அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

புதன், 16 பிப்ரவரி, 2011

அறிந்துக் கொள்வோம்


கடலில் மூழ்கும் துபாய் தீவுகள்
துபாயில் உள்ள அழகிய தீவுகள் கடலில் மூழ்கி வருகின்றன. எண்ணெய் வளம்மிக்க துபாய் நாடு பல அழகிய தீவுகளால் ஆனது. இந்த தீவுகளில் தான் பிரமாண்டமான நட்சத்திர ஹோட்டல்கள், விடுதிகள், விண்ணை முட்டும் கட்டடங்கள் என உள்ளன. உலக வெப்பமயமாதல் காரணமாக இங்குள்ள கடலின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.
எனவே இஙகுள்ள பல அழகிய தீவுகள் படிப்படியாக மூழ்கி அழிந்து வருகின்றன. தீவுகளில் உள்ள மணல் அதாவது நிலப்பகுதிகள் கொஞ்சம் கொஞ்சமாக கடல் தன்வசம் உள் இழுத்து வருகிறது. இந்த நிலை நீடித்தால் துபாயின் பெரும்பாலான தீவுகள் கடலில் மூழ்கும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தீவுகள் கடலில் மூழ்கி வருவதால் அங்கு தொழில் தொடங்க கோடீஸ்வரர்கள் தயங்குகின்றனர். ஏற்கனவே இங்கு நடத்தி வரும் தொலை நிறுவனங்களில் முதலீடுகளை குறைத்து வருகின்றனர்.
* * * * *
விண்வெளியில் வேற்று கிரக மனிதர்கள் இல்லை நிபுணர்கள்
அமெரிக்காவில் உள்ள ஹார்வேடு பல்கலைக்கழக விண்வெளி விஞ்ஞானி ஹோவர்ட் அமித், வேற்று கிரகவாசிகள் இருப்பதாகவும், அவர்கள் பூமிக்கு வந்து மனிதர்களைத் தாக்கும் சூழ்நிலையை நிலவும், என்றும் கருத்துத் தெரிவித்து இருந்தார்.
இதற்கு விண்வெளி வீரர் ஒருவர் மறுப்புத் தெரிவித்துள்ளார். விண்வெளியில் வேற்று கிரக மனிதர்கள் இல்லை. நாங்கள் மட்டுமே தங்கியிருந்து பரிசோதனை நடத்தி வருகிறோம்.
ஆனால் விண்வெளியில் பூமியைப் போன்று பல கிரகங்கள் உள்ளன. அங்கு மனிதர்கள் வாழ முடியாத சூழ்நிலை உள்ளது என்றார்.
* * * * *
வானத்தில் புதிய சூரியன் தோன்றும்: விஞ்ஞானிகள் தகவல்
வானில் அடிக்கடி அதிசயங்கள் நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில் வானில் மிகவும் சக்தி வாய்ந்த வெளிச்சம் ஏற்பட உள்ளது. பூமி தோன்றியதில் இருந்து இதுவரை அதுபோன்ற நிகழ்வு ஏற்பட்டிருக்காது என்ற நிலை உருவாகும். அந்த வெளிச்சம் இரவை பகல் போன்று ஆக்கும். அது ஒரு வாரம் முதல் 2 வாரங்கள் வரை ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
அதிசக்தி வாய்ந்த விண்மீன் கூட்டம் பூமியில் இருந்து 640 வெளிச்சம் ஆண்டுகள் தூரத்தில் உள்ளது. இவை சிவப்பு நிறத்தில் இராட்சத வடிவிலானவை. இவற்றின் ஆயுட் காலம் முடியும் போது அவை கூட்டம் கூட்டமாக வெடித்துச் சிதறும். இவ்வாறு வெடித்துச் சிதறும் போது வானில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் வெளிச்சம் தோன்றும்.
இது மற்றொரு சூரியன் புதிதாக உதிப்பதை போன்ற தோற்றத்தை உருவாக்கும். இச்சம்பவம் இந்த ஆண்டு இறுதியில் ஏற்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இல்லாவிட்டால் அடுத்த 10 இலட்சம் ஆண்டுக்குள்தான் உண்டாகும். இந்த தகவலை அவுஸ்திரேலியாவின் தெற்கு குவின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறை தலைவர் பேராசிரியர் பிராட்கார்டர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites