அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

ஞாயிறு, 2 மே, 2010

பெயர் வைக்கும் முறை எப்படி ? முதலில் வைத்த பெயரை மீண்டும் மாற்றலாமா ?


எனக்கு மூன்று வயதுடைய மகள் இருக்கிறாள். அவளுக்கு ஃபஜினா அமீர் என்று பெயர் வைத்து, அதை நகராட்சியிலும் பதிவு செய்து விட்டோம். உறவினர்கள் சொன்னதைக் கேட்டு, அர்த்தத்தைப் பார்க்காமல் இந்தப் பெயரை வைத்து விட்டோம். தற்போது அந்தப் பெயர் அரபிப் பெயரா? அதன் அர்த்தம் என்ன? என்று சிலர் சந்தேகத்தை எழுப்புகின்றார்கள். எனவே இந்தப் பெயருக்கு ஷிர்க்கான அர்த்தம் ஏதும் உள்ளதா? இந்தப் பெயரை மாற்றித் தான் ஆக வேண்டுமா? என்பதை விளக்கவும்.
ஃபஜினா, அமீர் ஆகிய இரண்டும் தனித்தனி வார்த்தைகள். இதில் ஃபஜினா என்ற சொல் அரபு மொழியில் காணப்படவில்லை. வேற்று மொழியில் இருந்து அரபு மொழியில் நுழைந்த வார்த்தையாகத் தான் உள்ளது. "ஒரு வகைச் செடியிலிருந்து சாப்பிடுபவள்'' என்பது இதன் பொருளாகும். அமீர் என்றால் அதிகாரமுடையவர், தலைவர் என்று பொருள்.
பெயர் வைக்கும் போதே நல்ல பொருளுள்ள பெயராகத் தேர்வு செய்து வைக்க வேண்டும். புதுமையான பெயர் வைக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் சிலர் இது போன்ற அனர்த்தமான பெயர்களை வைத்து விடுகின்றார்கள்.
"மாறு செய்யக் கூடியவள்'' என்ற பெயருடைய பெண் குழந்தை உமர் (ரலி) அவர்களுக்கு இருந்தாள். அந்தப் பெயரை மாற்றி அந்தக் குழந்தைக்கு ஜமீலா (அழகானவள்) என்று நபி (ஸல்) அவர்கள் பெயரிட்டார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: முஸ்லிம் 3988
இந்த ஹதீஸிலும் இன்னும் இது போன்ற பல ஹதீஸ்களிலும் நபி (ஸல்) அவர்கள் தவறான அர்த்தத்தைத் தரக் கூடிய பெயரை மாற்றியுள்ளார்கள். (பார்க்க: புகாரி 6190, 6191, 6192, 6193)
எனவே தவறான அர்த்தங்கள் கொண்ட பெயராக இருந்தால் அதை மாற்றி வைக்க வேண்டும். ஃபஜினா அமீர் என்ற பெயரைப் பொறுத்தவரை தவறான அர்த்தங்கள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. எனவே மாற்றியாக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

3 கருத்துகள்:

எனது மகனுக்கு ஆசிக் முகம்மது என்று பெயர் வைத்துள்ளனர் மாநகராட்சியிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது இப்பும் 3வயது ஆகிவிட்டது முகம்மது ஆசிக் என்று மாற்றி அமைக்க வேண்டுமா

தேவையில்லை...
ஆஷிக் முஹம்மது என்பதும் நல்ல பெயரே...
அர்த்தமும் சரியே

எனது மகனுக்கு ஜாஃப்ரின் என பெயர் வைத்துள்ளேன். அவன் விசாகம்,விருச்சிகம் ராசியில் பிறந்தவன். பிறந்தநாள் 01.08.2017. அவனது பெயர் நன்றாக இல்லை என கூறுகிறார்கள். அதனால் மாற்றலாமா

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites