அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

புதன், 2 ஜூன், 2010

கண்பார்வை !

நமது உடலில் எத்தனையோ உறுப்புகள் இருக்கின்றன. ஆனால் நாம் இந்த உலகத்தை மிகத் தெளிவாக உணர்ந்து கொள்ள, பார்க்க, தெரிந்துகொள்ள நமது இருவிழிகள் தான் முக்கிய காரணமாகின்றன. இன்றைய அவசர உலகில் தற்போதுள்ள இளைஞர் சமுதாயம் எப்படி இருக்கின்றது? 10 வயது தாண்டுவதற்கு முன்பே கண்பார்வைக் கோளாறுகள் வருகின்றன. இதற்குக் குழந்தைகளைப் பெற்று எடுக்கும் தாய்,தந்தையரே முதற்காரணம். அடுத்து சத்துக் குறைவான உணவு வகைகளை தொடர்ந்து சாப்பிடுவது, கண் கோளாறு வரத்துவங்கி விட்டால் அதை உடனே தகுந்த மருத்துவரை நாடாமல் அலட்சியமாக விட்டுவிடுவது, அதிக நாட்களுக்குத் தொடர்ந்து கண் சம்பந்தமான நோய்களை கவனிக்காமல் இருந்துவிட்டு நோய் முற்றிய உடன் கடைசியாக மருத்துவரை நாடுவது இப்படி பல்வேறு காரணங்களினால் கண்சம்பந்தமாக பல வகையான நோய்கள் வருகின்றன.
முக்கியமாக வரக்கூடிய கண் சம்பந்தமான நோய்கள்

கிட்டப் பார்வை, தூரப் பார்வை, பார்வை மந்தம், கண்ணில் சதை வளர்தல், கண்ணில் பூவிழுதல், கண்களில் உள்ள மெல்லிய நரம்புகளில் இரத்தம் உறைதல் காரணமாகப் பார்க்கின்ற பொருட்கள் கலங்களாகத் தெரிதல், கண்ணில் நீர்வடிதல், மாலைக்கண், வெளிச்சத்தைப் பார்க்க முடியாமை, கண் கோளாறு தொடர்ந்து இருப்பதால், அதன் மூலமாக வரும் தலைவலி, தொற்று நோய்க் கிருமிகள் மூலம் வரும் கண் நோய், மஞ்சள் காமாலை மூலமாக வரும் நோய், கண் கோளாறு மூலமாக தூக்கமின்மை, வெள்ளெழுத்து என்னும் கண்பார்வைக் குறைவு இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

கண்ணில் நோய் வரக் காரணமென்ன?
முதலில் கூறியது போல ஆரோக்கியம் இல்லாமல் குழந்தைகளைப் பெறும் பெற்றோர் ஒரு காரணம். சத்துக் குறைவான உணவுகளை சாப்பிடுவதாலும் வரலாம். கல்லீரல் பாதிக்கப்பட்டாலும் கண்நோய்கள் வரும். பார்வை நரம்பில் ஏற்படும் இரத்தக்குறைவு, இரத்த ஓட்டம் தடைபடுதல், இரத்த அழுத்தம் குறைவு காரணமாகவும் கண்கோளாறுகள் வரலாம். பரம்பரைக் காரணமாகவும் கண் கோளாறுகள் வரலாம். தொற்று நோய்க் கிருமிகள், காற்றில் வருகின்ற கிருமிகள், தூசி, தீ போன்றவற்றாலும் கண் நோய்கள் வரலாம்.
உணவு வகைகளில் கண்களைப் பாதுகாக்க…
வைட்டமின் ஏ பிரிவு சத்து உடலில் குறைவாக இருந்தாலும், இரத்த சோகை, நரம்பு பலவீனம் இவற்றால் வரும் கண் கோளாறுகளுக்கு கேரட், பீட்ரூட், வெண் பூசணி, முள்ளங்கி, வெண்டைக்காய், நாட்டுத் தக்காளி, பசும்பால், பசு மோர், சுத்தமான தேன், கொத்தமல்லி, முளை கட்டிய தானிய வகைகள் இவற்றை தினசரி உணவுகளில் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.
கீரை வகைகளில் கரிசலாங்கண்ணிக் கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, பசலைக் கீரை, முருங்கைக் கீரை, இவைகளில் ஏதாவது ஒரு கீரை வகையை தினமும் சாப்பிடலாம்.பழ வகைகளில் பப்பாளி, மாம்பழம், அன்னாசி, மாதுளை, ஆப்பிள், பேரீச்சம் பழம், நெல்லிக்காய் சாப்பிடலாம்.அசைவ உணவில் மீன் எண்ணெய் மட்டும் சாப்பிடலாம்.
சத்துக் குறைவால் கண் நோய்கள் நீங்க…
சுத்தமான கேரட் கால் கிலோ எடுத்து சாறு பிழியவும், கொத்தமல்லி இலைச்சாறு 10 மில்லி, தேங்காய் அரை மூடி, ஏலக்காய் 2, தேவையான அளவு சுத்தமான பனங்கற்கண்டு எடுத்துக் கொள்ளவும். கொத்தமல்லி இலைச்சாறு, கேரட் சாறு, தேங்காய் துருவியது, பனங்கற்கண்டு இவற்றுடன் இரண்டு டம்ளர் (400 மில்லி) தண்ணீர் கலந்து ஏலக்காயை பொடி செய்து சேர்த்து காலை / மாலை இருவேளை காபி, டீக்கு பதிலாக தினமும் குடித்து வரலாம். (இதை தினமும் புதிதாக செய்ய வேண்டும்)
பப்பாளிப் பழம் 4 துண்டு, தேங்காய்ப் பால் அல்லது பசும்பால் 1 டம்ளர் (200 மில்லி) தேவையான அளவு பனங்கற்கண்டு, ஏலக்காய் 2 பொடி செய்து போட்டுக் கலக்கி தினமும் காலை / மாலை இருவேளைச் சாப்பிடலாம்.
புதிய பேரீச்சம் பழம் கொட்டை நீக்கியது 5, இரண்டு ஸ்பூன் நெல்லிக்காய் பொடி, 1 ஸ்பூன் தேன் இவற்றை 1 டம்ளர் தண்ணீரில் போட்டு இருவேளை சாப்பிடலாம்.
கண்பார்வை தெளிவடைய…
பப்பாளிப் பழம் 2 துண்டு, பேரிச்சம் பழம் 4, செர்ரிபழம் 10, அன்னாசி பழம் 2 துண்டு, ஆப்பிள், திராட்சை 50 கிராம், மலை அல்லது ரஸ்தாளி வாழைப்பழம் 2, மாம்பழம் 2 பத்தை, பலாச் சுளை 2 (மாம்பழம் அல்லது பலா_ சீசனில் மட்டும் போட்டால் போதுமானது) இவற்றை சிறுதுண்டுகளாக நறுக்கி ஒரு டம்ளர் தேங்காய்ப் பால் அல்லது பசும் பாலுடன் சேர்த்துக் கலக்கி தேவையான அளவு தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட நல்லது.
அறுகம்புல் சாறு 50 மில்லி எடுத்து அத்துடன் ஒரு இளநீர் கலந்து தேவையான அளவு தேன் சேர்த்து தினமும் காலை வெறும் வயிற்றில் தொடர்ந்து சாப்பிட்டுவர குணமாகும்.
பொதுவாக கல்லீரலுக்கும் கண்ணுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஆதலால் கல்லீரல் நோய் வராமல் பாதுகாக்க வேண்டும். அதற்குக் கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி கீரையைத் தினமும் சாப்பிட வேண்டும். தினமும் 200 கிராம் திராட்சை சாப்பிட்டுவரலாம். கொழுப்பு உணவுகள், மசாலா உணவுகள், மாமிச உணவுகள், இவற்றைக் கூடிய வரை தவிர்ப்பது நல்லது.

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites