அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

ஞாயிறு, 2 ஜனவரி, 2011

அவுலியாக்களை கேவலப்படுத்தியவர்கள் யார்?


அப்துந் நாஸிர், கடையநல்லூர்
கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். அவர்கள் (இறைவனை) நம்புவார்கள். (அவனை) அஞ்சுவோராக இருப்பார்கள் (10 62
மேற்கண்ட வசனத்தில் அல்லாஹýத்தஆலா இறைநேசர்கள் யார் என்பதை தெளிவாகக் குறிப்பிடுகிறான். ''அவர்கள் இறைவனை நம்புபவர்கள், அவனை அஞ்சுபவர்கள்'' என்ற வாசகம் அவுலியாக்களாகிய இறைநேசர்கள் யார்? என்பதைத் தெளிவு படுத்துகிறது.   இறைநேசர்கள் என்பவர்கள் தனி ஜாதியினரோ, பிரிவினரோ அல்ல. யாரெல்லாம் அல்லாஹ்வை ஈமான் கொண்டு, அவனைப் பயந்து வாழ்கிறார்களோ அவர்கள் அனைவரும் இறைநேசர்கள்தான். இப்படிப்பட்ட முஃமின்களை திட்டுவது பாவமாகும். ஆனால் மார்க்கத்தை விளங்காதவர்கள் அவுலியாக்கள் என்பதற்கு அல்லாஹ் கூறாத வியாக்கியானங்களையெல்லாம் கொடுத்துக் கொண்டு, தங்களுடைய வயிற்றுப் பிழைப்பிற்காக  அவர்களின் பெயரால் கட்டுக் கதைகளையும், கப்சாக்களையும் இட்டுக்கட்டியுள்ளனர். இந்த கதைகளையும், கப்சாக்களையும் படிக்கக் கூடியவர்கள் இப்படியெல்லாமா ஒரு இறைநேசர் இருப்பார்? என்று எண்ணக் கூடிய அளவிற்கு மோசமானவையாக, அருவருக்கத் தக்கவையாக  உள்ளன.. இந்த அடிப்படையில்தான் ''ஷாஹல் ஹமீது'' என்ற மவ்லிதில் இவர்கள் எழுதிவைத்துள்ள கப்சாக்கள் களியக்காவிளை விவாவத்தில் தவ்ஹீத் ஜமாத்தினரால் எடுத்துவைக்கப்பட்டது. இதனைக் கேட்டவர்களில் சிலர் நாம் அவ்லியாக்களை திட்டியதாக நம்மீது தவறான குறற்ச்சாட்டுகளைக் கூறியுள்ளனர். எந்த ஒரு முஃமினும் , எந்த ஒரு அவ்லியாவையும் திட்டமாட்டான். திட்ட வேண்டிய அவசியமும் இல்லை. அவர்கள் மவ்லித் என்ற பெயரில் புனிதமாக ஓதிவரக்கூடியதிலிருந்துதான் நாம் எடுத்துக் கூறினோமே தவிர நாமாக எதையும் இட்டுக் கட்டி கூறவில்லை. இதிலிருந்தே அந்த மவ்லிதுகளை புனிதம் எனக்கருதி ஓதக்கூடியவர்கள்தான் அவ்லியாக்கள் என்று அவர்கள் நம்புபவர்களை கேவலப்படுத்துகிறார்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அந்த மவ்லித் குப்பைகளில் வரக்கூடிய கப்சாக்களில் சிலவற்றைக் காண்போம்
பிறர்மகனை தன்மகனாக்கிய அவ்லியா
ஷாஹýல் ஹமீது அவர்கள் ஒப்புக் கொள்ளப்பட்ட  ஹஜ்ஜை நாடிப் புறப்பட்டு லாஹýர் எனும் ஊரை அடைந்தார்கள். அங்கே அவர்களை தலைசிறந்த முஃப்தி பெரியார் நூருத்தீன் அவர்களை சந்தித்தார்கள். ஷாஹýல் ஹமீது அவர்களிடம் தமக்கு ஒரு குழந்தை வேண்டுமென வேண்டினார்கள். அதற்கு ஷாஹýல் ஹமீது அவர்கள் ''காலம் சென்ற எனது மூத்த சகோதரர் யூசுப் அவர்களின் பெயரை முதல் குழந்தைக்குச் சூட்டி மறுப்போ கவலையோ இன்றி அக்குழந்தையை என்னிடம் ஒப்படைக்க வேண்டும். அக்குழந்தையை எனது மகனாக நான் ஆக்கிக் கொள்வேன். அக்குழந்தை எனக்கு காணிக்கையாக வழங்கப்படும் அனைத்துக்கும் வாரிசாகத் திகழ்வார் என்ற நிபந்தனையிட்டார்கள். நூருத்தீன் இந்த நிபந்தனையை ஒப்புக் கொண்டபின் வெற்றிலை எச்சிலில் சிறிதளவு அவருக்குக் கொடுத்தார்கள். ஷாஹýல் ஹமீதின் மகிமையால் அல்லாஹ் அவருக்கு நான்கு ஆண்மக்களையும் பெண்மக்களையும் அளித்தான்.
(ஷாஹýல் ஹமீத் மவ்லித் பக்கம் 229)
குழந்தையை கொடுக்கும் அதிகாரம் அல்லாஹ் ஒருவனுக்குத்தான் இருக்கிறது. நபி இபுறாஹிம் (அலை), ஜகரியா (அலை) அவர்கள் கூட அவர்கள் நினைத்த நேரத்தில் தங்களுக்கென்று குழந்தையை உருவாக்கிக் கொள்ள முடியவில்லை. இது வெல்லாம் திருமறைக் குர்ஆன் கூறக்கூடிய உண்மை வரலாறு. அல்லாஹ் கூறுகிறான்.
வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைக்கிறான். தான் நாடியோருக்குப் பெண்(குழந்தை)களை வழங்குகிறான். தான் நாடியோருக்கு ஆண்(குழந்தை)களை வழங்குகிறான்.அல்லது ஆண்களையும், பெண்களையும் சேர்த்து அவர்களுக்கு வழங்குகிறான். தான் நாடியோரை மலடாக ஆக்குகிறான். அவன் அறிந்தவன்; ஆற்றலுடையவன் (42 51, 52)
ஆனால் எந்த ஆதாரமும் இல்லாத இந்த கப்சா கதையில் ஷாஹýல் ஹமீத் என்பவர் நினைத்த நேரத்தில் குழந்தையைக் கொடுப்பாராம். அதிலும் வெற்றிலைச் சாரில் பிள்ளை கொடுத்தாராம். இதை நம்பக்கூடியவர்கள் நிச்சயமாக மாபெரும் இறை நிராகரிப்பில் இருக்கிறார்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
   அதுமட்டுமல்ல அடுத்தவருக்கு பிறந்த மகனை தன்னுடைய மகன் என்று ஒரு அவ்லியா கூறலாமா? இது எவ்வளவு அசிங்கமான காரியம்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ''ஒரு தாய் எவருடைய அதிகாரத்தில் (மனைவியாக) இருக்கும் போது குழந்தையைப் பெற்றெடுத்தாளோ அவருக்கே குழந்தை உரியது.''
  அறிவிப்பவர் ஆயிஷா (ரலி)     நூல்  புகாரி (6750)
மார்க்கம் இப்படிக் கூறியிருக்க ஒரு தம்பதியினர் பெற்றெடுத்த குழந்தை  ஷாஹýல் ஹமீது தன் மகனென்று கூறினார் என அவர்களின் பெயரில் இப்படி கதைகட்டியுள்ளார்களே, அதையும் புனிதம் என்று கருதி ஓதியும் வருகிறார்களே இவர்கள்தான் அவ்லியாக்களை கேவலப்படுத்தியவர்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை
   ஷாஹுல் ஹமீது அவர்கள் உண்மையிலே ஒரு இறைநேசராக இவ்வுலகில் வாழ்ந்திருந்தார்கள் என்றால் இப்படி ஒரு போதும் கேட்டிருக்க மாட்டார்கள். இவர்கள் அவர்களை இழிவு படுத்த வேண்டும் என்பதற்காக இப்படி இட்டுக்கட்டி பொய்யாக எழுதிவைத்துள்ளார்கள்.
ஒரு பிள்ளை இரண்டு தகப்பன்கள்
(ஷாஹýல் ஹமீத் அவர்களின் வெற்றிலை வரத்தால்) யூசுப் பிறந்து ஏழு வயதை அடைந்தார். அப்போது '‏யூசுபே உன்மேல் அன்பு வைத்துள்ள உனது வருகைக்காக மஸ்ஜிதில் ஹராமில் காத்திருக்கின்ற உனது உண்மையான தந்தையிடம் போய்ச் சேர்ந்து கொள்.' என்று ஒரு அசரீரியைக் கேட்டார்.உடனே தம் தந்தையிடம் வந்து எனது உண்மையான தந்தை யார்? என்று கேட்டார். இதைக்கேட்டு தந்தை வியந்தார். திகைத்தார். சிந்தித்தார். பின்னர் நினைவு கூர்ந்தார். இந்த இரகசியமான செய்தியை உனக்கு கூறியவர் யார்? என்று கேட்டார். யாவற்றையும் அறிந்த அல்லாஹ்தான் எனக்கு அறிவித்துக் கொடுத்தான். என்று யூசுப் கூறினார். மேலும் தொடர்ந்து உனது உயிருக்குரிய தந்தை பைதுல் ஹராமுக்கு பயணமாகிவிட்டார்.எனக் கூறினார்.
அதற்கு யூசுப் அல்லாஹ்வின் மீதாணையாக நான் அவரிடம் கால்நடையாகவே நடந்து செல்வேன். எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் அவரைச் சந்திப்பேன். எனக் கூறினார் ஆயினும் அவர் தடை செய்யப்பட்டார். நான் புறப்பட்டே ஆகவேண்டும் என்று  கூறிவிட்டு தனியாகப் நடக்கலானார். அதன் பிறகு தன் குடும்பத்தாரிடம் திரும்பிப் பார்க்க வில்லை. ஸன்ஆ கடற்கரையை அடைந்த போது ஷாஹýல் ஹமீத் அவர்கள் இவரது வருகையைப் பற்றித் தம் சகாக்களுக்கு கூறினார்கள். அவரை வரவேற்பதற்காக தமது தோழர்களில் சிலரை அனுப்பினார்கள். வந்து சேர்ந்ததும் அவரை வாழ்த்தி வரவேற்ற மரியாதை செலுத்தினார்கள். நீர் தான் எனது உண்மையான மகன். எனது கலீபாக்களில் பெரியவரும் நீர்தான். மேலும் எனது நேர்ச்சை செய்யப்படும் பொருட்களுக்கு தலைமுறை தலைமுறையாக நீரே வாரிசாவீர் என்று கூறினார்கள்.
(ஷாஹýல் ஹமீத் மவ்லித் பக்கம் 229)
ஒரு மனிதருக்கு இரண்டு தந்தை இருக்க முடியுமா? உண்மையில் அல்லாஹ் யூசுபிடம் இவ்வாறு கூறியிருக்க முடியுமா? அல்லாஹ் கூறினான் என்ன சான்று?  என்று பல கேள்விகள் இதிலே வருகின்றன. வளர்ப்பு மகன் கூட உண்மையான மகன் ஆகமாட்டான் என இறைவன் திருமறையில் கூறியிருக்க ஒரு அவ்லியா மற்றொருவருடைய மகனுக்கு நான்தான் உண்மையான தந்தை என எப்படி உரிமை கொண்டாட முடியும்.
உங்களால் வளர்க்கப்படும் பிள்ளைகளை உங்கள் பிள்ளைகளாக அல்லாஹ் ஆக்கவில்லை இது உங்கள் வாய்களால் கூறும் வார்த்தை. அல்லாஹ் உண்மையே கூறுகிறான். அவனே நேர் வழி காட்டுகிறான்.அவர்களை அவர்களின் தந்தையருடனே சேர்த்து அழையுங்கள்! அதுவே அல்லாஹ்விடம் நீதியானது. (33 4,5 )
 வளர்ப்பு மகனாக இருந்தால் கூட தன்னுடைய மகன் என்று சொல்லக் கூடாது , அவனுடைய உண்மையான தந்தையின் பெயருடன்தான் அவனை அழைக்க வேண்டும் என அல்லாஹ் குர்ஆனில் கூறியிருக்கும் போது அல்லாஹ் யூசுபை நோக்கி ஷாஹýல் ஹமீதுதான் உன்னுடைய தந்தை எனக் கூறியிருப்பானா? இது அல்லாஹ்வின் மீதே இட்டுக் கட்டி கூறுவதல்லவா? ஷாஹýல் ஹமீது என்பவரை இழிவுபடுத்துவதல்லவா? ஒருவர் குடும்பத்தை கவனிக்காமல் அவர்களை விட்டும் புறக்கணித்துச் செல்லலாமா? இது மார்க்கத்திற்கு மாற்றமான காரியம் அல்லவா?
 நிச்சயமாக இதை புனிதம் எனக் கருதி ஓதுபவர்கள் அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டக் கூடிய பாவிகள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை அல்லாஹ் கூறுகிறான்
   அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டுபவனை விட அல்லது அவனது வசனங்களைப் பொய்யெனக் கருதுபவனை விட அநீதி இழைத்தவன் யார்? அநீதி இழைத்தோர் வெற்றி பெற மாட்டார்கள் ( 6 21)
இரக்கமற்ற அவ்லியா
ஷாஹýல் ஹமீத் அவர்கள் நத்தம் என்னும் கிராமத்தில் ஓரிரவு தங்கினார்கள். தமது மான் குட்டிக்காக ஒரு குடும்பத்தாரிடம் பால் கேட்டனர். அவர்களிடம் பால் இருந்தும் அதைத் தர மறுத்து விட்டனர். அன்றிலிருந்து இன்று வரை அந்தக் குடும்பத்தினருக்கு இரகசியமாகவோ பகிரங்கமாகவோ பால் கிடைக்காமல் ஆகிவிட்டது. அவரது பெருந்தன்மையினால் சோதனைகளிலிருந்தும், சிரமங்களிலிருந்தும் அல்லாஹ் நம்மை காப்பானாக.
(ஷாஹýல் ஹமீத் மவ்லித் பக்கம் 235)
வீடுகளில் பல தேவைகளுக்காக பால் வைத்திருப்பார்கள். அவர்களுடைய வீட்டில் குழந்தைகள் இருந்திருக்கலாம். அல்லது அந்த வீட்டார்கள் தேவைப்படும் போது சாப்பிடுவதற்கு பாலை வைத்திருக்கலாம். நமக்குச் சொந்தமாக நம்மிடம் ஒரு பொருள் இருக்கும் போது நாம் நாடியவர்களுக்கு கொடுக்கவும் செய்யலாம். கொடுக்காமலும் இருக்கலாம். அது நம்முடைய இஷ்டம். இது மார்க்க அடிப்படையில் தவறு கிடையாது. ஷாஹýல் ஹமீது அவர்கள் வைத்திருந்த மானுக்கு ஒரு வீட்டார் பால் கொடுக்கவில்லை என்பதற்காக அவ்வீட்டாரை ஒரு அவ்லியா சபிக்கலாமா?இப்படி சபித்தவர் ஒரு இறைநேசராக இருக்க முடியுமா? ஒரு வாதத்திற்கு சரி என்றே வைத்துக் கொள்வோம் ஒருவர் தவறு செய்தால் அவரை மட்டும்தானே சபிக்க வேண்டும் காலம் காலமாக அந்த வீட்டார் ஏன் பாலே அருந்த முடியாதவர்களாக பாதிக்கப்படவேண்டும்.? இப்படி இறைவன் கூட தண்டனை வழங்க மாட்டான். ஒருவர் செய்த பாவத்திற்காக எந்த காரணத்திற்காகவும் மற்றவர்கள் தண்டிக்கப்படக்கூடாது. அவ்வாறு செய்பவன் ஒரு அவ்லியாவாக, ஏன் ஒரு மனிதத் தன்மை உள்ளவனாகக் கூட இருக்க முடியாது. இப்போது சிந்தித்துப் பாருங்கள் ஷாஹýல் ஹமீது மேல் இவ்வாறு நடக்காத ஒன்றை இட்டுக்கட்டிக் கூறியவர்கள் அவ்லியாக்களை கேவலப்படுத்தியவர்களா? அல்லது இதுவெல்லாம் பொய். கட்டுக் கதைகள், இவற்றைப் படிப்பவன் மாபெரும் பாவத்தைச் செய்கிறான் என்ற சொல்லக்கூடியவர்கள் அவ்லியாக்களை கேவலப்படுத்தியவர்களா.
நல்ல தண்ணியை உப்புத் தண்ணியாக்கிய அவ்லியா
   ஷாஹýல் ஹமீது அவ்லியா அவர்களும், அவரது பக்கிரிகளும் கீழக்கரையிலுள்ள மக்களிடம் வந்து அவர்களிடம் உணவு கேட்டனர். அவ்வூர்வாசிகள் அவர்களுக்கு சிறிதும் விருந்துபச்சாரம் செய்யவில்லை. அவர்களுக்காக விளக்கையும் பற்றவைக்கவில்லை. அவர்களுக்கு கீழக்கரை வாசிகள் உப்புத்தண்ணீரைத்தான் கொடுத்தார்கள். எனவே ஷாஹýல் ஹமீது அவர்களுடைய நாவில் ''நிச்சயமாக இந்த ஊர்வாசிகளின் கிணறுகள் நல்ல தண்ணீரை ஊற்றெடுக்காது. மிகவும் தாகத்தோடு ஒருவன் சென்றாலும் அதிலிருந்து அருந்த முடியாது'' என்று (சாபமாக) வந்தது. அன்றிலிருந்து சதகத்துல்லா என்ற அவ்லியா வரும் காலம் வரை அந்த ஊரின் நீர் நிலைகள் உப்பாகவும் கசப்பாகவும் மாறிவிட்டது. அதைப் பயன்படுத்துபவன் தன்னுடைய முகத்தில் சூட்டைத் தவிர வேறெதையும் பெற்றுக் கொள்ளமாட்டான்
(ஷாஹýல் ஹமீத் மவ்லித் பக்கம் 235)
தண்ணீரை நல்ல தண்ணியாகவும், உப்புத் தண்ணியாகவும் மாற்றக்கூடிய ஆற்றல் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டும்தான் இருக்கிறது.
"உங்கள் தண்ணீர் வற்றி விட்டால் ஊறி வரும் நீரை உங்களுக்குக் கொண்டு வருபவன் யார் என்பதற்குப் பதில் சொல்லுங்கள்!'' எனக் கேட்பீராக! (67 30)
நீங்கள் அருந்தும் தண்ணீரைப் பற்றிச் சிந்தித்தீர்களா? மேகத்திலிருந்து அதை நீங்கள் இறக்கினீர்களா? அல்லது நாம் இறக்கினோமா? நாம் நினைத்திருந்தால் அதை உப்பு நீராக்கியிருப்போம். நன்றி செலுத்த மாட்டீர்களா?(56 68 69, 70)
மேற்கண்ட வசனங்களிலிருந்து ஷாஹýல் ஹமீத் நல்ல தண்ணீரை உப்புத் தண்ணீராக மாற்றினார் என்பது மாபெரும் கப்சா என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அது மட்டுமல்ல சிலர்கள் செய்த தவறுக்காக அவர்களை சபிக்கலாமா? சபிப்பவர் இறை நேசரா? ஒரு வாதத்திற்கு சபித்தது சரியென்று வைத்துக்கொள்வோம் ஒரு ஊரிலே எந்தப் பாவமும் அறியாத குழந்தைகள் இருப்பார்கள். விலங்கினங்கள் இருக்கும், இந்தப் பாவத்தில் பங்கு பெறாத பெண்கள் , ஆண்கள் இருப்பார்கள். இவர்கள் அனைவருக்கும் தண்ணீர தேவைப்படும். அந்த ஊரிலுள்ள தண்ணீரை உப்புத் தண்ணீராக மாற்றி விட்டால் பாவம் செய்யாத இவர்களெல்லாம் பாதிக்கப்படுவார்களே? என்பதையாவது இந்த அவ்லியா சிந்தித்திருக்க வேண்டாமா? சரி காலம் காலமாக, தவறில் பங்கெடுக்காத, வருங்கால தலைமுறையும் செய்யாத பாவத்திற்காக ஏன் பாதிக்கப்படவேண்டும்.? ஒருவர்  செய்த தவறுக்காக மற்றவர்களை தண்டிக்கலாமா.? நிச்சயமாக இது மனிதத் தன்மையற்ற செயல். இப்படிச் செய்தவர் நிச்சயமாக இறைநேசராக இருக்க முடியாது. ஒருவன் நமக்கு அநீதி இழைத்திருந்தாலும்  அவன் பாதிக்கப்படும் போது உதவி செய்பவன்தான் உண்மையான முஃமின். ஆனால் தாகத்தோடு செல்பவன் கூட சிறிதும் அருந்த முடியாதபடி செய்திருப்பது எவ்வளவு பெரிய அநியாயம்.
   ஷாஹýல் ஹமீது அவர்களை இப்படிபட்ட கொடுமைக்காரராகக் காட்டி இட்டுக் கட்டியவர்கள் அவுலியாக்களை கேவலப்படுத்தியவர்களா? அல்லது அது தவறு, இது கட்டுக்கதை, இதை நம்புவதோ ஓதுவதோ பாவம் என்று கூறுபவர்கள் கேவலப்படுத்தியவர்களா? சிந்தித்துப் பாருங்கள். ஷாஹýல் ஹமீது அவர்கள் உண்மையான அவ்லியாவாக இருந்திருந்தால் அவர்கள் இப்படிச் செய்திருக்க மாட்டார்கள் என்றே நாம் நம்புகிறோம். ஏனென்றால் அவுலியாக்கள் மிகவும் நல்லவர்கள். ஆனால் இந்த மவ்லித் குப்பைகள் பொய்யானவை என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
கொள்ளையடித்த சீடர்களும். துணைநின்ற அவ்லியாவும்
ஷாஹýல் ஹமீத் அவர்களும் அவர்களுடன் வந்த பக்கிரிகளும் ஆய்க்குடிவால் என்ற ஊரில் குளக்கரையில் தங்கினர். நிழல் தேடி அங்குள்ள மரங்களினடியில் அமர்ந்தார்கள். அப்போது ஒரு கிராம வாசி ஆட்டுத் தோல் மான் தோல் ஆகியவற்றை விற்பனை செய்து கொண்டு வருவதைக் கண்டனர். காசு வாங்காமல் ஷாஹýல் ஹமீதுக்கு காணிக்கையாகத் தரப்படும் பொருள் என்று எண்ணிய பக்கிரிகள் அந்தத் தோலை எடுத்துக் கொண்டார்கள். உடனே அந்தக் கிராமவாசி ஷாஹýல் ஹமீதிடம் முறையிட்டார். கடுமையாக அழுதார்.இதனால் அவர் மீது இரக்கம் கொண்ட ஷாஹýல் ஹமீத் அவர்கள் உனது தோலின் விலையளவுக்கு குளத்து மண்ணை பணமாக எடுத்துக் கொள் என்று கூறினார்கள். கட்டளையிடப்பட்டவாறே அவர் முழுமையாக எடுத்துக் கொண்டார். தனது குடும்பத்தாரிடம் மகிழ்ச்சியுடன் திரும்பினார். அவரது அருளால் நமது காரியங்களை அல்லாஹ் சிரமமானதாக ஆக்காமல் எளிதாக்கட்டும்.
(ஷாஹýல் ஹமீத் மவ்லித் பக்கம் 234)
   குளத்து மண்  பணமாக மாறியது என்பது மாபெரும் பொய் என்பதில் எந்தச் சந்தேகமும். இதை இறைவன் தன் குர்ஆனிலும் கூறவில்லை  நபியவர்கள் ஹதீஸிலும் இவ்வாறு வரவில்லை. நபிமார்கள் கூட தாங்கள் நினைத்த நேரத்தில் நினைத்த மாதிரியெல்லாம் எதையும் செய்ய முடியாது. ஷாஹýல் ஹமீது அவர்கள் இவ்வாறு செய்தார் என நம்புவது இஸ்லாத்தின் அடிப்படைக்கே எதிரானதாகும். மேலும் ஒருவருடைய பொருளை அநியாயமாக பறிப்பது மாபெரும் பாவமாகும். சிறிதளவு மோசடி செய்தால் கூட மறுமையில் கடுமையான தண்டனை இருப்பதாக ஹதீஸ்களில் வந்துள்ளது. இப்படியிருக்க வறுமையில் வாடிய ஒரு வியாபாரியின் பொருட்களை அநியாயமான முறையில் பறித்தது எவ்வளவு பெரிய பாவம். சீடர்கள் அறியாமையின் காரணமாக இவ்வாறு செய்திருந்தாலும் அதை பார்த்த அவுலியா அவர்களைக் கண்டித்திருக்க வேண்டாமா.? இப்படி கண்டிக்காமல் ஒரு அவ்லியா இருந்திருப்பாரா? அந்த வியாபாரி கடுமையாக கதறி அழுகிறார் அப்போதாவது அவருடைய பொருட்களை திருப்பிக் கொடுக்குமாறு தன்னுடைய சீடர்களிடம் கூறியிருக்க வேண்டாமா? இப்படியெல்லாம் செய்யாமல் குளத்து மண்ணை தங்கமாக்கி கொடுத்தால் என்ன அர்த்தம்?  சீடர்கள் யாருடைய பொருளையும் கொள்ளையடிக்கலாம் என்று அவர்களைத் திருட்டுத் தொழில் செய்வதற்கு தூண்டிவிடுவதைப் போல் இருக்கிறது.
மேலும் நேர்ச்சை என்பது ஒரு வணக்கம். அதை இறைவனுக்கு மட்டும்தான் செய்யவேண்டும். இறைவனுக்கு செய்ய வேண்டிய வணக்கம் தனக்கு செய்யப்படும்போது ஒரு அவ்லியா அதை ஏற்றுக்கொள்ளலாமா? இறைவணக்கத்தை தனக்கு செய்ய வேண்டும் என நினைப்பவர் இறை நேசராக இருக்க முடியுமா? இறை விரோதியாக இருக்க முடியுமா? சிந்தித்துப் பாருங்கள்.
   இப்படி கப்சாக்களை இறைநேசர்கள் என்ற பெயரில் எழுதி வைத்திருப்பவர்கள் அவுலியாக்களை கேவலப்படுத்தியவர்களா? அல்லது கூடாது என்பவர்களா? சிந்தனை செய்து பாருங்கள்.
காலில் விழுந்தவர்களை கண்டிக்காத அவ்லியா
ஷாஹþல் ஹமீது அவர்களும் அவர்களுடன் வந்த பக்கீர்களும் தென்காசியில் சில நாட்கள் தங்கினார்கள். அதன் சுற்றுப் புறங்களிலெல்லாம் கடுமையான பஞ்சம் நிலவியது. அவர்களில் எவரிடமும் பசியைப் போக்கும் உணவு இருக்க வில்லை. அவர்களில் மனோ இச்சை மிகுந்த மூடன் ஒருவன் முன்வந்து அங்குள்ள கோவிலின் காளை மாட்டை அறுத்தான். சீடர்கள் அனைவருக்கும் அதன் இறச்சியைப் பங்கிட்டுக் கொடுத்தான். கோவில் அறங்காவலர்கள்ôஹுல் ஹமீத் அவர்களிடம் கூட்டமாக வந்த வாதம் செய்தனர் உடனே ஷாஹýல் ஹமீத் அவர்கள் மாட்டின் எலும்புகளைத் திரட்டக் கட்டளையிட்டார்கள். தமது கைத்தடியால் அதனை அடித்தார்கள். உடனே அல்லாஹ் அதற்கு உயிர் கொடுத்தான். மாடு உயிர் பெற்று எழுந்தது. கோவில் அறங்காவலர்கள் அவருக்கு சாஷ்டாங்கம் செய்து விழுந்தனர்.ஸலாம் கூறினர். அவரிடம் இருந்து மரியாதையுடன் திரும்பிச் சென்றனர். இரு உலகிலும் அல்லாஹ் அவரை நமக்கு இமாமாக ஆக்குவானாக.

இறந்து போன ஒரு உயிரை உயிர்ப்பிக்கின்ற அதிகாரம் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டும்தான் இருக்கிறது. இறைத்தூதர்கள் மக்களுக்கு தாங்கள் உண்மையான இறைத்தூதர்கள்தான் என்று காட்டுவதற்காக இறைவன் ஒரு சில இறைத்தூதர்களுக்கு தன்னுடைய அனமதியின் மூலம் அவர்கள் ஒரு சிலரை உயிர்ப்பிக்குமாறு செய்திருக்கிறான். அந்த நபிமார்கள் கூட தாங்கள் நினைத்த நேரத்திலெல்லாம் எந்த ஒரு அற்புதங்களையும் செய்ய முடியாது அது மட்டுமல்ல எந்த இறைத்தூதராக இருந்தாலும் தான் நினைத்த நேரத்திலெல்லாம் அற்புதங்களைச் செய்ய முடியாது. இதை பல நபிமார்களின் வரலாறு நமக்கு தெளிவு படுத்துகிறது. திருமறைக்குர்ஆனை படிக்கக் கூடியவர்களுக்கு இந்த வரலாறுகளெல்லாம் தெரியும்
ஆனால் மார்க்க அறிவு சிறிதும் இல்லாத இந்த மூடர்கள் ஷாஹýல் என்ற ஒருவர் நினைத்த நேரத்திலெல்லாம் நினைத்த அற்புதங்களைச் செய்தார் என்று கதையழந்துள்ளனர். இறைத்தூதர்களை விட ஏன் இறைவனை விட உயர்ந்து அந்தஸ்திற்கு இறைவனால் படைக்கப்பட்ட மனிதர்களை இவர்கள் கொண்டு சென்று விட்டார்கள். ஒருவர் நினைத்தவுடன் குச்சியால் அடித்து ஒரு மாட்டை உயிர்ப்பிக்க முடியுமா?
முஸா நபியவர்கள் காலத்தில் ஒரு மாட்டை உயிர்பித்ததாக குர்ஆனில் வரக்கூடிய சம்பவம் கூட இறைவனுடைய கட்டளைக்குப் பிறகுதான் அவ்வாறு செய்ததாக வருகிறது. இதையும் நாம் இறைவன் திருமறைக்குர்ஆனில் கூறியதினால்தான் ஈமான் கொண்டுள்ளோம். ஆனால் ஷாஹýல் ஹமீத் என்பவர் மாட்டை உயிர்பித்தார் என எந்தக் குர்ஆனில் கூறப்பட்டுள்ளது.? எந்த ஹதீஸில் வந்துள்ளது.? இவையெல்லாம் மக்களை ஏமாற்றி தங்களுடைய வயிற்றுப் பிழைப்பிற்காக சில மூடர்கள் எழுதிய கப்சாக்கள்தான்.
 மேலும் கோவில் அறங்காலவர்கள் ஷாஹýல் ஹமீத் அவர்களின் காலில் விழுந்து ஸஜ்தா செய்துள்ளார்கள் என்றும எழுதி வைத்துள்ளனர். ஸஜ்தா என்பது இறைவனுக்கு மட்டும் செய்யக் கூடிய ஒரு வணக்கம். எத்தனையோ ஸஹாபாக்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஸஜ்தா செய்ய முன்வந்த போதும் ''படைத்தவனை தவிர வேறு யாருக்கும் ஸஜ்தா செய்வது கூடாது'' என நபியவர்கள் அவர்களைத் தடுத்துள்ளார்கள். நபியவர்களுக்கே ஸஜ்தா செய்வது கூடாது எனும் போது வேறு எவனும் ஸஜ்தா செய்வதற்கு தகுதியானவனாக மாட்டான். அப்படியிருக்க ஒரு அவ்லியா தனக்கு ஸஜ்தா செய்வதை விரும்பியிருப்பாரா? அல்லது அதைத் தடுத்திருப்பாரா?
   ஷாஹýல் ஹமீத் அவர்கள் உண்மையிலேயே ஒரு அவ்லியாவாக இருந்திருந்தால் இப்படி ஸஜ்தா செய்தவர்களை கண்டிக்காமல் இருந்திருக்கமாட்டார்கள். ஆனால் இந்த  மவ்லிதுகளை எழுதிய மூடர்கள் ஷாஹýல் ஹமீது தனக்குஸஜ்தா செய்யப்படுவதை விரும்பினார் என்ற கருத்தில் கதையழந்துள்ளனர். இப்போது அவுலியாக்களை கேவலப்படுத்தியவர்கள் யார்? என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.
   குளத்தங்கரையிலும், தெருக்களிலும் பெண் பார்த்த அவுலியா
ஒருநாள்ஷாஹுல் ஹமீது அவ்லியா அவர்கள் பயான் செய்த பிறகு நாகூர் தெருக்களிலே பெண் பார்க்கும் எண்ணம் கொண்டவராகச் சென்றார். ஒரு குளத்திலே ýருல் ஈன்களைப் போல் இருந்த இரண்டு இளம் பெண்கள் குளித்துக் கொண்டிருப்பதைக் கண்டார். (உடனே குளத்தில் இறங்கி) அந்த இருவரில் மூத்தவளாகிய பீபீ சொஹ்ராவின் தலையைத் தடவி '' இவளுடைய தந்தை மறுப்பேதும் தெரிவிக்காமலும், தாமதப்படுத்தாமலும் நான் இவளை பெண்கேட்பதை ஒத்துக் கொண்டால் இவள்தான் என்னுடைய (வளர்ப்பு மகன்) இரண்டாவது யூசுஃபிற்குறிய என்னுடைய (மரு) மகள்'' என்று கூறினார்.
 (ஷாஹýல் ஹமீத் மவ்லித் பக்கம் 253)
பெண்கள் குளிக்கும் பகுதிக்கு ஒரு அவ்லியா செல்லலாமா? அந்நியப் பெண்ணை தொடுவதே தவறு எனும் போது அவர்கள் குளித்துக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களின் மறைவிடங்கள் எல்லாம் தெரிவதற்கு வாய்ப்பான நிலையில், குளத்தில் இறங்கி அவர்களின் தலையை தடவியது ஒரு இறைநேசர் செய்யக் கூடிய செயலா.? நபியவர்கள் கரம் எந்த அந்நியப் பெண் மீதும் பட்டதில்லை என ஹதீஸ்களில் வருகிறது. இதற்கு நேர்மாற்றமாக நடந்தவர் எப்படி அவுலியாவாக இருக்க முடியும்.? சரி பெண்பார்ப்பதற்கு பெண்ணின் தந்தையிடம் சென்று அதைப் பற்றி பேச வேண்டும். அதை விட்டு விட்டு தெருக்களிலும், குளத்தங் கரைகளிலும் ஏன் சுற்ற வேண்டும்.?
இப்படித்தான் அவுலியாக்களை இழிவுபடுத்தும் வண்ணம் அவுலியாக்கள் என்ற பெயரில் கதைகளையும் கப்சாக்களையும் மவ்லித் என்ற பெயரில் எழுதி வைத்துள்ளனர். இதற்கு இன்னும் ஏராளமான சான்றுகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
இறுதியாக ஒரு கேள்வி சினிமாப் பாட்டுக்களை விட படுகேவலாமாக உள்ள இந்த வரிகளையெல்லாம் கூட்டாக உட்கார்ந்து ஓதினால் நன்மை என்பதற்கு என்ன ஆதாரம்? இதைச் சிந்தித்தாலே போதும் இதை ஓதக்கூடியவர்கள் இந்த மவ்லித் மாயைகளிலிருந்து விடுபட்டு சத்தியக் கருத்துகளை விளங்கிக் கொள்ளலாம்.

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites