அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

வியாழன், 6 ஜனவரி, 2011

இமாம் அபூதாவூத்




ஹதீஸ்களை தொகுத்து மார்க்கத்திற்கு பெரும் தொண்டாற்றிய அறிஞர்களில் இமாம் அபூதாவூத்  அவர்களும் ஒருவர்.
இயற்பெயர்              :           சுலைமான்
குறிப்புப் பெயர்       :           அபூதாவூத்
தந்தை பெயர்           :           அஷ்அஸ்
பிறப்பு                        :            சஜஸ்தான் என்ற ஊரிலே ஹிஜ்ரீ 202வது  வருடத்தில் பிறந்தார். எனவே மக்கள் மத்தியில் அபூதாவூத் சஜஸ்தானீ (சஜஸ்தான் ஊரைச் சார்ந்தவர்) என்று பிரபலியமாகியுள்ளார்கள்.
கல்வி             :   இமாம் அபூதாவூத் வாழ்ந்த காலம் அறிஞர்கள் நிறைந்த காலமாக இருந்ததுடன் அவர்கள் சிறுவயதிலேயே பத்திசாலியாகவும் திகழ்ந்தார்கள். இக்காலச் சூழ்நிலை  இமாம் அபூதாவூத் அவர்கள் கல்வி கற்க மிக ஏதுவாக இருந்தமையால் சிறு வயதிலேயே ஹதீஸ் துறையில் ஈடுபட ஆரம்பித்தார்கள். ஹதீஸ்துறையில் துரிதமாக செயல்பட்டதால் அரும்பெரும் அறிஞர்களை சந்திக்கும் வாய்ப்பு இமாம் அபூதாவூத் அவர்களுக்கு கிடைத்தது. அவர்கள் ஹதீஸ் துறையிலும் மார்க்கச் சட்டத்துறையிலும் பெரும் பங்கு வகித்தார்கள்.
கல்விக்காக பயணித்த ஊர்கள்           : தன்னுடைய 18 வது வயதிலே கல்விக்காக பல ஊர்களுக்கு பயணிக்க ஆரம்பித்தார்கள். ஈராக், கூஃபா, பஸரா, ஷாம், ஹிஜாஸ், எகிப்து, குராஸான், சஜஸ்தான், ரய் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்துள்ளார்கள்.
மாணவர்கள்            :   இமாம் திர்மிதீ, நஸயீ, இப்னு அபித்துன்யா, அபூ அவானா, இப்ராஹிம் பின் ஹம்தான் மற்றும் பலர்.
ஆசிரியர்கள்:  இமாம் அஹ்மத், அலீ பின் மதீனீ, யஹ்யா பின் மயீன், முஹம்மத் பின் பஷ்ஷார் மற்றும் பலர்.
இவர்களின் படைப்புகள்            :  ýனன் அபீதாவூத், அல்மராஸீல், அல்மஸாயீல் அஹ்மத், ýனன் அபீதாவூதைப் பற்றி மக்காவாசிகளுக்கு அவர் எழுதிய கடிதம், சகோதரர்களிடமிருந்து அறிவிக்கும் அறிவிப்பாளர்களின் பெயர் தொகுப்பு, அஸ்ஸýஹ்த் ஆகியவை இன்று வரை நம்மிடம் உள்ளவையாகும்.
இதுவன்றி அர்ரத்து அலா அஹ்லில் கத்ர், அன்னாசிஹ் வல் மன்ஸýஹ், அத்தஃபர்ருத், ஃபளாயிலுல் அன்சார், முஸ்னது ஹதீஸி மாலிக், தலாயிலுன்னுபுவ்வா, அத்துஆ, இப்திதாவுல் வஹீ, அஹ்பாருல் கவாரிஜ், மஃரிஃபதுல் அவ்காத் ஆகியப் புத்தகங்களையும் படைத்துள்ளார். ஆனால் இவைகள் தவறிவிட்டன, கிடைப்பெறவில்லை.
மரணம்:  பஸராவில் எழுபத்து மூன்று வயது நிறைவுற்றவராக ஹிஜ்ரீ 275 ஆம் ஆண்டு ஷவ்வால் மாதம் பதினாறாம் நாள் வெள்ளிக்கிழமையன்று மரணித்தார்கள்.

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites