(4) எஞ்சியதை தர மறுத்தவன்
தனது கிணற்றின் நீரையோ அல்லது குளத்தின் நீரையோ அவன் அதை பயன்படுத்தியதற்குப் பிறகு எஞ்சிய நீரை பிறர் பயன்படுத்த விடாமல் தடுத்தவனும் இந்த துர்பாக்கிய நிலையை அடைவான்
இன்னொருவன் தன் தேவைக்கு மேல் எஞ்சியிருந்த தண்ணீரை (மக்கள் உபயோகிப்பதைத்) தடுத்தவன் ஆவான். (மறுமையில்) அவனை நோக்கி உன் கரங்கள் உருவாக்காத தண்ணீரின் மீதத்தை மக்கள் உபயோகிக்கவிடாமல் தடுத்ததைப் போலவே இன்று நான் எனது அருளிலிருந்து உன்னைத் தடுக்கிறேன் என்று அல்லாஹ் கூறுவான்.
அறிவிப்பாளர் : அபூஹீரைரா (ரலி)
நூல் : (புகாரி : 2369)
. தண்ணீர் மனிதர்களுக்கு அவசியம் தேவை. தண்ணீர் இல்லாமல் எந்த உயிரினமும் உயிர்வாழ முடியாது. வழிபோக்கர்கள் பிரயாணிகள் போன்றோர்களுக்கு தண்ணீர் அதிகம் தேவைப்படும். இரக்கம் இல்லாதவர்கள் தான் இது போன்ற செயலைச் செய்வார்கள். அதுவும் எஞ்சிய நீரை குடிக்கவிடாமல் தடுக்கிறான் என்றால் அவனைப் போன்று கொடிய எண்ணம் உள்ளவன் வேறு யார் இருக்க முடியும்.
தண்ணீர் என்பது நாமாக உருவாக்கும் பொருள் இல்லை. அல்லாஹ்வின் அருளால் நமக்கு கிடைக்கும் அற்புதமாகும். இந்த அற்புதத்தை பிறர் அனுபவிக்கவிடாமல் தடுத்தவனுக்கு அல்லாஹ் மறுமையில் தனது அருளைத் தடுத்துவிடுவான்.
அல்லாஹ்வுக்கும் நமக்கும் மத்தியில் உள்ள பாவங்களை அல்லாஹ் தான் நாடினால் மண்ணிப்பான். ஆனால் அடியார்களுக்கு நாம் செய்த பாவங்களை அந்த அடியார் மண்ணித்தாலேத் தவிர வேறு யாரும் மண்ணிக்க முடியாது. நாம் பிறருக்கு இரக்கப்பட்டால் தான் அல்லாஹ் நமக்கு இரக்கப்படுவான்.
இரக்கப்படாதவர் இரக்கம் காட்டப்படமாட்டார்.
அறிவிப்பாளர் : அபூஹீரைரா (ரலி)
நூல் : (புகாரி : 5997)
ஓரு நாய்க்கு இரக்கப்பட்டு தண்ணீர் கொடுத்த விபச்சாரியையே அல்லாஹ் மண்ணித்து விட்டான். பூனைக்கு இரக்கம் காட்டாத பெண்னை நரகத்திற்குத் தள்ளினான்.
(முன்னொரு காலத்தில்) நாய் ஓன்று ஓரு கிணற்றை சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தது. அது தாகத்தால் செத்துவிடும் நிலையில் இருந்தது. அப்போது பனூ இஸ்ராயீல் சமுதாயத்தின் விபச்சாரிகளில் ஓருத்தி அதைப் பார்த்தாள். உடனே அவள் தன் காலுறையைக் கழற்றி (அதில் தண்ணீரை எடுத்து) அந்த நாய்க்கு புகட்டினாள். அதன் காரணமாக அவளுக்கு பாவமண்ணிப்பு வழங்கப்பட்டது.
அறிவிப்பாளர் : அபூஹீரைரா (ரலி)
நூல் : (புகாரி : 3467)
மேலுள்ள ஹதீஸில் தண்ணீரைத் தடுத்ததாக வந்துள்ளது. தண்ணீரைப் போன்று உணவு உடை போன்றவை மீதமாக இருந்தும் பிறர் கேட்கும் போது தர மறுப்பவர்களும் இதில் அடங்குவாôகள். இன்று நம்மில் பெரும்பாலானோர் தேவைக்கு அதிகமாகவே எல்லாவற்றையும் வைத்துள்ளோம். ஓன்றுமில்லாமல் வாழும் மக்கள் உலகில் ஏராளமாக இருக்கின்றார்கள். இதை நாம் சற்று கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
(5) பெருமைக்காக ஆடையை கணுக்காலுக்கு கீழே கட்டியவன்
மனிதன் முழுக்க முழுக்க பெருமை கொள்வதற்கு தகுதியற்றவனாக இருக்கின்றான். அவன் தன்னுடைய சொந்த முயற்சியால் தான் எல்லாவற்றையும் பெறுவதாக எண்ணிக்கொண்டிருக்கிறான். அவன் வசதியாக உடல்நலத்துடன் வாழ்வது அல்லாஹ் அவனுக்குப் போட்ட பிச்சை என்பதை மறந்துவிடுகின்றான். ஆணவத்துடன் தனது நடை பாவனைகளை அமைத்துக் கொள்கிறான். நபியாக இருந்தாலும் பெறுமைகொள்வதற்கு அனுமதியில்லை.
பூமியில் கர்வத்துடன் நடக்காதே! நீ பூமியைப் பிளந்து, மலைகளின் உயரத்தின்
அளவை அடையவே மாட்டாய்!
அல்குர்ஆன் (17 : 37)
பொருள் இல்லாதவர்களை ஏழனமாக நினைத்து தன்னை உயர்ந்தவன் என்று சமுதாயத்தில் காட்டிக்கொள்கிறான். இறைவன் நினைத்தால் நம்மையும் அந்த ஏழையைப் போன்று ஆக்கிவிடுவான் என்ற பயம் அவனுக்கு இல்லை. அனைத்து மக்களுக்கும் பாடமாக அல்லாஹ் அவனுக்கு இவ்வுலகத்திலேயே தண்டனையை வழங்கிவிடுகின்றான்.
நபி (ஸல்) அவர்களிடத்தில் ஓரு மனிதர் இடதுகையால் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். நபி (ஸல்) அவர்கள் உன் வலது கையால் சாப்பிடு என்று கூறினார்கள். (அதற்கு அவர்) என்னால் முடியாது என்று கூறினார். பெருமையே அவரை (வலது கையில் சாப்பிடவிடாமல்) தடுத்தது. பிறகு அவரால் கையை வாய்க்கு அருகில் கொண்டு செல்ல முடியவில்லை.
அறிவிப்பாளர் : சலமா பின் அகூஃ
நூல் : (புகாரி : 3766)
ஏராளமான பலகீனங்களுடன் வயிற்றில் மலம் ஜலத்தை சுமந்து கொண்டு வாழும் தனக்கு எதற்குப் பெறுமை என்று நினைப்பதில்லை. பெருமை கொள்வதற்கு பூரணமானத் தகுதி அல்லாஹ் ஓருவனுக்கு மட்டும் தான் உள்ளது. அல்லாஹ்வுக்கு மட்டும் சொந்தமான இந்தப் பெருமையில் யாரேனும் பங்கிற்கு வந்தால் அல்லாஹ் அவரை சுவர்க்கத்தில் நுழைய விடமாட்டான்.
யாருடைய உள்ளத்தில் அனு அளவு தற்பெருமை இருக்கின்றதோ அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
நூல் : (முஸ்லிம் : 147)
பெருமை எது என்பதை சரியாகப் புரிந்து கொள்ளாமல் நம்மை அலங்கரித்துக்கொல்லாமலும் விரும்பிய அழகிய ஆடைகளையும் அணியாமலும் இருக்கக்கூடாது. பெருமை எது என்று நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்திவிட்டார்கள்.
யாருடைய உள்ளத்தில் அனு அளவு தற்பெருமை இருக்கின்றதோ அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். தமது ஆடை அழகாக இருக்க வேண்டும். தமது காலணி அழகாக இருக்க வேண்டுமென ஓருவர் விரும்புகிறார். (இதுவும் தற்பெருமையில்) சேருமா? என்று அப்போது ஓரு மனிதர் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ் அழகானவன் அழதையே அவன் விரும்புகிறான். தற்பெருமை என்பது (ஆணவத்தோடு) உண்மையை மறுப்பதும் மக்களை கேவலமாக மதிப்பதும் தான் என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
நூல் : (முஸ்லிம் : 147
பெருமையோடு ஆடையை கணுக்காலுக்கு கீழே தொங்விட்டவனை அல்லாஹ் மறுமையில் கண்டுகொள்ள மாட்டான். அவர்களுக்கு தண்டனையையும் வழங்குவான் என்று நபி (ஸல்) அவாகள் கூறியுள்ளார்கள்.
மூன்று பேரிடம் அல்லாஹ் மறுமையில் பேசமாட்டான். அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான். அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். அவர்களுக்கு துன்பம் தரும் வேதனை தான் உண்டு என்று நபி (ஸல்) அவாகள் கூறினார்கள். இதையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று முறைகள் கூறினார்கள். நான் (அவ்வாறாயின்) அவர்கள் இழப்புக்குள்ளாகிவிட்டனர். நஷ்டமடைந்து விட்டனர். அவர்கள் யார் அல்லாஹ்வின் தூதரே என்று கேட்டேன். அதற்கு தமது ஆடையை (கணுக்காளுக்கு) கீழே இறக்கிக்கட்டியவர். (செய்த உபகாரத்தை) சொல்லிக்காட்டுபவர். பொய் சத்தியம் செய்து தமது சரக்கை விற்பனை செய்பவர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அபூதர் (ரலி) அவர்கள்
நூல் : (முஸ்லிம் :171)
ஆங்கிலேய நாகரீகம் ஓங்கி நிற்கும் இக்காலகட்டத்தில் இஸ்லாமிய இளைஞர்களும் விதிவிலக்கில்லாமல் பெருமைக்காக ஆடையை தரையில் இழுபடுமாறு அணிந்து செல்கிறார்கள். இதை நாம் ஓரு குற்றமாக எடுத்துக்கொள்வதில்லை. இந்த குற்றத்திற்கு அல்லாஹ் இந்த உலகத்திலேயே சிலருக்கு தண்டனையை வழங்கிவிடுகின்றான்.
(முன் காலத்தில்) ஓருவன் தன் கீழங்கியை தற்பெருமையின் காரணத்தினால் (கணுக்காலின் கீழ் தொங்கவிட்டு) இழுத்துக்கொண்டே நடந்த பொழுது (பூமி பிளந்து அதில்) அவன் புதைந்து போகும்படி செய்யப்பட்டான். அவன் மறுமை நாள் வரை பூமிக்குள் அழுந்திச் சென்றுகொண்டே இருப்பான்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
நூல் : (புகாரி : 3485)
இன்ஷா அல்லாஹ் தொடரும் .
0 கருத்துகள்:
கருத்துரையிடுக