அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

செவ்வாய், 4 மே, 2010

வண்ண விளக்குகளால் மூளைக்கு ஆபத்து


வண்ண விளக்குகள் வசீகரமானவை. கண்களை கவர்ந்திழுக்கும். பலரும் விரும்புவதால் வண்ணவிளக்குகள் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக பூஜையறை, படுக்கை அறை மற்றும் பெரியவர்களின் படங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்படுகிறது. குறைந்தபட்சம் `ஜீரோ வாட்ஸ்’ பல்புகளாவது ஒவ்வொரு வீடுகளிலும் ஒளிரும். அமெரிக்காவின் எம்.ஐ.டி. பல்கலைக்கழக நரம்பியல் வல்லுனர்கள், விளக்கு ஒளியால் ஏற்படும் நரம்பியல் மாற்றங்கள் குறித்து ஆய்வு நடத்தினார்கள். இதில் வண்ண விளக்குகளில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சுகள் மூளையைப் பாதிப்பது தெரியவந்துள்ளது.இதற்காக ஆய்வகத்தில் பல வண்ண விளக்குகளுக்கு இடையே எலிகள் பரிசோதித்துப் பார்க்கப்பட்டன. ஆய்வில் விளக்குகளை அணைக்கும்போது ஏற்படும் எலக்ட்ரிக் கதிர்வீச்சு மூளை செல்களான நிரான்களைப் பாதிக்கின்றன. அவற்றின் செயல்பாட்டை தடுப்பதால் பல விபரீத வியாதிகள் ஏற்படுகின்றன.

குறிப்பாக உடல் வலி, பார்கின்சன் என்னும் ஞாபகமறதி வியாதி, மூளை முடக்கம், இதயக் கோளாறுகள், நோய் எதிர்ப்பு அமைப்பு (இம்ன் சிஸ்டம்) செயல்களில் பாதிப்பு மற்றும் இன்னும் பல வியாதிகளுக்கு வழி வகுக்கிறது.

ஒவ்வொரு வண்ண விளக்கும் வேறுவேறு பாதிப்புகளை உருவாக்குவது குறிப்பிடத்தக்கது. சிவப்பு வண்ண விளக்கு நிரான்களை செயலிழக்கச் செய்கிறது. நீல வண்ண விளக்குகள் ஒரு வகை ஜீன்களைப் பாதிக்கிறது. மஞ்சள் விளக்குகள் வேறுவகை ஜீன்களைப் பாதிக்கிறது. உடலியக்கம் பல மின்தூண்டல்களால்தான் நடைபெறுகிறது. இதற்கிடையே விளக்குகளை அணைக்கும்போது ஏற்படும் மின் அதிர்வுகள், மூளையை பாதிக்கிறது என்கிறது ஆய்வு.

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites