தினமும் இருமுறை பல் துலக்கினால் இதய நோய் வராது: ஆய்வில் தகவல்
லண்டன், மே 28: தினமும் இரண்டு முறை பல் துலக்குபவர்களுக்கு இதய நோய் வரும் வாய்ப்புக் குறைவு என லண்டனில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று கூறுகிறது.
லண்டனில் இருந்து வெளி வரும் மருத்துவ இதழ் ஒன்று இந்த ஆய்வை மேற்கொண்டது. இந்த ஆய்வை பேராசிரியர் ரிச்சர்டு வாட் என்பவர் தலைமையேற்று நடத்தினார். 11 ஆயிரம் பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வில் வாய் சுத்தத்திற்கும் இதய ஆரோக்கியத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக வாட் கூறினார். தினமும் இரு முறை பல் துலக்குபவர்களுக்கு இதய நோய் வரும் வாய்ப்பு 70 சதவீதம் குறைவு எனவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
வாயில் புண் ஏற்பட்டால் பாக்டீரியா தொற்று ஏற்பட்டு அதனால் இதயம் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல இதய நோய் பராமரிப்பு செவிலியர் ஜூடி ஓ சுலிவான் தெரிவித்தார்.
தினமும் காலையிலும் இரவிலும் பல் துலக்குவதால் வாய்ப்புண்ணால் ஏற்படும் பாக்டீரியா தொற்று தடுக்கப்பட்டு இதயம் காக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
இதுபற்றி வாட் கூறுகையில் தங்களது ஆய்வு முடிவுகளை இதய நோய் வல்லுனர்கள் ஏற்றுக் கொண்டிருப்பதாகவும் இது பற்றி மேலும் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.
நன்றி: தினமணி நாளிதழ் மே 28
தினமும் இருமுறை பல்துலைக்கினால் இதய நோய்வராது என்று இன்றைய அறிவியல் உலகம் கூறும் நிலையில்,
காட்டுமிரண்டிகள் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில், 1400 ஆண்டுகளுக்கு முன்பே,
இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ள செய்திகளை பாருங்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் சமுதாயத்திற்கு' அல்லது மக்களுக்கு' நான் சிரமத்தை ஏற்படுத்திவிடுவேனோ என்று (அச்சம்) இல்லையாயின் ஒவ்வொரு தொழுகைக்கும் பல் துலக்க வேண்டுமென நான் அவர்களுக்கு கட்டளை பிறப்பித்திருப்பேன். (ஆதாரம் : புகாரி – 887)

பல்துலக்குவது பற்றி நான் உங்களிடம் (திரும்பத் திரும்ப) பல முறை வலியுறுத்தியுள்ளேன்.
இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஆதாரம் : புகாரி – 888)
நபி (ஸல்) அவர்கள் இரவில் (தொழுகைக்காக) எழும் போது பல்துலக்கு(ம் குச்சியால் வாயை சுத்தம் செய்)வார்கள் என்று ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறினார்கள் (ஆதாரம் : புகாரி – 889)

நபிகளார் மனித குலத்திற்கு பயன்படும் விதமாக கூறிச்சென்ற செய்திகளை உண்மைப்படுத்தும் விதமாக மேற்கண்ட லணடன் ஆய்வு தெரிவிக்கின்றது
thank : pj
0 கருத்துகள்:
கருத்துரையிடுக