அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

வியாழன், 6 ஜனவரி, 2011

அபூஜஹ்லின் அட்டகாசங்கள்



எம்.. முஹம்மத் சுலைமான்
கேள்வி : தொழுது கொண்டிருந்த நபிகளருக்கு அபூஜஹ்ல் கூட்டம் தந்த வேதனைகள் என்ன?
பதில் : ஒட்டகத்தின் சாணத்தையும் இரத்தத்தையும் மற்றும் கருப்பபையையும் தோள்புஜத்தில் போட்டுத் துன்புறுத்தினார்கள்.
'' நபி (ஸல்) அவர்கள் (ஒரு முறை) கஅபத்துல்லாஹ்வின் அருகில்  தொழுது கொண்டிருந்தார்கள். அப்போது குறைஷிகள் தங்கள் சபையில் குழுமியிருந்தனர். இந்த முகஸ்துதி விரும்பியை நீங்கள் பார்க்கவில்லையா? என்று அவர்களில் ஒருவன் கேட்டான் . 'இன்னாருடைய (அறுக்கப்பட்ட) ஒட்டகத்தினருகில் சென்று  அதன் சாணத்தையும் இரத்தத்தையும் மற்றும் கருப்பபையையும் எடுத்து வந்து இவர் ஸஜ்தா செய்யும் வரைக் காத்திருந்து அதை இவரது இரு தோள்புஜத்திலும் போட்டு விட உங்களில் யார் தயார்? என்று கேட்டான். அவர்களில் மிகவும் மோசமான ஒருவன் அதற்கு முன்வந்தான். நபி (ஸல்) அவர்கள் ஸஜ்தாச் செய்த போது அதை அவர்களின் தோள் புஜத்தில் போட்டான். நபி (ஸல்) அவர்கள்  ஸஜ்தாவிலேயே கிடந்தார்கள். (ஆதாரம் : புகாரீ 520)
கேள்வி : நபி (ஸல்) அவர்களின் தோள்புஜத்தில் அசுத்தங்களைப் போட்டவனின் பெயர் என்ன?
பதில் : உக்பா பின் அபீ முஅய்த் (ஆதாரம் : புகாரீ 3185)
கேள்வி : நபிகளாரின் சிரமப்பட்ட போது அபூஜஹ்ல் கூட்டம் என்ன செய்தது?
பதில் : ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து விடும் அளவிற்கு சரிக்கலானார்கள். (ஆதாரம் : புகாரீ 520)
கேள்வி : நபிகளாரின் மீது இருந்த அசுத்தங்களை தூய்மைப்படுத்தியவர்கள் யார்?
பதில் : சிறுமியாக இருந்த பாத்திமா (ரலி) அவர்கள் (ஆதாரம் : புகாரீ 520)
கேள்வி : அபூஜஹ்ல் கூட்டத்தினர்கள் செய்த இந்த அட்டூளியங்களிலுக்கு நபிகளார் என்ன செய்தார்கள்?
பதில் : இவர்களை யா அல்லாஹ் நீ பார்த்துக் கொள் என்று அல்லாஹ்விடம் ஒப்படைத்தார்கள். (ஆதாரம் : புகாரீ 520)
கேள்வி : அல்லாஹ்விடம் ஒப்படைத்த நபர்கள் எத்தனை பேர்? அவர்கள் பெயர் என்ன?
பதில் : ஏழு நபர்கள். அவர்கள் : 1. அம்ர் பின் ஹிஷாம் (அபூஜஹ்ல்) 2. உத்பா பின் ரபீஆ 3. ஷைபா பின் ரபீஆ 4. வலீத் பின் உக்பா 5. உமய்யா பின் பின் கலப் 6. உக்பா பின் அபீ முயீத் 7. உமாரா பின் வலீத்  (ஆதாரம் : புகாரீ 520)
கேள்வி : இவர்களின் இறுதி நிலை என்ன ஆனாது?
பதில் : இவர்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக பத்ர் போர் களத்தில் கொள்ளப்பட்டு பாழடைந்த கிணற்றில் வீசப்பட்டனர். (ஆதாரம் : புகாரீ 520)
கேள்வி : இரத்த காயத்தை நபிகளாருக்கு ஏற்படுத்தியவர்கள் யார்?
பதில் : மக்காவைச் சார்ந்த சிலர் நபிகளாரை அடித்ததால் நபி (ஸல்) அவர்கள் இரத்தம் தேய்ந்தவர்களாக கவலையுடன் (ஒரு நாள்) அமர்ந்திருந்தார்கள். (ஆதாரம் : அஹ்மத் 11669, இப்னுமாஜா 4018, தாரமீ 23)
கேள்வி : மக்கா வாழ்க்கையில் ''முகங்கள் இழிவடையட்டும்'' என்று நபி (ஸல்) அவர்கள் எப்போது கூறினார்கள்?
பதில் :  ஒரு நாள் குûஷிகளின் முக்கியத் தலைவர்கள் கஅபத்துல்லாஹ்வில் உள்ள ஹிஜ்ர் என்ற இடத்தில் ஒன்றுகூடி  நாம் முஹம்மதை கண்டால் ஒன்றாக சேர்ந்து அவரை கொலை செய்யாமல் விடக்கூடாது என்று அவர்களின் தெய்வங்களான லாத், உஸ்ஸா,மனாத், நாயிலா, இஸாஃப் ஆகிய சிலைகள் மீது சத்தியம் செய்தனர்.இதை அறிந்த நபிகளாரின் மகள் பத்திமா (ரலி) அவர்கள் அழுதவர்களாக நபி (ஸல்) அவர்களிடம் குறைஷிகள் பேசிக் கொண்டதை எடுத்தக் கூறினார்கள். நபிகளார்க அப்போது உளூச் செய்வதற்கு தண்ணீரை எடுத்தவர செய்து உளூச் செய்து பள்ளிக்கு சென்றார்கள். நபிகளாரைப் பார்த்த அந்த கும்பலால் உரத்த குரலில் கூட பேசமுடியவில்லை. தலை குனிந்தவர்களாக கண்களைக் கூட உயர்த்த முடியாமலும் எழமுடியாமல் போனார்கள். அப்போது தான் நபி (ஸல்) அவர்கள் மண்னை அள்ளி ஷாஹத்தில் உஜþஹ் (முகங்கள் இழிவடையட்டும்) என்று கூறி அவர்கள் மீது எரிந்தார்கள். (ஆதாரம் : அஹ்மத் (2626)
கேள்வி : மண்ணை எரிந்ததால் அவர்களுக்கு என்ன நிலை ஏற்பட்டது?
பதில் : நபிகளார் எரிந்த மண் எவர்கள் மீது பட்டதோ அவர்கள் பத்ர் போரில் காஃபிர்களாக கொல்லப்பட்டார்கள். (ஆதாரம் : அஹ்மத் (2626)
கேள்வி : ஷாஹத்தில் உஜþஹ் (முகங்கள் இழிவடையட்டும்) என்ற வாசகத்தை நபிகளார் வேறு எந்த இடத்தில் பயன்படுத்தியுள்ளார்கள்?
பதில் : ýனைன் போர்க்களத்தில். '' நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் சோந்து ýனைன் போரில் கலந்து கொண்டோம்.நாங்கள் எதிரிகளை எதிர் கொண்ட போது நான் முன்னேறிச் சென்றேன். அப்போது நான் ஒரு மலைக் கணவாய் மீத ஏறினேன். எதிரிகளில் ஒருவன் என்னை எதிர்கொண்டான். உடனே நான் ஓர் அம்பை எடுத்து அவன் மீது எய்தேன். அவன் என்னை விட்டு மறைந்து (தப்பித்துக்) கொண்டான். பிறகு அவன்  என்ன ஆனான் என்று எனக்குத் தெரியவில்லை.
அப்போது எதிரிகளை நான் பார்த்தேன். அவர்கள் மற்றொரு கணவாய் மீது ஏறி விட்டிருந்தார்கள். அவர்களும் நபித்தோழர்களும் மோதிக் கொண்டனர். பிறகு நபித்தோழர்கள் பின்வாங்க வேண்டிய நிலைக்கு ஆளாயினர். நானும் தோல்வி கண்டு திரும்பினேன். அப்போது என் மீது இரு போர்வைகள் இருந்தன. ஒன்றை நான் கீழங்கியாகவும் மற்றொன்றை மேலங்கியாகவும் போர்த்திக் கொண்டிருந்தேன்.
   (நான் திரும்பிப்பார்த்த போது) எனது கீழங்கி அவிழ்ந்துவிட்டது. உடனே நான் மேலங்கியையும் கீழங்கியயையும் சேர்த்து (சுருட்டிப்) பிடித்துக் கொண்டேன். அப்போது நான் தோற்றுப்போனவனாக அல்லாஹ்வின் தூதர் அவர்களைக் கடந்து சென்றேன். அப்போது அவர்கள் தமது வெள்ளைக் கோவேறு கழுதையில் (நிலைகுலையாமல்) இருந்தார்கள்.
   அப்போது  அவர்கள் 'இப்னுல் அக்வஉ, திடுக்கிடும் நிகழ்வெதையோ கண்டுள்ளார்' என்று கூறினார்கள்.எதிரிகள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சூழ்ந்துகொண்டதும் அவர்கள் தமது கோவேறுகழுதையிலிருந்து இறங்கி பூமியிலிருந்து ஒரு கைப்பிடி மண் அள்ளி அவர்கள் முகங்களை நோக்கி எறிந்தார்கள்.
   அப்போது 'இம்முகங்கள் இழிவடைந்தன' என்று கூறினார்கள். எதிரிகளில் ஒருவரது முகம் கூட விடுபடாமல் அனைவருடைய கண்களையும் அந்த ஒரு பிடி மண்ணால் அல்லாஹ் நிரப்பாமல் விடவில்லை. பிறகு அவர்கள் புறமுதுகிட்டு ஓடினர் என்று ஸலமா பின் அல்அக்வஉ (ரலி) கூறுகிறார்கள். (ஆதாரம் : முஸ்லிம் 3644)
கேலி செய்தல்
கேள்வி : ஓரிறைக் கொள்கையைச் சொன்னதற்காக நபிகளாரை கேலி செய்த பெண்மணி யார்?
பதில் : உம் ஜமீல் - அபூ லஹபின் மனைவி (ஆதாரம் : பத்ஹýல் பாரீ, புகாரீயின் 4950 ஹதீஸின் விளக்கவுரையில்)
கேள்வி : அவள் எவ்வாறு கேலி செய்தாள்?
பதில் : (ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டபோது 'இரண்டு இரவுகள்' அல்லது 'மூன்று இரவுகள்' (இரவுத் தொழுகைக்காக) அவர்கள் எழவில்லை. அப்போது ஒரு பெண் வந்து ' முஹம்மதே! உம்முடைய ஷைத்தான் உம்மைக் கைவிட்டு விட்டான் என நினைக்கிறேன். (அதனால்தான்) 'இரண்டு இரவுகளாக' அல்லது 'மூன்று இரவுகளாக' உம்மை ஷைத்தான் நெருங்கி வந்ததை நான் பார்க்கவில்லை'  என்று (கேலியாக) கூறினாள். (ஆதாரம் : புகாரீ 4950)
கேள்வி : அப்போது இறங்கிய வசனம் எது?
பதில் : 1. முற்பகல் மீது சத்தியமாக! 2. ஒதுங்கிச் செல்லும் இரவின் மீது சத்தியமாக! 3. (முஹம்மதே!) உமது இறைவன் உம்மை கை விடவும் இல்லை; வெறுக்கவும் இல்லை. என்ற (93 :1-3) வசனங்களை அல்லாஹ் இறக்கினான். (ஆதாரம் : புகாரீ 4950)
கேள்வி : அபூஜஹ்ல் எவ்வாறு கேலி செய்தான் ?
பதில் : இறைவா! இது (குர்ஆன்) உன்னிடமிருந்து வந்த சத்தியமே என்றிருப்பின் எங்கள் மீது வானத்திலிருந்து கல்மாரியைப் பொழி! அல்லது துன்புறுத்தும் (ஒரு) வேதனையை எங்களுக்குக் கொண்டு வா! என்று (கிண்டலாக) கூறினான். (ஆதாரம் : புகாரீ 4649)
கேள்வி : அப்போது இறங்கிய வசனம் எது?
பதில் : (முஹம்மதே!) நீர் அவர்களுடன் இருக்கும் போது அல்லாஹ் அவர்களைத் தண்டிப்பவனாக இல்லை. அவர்கள் பாவ மன்னிப்புத் தேடிக் கொண்டிருக்கும் போதும் அவர்களை அல்லாஹ் தண்டிப்பவனாக இல்லை. மஸ்ஜிதுல் ஹராமுக்கு அவர்கள் நிர்வாகிகளாக (தகுதி) இல்லாத நிலையிலும், (மக்களை) அவர்கள் தடுத்துக் கொண்டிருக்கும் போது அல்லாஹ் அவர்களை எவ்வாறு தண்டிக்காமலிருப்பான்? (இறைவனை) அஞ்சுவோரைத் தவிர வேறெவரும் அதன் நிர்வாகிகளாக இருக்க முடியாது. எனினும் அவர்களில் அதிகமானோர் (இதை) அறிய மாட்டார்கள் என்ற (8:33,34 ) வசனங்கள் இறங்கியது. (ஆதாரம் : புகாரீ 4649)
கேள்வி : நபி (ஸல்) அவர்களை கேலிசெய்தவர்களில் முக்கியமானவர்கள் யார்? யார்?
பதில் : 1.வலீத் முகீரா, 2. அல்அஸ்வத் பின் அப்து யகூஸ் 3.அல்அஸ்வத் பின் முத்தலிப் 4.ஹாரிஸ் பின் அய்தல் 5. அல்ஆஸ் பின் வாயில்  (ஆதாரம் : பைஹகீ பாகம் : 9, பக்கம் : 8)
கேள்வி : இவர்கள் தொடர்பாக இறங்கிய குர்ஆன் வசனம் எது?
பதில் : கேலி செய்வோரை விட்டும் நாமே உம்மைக் காப்போம். (அல்குர்ஆன் 15 : 95)

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites