கள் தொழுததை தம் தந்தை பார்த்திருப்பதாகவும் குறிப்பிடுவார்கள். அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அவ்விடங்களில் தொழுது வந்ததாக நாஃபிஉ (ரஹ்) அவர்களும் என்னிடம் கூறியுள்ளார்கள். சாலிம் (ரஹ்) அவர்களிடம் நான் இது பற்றிக் கேட்ட போது ளஅப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் தொழுதன அனைத்து இடங்களைப் பற்றி நாபிஃஉ (ரஹ்) அவர்கள் கூறியதைப் போன்றே கூறினார்கள். என்றாலும் (மதீனாவிலிருந்து இரண்டு நாள் தொலை தூரத்திலிருந்த) ஷரஃபுர் ரவ்ஹா எனும் சிற்றூரில் அமைந்த பள்ளிவாசல் விஷயத்தில் இருவரும் மாறுபட்ட கருத்தைத் தெரிவித்தனர்.
484 (அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அவர்களின் முன்னாள் அடிமையான) நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உம்ராவிற்காக (மக்கா செல்லும் போது) துல்ஹுலைஃபா எனும் இடத்தில் அமைந்துள்ள கருவேல மரமொன்றிற்குக் கீழே துல்ஹுலைஃபா பள்ளிவாசல் (இன்று) அமைந்துள்ள இடத்தில் இறங்கி இளைப்பாறுவார்கள். தமது (விடைபெறும்) ஹஜ்ஜிற்காகச் சென்றபோதும் (இங்கு) இறங்கி இளைப்பாறினார்கள்.
அறப்போரோ அல்லது ஹஜ்ஜோ உம்ராவோ செய்து விட்டு அந்தப் பாதையில் திரும்பி வ(ர நேர்)ந்தால் பத்னுல்வாதீ (அகீக்) பள்ளத்தாக்கு வழியாக இறங்குவார்கள். பத்னுல் வாதீ பள்ளத் தாக்கைத் தாண்டியதும் அதன் கரையிலுள்ள கிழக்கு பத்ஹாவில் தமது ஒட்டகத்தைப்படுக்க வைத்து அதிகாலையாகும் வரை ஒய்வெடுப்பார்கள்.
அந்த இடம், கற்களாலான இந்தப் பள்ளிவாச-ன் அருகிலுமில்லை; பள்ளிவாசல் அமைந்துள்ள மேட்டிலுமில்லை.
அங்கு பெரிய பள்ளம் ஒன்று இருந்தது. அதன் அருகில் அப்துல்லாஹ் பின் உமர்
(ரலி) அவர்கள் தொழுவார்கள். அதன் நடுவே மணற்குவியல் இருந்தது. அங்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுவார்கள். (பின்னர்) பத்ஹாவிலுள்ள அந்த இடத்தில் வெள்ளம் புகுந்து அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் தொழுதுவந்த அந்த இடத்தை புதையுண்டுவிடச் செய்து விட்டது.
485 நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஷரஃபுர் ரவ்ஹா எனும் சிற்றூரில் உள்ள பெரிய பள்ளி வாசலுக்கு அருகில் உள்ள சின்னப் பள்ளி வாசல் அமைந்திருக்கும் இடத்தில் தொழுதி ருக்கிறார்கள் என்று அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் என்னிடம் கூறிவிட்டு , அந்த இடத்தின் அடையாளம் பற்றிக் கூறுகையில், (நீ மதினாவிலிருந்து) மக்கா செல்லும் வழியில் பாதையின் வலப் பக்கம் அமைந்த பள்ளியில் (கிப்லாநோக்கி) நீ தொழுது கொண்டிருக்கும் போது அந்த இடம் உனது வலப் பக்கத்தில் இருக்கும். (நபி ளஸல்ன அவர்கள் தொழுத) அந்த இடத்திற்கும் அந்தப் பெரிய பள்ளிவாசலுக்கும் இடையே கல்லெறியும் தூரம்தான் உள்ளது என்றோ அல்லது இதே கருத்திலமைந்த வேறொரு வார்த்தையோ குறிப்பிட்டார்கள்.
486 நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இரக் (இரக்குல் ழப்யா எனும் பள்ளத்தாக்கு அமைந்துள்ள) பகுதியில் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் தொழுவார்கள். அந்த இரக் பள்ளத்தாக்கின் எல்லை நீ (மதீனாவிலிருந்து) மக்கா செல்லும் வழியில், ரவ்ஹா கிராமத்தின் எல்லைக்கும் அங்குள்ள பள்ளிவாசலுக்கும் மத்தியில் அமைந்துள்ள சாலையில் முடிவடைகிறது. (அந்த இரக் பள்ளத்தாக்கில் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் தொழுதார்கள்.)
அந்த இடத்தில் ஒரு பள்ளிவாசல் கட்டப்பட்டிருந்தது. ஆனால் அந்தப் பள்ளிவாச-ல் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் தொழுவதில்லை. தமது இடப் புறத்தில் தமக்குப் பின்னால் அந்தப் பள்ளிவாசல் இருக்கும் விதத்தில் அந்தப் பள்ளியைவிட (சற்று) முன்னால் நின்று கொண்டு அந்த இரக் பள்ளத்தாக்கை நோக்கிய வாறு அவர்கள் தொழுவார்கள். ரவ்ஹா எனும் கிராமத்திலிருந்து அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் (மக்காவுக்குப்) புறப்பட்டுச் செல்லும் போது (இரக் எனும்) அந்த இடத்தைச் சென்றடையும் முன் அவர்கள் லுஹ்ர் தொழுகையைத் தொழ மாட்டார்கள். இரக் வந்ததும்) அங்குதான் லுஹ்ர் தொழுவார்கள். மக்காவிலிருந்து (மதீனாவிற்குத்) திரும்பி வரும் போது சுப்ஹு நேரத்திற்கு சற்று முன்னர் அல்லது சஹர் நேரத்தின் கடைசிப் பகுதியில் அந்த (இரக் எனும்) இடத்தைக் கடக்க நேரிட்டால் அங்கேயே சற்று நேரம் ஓய்வெடுப் பார்கள். (நேரம் வந்ததும்) அந்த இடத்தில் சுப்ஹுத் தொழுகையை நிறைவேற்றுவார்கள்.
487 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (மதீனாவிலிருந்து மக்கா செல்லும்) சாலையின் எதிர்த் திசையில் வலப் புறம் அமைந்துள்ள ருவைஸா எனும் சிற்றூருக்கு சற்று அருகில் உள்ள ஒரு பெரிய மரத்தினடியில் இறங்கித் தங்குவார்கள். அந்த இடம் விசாலமானதாகவும் பள்ளமான தாகவும் இருந்தது.
நபி (ஸல்) அவர்கள் தங்கிய அந்த இடம் அவ்வூரிலிருந்து இரண்டு மைல் தொலைவில் இருந்தது. அந்த மரத்தின் மேற்கொப்புகள் முறிந்து அதன் மையப்பகுதிக்குள் மடங்கிக் கிடந்தன. அதன் அடிமரம் நின்று கொண் டிருந்தது, அந்த அடி மரத்தில் மணல் மிகுதியாக விந்து கிடந்தது.
இதை நாஃபிஉ (ரஹ்) அவர்கள் அறிவிக்கி றார்கள்.
488 நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நீ (மதீனாவிலிருந்து) ஹல்பா செல்லும் வழியில் அர்ஜ் எனும் சிற்றூருக்குப் பின்புறத்திலுள்ள நீரோடையின் ஓரத்தில் நபி (ஸல்) அவர்கள் தொழுதார்கள். அந்தத் தொழுமிடத்திற்கு அருகில் இரண்டோ மூன்றோ சவக்குழிகள் இருந்தன. அக்குழிகள் மீது பெரும் கற்கள் இருந்தன. அந்தப் பள்ளிவாசல் சாலையின் வலப் புறம் அமைந்தி ருந்தது. அந்தச் சாலைக்கு கிளைச் சாலைகளும் இருந்தன என்று அப்துல்லாஹ் (ரலி) என்னிடம் கூறினார்கள். அந்த கிளைச் சாலைகளின் நடுவே அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் நடந்து அர்ஜ் எனும் சிற்றூருக்குள் நுழைந்து (ஓடைக் கரையில் அமைந்துள்ள) அந்தப் பள்ளிவாச-ல் நண்பக-ல் சூரியன் உச்சி சாய்ந்ததும் லுஹ்ர் தொழுவார்கள்.
489 நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மதீனாவுக்கும் ஷாமுக்கும் இடையே உள்ள) ஹர்ஷா எனும் மலைக்கு அருகில் (ஷாம் செல்லும்) சாலையின் இடப் புறம் அமைந்த சிற்றாறு பாயும் குறுகிய மலையிடுக்கின் அருகிலுள்ள மரங்களுக்குக் கீழே இறங்கித் தங்கினார்கள். அந்த சிற்றாறு ஹர்ஷா எனும் மலையின் அடிவாரத்தை ஒட்டிச் செல்கிறது. ளநபி (ஸல்) அவர்கள் தொழுதன அந்த இடத்திற்கும் சாலைக்கும் மத்தியில் கிட்டத்தட்ட அம்பெய்தால் சென்றடையும் தொலைவே இருந்தது. சாலைக்கு மிக அருகிலும், அங்கிருந்த மரங்களில் மிக நெடியதுமான ஒரு மரத்திற்குப் பக்கத்தில் தொழுவது அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களின் வழக்கம்.
490 நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
 மர்ருழ் ழஹ்ரான் எனும் சிற்றூருக்கு அருகிலுள்ள நீர் அரித்தோடிய மலையிடுக்கில் நபி (ஸல்) அவர்கள் தங்கி இளைப்பாறுவார்கள். அந்த மலையிடுக்கு (மக்காவிலிருந்து மதீனா செல்லும் போது (மர்ருழ்ழஹ்ரான் தாண்டியதும்) ஸஃப்ராவாத் எனும் இடத்தைக் கடந்ததும். சாலையின் இடப்புறம் அமைந்துள்ளது. ளநபி (ஸல்) அவர்கள் தங்கி இளைப்பாறியன அந்த இடத்திற்கும் சாலைக்கும் இடையே ஒரு கல்லெறியும் தொலைவே உண்டு என அப்துல்லாஹ் பின் உமர்
(ரலி) அவர்கள் என்னிடம் கூறினார்கள்.
491 நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (மதீனாவிலிருந்து) மக்கா செல்லும் போது தூத்துவா என்ற இடத்தில் இரவு நேரம் தங்கிவிட்டு அங்கேயே காலையில் சுப்ஹுத் தொழுகையைத் தொழுவர்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுத இடம் அங்குள்ள கெட்டி யான மேட்டின் மீது அமைந்துள்ளது. அங்கு (தற்போது) பள்ளிவாசல் கட்டப்பட்டுள்ள இடம் ளநபி (ஸல்) அவர்கள் தொழுதன அந்த இடமன்று; அந்தப் பள்ளிக்கு கீழ்ப் புறமாக அமைந்துள்ள கெட்டியான மேடே ளநபி (ஸல்) அவர்கள் தொழுதன அந்த இடமாகும் என அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் என்டம் கூறினார்கள்.
492 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
நபி (ஸல்) அவர்கள் மலைக் கணவாயை முன்னோக்கி (நின்று இறைவனை வணங்கி)னார்கள். அந்த இடத்திற்கும் உயரமான அந்த மலைக்கம் இடையே கஅபாவின் திசை அமைந்திருந்தது. எனவே, நான் (அந்த இடத்தில் தொழும் போது) அங்கு தற்போது கட்டப்பட்டுள்ள பள்ளிவாச-ன் இடப் பக்கத்தை அந்த மேட்டின் ஒரு பகுதியில் வரும்படி செய்தேன். நபி (ஸல்) அவர்கள் தொழுத இடம், அதைவிடக் கீழே ஒரு கறுப்பு மேட்டின் மீதே அமைந்திருந்தது. ளநபி (ஸல்) அவர்கள் தொழுத அதே இடத்தில் நீ தொழ நினைத்தால் பள்ளிவாசலுக்கு அருகிலுள்ளன அந்த மேட்டிலிருந்து பத்து முழம் அல்லது அதைப் போன்றதை விட்டுவிட்டு, உனக்கும் கஅபாவிற்கும் இடையே அமைந்துள்ள அந்த மலைக் கணவாயை முன்னோக்கித் தொழு! என்று கூறினார்கள். இதை நாஃபிஉ (ரஹ்) அவர்கள் அறிவிகிறார்கள்.
(குறிப்பு: இந்தப் பாடத்தில் உள்ள பத்து ஹதீஸ்களையும் சில பேர் ஒரு ஹதீஸாகக் கணக்கிட்டுள்ளதால் ஸஹீஹுல் புகாரியின் எண்களில் வித்தியாசம் ஏற்படும் என்பதைக் கவனத்தில் கொள்ளவும்!)
பாடம் : 90
(கூட்டுத் தொழுகையின் போது) இமாம் வைத்துக் கொள்ளும் தடுப்பே (சுத்ரா) பின்னாலிருப்போருக்கும் போதுமானதாகும்.
493 அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (விடைபெறும் ஹஜ்ஜின் போது) மினாவில் சுவர் (போன்ற தடுப்பு) எதையும் முன்னோக்காதவர்களாகத் (திறந்தவெளியில்) மக்களுக்குத் தொழுவித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது நான் பெட்டைக் கழுதை ஒன்றில் பயணித்தபடி (அவர்களை) நோக்கிச் சென்றேன்- (தொழுது கொண்டிருந்தவர்களின்) ஓர் அணியில் ஒரு பகுதியை நான் கடந்து சென்று (கழுதையிலிருந்து) இறங்கி அதை மேயவிட்டுவிட்டு (தொழுவோரின்) வரிசையினூடே புகுந்து (நின்று) கொண்டேன். அ(வ்வாறு நான் தொழுகை அணியைக் கடந்து சென்ற)தற்காக யாரும் என்னை ஆட்சேபிக்க வில்லை
494 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெரு நாள் தினத்தன்று (தொழுவிப்பதற்காக தொழுகைத் திடல் நோக்கிப்) புறப்படும் போது ஈட்டியை எடுத்துவருமாறு (தம் ஊழியரைப்) பணிப்பார்கள். (தடுப்புச் சுவர் இல்லாத திறந்த வெளியில்) மக்களுக்கு முன்னால் அந்த ஈட்டியை (தடுப்பாக நட்டு) வைக்கப்படும். பிறகு அதை நோக்கித் தொழுவார்கள். மக்கள் அவர்களுக்குப் பின்னே இருப்பார்கள். பயணத்தின் போதும் (குறுக்குச் சுவரில்லாத திறந்தவெளியில் தொழநேர்ந்தால்) இவ்வாறே நபி (ஸல்) அவர்கள் செய்வார்கள்.- இதனால்தான் (நம்) தலைவர்களும் ஈட்டியை (பெரு நாள் முத-யவற்றில் முன்னால் கொணரும் வழக்கத்தை) ஏற்படுத்திக் கொண்டனர்.
495 அபூஜுஹைஃபா வஹ்ப் பின் அப்தில்லாஹ் அஸ்ஸுவாயீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (புறநகர் மக்காவிலுள்ள) பத்ஹா எனுமிடத்தில் எங்களுக்கு லுஹ்ரையும் அஸ்ரையும் இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழுவித்தார்கள். அப்போது அவர்களுக்கு முன்னால் (இரும்புப் பூண்போட்ட) கைத்தடி ஒன்று (தடுப்பாக) இருந்தது. அந்தக் கைத்தடிக்கு அப்பால் பெண்களும் கழுதைகளும் நடந்து சென்றனர்.
பாடம் : 91
தொழுபவருக்கும் தடுப்புக்கும் இடையே எந்த அளவு இடைவெளி இருக்க வேண்டும்?
496 சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாச-ல்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழ நிற்கும் இடத்திற்கும் (பள்ளிவாச-ன் கிப்லாத்திசையில் அமைந்த) சுவருக்கும் இடையே ஆடு ஒன்று நடமாடும் அளவுக்கு இடைவெளி இருந்தது.
497 சலமா பின் அக்வாஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
(மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாச-ன் மிம்பர் (-மேடை) பக்கமிருந்த சுவரின் இடைவெளியில் ஓர் ஆடு கடந்து செல்லமுடியும்.
பாடம் : 92
(தொழுபவர் தமக்கு முன் தடுப்பாக நட்டுவைக்கப்பட்டுள்ள) ஈட்டியை நோக்கித் தொழுவது.
498 அப்துல்லாஹ்பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்(கள் திறந்த வெளியில் தொழும் போது அவர்)களுக்காக ஈட்டியை (பூமியில்) நட்டுவைக்கப்படும். அவர்கள் அதை நோக்கித் தொழுவார்கள்.
பாடம் : 93
கைத்தடியை (தடுப்பாக்கி அதை) நோக்கித் தொழுவது.
499 அபூஜுஹைஃபா வஹ்ப் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நண்பகல் வேளையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். அப்போது உளூ (அங்கசுத்தி) செய்வதற்காக அவர்களுக்குத் தண்ணீர் கொண்டுவரப்பட்டது. அவர்கள் உளூ செய்து விட்டு எங்களுக்கு லுஹ்ரையும் அஸ்ரையும் (சேர்த்து- ஜம்உசெய்து) தொழுவித்தார்கள். அப்போது அவர்களுக்கு முன்னால் (இரும்புப் பூண் போட்ட) கைத்தடி ஒன்று (தடுப்பாக) இருந்தது. பெண்மணிகள், கழுதைகள் அந்த கைத்தடிக்கு அப்பால் சென்று கொண்டிருந்தனர்.
500 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தமது இயற்கைக் கடனை நிறைவேற்றச் சென்றால் நானும் இன்னொரு சிறுவரும் எங்களுடன் (இரும்புப் பூண் போட்ட) கைத்தடியும் தண்ணீர் நிரம்பிய தோல்ப்பையும் இருக்க, அவர்களைப் பின்தொடர்ந்து செல்வோம். அவர்கள் தமது தேவையை முடித்துக் கொண்டதும் நாங்கள் அவர்களிடம் அந்தத் தண்ணீர்பையைக் கொடுப்போம்.
பாடம் : 94
மக்கா உட்பட எல்லா இடங்களிலும் (திறந்தவெளியில் தொழும் போது) தடுப்பு வைத்துக் கொள்ள வேண்டும்.
501 அபூஜுஹைஃபா வஹ்ப் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நண்பகல் நேரத்தில் புறப்பட்டுவந்து (புறநகர் மக்காவிலுள்ள) பத்ஹா எனுமிடத்தில் லுஹ்ரையும் அஸ்ரையும் (சேர்த்து) இரண்டிரண்டு ரக்அத்களாக (எங்களுக்குத்) தொழுவித்தார்கள். தமக்கு முன்னால் கைத்தடி ஒன்றை (தடுப்பாக) நட்டுவைத்தார்கள். (தொழுகைக்காக) அவர்கள் அங்கசுத்தி (உளூ) செய்த போது அவர்கள் அங்க சுத்தி செய்த தண்ணீரில் எஞ்சியதை மக்கள் (தம் மேனியில்) தடவிக் கொண்டார்கள்.
பாடம் : 95
தூண்களை நோக்கித் தொழுவது.
(பள்ளிவாச-ல் உள்ள) தூண்களில் சாய்ந்து பேசிக் கொண்டிருப்பவர்களைவிட தொழுபவர்களே அத(னைத் தடுப்பாக வைத்துத் தொழுவ)தற்கு அதிக உரிமை படைத்தவர்கள் என்று உமர் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.
இரண்டு தூண்களுக்கு நடுவில் தொழுது கொண்டிருந்த ஒருவரை உமர் (ரலி) அவர்கள் கண்ட போது அவரை ஒரு தூணை நோக்கி நிறுத்தி, இதை நோக்கித் தொழுவீராக! என்று கூறினார்கள்.
502 யஸீத் பின் அபீஉபைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அபூமுஸ்லிம் சலமா பின் அக்வஉ (ரலி) அவர்களுடன் (மஸ்ஜிதுந்நபவீ பள்ளிக்கு) செல்வது வழக்கம். சலமா (ரலி) அவர்கள் குர்ஆன் (வைக்கப்படும் இடத்திற்கு) அருகிலுள்ள தூணருகேத் தொழுவார்கள். ஆகவே நான், அபூமுஸ்லிம்! தாங்கள் இந்தத் தூணைத் தேர்ந்தெடுத்துத் தொழுவதையே நான் காண்கிறேனே (என்ன காரணம்)? என்று கேட்டேன அதற்கு அவர்கள் நபி (ஸல்) அவர்கள் இந்த தூணைத் தேர்ந்தெடுத்துத் (அதை முன்னோக்கி நின்று) தொழுவைத நான் பார்த்திருக்கிறேன். (ஆகவேதான் நானும் இதைத் தேர்ந்தெடுத்து தொழுகிறேன்) என்று பதிலளித்தார்கள்.
503 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மஃக்ரிப் (தொழுகைக்காக பாங்கு சொல்லும்) நேரம் முதல் நபி (ஸல்) அவர்கள் (தமது இல்லத்திலிருந்து) வெளியேறும் வரை மூத்த நபித் தோழர்கள் (இரு ரக்அத்கள் முன் சுன்னத் தொழுவதற்காக பள்ளிவாச-லுள்ள) தூண்களை நோக்கி விரைவதை நான் பார்த்திருக்கிறேன்.
பாடம் : 96
கூட்டுத் தொழுகை அல்லாதவற்றை தூண்களுக்கு இடையே தொழுவது.
504 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(மக்கா வெற்றி நாளில்) நபி (ஸல்) அவர்களும் உசாமா பின் ஸைத் (ரலி), உஸ்மான் பின் தல்ஹா (ரலி) ஆகியோரும் இறையில்லம் கஅபாவுக்குள் சென்றனர். நீண்ட நேரம் உள்ளிருந்து விட்டு வெளியே வந்தனர். நபி (ஸல்) அவர்கள் (வெளியே வந்த கையோடு) அவர்களுக்குப் பின்னால் முதல் ஆளாக நானே கஅபாவினுள் நுழைந்தேன். பிலால் (ரலி) அவர்களிடம், நபி (ஸல்) அவர்கள் (கஅபாவுக்குள்) எங்கே (எந்த இடத்தில்) தொழுதார்கள்? என்று கேட்டேன். அதற்கு பிலால் முன்னால் உள்ள இரண்டு தூண்களுக்கு இடையில் என்று பதிலளித்தார்கள்
505 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(மக்கா வெற்றி நாளில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் உசாமா பின் ஸைத், பிலால், உஸ்மான் பின் தல்ஹா அல்ஹஜபீ (ரலி) ஆகியோரும் இறையில்லம் கஅபாவுக்குள் சென்று உள்தாழிட்டுக் கொண்டார்கள். (நிண்ட நேரம்) உள்ளே இருந்தார்கள். வெளியே வந்(து கொண்டிருந்)த பிலால்
(ரலி) அவர்களிடம், நபி (ஸல்) அவர்கள் உள்ளே என்ன செய்தார்கள்? என்று கேட்டேன். அதற்கு பிலால் (ரலி) அவர்கள், ஒரு தூணை தமது இடபக்கமும் மற்றொரு தூணை தமது வலப் பக்கமும் மூன்று தூண் களை பின்புறமும் இருக்குமாறு செய்(து, தொழு)தார்கள் என்று கூறினார்கள். அன்று இறையில்லம் கஅபாவினுள் ஆறு தூண்கள் இருந்தன.
(அபூஅப்தில்லாஹ் புகாரீயாகிய நான் கூறுகின்றேன்:)
(இதன் அறிவிப்பாளர்களின் ஒருவரான) மாலிக் (ரஹ்) அவர்களின் மற்றோர் அறிவிப்பில் தமது வலப் பக்கம் இரண்டு தூண்கள் (இருக்குமாறு தொழுதார்கள்) என்று இடம்பெற்றுள்ளதாக எம்மிடம் இஸ்மாயீல் பின் அபீஉவைஸ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
பாடம் : 97
506 நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கஅபாவிற்குள் நுழையும் போது கஅபாவை நோக்கி நோராகச் சென்று அதன் கதவு தமது முதுகுகிற்குப் பின்னால் இருக்குமாறு தமக்கும் எதிர் சுவருக்குமிடையே மூன்று முழ இடைவெளி இருக்கும் விதத்தில் நெருக்கமாக நின்று தொழுவார்கள். (அதாவது,) நபி (ஸல்) அவர்கள் கஅபாவில் எந்த இடத்தில் நின்று தொழுததாக பிலால் (ரலி) அவர்கள் தெரிவித்தார்களோ அந்த இடத்தைத் தேடித் தொழுவார்கள். நம்மில் ஒருவர் கஅபாவில் தாம் நாடிய எந்தப் பகுதியில் நின்று தொழுதாலும் தவறேதுமில்லை என்றும் கூறுவார்கள்.
பாடம் : 98
வாகன ஒட்டகம், சிவிகை (ஆகியவற்றை தடுப்பாக்கி தொழுவது போன்று) ஒட்டகம், மரம் ஆகியவற்றை(த் தடுப்பாக வைத்து அவற்றை) நோக்கித் தொழுவது.
507 நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
 நபி (ஸல்) அவர்கள் (திறந்தவெளியில் தொழும் போது) தமது வாகன ஒட்டகத்தை குறுக்கே (தடுப்பாக) நிறுத்தி அதை நோக்கித் தொழுவார்கள் என இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள். நான் (அவர்களிடம்), ஒட்டகம் மிரண்டு ஓடிவிட்டால்...? என்று கேட்டேன். இந்த சிவிகையை எடுத்து அதை நேராக வைத்து அதன் (பின் கடை) சாய்மானத்தை நோக்கித் தொழுவார்கள் என்று பதிலளித்தார்கள்.
இப்னு உமர் (ரலி) அவர்கள் இவ்வாறே செய்துவந்தார்கள்.
பாடம் : 99
கட்டிலை நோக்கித் தொழுவது.
508 அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(நாய்கள், கழுதைகள், பெண்கள் தொழுப வருக்கே குறுக்கே சென்றால் தொழுகை முறிந்து விடும் என்று கூறிய ஒருவரிடம்) ஆயிஷா (ரலி) அவர்கள், எங்களை ஏன் நாயுக்கும் கழுதைக்கும் சமமாக்கினீர்கள்? நான் கட்டி-ல் சாய்ந்து படுத்திருப்பேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் வந்து கட்டிலுக்கு நேராக நின்று தொழுவார்கள். அவர்கள் பார்வையில் படும் விதமாக படுத்திருக்கப் பிடிக்காமல் கட்டி-ன் இரு கால்களினூடே நுழைந்து வெளியேறிவிடு வேன்; எனது போர்வையிலிருந்தும் நழுவிச் சென்றேவிடுவேன்
பாடம் : 100
தொழுது கொண்டிருப்பவர் தமக்கு முன்னால் குறுக்கே நடந்து செல்பவரைத் தடுப்பது.
தொழுகை இருப்பின் போதும் (மக்கள் நடமாட்டம் நிறைந்த) கஅபாவிற்குள் தொழும் போதும் இப்னு உமர் (ரலி) அவர்கள் தமக்கு முன்னால் குறுக்கே சென்றவரைத் தடுத்திருக்கிறார்கள். சண்டையிட்டுத் தான் அ(வ்வாறு செல்ப)வரைத் தடுக்க முடியுமென்றால் அவ்வாறு செய்து கொள்! என்றும் கூறுவார்கள்.
509 அபூஸா-ஹ் தக்வான் அஸ்ஸம்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
மக்களில் எவரும் தமக்கு குறுக்கே செல்லாமலிருக்க தடுப்பு ஒன்றை வைத்துக் கொண்டு அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் ஜுமுஆ நாளில் தொழுது கொண்டிருப்பதை நான் கண்டேன்.
அப்போது பனூ அபீமுஐத் குலத்தைச் சேர்ந்த ஓர் இளைஞர் அபூசயீத் (ரலி) அவர்களுக்கு முன்னால் கடந்து செல்லப் போனார். எனவே, அபூசயீத் (ரலி) அவர்கள் அவரது நெஞ்சில் கையால் உந்தினார்கள். அபூசயீத் (ரலி) அவர்களுக்கு முன்னால் (அவர்களைக் கடந்து) செல்வதைத் தவிர நடை பாதையேதும் இல்லையெனக் கண்ட அந்த இளைஞர், மீண்டும் அவர்களைத் தாண்டி (குறுக்கே) செல்லப் போனார். எனவே அபூசயீத் (ரலி) அவர்கள் அவரை முன்பைவிடக் கடுமையாக உந்தினார்கள். உடனே அந்த இளைஞர் அபூசயீத் (ரலி) அவர்களை ஏசினார். பிறகு (மதீனாவின் ஆளுநராயிருந்த) மர்வான் பின் ஹகமிடம் சென்று அபூசயீத் (ரலி) அவர்கள் தம்மிடம் நடந்து கொண்டது பற்றி முறையிட்டார். அவருக்குப் பின்னால் அபூசயீத் (ரலி) அவர்களும் மர்வானிடம் சென்றார்கள்.
அப்போது மர்வான், உங்களுக்கும் உங்கள் சகோதரரின் புதல்வருக்குமிடையே என்ன பிரச்சினை, அபூசயீத் அவர்களே? என்று கேட்டார். அப்போது அபூசயீத் (ரலி) அவர்கள், மக்களில் எவரும் தமக்கு குறுக்கே செல்லாமலிருக்க தமக்கு முன்னால் ஏதேனும் ஒன்றை தடுப்பாக வைத்துக் கொண்டு உங்களில் ஒருவர் தொழும் போது, எவரேனும் தமக்கு முன்னால் (குறுக்கே) கடந்து செல்ல முயன்றால் அவரைத் தள்ளிவிடுங்கள். அவர் (விலகிக் கொள்ள) மறுத்தால் அவருடன் சண்டையி(ட்டுத்த)டுங்கள். ஏனெனில் அவன் தான் ஷைத்தான் என நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டுள்ளேன் (எனவேதான், இந்த இளைஞரிடம் இவ்வாறு நான் நடந்து கொண்டேன்) என்று கூறினார்கள்.
பாடம் : 101
தொழுது கொண்டிருப்பவருக்குக் குறுக்கே (அவர் சஜ்தா செய்யும் எல்லைக்குள்) நடந்து செல்வது பாவச்செயலாகும்.
510 புஸ்ர் பின் சயீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
தொழுது கொண்டிருப்பவருக்கு குறுக்கே நடந்து செல்பவர் அடைந்து கொள்ளும் பாவம் என்ன என்பது பற்றித் தாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து என்ன செவியுற்றீர்கள்? என்று அபூஜுஹைம் அப்துல்லாஹ் அல்அன்சாரி (ரலி) அவர்களிடம் கேட்டுவருமாறு ஸைத் பின் கா-த் (ரலி) அவர்கள் என்னை அனுப்பிவைத்தார்கள். (நான் சென்று கேட்டேன்). அப்போது அபூஜுஹைம் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொழுது கொண்டிருப்பவருக்கு குறுக்கே செல்பவர், அதனால் தமக்கு ஏற்படு(ம் பாவத்)தைப் பற்றி அறிந்திருந்தால் அவருக்கு முன்னால் (அவர் அருகில்) செல்வதற்குப் பதிலாக நாற்பது (நாட்கள்/மாதங்கள்/வருடங்கள் நின்று கொண்டிருப்பார். அத்தகைய நாற்பது) அவருக்கு நல்லதாக இருந்திருக்கும்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபுந்நள்ர் சாலிம் பின் அபீ உமைய்யா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
புஸ்ர் பின் சயீத் (ரஹ்) அவர்கள் நாட்களில் நாற்பது என்று சொன்னார்களா? அல்லது மாதங் களில் நாற்பது என்று கூறினார்களா அல்லது வருடங்களில் நாற்பது என்று குறிப்பிட்டார்களா? என்று எனக்குத் தெரியவில்லை.
பாடம் : 102
தொழுது கொண்டிருக்கும் ஒருவரை முன்னோக்கி அமரலாமா?
தொழுது கொண்டிருக்கும் ஒருவரை முன்னோக்கி அமர்வதை உஸ்மான் (ரலி) அவர்கள் வெறுத்துள்ளார்கள். தம்மால் தொழுபவரின் கவனம் சிதறும் என்றால்தான் இந்த நிலை. கவனம் சிதறாது என்றால் (அதனால் தவறில்லை. ஏனெனில்,) ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள், இவ்வாறு முன்னோக்கினால் என்ன (தவறு)? ஒரு மனிதர் இன்னொரு மனிதரின் தொழுகையை முறித்து விடமுடியாது என்று கூறியுள்ளார்கள்.
511 மஸ்ரூக் பின் அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஆயிஷா (ரலி) அவர்களிடம் தொழு கையை முறிக்கும் காரியங்கள் குறித்துப் பேசப்பட்டது. அப்போது சிலர், (தொழுது கொண்டிருப்பவருக்கு குறுக்கே செல்லும்) நாயும் கழுதையும் பெண்ணும் தொழுகையை முறித்து விடுவன என்று கூறினர். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள, (பெண்களாகிய) எங்களை நாய்களுக்கு சமாமாக்கிவிட்டீர் களே? நபி (ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருக்கையில் நான் அவர்களுக்கும் கிப்லாவுக்குமிடையே கட்டி-ல் படுத்துக் கொண்டிருப்பேன். அப்போது எனக்கு ஏதேனும் தேவை ஏற்படும். (தொழுது கொண்டிருக்கும்) அவர்களுக்கு முன்னால் செல்ல விருப்பமில்லாமல் (நான் கட்டி-லிருந்து) ஒரே நழுவு நழுவிவிடுவேன் என்று கூறினார்கள்.
இந்த கருத்தில் அமைந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது
பாடம் : 103
தூங்கிக் கொண்டிருப்பவரை நோக்கித் தொழுவது.
512 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களின் விரிப்பில் குறுக்கே உறங்கிக் கொண்டிருக்கையில் நபி (ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருப்பார்கள். அவர்கள் வித்ருத் தொழ எண்ணும் போது என்னை எழுப்புவார்கள் (அதன் பின்) நான் வித்ருத் தொழுவேன்.
பாடம் : 104
பெண்ணை நோக்கி உபரியான தொழுகைகளைத் தொழுவது (செல்லும்).
513 நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (இரவில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்புறமாக (படுத்து) உறங்கிக் கொண்டிருப்பேன். அப்போது எனது கால்கள் அவர்களது கிப்லாவில் (அவர்கள் சிரவணக்கம் செய்யுமிடத்தில்) இருந்து கொண்டிருக்கும். அவர்கள் சிரவணக்கத்திற்கு வரும் போது என்னைத் தமது விரலால் தொட்டுணர்த்துவார்கள். உடனே நான் எனது கால்களை மடக்கிக் கொள்வேன். அவர்கள் நிலைக்குச் சென்றுவிட்டால் (மறுபடியும்) நான் கால்களை நீட்டிக் கொள்வேன். அந்த நாட்களில் (எங்கள்) வீடுகளில் விளக்குகள் இல்லை
பாடம் : 105
தொழும் போது குறுக்கே செல்லும் எதுவும், தொழுகையை முறிக்காது எனும் கூற்று.
514 மஸ்ரூக் பின் அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஆயிஷா (ரலி) அவர்களிடம் தொழு கையை முறிப்பவை குறித்துப் பேசப்பட்டது. -நாயும் கழுதையும் பெண்ணும் (தொழுப வருக்கு குறுக்கே செல்வது தொழுகையை முறித்து விடுவன என்று கூறினர்.). அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள், (பெண்களாகிய) எங்களை கழுதைகளுக்கும் நாய்களுக்கும் ஒப்பாக்கிவிட்டீர்களே! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் நபி (ஸல்) அவர்களுக்கும் (அவர்களின்) கிப்லாவுக்குமிடையே கட்டி-ல் படுத்துக் கொண்டிருக்க, நபி (ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருப்பார்கள். அப்போது எனக்கு ஏதேனும் தேவையேற் பட்டால் நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால் அமர்ந்து அவர்களுக்கு இடையூறு செய்யப் பிடிக்காமல் கட்டி-ன் இரு கால்களினூடே நான் நழுவிச் சென்றுவிடுவேன் என்று கூறினார்கள்.
515 முஹம்மத் பின் அப்தில்லாஹ் பின் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் என் தந்தையின் சகோதரர் (முஹம்மது பின் முஸ்லிம் பின் ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ - ரஹ்) அவர்களிடம், எவை (குறுக்கே செல்வது) தொழுகையை முறிக்கும்? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், தொழுகையை எதுவும் முறிக்காது என்று கூறிவிட்டு உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் தெரிவித்ததாக (பின்வருமாறு) கூறினார்கள்:
நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவில் எழுந்து தம் குடும்ப விரிப்பில் தொழுவார்கள். அப்போது நான் அவர்களுக்கும் அவர்களின் கிப்லாவிற்கும் (சிரவணக்கம் செய்யும் இடத்திற்கும்) இடையே குறுக்கு வாட்டில் படுத்துக் கொண்டிருப்பேன்.
பாடம் : 106
தொழும் போது ஒரு சிறுமியை தமது தோளில் தூக்கி ஒருவர் சுமந்தால்...?
516 அபூகத்தாதா (ஹாரிஸ் பின் ரிப்ஈ) அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் புதல்வி ஸைனபுக்கும் - அபுல் ஆஸ் பின் ரபீஆ பின் அப்தி ஷம்ஸ் அவர்களுக்கும் பிறந்த (தம் பேத்தி) உமாமா பின்த் ஸைனபைத் (தமது தோளில்) சுமந்து கொண்டு தொழுதிருக்கிறார்கள். சிரவணக்கம் (சஜ்தா மற்றும் ருகூஉ) செய்யச் செல்லும் போது உமாமாவை இறக்கிவிடுவார்கள்; நிலைக்குச் செல்லும் போது (மீண்டும்) உமாமாவை (தமது தோளில்) தூக்கிக் கொள்வார்கள்.
பாடம் : 107
மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண் படுத்திருக்கும் படுக்கை அருகில் தொழுவதால்...?
517 மைமூனா பின்த் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
எனது படுக்கை விரிப்பு நபி (ஸல்) அவர் களின் தொழுகை விரிப்புடன் பட்டுக் கொண் டிருக்கும். சில சமயம் நான் எனது படுக்கையில் இருக்கும் போது நபி (ஸல்) அவர்களின் ஆடை என் மே(னியி)ல் படுவதுண்டு.
518 மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தொழுது கொண்டி ருக்கும் போது அவர்களுக்கு அருகில் நான் (படுத்து) உறங்கிக் கொண்டிருப்பேன். அவர்கள் சிரவணக்கம் (சஜ்தா) செய்யும் போது அவர்களது ஆடை என் மீது படும். அப்போது நான் மாதவிடாய் ஏற்பட்ட வளாய் இருப்பேன்.
அப்போது நான் மாதவிடாய் ஏற்பட்ட வளாய் இருப்பேன் எனும் குறிப்பு முசத்தத் (ரஹ்) அவர்களின் அறிவிப்பிலேயே அதிகப் படியாக இடம்பெற்றுள்ளது.
பாடம் : 108
ஒருவர் சஜ்தா செய்யும் போது சஜ்தாச் செய்திட (இடம் விடுமாறு சமிக்ஞை செய்ய உறங்கிக் கொண்டிருக்கும்) தம் துணைவி யைத் தொட்டுணர்த்தலாமா?
519 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இரவில்) தொழுது கொண்டிருக்கும் போது நான் அவர்களுக்கும் அவர்களது (சிரவணக்க இடமான) கிப்லாவுக்கும் இடையே சாய்ந்து படுத்திருப்பேன். அவர்கள் சிரவணக்கம் (சஜ்தா) செய்யச் செல்லும் போது எனது கால்களைத் தொட்டு (என்னை) உணர்த்துவார்கள். உடனே நான் எனது கால்களை மடக்கிக் கொள்வேன். இவ்வாறிருக்க (தொழுபவருக்கு குறுக்கே நாயும், கழுதையும் பெண்ணும் செல்வது தொழுகையை முறித்து விடும் என்று கூறுவதன் மூலம் பெண்களாகிய) எங்களை நாயுக்கும் கழுதைக்கும் நீங்கள் சமமாக்கியது தவறாகும். (நாகரீகமற்றதாகும்).
பாடம் : 109
தொழுது கொண்டிருப்பவர் மீது விழுந்துள்ள அசுத்தத்தை ஒரு பெண் அப்புறப்படுத்துவது.
520 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறையில்லம் கஅபா அருகில் நின்று தொழுது கொண்டிருந்தார்கள். அப்போது (அபூஜஹ்ல், உக்பா பின் அபீமுஐத் உள்ளிட்ட) குறைஷிக் குழாம் ஒன்று தங்கள் அவையில் கூடியிருந்தனர். அப்போது அவர்களில் ஒருவன், (பொது இடத்தில் தொழும்) இந்த பகட்டுக்காரரை நீங்கள் பார்க்கவில்லையா? என்று கூறிவிட்டு, இறைச்சிக்காக அறுக்கப்பட்ட இன்ன குடும்பத்தாரின் ஒட்டகத்தை நோக்கிச் சென்று அதன் சாணத்தையும், அதன் இரத்தத்தையும் அதன் கருவைச் சுற்றியுள்ள சவ்வையும் கொண்டுவந்து, முஹம்மத் சிரவணக்கம் செய்யும் நேரம் பார்த்து அவரது முதுகின் மீது அதை வைத்து விட வேண்டும். (யார் இதற்குத் தயார்?) என்று கேட்டான். அங்கிருந்தவர்களிலேயே படு பாதகனாயிருந்த ஒருவன் (அதற்கு) முன்வந்தான்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிரவணக்கம் செய்த போது அவர்களுடைய முதுகின்மீது அ(ந்த அசுத்தத்)தைப் போட்ட னர். நபி (ஸல்) அவர்கள் அப்படியே சிர வணக்கம் செய்தவாறே இருந்தார்கள்.
(இதைப் பார்த்துக் கொண்டிருந்த குறைஷி யர்) ஒருவர்மீது ஒருவர் விழுந்து சிரித்தனர். உடனே ஒருவர் (நபி ளஸல்ன அவர்களின் புதல்வி) ஃபாத்திமா (ரலி) அவர்களை நோக்கிச் சென்றார். -அப்போது ஃபாத்திமா (ரலி) அவர்கள் சிறுமியாக இருந்தார்கள். (செய்தியறிந்த) ஃபாத்திமா (ரலி) அவர்கள் ஓடோடி வந்தார்கள்.
அவர்கள் வந்து அசுத்தங்களை அவர்களை விட்டும் எடுத்தெறியும்வரை நபியவர்கள்அப்படியே சிரவணக்கம் செய்தபடியே இருந்தார்கள். அ(வ்வாறு செய்த)வர்களைப் பார்த்து ஃபாத்திமா (ரலி) அவர்கள் ஏசினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்ததும் (பின்வருமாறு) பிராத்தித்தார்கள்:
இறைவா! குறைஷியரை நீ கவனித்துக் கொள்வாயாக! இறைவா! குறைஷியரை நீ கவனித்துக் கொள்வாயாக! என்று (பொதுவாகக்) கூறிவிட்டு, அல்லாஹ்வே அம்ர் பின் ஹிஷாம் (அபூஜஹ்ல்), உத்பா பின் ரபிஆ, ஷைபா பின் ரபீஆ, வலீத் பின் உத்பா, உமய்யா பின் கலஃப், உக்பா பின் அபீமுஐத், உமாரா பின் அல்வலீத் ஆகியோரை நீ கவனித்துக் கொள்வாயாக! என்று (ஏழு பேரின்) பெயர் குறிப்பிட்டுப் பிராத்தித்தார்கள்.
தொடர்ந்து அப்துல்லாஹ்பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:
அல்லாஹ்வின் மீது சத்தியமாக! (அல்லாஹ்வின் தூதர் ளஸல்ன அவர்கள் எவர்களுக்கெதிராகப் பிராத்தித்தார்களோ ஒருவர் நீங்கலாக) அவர்கள் அனைவரும் பத்ருப்போர் நாளில் (உடல் உப்பி நிறமாறி) உருமாறி மாண்டு கிடந்ததையும் பின்னர் கலீபு பத்ர் எனும் பாழுங் கிணற்றை நோக்கி அவர்களை இழுத்துச் செல்லப்பட்டதையும் நான் பார்த்தேன். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இந்த பாழுங்கிணற்றிலுள்ளோரை (இனியும்) சாபம் தொடரும் என்று கூறினார்கள்

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites