அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

திங்கள், 3 மே, 2010

மகளிர் பிரச்சினைகளுக்கு தீர்வு எது?

உலகம் முழுவதும் பரவலாகப் பேசப்படக் கூடியவர் ரானியா அல் அப்துல்லாஹ் என்ற ஜோர்டான் நாட்டு இளவரசி. குறிப்பாக அரபு நாடுகளிலும் வளைகுடா நாடுகளிலும் பிரபலமானவர். ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து வெளிவரும் ஆங்கில நாளேடான ஏன்ப்ச் சங்ஜ்ள் என்ற பத்திரிகையின் ரங்ங்ந்ங்ய்க் தங்ஸ்ண்ங்ஜ் பகுதிக்கு அவர் அளித்த பேட்டி 25.08.06 அன்று வெளிவந்தது. குறிப்பாக, பெண்களைப் பற்றி அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அப்பேட்டியில் அவர் பதிலளித்துள்ளார்.
உங்களுடைய கருத்துப்படி வளரும் நாடுகளிலும், அரபு நாடுகளிலும், வளர்ந்த நாடுகளிலும் இன்று பெண்கள் சந்திக்கும் பெரிய தடைகள் என்ன? என்ற கேள்விக்கு, வளர்ந்த நாடுகளில் பெண்கள் சந்திக்கும் தடை களைப் பின்வருமாறு விவரித்துள்ளார்.
வளர்ந்த நாடுகளைப் பொறுத்த வரை பெண்கள் பல வழிகளில் தடைகளை எதிர் கொள்கிறார்கள். பால் இன வேறுபாடு (ஏங்ய்க்ங்ழ் இண்ஹள்) தெளிவாகத் தொடர்கின்றது. உதாரணமாக பணி உயர்வு, சம்பள விகிதாச்சாரம் மற்றும் அரசியல் பங்களிப்பு (போன்றவற்றில் தெளிவான பால் இன வேறுபாட்டைக் காணலாம்.)
மேலும் வீட்டுத் தகராறு என்ற பிரச்சனை ஏழை, பணக்காரன் என்று வித்தியாசப்படுவதில்லை.
(நன்றி: ஏன்ப்ச் சங்ஜ்ள் 25.08.2006)
இஸ்லாமிய மார்க்கம் பிற்போக்கான மார்க்கம் எனவும், முஸ்லிம் பெண்மணிகள் எல்லாத் துறைகளிலும் இன்னும் பின் தங்கியுள்ளனர் என்றும் தங்களுடைய முற்போக்கான மேற்கத் திய கலாச்சாரத்தால் தங்கள் நாட்டின் பெண்கள் முன்னோடிகளாக உள்ளனர் என்று மார் தட்டிக் கொள்ளும் மேலை நாட்டவர்களுக்கு சரியான சவாலாக ஜோர்டான் நாட்டு இளவரசியின் இந்தப் பதில் அமைந்துள்ளது.
ஆணுக்கு நிகர் பெண்கள் என்றும், இஸ்லாமிய மார்க்கத்தில் மட்டுமே பெண்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்பது போன்ற மாயையை ஏற்படுத்தும் இந்த வளர்ந்த நாடுகளால், வேலை பார்க்கும் இடங்களில் உள்ள பால் இன வேறுபாட்டை ஒழிக்க முடியவில்லை. அது மட்டுமின்றி பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகளை நிறுத்த முடியாவிட்டாலும், வளர்ந்த நாடுகளின் அரசுகள் செய்யும் கொடுமைகளை (பணி உயர்வு, சம்பள விகிதாச்சாரம் மற்றும் அரசியல் பங்களிப்பு போன்றவற்றில் பாகுபாடு காட்டுவதை) கூட நிறுத்த மனம் வரவில்லை.
உலகில் பல நாடுகளுக்குப் பயணம் செய்திருக்கும் இளவரசியின் இந்தப் பதிலிலிருந்து நம்முடைய பெண்களுக்கு நல்ல பாடம் இருக்கிறது.
இஸ்லாமிய போதனைகளின் அருமையை அறியாமல் மாற்று மதக் கலாச்சாரத்தால் மிகவும் எளிதாகக் கவரப்படும் நம்முடைய பெண்கள், எவ்வளவு தான் பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்றாலும் இஸ்லாத்தை விடுத்து வேறு எந்த வழியிலும் நிம்மதியையும் கண்ணியமான வாழ்வையும் அடைய முடியாது என்பதை இளவரசியின் இந்தப் பேட்டியிலிருந்து அறிய வேண்டிய முக்கியமான பாடமாகும்.
அறிவியலின் தாக்கம் இன்றளவுக்கு இல்லாத, நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் சமுதாயத்தில் இழிநிலையில் இருந்த பெண் இனத்தின் கண்ணியத்தை இஸ்லாத்தின் அரிய போதனைகளைக் கொண்டு தூக்கி நிறுத்தினார்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்.
அதைப் போலவே அறிவு வளர்ந்து விட்ட இந்தக் கால கட்டத்திலும் பெண்ணினத்தின் மேம்பாட்டிற்கும் கண்ணியத்திற்கும் இஸ்லாம் ஒன்றே மாமருந்து. எவ்வளவு பணம் இருந்தாலும், கல்வி கற்றிருந்தாலும் பெண்களின் கண்ணியத்தைக் காப்பாற்ற மறுமை அச்சத்துடன் கூடிய போதனைகள் தேவை. வெறும் உலகக் கல்வியின் உயர்ந்த பட்டங்களைப் பெற்ற அறிவாளிகள் (?) இன்று பெண்களுடன் நடந்து கொள்ளும் விதத்தை நாம் பத்திரிகைகளில் பார்க்க முடிகின்றது.
வீட்டுப் பெண்களை வரதட்சணை கேட்டுக் கொடுமைப்படுத்துவது, ஆண் குழந்தை பெறவில்லை என்பதற்காக மனைவியைத் துன்புறுத்துவது, கருவறையில் வளரும் சிசு ஆணா? பெண்ணா? என்று அறிந்து, பெண்ணாக இருந்தால் கருவிலேயே சமாதி கட்டுவது போன்ற செயல்களை யும், பணி புரியும் இடங்களில் பெண்களுடன் நடந்து கொள்ளும் விதம் பற்றியும் பத்திரிகைகளில் அன்றாடம் வரும் செய்திகளைப் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்.
எனவே ஒழுக்க வாழ்விற்கும், அமைதியான வாழ்விற்கும் இஸ்லாம் ஒன்றே வழி என்பதை அறிந்து மேற்கத்திய நாட்டுப் பெண்கள் சாரை சாரையாக இஸ்லாத்தின் பக்கம் படையெடுக்கும் இக்கால கட்டத்தில் இஸ்லாத்தின் போதனைகளை நாமும் பின்பற்றி, நம்முடைய குழந்தை களுக்கும் போதித்து, உலக மக்கள் அனைவருக்கும் முன்மாதிரிகளாகத் திகழ நமது பெண்கள் முயற்சிக்க வேண்டும். வல்ல ரஹ்மான் அதற்குத் துணை புரிவானாக!
"எங்கள் இறைவா! எங்கள் வாழ்க்கைத் துணைகளி-ருந்தும், மக்களி-ருந்தும் எங்களுக்குக் கண் குளிர்ச்சியைத் தருவாயாக! (உன்னை) அஞ்சுவோருக்கு முன்னோடியாகவும் எங்களை ஆக்குவாயாக!  (அல்குர்ஆன் 25:74)

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites