அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

10-பாங்கு - A


 அத்தியாயம் : 10
பாடம் : 1
பாங்கின் துவக்கம்.
அல்லாஹ் கூறுகின்றான்:
நீங்கள் தொழுகைக்கு அழைத்தால், அதனை அவர்கள் பரிகாகமாகவும், விளையாட்டாகவும் எடுத்துக்கொள்கிறார்கள்; இதற்குக் காரணம் அவர்கள் அறிவில்லா மக்களாக இருப்பதேயாம். (5:58)
இறைநம்பிக்கை கொண்டவர்களே! ஜுமுஆ உடைய நாளில் தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால் வியாபாரத்தை விட்டுவிட்டு, அல்லாஹ்வைத் தியானிக்க(ப் பள்ளிவாசலுக்கு) விரைந்து செல்லுங்கள். (62:9)
603 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(தொழுகை நேரம் வந்துவிட்டதை அறிவிக் கும் முறை ஒன்று தேவை என முஸ்லிம்கள் கருதிய போது) மக்கள் (அக்னி ஆராதகர்களைப் போன்று) நெருப்பு மூட்டலாம் என்றும், மணியடித்துக் கூப்பிடலாம் என்றும் (ஆலோசனை) கூறினர். (இவையெல்லாம்) யூதர்கள், கிறிஸ்தவர்கள் (ஆகியோரின் போக்காகும்) எனச் சிலர் (மறுப்புக்) கூறினார்கள். அப்போது பிலால் (ரலி) அவர்களுக்கு பாங்கு (அதான்) எனும் தொழுகை அறிவிப்பிற் குரிய வாசகங்களை (கற்றுத் தந்து) அவற்றை இருமுறை கூறும்படியும் இகாமத் (எனும் தொழுகைக்காக நிற்கும் போது சொல்லும்) வாசகங்களை ஒருமுறை மட்டும் சொல்லும் படியும் உத்தரவிடப்பட்டது.
604 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
முஸ்லிம்கள் (மக்காவிலிருந்து) மதீனாவிற்கு வந்த போது ஓரிடத்தில் ஒன்று கூடி தொழுகைக்காக ஒரு நேரத்தை முடிவு செய்வதே வழக்கமாக இருந்தது; அப்போது தொழுகைக்காக பாங்கு சொல்லப்(படும் முறை அறிமுகப்படுத்தப்)படவில்லை. எனவே, இது குறித்து ஒரு நாள் அவர்கள் (கலந்து) பேசினர். அப்போது அவர்களில் சிலர், கிறிஸ்தவர்களின் (ஆலயங்களில் அடிக்கப்படும்) மணியைப் போன்று ஒரு மணியை நிறுவுங்கள் என்று கூறினர். வேறு சிலர், யூதர்களிடமுள்ள கொம்பைப் போன்று ஒரு கொம்பை ஏற்படுத்(தி அதில் ஊதி மக்களைத் தொழுகைக்காக அழைத்)திடுங்கள் என்றனர். அப்போது உமர் (ரலி) அவர்கள், தொழுகைக்காக அழைக்கின்ற ஒரு மனிதரை நீங்கள் அனுப்பக் கூடாதா? என்று கேட்டார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பிலால்! நீங்கள் எழுந்து தொழுகைக்காக அழையுங்கள்! என்று கூறினார்கள்.
பாடம் : 2
பாங்கின் வாசகங்களை இரண்டிரண்டு முறை சொல்லவேண்டும்.
605 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
பிலால் (ரலி) அவர்களுக்கு பாங்கின் வாசகங்களை இரண்டிரண்டு முறை கூறும்படியும் இகாமத்தின் வாசகங்களை கத் காமத்திஸ்ஸலாத்' (தொழுகை ஆரம்பமாகிவிட்டது) எனும் வாசகத்தை தவிர மற்றவற்றை ஒரு முறை மட்டும் சொல்லும் படியும் உத்தரவிடப்பட்டது.
606 அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(மதீனாவில்) மக்களின் எண்ணிக்கை அதிகமான போது அவர்கள் அறிந்திருக்கின்ற ஏதேனும் ஓர் (அறிவிப்பு) முறையில் தொழுகை யின் நேரத்தை அறிவிப்புச் செய்திட (அல்லது அறிந்துகொள்ள) ஆலோசித்தனர். அப்போது, நெருப்பு மூட்டலாம்; அல்லது மணி அடிக்கலாம் என்று (பல்வேறு கருத்துக்களைப்) பேசினர். ஆனால், பாங்கின் வாசகங்களை இரண்டிரண்டு முறை கூறும்படியும் (கத்காமத்திஸ் ஸலாத்' எனும் வாசகத்தை தவிரவுள்ள) இகாமத்தின் (இதர) வாசகங்களை ஒரு முறை மட்டும் சொல்லும் படியும் பிலால் (ரலி) அவர்களுக்கு உத்தரவிடப்பட்டது.
பாடம் : 3
இகாமத்தின் வாசகங்களில் கத்காமத்திஸ் ஸலாத்' என்பதைத் தவிர மற்றவற்றை ஒரு முறை மட்டும் சொல்ல வேண்டும்.
607 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
பிலால் (ரலி) அவர்களுக்கு பாங்கின் வாசகங்களை இரண்டிரண்டு முறை கூறும் படியும் இகாமத்தின் வாசகங்களை ஒரு முறை மட்டும் சொல்லும் படியும் உத்தரவிடப்பட்டது.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) இஸ்மாயில் பின் உலய்யா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
(கா-த் அல்ஹிதாஉ ளரஹ்ன அவர்கள் எமக்கு அறிவித்த) இந்த ஹதீஸை நான் அய்யூப் அஸ்ஸக்தியானீ (ரஹ்) அவர்களிடம் சொன்னேன். அப்போது அவர்கள், கத் காமத்திஸ் ஸலாத்' எனும் வாசகத்தை தவிர என்று (அதிகப்படியாக) அறிவித்தார்கள்.
பாடம் : 4
பாங்கு சொல்வதன் சிறப்பு.
608 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொழுகைக்காக (பாங்கு சொல்லி) அழைக்கப்படும் போது ஷைத்தான் பாங்கு சப்தத்தைக் கேட்கக்கூடாது என்பதற்காக சப்தத்துடன் காற்றை விட்டுக் கொண்டு திரும்பி ஓடுகிறான். பாங்கு சொல்லி முடித்ததும் முன்னே வருகின்றான். தொழுகைக்கு இகாமத் சொல்லப் பட்டால் (மீண்டும்) திரும்பி ஓடுகிறான். இகாமத் சொல்லி முடித்ததும் முன்னே வருகின்றான். (தொழுகையில் ஈடுபட்டுள்ள) மனிதருடைய உள்ளத்தில் ஊடுருவி ஊசலாட்டத்தை ஏற்படுத்தி, இதை நினைத்துப் பார்; அதை நினைத்துப் பார் என்று அவர் அதற்கு முன் நினைத்திராத விஷயங் களை அவருக்கு நினைவூட்டிக் கூறுகின்றான். எந்த அளவிற்கென்றால், அந்த மனிதர் தாம் எத்தனை ரக்அத்கள் தொழுதோம் என்பதை அறியாதவராக மாறிவிடுகிறார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
பாடம் : 5
உரத்த குரலில் பாங்கு சொல்வது.
(மதீனாவின் ஆளுநராயிருந்த) உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள், (பாங்கு சொல்லும் பொறுப்பிலிருந்தவரிடம்), (இராகமிட்டுக் கொண்டிராமல்) குரலெடுத்து பாங்கு சொல்லுங்கள்: அல்லது இப்பொறுப்பிலிருந்து விலகிக்கொள் ளுங்கள் என்று கூறினார்கள்.
609 அபூஸஅஸஆ அப்துர் ரஹ்மான் பின் அப்தில்லாஹ் அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:
என்னிடம் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள், ஆட்டையும் பாலை வனத்தையும் விரும்புகின்றவராக உங்களை நான் காண்கிறேன். எனவே, நீங்கள் ஆட்டை மேய்த்துக் கொண்டோ' அல்லது பாலைவனத்திலோ' இருக்க, (தொழுகை நேரம் வந்து) நீங்கள் தொழுகைக்காக (பாங்கு சொல்லி) அழைப்புக் கொடுப்பீர்களாயின் உங்கள் குரலை உயர்த்தி அழையுங்கள். ஏனெனில், தொழுகைக்காக அழைப்பவரின் குரல் ஒ-க்கும் தொலைவு நெடுகவுள்ள ஜின்களும், மனிதர்களும் பிற பொருள்களும் அதைக்கேட்டு (தொழுகை) அ(ழைப்புக் கொடுத்த)வருக்காக மறுமை நாளில் சாட்சியம் சொல்கின்றன என்று கூறிவிட்டு, இதை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியேற்றேன் என்று சொன்னார்கள்.
பாடம் : 6
பாங்கு சொல்லப்படுவதால் (ஓர் ஊரின் மீது) போர் செய்யலாகாது.
610 அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் எங்களுடன் சேர்ந்து ஒரு கூட்டத்தாரை நோக்கி போரிடப் புறப்பட்டால் வைகறை (சுப்ஹு) நேரம் வரும் வரை எங்களைப் போரில் ஈடுபடுத்த  மாட்டார்கள். (சுப்ஹு நேரம் வந்ததும்) கவனிப்பார்கள். (எதிர் தரப்பிலிருந்து) பாங்குச் சொல்லும் சப்தத்தைச் செவியுற்றால் அவர்களை ஒன்றும் செய்ய மாட்டார்கள்; பாங்கு சொல்லும் சப்தத்தைச் செவியுறாவிட்டால் அவர்கள் மீது தாக்குதல் தொடுப்பார்கள். இந்நிலையில் நாங்கள் கைபரை நோக்கிப் (போருக்காகப்) புறப்பட்டோம். இரவு நேரத்தில் அவர்களிடம் போய்ச் சேர்ந்தோம். அதிகாலையான போது பாங்கு சப்தம் வராததால் (அவர்களை நோக்கி தமது வாகனத்தில்) பயணமானார்கள். நான் அபூ தல்ஹா (ரலி) அவர்களுக்குப் பின்னால் (அவர்களது வாகனத்தில் அமர்ந்து) பயணம் செய்தேன். அப்போது எனது கால் நபி (ஸல்) அவர்களது காலில் உராயும் (அந்த அளவுக்கு நெருக்கமாகச் சென்றோம்). அப்போது யூதர்கள் தம் மண் வெட்டிகளையும் தம் (பேரீச்ச ஓலைகளாலான) கூடைகளையும் எடுத்துக் கொண்டு எங்களை நோக்கி வந்து கொண்டிருந்த னர். நபி (ஸல்) அவர்களை அவர்கள் பார்த்ததும், முஹம்மதும், அல்லாஹ்வின் மீதாணையாக! முஹம்மதும் (அவரது ஐந்து அணிகள் கொண்ட) படையும் (இதோ வருகின்றனர்) என்று கூறினர். அவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பார்த்ததும், அல்லாஹ் மிகப் பெரியவன், அல்லாஹ் மிகப் பெரியவன். கைபர் பாழா(வது உறுதியா)கிவிட்டது. நாம் ஒரு சமுதாயத்தின் களத்தில் (அவர்களுடன் போரிட) இறங்குவோ மாயின் எச்சரிக்கப்பட்ட அவர்களுக்கு அது மிகக் கெட்ட காலையாக அமையும் என்று கூறினார்கள்
பாடம் : 7
பாங்கு சொல்வதைக் கேட்டால் கூற வேண்டியவை.
611 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் பாங்கு சப்தத்தைச் செவியுற்றால் பாங்கு சொல்பவர் கூறுவதைப் போன்றே நீங்களும் சொல்லுங்கள்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
612 ஈசா பின் தல்ஹா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
முஆவியா (ரலி) அவர்கள் ஒரு நாள் (பாங்கு சப்தத்தைச்) செவியுற்றபோது அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்' என்பது வரை பாங்கு சொல்பவர் கூறியது போன்றே சொன்னார்கள்.
மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இதே கருத்தில் அமைந்த ஹதீஸ் வந்துள்ளது.
613 யஹ்யா பின் அபீகஸீர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
எங்கள் சகோதரர்களில் ஒருவர் கூறினார்:
பாங்கு சொல்பவர் ஹய்ய அலஸ் ஸலாஹ்' என்று கூறிய போது, முஆவியா (ரலி) அவர்கள் லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்' (அல்லாஹ்வின் உதவியின்றி பாவங்களிலிருந்து விலக முடியாது; நல்லறங்கள் புரிய ஆற்றல் பெறவியலாது) என்று கூறினார்கள். மேலும், இவ்வாறுதான் உங்கள் நபி (ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டேன் என்றும் கூறினார்கள்.
பாடம் : 8
பாங்கு முடிந்த பின் ஓதவேண்டிய பிரார்த்தனை.
614 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் பாங்கு சப்தத்தைக் கேட்(டு முடிக்)கும் போது அல்லாஹ்ýம்ம ரப்ப ஹாதிஹித் தஅவதித் தாம்மத்தி, வஸ்ஸலாத்தில் காயிமத்தி, ஆத்தி முஹம்மதனில் வசீலத்த, வல்ஃபளீலா. வப்அஸ்ஹு மகாமம் மஹ்மூதனில்லதீ வஅத்தா (இறைவா! இந்த முழுமையான அழைப்பிற்கும், நிலைநிற்கவி ருக்கும் தொழுகைக்கும் அதிபதியே! முஹம்மத் ளஸல்ன அவர்களுக்கு மட்டுமே உரித்தான ளசொர்க்கத்தின்ன உயரிடத்தையும் தனிச் சிறப்பையும் அவர்களுக்குத் தந்தருள்வாயாக! அவர்களுக்கு நீ வாக்களித்துள்ள உயர் அந்தஸ் திற்கு அவர்களை நீ அனுப்புவாயாக) என்று பிரார்த்திக்கிறாரோ, அவருக்கு மறுமை நாளில் என் பரிந்துரை கிடைக்கும்.
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
பாடம் : 9
பாங்கு சொல்வதற்காக (போட்டி நிலவும் போது) சீட்டுக் குலுக்கிப் போடுவது.
பாங்கு (சொல்லும் பொறுப்பு) விஷயத்தில் ஒரு கூட்டத்தார் (தங்களுக்கிடையில்) சர்ச்சை செய்து கொண்டனர். அப்போது அவர்களுக்கிடையே சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் சீட்டுக் குலுக்கி (அவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுக்கலா)னார்கள்.
615 அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
 பாங்கு சொல்வதிலும், (கூட்டுத் தொழுகையில்) முதல் வரிசையிலும் இருக்கும் நன்மையை மக்கள் அறிவார்களாயின் (அதை அடைந்துகொள்ள) சீட்டுக் குலுக்கிப் போடுவதைத் தவிர வேறு வழியில்லாமல் போனால் நிச்சயம் சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள். தொழுகைக்கு அதன் ஆரம்ப வேளையில் விரைந்து செல்வதில் உள்ள நன்மையை மக்கள் அறிவார்களாயின் அதற்கு முந்திக்கொள்வார்கள். இஷாத் தொழுகையிலும். ஃபஜ்ர் தொழுகையிலும் உள்ள நன்மையை மக்கள் அறிவார்களாயின் அதற்குத் (தரையில்) தவழ்ந்தாவது வந்து (சேர்ந்து)விடுவார்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
பாடம் : 10
பாங்கு சொல்பவர் மற்ற பேச்சுக்கள் பேசுவது.
சுலைமான் பின் ஸுரத் ரலி) அவர்கள் பாங்கு சொல்லிக் கொண்டிருக்கும்போதே (இதரப் பேச்சுக்கள்) பேசினார்கள்.
ஹஸன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள், பாங்கு சொல்லிக் கொண்டிருக்கும்போதோ இகாமத் சொல்லிக் கொண்டி ருக்கும்போதோ ஒருவர் சிரிப்பது குற்றமல்ல என்று கூறினார்கள்.
616 அப்துல்லாஹ் பின் ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
சேறும் சகதியும் நிறைந்த (மழை தூறிக் கொண் டிருந்த) ஒரு (ஜுமுஆ) நாளில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் எங்களுக்கு உரையாற்றினார்கள். பாங்கு சொல்பவர் ஹய்ய அலஸ் ஸலாஹ்' (தொழுகைக்கு வாருங்கள்) என்று சொல்லப்போன போது உங்கள் இருப்பிடங்களிலேயே தொழுது கொள்ளுங்கள் (அஸ்ஸலாத் ஃபிர் ரிஹால்) என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கச் சொன்னார்கள். அப்போது அங்கிருந்தவர்கள் சிலர் சிலரை (வியப்புடன்) பார்த்தனர். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், இதோ இ(ந்த பாங்கு சொல்ப)வரை விடவும் சிறந்தவளரான நபி (ஸல்) அவர்கள் ஜுமுஆ கட்டாயமானதாக இருந்தும் கூட இவ்வாறுதான் செய்தார்கள் என்று கூறினார்கள்.
பாடம் : 11
தொழுகையின் நேரத்தை தெரிவிக்கின்ற ஒருவர் (உதவிக்கு) இருந்தால் பார்வையற்ற வரும் பாங்கு சொல்லலாம்.
617 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (ரமளானில்) பிலால், (ஃபஜ்ர் நேரத்திற்கு முன்) இரவிலேயே பாங்கு சொல்வார்கள். எனவே, இப்னு உம்மி மக்தூம் அவர்கள் (ஃபஜ்ருக்கு) பாங்கு சொல்லும் வரை (சஹர் உணவு) உண்ணுங்கள்; பருகுங்கள் என்று கூறினார்கள்:
இப்னு உம்மி மக்தூம் (ரலி) அவர்கள் கண் பார்வையற்றவராக இருந்தார்கள். அவரிடம் சுப்ஹு நேரமாகி விட்டது; சுப்ஹு நேரமாகிவிட்டது என்று சொல்லப்படும் வரை அவர்கள் (ஃபஜ்ருக்காக) பாங்கு சொல்ல  மாட்டார்கள்.
பாடம் : 12
ஃபஜ்ர் நேரம் வந்த பின் பாங்கு சொல்வது.
618 (நபி ளஸல்ன அவர்களின் துணைவியார்) ஹஃப்ஸா (ரலி) அவர்கள் கூறியதாவது:
பாங்கு சொல்பவர் சுப்ஹு(த் தொழுகை)க்காக பாங்கு சொல்லி முடிந்து, வைகறை நேரம் வந்திருக்க, (ஃபஜ்ர்) தொழுகை நிலை நிறுத்தப்படுவதற்கு முன்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுவார்கள்.
619 ள நபி (ஸல்) அவர்களின் துணைவியார்ன ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது :
நபி (ஸல்) அவர்கள் சுப்ஹுத் தொழுகையின் பாங்கிற்கும் இகாமத்திற்கும் இடையில் சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுவார்கள்.
620 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ரமளானில்) பிலால் (ஃபஜ்ர் நேரத்திற்கு முன்) இரவிலேயே பாங்கு சொல்வார்கள். எனவே, இப்னு உம்மி மக்தூம் அவர்கள் (ஃபஜ்ருக்கு) பாங்கு சொல்லாத வரை (சஹர் உணவு)உண்ணுங்கள்; பருகுங்கள்' என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
பாடம் : 13
ஃபஜ்ர் நேரம் வருவதற்கு முன் பாங்கு சொல்வது.
621 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(ரமளானில்) நீங்கள் சஹர் உணவு உண்பதிலிருந்து பிலா-ன் பாங்கு உங்களைத் தடுத்துவிட வேண்டாம். ஏனெனில் அவர் இரவிலேயே பாங்கு சொல்வது' உங்களில் (இரவுத்) தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருப்போர் திரும்பி வருவதற் காகத்தான்; உங்களில் தூங்கிக் கொண்டிருப்போரை உணர்த்துவதற்காகத்தான். ஃபஜ்ர் அல்லது சுப்ஹு நேரம் வந்துவிட்டது என்பதை அறிவிப்பதற்காக அல்ல.
(இதன் அறிவிப்பாளரான) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:
இதைக் கூறும் போது நபி (ஸல்) அவர்கள் தமது விரல்களை மேல்நோக்கி உயர்த்திக் கொண்டு பிறகு கீழ் நோக்கித் தாழ்த்திவிட்டு இவ்வாறு ஃபஜ்ர் தோன்றும் வரை என்று கூறினார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஸுஹைர் (ரஹ்) அவர்கள் இவ்வாறு' என்பதற்கு விளக்கமளிக்கை யில், தம் சுட்டு விரல்களில் ஒன்றை மற்றொன்றோடு (சேர்த்து) வைத்துப் பிறகு அவற்றை(ப் பிரித்து) வலப் பக்கத்திலும் இடப் பக்கத்திலும் நீட்டி (நீளவாட்டில் தோன்றும் அதிகாலை வெளிச்சமே ஃபஜ்ர் ஆகும்; அகலவாட்டில் தோன்றுவதன்று' என்பது போன்று) சைகை செய்தார்கள்.
622 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(ரமளானில்) பிலால் (ஃபஜ்ருக்கு முன்) இரவிலேயே பாங்கு சொல்வார். எனவே, இப்னு உம்மி மக்தூம் (ஃபஜ்ருக்காக) பாங்கு சொல்லும் வரை நீங்கள் (சஹர் உணவு) உண்ணுங்கள்; பருகுங்கள்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.
623 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(ரமளானில்) பிலால் (ஃபஜ்ருக்கு முன்) இரவிலேயே பாங்கு சொல்வார். எனவே இப்னு உம்மி மக்தூம் (ஃபஜ்ருக்காக) பாங்கு சொல்லும் வரை நீங்கள் (சஹர் உணவு) உண்ணுங்கள்; பருகுங்கள்.
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.
பாடம் : 14
பாங்குக்கும் இகாமத்திற்கும் இடையில் எவ்வளவு (நேரம்) இடைவெளி இருக்க வேண்டும் என்பதும், தொழுகைக்காக இகாமத் சொல்லப்படுவதை யார் எதிர் பார்த்துக் காத்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதும்.
624 அப்துல்லாஹ் பின் முஃகஃப்பல் அல்முஸனீ (ரலி) கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (பாங்கு, இகாமத் ஆகிய) இரு தொழுகை அறிவிப்புகள் ஒவ்வொன்றுக்கும் இடையில் ஒரு (கூடுதல்) தொழுகை உண்டு என்று மூன்று முறை கூறிவிட்டு, விரும்பியவர் (அதைத் தொழுது கொள்ளட்டும்) என்று கூறினார்கள்.
625 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
தொழுகை அறிவிப்பாளர் (முஅத்தின்) பாங்கு சொல்லத் தொடங்கி, நபி (ஸல்) அவர்கள் (தொழுகை நடத்த) வருவதற்கு முன்னர் நபித் தோழர்களில் (முக்கிய) சிலர் பள்ளிவாச-ன் தூண்களை நோக்கி (அதை தடுப்பாக ஆக்கி சுன்னத் தொழ) போட்டியிட்டுக் கொண்டு செல்வார்கள். அவர்கள் இவ்வாறே மஃக்ரிப் தொழுகைக்கு முன் இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுவார்கள். பாங்குக்கும் இகாமத்துக்கும் இடையில் (இடைவெளி) ஏதும் இல்லாத நிலையில் (இவ்வாறு தொழுதனர்).
ஷுஅபா பின் ஹஜ்ஜாஜ் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில் (பாங்கு, இகாமத் ஆகிய) அவ்விரண்டுக்கும் இடையில் சிறிதே (இடைவெளி) இருக்கும் நிலையில் என்று இடம் பெற்றுள்ளது.
பாடம் : 15
இகாமத் சொல்வதை எதிர்பார்த்துக் கொண்டிருப்பது.
626 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஃபஜ்ர் நேரம் வந்து, தொழுகை அறிவிப்பாளர் (முஅத்தின்) முதலாம் தொழுகை அறிவிப்பு (பாங்கு) சொல்லி முடித்ததற்கும் ஃபஜ்ர் தொழுகைக்கும் முன்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் (ஃபஜ்ருடைய சுன்னத்) தொழுவார்கள். பின்னர் (இரண்டாம் தொழுகை அறிவிப்பான) இகாமத் சொல்(- தொழுகை நடத்து)வதற்காக தம்மிடம் முஅத்தின் (தம்மைக் கூப்பிட) வரும் வரை வலப் பக்கமாக சாய்ந்து படுத்துக்கொள்வார்கள்.
பாடம் : 16
பாங்கிற்கும் இகாமத்திற்கும் இடையில் ஒரு (கூடுதல்) தொழுகை உண்டு. விரும்பியவர் அதைத் தொழுதுகொள்ளலாம்.
627 அப்துல்லாஹ் பின் முஃகஃப்பல் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், (பாங்கு, இகாமத் ஆகிய) இரு தொழுகை அறிவிப்புகள் ஒவ்வொன்றுக்கும் இடையில் ஒரு (கூடுதல்) தொழுகை உண்டு. இரு தொழுகை அறிவிப்புகள் ஒவ்வொன்றுக்கும் இடையில் ஒரு (கூடுதல்) தொழுகை உண்டு என்று (இரண்டுமுறை) கூறிவிட்டு, மூன்றாம் முறை விரும்பியவர் (அதைத்) தொழலாம் என்றார்கள்.
பாடம் 17
பயணத்தில் ஒரேயொருவர் மட்டுமே பாங்கு சொல்ல வேண்டும்.
628 மா-க் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் எங்கள் (பனூ லைஸ்) கூட்டத்தார் சிலருடன் (தபூக் போர் ஆயத்தம் நடந்து கொண்டி ருக்கையில்) நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன். நாங்கள் அவர்களிடம் இருபது நாட்கள் தங்கி னோம். -நபி (ஸல்) அவர்கள் இரக்க குணமுடைய வர்களாகவும், நல்ல நண்பராகவும் இருந்தார்கள்.- (பிறகு) எங்கள் குடும்பத்தாரிடம் நாங்கள் (திரும்பிச் செல்ல) ஆசைப்படுவதைக் கண்ட போது நபியவர்கள், நீங்கள் (உங்கள் குடும்பத்தாரிடம்) திரும்பிச் சென்று அவர்களிடையே (தங்கி) இருங்கள்; அவர்களுக்கு கல்வி கற்றுக் கொடுங்கள்; (என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே) நீங்கள் தொழுங்கள்; தொழுகை நேரம் வந்ததும் உங்களுக்காக உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டும்; உங்களில் (வயதில்) பெரியவர் தலைமை தாங்கித் தொழுவிக்கட்டும் என்று கூறினார்கள்.
பாடம் : 18
பயணிகள் கூட்டமாகச் செல்லும் போதும் (ஹஜ்ஜின்போது) அரஃபா முஸ்த-ஃபாவில் இருக்கும் போதும் பாங்கு, இகாமத் ஆகிய இரண்டையும் சொல்வதும், தொழுகை அறிவிப்பாளர் (முஅத்தின்) குளிரான இரவுகளிலும் மழை பெய்யும் நேரங்களிலும் உங்கள் இருப்பிடங் களிலேயே தொழுதுகொள்ளுங்கள் (அஸ்ஸலாத் ஃபிர் ரிஹால்') என்று அறிவிப்புச் செய்வதும்.
629 அபூதர் (ஜுன்துப் பின் ஜுனாதா) அல்ஃகிஃபாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்து கொண்டிருந்தோம். தொழுகை அறிவிப்பாளர் (பிலால் ளரலின அவர்கள் லுஹ்ர் தொழுகைக்கு) பாங்கு சொல்ல முற்பட்ட போது அவர்களிடம், நபி (ஸல்) அவர்கள் (சற்று) பொறுங்கள் என்று கூறினார்கள். சிறிது நேரத்திற்குப் பிறகு மீண்டும் அவர்கள் பாங்கு சொல்ல முற்பட்டார்கள். அப்போதும் அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள், (சற்று) பொறுங்கள் என்று கூறினார்கள். பிறகு (மூன்றாவது முறையாக) அவர்கள் பாங்கு சொல்ல முற்பட்ட போது அவர்களிடம் (சற்று) பொறுங்கள் என்று கூறினார்கள். (எனவே, நாங்கள் வெப்பம் தணியும் வரை அந்த நாளின் லுஹ்ர் தொழுகையை பிற்படுத்தினோம்.) எந்த அளவிற்கென்றால் மேடுகளின் நிழல் அதே அளவிற்குச் சமமாக விழுந்தது. அப்போது நபி (ஸல்) அவர்கள், கடுமையான வெப்பம் நரக நெருப்பின் பெரு மூச்சின் காரணமாகவே உண்டாகிறது என்று சொன்னார்கள்
630 மா-க் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
பயணம் புறப்படவிருந்த இருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், நீங்கள் பயணம் புறப்பட்டுச் செல்லும் போது (தொழுகை நேரம் வந்துவிட்டால்), தொழுகைக்காக பாங்கு சொல்லிப் பின்னர் இகாமத்தும் சொல்லுங்கள். பின்னர் உங்களில் (வயதில்) பெரியவர் உங்களுக்கு தலைமை தாங்கித் தொழுவிக்கட்டும்! என்று சொன்னார்கள்
631 மா-க் பின் ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
சம (வயதுடைய) இளைஞர்களான நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்று அவர்களிடம் இருபது நாட்கள் தங்கினோம். - அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரக்க குணமுடையவர் களாகவும் நல்ல நண்பராகவும் இருந்தார்கள். - (பிறகு) நாங்கள் எங்கள் குடும்பத்தாரிடம் (திரும்பிச் செல்ல) ஆசைப்படுவதை அறிந்த நபி (ஸல்) அவர்கள், (ஊரில்) நாங்கள் விட்டு வந்த (எங்கள் குடும்பத்)தவர்களைப் பற்றி எங்களிடம் விசாரித்தார்கள். நாங்கள் அவர்களைப் பற்றித் தெரிவித்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள், நீங்கள் உங்கள் குடும்பத்தாரிடம் திரும்பிச் சென்று, அவர்களிடையே தங்கியிருங்கள். அவர்களுக்கு கல்வி கற்றுக் கொடுங்கள். (கடமையானவற்றைச் செய்யுமாறு) அவர்களைப் பணித்திடுங்கள். என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள். தொழுகை (நேரம்) வந்துவிட்டால் உங்களுக்காக உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டு:ம. உங்களில் (வயதில்) பெரியவர் உங்களுக்கு தலைமை தாங்கித் தொழுவிக்கட்டும் என்று கூறினார்கள். இன்னும் பலவற்றைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். அவற்றை நான் மனனமிட்டேன்' அல்லது அவை என் நினைவிலில்லை'.
632 நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு உமர் (ரலி) அவர்கள் (மக்காவை அடுத்துள்ள) ளஜ்னான்' எனும் இடத்தில் குளிரான ஓர் இரவில் பாங்கு சொன்னார்கள். பிறகு உங்கள் இருப்பிடங்களிலேயே தொழுதுகொள்ளுங்கள் (ஸல்லூ ஃபீ
ரிஹா-க்கும்') என்று அறிவித்தார்கள். மேலும், பயணத்தின் போது குளிரான இரவிலோ அல்லது மழை பெய்யும் நேரத்திலோ தொழுகை அறிவிப்பாளர் பாங்கு சொல்லும் போது பாங்கின் இறுதியில் உங்கள் இருப்பிடங் களிலேயே தொழுதுகொள்ளுங்கள் (அலா! ஸல்லூ ஃபீ ரிஹா-க்கும்) என்று அறிவிக்குமாறும் தொழுகை அறிவிப்பாளரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பணிப்பார்கள் எனவும் இப்னு உமர் (ரலி) அவர்கள் எங்களிடம் தெரிவித்தார்கள்.
633 அபூஜுஹைஃபா வஹ்ப் பின் அப்தில்லாஹ் அஸ்ஸுவாயீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நான் (புற நகர் மக்காவிலுள்ள) அப்தஹ்' எனுமிடத்தில் கண்டேன். (அங்கு இருந்த போது தொழுகை நேரம் வந்தது.) அப்போது பிலால் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து தொழுகை (நேரம் வந்து விட்டது) பற்றித் தெரிவித்தார்கள். பிறகு பிலால் (ரலி) அவர்கள் (இரும்புப் பூண் போட்ட) கைத்தடியுடன் வந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்னால் அப்தஹ் எனும் அந்த இடத்தில் (தடுப்பாக) நட்டு வைத்துவிட்டு தொழுகைக்காக இகாமத்' சொன்னார்கள்.
பாடம் : 19
தொழுகை அறிவிப்பாளர் (முஅத்தின்) பாங்கு சொல்லும் போது தமது வாயை இங்குமங்கு மாக (வலம் இடமாக) திருப்பவேண்டுமா? அவர் பாங்கு சொல்லும் போது (ஹய்ய அலஸ் ஸலாஹ், ஹய்ய அலல் ஃபலாஹ்' என்று கூறுகையில் வலப் பக்கமும் இடப் பக்கமும் தலையைத்) திருப்பவேண்டுமா?
பாங்கு சொல்லும் போது பிலால் (ரலி) அவர்கள் தம் (சுட்டு) விரல்களின் நுனிகளை காதுக்குள் வைத்துக் கொண்டதாக அறிவிக்கப்படுகிறது.
இப்னு உமர் (ரலி) அவர்கள் தொழுகை பாங்கு சொல்லும் போது தம்மிரு (சுட்டு)விரல் நுனிகளை காதுகளில் வைக்க மாட்டார்கள்.
இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள், அங்கசுத்தி (உளூ) இல்லாமல் பாங்கு சொல்வதில் தவறில்லை எனக் கூறினார்கள்.
அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள், (பாங்கு சொல்வதற்காக) அங்கசுத்தி (உளூ) செய்வது (மார்க்கத் தில்) உள்ளது தான் ; நபிவழியே என்று கூறியுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் எல்லா நிலைகளிலும் (உளூவுடனும் உளூ இல்லாமலும்) அல்லாஹ்வை நினைவு கூர்பவர்களாக இருந்தார்கள் என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
634 அபூஜுஹைஃபா வஹ்ப் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
பிலால் (ரலி) அவர்கள் பாங்கு சொல்லும் போது (இரு திக்கிலுள்ள மக்களுக்கும் கேட்பதற்காக) தம் வாயை இங்குமங்கும் (வலம் இடமாகத்) திருப்பிக் கொண்டிருப்பதைக் கண்டேன்.
பாடம் : 20
எங்களுக்குத் தொழுகை தவறிவிட்டது என்று கூறலாமா?
இவ்வாறு கூறுவதை முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் வெறுப்பிற்குரியதாகக் கருதினார்கள். மாறாக அவர், (தொழுகையை) நாங்கள் அடைந்துகொள்ளவில்லை' என்று கூறலாம் என்றார்கள்.
(பின்வரும் ஹதீஸில் தவறிப்போனதை' என்று நபி ளஸல்ன அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே, முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்களுடைய கருத்தைவிட) நபி (ஸல்) அவர்களின் சொல்லே சரியானதாகும்.
635 அபூகத்தாதா (ஹாரிஸ் பின் ரிப்ஈ-ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருந்தோம். அப்போது சிலர் (தொழுகையில் வந்து சேர அவசரமாக வந்ததால் உண்டான) சந்தடிச் சப்தத்தைத் செவியுற்றார்கள். தொழுது முடிந்ததும், உங்களுக்கு என்ன ஆயிற்று (ஏன் சந்தடி எழுந்தது)? என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், தொழுகையில் வந்து சேர்வதற்காக நாங்கள் விரைந்து வந்தோம் (அதனால் சலசலப்பு )ஏற்பட்டது) என்று பதிலளித்தனர். அதற்கு
நபி (ஸல்) அவர்கள், இவ்வாறு செய்யாதீர்கள் தொழுகைக்கு வரும் போது நிதானத்தைக் கடைப் பிடியுங்கள். (இமாமுடன்) கிடைத்த (ரக்அத்)தைத் தொழுங்கள். உங்களுக்குத் தவறிப்போன (ரக்அத்)தை (தொழுகை முடிந்ததும் எழுந்து) பூர்த்தி செய்யுங்கள் என்று கூறினார்கள்.
பாடம் : 21
தொழுகையில் போய்ச் சேர அவசர அவசர மாகச் செல்ல வேண்டாம். நிதானமாகவும் கண்ணியமான முறையிலும் செல்ல வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள், (இமாமுடன்) உங்களுக் குக் கிடைத்த (ரக்அத்)தைத் தொழுங்கள். தவறிப் போன (ரக்அத்)தைப் (பின்னர்) பூர்த்தி செய்யுங்கள் என்று கூறினார்கள்.
இதை நபி (ஸல்) அவர்களிடமிருந்து அபூகத்தாதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
636 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(கூட்டுத் தொழுகைக்காக) இகாமத் சொல்வதைச் செவியுற்றால் தொழுகைக்கு நடந்து செல்லுங்கள். அப்போது நிதானத்தையும் கண்ணியத்தையும் கடைப்பிடியுங்கள். அவசரப்பட்டு ஓடிச் செல்லாதீர்கள். (இமாமுடன்) உங்களுக்குக் கிடைத்த (ரக்அத்)தைத் தொழுங்கள்; உங்களுக்குத் தவறிப் போனதை (பின்னர்) பூர்த்தி செய்யுங்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.
பாடம் : 22
(தொழுகைக்கு) இகாமத் சொல்லப்படும் போது இமாம் வருவதைக் கண்டால் மக்கள் (உடனே எழுந்து விடவேண்டுமா?) எப்போது எழ வேண்டும்?
637 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டுவிட்டால் (உடனே எழுந்துவிடாதீர்கள்.) என்னை நீங்கள் பார்க்காத வரை எழ வேண்டாம்.
இதை அபூகத்தாதா (ரலி) அவர்களிடமிருந்து அப்துல்லாஹ் பின் அபீகத்தாதா (ரஹ்) அவர்கள் அறிவித்ததாக யஹ்யா பின் அபீகஸீர் (ரஹ்) அவர்கள் எனக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்கள் என ஹிஷாம் அத்துஸ்துவாயி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
பாடம் : 23
தொழுகைக்கு அவசரப்பட்டு விரைந்து செல்லலாகாது. நிதானமாகவும் கண்ணிய மான முறையிலும் எழுந்து செல்ல வேண்டும்.
638 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டுவிட்டால் (உடனே எழுந்துவிடாதீர்கள்) என்னை நீங்கள் பார்க்காத வரை எழ(வோ செல்லவோ) வேண்டாம். நிதானத்தைக் கடைப்பிடியுங்கள்.
இதை அபூகத்தாதா (ரலி) அவர்கள் அறிவிக்கி றார்கள்.
மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.
பாடம் : 24
(இகாமத் சொன்ன பிறகு) ஏதாவது காரணத் திற்காகப் பள்ளியிலிருந்து வெளியே செல்லலாமா?
639 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டு, தொழுகை வரிசைகள் சீர் செய்யப்பட்டு விட்டபின் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் இல்லத்திலிருந்து) புறப்பட்டு வந்தார்கள். அவர்கள் தம் தொழுமிடத்தில் (போய்) நின்றதும் அவர்கள் தொழுகைத் தக்பீர்' சொல்வார்கள் என நாங்கள் எதிர் பார்த்தோம். ஆனால் (தாம் பெருந்துடக்கிற்காக கடமையான குளியலை நிறைவேற்றாதது நினைவுக்கு வரவே) அப்படியே இருங்கள் என்று கூறிவிட்டுத் திரும்பி (தம் இல்லத்திற்குச்) சென்றார்கள். ஆகவே, அவர்கள் நீராடிவிட்டுத் தலையில் நீர் சொட்ட எங்களிடம் வரும் வரை நாங்கள் (அவர்களை) எதிர்பார்த்தபடி அப்படியே நின்று கொண்டிருந்தோம்.
பாடம் : 25
(இகாமத் சொல்லப்பட்ட பின்) இமாம், நான் திரும்பி வரும்வரை அப்படியே இருங்கள் என்று (மக்களிடம்) சொல்லிவிட்டுச் சென்றால் (அவர் வரும் வரை) அவரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கவேண்டும்.
640 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டது. மக்கள் தம் தொழுகை வரிசைகளை சீர் செய்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (தொழுவிப்பதற்காக) முன்னே நின்றார்கள். அப்போது அவர்கள் பெருந்துடக்குடனிருந்தார்கள். (நினைவில்லாமல் நின்று விட்டதால்) அப்படியே இருங்கள்! என்று (மக்களிடம்) கூறிவிட்டு (தம் இல்லத்திற்குத்)திரும்பிச் சென்று நீராடினார்கள். பிறகு தம் தலையிலிருந்து நீர் சொட்டிக் கொண்டிருக்க(த் திரும்பி) வந்து மக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள்.
பாடம் : 26
ஒருவர் நாம் தொழவில்லை' என்று சொல்லலாம்.
641 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அகழ்ப் போரின் போது உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! சூரியன் மறையும் நேரம் நெருங்கும் வரை என்னால் (அஸ்ர் தொழுகையைத்) தொழ முடியாமற் போய்விட்டது என்று கூறினார்கள். அ(வ்வாறு உமர் (ரலி) அவர்கள் கூறிய)து, நோன்பாளி நோன்புதுறக்கும் நேரத்திற்குப் பிறகேயாகும் அதற்கு நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் மீதாணையாக! நானும் அதைத் தொழ (முடிய)வில்லை என்று கூறினார்கள். எனவே, நபி (ஸல்) அவர்கள் புத்ஹான்' எனும் பள்ளத்தாக்கில் இறங்கினார்கள். அப்போது நானும் அவர்களுடன் இருந்தேன் (அங்கு) அங்கசுத்தி (உளூ) செய்து சூரியன் மறைந்த பின் அஸ்ர் தொழுகையைத் தொழுதார்கள். பின்னர் மஃக்ரிப் தொழுகையைத் தொழுதார்கள்
பாடம் : 27
இகாமத் சொன்ன பின் இமாமுக்கு ஏதாவது தேவை ஏற்படுவது.
642 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள் இஷாத்) தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டது. (ஆனால்,) நபி (ஸல்) அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாச-ன் ஒரு பகுதியில் ஒரு மனிதரிடம் தனியாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். (எவ்வளவு நேரம் அவர்கள் தொழுகையை பிற்படுத்தினார்களெனில்) மக்கள் உறங்கிவிடும் வரை அவர்கள் தொழுகைக்கு (வந்து) நிற்கவில்லை.
பாடம் : 28
தொழுகைக்கு இகாமத் சொன்ன பின் பேசுவது.
643 ஹுமைத் அத்தவீல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஸாபித் அல் புனானீ (ரஹ்) அவர்களிடம், தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டபின் பேசிக் கொண்டிருப்பது பற்றிக் கேட்டேன் அதற்கு அவர்கள் அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாக (பின்வருமாறு) கூறினார்கள்:
தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்ட பின் ஒரு மனிதர்* நபி (ஸல்) அவர்களிடம் வந்து அவர்களை (தொழுவிக்கவிடாமல்) இடைமறித்(துப் பேசிக் கொண்டிருந்)தார். தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டு விட்ட பின்னர் (இது நடந்தது).
பாடம் : 29
கூட்டுத் தொழுகை (ஜமாஅத்தாகத் தொழுவது) கடமையானதாகும்.
ஒரு தாய் (தன் மகன் மீதுள்ள) பாசம் காரணமாக இஷாத் தொழுகையின் ஜமாஅத்திற்கு செல்ல வேண்டாமென அவனைத் தடுத்தால் அதற்கு மகன் கட்டுப்படலாகாது என ஹஸன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
644 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! நான் (சுள்ளிகளாக உடைக்கப் படும்) விறகுகளைக் கொண்டுவர உத்தரவிட்டு விட்டு, (கூட்டுத்) தொழுகையை நடத்துமாறு பணித்து, அதற்கு அழைப்புக் கொடுக்கப்பட, ஒரு மனிதரை மக்களுக்குத் தொழுகை நடத்துமாறு கட்டளையிட்டு பின்னர் (தொழுகைக்கு வராத) சில மனிதர்களை நோக்கிச் சென்று அவர்களுடைய வீடுகளை எரித்துவிட வேண்டும் என்று முடிவு செய்தேன். என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! அவர்களில் ஒருவருக்கு சதைத் திரட்சியுள்ள ஓர் எலும்போ அல்லது ஆட்டின் இரு குளம்புகளுக்கிடையிலுள்ள நல்ல இறைச்சித்துண்டுகளோ கிடைத்தாலும் கூட அவர் இஷாத் தொழுகையில் கட்டாயம் கலந்துகொள்வார்.
இதை அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
பாடம் : 30
கூட்டுத் தொழுகையின் சிறப்பு.
அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் (தமது பள்ளிவாசலில்) கூட்டுத் தொழுகை (ஜமாஅத்) தவறிவிடும் போது வேறொரு பள்ளிவாசலுக்கு (கூட்டுத் தொழுகையில் சேரச்) சென்றுவிடுவார்கள்.
அனஸ் (ரலி) அவர்கள் ஒரு பள்ளி வாசலுக்கு வந்தார்கள். அங்கு தொழுகை (நடந்து) முடிந்து விட்டிருந்தது. ஆகவே பாங்கும், இகாமத்தும் சொல்லி ஜமாஅத்துடன் தொழுகையை நிறைவேற்றினார்கள்.
645 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தனியாகத் தொழுவதைவிட கூட்டாக (ஜமாஅ)த்தாகத் தொழுவது இருபத்தேழு மடங்கு சிறந்ததாகும்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
646 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தனியாகத் தொழுவதைவிட கூட்டாக (ஜமாஅ)த்தாகத் தொழுவது இருபத்தைந்து மடங்கு சிறந்ததாகும்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
647 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் தமது வீட்டில் அல்லது கடைத் தெருவில் தொழுவதைவிட கூட்டாக (ஜமாஅ)த்தில் தொழுவது இருபத்தி ஐந்து மடங்கு (சிறப்பு) கூடுதலாக்கப்படுகிறது. அதற்குக் காரணம், ஒருவர் அங்கசுத்தி (உளூ) செய்து, அந்த அங்க சுத்தியை செம்மையாகச் செய்து, பின்னர் தொழுவதற்காகவே புறப்பட்டு பள்ளி வாசலை நோக்கிச் செல்வாரானால் அவர் ஒவ்வோர் எட்டு எடுத்துவைக்கும் போதும் அதற்காக அவருக்கு அல்லாஹ் ஓர் அந்தஸ்தை உயர்த்துகிறான். அதற்காக அவரது பாவமொன்றை அவன் மன்னிக்கிறான். அவர் தொழுதால் வானவர்கள் அவருக்காக அவர் தாம் தொழுத இடத்தில் இருக்கும் வரை (அருள் வேண்டி) பிராத்தித்துக் கொண்டேயிருக்கின்றனர்:
இறைவா! இவர் மீது அருள் புரிவாயாக! இறைவா! இவர் மீது இரக்கங் காட்டுவாயாக என்று கூறுவார்கள்.
உங்களில் ஒருவர் தொழுகையை எதிர்பார்த் துக் காத்துக் கொண்டிருக்கும் வரை தொழுகையில் இருப்பதாகவே கருதப்படுகிறார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
பாடம் : 31
ஃபஜ்ர் தொழுகையை (ஜமாஅத்துடன்) கூட்டாகத் தொழுவதன் சிறப்பு
648 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தனியாகத் தொழுவதைவிட (ஜமாஅத்துடன்) கூட்டாகத் தொழுவது இருபத்தைந்து மடங்கு அதிகச் சிறப்புடையதாகும். ஃபஜ்ர் தொழுகையில் இரவு நேரத்து வானவர்களும், பகல் நேரத்து வானவர்களும் ஒன்று சேர்கிறார்கள்.
இதை அறிவித்த அபூஹுரைரா (ரலி) அவர்கள், நீங்கள் விரும்பினால் அதிகாலையில் ஓதுவது (வானவர் களால்) சாட்சியம் சொல்லப்படக் கூடியதாகும் எனும் (17:78ஆவது) இறைவசனத்தை ஓதிக்கொள்ளுங்கள் என்றார்கள்.
649 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அ(வ்வாறு தனியாகத் தொழுவ)தைவிட (கூட்டாகத்தொழுவது,) இருபத்தேழு மடங்கு அதிகச் சிறப்புடையதாகும் (என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்).
650 உம்முத் தர்தா (ஹஜீமா-ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபுத் தர்தா (ரலி) அவர்கள் என்னிடம் கோபமாக வந்தார்கள். அப்போது நான், தங்களுடைய கோபத்திற்குக் காரணம் என்ன? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், அல்லாஹ்வின் மீதாணையாக! முஹம்மத் (ஸல்) அவர்களின் சமுதாயத்தில் (வர வர நபியவர்களின் வழிமுறைகளில்) எதையுமே என்னால் (முன்புபோல்) பார்க்க முடியவில்லை. ஆனால் (ஐவேளைத் தொழுகைகளையும்) கூட்டாகத் தொழுகிறார்கள் என்று கூறினார்கள்
651 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மக்களில் தொழுகையால் அதிக நற்பலன் அடைபவர் வெகு தொலைவிலிருந்து (பள்ளியை நோக்கி) வருபவராவார். அடுத்து அதற்கடுத்த தொலை தூரத்திலிருந்து வருபவராவார். யார் (கூட்டுத்) தொழுகையை இமாமுடன் தொழக் காத்துக் கொண்டிருக்கிறாரோ அவரே (தனியாகத்) தொழுது விட்டு உறங்கிவிடுபவரை அதிக நற்பலன் அடைபவர் ஆவார்.
இதை அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
பாடம் : 32
லுஹ்ர் (உள்ளிட்ட) தொழுகையை ஆரம்ப நேரத்திலேயே (சென்று) நிறைவேற்றுவது.
652 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மனிதர் ஒரு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது பாதையில் முட்கிளையொன்றைக் கண்(டு அதை எடுத்து அப்புறப்படுத்திவிட்)டார். அ(தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த)து, அவரைத் (தொழுகையை ஆரம்ப நேரத்தில் தொழவிடாமல்) தாமதப் படுத்திவிட்டது. அவரது இந்த நற்செயலை அல்லாஹ் அங்கீகரித்து அவருக்கு (அவர் செய்த பாவங்கலிருந்து) மன்னிப்பு வழங்கினான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
653 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உயிர்த் தியாகிகள் ஐந்து பேர்கள் ஆவர்:
1) பெரு நோயினால் இறந்தவர். 2) வயிற்று(ப் போக்கு போன்ற) வியாதியால் இறந்தவர். 3) தண்ணீரில் மூழ்கி இறந்தவர். 4) (வீடு, கட்டடம் உள்ளிட்டவை இடிந்து விழும் போது) இடிபாட்டில் சிக்கி இறந்தவர்.
5) அல்லாஹ்வின் பாதையில் (அறப்போரில் ஈடுபட்டு) இறந்தவர்.
தொழுகை அறிவிப்பு (பாங்கு) சொல்வதிலும், (கூட்டுத் தொழுகையின்) முதல் வரிசையிலும் உள்ள சிறப்பை மக்கள் அறிந்து, பிறகு சீட்டுக் குலுக்கிப் போட்டுத்தான் (இவற்றை) அடைந்து கொள்ள முடியுமெனும் நிலை (போட்டி) ஏற்பட்டால் சீட்டுக் குலுக்கிடத் தயங்க  மாட்டார்கள்
654 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(தொழுகையை) ஆரம்ப நேரத்தில் தொழுவதன் சிறப்பை மக்கள் அறிவார்களானால் அதற்காக விரைந்து செல்வார்கள். இஷாத் தொழுகையிலும் சுப்ஹுத் தொழுகையிலும் உள்ள சிறப்பை அவர்கள் அறிவார்களானால் தவழ்ந்தேனும் (கூட்டுத்) தொழுகைக்கு வந்து சேர்ந்துவிடுவார்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
பாடம் : 33
(கூட்டுத் தொழுகை முதலிய நற்செயல்கள் புரிவதற்காக எடுத்து வைக்கும்) கால் எட்டுகளின் அளவுக்கு நன்மையை எதிர் பார்க்கலாம்.
655 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(பனூ ச-மா குலத்தார் மஸ்ஜிதுந் நபவீ பள்ளி வாசலுக்கு அருகிலேயே குடியேறத் திட்டமிட்ட போது) நபி (ஸல்) அவர்கள், பனூ ச-மா குலத்தினரே! உங்கள் கால் எட்டுகளின் அளவுக்கு நீங்கள் நன்மையை எதிர்பார்க்கலாமே! என்று கூறினார்கள்.
முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகின் றார்கள்:
(36:12ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஆஸாரஹும்' எனும் சொற்றொடருக்கு அவர் களுடைய கால் எட்டுகள்' என்று பொருள்.
656 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
பனூ ச-மா குலத்தார் (மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலுக்குத் தொலைவிலிருந்த) தங்கள் குடியிருப்புகளை இடமாற்றம் செய்து நபி (ஸல்) அவர்களுக்கு அருகிலேயே குடியேற விரும்பினர். மதீனா(வின் இதர பகுதிகள்) கா-யாவதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெறுத்தார்கள். எனவே, (பனூ ச-மா குலத்தினரே!) உங்கள் கால் எட்டுகளின் அளவுக்கு நீங்கள் நன்மையை எதிர் பார்க்கலாமா! என்று கூறினார்கள்.
முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
(36:12ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள)அவர்களுடைய கால் எட்டுகள்' என்பது அவர்கள் கால்நடையாக நடந்துவருவதால் ஏற்படும் காலடிச் சுவடுகளைக் குறிக்கும்.
பாடம் : 34
இஷாத் தொழுகையை கூட்டாக (ஜமாஅத்துடன்) தொழுவதன் சிறப்பு.
657 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஃபஜ்ர், இஷா ஆகியத் தொழுகைகளைவிட நயவஞ்சகர்களுக்கு மிகவும் சுமையான தொழுகை வேறேதும் இல்லை. அவ்விரு தொழுகைகளிலுமுள்ள சிறப்பை அவர்கள் அறிவார்களானால் தவழ்ந்தாவது அத்தொழுகைகளுக்கு அவர்கள் வந்து சேர்ந்துவிடுவார்கள். தொழுகை அறிவிப்பாளரிடம் (பாங்கு மற்றும்) இகாமத் சொல்லுமாறு கட்டளையிட்டுப் பின்னர் ஒருவரிடம் மக்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக்)குமாறு பணித்துவிட்டு, பிறகு தீப்பந்தத்தை எடுத்துக் கொண்டு, இன்னும், தொழுகைக்கு புறப்பட்டு வராமலிருப்பவரை (நோக்கிச் சென்று, அவரை) எரித்துவிட முடிவு செய்தேன்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
பாடம் : 35
இரண்டு பேரும் அதற்கு மேற்பட்டோரும் ஜமாஅத்' ஆவர்.
658 மா-க் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(பயணம் புறப்படவிருந்த இருவரிடம்) நபி (ஸல்) அவர்கள், தொழுகை நேரம் வந்துவிட்டால் தொழுகைஅறிவிப்பு (பாங்கு,) இகாமத் சொல்லுங்கள். உங்களில் (வயதில்) பெரியவர் உங்களுக்கு தலைமை தாங்கித் தொழுவிக்கட்டும் என்று சொன்னார்கள்
பாடம் : 36
தொழுகையை எதிர்பார்த்துப் பள்ளிவாசலில் உட்கார்ந்திருப்பதும், பள்ளி வாசல்களின் சிறப்பும்.
659 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தாம் தொழுத இடத்தில் (கூட்டுத் தொழுகையை எதிர்பார்த்து) இருக்கும் வரை அவருக்காக வானவர்கள் பிராத்தித்துக் கொண்டிருக்கிறார்கள். அவருக்கு சிறுதுடக்கு ஏற்படாதவரை (பிராத்திக்கிறார்கள்). இறைவா! இவருக்கு மன்னிப்பளிப்பாயாக! இறைவா! இவருக்கு கருணைபுரிவாயாக! என்று கூறுகின்றனர்.
தொழுகையானது, ஒருவரைத் தம் குடும்பத்தாரிடம் செல்லவிடாமல் தடுத்து நிறுத்தியிருக்குமானால் அவ்வாறு அவரைத் தொழுகை நிறுத்தியிருக்கும் வரை அவர் தொழுகையில் இருப்பதாகவே கருதப்படுவார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
660 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் தனது (அரியணையின்) நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத (மறுமை) நாளில் ஏழு பேருக்கு நிழல் (-அடைக்கலம்) அளிப்பான்:
1. நீதி மிக்க ஆட்சியாளர்.
2. இறை வணக்கத்திலேயே வளர்ந்த இளைஞன்.
3. பள்ளிவாசல்களுடன் (எப்போதும்) தொடர்பு வைத்துக்கொள்ளும் இதயமுடையவர்.
4. அல்லாஹ்வுக்காகவே நட்புக் கொண்டு அந்த நிலையிலேயே (இவ்வுலகிலிருந்து) பிரிந்து சென்ற இருவர்.
5. அந்தஸ்தும் அழகும் உள்ள ஒரு பெண் தம்மை தவறு செய்ய அழைத்த போதும் நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன் என்று கூறியவர்.
6. தமது வலக் கரம் செய்த தர்மத்தை இடக் கரம்கூட அறியாத வகையில் இரகசியமாக தர்மம் செய்தவர்.
7. தனிமையில் அல்லாஹ்வை நினைவு கூர்ந்து (அவனது அச்சத்தால்) கண்ணீர் வடித்தவர்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
661 ஹுமைத் அத்தவீல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அனஸ் (ரலி) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மோதிரம் எதையும் அணிந்திருக்கிறார்காள? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ஆம்; நபி (ஸல்) அவர்கள் ஓர் இரவில் இஷாத் தொழுகையை பாதி, இரவு வரை பிற்படுத்தினார்கள். பிறகு அவர்கள் வந்து (எங்களுடன்) தொழுதுவிட்டு பின்னர் எங்களை நோக்கி, மக்கள் தொழுதுவிட்டு உறங்கிவிட்டனர். நீங்கள் தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் வரை தொழுகையிலேயே உள்ளீர்கள் (அது வரை அதன் நன்மை உங்களுக்குக் கிடைத்துக் கொண்டேயிருக்கும்) என்று சொன்னார்கள்.
இப்போதும் நான் நபியவர்கள் அணிந்திருந்த மோதிரம் மின்னுவதைப் பார்ப்பது போன்றுள்ளது.
பாடம் : 37
பள்ளிவாசலுக்குச் சென்று வரும் மனிதர் அடையப் பெறும் சிறப்பு.
662 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் பள்ளிவாசலுக்கு (வணங்குவதற்காகச்) சென்று வந்தால் அவர் ஒவ்வொரு முறை சென்று வரும் போதும் அவருக்காக அல்லாஹ் சொர்க்கத்தில் அவருடைய மாளிகையை ஆயத்தப்படுத்துகிறான்.
பாடம் : 38
தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் கடமையான (ஃபர்ள்) தொழுகையைத் தவிர வேறு தொழுகையில்லை.
663 அப்துல்லாஹ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது:
தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்ட பின்னர் ஒரு மனிதர் இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுது கொண்டிருப்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கண்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது கையை முடித்ததும் மக்கள் அந்த மனிதரை சூழ்ந்துவிட்டனர். அப்போது அந்த மனிதரிடம் நபி (ஸல்) அவர்கள், சுப்ஹு (என்ன) நான்கு ரக்அத்களா? சுப்ஹு (என்ன) நான்கு ரக்அத்களா? என்று (கடிந்தவாறு) கேட்டார்கள்.
இன்னும் பல அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.
பாடம் : 39
ஜமாஅத்தை விட்டுவிடுவதற்குரிய நோயாளியின் நோயின் அளவு.
664 அஸ்வத் பின் யஸீத (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம் தொழுகையை விடாமல் தொழுவது பற்றியும் அதன் முக்கியத்துவம் குறித்தும் பேசிக் கொண்டி ருந்தோம். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்துபோனார்களோ அந்த நோயின் போது (ஒரு) தொழுகையின் நேரம் வந்து, அதற் காக பாங்கு சொல்லப்பட்டது. அப்போது அவர்கள், அபூபக்ர் (ரலி) அவர்களிடம் மக்களுக்கு (இமாமாக நின்று) தொழுவிக்கும்படி சொல்லுங்கள் என்று கூறினார்கள். அதற்கு, அபூபக்ர் (ரலி) அவர்கள் (அதிகமாக துக்கப்படுகின்ற) இளகிய மனம் உடையவர்கள்; (தொழுவதற்காக) நீங்கள் நிற்குமிடத்தில் அவர்கள் நின்றால் (மனம் நெகிழ்ந்து அழுதுவிடுவார்கள்.) அவர்களால் மக்களுக்கு தொழுவிக்க முடியாது என்று சொல்லப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் முன்பு சொன்னது போன்றே மீண்டும் சொன்னார்கள். மக்களும் முன்பு சொன்ன பதிலேயே மீண்டும் சொன்னார்கள். முன்றாவது முறை (பெண்களாகிய) நீங்கள் யூசுஃபுடைய (அழகில் மயங்கிய) தோழிகள் போன்(று உள் நோக்கத்துடன் பேசுகின்)றவர்கள். அபூபக்ர் அவர்களிடம் மக்களுக்குத் தொழுவிக்கச் சொல்லுங்கள் என்று கூறினார்கள் ஆகவே, அபூபக்ர் (ரலி) அவர்கள் புறப்பட்டு வந்து (இமாமாக நின்று மக்களுக்குத்) தொழுகை நடத்தி(டலா)னார்கள். நபி (ஸல்) அவர்கள் தமது உடல் நலம் சற்றுத் தேறியிருப்பதை (அப்போது) உணர்ந்த போது இரண்டு மனிதர்களுக்கிடையே தொங்கியபடி புறப்பட்டு வந்தார்கள். நோயினால் (கால்களை ஊன்றமுடியாமல்) தம் மிரு கால்களையும் தரையில் பதித்து கோடிட்டுக் கொண்டு அவர்கள் புறப்பட்டு வந்ததை இப்போதும் பார்ப்பதைப் போன்றுள்ளது (நபி ளஸல்ன அவர்கள் பள்ளிக்குள் வருவதை அறிந்த) அபூபக்ர் (ரலி) அவர்கள் பின்வாங்க முயன்றார்கள். அப்போது அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் அங்கேயே இருங்கள்' என்று (கையால்) சைகை செய்தார்கள். பிறகு நபி (ஸல்) அவர்களை (உள்ளே) கொண்டு வரப்பட்டது. அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களுக்குப் பக்கத்தில் அமர்ந்தார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அஃமஷ் (ரஹ்) அவர்கள் இதை அறிவித்துக் கொண்டிருந்த போது அவர்களிடம், (அப்போது) நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்த, அவர்களைப் பின்பற்றி அபூபக்ர்
 (ரலி) அவர்கள் தொழுதார்களா? அபூபக்ர் (ரலி) அவர்களைப் பின் பற்றி மக்கள் தொழுதனரா? என்று கேட்கப்பட்டது. அதற்கு அஃமஷ் (ரஹ்) அவர்கள் தம் தலையால் ஆம்' என (சைகையால்) பதிலளித்தார்கள்.
அஃமஷ் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில் ஒரு பகுதியை அபூதாவூத் அத்தயா-ஸி (ரஹ்) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
அபூ முஆவியா (முஹம்மத் பின் ஹாஸிம்-ரஹ்) அவர்களின் அறிவிப்பில், நபி (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு இடப் பக்கத்தில் அமர்ந்(து தொழு)தார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் நின்றவாறு தொழுது கொண்டிருந்தார்கள் என்று அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
665 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களின் உடல் கனத்தும் அவர்களுடைய நோய் கடுமையாகியும்விட்ட போது என் வீட்டில் (தங்கி) நோய்க் காலப் பராமரிப்புப் பெற்றுக்கொள்ள அனுமதியளிக்கும் படி தம் மற்ற துணைவியரிடம் கேட்டார்கள்; அவர்களும் நபியவர்களுக்கு அனுமதியளித்துவிட்டனர். நபி (ஸல்) அவர்கள் (என் வீட்டில் தங்கியிருக்கையில் ஒரு நாள்) தம் இரு கால்களும் பூமியில் இழுபட இரு மனிதர் களுக்கிடையே தொங்கியபடி (தொழுகைக்குப்) புறப்பட்டார்கள் அப்போது நபி (ஸல்) அவர்கள் அப்பாஸ் (ரலி) அவர்களுக்கும் வேறொரு மனிதருக்கும் இடையில்தான் (தொங்கியபடி) சென்றார்கள்.
அறிவிப்பாளர் உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
இ(வ்வாறு ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய)தை நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் சொன்னேன். அதற்கு அவர்கள் என்னிடம், ஆயிஷா (ரலி) அவர்கள் பெயர் குறிப்பிடாமல் விட்ட மனிதர் யாரென்று தெரியுமா? என்று கேட்டார்கள். நான், இல்லை(தெரியாது என்று பதிலளித்தேன். அவர்கள், அந்த மனிதர் அலீ பின் அபீதா-ப் (ரலி) அவர்கள்தாம் என்று கூறினார்கள்.
பாடம் : 40
மழை மற்றும் (கடுங்காற்று போன்ற) வேறு காரணங்களை முன்னிட்டு ஒருவர் (ஜமாஅத்திற்கு வராமல்) தம் இருப்பிடத்திலேயே தொழுதுகொள்ள அனுமதி உண்டு.
666 நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
குளிரும் காற்றும் நிறைந்த ஓர் இரவில் இப்னு உமர் (ரலி) அவர்கள் பாங்கு சொன்னார்கள். பிறகு ஓர் (முக்கிய) அறிவிப்பு! (உங்கள்) இருப்பிடங்களிலேயே நீங்கள் தொழுது கொள்ளுங்கள் (அலா! ஸல்லூ ஃபிர் ரிஹால்) என்று அறிவிப்புச் செய்தார்கள். பின்னர், (கடுங்) குளிரும் மழையுமுள்ள இரவுகளில் ஓர் அறிவிப்பு! (உங்கள்) இருப்பிடங்களிலேயே தொழுதுகொள்ளுங்கள் என்று அறிவிக்குமாறு பாங்கு சொல்பவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பணிப்பார்கள் என்றும் இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்
667 மஹ்மூத் பின் ரபீஉ அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:
கண் பார்வையிழந்த இத்பான் பின் மா-க் (ரலி) அவர்கள் தம் சமூகத்தாருக்கு (இமாமாக நின்று) தொழுகை நடத்துபவராய் இருந்தார்கள். (ஒரு நாள்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (வந்து), அல்லாஹ்வின் தூதரே! (சில நாட்களில்) இருட்டும் வெள்ளமுமாக இருக்கிறது. நானோ பார்வை மங்கியவன். எனவே, அல்லாஹ்வின் தூதரே! (நீங்கள் வந்து) என் வீட்டில் ஓர் இடத்தில் தொழவேண்டும். அதை நான் தொழும் இடமாக ஆக்கிக்கொள்வேன் என்று கூறினார்கள். அவ்வாறே அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சென்று, (உங்கள் வீட்டில்) எந்த இடத்தில் நான் தொழவேண்டுமென நீங்கள் விரும்புகின்றீ ர்கள்? எனக் கேட்டார்கள். உடனே இத்பான் (ரலி) அவர்கள் வீட்டில் ஒரு பகுதியைக் சுட்டிக் காட்டினார்கள். அந்த இடத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுதார்கள்
பாடம் : 41
(மழை குளிர் போன்ற நேரங்களில்) வந்தி ருப்பவர்களுக்கு மட்டும் இமாம் தொழுகை நடத்தலாமா? வெள்ளிக்கிழமை (ஜுமுஆ) தினத்தில் மழையிருந்தாலும் (குத்பா) உரை நிகழ்த்தவேண்டுமா?
668 அப்துல்லாஹ் பின் ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
சேறும் சகதியும் நிறைந்த (மழை தூறிக் கொண்டிருந்த) ஒரு (ஜுமுஆ) நாளில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் எங்களிடையே உரையாற்றினார்கள். பாங்குசொல்பவர் ஹய்ய அலஸ் ஸலாஹ் (தொழுகைக்கு வாருங்கள்)' என்று சொல்லப்போன போது (உங்கள்) இருப்பிடங் களிலேயே தொழுதுகொள்ளுங்கள் (அஸ்ஸலாத்து ஃபிர் ரிஹால்) என்று மக்களுக்கு அறிவிக்குமாறு கட்டளையிட்டார்கள். அப்போது அதை வெறுப்பது போன்று அ(ங்கிருந்த)வர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், இவ்வாறு நான் செய்தது உங்களுக்குப் பிடிக்கவில்லை போன்று தெரிகிறது. ஜுமுஆ கட்டாயமானதாக இருந்தும் என்னை விடச் சிறந்தவர் -நபி (ஸல்) அவர்கள்- இவ்வாறுதான் செய்தார்கள். உங்களுக்கு சிரமம் கொடுப்பதை நான் வெறுத்தேன் (எனவேதான் இருப்பிடங்களிலேயே தொழச் சொன்னேன்) என்று கூறினார்கள்.
மற்றோர் அறிவிப்பில், நீங்கள் முழங்கால் வரை சகதியை மிதித்துக் கொண்டு வருமளவிற்கு உங்களுக்கு சிரமம் சொடுப்பதை நான் வெறுத்தேன் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாக இடம் பெற்றுள்ளது.
669 அபூசலமா பின் அப்திர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடம் (லைலத்துல் கத்ர் எனும் கண்ணியமிக்க இரவு பற்றிக்) கேட்டேன். அப்போது அவர்கள் (குறிப்பிட்டவற்றில் பின்வருமாறும்) கூறினார்கள்:
(திடீரென) ஒரு மேகம் வந்து மழை பொழிந்தது. அதனால் பள்ளிவாச-ன் கூரையில் தண்ணீர் ஒழுகியது. அப்போது அந்தக் கூரை பேரீச்ச மட்டையால் வேயப்பட்டிருந்தது. தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்(டு தொழுகை நடத்தப்பட்)டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஈரமான களி மண்ணில் சிரவணக்கம் (சஜ்தா) செய்ததால் அவர்களது நெற்றியில் களி மண்ணின் அடையாளத்தைக் கண்டேன்.
670 அனஸ் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அன்சாரிகளில் ஒருவர் (நபி ளஸல்ன அவர்களிடம்) என்னால் (பள்ளிவாசலுக்கு வந்து) உங்களுடன் தொழ முடிவதில்லை என்று கூறினார்- (ஏனெனில்) அவர் உடல் பருமனான மனிதராக இருந்தார். எனவே, அவர் நபி (ஸல்) அவர்களுக்காக உணவு தயார் செய்து தம் இல்லத்திற்கு வருமாறு அவர்களை அழைத்தார். (அவருடைய இல்லத்திற்கு நபி ளஸல்ன அவர்கள் வந்த போது) நபி (ஸல்) அவர்களுக்காக பாயொன்றை விரித்து (பதப்படுத்துவதற்காக) அந்தப் பாயின் ஓரத்தில் தண்ணீர் தெளித்தார். அந்தப் பாயில் நபி (ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள் என்று அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அப்போது ஜாரூத் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம், நபி (ஸல்) அவர்கள் ளுஹா தொழுகை தொழுபவ ர்களாக இருந்தார்களா? என்று கேட்டார். அதற்கு அனஸ் பிஙன மாலிக் (ரலி) அவர்கள், அன்றைய தினம் தவிர வேறு எப்போதும் அவர்கள் ளுஹா தொழுகை தொழுவதை நான் கண்டதில்லை என்று கூறினார்கள்.
பாடம் : 42
உணவு (முன்னே) வந்துவிட்ட நிலையில் தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் (முதலில் சாப்பிடுவதா? அல்லது தொழுவதா?)
(இத்தகைய நிலையில்) இப்னு உமர் (ரலி) அவர்கள் முதலில் சாப்பிடுவார்கள் (பிறகு தொழுவார்கள்).
ஒருவர் தமது (அத்தியாவசியத்) தேவைகளை நோக்கிச் சென்று (அவற்றை முடித்துவிட்டு) தமது உள்ளம் ஓய்வாக இருக்கும் நிலையில் தொழுகையில் ஈடுபடுவதே புத்திசா-த் தனமாகும் என அபூத் தர்தா
(ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.
671 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரவு உணவு உங்களுக்கு முன் வைக்கப்பட்டுக் கொண்டிருக்க தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டு விட்டால் முதலில் உணவை உண்ணுங்கள். (பிறகு தொழச் செல்லுங்கள்.)
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
672 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் மஃக்ரிப் தொழுகை தொழுவதற்கு முன் உங்கள் முன்னால் உணவு வைக்கப்படுமானால்
முதலில் உணவை உண்ணுங்கள். அந்த உணவை விடுத்து (தொழுகைக்காக) அவசரப்படவேண்டாம்.
இதை அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
673 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவருக்கு முன் இரவு உணவு வைக்கப்பட்டுக் கொண்டிருக்க தொழுகைக்கு இகாமத்' சொல்லப்பட்டுவிட்டால் முதலில் உணவை உண்ணுங்கள். அதை (உண்டு)முடிக்கும் வரை (தொழுகைக்காக) அவசரப்படவேண்டாம்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
இப்னு உமர் (ரலி) அவர்களுக்கு முன்னால் உணவு வைக்கப்பட்டுக் கொண்டிருக்கையில் தொழுகைக்கு இகாமத் சொல்லப்படும். அவர்கள் (சாப்பிட்டு) முடிக்காத வரை தொழுகைக்குச் செல்லமாட் டார்கள். அப்போது இமாம் ஓதுவதைக் கேட்ட படியே (சாப்பிட்டுக் கொண்டு) இருப்பார்கள்.
674 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் சாப்பிட்டுக் கொண்டிருந்தால் அவர் தம் தேவையை முடிப்பதற்கு முன்பாக அவசரப்ப(ட்டு எழுந்துவி)ட வேண்டாம். தொழுகைக்காக இகாமத்' சொல்லப்பட்டாலும் சரியே!
மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.
பாடம் : 43
இமாமின் கையில் உணவு இருக்கும் நிலையில் அவரைத் தொழுகைக்காக அழைக்கப்பட்டால்...
675 அம்ர் பின் உமய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது கரத்திலிருந்த கத்தியால் ஆட்டுச்) சப்பையைத் துண்டு போட்டுச் சாப்பிடுவதை நான் பார்த்தேன் அப்போது தொழுகைக்காக அழைக்கப்பட்டது. உடனே அவர்கள் கத்தியை கீழேபோட்டுவிட்டு எழுந்து தொழுதார்கள். புதிதாக அங்கசுத்தி (உளூ) செய்யவில்லை.
பாடம் : 44
வீட்டு வேலைகளில் ஈடுபட்டிருக்கும் போது தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் தொழுகைக்குப் புறப்பட்டுச் சென்றுவிட வேண்டும்.
676 அஸ்வத் பின் யஸீத் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் வீட்டில் என்ன (வேலை) செய்துவந்தார்கள்? என்று நான் ஆயிஷா (ரலி) அவர் களிடம் கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், தம் வீட்டாருக்காக (வீட்டு) வேலைகளைச் செய்து வந்தார்கள். தொழுகை நேரம் வந்ததும் (வேலைகளை விட்டுவிட்டு) தொழுகைக்குப் புறப்பட்டுவிடுவார்கள் என்று பதிலளித்தார்கள்.
பாடம் : 45
நபி (ஸல்) அவர்களின் தொழுகையையும் அவர்களின் வழி முறையையும் கற்றுக் கொடுக்க வேண்டுமென்ற நோக்கத்தில் மக்களுக்குத் தொழுகை நடத்துவது.
677 அபூகிலாபா அப்துல்லாஹ் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
எங்களது இந்த (பஸ்ரா) பள்ளிவாசலுக்கு மா-க் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் வந்து, உங்களுக்கு நான் தொழுகை நடத்தப்போகிறேன். (கடமையான) தொழுகையை தொழுவிப்பது என் நோக்கமன்று. நபி (ஸல்) அவர்களை எவ்வாறு நான் தொழுகக் கண்டேனோ அவ்வாறு உங்களுக்கு நான் தொழுகை நடத்துகிறேன் என்று கூறி(விட்டு தொழுது காட்டி)னார்கள்.
இதன் அறிவிப்பாளர் அய்யூப் அஸ்ஸக்தியானி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் அபூகிலாபா (ரஹ்) அவர்களிடம், நபி (ஸல்) எவ்வாறு தொழுவார்கள்? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் இதோ (அம்ர் பின் சலமா எனும்) இந்த பெரியவரைப் போன்றே தொழுவார்கள் என்று பதிலளித்தார்கள்.
அம்ர் பின் சலமா முதல் ரக்அத்திலிருந்து இரண்டாவது ரக்அத்திற்காக எழுவதற்கு முன் (நிலைக்கு உயரும் போது சிறிது) அமர்ந்துவிட்டு எழும் முதியவராக இருந்தார்.
பாடம் : 46
கல்வியும் சிறப்பும் உடையவரே தலைமை தாங்கித் தொழுவிக்க மிகவும் தகுதியுடையவராவார்.
678 அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (தம் அந்திமக் காலத்தில்) நோய்வாய்ப்ட்டார்கள். அவர்களது நோய் கடுமையான போது, அபூபக்ர் அவர்களிடம் மக்களுக்கு (இமாமாக நின்று) தொழுகை நடத்தும்படி சொல்லுங்கள் என்று (தம் அருகில் இருந்தவர்களிடம்) கூறினார்கள். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், அபூபக்ர் (ரலி) அவர்கள் (அதிகமாகத் துக்கப்படுகின்ற) இளகிய மனம் உடையவர். (தொழுவதற்காக) நீங்கள் நிற்குமிடத்தில் அவர்கள் நிற்கும் போது (மனம் நெகிழ்ந்து அழுதுவிடுவார்கள். எனவே) அவர்களால் மக்களுக்கு தொழுவிக்க முடியாது என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், அபூபக்ர் அவர்களிடம் மக்களுக்கு (இமாமாக நின்று) தொழுகை நடத்தும் படி சொல்லுங்கள் என்று (மீண்டும்) கூறினார்கள். நான் முன்பு சொன்ன பதிலையே மீண்டும் சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், அபூபக்ர் அவர்களிடம் மக்களுக்கு தொழுகை நடத்தச் சொல்லுங்கள் என்று கூறிவிட்டு, (பெண்களாகிய) நீங்கள் யூசுஃபுடைய (அழகில் மயங்கிய) தோழிகள் போன்(று உள்நோக்கத்துடன் பேசுகின்)றவர்கள் என்று கூறினார்கள். ளநபி (ஸல்) அவர்களின்ன தூதுவராக ஒருவர் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் சென்று, (தொழுவிக்கும் படி) சொன்னார். எனவே அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் உயிருடனிருக்கும் போது (அவர்கள் இறக்கும் வரை) மக்களுக்கு (இமாமாக நின்று) தொழுகை நடத்தினார்கள்
679 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோயுற்றிருந்த போது, அபூபக்ர் அவர்களிடம் மக்களுக்கு (இமாமாக நின்று) தொழுவிக்கச் சொல்லுங்கள் என்று கூறினார்கள். அதற்கு நான், அபூபக்ர் (ரலி) அவர்கள் (தொழுவதற் காக) நீங்கள் நிற்குமிடத்தில் நின்றால் அவர்கள் (மனம் நெகிழ்ந்து) அழுவதனால் மக்களுக்கு அவர்களால் (குர்ஆனை ஓதிக்) கேட்கச் செய்ய முடியாது. எனவே மக்களுக்கு உமர் (ரலி) அவர்களை தொழுவிக்கச் சொல்லுங்கள் என்று (நபி ளஸல்ன அவர்களிடம்) கூறினேன்.
மேலும் (நபி ளஸல்ன அவர்களின் துணைவி யரில் ஒருவரான) ஹஃப்ஸாவிடம், அபூபக்ர் (ரலி) அவர்கள் (தொழுவதற்காக) நீங்கள் நிற்குமிடத்தில் அவர்கள் நின்றால் (மனம் நெகிழ்ந்து) அழுவதனால் மக்களுக்கு அவர்கள் (குர்ஆனை ஓதிக்) கேட்கச் செய்ய முடியாது. எனவே, மக்களுக்கு உமர் (ரலி) அவர்களை தொழுவிக்கச் சொல்லுங்கள் என்று நபி (ஸல்) அவர்களிடம் கூறும் படி சொன்னேன். அவ்வாறே ஹஃப்ஸா அவர்கள் (நான் சொன்ன படி) செய்த போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (போதும்) நிறுத்துங்கள்! நிச்சயமாக நீங்கள்தாம் (இறைத்தூதர்) யூசுஃபுடைய (அழகில் மயங்கிய) தோழிகள் போன்(று உள் நோக்கத்துடன் பேசுகின்)றவர்கள். அபூபக்ர் அவர் களிடம் மக்களுக்குத் தொழுவிக்கச் சொல்லுங்கள் என்று சொன்னார்கள். அப்போது ஹஃப்ஸா என்னிடம், உன்னால் நான் எந்த நன்மையும் அடையவில்லை என்று கூறினார்.
680 இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களை (ஒவ்வொரு விஷயங்களிலும்) பின்பற்றுபவரும், நபியவர்களின் சேவகருமான நபித்தோழர் அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
எந்த நோயில் நபி (ஸல்) அவர்கள் இறந்துபோனார்களோ அந்த நோயின் போது அபூபக்ர் (ரலி) அவர்களே மக்களுக்கு (இமாமாக நின்று) தொழுகை நடத்தினார்கள். மக்கள் திங்கட் கிழமையன்று (ஃபஜ்ர்) தொழுகையில் வரிசையில் நின்று கொண்டிருந்த போது நபி (ஸல்) அவர்கள் (ஆயிஷா ளரலினஅவர்களது) அறையின் திரையை விலக்கி, நின்று கொண்டு எங்களைப் பார்த்தார்கள். அப்போது அவர்களுடைய முகம் புத்தகத்தின் பக்கத்தைப் போல் (பொ-வுடன்) இருந்தது. பிறகு அவர்கள் (எங்களைப் பார்த்து) மகிழ்ந்தவர்களாய் புன்னகை புரிந்தார்கள் நபி (ஸல்) அவர்களைப் பார்த்த மகிழ்ச்சியினால் நாங்கள் (தொழுகையில் கவனம் சிதறி) குழம்பிவிடுவோமா என்று எண்ணிணோம் அபூபக்ர் (ரலி) அவர்கள் (தமக்குப் பின்னுள்ள முதல்) வரிசையில் சேர்ந்துகொள்ளத் தம் குதிகால்களால் பின்வாக்கில் சென்றார்கள். நபி (ஸல்) அவர்கள் தொழுவிக்க வர விரும்புகிறார்கள் என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் நினைத்துவிட்டார்கள். உடனே, நபி (ஸல்) அவர்கள் எங்களிடம், உங்கள் தொழுகையை நிறைவு செய்யுங்கள்' என்று (தம் கரத்தால்) சைகை செய்தார்கள்; (பிறகு அறைக்குள் நுழைந்து கொண்டு) திரையைத் தொங்கவிட்டார்கள். அன்றைய தினமே அவர்கள் இறந்தார்கள்.
681 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (இறுதியாக அமர்ந்து எங்களுக்கு தொழுகை நடத்திவிட்டுப் போனதிலிருந்து) மூன்று நாட்கள் வெளியில் வரவில்லை. (மூன்றாம் நாள்) தொழுகைக்கு இகாமத்' சொல்லப்பட்ட போது அபூபக்ர் (ரலி) அவர்கள் தொழுகை நடத்துவதற்கு முன் சென்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் (தமது அறையின்) திரையை உயர்த்தினார்கள். நபி (ஸல்) அவர்களின் முகம் தெரிந்த போது (நாங்கள் மிகவும் மகிழ்ந்தோம். எந்த அளவிற்கென்றால்,) எங்களுக்குக் காட்சியளித்த அவர்களின் முகத்தைவிட மகிழ்வூட்டும் எந்தக் காட்சியையும் நாங்கள் கண்டதில்லை (எனும் அளவிற்கு மகிழ்ந்தோம்). அப்போது நபி (ஸல்) அவர்கள் (பின்வாங்க முற்பட்ட) அபூபக்ர் (ரலி) அவர்களிடம் முன்னே செல்லுமாறு (மக்களுக்குத் தொழுவிக்கு மாறு) தமது கரத்தால் சைகை செய்தார்கள் (பிறகு அறையின்) திரையைத் தொங்க விட்டுவிட்டார்கள். பிறகு அதற்குக்கூட இயலாமல் இறந்துவிட்டார்கள்.
682 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு (அந்திமக்காலத்தில் நோயின்) வேதனை அதிகமான போது தொழுகையைப் பற்றி அவர்களிடம் கூறப்பட்டது. அதற்கு அவர்கள், அபூபக்ர் அவர்களிடம் மக்களுக்கு (இமாமாக நின்று) தொழுகை நடத்தும்படி சொல்லுங்கள் என்று கூறினார்கள். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், (என்தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் (அதிகமாக துக்கப்படுகின்ற) இளகிய மனம் உடைய மனிதர். (நீங்கள் நிற்குமிடத்தில் நின்று) அவர்கள் குர்ஆன் ஓதினால் அவர்களுக்கு அழுகை மே-ட்டுவிடும் என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள், அவரைத் தொழுவிக்கச் சொல்லுங்கள் என்று (மீண்டும்) கூறினார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் முன்பு சொன்னதையே மீண்டும் சொன்னார்கள். நபி (ஸல்) அவர்களும் முன்போன்றே அவரைத் தொழுவிக்கச் சொல்லுங்கள் என்று கூறிவிட்டு, (பெண்களாகிய) நீங்கள் (இறைத்தூதர்) யூசுஃபுடைய (அழகில் மயங்கிய) தோழிகள் போன்(று உள் நோக்கத்துடன் பேசுகின்)றவர்கள் என்று சொன்னார்கள்.
இன்னும் சில அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.
பாடம் : 47
ஒரு காரணத்தை முன்னிட்டு ஒருவர் இமாமுக்குப் பக்கவாட்டில் நின்று தொழுவது.
683 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (அந்திமக் காலத்தில்) நோயுற்றிருந்த போது மக்களுக்கு அபூபக்ர் (ரலி) அவர்களை (இமாமாக நின்று) தொழுவிக்குமாறு பணித்தார்கள். அவ்வாறே அபூபக்ர் (ரலி) அவர்கள் மக்களுக்கு தொழுவித்துக் கொண்டிருந்தார்கள்.
(இதன் அறிவிப்பாளரான) உர்வா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு நாள்) தமது நோய் சற்றுக் குறைந்திருக்கக் கண்ட போது (இரண்டு மனிதர்களை கைத்தாங்கலாக்கி) புறப்பட்டு வந்தார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் மக்களுக்கு இமாமாக நின்று தொழுவித்துக் கொண்டிருந்தார்கள். நபி (ஸல்) அவர்களைக் கண்ட அபூபக்ர் (ரலி) அவர்கள், பின் வாங்க முயன்றார்கள். அப்படியே இருங்கள் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு சைகை செய்துவிட்டு அபூபக்ர் (ரலி) அவர்களுக்குச் சமமாக அவர்களுக்குப் பக்கவாட்டில் அமர்ந்தார்கள். அப்போது மக்கள் அபூபக்ர் (ரலி) அவர்களைப் பின்பற்றித் தொழுது கொண்டிருக்க, அபூபக்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பின்பற்றித் தொழுது கொண்டிருந்தார்கள்.
பாடம் : 48
ஒருவர் மக்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக்க ஆரம்பித்துவிட, (வழக்கமாகத் தொழுவிக்கும்) முதலாவது இமாம் வந்து விட்டால், தொழுவித்துக் கொண்டிருக்கும் அவர் பின்வாங்கினாலும் பின்வாங்கா விட்டாலும் அவருடைய தொழுகை நிறைவேறிவிடும்.
684 சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(குபாவில் இருந்த பனூஅம்ர் குலத்தாரிடையே தகராறு நிகழ்ந்துவிட்டதாகச் செய்தி வந்ததை யொட்டி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பனூஅம்ர் பின் அவ்ஃப் குலத்தாரை நோக்கி அவர்களிடையே சமாதானம் ஏற்படுத்துவதற்காகச் சென்றார்கள். அப்போது (அஸ்ர்) தொழுகையின் நேரம் வந்துவிட்டது. (நபி ளஸல்ன அவர்கள் வரத் தாமதமாகவே) தொழுகை அறிவிப்பாளர் (பிலால் ளரலின அவர்கள்) அபூபக்ர் (ரலி) அவர்களை நோக்கி வந்து, நீங்கள் மக்களுக்குத் (தலைமை தாங்கித்) தொழுகை நடத்துகிறீர்களா, நான் இகாமத் சொல்கிறேன்? என்று கூறினார்கள் ஆம் (அவ்வாறே செய்வோம் என்று கூறிவிட்டு அபூபக்ர் (ரலி) அவர்கள் (மக்களுக்குத் தலைமை தாங்கி) தொழுகை நடத்த ஆரம்பித்தார்கள். மக்கள் தொழுது கொண்டிருக்கும் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து (தொழுகை வரிசைகளை) விலக்கிக் கொண்டு (முதல்) வரிசையில் வந்து நின்றார்கள். இதைக் கண்ட மக்கள் (அபூபக்ர் அவர்களுக்கு நபி ளஸல்ன வந்துவிட்டதைத் தெரிவிக்க) கைத்தட்டினார்கள். (பொதுவாக) அபூபக்ர் (ரலி) அவர்கள் தொழுது கொண்டிருக்கும் போது திரும்பிப் பார்க்க  மாட்டார்கள். மக்கள் கை தட்டுவது அதிகரித்த போது திரும்பிப்பார்த்தார்கள். (அங்கே முதல் வரிசையில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கண்டார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களை நோக்கி அங்கேயே இருங்கள்' என்று சைகை செய்தார்கள். உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள் அவ்வாறு தம்மை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பணித்தற்காக (இறைவனுக்கு நன்றி செலுத்தும் முகமாக) தமது கைகளை உயர்த்தி இறைவனைப் புகழ்ந்தார்கள். பிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள் (திரும்பாமல் அப்படியே முதல்) வரிசையில் சேர்ந்து கொண்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முன்னே சென்று (நின்று) தொழுகை நடத்தினார்கள். தொழுது முடித்ததும். அபூபக்ரே! நான் உங்களை நான் (அங்கேயே நின்று தொழுவிக்குமாறு) பணித்தும் நீங்கள் ஏன் அங்கேயே நிற்கவில்லை? என்று கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்னால் தொழுவிப்பதற்கு அபூ குஹாஃபாவின் மகனுக்குத் தகுதியில்லை என்று பதிலளித்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்களைப் பார்த்து), உங்களை ஏன் அதிகமாகக் கைத்தட்டக் கண்டேன்? ஒருவருக்கு அவரது தொழுகையில் ஏதேனும் ஐயம் (ஆட்சேபம்) ஏற்பட்டுவிட்டால் அவர் (அதை உணர்த்தும் முகமாக) இறைவனை (சுப்ஹானல்லாஹ்'-அல்லாஹ் தூயவன் எனக் கூறி)த் துதிக்கட்டும். ஏனெனில் அவர் இறைவனைத் துதிக்கும் போது அவரளவில் கவனம் செலுத்தப்படும். கைத்தட்டும் முறை பெண்களுக்குரியதாகும் என்று கூறினார்கள்.
பாடம் : 49
குர்ஆனை (மனனமிட்டு) ஓதுவதில் பலர் சமமாக இருப்பார்களானால் அவர்களில் (வயதில்) பெரியவர் தலைமை தாங்கித் தொழுகை நடத்தட்டும்.
685 மாலிக் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
இளைஞர்களான நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் (மதீனாவுக்குச்) சென்று ஏறத்தாழ இருபது நாட்கள் அவர்களிடம் தங்கியிருந்தோம் .-நபி (ஸல்) அவர்கள் இரக்க குணமுடையவர் களாக இருந்தார்கள்.- (பிறகு நாங்கள் எங்கள் குடும்பத்தினரிடம் திரும்பிச் செல்ல ஆசைப் படுவதை அறிந்த) நபி (ஸல்) அவர்கள், நீங்கள் உங்கள் ஊர்களுக்குத் திரும்பிச் சென்றால் நீங்கள் கற்றிருப்பதை அவர்களுக்கும் கற்றுக் கொடுங்கள்; (கடமையானவற்றைச் செய்யுமாறு) அவர்களைப் பணியுங்கள். இன்ன தொழுகையை இந்த நேரத்தில் தொழுங்கள்; இன்ன தொழுகையை இந்த நேரத்தில் தொழுங்கள். தொழுகை (நேரம்) வந்துவிட்டால் உங்களுக்காக உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டும். உங்களில் (வயதில்) பெரியவர் உங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுகை நடத்தட்டும் என்று கூறினார்கள்
பாடம் : 50
இமாம் ஒரு கூட்டத்தாரைச் சந்திக்கச் சென்றால் அவர்களுக்குத் தலைமை தாங்கித் தொழுகை நடத்தலாம்.
686 இத்பான் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(என் வீட்டில் தொழவாருங்கள்' என்று நான்விடுத்த வேண்டுகோளை ஏற்று வந்த,) நபி (ஸல்) அவர்கள், என் வீட்டிற்குள் நுழைய அனுமதி கேட்டார்கள். நான் அவர்களுக்கு அனுமதியளித்தேன். உங்கள் வீட்டில் நான் எந்த இடத்தில் தொழவேண்டுமென நீங்கள் விரும்புகிறீர்கள்? என்று கேட்டார்கள். நான் விரும்பிய இடத்தை அவர்களுக்கு சுட்டிக் காட்டினேன். நபி (ஸல்) அவர்கள் (அந்த இடத்தில்) நின்றார்கள். நாங்களும் அவர்களுக்குப் பின்னால் அணிவகுத்து நின்றோம். (தொழுதோம்) பின்னர் அவர்கள் சலாம் கொடுத்தார்கள்; நாங்களும் சலாம் கொடுத்தோம்
பாடம் : 51
மக்கள் பின்பற்ற வேண்டுமென்பதற்காகவே இமாம் நியமிக்கப்படுகிறார்.
நபி (ஸல்) அவர்கள் எந்த கோயில் இறந்துபோய்விட்டார்களோ அந்த நோயின் போது உட்கார்ந்தவாறே மக்களுக்கு தொழுகை நடத்தினார்கள்.
இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:
இமாம் (குனிவு, சிரவணக்கம் போன்றவற்றிலிருந்து) தலையை உயர்த்துவதற்கு முன் (பின்பற்றித் தொழும்) ஒருவர் (தமது தலையை) உயர்த்திவிட்டால், தாம் (தலையை) உயர்த்திய அளவு நேரம் (மீண்டு சென்று பொறுத்து இருந்துவிட்டு பிறகு இமாமைப் பின்தொடர வேண்டும்.
இமாமுடன் இரண்டு ரக்அத்கள் தொழும் ஒருவர் (நெரிசல் முத-ய காரணங்களால்) (முதல் ரக்அத்தில்) சிரவணக்கம் (சஜ்தா) செய்ய முடியாமற் போய்விடுகிறது. இவரைப் பற்றிக் கூறுகையில் ஹஸன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள், அவர் இரண்டாவது ரக்அத்திற்குரிய இரு சஜ்தாக்களை செய்வார். பிறகு முதல் ரக்அத்தையும் அதன் சஜ்தாவையும் (எழுந்து) மீண்டும் நிறைவேற்றுவார் என்று சொன்னார்கள். ஒரு சஜ்தா செய்யாமல் மறந்து எழுந்துவிட்டால் உடனே சஜ்தாவுக்கு சென்று விட வேண்டும் என்றும் கூறினார்கள்.
687 உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அந்திமக் காலத்தில்) நோய்வாய்ப்பட்டிருந்தது பற்றி எனக்கு நீங்கள் கூறக் கூடாதா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ஆம் (கூறுகிறேன்). நபி (ஸல்) அவர்களுக்கு நோய் கடுமையான போது, மக்கள் தொழுதுவிட்ட னரா? என்று கேட்டார்கள். நாங்கள், இல்லை, அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் உங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறினோம். அப்போது தண்ணீர் தொட்டியில் எனக்காகத் தண்ணீர் வையுங்கள் என்று கூறினார்கள். அவ்வாறே நாங்கள் செய்தோம். அவர்கள் (அதில்) குளித்துவிட்டு எழ முயன்றார்கள். அப்போது (எழ முடியாமல்) மயக்கமுற்றுவிட்டார்கள். பின்னர் அவர்களின் மயக்கம் தெளிந்த போது, மக்கள் தொழுதுவிட்டனரா? என்று கேட்டார்கள். நாங்கள், இல்லை; அவர்கள் உங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கி றார்கள், அல்லாஹ்வின் தூதரே! என்று சொன்னோம். அப்போது தண்ணீர் தொட்டியில் எனக்காகத் தண்ணீர் வையுங்கள் என்றார்கள். (அவ்வாறே நாங்கள் வைத்த போது) அவர்கள் உட்கார்ந்து குளித்தார்கள். பிறகு அவர்கள் எழ முற்பட்ட போது (எழ முடியாமல்) மயக்கமுற்றுவிட்டார்கள். பின்னர் மயக்கம் தெளிந்த போது, மக்கள் தொழுதுவிட்டனரா? என்று (மீண்டும்) கேட்டார்கள். நாங்கள் இல்லை; அவர்கள் உங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர் என்று கூறினோம். அப்போது தண்ணீர் தொட்டியில் எனக்காகத் தண்ணீர் வையுங்கள் என்று கூறினார்கள். (நாங்கள் தண்ணீர் வைத்தோம்.) அவர்கள் உட்கார்ந்து குளித்தார்கள். பிறகு அவர்கள் எழ முற்பட்ட போது (எழ முடியாமல் மீண்டும்) மயக்கமுற்றுவிட்டார்கள். பின்னர் அவர்கள் மயக்கம் தெளிந்த போது (அப்போதும்,) மக்கள் தொழுதுவிட்டனரா? என்று கேட்டார்கள். அதற்கு நாங்கள், இல்லை; அவர்கள் உங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், அல்லாஹ்வின் துதரே! என்றோம்.-அப்போது மக்கள் இஷாத் தொழுகைக்காக நபி (ஸல்) அவர்களை எதிர்பார்த்தபடி பள்ளிவாசலில் வீற்றிருந்தனர்.-ஆகவே நபி (ஸல்) அவர்கள் (தூதர் ஒருவரை) அனுப்பி அபூபக்ர் (ரலி) அவர்களிடம் மக்களுக்குத் தொழுகை நடத்துமாறு கூறினார்கள். அந்தத் தூதுவர் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் சென்று, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களுக்குத் தொழுகை நடத்துமாறு உங்களைப் பணிக்கிறார்கள் என்று கூறினர்.
அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள்-அன்னார் (அதிகமாகத் துக்கப்படுகின்ற) இளகிய மனம் உடையவர் (என்பது குறிப்பிடத்தக்கது.)-உமரே! நீங்கள் மக்களுக்குத் தொழுகை நடத்துங்கள் என்று (உமர் ளரலின அவர்களிடம்) கூறினார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள், இதற்கு நீங்கள்தாம் என்னைவிட தகுதியுடையவர் என்று அபூபக்ர் (ரலி) அவர் களிடம் கூறிவிட்டார்கள். ஆகவே அபூபக்ர்
(ரலி) அவர்கள் (நபியவர்கள் நோயுற்றிருந்த) அந்த நாட்களில் (மக்களுக்கு இமாமாக நின்று) தொழுகை நடத்தினார்கள். பின்னர் (ஒரு நாள்) நபி (ஸல்) அவர்கள் தமது நோய் சுற்றுக் குறைந்திருக் கக் கண்ட போது இரண்டு பேரிடையே (அவர் களைக் கைத்தாங்கலாக்கிக் கொண்டு) லுஹ்ர் தொழுகைக்காகப் புறப்பட்டு வந்தார்கள்.- அந்த இரண்டு பேரில் அப்பாஸ் (ரலி) அவர்கள் ஒருவராவார்.- அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் மக்களுக்கு (இமாமாக நின்று) தொழுகை நடத்திக் கொண்டிருந்தார்கள். நபி (ஸல்) அவர்களைக் கண்ட அபூபக்ர் (ரலி) அவர்கள் பின் வாங்கிட முயன்றார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் பின் வாங்க வேண்டாமென அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு சைகை செய்தார்கள். (தம்மை அழைத்து வந்த இருவரிடமும்) என்னை அபூபக்ர் (ரலி) அவர்களுக்குப் பக்கத்தில் உட்காரவையுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அவ்வாறே அவர்கள் இருவரும் நபி (ஸல்) அவர்களை அபூபக்ர் (ரலி) அவர்களுக்குப் பக்கவாட்டில் அமர்த்தினர். அப்போது மக்கள் அபூபக்ர் (ரலி) அவர்களைப் பின்பற்றித் தொழத் துவங்க, அபூபக்ர் (ரலி) அவர்கள் உட்கார்ந்து தொழுது கொண்டிருந்த நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றித் தொழுதார்கள்.
அறிவிப்பாளர் உபைதுல்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
நான் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களிடம் சென்றபோது, நபி (ஸல்) அவர்கள் நோய்வாய்ப் பட்டிருந்தது குறித்து ஆயிஷா (ரலி) அவர்கள் என்னிடம் கூறியதை நான் உங்களிடம் கூறட்டுமா? என்று கேட்டேன். அதற்கு அப்பாஸ் (ரலி) அவர்கள், சொல்லுங்கள் என்றார்கள். ஆகவே நான் ஆயிஷா
(ரலி) அவர்கள் கூறியதை அவர்களிடம் எடுத்துரைத்தேன். அதில் எதையும் அவர்கள் மறுக்கவில்லை. ஆயினும் ஆயிஷா (ரலி) அவர்கள் அப்பாஸ் (ரலி) அவர்களுடனிருந்த அந்த வேறொரு மனிதரின் பெயரை உம்மிடம் குறிப்பிட்டார்களா? எனக் கேட்டார்கள். நான், இல்லை (குறிப்பிடவில்லை) என்று சொன்னேன். அவர்தாம் அலீ (ரலி) என்று கூறினார்கள்
688 இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோயுற்றிருந்த போது தமது இல்லத்தில் (மாடியறையில்) உட்கார்ந்த படியே தொழுதார்கள். (அவர்களின் உடல் நலம் விசாரிக்க வந்திருந்த) மக்கள் சிலர் அவர்களுக்குப் பின்னால் நின்றபடி தொழுதனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் மக்களிடம் உட்காருங்கள்' என்று சைகை செய்தார்கள். தொழுகை முடிந்த போது, இமாம் பின் பற்றப்படுவதற்காகவே நியமிக்கப்படுகிறார். அவர் குனிந்தால் நீங்களும் குனி(ந்து ருகூஉ செய்)யுங்கள்; அவர் (தமது தலையை) உயர்த்தினால் நீங்களும் (தலையை) உயர்த்துங்கள். அவர் அமர்ந்து தொழுதால் நீங்களும் அமர்ந்தே தொழுங்கள் என்று சொன்னார்கள்.
(குறிப்பு: இந்த ஹதீஸ் பற்றிய விவரம் அறிய காண்க: பாகம்-6, ஹதீஸ் எண் : 5658)
689 அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குதிரையில் பயணம் செய்து கொண்டி ருந்த போது கீழே விழுந்துவிட்டார்கள். அதனால் அவர்களது வலப் புற விலாவில் சிராய்ப்பு ஏற்பட்டு விட்டது. ஆகவே (கடமையான) தொழுகைகளில் ஒன்றை அவர்கள் உட்கார்ந்தபடியே தொழு(வித்)தார்கள். ஆகவே நாங்களும் அவர்களுக்குப் பின்னால் உட்கார்ந்தபடியே தொழுதோம். தொழுகை முடிந்த போது இமாம் பின்பற்றப்படு வதற்காகவே நியமிக்கப்பட்டுள்ளார்; அவர் நின்று தொழுதால் நீங்களும் நின்று தொழுங்கள்;அவர் குனிந்தால் நீங்கள் குனி(ந்து ருகூஉ செய்)யுங்கள்; அவர் (தலையை) உயர்த்தினால் நீங்களும் (தலையை) உயர்த்துங்கள்; அவர் சமி அல்லாஹு -மன் ஹமிதஹ்' (தன்னைப் புகந்தோரின் புகழுரையை இறைவன் ஏற்றுக்கொள்கிறான்.) என்று சொன்னால் நீங்கள் ரப்பனா ல(க்)ல் ஹம்து' (எங்கள் இறைவா! உனக்கே புகழ் அனைத்தும்) என்று சொல்லுங்கள். அவர் நின்று தொழுதால் நீங்களும் நின்றே தொழுங்கள். அவர் உட்கார்ந்து தொழுதால் நீங்கள் அனைவரும் உட்கார்ந்தே தொழுங்கள் என்று கூறினார்கள்.
அபூஅப்தில்லாஹ் (புகாரீயாகிய நான்) கூறுகின்றேன்:
அப்துல்லாஹ் பின் அஸ்ஸபீர் அல்மக்கீ அல்ஹுமைதீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
முன்பொரு முறை நோய்வாய்ப்பட்டிருந்தபோதே நபி (ஸல்) அவர்கள், இமாம் உட்கார்ந்து தொழுதால் நீங்களும் உட்கார்ந்தே தொழுங்கள் என்று சொன்னார்கள். பின்னர் நபி (ஸல்) அவர்கள் (தம் அந்திமக் காலத்தில்) உட்கார்ந்து தொழுத போது (அவர்களுக்குப் பின்னாலிருந்த) மக்கள் நின்றே தொழுதனர். அவர்களை உட்காருமாறு நபி (ஸல்) அவர்கள் பணிக்கவில்லை. (பொதுவாக நபி (ஸல்) அவர்களின் சொல், செயல்களில்) கடைசியானதை அடுத்துக் கடைசியானதையே எடுத்துக் கொள்ளவேண்டும். (எனவே, இமாம் உட்கார்ந்து தொழுதால் பின்பற்றுபவர்களும் உட்கார்ந்து தொழவேண்டும் எனும் விதி மாற்றப்பட்டுவிட்டது.)
பாடம் : 52
இமாமுக்குப் பின்னால் தொழுபவர் எப்போது சஜ்தா செய்ய வேண்டும்?
இமாம் சிரவணக்கம் (சஜ்தா) செய்தால் நீங்களும் சிரவணக்கம் செய்யுங்கள் என அனஸ் (ரலி0 அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
690 அப்துல்லாஹ் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உண்மைக்குப் புறம்பாகப் பேசாதவரான பராஉ (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சமி அல்லாஹு -மன் ஹமிதஹ்' (அல்லாஹ் தன்னை புகழ்ந்தோரின் புகழுரையை ஏற்றுக்கொள்கிறான்) என்று கூறிவிட்டால் எங்களில் யாரும் அவர்கள் சிரவணக்கம் (சஜ்தா) செய்யாத வரை எங்கள் முதுகை (சிரவணக்கத்திற்காக) வளைக்கமாட்டோம்; அவர்கள் (சிரவணக்கத்திற்கு சென்ற) பின்புதான் நாங்கள் சிரவணக்கம் செய்வோம்.
மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இதே (கருத்திலமைந்த) ஹதீஸ் வந்துள்ளது.

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites