அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

புதன், 5 ஜனவரி, 2011

வரவேற்கப்படும் பித்அத்களும் புறக்கணிக்கப்படும் நபிமொழிகளும்



இப்னு தாஹிரா
இஸ்லாத்தின் அடிப்படை  திருக்குர்ஆன், நபிமொழிகள் என்ற இரண்டு மட்டும் தான். இஸ்லாத்தின் ஒரு காரியம் உள்ளது என்று ஒருவர் வாதிட்டால் அவர் அதற்குரிய ஆதாரத்தை திருக்குர்ஆன், நபிமொழிகளிலும் இருந்துதான் காட்டவேண்டும். இதைப்போன்று ஒரு காரியத்தை வணக்கம் என்று கருதி செய்வதாக இருந்தாலும் அதற்கும் திருக்குர்ஆன் நபி மொழிகளிலிருந்து ஆதாரம் காட்டவேண்டும். இதற்கு பின்வரும் திருக்குர்ஆன் வசனமும் ஹதீஸýம் சான்றாக உள்ளது.
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! உங்கள் செயல்களைப் பாழாக்கி விடாதீர்கள் ! (அல்குர்ஆன் 47 : 33)
நமது மார்க்கத்தில் இல்லாத ஒரு செயலை யார் செய்கிறாரோ அது (இறைவனிடம்) நிராகரிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் : முஸ்லிம் (3541)
இந்த முக்கியமான அடிப்படையை கவனிக்கித் தவறியதால் ஏராளமான நூதன பழக்கங்கள் இஸ்லாமியர்களிடம் வணக்கமாக கருதப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் திருக்குர்ஆனும் நபிமொழிகளும் நமக்கு கட்டளையிடாத நிபந்தனைகளை விதிப்பதும் அதை நடைமுறைபடுத்த முனைவதும் கடுமையான குற்றமாகும்.
நபி (ஸல்) அவர்கள் எழுந்து அல்லாஹ்வை அவனது தகுதிக்கேற்பப் புகழ்ந்து ''அல்லாஹ்வின் வேதத்தில் இல்லாத நிபந்தனைகளைக் கூறுபவர்களுக்கு என்ன நேர்ந்தது? யார் அல்லாஹ்வின் வேதத்தில் இல்லாத நிபந்தனையை விதிக்கிறார்களோ அவர்களுடைய அந்த நிபந்தனை வீணானது, (செல்லாதது) அவர்கள் நூறு நிபந்தனைகளை விதித்தாலும் சரியே! அல்லாஹ்வின் நிபந்தனைதான் நிறைவேற்றத் தக்கதும் உறுதியானதும் (கட்டுப்படுத்தும் வலிமையுடையதும்) ஆகும்'' எனக்கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் : புகாரீ (2155)
புதுமையான காரியங்களை புகுத்துவதும் அதை அங்கீகரிப்பதும் அல்லாஹ்வின் பார்வையில் மாபெரும் குற்றமாகும்.  மேலும் அதனால் எந்த நன்மையும் கிடைக்காகததுடன் மறுமையில் தண்டைனையும் கிடைக்கும்.
செய்திகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம் (குர்ஆன்) ஆகும்.வழிகாட்டலில் சிறந்தது முஹம்மதின் வழிகாட்டலாகும். செயல்களில் தீயவை (மார்க்கத்தின் பெயரால்) புதிதாக உண்டாக்கப்படுவை ஆகும். (மார்க்கத்தின் பெயரால் புதிதாக உருவாக்கப்படும்) ஒவ்வொரு புதுமையும் வழிகேடு ஆகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி), நூல் : முஸ்லிம் (1573)
நஸயின் அறிவிப்பில் ... ''ஒவ்வொரு வழிகேடும் நரகில் கொண்டு சேர்க்கும்'' என்று இடம் பெற்றுள்ளது.
மார்க்கத்தின் பெயரால் இல்லாத ஒன்றை உருவாக்குவது நரகத்தில் கொண்டு சேர்க்கும் மாபெரும் பாவமான காரியம் என்று நபிகளார் தெளிவாக எச்சரிக்கைச் செய்துள்ளதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
இத்தனை எச்சரிக்கை இருந்தும் கூட மார்கக்த்தின் பெயரால் வணக்கமாக செய்யப்படும் பெரும்பாலன காரியங்களுக்கு திருக்குர்ஆனிலே அல்லது நபிமொழிகளிலே ஆதாரங்கள் கிடையாது. வெறும் கற்பனை கதைகளும் நாட்டு நடப்புகளுமே இதற்கு ஆதாரமாக உள்ளன.
உதாரணமாக பூரியான் பாத்திஹா என்று ரஜப் மாத்தில் ஓதப்படும் பாத்திஹாவிற்கு எந்த திருக்குர்ஆன் வசனம் சான்றாக உள்ளது? எந்த நபிமொழிகள் சான்றாக உள்ளது? ஒரு ஆதாரமும் கிடையாது. இதற்கு உள்ள ஒரே ஆதாரம் ''முன்னோர்கள் செய்தது, நடைமுறையில் உள்ளது'' என்பதுதான். இதைப் போன்று ஏராளமான காரியங்களுக்கு சான்றுகள் எதும் கிடையாது என்பதை நினைவில் வையுங்கள்.
இந்நேரத்தில் மார்க்கத்தில் அனுமதியில்லாத காரியங்களில் ஆர்வம் காட்டும் இஸ்லாமியர்கள் நபிகளார் காட்டித் தந்த ஏராளமான சுன்னத்துகளை புறக்கணிக்கும் மோசமான நிலைûயும் நாம் காண்கிறோம். அவற்றில் சிலதை இங்கு நாம் காண்போம்.
மஃரிப் தொழுகையின் முன் சுன்னத்
ஷஅபான் மாதத்தின் 15 ஆம் நாள் ஷபே பாரஅத் அன்று இரவு முழுவதும் நின்று தொழுகிறார்கள். ஆனால் இதற்கு திருக்குர்ஆனிலே நபிமொழிகளிலோ எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் மஃரிப் தொழுகைக்கு முன்னர் இரண்டு ரக்அத்கள் தொழுவதற்கு நபிமொழிகளில் ஏராளமான சான்றுகள் உள்ளன. இதை யாரும் நடைமுறைபடுத்துவதில்லை என்பதோடு விரும்புபவர்கள் தொழுவதற்கும் நேரமும் தரப்படுவதில்லை. பள்ளிவாசலின் தொழுகை நேரப் பலகைகளில் மஃரிப் பாங்கு அடுத்துள்ள கட்டத்தில் ''உடன்'' என்று நிரந்தரமாக பெயின்டில் எழுதிவைத்துள்ளனர். பாங்கு முடிந்தவுடன் கடமையான தொழுகை நிறைவேற்றப்படுகிறது. இது நபி வழியை புறக்கணிப்பது இல்லையா? நபிமொழியில் இதுபற்றி வந்து செய்திகளை பாருங்கள்.
மஃரிப்புக்கு முன் நீங்கள் தொழுங்கள்! மஃரிபுக்கு முன் தொழுங்கள்! மஃரிபுக்கு முன் விரும்பியவர்கள் தொழுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் அல் முஸனீ (ரலி)
நூல் : புகாரீ (1183)
நான் உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்களிடம் சென்று அபூதமீம் மஃரிபுக்கு முன் இரண்டு ரக்அத்கள் தொழுகிறார்களே உங்களுக்கு இது ஆச்சரியமாக இல்லையா? என்று கேட்டேன். 'நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நாங்கள் அவ்வாறு நாங்கள் செய்து வந்தோம்' என்று விடையளித்தார்கள். இப்போது ஏன் விட்டுவிட்டீர்கள்? என்று நான் கேட்டேன். அதற்கவர்கள் 'அலுவல்களே காரணம்' என்றார்கள்.
அறிவிப்பவர் : மர்ஸத் பின் அப்தில்லாஹ்
நூல் : புகாரீ (1184)
நாங்கள் மதீனாவில் இருந்தபோது தொழுகை அறிவிப்பாளர் மஃக்ரிப் தொழுகைக்காக அறிவிப்புச் செய்துவிட்டால் மக்கள் (நபித்தோழர்கள்) தூண்களை நோக்கிச் சென்று (அதன் அருகில் நின்று) தலா இரண்டிரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். வெளியூரிலிருந்து யாரேனும் பள்ளிவாசலுக்கு வந்தால் மிகுதியான பேர் அவ்விரு ரக்அத்கள் தொழுவதைக் கண்டு (மஃக்ரிப்) தொழுகை முடிந்துவிட்டது என எண்ணிவிடுவர்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி), நூல் : முஸ்லிம் (1521)
,ஃரிபு(க்கு பாங்கு சொன்னது) முதல் நபி (ஸல்) அவர்கள் வெளியே வரும் வரை முதிய நபித்தோழர்கள் (இரு ரக்அத்கள் முன் ஸுன்னத் தொழுவதற்காகத்) தூண்களை நோக்கி விரைவார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி), நூல் : புகாரீ (503)
பள்ளிவாசலில் பெண்கள்
இஸ்லாத்தின் உயிர் நாடியான ஓரிறைக் கொள்கை குழிதோண்டி புதைக்கக்கூடிய தர்ஹாவிற்கு பெண்களை அனுமதிப்பவர்கள், நபிகளார் அனுமதித்த பெண்கள் பள்ளிவாசலில் தொழுவதை தடுப்பது ஏன்? நபிகளார் காலத்தில் பெண்கள் ஆண்கள் ஜமாஅத்துடன் பெண்கள் தொழுததற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.
நபி (ஸல்) அவர்களின் கட்டளையும் அவர்கள் காலத்தில் நடந்த தொழுகையையும் எவ்வளவு தெளிவான கருத்தை தெரிவிக்கின்றன என்பதை கவனியுங்கள்.
நபியவர்களின் கட்டளை
நபி (ஸல்) அவர்கள் நேரடியாகவே பெண்கள் பள்ளிக்கு வருவதை தடுக்கக் கூடாது என கட்டளைபிறப்பித்துள்ளார்கள். இரவு நேரத்தில் கூட பெண்கள் பள்ளிக்கு செல்வதற்கு அனுமதி கேட்டால் அனுமதி வழங்க வேண்டும் என்று நபியவர்கள் கூறியிருப்பதிலிருந்து பெண்களை பள்ளிக்கு வரவிடமால் தடுப்பது மார்க்கத்திற்கு மாற்றமான செயல் என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம்.
இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : உமர் (ரலி) உடைய மனைவியரில் ஒருவர் ýப்ஹ், இஷாத் தொழுகைகளைப் பள்ளியில் ஜமாஅத்தாகத் தொழச் செல்வார். அவரிடம் (உங்கள் கணவர்) உமர் (ரலி) ரோஷக்காரராகவும் இதை விரும்பாதவராகவும் இருப்பதைத் தெரிந்து கொண்டே நீங்கள் ஏன் (பள்ளிக்குச்) செல்கிறீர்கள்' என்று கேட்கப்பட்டது. அதற்கு , ''அவர் என்னைத் தடுக்க முடியாது. ஏனெனில் பெண்கள் பள்ளிக்குச் செல்வதை நீங்கள் தடுக்காதீர்கள் என நபி (ஸல்) கூறியுள்ளனர்'' என்று பதிலுரைத்தார். நூல் : புகாரி (900)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ''உங்களிடம் பெண்கள் இரவில் பள்ளிவாசலுக்குச் செல்ல அனுமதி கோரினால் அவர்களுக்கு அனுமதி வழங்குங்கள்
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) நூல் : புகாரி (865)
ஸாலிம் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : '' அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் '' உங்கள் மனைவியர் உங்களிடம் பள்ளி வாசல்களுக்குச் செல்ல அனுமதி கோரினால் அவர்களை நீங்கள் தடுக்காதீர்கள்'' என்று கூறுவதை நான் கேட்டுள்ளேன்'' என்று (என் தந்தை) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள். அப்போது (என் சகோதரர்) பிலால் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் '' அல்லாஹ்வின் மீதாணையாக நாங்கள் அவர்களைத் தடுப்போம்'' என்று கூறினார்கள். உடனே அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) அவர்கள் (தம் புதல்வர்) பிலால் பின் அப்தில்லாஹ்வை நோக்கி மிகக் கடுமையாக ஏசினார்கள். அதைப் போன்று அவர்கள் ஏசியதை நான் கேட்டதேயில்லை. பிறகு அவர்கள், '' நான் அல்லாஹ்வின் தூதர் (,ஸல்) அவர்கள் கூறியதை உனக்கு அறிவிக்கிறேன்.  ஆனால் நீயோ '' அல்லாஹ்வின் மீதாணையாக அவர்களை நாங்கள் தடுப்போம்' என்று கூறுகிறாயே?'' என்றார்கள்.  நூல் : முஸ்லிம் ( 752)
நபியவர்களிடம் பாடம் பயின்ற இப்னு உமர் (ரலி) அவர்கள் பெண்கள் பள்ளிக்கு வருவதை தடைசெய்த தன்னுடைய மகனிடம் மிகக் கடுமையான முறையில் நடந்து கொண்டது அது எவ்வளவு பெரிய பாவச் செயல் என்பதை தெளிவாகப் படம்பிடித்துக் காட்டுகிறது.
கைக்குழந்தையுடன் பள்ளிக்கு வந்த பெண்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் '' நீண்ட நேரம் தொழுவிக்கும் எண்ணத்துடன் நான் தொழுகையைத் துவக்குகின்றேன். அப்போது குழந்தையின் அழுகுரலை நான் கேட்கிறேன். ( எனக்குப் பின்னால் தொழுது கொண்டிருக்கும்) தாயாருக்குச் சிரமமளிக்கக் கூடாது என்பதற்காக நான் தொழுகையைச் சுருக்கமாக முடித்து விடுகிறேன்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி)  நூல் : புகாரி (709)
ஜமாஅத்துடன் தொழுவதற்காக பள்ளியில் காத்திருந்த பெண்கள்
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : இஸ்லாம் (நன்கு) பரவுவதற்கு முன்னர் நபி (ஸல்) அவர்கள் ஒரு இரவு இஷாவைப் பிற்படுத்தினார்கள். '' பெண்களும், சிறுவர்களும் உறங்கி விட்டனர்'' என் உமர் (ரலி) தெரிவிக்கும் வரை நபி (ஸல்) அவர்கள் தொழுவிக்க வரவில்லை. அதன் பின் வந்து பள்ளியிலுள்ளவர்களை நோக்கி ''இப்பூமியிலுள்ளவர்களில் உங்களைத் தவிர வேறு எவரும் இதை எதிர்பார்த்துக் காத்திருக்க வில்லை.'' என்றாரகள். நூல் : புகாரி (566)
இன்றைக்கு ஆண்கள் எவ்வாறு கூட்டாகச் சென்று பள்ளியில் தொழுகையை நிறைவேற்றுகிறார்களோ அதைப்போன்று நபியவர்களில் காலத்தில் பெண்களும் கூட்டாகச் சென்று ஆண்களோடு ஜமாஅத் தொழுகையில் கலந்து கொண்டுள்ளனர்.
பஜ்ர் தொழுகையில்...
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபி (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுகையைத் தொழுவார்கள். மூமினான பெண்கள் ஆடைகளால் தங்கள் உடல் முழுவதையும் சுற்றி மறைத்தவர்களாக அவர்களுடன் தொழுவார்கள். பின்னர் தங்கள் வீடுகளுக்குச் சென்று விடுவார்கள். அவர்கள் யார், யார் என்பதை யாரும் அறியமாட்டார்கள்.
நூல் : புகாரி (372)
மஃரிப் தொழுகையில்...
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் '' நான் ' வல் முர்ஸலாத்தி உர்பன்' என்ற அத்தியாயத்தை ஓதும் போது அதனைச் செவியுற்ற (என் தாயார்) உம்முல் ஃபழ்லு (ரலி) , '' அருமை மகனே அல்லாஹ்வின் மீதாணையாக, மஃரிப் தொழுகையில் நபி (ஸல்) அவர்கள் இந்த அத்தியாயத்தை ஓதியதுதான் நான் அவர்களிடமிருந்து கடைசியாக செவியுற்றதாகும். நீ அதை ஓதியதன் மூலம் எனக்கு நினைவுபடுத்திவிட்டாய்'' என்று கூறினார்கள். நூல் : புகாரி (763)
தொடர்ந்து பல மாதங்கள் பள்ளிவாசலுக்கு சென்று இமாம் ஜமாஅத்துடன் கலந்து கொண்டால்தான் இமாம் ஓதுகின்ற சில சூராக்கள் நம்முடைய மனதில் பதியும். நபியவர்களின் பின்னால் தொழத உம்முல் ஃபழ்ல் (ரலி) அவர்கள் ' வல் முர்ஸலாத்தி உர்பன்' என்ற சூராவை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ஓதியவுடன் நினைவு கூறுகிறார்கள் என்றால் அவர்கள் பலகாலம் நபியவர்களோடு பள்ளிவாசலில் ஜமாஅத் தொழுகையில் பங்கெடுத்துள்ளார்கள் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.
ýமுஆத் தொழுகையில்...
காஃப் வல்குர்ஆனில் மஜீத் என்று துவங்கும் அத்தியாயத்தை நபி (ஸல்) அவர்களின் நாவிலிருந்துதான் மனனம் செய்தேன். அதை அவர்கள் ஒவ்வொரு ýமுஆவிலும் மிம்பரில் மக்களுக்கு சொற்பொழிவு நிகழ்த்தும் போது  ஓதுவார்கள்.
அறிவிப்பவர் : உம்மு ஹிஷாம் (ரலி), நூல்கள் : முஸ்லிம் (1442?), நஸயீ (1394), அபூதாவூத் (927),அஹ்மத் (26344)
கிரகணத் தொழுகையில்
நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்ற போது மக்களோடு அவர் நின்று தொழுது கொண்டிருப்பதைப் பார்த்தேன். நான் அவரிடம் '' மக்களுக்கு என்னவாயிற்று? '' எனக் கேட்டேன். ஆயிஷா (ரலி) தம் தலையால் வானத்தின் பக்கம் சைகை செய்தார். நான் '' (இறை) அத்தாட்சியா? '' எனக் கேட்டதற்கு ''ஆம்''எனத் தம் தலையால் சைகை செய்தார்.
அறிவிப்பவர் : அஸ்மா (ரலி), நூல் : புகாரீ (1235)
இத்தனை ஆதாரங்கள் இருந்தும் பெண்களை பள்ளிக்கு வருவதை தடுக்கும் இமாம்கள் இஸ்லாம் கடுமையாக எதிர்க்கும் தர்ஹா வழிபாடுகளை ஏன் எதிர்ப்பதில்லை?
பெருநாளில் திடலில் பெண்கள்
பெண்களை ஜவுளிக்கடை மளிகைக் கடை, மார்க்கெட் என்று உலகம் சுற்றுவதற்கு அனுமதியளிப்பவர்கள். நபிகளார் மிகவும் வலியுறுத்தி திடல் தொழுகைக்கு  பெண்களை பெருநாள் அன்று ஏன் அனுமதிப்பதில்லை?
இரு பெருநாட்களிலும் மாதவிடாய் பெண்களையும் (தொழும் திடலுக்குப்) போகச் சொல்லுமாறு நாங்கள் கட்டளையிடப்பட்டோம். அப்பெண்கள் வீட்டிலிருந்து வெளியாகி முஸ்லிலிம்கள் தொழுகின்ற இடத்திற்குச் சென்று அவர்களுடைய பிரச்சராத்தில் கலந்து கொள்ள வேண்டும். தொழும் இடத்தை விட்டு மாதவிடாய்ப் பெண்கள் ஒதுங்கியிருக்க வேண்டும்.
நபி (ஸல்) அவர்களின் இந்தக் கட்டளையைக் கேட்டுக் கொண்டிருந்த பெண்களில் ஒருவர்' அல்லாஹ்வின் தூதரே! எங்களில் எவருக்கேனும் அணிந்து கொள்வதற்கு மேலாடை இல்லை எனில் என்ன செய்வது?' ?என்றார். அதற்கு '' அவளுடைய தோழி தனது (உபரியான) மேலாடையை இவளுக்கு அணியக் கொடுக்ககட்டும்'' என நபி (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள்.
அறிவிப்பவர் : உம்மு அதிய்யா (ரலி), நூல் : புகாரீ (351)
பெருநாள்(தொழும் திடலுக்கு) நாங்கள் புறப்பட வேண்டுமெனவும் கூடாரத்திலலுள்ள கன்னிப் பெண்களையும் மாதவிடாய் ஏறபட்டுள்ள பெண்களையும் புறப்படச் செய்ய வேண்டுமெனவும் நாங்கள் கட்டளையிடப்படிருந்தோம். பெண்கள் ஆண்களுக்குப் பின்னால் இருப்பார்கள்.ஆண்களின் தக்பீருடன் அவர்கள் தக்பீர் கூறுவார்கள். ஆண்களின் துஆவுடன் அவர்களும் துஆச் செய்வார்கள். அந்த நாளின் பரக்கத்தையும் புனிதத்தையும் அவர்கள் எதிர்பார்ப்பார்கள்.
அறிவிப்பவர் : உம்மு அதிய்யா (ரலி), நூல் : புகாரீ (971)
தொழுகை கடமையில்லாத பெண்கள் உட்பட அனைத்து பெண்களும் பெருநாள் திடலுக்கு வந்து அங்கு பிரர்த்தனை புரியவேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் தெளிவாக கட்டளையிட்டிருக்க அந்த உரிமை பறிக்கப்பட்டு நூதன பழக்கங்கள் தாராளமாக நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதைப் போன்று பல சட்டங்களில் மார்க்கம் செய்யாத காரியங்களை செய்பவர்கள் மார்க்கம் ஆர்வம் ஊட்டிய அனுமதித்த காரியங்களை மறுப்பவர்கள் பின்வரும் வசனத்தை கவனத்தில் கொள்ளட்டும்.
அவருடைய (தூதருடைய) கட்டளைக்கு மாறு செய்வோர் தமக்குத் துன்பம் ஏற்படுவதையோ, துன்புறுத்தும் வேதனை ஏற்படுவதையோ அஞ்சிக் கொள்ளவும். (அல்குர்ஆன் 24 : 63)

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites