அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

செவ்வாய், 4 மே, 2010

ஜாக் தமுமுக வின் பாகம் 1

சந்தர்ப்பவாதக் கூட்டணிகள்
சுதந்திர இந்தியாவில் பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட பிறகு முஸ்லிம்களுக்கு ஒரு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டது. சமுதாய நலனுக்காக போராடக் கூடிய ஓரமைப்பு இன்றியமையாத ஒன்று, காலத்தின் கட்டாயம் என்று உணரப்பட்ட நேரம் அது. அதனால் ஏகத்துவக் கொள்கையுடையவர்கள் கூட தவ்ஹீது சிந்தனையை அடிப்படையாகக் கொள்ளாத அமைப்புகளில் ஐக்கியமாயினர்.
கொள்கைக்காக ஓரமைப்பு, சமுதாயப் பிரச்சனைக்காக இன்னொரு அமைப்பு என்று கொள்கைச் சகோதரர்கள் கூடாரம் மாறும் நிலை அப்போதிருந்தது. இத்தகைய போக்கைத் தடுக்கும் விதமாக சமுதாயப் பிரச்சனையை நாம் கையில் எடுப்போம் என அன்று நாமிருந்த அந்தக் கொள்கை அமைப்பின் தலைமையிடம் நாம் கூறினோம். ஆனால் அன்று அந்தக் கருத்து அந்தத் தலைமையால் சுத்தமாக மறுக்கப்பட்டு விட்டது.
அதனால் சமுதாயப் பிரச்சனைக்காக இன்னொரு அமைப்பைத் துவக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டோம். நம்முடைய இந்தச் செயல்பாட்டை அந்தக் கொள்கைக்காரர்கள் ஜீரணிக்கவில்லை. கொடிகள், கோஷங்கள், கட்சிகள், கழகங்கள் எல்லாம் நமக்குத் தேவையில்லை என்று நம்மைக் கடுமையாகச் சாடினர்.
இவர்கள் குராபிகளுடன் (தவறான வழியில் செல்வோருடன்) சங்கமமாகி விட்டனர், குராபிகளுக்காக கொள்கையில் சமரசம் செய்து விட்டனர், கொள்கையைக் கண்ட கிரயத்திற்கு விற்று விட்டனர் என்று நம்மை விளாசித் தள்ளினர்.
அப்போது நாம் அவர்களுக்குச் சொன்ன ஒரே பதில், நாங்கள் துவக்கிய இந்த அமைப்பு என்றைக்கு ஏகத்துவத்திற்கு எதிராகக் கிளம்புகின்றதோ அன்றைக்கு இந்த அமைப்பில் இருக்க மாட்டோம் என்பது தான்.
பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையில் நாமே துவங்கிய அந்த அமைப்பு மக்கள் கூட்டத்தைக் கண்டதும் மயக்க நிலைக்கு ஆளானது. மக்கள் கூட்டத்தைத் தக்க வைத்துக் கொள்ள ஏகத்துவக் கொள்கை ஒரு தடைக் கல்லாக வந்து நிற்கக் கூடாது, அதன் சாயல் கூட நம்மீது படியக் கூடாது என்று முடிவெடுத்து ஏறி வந்த ஏணியையே எட்டி உதைக்கும் காரியத்தில் இறங்கியது.
குராபிகளுடன் (தவறான வழியில் செல்வோருடன்) சகவாசமாக மட்டுமல்ல அவர்களின் சுவாசமாகவே இருக்க விரும்பினர். இப்படி ஒரு எல்லைக்கு இந்த அமைப்பு வந்த பின் இதில் நாம் இருக்கலாகாது என்று கொள்கைக்காக, கொள்கை காக்க நாம் வெளியே வந்ததும், அன்று நம்மை விமர்சித்தவர்கள், விலாசித் தள்ளியவர்கள் இன்று அந்த அமைப்புடன் நட்பு கொள்கின்றனர்.
அன்று நம்மைப் பார்த்து, கொள்கையில் சமரசம் செய்து விட்டதாகச் சாடியவர்கள், இன்று ஏகத்துவத்தை ஒரு தடைக் கல்லாகக் கருதக் கூடியவர்களுடன், ஏகத்துவப் பிரச்சாரத்தை முடக்குவதற்குக் கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படுபவர்களுடன் எப்படி குலாவ முன் வந்தனர்? அவர்கள் அன்று சாடிய அந்தக் கொடிகளும் கோஷங்களும் ஒரு தனி மனிதர் வெளியே வந்ததும் சரியாகி விட்டனவா?
உண்மையில் இவர்கள் கொள்கையில் உறுதியானவர்களாக இருந்தால் இரண்டு பேரை விட்டும் விலகியிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் யாரை இவர்கள் விமர்சித்தார்களோ அவர்களுடன் போய் ஒட்டிக் கொள்கின்றார்கள் என்றால் இவர்களிடத்தில் இருப்பது கொள்கை அல்ல. சந்தர்ப்ப வாதம் தான்.
அன்று இவர்கள் கொடி, கோஷத்தை எதிர்த்ததும், கட்சி கழகம் என்று காரி உமிழ்ந்ததும் ஒரு தனி நபரை மையமாகக் கொண்டு தானே தவிர மார்க்கத்தை மையமாகக் கொண்டல்ல என்பது வெட்ட வெளிச்சமாகி விட்டது.
தவ்ஹீது பிரச்சாரத்தை முடக்க சதி
பொய்யை மட்டுமே மூலதனமாகக் கொண்டு பிழைப்பு நடத்தி வரும் ஒரு கூட்டத்தினர் நம் மீது கொலைக் குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளனர். இது மாபெரும் அபாண்டமும் அவதூறும் ஆகும்.
எதனால் சுன்னத் வல்ஜமாஅத்தை விட்டு வெளியே வந்தோம்? ஷிர்க் என்ற பாவம் நம்மை நரகத்தில் நிரந்தரமாகக் கொண்டு சென்று விடும் என்று பயந்து தானே இத்தனை எதிர்ப்பலைகளை, எரிமலைகளைக் கடந்து இந்தக் கொள்கையில் இருக்கின்றோம்.
இணை வைப்பவர்களுக்கு சுவனம் தடை செய்யப்பட்டு விட்டதைப் போலவே வட்டி, கொலை போன்ற பாவங்களுக்கும் நிரந்தர நரகம் என்று அல்லாஹ் தெளிவாக அறிவித்துள்ளான்.
நம்பிக்கை கொண்டவனை வேண்டுமென்று கொலை செய்பவனது கூலி நரகம். அதில் அவன் நிரந்தரமாக இருப்பான். அவன் மீது அல்லாஹ் கோபம் கொள்கிறான். அவனைச் சபிக்கிறான். அவனுக்குக் கடுமையான வேதனையைத் தயாரித்துள்ளான். (அல்குர்ஆன் 4:93)
இதோ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உஸாமாவை நோக்கிக் கூறுவதைப் பாருங்கள்.
எங்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஜுஹைனா குலத்தைச் சேர்ந்த ஹுரக்கா எனும் கூட்டத்தாரிடம் அனுப்பி வைத்தார்கள். அதிகாலைப் பொழுதில் நாங்கள் அவர்களிடம் சென்றடைந்தோம் அவர்களை நாங்கள் தோற்கடித்தோம். அப்போது நானும் அன்சாரிகளில் ஒருவரும் அந்தக் கூட்டத்தைச் சேர்ந்த ஒரு மனிதரிடம் போய்ச் சேர்ந்து அவரை நாங்கள் சுற்றி வளைத்து விட்டோம். அப்போது அவர், "லாயிலாஹ இல்லல்லாஹ்'' என்று சொன்னார். ஆகவே அவரை விட்டு அந்த அன்சாரி ஒதுங்கிக் கொண்டார். ஆனால் நான் என் ஈட்டியை அவர் மீது பாய்ச்சி அவரைக் கொன்று விட்டேன். நாங்கள் திரும்பி வந்த போது இந்த விஷயம் நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியது. அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம், "உஸாமாவே, லாயிலாஹ இல்லல்லாஹ் என்று அவர் சொன்னதற்குப் பிறகுமா அவரைக் கொன்றீர்கள்?'' என்று கேட்டார்கள். நான், "அவர் தன் உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்காகத் தான் (அவ்வாறு கூறினார்)'' என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள், "லாயிலாஹ இல்லல்லாஹ் என்று அவர் சொன்னதற்குப் பிறகுமா அவரைக் கொன்றீர்கள்?'' என்று திரும்பத் திரும்ப என்னிடம் கேட்டுக் கொண்டேயிருந்தார்கள். எந்த அளவிற்கென்றால் அதற்கு முன்னால் நான் இஸ்லாத்தைத் தழுவாமல் இருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று ஆசைப்பட்டேன்.
அறிவிப்பவர்: உஸாமா பின் ஸைத் (ரலி), நூல்: புகாரி 6872, முஸ்லிம் 140
இந்த ஹதீஸ் அடிப்படையில் ஓர் இறை நம்பிக்கையாளனை எப்படி கொல்ல முடியும்? அவ்வாறு கொல்ல வேண்டுமாயின் தன்னை நரகவாதி என்று முடிவு செய்த பின்னர் தான் கொல்ல முடியும். அல்லாஹ் காப்பானாக!
பனூ ஸுஹ்ரா குலத்தாரின் ஒப்பந்த நண்பராயிருந்தவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பத்ரில் கலந்து கொண்டவருமான மிக்தாத் பின் அம்ர் அல் கிந்தீ (ரலி), அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "இறை மறுப்பாளன் ஒருவனை நான் சந்தித்து, நாங்கள் இருவரும் சண்டையிட்டோம். அப்போது அவன் என் கை ஒன்றை வாளால் துண்டித்து விட்டான். பிறகு அவன் என்னை விட்டுப் போய் ஒரு மரத்தில் அபயம் தேடிக் கொண்டு, "அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்தேன்' என்று கூறினான். இதை அவன் சொன்னதற்குப் பிறகு நான் அவனைக் கொல்லலாமா? அல்லாஹ்வின் தூதரே'' என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவனைக் கொல்லாதே'' என்று பதிலளித்தார்கள். அதற்கு மிக்தாத் (ரலி), "அல்லாஹ்வின் தூதரே, அவன் என் கை ஒன்றைத் துண்டித்து விட்டான். அதைத் துண்டித்த பிறகு தானே இதைச் சொன்னான்'' என்று கேட்க, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவனை நீ கொல்லாதே! அவ்வாறு நீ அவனைக் கொன்று விட்டால் அவனைக் கொல்வதற்கு முன்பு நீயிருந்த நிலைக்கு அவன் வந்து விடுவான். அந்த வார்த்தையைச் சொல்வதற்கு முன்பு அவனிருந்த நிலைக்கு நீ சென்று விடுவாய்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: உபைதுல்லாஹ் பின் அதீ பின் கியார்
நூல்கள்: புகாரி 4019, முஸ்லிம் 139
இந்த ஹதீஸ் ஓர் இறை நம்பிக்கையாளரைக் கொலை செய்பவர் காஃபிராக, இறைவனை மறுப்பவராக ஆகி விடுகின்றார் என்று கூறும் போது, இந்தக் கொடிய பாவத்தைச் செய்து குஃப்ர் என்ற நிலையை அடைய நாம் ஒரு போதும் தயாரில்லை. இப்படி ஒரு நிலை ஏற்படுவதை விட்டும் அல்லாஹ் நம்மைக் காப்பானாக!
இன்று கொலை முயற்சி என்று பொய் சொல்லி அப்பாவிகளை, அதாவது கொள்கைப் பிடிப்புள்ளவர்களை சிறையில் அடைத்திருக்கின்றார்கள். இத்துடன் நின்று விடாது ஏகத்துவப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள அழைப்பாளர்களையும் கொலையைத் தூண்டியவர்கள் என்று பொய்ப் புகார் கொடுத்து அவர்களையும் கைது செய்யச் சொல்லி காவல்துறையினரிடம் நிர்ப்பந்தம் செய்து கொண்டிருக்கின்றனர்.
ஒரு நேர்வழியின் பக்கம் அழைப்பவருக்கு அந்நேர்வழியைப் பின்பற்றியோரின் கூலிகளைப் போன்ற கூலி (அப்படியே) கிடைக்கும். அது அவர்களுடைய கூலிகளிலிருந்து எதையும் குறைத்து விடாது. ஒரு வழிகேட்டின் பக்கம் அழைப்பவருக்கு அவ்வழிகேட்டைப் பின்பற்றியவரின் பாவம் (அப்படியே) கிடைக்கும். அது அவர்களுடைய பாவத்திலிருந்து எதையும் குறைத்து விடாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 4831
இந்த ஹதீஸின்படி கொலை செய்யத் தூண்டியவருக்கு கொலை செய்தவரின் பாவம் அதாவது நிரந்தர நரகம் அப்படியே கிடைக்கும் என்பதால்  இதை எந்த ஒரு அழைப்பாளராவது செய்வாரா? ஒரு இறை நம்பிக்கையாளரை  கொலை செய்யத் தூண்டுவாரா? நிச்சயமாகச் செய்ய மாட்டார். இது இவர்களுக்கு நன்றாகத் தெரியும். இருப்பினும் பழிவாங்கும் நடவடிக்கையாக இதுபோன்ற பொய்க் குற்றச்சாட்டுகளைச் சுமத்துகின்றார்கள். இதுபோன்ற பொய்க் குற்றச்சாட்டுகளால் கொள்கை உறுதி மிக்கவர்கள் சிறைக்குள் தள்ளப்பட்டிருக்கின்றார்கள். எத்தனை சிறைச்சாலைகளைக் கண்டாலும் இந்தக் கொள்கையை விட்டு ஒருபோதும் அவர்கள் ஓடி விட மாட்டார்கள்.
இவர்கள் இத்தகைய பொய்க் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி கொள்கைவாதிகளை உள்ளே தள்ளத் துடிப்பதற்குக் காரணம் இவர்கள் குராபிகள் மீது கொண்டிருக்கும் பாசம் தான். எப்படியேனும் இந்த ஏகத்துவக் கொள்கையை அழித்து விட வேண்டும் என்ற சிந்தனை தான். தாங்களும் ஏகத்துவவாதிகள் என்று இவர்கள் எவ்வளவு தான் நடித்தாலும் அந்த நடிப்பு நாடகத் திரையை வல்ல நாயன் விரைவில் கிழித்து எறிவான்.
உண்மை வந்து விட்டது. பொய் அழிந்து விட்டது. பொய் அழியக் கூடியதாகவே உள்ளது (அல்குர்ஆன் 17:83)
என்ற திருமறை வசனத்தின் பொருள் மக்களுக்கு நன்கு தெளிவாக வெளியே வரும் அந்த நாள் வெகு தொலைவில் இல்லை.
இந்தப் பொய்ப் பிரச்சாரக் கூட்டம், நமது கொள்கைச் சகோதரர் ஒருவரை கொலைகாரர், கொள்ளைக்காரர் என்று அழைத்து அவரது திருந்திய நிலையைக் கொச்சைப் படுத்துகின்றது.
ஒருவர் கடந்த கால நிலையை நினைத்து வருந்திக் கொண்டிருக்கும் போது, அவரை மேலும் திருந்துவதற்கான வழிகளை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, கொலைகாரர், கொலைகாரர் என்று அழைத்து அவரை பழைய நிலைக்கே திரும்ப வழியனுப்பி வைப்பது மோசமான பாவமாகும். ஒருவர் திருந்தி, தவ்பா செய்த பிறகு அந்தத் தவ்பாவைக் கொச்சைப் படுத்துவது, அல்லாஹ் அவரது பாவத்தை மன்னிக்க மாட்டான் என்ற சித்திரத்தை உருவாக்குவது அல்லாஹ்வுடைய தனிப்பட்ட அதிகாரத்தில் தலையிடும் செயலாகும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பனூ இஸ்ரவேலர்களின் சமுதாயத்தில் ஒரு மனிதர் இருந்தார். அவர் தொண்ணூற்று ஒன்பது மனிதர்களைக் கொன்று விட்டிருந்தார். பிறகு, "(எனக்கு) பாவமன்னிப்பு கிடைக்குமா?'' என்று விசாரித்தபடி ஒரு பாதிரியாரிடம் வந்து கேட்டார். அந்தப் பாதிரியார், "கிடைக்காது'' என்று கூற அவரையும் அம்மனிதர் கொன்று விட்டார். பிறகு (மீண்டும் மனம் வருந்தி) விசாரிக்கலானார். அப்போது ஒரு மனிதர், "இன்ன ஊருக்குப் போ'' என்று கூறினார். (அந்த ஊரை நோக்கிச் சென்ற போது பாதி வழியில்) அவரை மரணம் தழுவியது. அவர் தன் நெஞ்சை அந்த ஊர் இருக்கும் திசையில் சாய்த்துக் கொண்(டே இறந்து விட்)டார்.
அப்போது இறைக் கருணையைப் பொழியும் வானவர்களும் இறைத் தண்டனைகளை நிறைவேற்றும் வானவர்களும் அவர் விஷயத்தில் சச்சரவு செய்து கொண்டனர். உடனே அல்லாஹ், "நீ நெருங்கி வா'' என்று (அவர் செல்லவிருந்த ஊரிடம்) அதை நோக்கி உத்தரவிட்டான். (அவர் வசித்த ஊரிடம்) "நீ தூரப் போ'' என்று இதை நோக்கி உத்தரவிட்டான். பிறகு "அவ்விரண்டுக்கும் உள்ள தூரத்தைக் கணக்கெடுங்கள்'' என்று (வானவர்களுக்குக்) கூறினான். (அவ்வாறு கணக்கெடுத்த போது) ஒரு சாண் அளவுக்கு அவர் செல்லவிருந்த ஊருக்குச் சமீபமாக இருந்ததால் அவருக்குப் பாவ மன்னிப்பு வழங்கப்பட்டது.
அறிவிப்பவர்: அபூஸயீதுல் குத்ரீ (ரலி), நூல்: புகாரி 3470
நூறு கொலைகள் செய்தவரைக் கூட, அவர் திருந்தி தவ்பா செய்யும் போது அவரது தவ்பாவை ஏற்று அல்லாஹ் மன்னிக்கத் தயங்கவில்லை என்பதை இந்த ஹதீஸில் பார்க்கிறோம்.
ஆனால் இவர்கள் திருந்திய ஒரு மனிதரைக் கொலைகாரர் என்று திரும்பத் திரும்ப கூறி அல்லாஹ்வின் மன்னிக்கும் அதிகாரத்தைத் தம் கையில் எடுத்துக் கொள்கின்றார்கள். இன்று இந்த சகோதரர் பழைய பாதைக்குத் திரும்பிச் செல்லாமல் அவர் ஏற்றுக் கொண்ட குர்ஆனும் ஹதீசும் அவரைத் தடுத்துக் கொண்டிருக்கின்றன என்ற தைரியத்தில் இவ்வாறு ஏகடியம் பேசுகின்றார்கள். அல்லாஹ்வின் கருணையால் அவர் தன் பழைய பாதைக்குத் திரும்ப மாட்டார் என்று நாமும் உறுதி கூறுவோம். ஆனால் இவர்களின் இந்த ஆணவப் போக்கை அல்லாஹ் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றான். இவர்களுக்கு அவன் போதுமானவனாக இருக்கின்றான் என்பதை மட்டும் இங்கே தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.


தடைகளைத் தாண்டி நடைபோடும்
தவ்ஹீத் ஜமாஅத்
தவ்ஹீத் ஜமாஅத்திற்குத் தடைகள் என்பது புதியவை அல்ல! அந்தத் தடைகள் சமுதாய ரீதியாக இருப்பினும் சரி! அல்லது ஆட்சியாளர்கள் மூலம் ஏற்படுத்தப்படும் தடைகளானாலும் சரி! அவற்றையெல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளால் தகர்த்தெறிந்து கொண்டு வருகின்றது.
அந்த அடிப்படையில் கடந்த டிசம்பர் 6 அன்று தவ்ஹீத் ஜமாஅத்திற்கு ஒரு புதிய அனுபவம். இது வரை இன்னொரு முகாமிலிருந்து டிசம்பர் ஆறை நாம் சந்தித்துக் கொண்டிருந்தோம். ஆனால் இப்போது நமக்கென்று உள்ள சொந்த முகாமில் இருந்து கொண்டு சுடர் முகம் தூக்கி இந்த நாளைச் சந்தித்துள்ளோம்.
இவ்வாறு நம்முடைய அமைப்பிலிருந்து டிசம்பர் 6 ஐ சந்திக்கவிருந்த வேளையில், ஆட்சிப் பொறுப்பேற்ற நாளிலிருந்து இது வரை எந்தத் தடையும் போட்டிராத அதிமுக அரசு அதற்குத் தடை போட்டது. மாற்று முகாம் தங்களுக்குக் கூட்டம் வராது என்பதைச் சரியான முறையில் அனுமானித்து, பத்திரிகைகளில் செய்தி வந்தால் போதும் என்பதை மட்டும் மையக் குறிக்கோளாகக் கொண்டு முற்றுகைப் போர் என்று அறிவித்திருந்தது. எனவே அரசின் இந்தத் தடை அவர்களுக்கு லாபம் தான். ஆனால் நமக்கு அது நட்டம்.
எவ்வாறு நாம் நினைத்திருந்தோம்? நாம் நடத்தவிருக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு தவ்ஹீது வட்டத்தைத் தாண்டி பொதுமக்களை எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். அதுவும் தர்ஹாக்கள் கூடாது, மத்ஹபுகள் கூடாது, மவ்லிதுகள் கூடாது, தொழுகையில் நபிவழியைப் பின்பற்றி விரலசைத்தல் ஆகியவற்றின் மூலம் நம்மை தவ்ஹீதுவாதிகள் என்று அடையாளம் காட்டிக் கொண்டு, கூட்டணிக்காக கொள்கையை விட மாட்டோம் என்பதைத் தெளிவாக அறிவித்து நடத்தும் இந்தப் போராட்டத்திற்கு வருகின்ற பொதுமக்களின் வரத்தை இந்தத் தடை பாதிக்குமே என்று கவலைப்பட்டோம்.
தடை உடைத்த மக்கள் வெள்ளம்
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! இத்தனை தடைகளையும் தாண்டி நம் சகோதரர்கள் பெண்களையும் அழைத்துக் கொண்டு மடை உடைத்த வெள்ளம் போல் தடையை உடைத்து மக்கள் வெள்ளமாகத் திரண்டனர். எத்தனை தடைகள் வந்தாலென்ன? அவை அத்தனையையும் தாங்கும் தடந்தோள்கள் எங்களுக்கு உண்டு என்று அணி அணியாய் வந்த அந்த மக்கள் கூட்டத்தைக் கண்டு அல்லாஹ்வுக்கு மீண்டும் மீண்டும் நாம் நன்றிகளைச் சமர்ப்பித்துக் கொண்டிருந்தோம்.
அதுவும் பெண்கள், பிள்ளை குட்டிகளை அழைத்துக் கொண்டு வந்த போது, நீங்கள் கைதாக வேண்டாம் என்று நாம் சொன்னால், நாங்கள் என்ன சளைத்தவர்களா? நாங்களும் கைதாகின்றோம் என்று கைதான காட்சி நம் உள்ளங்களை நெகிழச் செய்தது.
இது போன்ற சமுதாயப் பிரச்சனைகளை நாம் கையில் எடுப்போம் என்று அன்று நாம் ஒன்றாக இருந்த அமைப்பிடமே கேட்டோம்; கெஞ்சினோம். அந்தத் தலைமையோ இந்த விவகாரங்களைக் கையில் எடுத்தால் நமது வருவாய் பாதித்து விடும் என்று கணக்குப் போட்டு கழன்று விட்டது. அதனால் சமுதாயப் பிரச்சனைகளுக்கு நாம் கண்ட தனி இயக்கமும் மக்கள் கூட்டத்தைக் கண்டவுடன் தடுமாறி தடம் மாறினார்கள். தவ்ஹீத் என்றதும் முகம் சுளிக்க ஆரம்பித்தனர். நாம் ஒரு சிகரத்தை எட்டி விட்டோம் என்று சித்த பிரமைக்குள்ளானார்கள். இறுதியில் தவ்ஹீத்வாதிகளைக் கழற்றி விடவும் செய்தார்கள்.
நாம் இப்படி ஏமாற்றப்படுவோம் என்று கடுகளவும் எண்ணியிருக்கவில்லை. காரணம் நமக்கு மறைவான ஞானம் இல்லை. சமுதாயப் பிரச்சனைகளை நாமே கையில் எடுத்து போராட வேண்டும் என்ற சிந்தனையின் கன்னி முயற்சி தான் டிசம்பர் ஆறு அன்று நடந்த முதல் போராட்டம். தவ்ஹீத் ஜமாஅத்தின் தனி முத்திரை பதித்த போராட்டம்.
காக்கிச் சட்டையைக் கண்டாலே கை, கால் தந்தி அடிக்கும் சமுதாயத்தினரை லத்தியல்ல, துப்பாக்கி ஏந்தி வரும் காவல் துறையினரைக் கூட துணிவாகப் பார்க்கும் சிங்கங்களாக ஆக்கியது எது? ஏகத்துவம் அல்லவா? இம்மையின் நம்பிக்கையை நிர்மூலமாக்கி, மறுமையின் நம்பிக்கையை அவர்களின் நெஞ்சங்களில் பதிய வைத்தது சத்தியக் கொள்கை அல்லவா?
அந்தக் கொள்கையின் சொந்தக்காரர்களுக்கு அடக்குமுறையை எதிர்த்து நிற்பதற்கு யாரும் பாடம் படித்துக் கொடுக்கவும் வேண்டுமா? மீன்களுக்கு நீந்தவும் மான்களுக்குப் பாயவும் கற்றுக் கொடுக்க வேண்டுமா? இனிமேல் இதற்கு இன்னோர் இயக்கத்தினர் தேவையில்லை. அல்லாஹ்வின் அருளால் இவர்களுக்கு இவர்களே போதும் என்பது நிரூபணம் ஆனது மட்டுமல்ல.
இது போன்ற போராட்டங்களுக்கு மற்ற மக்கள் வருவதற்கும், இயக்கம் வளர்வதற்கும் தடையாக இருப்பது தவ்ஹீது கொள்கை என்று பொய்யர்கள் கூறிய போலிக் காரணம் பொல பொலவென்று உடைந்து சுக்கு நூறாய் தகர்ந்து போனது. அவர்களது இந்த வாதம் பொய்யாகப் போனது மட்டுமல்ல.
இவர்கள் போய் விட்டதால் ஷிர்க், பித்அத் ஜமாஅத்துகள் எல்லாம் எங்களை அன்போடு வரவேற்று அரவணைக்கின்றனர் என்று கதையளந்தவர்களின் கனவுகளும் கலைந்து தவிடு பொடியாகிப் போய் விட்டன என்பதை இரு தரப்புக்கும் வந்த கூட்டத்தைப் பற்றி காவல்துறையின் கைதுப் பட்டியலும் பத்திரிகைச் செய்திகளும் தெளிவாக எடுத்துரைக்கின்றன.
இந்தத் தடை நமக்குப் பல உண்மைகளை அறிய உதவியதோடு மாபெரும் வெற்றியாகவும் அமைந்து விட்டது. இவை ஆட்சியாளர்கள் ஏற்படுத்திய தடைகள்! இவற்றை வெற்றிகரமாகத் தாண்டுவதற்கு உதவிய அல்லாஹ்வுக்கே புகழைச் சாட்டுகின்றோம்.
சமுதாய ரீதியிலான தடைகள்
இந்த ஏகத்துவ ஜோதியைத் தமிழகத்தில் பரப்பிய போது சமுதாயம் மிகக் கடுமையாக எதிர்த்தது. காவல்துறையிடம் போய் இவர்கள் தீவிரவாதிகள் என்று பொய் புகார் கொடுத்து பிரச்சாரத்தைத் தடுத்து நிறுத்தினார்கள். பல இடங்களில் காவல்துறை அவர்களுக்குத் துணை நின்று நம்மைத் தடுத்தது. சில இடங்களில் காவல்துறை சட்டத்தின் பக்கம் நின்று நமக்குத் துணையாக இருந்தது.
திட்டு, ஏச்சு பேச்சுக்களுடன் நிற்காமல் அரிவாள் வெட்டு, வீச்சு என்றளவுக்கு எதிர்ப்பு எல்லை தாண்டிச் சென்றது. எல்லாம் வல்ல அல்லாஹ் அந்தத் தடைகளையும், காட்டுத் தர்பார்களையும் சந்திக்கும் துணிவையும் திராணியையும் நமக்குத் தந்தான். அதே தடை இப்போதும் தொடராமல் இல்லை. இன்றும் அந்தத் தடைகள் தொடர்ந்தாலும் அதையும் அல்லாஹ்வின் உதவியால் எதிர்கொண்டு வருகின்றோம்.
நம்பிக்கை கொண்டோரே! மத குருமார்களிலும், பாதிரிகளிலும் அதிகமானோர் மக்களின் செல்வங்களைத் தவறான முறையில் உண்ணுகின்றனர். அல்லாஹ்வின் வழியை விட்டும் (மக்களைத்) தடுக்கின்றனர். "அல்லாஹ்வின் பாதையில் செலவிடாமல் தங்கத்தையும், வெள்ளியையும் சேர்த்து வைப்போருக்கு துன்புறுத்தும் வேதனை உண்டு'' என்று எச்சரிப்பீராக (அல்குர்ஆன் 9:34)
அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுப்பதன் மூலம் அல்லாஹ் இந்த வசனத்தில் கூறும் பட்டியலில் இவர்கள் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். ஏகத்துவப் பிரச்சாரத்தைத் தடுப்பதை இவர்கள் பெருமையாகவும் நினைத்து, மெயில் அனுப்பி மகிழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஆனால் அல்லாஹ்வோ இவர்களைக் கடுமையாக எச்சரிக்கின்றான். மக்களும் இவர்கள் மீது கடுமையான வெறுப்பில் இருக்கின்றார்கள்.
அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்தாமல் விட மாட்டான். (அல்குர்ஆன்9:32)
அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்துபவன். (அல்குர்ஆன் 61:8)
ஏகத்துவப் பிரச்சாரத்தைத் தடை செய்யும் இவர்களுக்கு இந்த வசனங்களை நினைவு படுத்திக் கொள்கிறோம்.


அல்லாஹ்வின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நான்காவது செயற்குழு பிப்ரவரி 6 அன்று விழுப்புரத்தில் சிறப்பாக நடைபெற்றது. ஓராண்டு கழியாத, ஒரு வயது கூட நிறையாத பத்து மாதக் குழந்தை என்றாலும் பாராளும் பேரமைப்புகளின் செயற்குழுக்களை விஞ்சும் விதமாக அது அனுபவ முதிர்ச்சியைக் கொண்டிருந்தது.
திட்ட வரை நேரத்திற்குள்ளாக தடம் புரளாமல் சென்று நேரத்தை சேமித்த விதம், குறித்த நேரத்தில் அரங்கினுள் வந்து குவிந்த கொள்கைவாதிகளின் எண்ணிக்கை, மாநிலமெங்கும் மாவட்ட ரீதியிலான வளர்ச்சி பற்றிய பார்வை, எட்டிய மற்றும் எட்ட வேண்டிய இலக்குகளை நோக்கி நிர்வாகிகள் செலுத்திய தூர நோக்குப் பார்வை, சுனாமி சோதனைக் களத்தில் டிஎன்.டி.ஜே. தொண்டர்கள் ஆற்றிய சுயநலமில்லாத சேவை பற்றிய விளக்கம், அவ்வப்போது ஆலிம்கள் ஆற்றிய அறிவுரைகள் என இவை அனைத்தும் ஓராண்டு கூட நிறையாத அமைப்புக்குரிய அம்சங்கள் இல்லை. மாறாக ஒரு நூறாண்டு பின்னணியாகக் கொண்ட முன்னணி பேரியக்கங்களின் பாரம்பரியங்கள் என்பதை இவை பறை சாற்றின.
கொள்கையை மையமாக வைத்து ஓரியக்கம் செயல்பட ஆரம்பித்தால் அதில் ஒருவர் கூட தேற மாட்டார் என்று உலகக் கணக்குப் போட்டவர்களின் தப்புக் கணக்கு தவிடு பொடியாகி, கொள்கைக்காகக் கூடும் உருப்படியான உறுப்பினர்கள் இங்கு உண்டு என்ற உண்மை இந்த செயற்குழுவில் நிரூபணமானது தான் இதில் நம்மைப் பிரமிக்க வைத்த விஷயம்.
இப்படி வான் முகட்டை நோக்கி வளர்ச்சிச் சிறகில் பறக்கும் நமக்கு ஏகத்துவம் வழங்கும் இறையச்சச் செய்திகள்.
இந்த இயக்கத்தின் உயிர் மூச்சு, இதயத் துடிப்பு எல்லாமே ஏகத்துவம் தான். ஷிர்க் என்ற பாவத்தின் நிழலில் கூட தவறியும் நாம் மிதித்து விட மாட்டோம். இந்த விஷயத்தில்,
உங்களை விட்டும் அல்லாஹ்வையன்றி எதனை வணங்குகிறீர்களோ அதை விட்டும் நாங்கள் விலகியவர்கள். உங்களை மறுக்கிறோம். அல்லாஹ்வை மட்டும் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை எங்களுக்கும் உங்களுக்குமிடையே பகைமையும் வெறுப்பும் என்றென்றும் ஏற்பட்டு விட்டது என்று கூறிய விஷயத்தில் இப்ராஹீமிடமும் அவருடன் இருந்தோரிடமும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது. (அல்குர்ஆன் 60:4)
என அல்லாஹ் கூறுவது போன்று இப்ராஹீம் (அலை) அவர்களாக இருப்போம். அவர்களது வழியில் நின்று, ஒடுக்கப்பட்டவர்களுக்காகக் குரல் கொடுப்பதில், அடக்குமுறைக்கு எதிராக ஆர்ப்பரிப்பதில் மூஸா, ஹாரூன் (அலை) அவர்களைப் போன்று செயல்படுவோம்.
ஏகத்துவத்தை அடிப்படையாகக் கொள்ளாமல் நடத்தப்படும் எந்தவொரு போராட்டமும், ஆர்ப்பாட்டமும் நமக்குத் தேவையேயில்லை. இந்த இலட்சியத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகையில் எண்ணிக்கை நமக்கு ஒரு பொருட்டே கிடையாது. இது நம்முடைய அளவு கோல் மட்டுமல்ல, வல்ல அல்லாஹ்வின் அளவு கோலும் இது தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
நமக்கு ஆட்கள் முக்கியமல்ல! அவர்களிடம் குடி கொண்டிருக்கும் கொள்கை உரம், ஒழுக்கத் தரம் தான் முக்கியம். எனவே, இத்தகைய கொள்கை விஷயத்தில் ஒரு போதும் சமரசம் செய்து கொள்ளாத உறுதியான நிலைபாட்டைக் கடைப்பிடிப்போமாக!
இதயத்தில் தேவை இக்லாஸ்
தன்னை வஞ்சித்து, தன் வியர்வையையும் உழைப்பையும் சுரண்டி, கசக்கிப் பிழிந்து சக்கையாக வெளியே தள்ளிய அமைப்பை விட நாம் எல்லா வகையிலும் விஞ்சி விட வேண்டும் என்ற உணர்வு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினர்களிடம் ஏற்படுவது இயற்கை தான்.
ஏகத்துவக் கொள்கையை, அந்தப் பிரச்சாரத்தை அழிக்க வேண்டும் என்ற உணர்வு மேலோங்கி, அதற்கான முயற்சிகளிலும் அவர்கள் இறங்கி வருகின்றார்கள். "இவர்கள் (தவ்ஹீத் ஜமாஅத்தினர்) உங்களிடம் நிதி கேட்டு வருகின்றனர். ஆனால் உங்களை இணை வைப்பவர்கள் என்று கூறி வேண்டாம் என்கிறார்கள். இவர்களுக்கு நீங்கள் நிதி கொடுக்கலாமா?'' என்று சுன்னத் வல் ஜமாஅத் எனப்படுவோரை நோக்கி மேடைகளில் பகிரங்கமாகவே பேசுகின்றார்கள். அதாவது தவ்ஹீத் ஜமாஅத்தினர் உங்களுக்கு எதிரி, நாங்கள் தான் உங்கள் நண்பர்கள், அதனால் எங்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள் என்ற ரீதியில் பேசி வருகின்றனர்.
இதன் மூலம் நம்மை முடக்கி விடலாம் என்று நினைத்து மனப்பால் குடிக்கின்றனர். நாம் எதற்காகவும் கொள்கையில் வளைந்து கொடுப்பவர்கள் கிடையாது. சு.ஜ.வினர் நிதி கொடுத்தால் அதை வாங்குவதற்கு மார்க்கத்தில் தடை உள்ளதா என்று தான் பார்ப்போமே தவிர, அவர்கள் தரும் காசுக்காக கொள்கையை அடகு வைத்து விட மாட்டோம் என்பதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.
தவ்ஹீதுவாதிகளிடம், நாங்களும் தவ்ஹீதுவாதிகள் தான் என்று இவர்கள் முகம் காட்டுகின்றனர். சு.ஜ.வினரிடம் நாங்கள் உங்களோடு தான் என்று அசடு வழிகின்றார்கள். இவர்களின் இந்த மனப்பாங்கை திருக்குர்ஆன் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகின்றது.
நம்பிக்கை கொண்டோரை அவர்கள் சந்திக்கும் போது, "நம்பிக்கை கொண்டுள்ளோம்'' எனக் கூறுகின்றனர். தமது ஷைத்தான்களுடன் தனித் திருக்கும் போது "நாங்கள் உங்களைச் சேர்ந்தவர்களே. நாங்கள் (அவர்களை) கேலி செய்வோரே'' எனக் கூறுகின்றனர்.
(அல்குர்ஆன் 2:14)
எனவே நடிப்பை, நிஜ வாழ்க்கையில் கடைப்பிடிக்கும் இவர்களிடமிருந்து, இவர்கள் விரிக்கும் வலையிலிருந்து மக்களைக் காப்பது நம்முடைய கடமை என்பதில் கடுகளவும் சந்தேகமில்லை. ஆனால் நாம் இந்தப் போராட்டத்தில் இக்லாஸ் எனும் உளத்தூய்மையை ஒரு போதும் இழந்து விடக் கூடாது. உளத்தூய்மை இல்லாமல், முகஸ்துதிக்காக செய்யப்படும் எந்தவொரு அமலும் செய்தவரின் முகத்திலேயே தூக்கி எறியப்பட்டு விடும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
வணக்கத்தை அல்லாஹ்வுக்கே கலப்பற்றதாக்கி வணங்குமாறும், உறுதியாக நிற்குமாறும், தொழுகையை நிலை நாட்டு மாறும், ஸகாத்தைக் கொடுக்கு மாறும் தவிர அவர்களுக்கு வேறு கட்டளை பிறப்பிக்கப் படவில்லை. இதுவே நேரான மார்க்கம்.
(அல்குர்ஆன் 98:5)
நம்முடைய எந்த ஒரு காரியமும், அது ஏகத்துவக் கொள்கையை நிலைநாட்டுவதற்காக என்றாகி விடும் போது அது நிச்சயமாக இக்லாஸான அமலாக ஆகி விடும்.
"அல்லாஹ்வின் திருப்தியை நாடி, நீர் எதைச் செலவு செய்தாலும் அதற்காக நீர் கூலி வழங்கப்படுவீர். உமது மனைவியின் வாயில் நீர் ஊட்டும் ஒரு கவள உணவு உட்பட'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸஃத் பின் அபீவக்காஸ் (ரலி)
நூல்: புகாரி 56
இந்த ஹதீஸின்படி நாம் நடத்துகின்ற போராட்டம், ஆர்ப்பாட்டம், இரத்த தானம், சுனாமி நிவாரணப் பணிகள் அனைத்தும் நன்மை வழங்கப்படும் செயலாக, இறை திருப்தியைப் பெற்றுத் தரும் இனிய திருப்பணிகளாக மாறி விடும். இது நாம் நம்முடைய செயல்பாடுகளில் கவனத்தில் கொள்ள வேண்டிய  அடிப்படை அம்சமாகும்.
இறை உதவியா? எண்ணிக்கையா?
இன்று இறைவனின் அருளால் நமது ஜமாஅத் தமிழகத்தில் தனியொரு சக்தியாக உருவெடுத்து வருகின்றது. இவர்கள் தவ்ஹீதுவாதிகள், உங்களை முஷ்ரிக் என்று கூறுகின்றார்கள் என்றெல்லாம் பிரச்சாரம் செய்தும் நாம் நடத்தும் போராட்டங்களில் மக்கள் வெள்ளமெனப் பாய்கின்றனர்.
நாம் நடத்தும் மார்க்க விளக்கப் பொதுக் கூட்டங்களில் கடல் போல் மக்கள் கூட்டம் வருவதும், மற்றவர்கள் நடத்தும் கூட்டங்களில் கடல் போல் திடல் காலியாகக் காட்சியளிப்பதும் நம்முடைய உள்ளங்களில் ஒரு வித மயக்கத்தை உண்டு பண்ணி விடக் கூடாது. இந்த விஷயத்தில் நம்முடன் கடுகளவு கூட ஒப்பிட்டுப் பார்க்க முடியாத உயர்ந்த சமுதாயமான நபித்தோழர்களுக்குக் கூட அல்லாஹ் உரிய பாடத்தைப் படித்துக் கொடுக்கத் தவறவில்லை.
பல களங்களில் அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்திருக் கிறான். ஹுனைன் (போர்) நாளில் உங்களின் அதிக எண்ணிக்கை உங்களுக்கு மமதையளித்த போது, அது உங்களுக்கு எந்தப் பயனும் அளிக்கவில்லை. பூமி விசாலமாக இருந்தும் உங்களுக்கு அது சுருங்கி விட்டது. பின்னர் புறங்காட்டி ஓடினீர்கள்.
(அல்குர்ஆன் 9:25)
உயர்ந்த, உறுதி மிக்க சமுதாயத்தையே அல்லாஹ் இப்படி வாட்டி விடுகின்றான் எனும் போது நாம் எம்மாத்திரம்?
எனவே, இப்படை தோற்கின் எப்படை வெல்லும்? இந்தப் படை போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா? என்பது போன்ற மமதையான வார்த்தைகள் எள்ளளவு கூட, மறந்தும் வாயிலிருந்து வந்து விடக் கூடாது.
இந்த எண்ணம் வந்து விட்டால் நாம் அழிவுக்கு ஆளாகி விடுவோம். அல்லாஹ் காப்பானாக! நாம் வளர்த்த இயக்கம் அழிவுப் பாதைக்குப் போனதற்கு இது தான் காரணம் என்பது நம் கண் முன்னால் கண்ட உண்மையாகும்.
எனவே இறை உதவி என்பது எண்ணிக்கை அடிப்படையில் வருவதல்ல. உறுதியான ஈமானின் அடிப்படையில் வருவதாகும். இதை மனதில் கொண்டு நாம் செயல்பட வேண்டும்.
கொள்கையும் தொழுகையும்
பொதுவாகவே ஏகத்துவவாதிகள் என்றால் அவர்களிடம் தொழுகை இருக்காது என்ற தோற்றம் மக்களிடம் இருந்து வருகின்றது. அதற்கு ஏதுவாக நாமும் இரவு நேரங்களில் 1 மணி வரை ஏகத்துவத்தைப் பேசி விட்டு, ஃபஜ்ரு தொழுகைக்கு வேக்காடு வைத்து விடுகின்றோம்.
அவர்கள் தொழுகையைப் பாழாக்கினர். மனோ இச்சைகளைப் பின்பற்றினர். அவர்கள் நஷ்டத்தைச் சந்திப்பார்கள். திருந்தி நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்தவரைத் தவிர. அவர்கள் சொர்க்கத்தில் நுழைவார்கள். சிறிதளவும் அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.
(அல்குர்ஆன் 19:59,60)
இந்த வசனத்தில் தொழுகையை விட்டால், தவ்பா செய்தால் மட்டும் போதாது, அவர்கள் ஈமானும் கொள்ள வேண்டும் என்று அல்லாஹ் கூறுவதிலிருந்து தொழுகையை விட்டவர் இஸ்லாத்தை விட்டு வெளியே போய் விட்டார் என்பதை அறியலாம். அல்லாஹ் நம்மைக் காக்க வேண்டும். அதனால் ஒரு கொள்கைவாதி ஃபஜ்ர் மட்டுமல்ல, ஃபஜ்ர் முதல் இஷா வரை அனைத்து தொழுகைகளையும் ஜமாஅத்துடன் தொழுவதுடன் சுன்னத்தான தொழுகை களையும் பேணிக் கொள்ள வேண்டும்.
ஒழுக்க வாழ்வின் அவசியம்
தாடி வைத்தல் போன்ற வெளிப்படையான சுன்னத்துக் களையும் ஒரு கொள்கைவாதி பேண வேண்டும்.
நம் சகோதரர்கள் யாரும் வட்டி கொடுப்பது, வட்டி வாங்குவது போன்ற பாவத்தில் ஈடுபடுவது கிடையாது. ஆனால் தொழில் நடத்துவதற்காக வங்கிகளில் வாங்கும் கடனைப் பெரிது படுத்தாமல் அதன் வலைகளில் சாதாரணமாக விழுந்து விடுகின்றனர். நிரந்தர நரகத்திற்கு இழுத்துச் செல்லும் இது போன்ற பாவங்களில் வீழ்ந்து விடக் கூடாது. இத்தகைய பாவங்களில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
தீய பழக்க வழக்கங்கள், பீடி, சிகரெட், புகையிலை போன்ற தீமைகளை விட்டும் ஒரு கொள்கைவாதி விலக வேண்டும்.
பெரும் பாவங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அடையாளம் காட்டியிருக்கும் விபச்சாரம் மற்றும் அதன் தூண்டுகோல்களான சினிமா போன்ற ஒழுக்கக் கேடுகள் நம்மிடம் ஒரு போதும் வந்து விடக் கூடாது.
வரதட்சணை ஒரு வன்கொடுமை என்று பிரச்சாரம் செய்யும் நாம், அந்தத் தீமை நடக்கும் திருமணங்களில் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்க வேண்டும்.
நம்பிக்கை நட்சத்திரமாக...
பேரலைகளுக்கும் பெரும் புயல்களுக்கும் ஈடு கொடுத்து சமுதாயக் கடலில் நீந்திய எத்தனையோ இயக்கக் கப்பல்கள் ஊழல், பொருளாதார மோசடி என்ற ஓட்டைகள் விழுந்தவுடன் அடையாளம் தெரியாத அளவுக்கு மூழ்கிப் போய் விட்டன. அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். இன்று அவனது கருணையால் எந்தவொரு இயக்கமும் படைத்திராத சாதனையை, சரித்திரத்தை இந்தப் பத்து மாதக் கத்துக் குட்டி இயக்கம் படைத்திருக்கின்றது. சுனாமி நிவாரணத் திற்கான இதன் வசூல் முக்கால் கோடி ரூபாயைத் தாண்டி விட்டது.
அந்த அளவுக்கு இந்த அமைப்பு சோரம் போகாத அமானிதத் தன்மையில் ஆழ்ந்த பிடிப்பு, அழுத்தமான பிணைப்பு கொண்டிருக்கின்றது. இந்த வகையில் இந்த இயக்கம் இஸ்லாமிய சமுதாயத்தின் நம்பிக்கை! நாணய அஸ்திவாரம்! எனவே இந்த இயக்கத்தின் பொறுப்பாளர்கள், ஊழல் கரையான்களிடம் ஒரு போதும் மாட்டி விடக் கூடாது. அது போல் இதன் கிளைகளின் வரவு செலவு கணக்குகள் எப்போதும் சரியாகப் பேணப்பட வேண்டும்.
நம்முடைய அமைப்பின் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளுக்குக் கொடி அவசியம் என்ற கருத்து செயற்குழுவில் முன் வைக்கப்பட்டது. இந்தக் கொடியை அவசியத்திற்கு ஏற்றாற்போல், அடையாளத்திற்காக ஆக்கிக் கொள்வோமாக! மற்ற கழகங்கள், கட்சிகள், கொடிக்கு முக்கியத்துவம் அளித்து கொள்கையைப் பறக்க விட்டது போன்று நாமும் ஆகி விடக் கூடாது என்பதில் கருத்தும் கவனமும் கொள்வோமாக!
சுருக்கமாகச் சொல்லப் போனால் எல்லா வகைகளிலும் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில், நபி (ஸல்) அவர்கள் தம் கண் முன் வளர்த்த நபித்தோழர்களைப் போன்ற சமுதாயமாகப் பரிணமிப்போமாக!


ஜாக் சத்தியத்தை சன்ர்பிக்குமா?
சந்தர்ப்பவாதக் கூட்டணியை விமர்சித்து ஏகத்துவத்தில் நாம் தலையங்கம் எழுதியிருந்தோம். சத்தியத்தைச் சமர்ப்பித்தல் சந்தர்ப்ப வாதமாகுமா? என்று கேள்வி எழுப்பி ஓர் இதழ் தனது பதிலைச் சமர்ப்பித்துள்ளது.
இந்த மேடையில் பேசுவேன், அந்த மேடையில் பேச மாட்டேன் என்ற வீராப்பு வசனங்கள், இத்தடுமாற்றங் கள் தகர்த்தெறியப்பட வேண்டும். இறை நம்பிக்கையாளர்களைப் பொறுத்த வரை ஷிர்க், குஃப்ர், பித்அத் ஆகிய கொடிய விஷயங்களை ஒழிப்பதில் வீராப்பாக இருக்க வேண்டும். இப்புனிதப் பணிக்காக ஒரு சாரார் அழைக்கும் போது நாங்கள் அவர்களிடம் வர மாட்டோம் என்று அடம் பிடித்தால் அது பெருமைக்குரிய பேச்சோ, அறிவார்ந்த செயலோ அல்ல.
இது தான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைபாடு பற்றிய இவர்களது விமர்சனமாகும். இந்த நிலைபாடு இன்று நேற்று எடுக்கப்பட்ட ஒன்றல்ல! ஏகத்துவப் பிரச்சாரத்தில் மற்றவர்களுடன் மேடையைப் பகிரும் போது ஏற்படும் பிரச்சனைகளைக் கருத்தில் கொண்டு அன்றிலிருந்து இன்று வரை தொடர்ந்து கடைப்பிடித்து வரும் நடைமுறையும் நிலைபாடுமாகும். இதைத் தான் இவர்கள் மேற்கண்டவாறு விமர்சித்துள்ளார்கள்.
நன்மையிலும் இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமை யாகத் தண்டிப்பவன்.
(அல்குர்ஆன் 5:2)
திருக்குர்ஆனின் இந்த வசனத்தை, தங்களது கருத்துக்குச் சான்றாகவும் சமர்ப்பித்துள்ளார்கள். நஜ்ஜாஷி மன்னரிடம் நபித்தோழர்கள் சென்று சத்தியத்தை எடுத்துச் சொன்ன சம்பவத்தையும், ஹஜ்ஜுக்கு வருவோரிடம் நபி (ஸல்) அவர்கள் சத்தியத்தை எடுத்துச் சொன்னதையும் இதற்குச் சான்றாக்கி உள்ளனர்.
நமக்கு இதில் மாற்றுக் கருத்து ஒருபோதும் கிடையாது. நாம் ஏதோ மாற்றுக் கருத்துடையவர்களுக்கு மத்தியில் போய் பேசுவதற்குத் தடைகளையும், தேவையற்ற நிபந்தனைகளையும் போட்டு சத்தியத்தைச் சொல்வதற்குத் தடையாக இருக்கிறோம் என்பது போன்ற பொய்யான தோற்றத்தைக் காட்ட முயற்சி செய்துள்ளனர்.
அல்லாஹ்வின் அருளால் மாற்றுக் கருத்துடையவர்களுக்கு மத்தியில் போய் சத்தியக் கருத்துக்களைச் சொல்வதற்கு நாம் கொஞ்சம் கூட சளைத்தவர்கள் அல்ல என்பதற்கு இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி ஒரு சிறந்த எடுத்துக்காட்டு!
சத்தியத்தை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வதா? வேண்டாமா? என்பது நமக்கிடையே பிரச்சனை இல்லை. நம்மை விமர்சிக்கும் இவர்கள் மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வதை விட அல்லாஹ்வின் அருளால் வீரியமாக, பரவலாக நாம் மார்க்கத்தை எடுத்துச் சொல்லி வருகிறோம். எங்கே போய்ச் சொன்னால் எதிர்ப்பும் பிரச்சனைகளும் அதிகம் வருமோ அங்கே போய்ச் சொல்லி வருகிறோம். எனவே மாற்றுக் கருத்து உடையவர்களுக்கு சத்தியத்தை எடுத்துச் சொல்லலாமா? கூடாதா? என்பது ஒரு காலத்திலும் நமக்கிடையே பிரச்சனையாக இருந்ததில்லை.
மாற்றுக் கருத்துடையவர்களை, தவறான கொள்கை உடையவர்களை பிரச்சாரகர்களாகவும், உண்மையைப் பேசுபவர்களாகவும் அறிமுகம் செய்யலாமா? என்பது தான் பிரச்சனை.
நஜ்ஜாஷி மன்னருக்குத் தான் நபித்தோழர்கள் இஸ்லாத்தை எடுத்துச் சொன்னார்களே தவிர நஜ்ஜாஷியின் பயானை நபித்தோழர்கள் கேட்கவில்லை. அதற்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை.
நஜ்ஜாஷி மன்னருக்குப் பத்து நிமிடம், நபித்தோழருக்குப் பத்து நிமிடம் உரை நிகழ்த்த வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்து, நஜ்ஜாஷியை மார்க்கப் பிரச்சாரகராக எந்த நபித்தோழரும் அங்கீகரிக்கவில்லை.
எனவே பிரச்சனை என்னவென்று தெளிவாகத் தெரிந்தும் திசை திருப்புகின்றார்கள். கொள்கை கெட்டவர்களுக்கு மார்க்கத்தைச் சொல்வது வேறு. கொள்கை கெட்டவர்களை மார்க்கப் பிரச்சாரம் செய்வோராக அங்கீகரிப்பது வேறு.
ஏகத்துவத்திற்குப் பதில் சொல்ல வந்தவர்கள் ஒரு வித்தியாசத்தைக் காணத் தவறி விட்டார்கள். இங்குள்ள விவகாரம் நாம் யாரிடம் போய் கருத்துக்களைச் சொல்கிறோம் என்பதல்ல! யாருடன் சேர்ந்து சொல்கிறோம் என்பது தான்.
நம்முடன் மேடையில் பகிர்பவர்கள், அதுவும் மார்க்கப் பிரச்சார மேடையில் பகிர்பவர்கள் ஏதாவது ஒரு ஷிர்க்கான அல்லது பித்அத்தான கருத்தைச் சொல்லி விடுவார்கள். இவ்வாறு சொல்பவர்கள் நாம் பேசுவதற்கு முன்னதாகப் பேசியிருந்தால், அவரை அடுத்து நாம் பேசும் போது அதற்குப் பதில் அளித்து விடலாம். அப்படிப் பதிலளிக்கும் போது கூட மேடையில் இருப்பவர்களும், எதிரில் இருப்பவர் களும் புழுவாக நெளிவார்கள். புருவங்களைச் சுருக்குவார்கள். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் நாம் நமது உரையில் பதில் சொல்லி விடலாம்.
அதே சமயம், நமக்குப் பின்னால் அவர்கள் பேசும் வாய்ப்பு ஏற்பட்டால் நமது பேச்சை மறுப்பதுடன், அவர்களது ஷிர்க்கான வாதத்தை நிலை நாட்டி விட்டுச் சென்று விடுவார்கள். இறுதியில் மக்களின் மனங்களில் நிற்பது இறுதிப் பேச்சாளரின் உரை தான். இது நமக்குத் தேவையா? இவர்கள் எடுத்துக் காட்டும் அதே அல்குர்ஆன் 5:2 வசனத்தின் படி இது பாவத்திற்குத் துணை போவதாக ஆகாதா? இதை நடுநிலையோடு சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
மார்க்கத்திற்கு முரணான கருத்துக்கள் சொல்லப்படும் சபையில் அமர்வது கூடாது என்பதைப் பின்வரும் வசனம் தெளிவாக எடுத்துரைக்கின்றது.
அல்லாஹ்வின் வசனங்கள் மறுக்கப்பட்டு, கேலி செய்யப் படுவதை நீங்கள் செவியுற்றால் அவர்கள் வேறு பேச்சுக்களில் ஈடுபடும் வரை அவர்களுடன் அமராதீர்கள்! (அவர்களுடன் அமர்ந்தால்) அப்போது நீங்களும் அவர்களைப் போன்றவர் களே என்று இவ் வேதத்தில் உங்களுக்கு அவன் அருளியுள்ளான். நயவஞ்சகர் களையும், (தன்னை) மறுப்போர் அனைவரையும் அல்லாஹ் நரகில் ஒன்று சேர்ப்பான்.(அல்குர்ஆன் 4:140)
ஒழுக்க வாழ்வே அழைப்புப் பணியின் அடிப்படை
நாம் யாருடன் பேசுகின்றோம் என்பது இந்த ஒரு கோணத்திலும் கவனிக்கப்பட வேண்டிய அம்சமாகும். நம்முடன் இணைந்து பிரச்சாரம் செய்பவர்கள் ஒழுக்கத்திலும், நன்னடத்தையிலும் சிறந்து விளங்க வேண்டும். இல்லையேல், அதைக் காரணம் காட்டியே நமது கருத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள்.
அதனால் தான் எல்லாம் வல்ல அல்லாஹ், நபி (ஸல்) அவர்களிடம்,
உங்களிடம் இதற்கு முன் பல வருடங்கள் வாழ்ந்துள்ளேன். விளங்க மாட்டீர்களா? (அல்குர்ஆன் 10:16) என்று கேட்குமாறு கூறுகின்றான். அதாவது இறைத் தூதை எடுத்துச் சொல்பவர்களுக்கு உரிய முதலீடே ஒழுக்க வாழ்வு தான். அந்த ஒழுக்க வாழ்வில் ஓட்டை விழுந்து விட்டால் அழைப்புப் பணியும் ஓய்ந்து விடும்.
பொருளாதார மோசடி நிரூபிக்கப் பட்டவர்கள், அடுத்தவன் மனைவி யுடன் அந்தரங்கத்தில் தொடர்பு கொண்டவர்கள், பகிரங்கமாக அடுத்தவன் மனைவியை அபகரித்துச் சென்றவர்கள் போன்றோருடன் மேடையில் பேசும் போது அவர்கள் மீது மக்கள் கொண்டுள்ள வெறுப்பு நம் மீதும் சேர்த்தே பாயும். அதனால் அன்றோடு மக்கள் நமது கருத்தை நிராகரித்து விடுவார்கள். அதன் பிறகு நாம் தனியாக மேடை போட்டுப் பேசினாலும் எடுபடாமல் போய் விடும்.
"நல்ல நண்பனுக்கும் தீய நண்பனுக்கும் உதாரணம் கஸ்தூரி வைத்திருப்பவரும், கொல்லனின் உலையுமாகும். கஸ்தூரி வைத்திருப் பவரிடமிருந்து உமக்கு எதுவும் கிடைக்காமல் போகாது. நீர் அதை விலைக்கு வாங்கலாம். அல்லது அதன் நறுமணத்தையாவது பெற்றுக் கொள்ளலாம். கொல்லனின் உலை உமது வீட்டையோ, உமது ஆடையையோ எரித்து விடும். அல்லது அவனிடமிருந்து கெட்ட வாடையைப் பெற்றுக் கொள்வீர்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி)
நூல்: புகாரி 2101, 5534
இந்த ஹதீஸில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அற்புதமாகக் குறிப்பிட்டுள்ள கதி தான் ஒழுக்க வாழ்வில் சரியில்லாதவர்களுடன் சேர்ந்து பிரச்சாரம் செய்யும் போது நமக்கும் நேரிடும். அல்லாஹ் காப்பானாக!
இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு தான் அவர்களுடைய மேடைகளில் நாம் அமருவதில்லை. இதே காரணத்துக்காகத் தான் மேடைக் கட்டுப்பாடு நம்மிடம் இருந்தால் கூட ஷிர்க் வாதிகளை ஏற்றுவதற்கு நாம் மிகப் பெரிய தயக்கம் காட்டுகின்றோம்.
அவர்களது உரையின் துவக்கமும், அதன் மையக் கருத்தும், முடிவும் சதா ஷிர்க்கான வார்த்தைகளை அடிப்படை யாகக் கொண்டே அமையும். அதனால் தான் இதைத் தவிர்க்கின்றோமே தவிர வேறு காரணம் இல்லை.
யார் அழைத்தாலும் சென்று சத்தியத்தைச் சொல்வோம் என்று பெயருக்குச் சொல்லிக் கொள்கி றார்களே தவிர யாரிடம் எந்தத் தீமையைச் சுட்டிக் காட்ட வேண்டுமோ அதைச் சுட்டிக் காட்டுவதில்லை.
உங்களில் ஒருவர் ஒரு தீமையைக் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும். முடியா விட்டால் தமது நாவால் (தடுக்கட்டும்) அதுவும் முடியா விட்டால் தமது உள்ளத்தால் (வெறுத்து ஒதுங்கட்டும்) இந்த நிலையானது இறை நம்பிக்கையின் பலவீனமா(ன நிலையா)கும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.
அறிவிப்பவர்: அபூஸயீதுல்குத்ரீ (ரலி)
நூல்: முஸ்லிம் 70
இந்த ஹதீஸின் அடிப்படையில் தீமையைக் கண்டால் அதைத் தடுக்க வேண்டும். முடியாவிட்டால் அதை விட்டு விலகி ஒதுங்கி இருப்பது தான் ஈமானின் இறுதி நிலை. ஆனால் இந்த சந்தர்ப்பவாதிகள் அதைச் செய்வதில்லை.
கொடி, கோஷம் கூடாது, அரசியல் வழிகேடு, காஃபிர்களிடம் போய் இட ஒதுக்கீடு கேட்பதா? என்றெல்லாம் கூறும் இவர்கள், அவற்றைக் கொள்கையாகக் கொண்ட இயக்கத்தினர் பேச அழைக்கும் போது, அவர்களிடம் போய் அந்தத் தீமைகளை முதலில் எடுத்துச் சொல்ல வேண்டும். அதை விட்டு விட்டு அவர்களது மனம் புண்படாமல் கூட்டணி உடையாமல் பேசி விட்டு வருவது தான் சத்தியத்தைச் சமர்ப்பிக்கும் லட்சணமா?
இயக்கங்கள் அனைத்தும் வழிகேடு என்று ஒருவர் வரிந்து கட்டிக் கொண்டு கூறுகின்றார். அவரை அழைத்து ஒரு இயக்கத்தினர் பேசச் சொல்கின்றார்கள். இவர் என்ன பேச வேண்டும்? ஒருவனிடம் எந்தத் தீமை இருக்கின் றதோ அதைச் சுட்டிக் காட்டுவது தான் தீமையைத் தடுப்பதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த வழி. ஆனால் அதைச் செய்யாமல் தனக்குத் தரப்பட்ட தலைப்பை மட்டும் பேசி விட்டு வந்து விடுவாராம்.
எது சந்தர்ப்பவாதம் என்று பட்டி மன்றம் நடத்தினால் வெட்கத்தால் பொய்ப் பிரச்சாரகர்களின் இருக்கை ஆட்டம் கண்டு விடும். ஏகத்துவக் கொள்கைச் சகோதரர்களால் நடத்தப்பட்ட இஸ்லாமிய நிகழ்ச்சி களில் தர்கா வணங்கிகளையும் தாயத்து அணிபவர்களையும் முஷ்ரிக்கீன், இணை வைப்பாளர்கள் என்று சாடி விட்டு அரசியல் கூட்டங்களில் அவர்களையும் மேடையில் தமக்கு அருகில் அமர்த்திக் கொண்டு உரையாடி புன்னகைத்து இந்த முஸ்லிம்களின் உரிமைக்காகப் போராடுகின்றோம் என்று முழங்கியது தான் சந்தர்ப்பவாதம்.
இவர்களது சந்தர்ப்பவாதக் கூட்டணியை நாம் விமர்சித்ததற்கு இவ்வாறு பதில் எழுதியுள்ளார்கள்.
எது சந்தர்ப்பவாதம் என்று நாம் சாதாரணமாகச் சொல்லவில்லை. இவர்களது நடவடிக்கைகளைக் கவனித்த பிறகு தான் கூறினோம். பட்டி மன்றம் நடத்தினால் ஆட்டம் கண்டு விடும் என்று கூறுகின்றார்கள். நாம் இவர்களிடத்தில் கனிவாகக் கேட்டுக் கொள்வதெல்லாம் தயவு செய்து அத்தகைய பட்டி மன்றத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள் என்பது தான். நீங்கள் கூட செய்ய வேண்டாம். ஒப்புதல் தந்தால் நாமே ஏற்பாடு செய்கின்றோம். எது சந்தர்ப்பவாதம் என்பதை மேடை போட்டு விவாதிப்போம். அது தான் பொய் பிரச்சாரகர்களை அடையாளம் காட்டி ஆட்டம் காணச் செய்யும்.
இப்போது அவர்களது விமர்சனத்திற்கு வருவோம்.
காலத்தின் கட்டாயம்
பாபரி மஸ்ஜித் இடிப்பிற்குப் பிறகு ஏற்பட்ட சூறாவளியில் முஸ்லிம்களுக்கு என்று அரசியல் ரீதியிலான ஓர் அமைப்பு தேவைப்பட்டது. அரசியல் அமைப்பை, ஏற்கனவே நாம் இருந்த அந்த அமைப்பின் கீழ் இருந்து கொண்டு செயல் படுவோம் என்றெல்லாம் அந்த "அமீரிடம்'     நாம் கெஞ்சினோம். ஆனால் அதையெல்லாம் அவர் ஏற்றுக் கொள்ளவேயில்லை. சவூதிய சம்பளத்திற்கு சமுதாயப் போராட்டம் ஆப்பு வைத்து விடும் என்று அஞ்சியோ என்னவோ ஒரேயடியாக மறுத்து விட்டார்.
அதனால் தான் அப்படி ஒரு தனி அமைப்பைக் காண வேண்டியது காலத்தின் கட்டாயமானது. இருப்பினும் இணை வைப்பவர்களுடன் மேடையில் அமரும் போதெல்லாம் ஏகத்துவத்திற்கு எந்த ஒரு ஆபத்தும் வந்து விடக் கூடாது என்பதில் குறியாக இருந்திருக்கின்றோம்.
அரசியல் தலைவர்களை மேடையில் வைத்துக் கொண்டு பேசிக் கொண்டிருந்தோம் என்றால் அதை நாம் இன்றைக்கும் செய்வோம். தேவைப்பட்டால் எதிர்காலத்திலும் செய்வோம். ஏனென்றால் அவர்களுடன் மேடையேறிப் பேசும் போது, அவர்களை மார்க்கப் பிரச்சாரகர்களாக அங்கீகரிப்பதோ, அறிமுகம் செய்வதோ இல்லை.
அந்த நிலையிலும் வரம்பு மீறாமல் மார்க்கத்தின் எல்லையைக் கடக்காமல், மார்க்கத்தின் பெயரால் எந்தக் கருத்தையும் பேச விடாமல் விழிப்போடு இருந்திருக்கின்றோம்.
கொள்கை கெட்டவர்களை மார்க்கத்தின் பிரச்சாரகர்களாக அறிமுகம் செய்வதற்கும் இதற்கும் உள்ள வித்தியாசத்தை உணராமல் இவ்வாறு எழுதியுள்ளனர்.
இணை வைப்பவர்களுக்கும் நமக்கும் பொதுவான அரசியல் மற்றும் சமுதாய ரீதியிலான பிரச்சனைகளில் மட்டும் ஓர் ஒப்பந்த அடிப்படையில் ஒன்றாய் இருந்திருக்கின்றோம்.
மற்ற விஷயங்களில் இப்ராஹீம் (அலை) அவர்களின் முன் மாதிரியை கொஞ்சம் கூட விடாது கடைப் பிடித்திருக்கின்றோம்.
இணை வைக்கும் இமாமுக்குப் பின்னால் நின்று இதுவரை தொழுததில்லை.
விரலசைத்தல் போன்ற சுன்னத்துக்களை நடைமுறைப் படுத்தும் விஷயத்தில் எள்ளளவும் விட்டுக் கொடுத்து விடவில்லை.
அவர்களுக்கும் நமக்கும் மத்தியிலுள்ள உலக ரீதியிலான விஷயங்களில் ஒன்று பட்டு பேசிய அதே இடத்தில் ஷிர்க், பித்அத் மற்றும் மத்ஹப் போன்ற விஷயங்களைப் போட்டு உடைக்கத் தயங்கியதில்லை.
இன்னும் சொல்லப் போனால்  ஏகத்துவக் கொள்கைவாதிகள், ஏகத்துவக் கொள்கையில் உள்ள பெண்களைத் தான் திருமணம் முடிக்க வேண்டும் என்று கூட கூறி வருகின்றோம்.
இவையெல்லாம் நடந்தது அந்தச் சமுதாய அமைப்பில் இருக்கும் போது தான். அதை விட்டு வெளியே வந்த பிறகு அல்ல.
கொள்கையை விட்டு நழுவி வழிகேட்டில் விழ வாய்ப்புகள் எத்தனையோ வரவேற்றுக் கொண்டி ருக்கும் கட்டத்தில் கொள்கையில் வழுவாது நின்றோம். அந்தக் கொள்கையை விட்டுப் பிரிந்து விடக் கூடாது என்பதற்காகத் தான் கடிவாளங்களை, கட்டுப்பாடுகளைப் போட்டோம். ஒரே ஒரு தஞ்சைப் பேரணி தான் அவர்களது உள்ளத்தில் நஞ்சைக் கலக்கியது.
இந்த மக்கள் கூட்டத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமானால் தவ்ஹீதின் தடம் தெரியாமல் ஆக்க வேண்டும் என்று தவ்ஹீதுவாதிகளை வெளியே தள்ளினர். அவர்கள் வெளியே தள்ளப்பட்டதும் கொடி, கோஷம் பிடிக்காத இந்தக் கொள்கை இயக்கம் (?) போய் அந்த இயக்கத்துடன் கை கோர்த்துக் கொண்டது? இதற்குப் பெயர் தான் சத்திய சமர்ப்பணமா? இது கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதம் இல்லையா?
மார்க்க மேடைகளில் இணை வைப்பவர்களை விமர்சித்து விட்டு, இரண்டு தரப்பினருக்கும் ஒத்த கருத்துள்ள ஒரு மேடையில் ஒன்றிணைவது சந்தர்ப்பவாதமா? அல்லது நீங்கள் எதைக் கூடாது  என்று கூறுகின்றீர்களோ, எதைச் சந்தர்ப்பவாதம் என இன்று வரை கூறுகின்றீர்களோ அத்தகைய சந்தர்ப்பவாதிகள் அமைக்கும் மேடையில் போய் பேசுவது சந்தர்ப்பவாதமா?
இணை வைப்பு ஆலிமை மேடையில் ஏற்றியது, ஏகத்துவக் கொள்கையைக் கொண்ட பெண்களைத் தான் திருமணம் செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றிய போது அதை ஒரு கூட்டம் எதிர்த்தது, அடுத்தவன் மனைவியுடன் சேர்ந்து வாழ்க்கை நடத்தியது, பள்ளியின் நிர்வாகியாக இருந்து கொண்டு பள்ளிவாசல் பக்கமே எட்டிப் பார்க்காமல் இருந்தது ஆகியவை தான் மேலப்பாளையத்தில் பிரச்சனை ஏற்படக் காரணமாக அமைந்தது.  இன்று வரை இணை வைப்பு ஆலிம்களுக்கு வக்காலத்து வாங்கும் இவர்களிடத்தில் என்ன சத்தியம் இருக்கின்றது? கொள்கை, கோட்பாடு இருக்கின்றது?
எந்தப் பிரச்சனைகள் எங்களையும் அவர்களையும் பிரித்ததோ, அது இவர்களை மட்டும் அவர்களுடன் சேர்த்து வைக்கின்றது.
இவர்கள் எதனைச் சந்தர்ப்பவாதம் என்று கூறுகின்றனர்? நாங்கள் அதை விட்டு வெளியே வரும் போது அதைச் சந்தர்ப்பவாதம் என்கின்றனர். தாங்கள் அதைச் செய்யும் போது, கொள்கை என்று கூறுகின்றனர். எனவே இது சத்தியமாக இது சத்திய சமர்ப்பணம் இல்லை. கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதம் தான். சந்தர்ப்பவாதத்திற்கு, சத்திய சமர்ப்பணம் என்று பெயரிட்டு உங்கள் மீதே துப்பிக் கொள்ள வேண்டாம் என்பதே நமது கனிவான வேண்டுகோள்.

மதம் மாறுது ஒரு கூட்டம் மவுனம் காக்குது ஜாக்
1980களுக்கு முந்திய கால கட்டத்தில் விரல் விட்டு எண்ணக் கூடியவர்களைத் தவிர ஒட்டு மொத்த தமிழகமும் இணை வைப்பிலும், தக்லீது எனும் தனி மனித வழிபாட்டிலும் மூழ்கி இருண்டு கிடந்தது. தர்ஹாக்களின் மினாராக்களில் ஷிர்க், கொடி கட்டிப் பறந்ததைப் போன்று, சமாதி கட்டுதல், அதை முத்தமிடுதல், சந்தனம் பூசுதல், பட்டுப் போர்வை போர்த்துதல், விளக்கேற்றுதல், மனிதர்களின் காலில் விழுந்து வணங்குதல் போன்ற இணை வைப்புக் கலாச்சாரமும் கொடி கட்டிப் பறந்தன.
இந்நிலையில் மதீனாவில் போய் படிக்காத நம்முடைய ஆலிம்கள் பிரச்சாரத்தின் மூலம் ஏகத்துவ வெளிச்சத்தைப் பாய்ச்சினர். இதை எதிர்த்து, அசத்தியத்தின் ஆலிம்கள் பிரச்சாரம் செய்யத் தலைப்பட்ட போது, நாம் அவர்களிடம் இவற்றுக்குரிய ஆதாரங்கள் எங்கே? என்ற கேள்விகளை எழுப்பினோம். அதற்கு அந்த அசத்திய ஆலிம்கள் மத்ஹபு நூல்களைத் தான் ஆதாரமாகக் காட்டினர்.
 "கப்ரு வணக்கம் கூடாது என ஓர் இமாம் கூறியிருக்கின்றார்'' என்று நாம் கூறினால், "இன்னோர் இமாம் கூடும் என்று கூறுகின்றார்'' என்பதே அவர்களின் பதிலாக இருந்தது.
அப்போது தான் நமக்கு ஓர் உண்மை புலப்பட்டது. இவர்கள் குர்ஆன், ஹதீஸ் ஆகிய இரண்டு எல்லைக் கோடுகளை மட்டும் வரையறைகளாகக் கொண்டு நிற்காமல், நான்கு கலீபாக்கள், ஸஹாபாக்கள், நான்கு இமாம்கள், நல்லோர்கள், நாதாக்கள் என பல எல்லைக் கோடுகளைத் தங்கள் மூல ஆதாரங்களாகக் கொண்டுள்ளனர். இது தான் அவர்களை அசத்தியப் பாதைக்குக் கொண்டு சென்றது என்ற உண்மை நமக்குத் தெளிவானது.
இரண்டு தான் என்றும் அடிப்படை
அப்போது மத்ஹபு நூல்களைத் தோண்டினோம்; துளாவினோம். அந்நூல்களில் அப்பிக் கிடந்த அசிங்கங்களை - ஆபாசங்களை மக்களுக்கு அடையாளம் காட்டி, இவை அடிப்படைகளாக மட்டுமல்ல; அர்த்தமுள்ளவைகளாக் கூட கிடையாது என்று கூறி மக்களின் சிந்தனைகளைக் கிளறி விட்டு, மத்ஹபு நூல்கள் மீதுள்ள மாயையை அப்புறப்படுத்தி அகற்றினோம்.
அதன் பின்னர் அல்குர்ஆன், ஹதீஸ் இரண்டை அடிப்படையாகக் கொண்டு ஜம்யிய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் என்ற அமைப்பையும் கண்டோம். இந்த அமைப்பைக் காண்பதற்கு முன்னரும், கண்ட பின்னரும் பல விவாத அரங்குகளைச் சந்தித்தோம்.
கோட்டாற்று விவாதத்தில் அசத்தியத்திற்குக் கல்லறை கட்டினோம். கோவையில் காதியானிகளின் முகமூடியைக் கிழித்தெறிந்தோம். அன்று ஓடிய காதியானிகள் இன்று வரை நம்மிடம் வாலாட்டவில்லை.
ஏன் இந்த விவாதங்கள்?
விவேகத்துடனும், அழகிய அறிவுரையுடனும் உமது இறைவனின் பாதையை நோக்கி அழைப்பீராக! அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்வீராக! (அல்குர்ஆன் 16:125)
என்ற அல்லாஹ்வின் உத்தரவுப்படி விவாதப் போர் தொடுத்தோம்; வெற்றி கண்டோம்.
"கஃபா நிலைக்குமா?'' என்று கேட்ட கிறித்தவ அறிஞர் ஜெபமணியை, "கப்ஸா நிலைக்குமா?'' என்று கேட்டு, வாதப் படிக்கட்டுகளில் சத்தியச் சாட்டைகள் கொண்டு உருட்டி எடுத்தோம். உருண்டு விழுந்து, சுருண்டு எழுந்து ஓடியவர் தான். அவர் மட்டுமல்ல; அவர் வெளியிட்ட பத்திரிகையும் ஒதுங்கி, ஒடுங்கிப் போனது.
அல்லாஹ் கூறும் வாத அஸ்திரத்தைக் கையில் எடுத்த போது, அசத்தியக் கூட்டங்கள் ஆட்டம் கண்டன; ஓட்டம் பிடித்தன. இப்படி ஒரு வலுவான இயக்கம் தன் வேர்ப் பிடிப்புகளை வளப்படுத்தவும் வலுப்படுத்தவும் வேண்டுமாயின் சமுதாயப் பிரச்சனைகளைக் கையில் எடுக்க வேண்டும் என்று அந்த இயக்கத்தினரிடம் கூறிய போது, அவற்றைப் பணிவாகக் கோரிய போதும் அதை ஏற்க மறுத்தனர். குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் அடுக்கடுக்கான சான்றுகளை முன் வைத்த போதும் அவற்றை நிராகரித்தனர். பிடிவாதமாக ஒரு பிரிவுக்கு வழி வகுத்தனர்.
அல்லாஹ்வை விட்டு விட்டு, காஃபிர்களிடம் போய் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு கேட்பதா? என்று நம்மைக் கேலி செய்தவர்கள் இன்று முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று தாங்கள் நடத்தும் மாநாடு(?)களில் தீர்மானம் போட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இந்தச் சந்தர்ப்பவாதச் சாக்கடையைப் பற்றி இங்கே நாம் சொல்ல வரவில்லை.
புது மத உதயம்
பல்வேறு பிரிவினரிடம் விவாதத்தில் களம் கண்டு, தூய இஸ்லாத்தை நிலை நாட்டிக் கொண்டிருக்கும் வேளையில், குர்ஆன் மட்டும் போதும் என்ற கோர சிந்தனையைக் கொண்ட ஒரு புது மதம் தமிழகத்தில் தலை காட்டத் துவங்கியது.
அதன் தாக்கம் ஜாக்கினரிடம் அலை அலையான ஐயப்பாடுகளை ஏற்படுத்தியது. இந்தப் புதிய சிந்தனைக்குப் போதிய விளக்கத்தை வழங்க ஜாக் தலைமை தவறியது. விளைவு, சொல்லி வைத்தாற் போல் ஜாக்கில் மேல் மட்டப் பொறுப்பு வகித்தவர்கள் அதற்குப் பலியானார்கள்; அந்தப் புது மதத்தில் புகுந்தனர்.
இப்படி ஒரு புதிய நச்சுக் கருநாகம் தலை தூக்கியவுடனேயே ஒரு விவாதத்திற்கு அழைத்திருந்தால் அது தன் தலையைப் படுக்கப் போட்டிருக்கும்; அதன் விஷப் பற்கள் வீழ்த்தப்பட்டிருக்கும்.
விவாதம் செய்யக் கூடாது என்ற முடிவிலிருந்த ஜாக் தலைமை இந்தக் கோரத் தீமையைக் கண்டு கொதிக்கவில்லை; கொந்தளிக்கவில்லை. தங்களது வாய்களுக்கு இறுக்கமான பூட்டுக்களைப் போட்டுக் கொண்டது.
அழகிய விவாதம்
ஆனால் இதைக் கண்டு தவ்ஹீத் ஜமாஅத் வாளாவிருக்கவில்லை. போர் முனையில் மின்னும் கூர் வாளாகக் களம் புகுந்தது. பல கட்டங்களில் பல்வேறு அமர்வுகளில் வாதப் பரிமாற்றங்கள்! முடிவில் "குர்ஆன் மட்டும் போதும்'' என்ற விஷச் சிந்தனை முளையிலேயே கிள்ளி எறியப்பட்டது.
மீண்டும் அது துளிர் விடாமல் இருக்க அல்முபீனில், குர்ஆன் மட்டும் போதுமா? என்ற சிறப்பிதழும், அதன் பிறகு தொடர் கட்டுரைகளும் எழுதப்பட்டு அந்தச் சிந்தனைக்கு முடிவு கட்டப்பட்டது. சென்னையில் இந்தச் சிந்தாந்தம் புறப்பட்ட வேகத்திலேயே செத்து மடிந்தது.
ஆனால் அதை எதிர்த்து ஜாக் இது வரை எந்த வேலையையும் செய்யவில்லை. ஜாக்கின் இந்த மவுன ராகம் இந்தப் புது மதத்தினருக்குப் புதுத் தெம்பைக் கொடுத்தது. அதனால் தான் சென்னையில் களையெடுக்கப் பட்ட அந்தச் சிந்தாந்தம் கோட்டாற்றில் தலை தூக்கியது. குர்ஆன் மட்டும் போதும் என்ற கோர சிந்தனையாளர்கள் கோட்டாரில் மூன்று நாட்கள் பயான் என்ற பெயரில் கொள்ளியைக் கொளுத்தினர்.
அவர்கள் கொளுத்திய தீயின் வேக்காட்டில் ஒரு சில ஜாக்கினர் சிந்தனை ரீதியாக வெந்து போயினர். "ஆஹா, என்ன அழகான கருத்துக்களை அள்ளித் தருகின்றனர்'' என்று "இச்' கொட்டி, அந்தப் புது மதம் தழுவத் துடித்துள்ளனர்.
இந்நிலையில் இவர்களால் கத்துக் குட்டி என்று வர்ணிக்கப்பட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் "பொடியன்மார்கள்' அந்த நச்சு மேடைக்குச் சென்று கேள்வி கேட்டுள்ளனர். கேள்விக் கணைகளுக்கு இங்கு அனுமதி இல்லை என்று அந்தப் புது மதத்தினர் மறுத்துள்ளனர். அப்படியானால் விவாதத்திற்கு நாள் குறியுங்கள் என்றதும் ஆடிப் போய் ஓடி ஒளிந்துள்ளனர்.
இந்தக் கத்துக் குட்டிகள் வெளிப்படுத்திய அசாதாரண சத்தியத் துணிச்சலில் அசத்தியவாதிகளின் சித்து வேலைகள் செத்து நீர்த்துப் போயின. இன்னும் அந்தப் பக்கம் சாயவிருந்த ஜாக்கினரின் தொடர் வீழ்ச்சி தடுத்து நிறுத்தப்பட்டது. மூன்று நாள் கதா காலாட்சேபத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
மேதைகளின் மெத்தனப் போக்கு
பெண் வீட்டு விருந்துகளில் கலந்து கொண்டு வெளுத்துக் கட்டும் பேச்சாளப் பெருந்தகைகள், மெத்தப் படித்த மேதாவிகள் இது போன்ற தீமைகளைக் கண்டு கொள்ளாத மெத்தனப் போக்கில் உள்ளனர். குர்ஆன் மட்டும் போதும் என்ற குருட்டுச் சிந்தனைக் கூட்டம் ஆள் பிடிக்கும் போது ஜாக் தலைவர்கள் அமைதியாகக் குறட்டை விடுகின்றனர்.
"பாருங்கள்! பொடியன்மார்கள் அவர்களிடம் போய் ஒரு பிடி பிடித்து விட்டு வந்திருக்கின்றனர்; ஆனால் இவர்கள் வாய் மூடிக் கிடக்கின்றனர்'' என்று மக்கள் பேசத் துவங்கியதும், "அஹ்லெ குர்ஆன் என்று ஐந்து பேர் இருக்கின்றனர்; அவர்களிடம் போய் விவாதம் செய்ய வேண்டுமா?'' என்று ஜாக்கினர் வேதாந்தம் பேசுகின்றனர்.
"ஹதீஸ்களை எல்லாம் குப்பையில் கொண்டு போய் போடு!'' என்று கபூர் என்பவரின் கொடூர வார்த்தைகள் ஜாக்கினரின் குருதியைச் சூடேற்றவில்லை. ஆனால் கொதித்துப் போய் இந்த அநியாயத்தைத் தட்டிக் கேட்பவர்களின் சூட்டைத் தணிக்கும் விதமாக சால்ஜாப்பு சொல்லி சமாதானப்படுத்தும் சூட்சுமத்தைத் தான் இது வரை ஜாக்கினர் கையாள்கின்றனர்.
நாம் என்னவோ எல்லோரையும் ஜட்டி போட்டுக் கொண்டு தான் தொழ வர வேண்டும் என்று சொன்னதாகக் கற்பனை செய்து கொண்டு நம் விஷயத்தில் இவர்கள் இரத்தம் கொதித்து, வானத்திற்கும் பூமிக்கும் குதித்து, பேச்சிலும் எழுத்திலும் நம்மைத் திட்டித் தீர்ப்பது போல் கபூர் என்பரின் குருட்டுச் சிந்தனையைக் கண்டித்து வார்த்தைகளைக் கொட்டக் காணோம்; திட்டக் காணோம். கபூர் என்பவர் காசுள்ள ஆசாமி என்பதாலோ என்னவோ இந்த மவுன விரதம்.
இதற்கெல்லாம் காரணம், எவரையும் விவாதக் களத்தில் சந்திக்கத் திராணியற்று இருப்பது தான். அசத்தியத்திற்கு எதிராக அல்லாஹ் அளித்திருக்கும் இந்த ஆயுதத்தைத் தாங்கவில்லை என்றால் நாமும் குறட்டை விட்டுத் தூங்க வேண்டியது தான்; கொள்கையில் கோட்டை விட வேண்டியது தான்.
எனவே குமரி முனையில் எழுந்த இந்தத் தீமை எங்கு எழுந்தாலும் அதற்கு எதிராகப் பொங்கி எழுவோமாக! குர்ஆன் மட்டும் போதும் என்று கூறி, இஸ்லாத்தின் அடிப்படைகளில் ஒன்றை நீக்கி விடாமலும், ஸஹாபாக்கள், இமாம்கள், நாதாக்கள் என்று கூறி இஸ்லாத்தின் மூல ஆதாரத்தை நீட்டி விடாமலும் நமது சத்தியப் பயணத்தைத் தொடர்வோமாக!


ஜாக் செல்லும் சறுகல் பாதை

மனோ இச்சைக்குத் தக்க மார்க்கத்தை வளைத்ததால் தான் தர்ஹா வழிபாடு, மத்ஹபு மாயை, தரீக்காக்கள் பற்று, தாயத்து தட்டு போன்ற கலாச்சாரங்கள் தோன்றின.
அந்தத் தரித்திர நிலை மாறி மார்க்கத்துக்குத் தக்க மனோ இச்சையை வளைக்கும் நிலை இப்போது தோன்றி தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
மனோ இச்சைக்குத் தக்க மார்க்கத்தை மாற்றுவது அசத்திய வாதிகளின் வேலை.
மார்க்கத்திற்குத் தக்க மனோ இச்சையை மாற்றிக் கொள்வது ஏகத்துவவாதிகளின் நிலை.
அசத்தியவாதிகளுக்கும் நமக்கும் உள்ள வேறுபாடே இது தான். ஆனால் இன்று ஜாக் அந்தப் பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.
குர்ஆன், ஹதீஸ் ஆகிய இரண்டு அடிப்படைகளில் மட்டும் செயல்பட வேண்டும் என்பதற்காக நிர்ணயித்து நிர்மாணிக்கப்பட்ட இந்த இயக்கம், மார்க்கத்துக்குத் தக்க மனோ இச்சையை மாற்றாமல், மனோ இச்சைக்குத் தக்க மார்க்கத்தை வளைக்கத் துவங்கி விட்டனர்.
இதை நாம் வெறும் கற்பனையாகச் சொல்லவில்லை. சரியான, நிதர்சனமான சான்றுகளின் அடிப்படையிலேயே கூறுகின்றோம். அண்மையில் ஹஜ் பெருநாள் அன்று நாகர்கோவில், கோட்டாற்றில் வரலாற்றிலேயே முதன் முறையாக, நபிவழியின் அடிப்படையில் பெருநாள் தொழுகையைத் திட-ல் தொழுவதற்கு தவ்ஹீத் ஜமாஅத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். அதற்கான அறிவிப்பை வெளியிட்டது தான் தாமதம். ஜாக் இயக்கவாதிகள் கோபத்தில் கொந்தளிக்கத் துவங்கினர். குமரி மாவட்ட ஜாக் வகையறாக்கள் குராபிகளை விடவும் கேடாகக் குமுறினர்.
அவர்கள்  கொட்டிய கொடுஞ் சொற்களை, ஆபாச அர்ச்சனை வார்த்தைகளைக் கேட்பதற்குக் காதுகள் கூசியது போலவே எழுதுவதற்கும் கூசுகின்றன.
இவர்களின் தலைவர் - இல்லை - அமீர் தனது தொண்டர்களின் எண்ணங்களைப் பெருநாள் காலையில் சுப்ஹ் தொழுகைக்குப் பின்னரும், அதன் பின்னர் தொடர்ந்த உரைகளிலும் எதிரொ-த்துள்ளார்; எரிமலையாக வெடித்துள்ளார்.
அவர் வீசிய வினாப் பொறிகள் இதோ:
1. நாகர்கோவி-ல் குராபிகள் திட-ல் தொழுகை நடத்துகிறார்களே! அங்கு போய் இவர்கள் (தவ்ஹீதுவாதிகள்) தொழ வேண்டியது தானே?
2. பள்ளிவாச-ல் பெருநாள் தொழுகையைத் தொழுவதற்குத் தடை இருக்கிறதா?
3. நபி (ஸல்) அவர்கள் காலத்தில் பள்ளிகள் சிறியதாக இருந்தன. அதனால் திட-ல் தொழுதார்கள்.
4. திட-ல் கண்டிப்பாகத் தொழுது தான் ஆக வேண்டுமா?
இது அமீரின் ஆக்கப்பூர்வமான (?) கேள்விக் கணைகள் மட்டுமல்ல! ஜாக் பிரச்சாரப் பரிவாரங்களும், பீரங்கிகளும் வைக்கின்ற பரிசுக்குரிய, பாராட்டுக்குரிய கேள்விகளாகும். இவற்றுக்கான பதிலைப் பார்க்கும் முன் பெருநாள் தொழுகையைத் திட-ல் தொழுவதன் அவசியத்தைப் பார்ப்போம்.
திட-ல் தொழுகை
நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாüலும், ஹஜ்ஜுப் பெரு நாüலும் (பள்üயில் தொழாமல்) முஸல்லா எனும் மைதானத்திற்குச் செல்பவர்களாக இருந்தார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஸயீது அல் குத்ரீ (ர-), நூல்: புகாரி
மேற்கண்ட ஹதீஸில் இடம் பெறும் முஸல்லா என்ற சொல்லுக்கு தொழுமிடம் என்று சிலர் மொழி பெயர்க்கின்றார்கள். முஸல்லா என்றால் தொழுமிடம் என்ற பொருள் உள்ளது என்றாலும் இந்த ஹதீஸில் கூறப்படுவது முஸல்லா என்ற பெயருடைய மைதானத்தைத் தான்.
கஸீர் பின் ஸல்த் (ர-) என்ற நபித் தோழருடைய வீட்டிற்கு முன்னால் முஸல்லா என்ற மைதானம் ஒன்று இருந்தது. அந்த மைதானத்தில் நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகைகளை நிறைவேற்றியதாகத் தான் ஹதீஸ்கüல் காணப்படுகின்றன.
நபி (ஸல்) அவர்கள் பள்üவாச-ல் பெருநாள் தொழுகையைத் தொழுததாக எந்த ஒரு ஆதாரப்பூர்வமான ஹதீஸும் இல்லை.
மஸ்ஜிதுல் ஹராமைத் தவிர ஏனைய பள்üகüல் தொழுவதை விட எனது இந்தப்பள்üயில் (மஸ்ஜிதுத் நபவீ) தொழுவது ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ர-)
நூல்: புகாரி
இந்த ஹதீஸின் அடிப்படையில் மஸ்ஜிதுந் நபவீயில் தொழுவது மற்ற சாதாரண பள்üகüல் தொழுவதை விட ஆயிரம் மடங்கு சிறந்ததாகும். பெருநாள் தொழுகைகளைப் பள்üயில் தொழுவது சரியான நடைமுறையாக இருந்திருந்தால் ஆயிரம் மடங்கு நன்மைகளைப் பெற்றுத் தரக் கூடிய மஸ்ஜிதுந் நபவீயில் நபி (ஸல்) அவர்கள் தொழுதிருப்பார்கள் .
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த விஷயத்தில் நன்மைகள் அதிகமோ அதைத் தான் நடைமுறைப்படுத்துவார்கள். அந்த அடிப்படையில் நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகைகளைத் திட-ல் தொழுதிருக்கும் போது, அதைப் புறக்கணித்து விட்டு பள்üயிலேயே தொழுவது நபிவழிக்கு மாற்றமானதாகும்.
புனித நகரமான மக்காவாக இருந்தாலும் பெருநாள் தொழுகை
திட-ல் தான் நடத்தப்பட வேண்டும். கஃபாவில் தொழுவது ஒரு லட்சம் மடங்கு சிறந்தது என்று கூறி நபிவழிக்கு மாற்றம் செய்ய முடியாது. ஆனால் மக்காவில் இந்த நடைமுறை புறக்கணிக்கப்பட்டு வருகின்றது. புனித மிக்க ஒரு நகரத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கட்டளை, காற்றில் பறக்க விடப்படுவது வேதனைக்குரிய விஷயமாகும்.
மாதவிடாய் காலத்தில் பெண்கள் பள்ளிக்கு வர முடியாது. பெருநாள் தொழுகையைப் பள்üவாச-ல் தொழும் போது மாதவிடாய்ப் பெண்களுக்கு பெருநாள் சந்தோஷங்கüல் பங்கெடுக்க முடியாத நிலை ஏற்பட்டு விடுகின்றது. இதன் மூலம் அவர்களுடைய உரிமையை நாம் மறுப்பதோடு பரக்கத்தும், புனிதமும் மிக்க அந்த நாüல் அவர்கள் (குத்பா) உரையைக் கேட்பது, தக்பீர் கூறுவது, துஆச் செய்வது போன்ற நற்செயல்கüல் ஈடுபடுவதை விட்டும் தடுத்தவர்களாகி விடுகிறோம்.
ஓர் ஊரிலுள்ள முஸ்-ம்கள் அனைவரும் ஒரே இடத்தில் கூடி தொழுகை நடத்தும் போது அதில் சகோதரத்துவம் வலுப்படுகின்றது. எல்லோரும் ஓரணியில் நின்று தொழுகின்ற இந்தக் கட்டமைப்பு, இஸ்லாத்தில் தீண்டாமை இல்லை என்பதை உலகிற்குப் பறை சாற்றுவதுடன் மாற்று மதத்தவர்கüடம் இஸ்லாத்தைப் பற்றிய ஓர் உயர்ந்த எண்ணத்தைத் தோற்றுவிக்கின்றது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகைக்குத் திடலைத் தேர்வு செய்ததில் இது போன்ற எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளன.
இந்த நபிவழியைப் புறக்கணித்து பள்üவாச-ல் பெருநாள் தொழுகை தொழுவது பல தவறான நடைமுறைகளுக்கு வழிவகுத்துள்ளது. பல ஊர்கüல் பெண்கள் பெருநாள் தொழுகையே தொழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விடுகின்றது. குறிப்பாக ஹனஃபி மத்ஹபில் பெண்களைப் பெருநாள் தொழுகை தொழுவதற்கு அனுமதிப்பதில்லை. அபூஹனீபா இமாமின்  சட்டத்தில் இவ்வாறு இல்லாவிட்டாலும் நடைமுறையில் ஆண்கள் மட்டுமே பெருநாள் தொழுகை தொழுகின்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வ-யுறுத்திய இந்த வணக்கத்தைப் பெண்களுக்குக் கிடைக்காமல் தடுப்பவர்கள் அல்லாஹ்விடம் பதில் சொல்-யாக வேண்டும்.
இன்னும் சில ஊர்கüல் ஏதேனும் வீட்டில் வைத்து பெண்களுக்கென பெருநாள் தொழுகை ஏற்பாடு செய்து நடத்துகின்றார்கள். இதுபோன்று ஏற்பாடு செய்யப்படும் தொழுகைகள் ஒரே ஜமாஅத்தாக நடைபெறுவதில்லை. ஒரு வீட்டில் பல ஜமாஅத்கள் நடத்தி தொழுகின்றார்கள். நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இப்படி பெண்கள் தனியாக ஓரிடத்தில் கூடி ஜமாஅத்தாகப் பெருநாள் தொழுகை தொழுததாக எந்த ஒரு ஹதீஸையும் நம்மால் காண முடியவில்லை. திடல் தொழுகையைப் புறக்கணிப்பது தான் இத்தகைய பித்அத்கள் உருவாவதற்குக் காரணம் என்பதை மறுக்க முடியாது.
இவற்றைக் கருத்தில் கொண்டும், திட-ல் தொழுவது தான் நபிவழி என்ற அடிப்படையிலும் பெருநாள் தொழுகைகளை கண்டிப்பாகத் திட-ல் தான் நிறைவேற்ற வேண்டும். திடல் இல்லாவிட்டால் அதற்கென விலைக்கு வாங்கியாவது இந்த நபிமொழியைப் பேண வேண்டும்.
இந்த அடிப்படையில் தான் நாகர்கோவில் கோட்டாரில் தவ்ஹீது ஜமாஅத்தினர் இந்த ஆண்டு ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையைத் திட-ல் தொழுவது என்று முடிவெடுத்தனர். இதைத் தாங்கிக் கொள்ள முடியாத ஜாக்கினரும், அவர்களது அமீரும் எழுப்பிய கேள்விகளைத் தான் ஆரம்பத்தில் குறிப்பிட்டோம். இப்போது இவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கான பதிலைப் பார்ப்போம்.
"குராபிகள் திட-ல் தொழுகை நடத்துகிறார்களே! அங்கு போய் இவர்கள் (தவ்ஹீதுவாதிகள்) தொழ வேண்டியது தானே?'' என்று கேட்கும் சறுகல் பாதையில் சறுகிக் கொண்டிருக்கும் ஜாக்கிடம் நாம் ஒரு கேள்வியைத் திருப்பிக் கேட்கிறோம்.
இவர்கள் ஏன் தமிழகத்தின் பல பகுதிகளில் பள்ளிகளைக் கட்டினர்? எதற்காக? இவ்வாறு இவர்களிடம் நாம் கேட்கும் போது இவர்கள் தரும் பதில் இரண்டாகத் தான் இருக்க முடியும். 1. குராபிகள் இணை வைப்பவர்கள். எனவே அவர்களின் பின்னால் நின்று தொழ முடியாது. 2. குராபிகளின் பள்ளிகளில் தவ்ஹீதுவாதிகள் தொழுவதற்கு அவர்கள் விதித்த தடை.
இந்த இரண்டு காரணங்களால் தான் அவர்களும் பிரிந்தார்கள். அவர்களுடன் இணைந்திருந்த நாமும் பிரிந்தோம். இந்த இரு காரணங்களும் இன்றளவும் அவர்களிடம் இருக்கப் போய் தான் குராபிகள் பின்னால் தொழுவதில்லை. இதை அவர்கள் நன்கு தெரிந்து கொண்டே இவ்வாறு நம்மைப் பார்த்து குராபிகள் பின்னால் தொழச் சொல்கின்றனர்.
ஏன்? இவர்கள் திட்டமிட்டே இதுவரை திட-ல் தொழும் நபிவழியை விட்டு வந்திருக்கின்றனர். நாங்கள் செய்யாத அந்த நபிவழியை நீங்களும் செய்யக் கூடாது என்ற எண்ணம் தான் இதற்குக் காரணம்.
குராபிகள் கூட நடைமுறைப் படுத்திக் கொண்டிருக்கும் இந்த நபிவழியை இவர்கள் பின்பற்ற மாட்டேன் என்று கங்கணம் கட்டுகின்றார்கள் என்றால் அவர்களை விட இவர்கள் மோசமாகப் போய் விட்டார்கள் என்று தானே அர்த்தம்? இந்த லட்சணத்தில் ஜாக் (குர்ஆன் மற்றும் நபிவழி இயக்கம்) என்ற பெயர் வேறு!
உண்மையில் நாம் ஏற்கனவே ஏகத்துவத்தில் எழுதியது போல், தவ்ஹீது ஜமாஅத்தினர் எதைச் செய்தாலும், அது குர்ஆன், ஹதீஸாக இருந்தாலும் அதற்கு மாற்றமாகச் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர் என்பது அழுத்தம் திருத்தமாக உறுதிப்பட்டு விடுகின்றது.
பள்ளிவாச-ல் பெருநாள் தொழுகையைத் தொழுவதற்குத் தடை இருக்கிறதா? என்று கேட்கின்றனர்.
இந்தக் கேள்வியை எண்ணிப் பார்த்து ஒரு பக்கம் வேதனைப்பட வேண்டியுள்ளது. மறுபக்கம் இந்த வேடிக்கையை நினைத்து சிரிக்கவும் வேண்டியிருக்கிறது. தவ்ஹீது ஜமாஅத்தினர் மீது கொண்டிருக்கும் காழ்ப்புணர்ச்சியும், கசப்புணர்ச்சியும் ஏன் இவர்களை இந்த அளவுக்குத் தரம் தாழ்த்தி விட்டது?
இது உண்மையில் பக்கா குராபிகளின் வாதம்! நாம் வரதட்சணை வாங்கக் கூடாது என்று வீரிய பிரச்சாரம் மேற்கொண்ட உடனே வெறி கொண்ட ஆ-ம் கூட்டம் நமக்கு எதிராகக் கிளப்பிய வெற்றுக் கேள்வி தான் இது! குர்ஆன், ஹதீஸ் அடிப்படையைத் தங்கள் பாதையாகக் கொள்ளாததால் இந்தக் கேள்வியைக் குராபிகள் எழுப்புகின்றனர் என்று சொல்- அதைக் கிண்டல் அடித்தோம்; கே- செய்தோம்.
ஒரு பிச்சைக்காரன் யாசகம் கேட்கின்றான். அவனுடைய பாத்திரத்தில் கையை விட்டு, இன்னொருவன் காசை எடுக்கின்றான். "ஏன் இவ்வாறு பிச்சைக்காரனிடமிருந்து காசை எடுக்கின்றாய்?'' என்று கேட்கும் போது, "பிச்சைக்காரன் பிச்சை போடு என்று தானே சொன்னான். என்னிடமிருந்து எதையும் எடுக்காதே என்று சொன்னானா?'' என்று கேட்பது போல் இருக்கிறது என்ற உதாரணங்களை எல்லாம் கூறி குராபிகளைக் கிண்டல் செய்தோம். அந்த வாதத்தை இப்போது இந்த ஜாக் அமீர் கையில் எடுத்திருக்கிறாரே என்பதை நினைத்து சிரிக்க வேண்டியிருக்கிறது.
இதே கேள்வியை ஜாக்கின் கடைநிலை உறுப்பினர் கேட்டால் கூட ஏதோ விவரம் தெரியாமல் கேட்கிறார் என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அதன் அமீர், மதீனா பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்ற மார்க்க அறிஞர் எனப்படுபவர் கேட்பதை அப்படி எடுத்துக் கொள்ள முடியாது.
அடிப்படை தெரியாத அறிஞர்
இதன் மூலம் இவருக்கு இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படையே தெரியவில்லை என்பது வெட்ட வெளிச்சமாகி விடுகின்றது.
அப்படியானால் தடை இருக்கின்றதா? என்ற கேள்வியே கேட்கக் கூடாதா? என்று வினவலாம். எனவே இது குறித்து சற்று விளக்கமாகப் பார்ப்போம்.
பொதுவாகவே குராபிகள் வணக்க விஷயத்தையும், உலக விஷயத்தையும் போட்டுக் குழப்பிக் கொள்வார்கள்.
நாம் மார்க்கத்தில் பித்அத் - புதிய காரியம் கூடாது என்று சொல்லும் போது, "நபி (ஸல்) அவர்கள் ஒட்டகத்தில் போனார்கள். நீ காரில் போகலாமா? இது பித்அத் இல்லையா?'' என்று கேட்பார்கள். இப்படி அவர்கள் கேட்பதற்குக் காரணம், வணக்க வழிபாட்டையும் உலக விஷயத்தையும் போட்டுக் குழப்பிக் கொண்டது தான்.
அது போலவே கமாலுத்தீன் மதனியும் குழம்பிக் கொண்டிருக்கிறார். அதனால் தான் தடை இருக்கிறதா? என்ற கேள்வியை எழுப்புகின்றார்.
அவனே பூமியில் உள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான். பின்னர் வானத்தை (படைக்க) நாடி அவற்றை ஏழு வானங்களாக ஒழுங்குபடுத்தினான். அவன் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன். (அல்குர்ஆன் 2:29)
இந்த வசனத்தின் படி உலகத்தில் படைக்கப்பட்ட பொருள்கள் அனைத்தும் மனிதன் பயன்படுத்து வதற்காகத் தான். இந்தப் பயன்பாடு என்பது உணவு, உடை, உலோகம், வாகனம் என்று எல்லாவற்றையும் எடுத்துக் கொள்ளும்.
உலகத்தில் மனித வாழ்வுக்குத் தேவையான பண்டங்கள், பொருட்களை ஒவ்வொன்றாகக் குறிப்பிட்டு, பட்டியல் போட்டு இது உனக்குக் கூடும் என்று மார்க்கம் சொல்லாது.
ஆடு சாப்பிடலாம்; மாடு சாப்பிடலாம்; மீன் சாப்பிடலாம் என்று உணவு வகைகளைப் பட்டியல் போட்டால் குர்ஆன், ஹதீஸ் இரண்டும் மலையளவு பாகங்களாக வெளி வந்தாலும் போதாது என்றாகி விடும்.
அதனால் எது தடுக்கப்பட்டதோ அதை மட்டும் மார்க்கம் சொல்- விடும்.
உதாரணத்திற்கு,
தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப் பட்டவை உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன. கழுத்து நெறிக்கப்பட்டவை, அடிபட்டவை, (மேட்டி-ருந்து) உருண்டு விழுந்தவை, (தமக்கிடையே) மோதிக் கொண்டவை, மற்றும் வன விலங்குகள் சாப்பிட்ட பிராணிகள் ஆகியவற்றில் (உயிர் இருந்து) நீங்கள் முறையாக அறுத்தவை தவிர (மற்றவை தடை செய்யப்பட்டுள்ளன.) ப- பீடங்களில் அறுக்கப் பட்டவையும், அம்புகள் மூலம் குறி கேட்பதும் (உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன.) இவை குற்றமாகும். (அல்குர்ஆன் 5:3)
இந்த வசனத்தில் கூறப்படுவதைப் போல் உணவுகளில் எவையெல்லாம் தடுக்கப்பட்டுள்ளன என்ற விபரம் மட்டும் மார்க்கத்தில் விளக்கப்படும். அது போன்று "உலோகத்தில் தங்கமும், உடையில் பட்டும் ஆண்களுக்குத் தடை'' என்று கூறப்படும்.
இந்த அடிப்படையில் அல்லாஹ்வால் தடை செய்யப் பட்டவைகளைத் தவிர மற்றவை அனுமதிக்கப்பட்டவை என்று நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
உதாரணமாக, "முயல் இறைச்சி சாப்பிடக் கூடாது'' என்று ஒருவர் கூறுகின்றார் என்று வைத்துக் கொள்வோம். அப்போது நாம் அவரிடம், முயல் இறைச்சி சாப்பிடக் கூடாது என்று தடை உள்ளதா? என்று கேட்கலாம். இவ்வாறு மனித வாழ்வியல் சம்பந்தப்பட்ட, உலக விவகாரங்களில் தடையிருக்கின்றதா? என்று பார்க்க வேண்டும்.
எனவே தடையிருக்கின்றதா? என்று கேட்பது வாழ்வியல் தொடர்பான உலக விஷயங்களில் தான். வணக்க விஷயங்களில் அல்ல.
வணக்கத்திற்கு அவசியம் உத்தரவு தான்
வணக்க விஷயத்தில் தடை இருக்கின்றதா? என்று பார்ப்பதும், கேட்பதும் கடைந்தெடுத்த மடைமைத் தனமாகும். வணக்க விஷயத்தில் உத்தரவு இருக்கின்றதா? என்று தான் பார்க்க வேண்டும். தடையிருக்கின்றதா? என்று பார்க்கக் கூடாது. அந்த உத்தரவு நபி (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் ஆகிய மூன்று அம்சங்களில் அமைந்திருக்கும்.
அதனால் தான்...
நாம் உத்தரவிடாத வணக்கத்தைச் செய்பவரின் வணக்கம் மறுக்கப்படும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். (புகாரி 2697, முஸ்-ம் 3243)
இந்த அடிப்படையில் தான் கூட்டு துஆ, தராவீஹ் இருபது ரக்அத்துகள் போன்றவற்றை பித்அத் என்று நாம் கூறுகின்றோம்.
வணக்கத்தில் தடையிருக்கின்றதா? என்று பார்க்க ஆரம்பித்தால் அது தான் பித்அத்துக்கள் நுழைவதற்குரிய தலைவாசல் ஆகி விடும். கூட்டு துஆ, கத்தம் பாத்திஹா, தராவீஹ் இருபது ரக்அத்துகள் என்று எல்லாவற்றையும் திறந்து விடுவதற்கு இது வசதியாக அமைந்து விடும்.
எனவே வணக்க வழிபாடுகளில், இபாதத்துகளில் தடையிருக்கின்றதா? என்று பார்க்கக் கூடாது; தடை இருக்கின்றதா? என்று கேட்கக் கூடாது.
அப்படிக் கேட்டால் என்ன ஆகும்?
உதாரணத்திற்குத் தொழுகையை எடுத்துக் கொள்வோம். ஒருவர் தொழுகையில் தலையை ஆட்டுகின்றார். அவரிடம் போய் "நீங்கள் ஏன் தலையை ஆட்டுகின்றீர்கள்? தலையை ஆட்டாதீர்கள்'' என்று சொன்னால் அவர் நம்மிடத்தில், "தொழுகையில் தலையை ஆட்டுவதற்குத் தடை இருக்கிறதா?'' என்று கேட்பார்.
அது போலவே ருகூவு செய்து முடித்த பின்னர் தனது இரு கைகளையும் தனது முதுகுக்குப் பின் ஒருவர் கட்டுகின்றார். அவரிடம் போய் "இது போன்று செய்யாதீர்கள்'' என்று சொன்னால், அவரும், "இப்படிச் செய்யக் கூடாது என்பதற்குத் தடை இருக்கின்றதா?'' என்று கேட்பார்.
இதற்கு என்ன பதில்?
பெருநாள் தொழுகையைப் பள்ளியில் தொழுவதற்குத் தடை இருக்கின்றதா? என்று கேட்கும் கமாலுத்தீன் மதனீ இதற்கு என்ன பதில் கூறுவார்? தொழுகையில் மேற்கண்ட காரியங்களைச் செய்வதற்குத் தடையில்லை; அதனால் செய்யலாம் என்று கூறுவாரா? அல்லது கூடாது என்று தடுக்கப் போகிறாரா?
இதற்குச் சரியான பதிலைத் தர வேண்டும்.
நோன்பில் பீடி குடிக்கத் தடை இருக்கின்றதா?
நோன்பில் உண்ணுவது, பருகுவது, உடலுறவு கொள்வது தான் தடுக்கப் பட்டுள்ளது. நோன்பு வைத்துக் கொண்டு ஒருவர் பீடி குடிக்கின்றார். அவரிடம் போய் கேட்டால், புகைப்பதற்குத் தடை இருக்கின்றதா? என்று கேட்டால் கமாலுத்தீன் மதனீ என்ன பதில் சொல்வார்?
எனவே இபாதத்தில் தடை இருக்கின்றதா? என்று பார்க்கக் கூடாது. உத்தரவு இருக்கின்றதா? என்று தான் பார்க்க வேண்டும்.
இவ்வாறு நாம் கூறும் போது, இபாதத்திலும் தடை இருக்கின்றதா? என்று பார்ப்பதற்கு அனுமதி இருக்கின்றது என்று கூறி, நபி (ஸல்) அவர்கள் ருகூவில் கிராஅத் ஓதுவதைத் தடை செய்தார்கள் என்பதை ஆதாரமாகக் காட்டி சிலர் வாதிடலாம். இங்கு நாம் ஓர் அடிப்படையைப் புரிந்து கொள்ள வேண்டும்.
உலக விஷயங்களில் தடையைப் பார்க்க வேண்டும் என்று நாம் சொல்லும் போது, தடையை மட்டும் தான் பார்க்க வேண்டும், அனுமதி தொடர்பாக மார்க்கம் எதையுமே கூறாது என்பது பொருளல்ல.
கடல் பிராணிகள் அனைத்தும் அனுமதிக்கப்பட்டவை, அதில் செத்தவை கூட அனுமதி தான் என்றும் மார்க்கம் கூறியுள்ளது.
இது போலத் தான் வணக்க வழிபாடுகள் விஷயத்திலும் சில அம்சங்களில் தடை செய்யப் பட்டிருக்கும். அந்தத் தடையைப் பேணிக் கொள்ள வேண்டுமே தவிர இதை அடிப்படையாக வைத்து எல்லா இபாதத்துகளிலும் தடையிருக்கின்றதா? என்று கேள்வி கேட்க முடியாது.
ருகூவில் குர்ஆன் ஓதுவதற்குத் தடை என்ற விஷயத்தையே எடுத்துக் கொள்வோம்.
இதை வைத்து வணக்க வழிபாடுகள் விஷயத்திலும் தடை இல்லாவிட்டால் செயல் படுத்தலாம் என்று வாதிட்டால், அவர்களிடம் நாம் இன்னொரு கேள்வியைக் கேட்போம்.
ருகூவில் அத்தஹிய்யாத் துஆவை ஓதலாமா? என்பது தான் அந்தக் கேள்வி.
ருகூவில் அத்தஹிய்யாத் ஓதத் தடையிருக்கின்றதா? என்ற கேள்விக்கு இவர்கள் பதில் சொல்-யாக வேண்டும்.
இவ்வாறு கேட்டால் ஓதக் கூடாது என்று தான் பதில் கூறுவார்கள். எனவே இபாதத்துகளைப் பொறுத்த வரை தடை இல்லாவிட்டால் எதையும் செய்து கொள்ளலாம் என்ற வாதம் தவறானது என்பது இதன் மூலம் நிரூபணமாகின்றது.
வணக்க வழிபாடுகள் விஷயத்தில் தடை இருக்கின்றதா? என்ற வாதத்தை முன் வைத்து ஒரு செயலைச் செய்வது பைத்தியக்காரத்தனம் என்பதும் நிரூபணமாகின்றது. மார்க்கத்தின் அடிப்படையை விளங்கியவர்கள் இந்தக் கேள்வியை ஒருக்காலும் கேட்க மாட்டார்கள். இது முற்றிலும் குராபிகளின் வாதமாகும்.
இந்த வாதத்தைச் சொல்-யே இணை வைப்பு ஆ-ம்கள் மக்களைத் தங்கள் பக்கம் தக்க வைத்துக் கொண்டு, சத்தியத்தின் பக்கம் வர விடாமல் தடுத்துக் கொண்டு உள்ளனர்.
தர்ஹா வழிபாடு, தரீக்கா வழிபாடு, தனி நபர் வழிபாடு, பித்அத், தாயத்து, தட்டு எல்லாவற்றிற்கும் மூல முதல் ஆதாரமாக அமைந்திருப்பது, கமாலுத்தீன் மதனீ எழுப்பிய தடை இருக்கின்றதா? என்ற கேள்வி தான். குராபிகளின் இந்த ஆழமான, ஆணித் தரமான (?) ஆதாரத்தைத் தான் கமாலுத்தீன் மதனீ கையில் எடுத்துள்ளார். ஜாக்கின் சறுகலுக்கு இதை விடச் சான்று தேவையில்லை.
இவர்கள் தடையிருக்கின்றதா? என்று கேட்பது இன்று ஏற்பட்டதல்ல.
ஏற்கனவே பெண் வீட்டு விருந்துக்கும் இதே கேள்வியைக் கேட்டு நியாயப்படுத்தினார்கள்.
பெண் வீட்டு விருந்து
குராபிகள் எடுத்து வைத்த அதே வாதத்தை, அவர்களின் செயல்பாடுகளை அப்படியே செய்வதன் மூலம் இவர்களும் அவர்களை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றார்கள். அதற்கு இன்னொரு சிறந்த எடுத்துக்காட்டு, இன்று பெண் வீட்டு விருந்துக்களில் ஜாக் அமைப்பினர் கலந்து கொண்டு வெளுத்துக் கட்டுவதாகும்.
இஸ்லாத்தில் பெண் வீட்டு விருந்து என்பதே கிடையாது. இது முதல் அடிப்படை! அப்படி விருந்து வைத்தால் கூட அதில் மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் மருந்துக்குக் கூட அதில் போய் கலக்கக் கூடாது. இது இரண்டாவது அடிப்படை! ஏனென்றால் இது மிகப்பெரும் சமூகக் கொடுமையான வரதட்சணை ஆகும்.
இன்று பெற்றோர் இறந்த பிறகு அவர்களிடமிருந்து கிடைக்க வேண்டிய சொத்துக்கள் பெண் மக்களுக்குக் கிடைப்பதில்லை. ஆண் மக்கள் அந்தச் சொத்தை அப்படியே அபகரித்து அனுபவித்துக் கொள்கின்றார்கள். அதற்கு அவர்கள் கூறும் காரணம், பெண் மக்களுக்கான கல்யாணச் செலவு தான். கழுத்தில் போட்ட நகை, கையில் கொடுத்த தொகை, வைத்த விருந்து ஆகியவற்றிற்கு நிறைய செலவாகி விட்டது; எனவே அதைப் பெண்ணுக்குச் சேர வேண்டிய சொத்தில் கழித்துக் கொள்கிறோம்; அதற்கு இது சரியாகி விட்டது என்று காரணம் கூறுகின்றனர். இப்படி வாரிசுக்குச் சேர வேண்டிய சொத்தை மறுப்பது வரம்பு மீறுதலாகும். இதற்குத் தண்டனை நிரந்தர நரகம் என்று அல்குர்ஆன் 4:13,14 வசனங்கள் கூறுகின்றன. நிரந்தர நரகத்திற்குத் தூண்டும் இந்தப் பாவத்தை ஒரு ஏகத்துவவாதி செய்யத் துணியலாமா?
குமரி மாவட்டத்தில் இன்று இரு வீட்டார் அழைப்பு என்ற பெயரில் பெண் வீட்டுத் தலையில் விருந்துச் செலவில் பாதியைக் கட்டி விடுகின்றனர். கல்யாண வீட்டுச் சாப்பாடு என்றால் போதும்; மார்க்கத்தை எல்லாம் தூர வைத்து விடுவது குராபிகளின் செயல். ஆனால் இதைச் சர்வ சாதாரணமாக இந்த ஏகத்துவவாதிகள் (?) செய்து வருகின்றனர்.
இதற்கு எடுத்துக்காட்டாக அண்மையில் நாகர்கோவி-ல் நடந்த ஒரு திருமணத்தைக் கூறலாம். இந்தத் திருமணத்திற்காக சம்பந்தப் பட்டவர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தை அணுகி திருமணப் பதிவேடு கேட்டனர். இது குறித்து நாம் விசாரித்த போது, பெண் வீட்டு சார்பில் விருந்து ஏற்பாடு செய்யப் பட்டிருந்ததைத் தெரிந்து, திருமணப் பதிவேடு கொடுக்க மறுத்து விட்டோம்.
நாம் மார்க்கத்தைக் கருத்தில் கொண்டு, திருமணப் பதிவேடு கொடுக்க மறுத்த திருமணத்திற்கு தவ்ஹீதின் கேந்திரமாகத் திகழும் (?) மஸ்ஜிதுல் அஷ்ரஃப் ஜமாஅத் தனது திருமணப் பதிவேட்டை மகிழ்ச்சியோடு கொடுத்துத் திருமணத்தை நடத்தி வைத்தது. இதில் கேடு கெட்ட விஷயம் என்னவென்றால் மணப் பெண்ணை மேடையில் புர்கா இல்லாமல் வைத்துக் கொண்டு எல்லோரையும் ரசிக்க வைத்ததுடன், போட்டோவும் எடுத்து, தங்களது கொள்கையைப் படு விமரிசையாகப் பறை சாற்றியிருக்கின்றார்கள்.
இந்த லட்சணத்தில் மஸ்ஜிதுல் அஷ்ரஃபின் இமாமும், கதீஜத்துல் குப்ரா மற்றும் ஃபிர்தவ்ஸியா ஆகிய மதரஸாக்களின் ஆசிரியருமான செய்யது அலீ என்பவர் தனது உரையில், இந்த மாப்பிள்ளை தவ்ஹீது அடிப்படையில் நடப்பவர் என்ற கருத்தில் புகழாரம் சூட்டியிருக்கின்றார். திருமணத்தின் போது மணப்பெண்ணை போட்டோ எடுக்கும் அசிங்கத்தை குராபிகள் கூட செய்தில்லை. ஆனால் இவர்கள் தவ்ஹீது என்ற போர்வையில் இந்தத் தரங்கெட்ட வேலையைச் செய்திருக்கின்றார்கள்.
மேலப்பாளையத்தில் இந்த அமீர் வந்து நடத்திய ஒரு திருமணத்தில், பெண் வீட்டில் ஆயிரக் கணக்கானோரை அழைத்து விருந்து போட்டனர். இது சரியா? என்று ஒரு கொள்கைச் சகோதரர் கேள்வி எழுதிக் கொடுத்தார். அதற்கு இந்த அமீர், தடையில்லை என்று அருமையான பதிலைச் சொன்னார். என்ன ஒரு அற்புதமான பதில். மிகப் பெரிய சமூக நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தும் ஒரு செயலை, தடையில்லை என்று சர்வ சாதாரணமாகக் கூறி விட்டுச் செல்கின்றார். வரதட்சணை வாங்குவதற்குத் தடை இருக்கின்றதா? என்று குராபிகள் கேட்டார்கள். அதையே இப்போது இவர்களும் கேட்கின்றார்கள்.
சுய விளக்கங்கள் கூறுவோரின் சுயரூபங்கள்
ஹதீஸ் குழப்பத்தை ஏற்படுத்தும்; அதாவது நபி (ஸல்) அவர்களின் வழிமுறை குழப்பத்தை ஏற்படுத்தும் என்று சொன்ன உத்தமர், உன்னத மகான் இவர் தான் என்பதையும் நாம் இங்கு சுட்டிக் காட்டக் கடமைப்பட்டுள்ளோம்.
குழப்பத்தை ஏற்படுத்தும் ஹதீஸ்
அல்ஜன்னத் மாத இதழில் ஒரு கேள்விக்குப் பதில் அளிக்கும் போது,, ஸஹர் பாங்கு சொல்வதால் குழப்பம் ஏற்படும் என்று கூறி, ஸஹர் பாங்கு சொல்லத் தேவையில்லை என்று எழுதியுள்ளார்கள்.
ஹதீஸைச் செயல்படுத்தினால் குழப்பம் ஏற்படும் என்று மத்ஹபுவாதிகள் கூறிய அதே காரணத்தை இப்போது இவர்கள் கூறியுள்ளார்கள் என்பதைப் பார்க்கும் போது இவர்கள் குர்ஆன், ஹதீஸை விட்டு விலகி எங்கோ சென்று விட்டார்கள் என்பதையே இது காட்டுகின்றது.
அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும் போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுய விருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழி கெட்டு விட்டார். (அல்குர்ஆன் 33:36)
இத்தூதர் உங்களுக்கு எதைக் கொடுத்தாரோ அதை வாங்கிக் கொள்ளுங்கள்! எதை விட்டும் உங்களைத் தடுத்தாரோ (அதி-ருந்து) விலகிக் கொள்ளுங் கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன். (அல்குர்ஆன் 59:7)
அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் ஒன்றைக் கற்றுத் தந்திருக்கும் போது, தமது மனோ இச்சையின் அடிப்படையில் அதை மறுப்பது தெளிவான வழிகேடாகும் என்பதை இந்த வசனங்கள் விளக்குகின்றன.
அல்லாஹ் இவ்வளவு கடுமையாக எச்சரித்திருந்தும் தமது மனோ இச்சையின் அடிப்படையில் வியாக்கியானம் கொடுத்து நபிவழியைப் புறக்கணிக்கின்றனர். அவர்கள் கொடுக்கும் வியாக்கியானங்களையும் அவற்றின் விளக்கத்தையும் பார்ப்போம்.
"தூங்குபவர்கள் எழுந்து ஸஹர் செய்ய வேண்டும் என்ற காரணத்தை மட்டும் அடிப்படையாக வைத்துச் சொல்லப்பட்டதாகும். ஸஹர் நேரத்தை மக்களுக்குத் தெரிவிப்பது தான் இதன் நோக்கம். இன்று நேரத்தைத் தெரிந்து கொள்வதற்கு எத்தனையோ வழிமுறைகள் கையாளப் படுகின்றன. நேரத்தை அறிந்து கொள்வது என்ற காரணம் நிறைவேறிவிடுமானால் அதுவே போதுமானதாகக் கொள்ளலாம்'' என்று வியாக்கியானம் கூறியுள்ளனர்.
காரணத்தோடு ஒரு விஷயம் சொல்லப்பட்டால் அந்தக் காரணம் இல்லாவிட்டால் பின்பற்றத் தேவையில்லை என்பது இபாதத்துகள் அல்லாத ஏனைய உலக விஷயங்களுக்குத் தான்.
தூங்கும் போது விளக்குகளை அணைத்து விடுங்கள். ஏனெனில், தீங்கிழைக்கக்கூடியது (எ-) திரியை இழுத்துச் சென்று வீட்டில் இருப்பவர்களை எரித்து விடக்கூடும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ர-), நூல்: புகாரி 3316
தூங்கும் போது விளக்குகளை அணைத்து விடுங்கள் என்று கூறும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதற்குக் காரணமும் இந்த ஹதீஸில் கூறுகின்றார்கள். விளக்கின் திரியை எ- இழுத்துச் சென்று தீ விபத்து ஏற்படும் என்பது தான் அந்தக் காரணம். இந்தக் காரணம் இப்போது பொருந்தாது. இப்போது மின்சார விளக்குகளை நாம் பயன்படுத்துவதால் எ- இழுத்துச் சென்று தீ விபத்து ஏற்படும் என்று நாம் அஞ்சத் தேவையில்லை. எனவே இந்தக் காலத்தில் உறங்கச் செல்லும் போது மின்சார விளக்குகளை அணைக்கத் தேவையில்லை. இது போன்ற உலக விஷயத்தில் காரணம் கூறப்பட்டு, அந்தக் காரணம் இல்லை என்றால் அதைச் செயல்படுத்தத் தேவையில்லை என்று கூறலாம். ஆனால் வணக்க வழிபாடுகள் விஷயத்தில் இது பொருந்தாது.
ஸஹர் பாங்காக இருந்தாலும் தொழுகைக்காக அழைக்கப்படும் பாங்காக இருந்தாலும் பாங்கு என்பது ஒரு வணக்கமாகும். இது போன்ற இபாதத்துகளில் காரணம் இருந்தால் செய்ய வேண்டும். காரணம் இல்லாவிட்டால் அந்த வணக்கத்தையே விட்டு விட வேண்டும் என்பதெல்லாம் கிடையாது.
தொழுகைக்கு அழைக்கப்படும் பாங்கையே எடுத்துக் கொள்வோம். தொழுகைக்கான நேரத்தை மக்களுக்கு அறிவிப்பதற்காகத் தான் பாங்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
மக்களின் எண்ணிக்கை அதிகமான போது, அவர்கள் அறிந்திருக்கின்ற ஏதாவது ஒரு முறையில் தொழுகையின் நேரத்தை அறிந்து கொள்ள ஆலோசித்தனர். அப்போது நெருப்பை மூட்டுவதன் மூலமோ, மணி அடிப்பதன் மூலமோ அறிந்து கொள்ளலாம் என கருத்துச் சொல்லப்பட்டது. ஆனால் பாங்கின் வாசகங்களை இரட்டை இரட்டையாகவும் இகாமத்தின் வாசகங்களை ஒற்றையாகவும் சொல்லுமாறு பிலால் (ர-) கட்டளையிடப்பட்டார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ர-)
நூல்: புகாரி 606
தொழுகையின் நேரத்தை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பது தான் தொழுகைக்கான பாங்கின் நோக்கம் என்பது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.  "இன்று நேரத்தைத் தெரிந்து கொள்வதற்கு எத்தனையோ வழிமுறைகள் கையாளப்படுகின்றன. நேரத்தை அறிந்து கொள்வது என்ற காரணம் நிறைவேறிவிடுமானால் அதுவே போதுமானதாகக் கொள்ளலாம்'' என்று இவர்கள் கூறும் வியாக்கியானத்தின் அடிப்படையில் தொழுகைக்கு பாங்கு சொல்லத் தேவையில்லை என்று இவர்கள் வாதிடுவார்களா?
"நீங்கள் பூமியில் பயணம் மேற்கொள்ளும் போது மறுப்போர் உங்களைத் தாக்கக் கூடும் என்று அஞ்சினால் தொழுகையைச் சுருக்கிக் கொள்வது உங்கள் மீது குற்றம் ஆகாது (4:101) என்று தானே அல்லாஹ் கூறுகின்றான். தற்போது மக்களுக்குப் பாதுகாப்பு ஏற்பட்டு விட்டதே?'' என்று நான் உமர் (ர-) அவர்களிடம் கேட்டேன். அதற்கு உமர் (ர-) அவர்கள் கூறியதாவது: "உங்களுக்கு ஏற்பட்ட வியப்பு எனக்கும் ஏற்பட்டது. எனவே இது குறித்து நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அப்போது, "அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய கொடையாகும். அவனது கொடையை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: யஅலா பின்   உமைய்யா (ர-), நூல்: முஸ்-ம் 1222
இறை மறுப்பாளர்கள் தாக்குவார்கள் என்ற அச்சம் இருந்தால் பயணத்தின் போது தொழுகையை சுருக்கிக் கொள்ள இறைவன் அனுமதி அளித்தான். இந்தக் காரணம் நீங்கி விட்டதால் இப்போது சுருக்கித் தொழத் தேவையில்லையே என்ற சந்தேகத்தை உமர் (ர-) அவர்கள் கேட்கும் போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப் பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது.
 (அல்குர்ஆன் 2:187)
இந்த வசனத்தில் இறையச்சம் ஏற்பட வேண்டும் என்பதற்காக நோன்பு கடமையாக்கப் பட்டுள்ளது என்று அல்லாஹ் கூறுகின்றான். இன்று யாராவது ஒருவர் எனக்கு இறையச்சம் நிறைய இருக்கின்றது, அதனால் நான் நோன்பு நோற்கத் தேவையில்லை என்று வாதிட்டால் ஏற்றுக் கொள்ள முடியுமா?
காரணத்தோடு ஒரு விஷயம் சொல்லப்பட்டால் அந்தக் காரணம் இல்லாவிட்டால் பின்பற்றத் தேவையில்லை என்பது வணக்க வழிபாடுகளுக்குப் பொருந்தாது என்பதை விளங்கிக் கொள்ள இதுவே போதுமானதாகும்.
தங்களது கருத்தை நியாயப் படுத்துவதற்காக மேலும் சில வாதங்களையும் முன் வைத்துள்ளனர்.
இரண்டு பாங்குக்கும் இடையிலுள்ள இடைவெளி மேடையில் ஏறி இறங்கும் நேரம் தான் என்று ஹதீஸில் இடம் பெறுகின்றது. அதாவது இரண்டு பாங்குக்கும் இடையில் அதிகப்படியாக ஐந்து நிமிட இடைவெளி தான் இருக்கும் என்று தெரிய வருகின்றது... ஐந்து நிமிட இடைவெளிக்குள் இரண்டு பாங்குகள் சொல்லும் போது மக்களிடம் குழப்பமான நிலை ஏற்படும்  என்று கூறியுள்ளனர்.
மேடையில் ஏறி, இறங்கும் நேரம் தான் என்று ஒரு அறிவிப்பாளர் கூறுவதை மட்டும் அடிப்படையாக வைத்து, ஐந்து நிமிட இடைவெளி என்று முடிவு செய்ய முடியாது. ஏனெனில் மற்றொரு அறிவிப்பில், ஸஹருக்கும், சுப்ஹுக்கும் இடையில் ஐம்பது வசனங்கள் ஓதும் அளவுக்கு இடைவெளி இருக்கும் என்று அனஸ் (ர-) அறிவிக்கின்றார்கள். (புகாரி 1921)
ஐம்பது வசனங்கள் ஓதும் நேரம் என்பது சாதாரணமாக நிறுத்தி நிதானமாக ஓதினால் இருபது நிமிடத்தி-ருந்து அரை மணி நேரம் வரை தேவைப்படும். எனவே இரண்டு பாங்குக்கும் இடையில் அரை மணி நேரம் இடைவெளி விடலாம். ஆனால் இவர்களாக ஐந்து நிமிட இடைவெளி என்று தீர்மானித்துக் கொண்டு அதனால் குழப்பம் ஏற்படும் என்று கூறுகின்றனர்.
ஸஹர் பாங்கு
ஒரே ஊரில் பல பள்ளிகள் இருப்பதால் எல்லா பள்ளிகளிலும் பாங்கு சொல்லும் போது இது முதலாவதா, இரண்டாவதா என்பது தெரியாமல் மக்களிடம் குழப்பம் அதிகரித்து விடும் என்றும் கூறியுள்ளனர்.
ஸஹர் பாங்கு என்ற நபிவழியைப் புறக்கணிப்பதற்காக, நேரம் அறிந்து கொள்ள எத்தனையோ வழிமுறைகள் இருப்பதாக வாதிட்டார்கள். ஆனால் அதே சமயம், "இரண்டு பாங்கு சொல்லப்படும் போது பாங்கின் நேரத்தை வைத்து இது எந்த பாங்கு என்பதைத் தீர்மானிக்கலாம்'' என்று கூறாமல் "குழப்பம் அதிகரிக்கும்'' என்று கூறுகின்றனர் என்றால் இவர்களுக்கு ஹதீஸைச் செயல் படுத்துவதில் எந்த அளவுக்கு ஈடுபாடு உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த ஸஹர் பாங்கை, இது போன்ற பொருந்தாத காரணங்களைக் கூறி புறக்கணிக்கின்றனர். மக்களிடம் வழக்கத்தில் இல்லை என்றால் உரிய முறையில் அறிவிப்புச் செய்து விட்டு அதை நடைமுறைப்படுத்த வேண்டும். இத்தனை மணிக்கு ஸஹர் பாங்கு சொல்லப்படும், இத்தனை மணிக்கு சுப்ஹ் பாங்கு சொல்லப்படும் என்பதை போஸ்டர்கள் மூலமோ, பிரசுரங்கள் மூலமோ அறிவிப்புச் செய்தால் எந்தக் குழப்பமும் ஏற்படாது. இன்று பல ஊர்களில் தவ்ஹீது ஜமாஅத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் ஸஹர் பாங்கு சொல்லப்படுகின்றது. அந்த ஊர்களிலெல்லாம் எந்தக் குழப்பமும் ஏற்படவில்லை. குழப்பம் இவர்களுடைய கொள்கையில் தான் உள்ளது.
விரலசைத்தல், நெஞ்சின் மீது கை கட்டுதல், இரவுத் தொழுகை போன்றவற்றுக்குத் தெளிவான ஆதாரங்கள் இருந்த போதும், மக்களிடம் நடைமுறையில் இல்லை என்பதால் அதைக் குழப்பம் என்று குராபிகள் கூறினர். இப்போது அதே வழிமுறையைப் பயன்படுத்தி, இவர்களும் தாங்கள் செயல் படுத்தவில்லை என்பதற்காக, நபிவழியைக் குழப்பம் என்று கூறுகின்றார்கள் என்றால் இவர்கள் எந்த நிலைக்குச் சென்று விட்டார்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இதன் மூலம் இவர்கள் தங்களைக் கிப்லாவாக்கி, அதற்குத் தக்க ஹதீஸ்களைத் திருப்பவும், வளைக்கவும் முனைந்துள்ளார்கள்.
திடல் தொழுகையும் திரிபு வாதமும்
அன்றைய யூத, கிறித்தவர்கள் குர்ஆனின் கட்டளைக்குத் தங்களை மாற்றிக் கொள்ள மறுத்து, திரிபு வாதம் செய்தது போல் - இன்றைய குராபிகள் மார்க்கத்துக்குத் தக்கவாறு தங்களை மாற்றிக் கொள்ளாமல் திரிபு வாதம் செய்வது போல் - இவர்களும் திடல் தொழுகை விஷயத்தில் திரிபு வாதம் செய்கின்றனர். அதிலும் நாம் திடல் தொழுகையை அமுல் படுத்தி விட்டோம் அல்லவா? அதனால் இதை அவர்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
திட-ல் கண்டிப்பாகத் தொழுது தான் ஆக வேண்டுமா? இது ஜாக் பரிவாரத்தின் அடுத்த கேள்வி!
இப்படிப்பட்ட வாதங்களைச் சத்தியத்தைப் பின்பற்றும் ஒருவர் எழுப்ப முடியுமா? என்பதை ஜாக்குக்கு வக்காலத்து வாங்குவோர் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
உண்மையில் இதுவும் ஒரு கே-க் கூத்தான கேள்வியாகும். விரல் அசைக்கும் ஹதீஸை நாம் எடுத்து வைத்தவுடன் குராபிகள் இந்த வாதத்தைத் தான் எடுத்து வைத்தனர். அதே வாதத்தை இன்று இவர்களும் தூக்கிப் பிடிக்கின்றனர்.
இப்படிக் கேட்கும் இவர்களிடம் திரும்பத் திரும்ப, பல அடுக்கடுக்கான கேள்விக் கணைகளைத் தொடுக்கலாம்.
தொழுகையில் தக்பீர் சொன்னதும் நெஞ்சில் கைகளை வைத்துத் தான் ஆக வேண்டுமா? ருகூவில், சுப்ஹான ரப்பியல் அழீம் என்று சொல்-த் தான் ஆக வேண்டுமா? இப்படித் தொழுகையில் செய்ய வேண்டிய சுன்னத்துக்களையே ஏராளமாகப் பட்டியல் போடலாம். இவ்வளவு ஏன்? பெருநாள் தொழுகையைத் தொழுது தான் ஆக வேண்டுமா? என்று கூடக் கேட்கலாம். இப்படிச் சிந்திக்க ஆரம்பித்தால் ஒரு சுன்னத்தைக் கூட நடைமுறைப் படுத்த முடியாது. இப்படி நகைப்பிற்குரிய கேள்வியைத் தான் இன்று இவர்கள் கிளப்பிக் கொண்டிருக்கின்றார்கள்.
இவர்கள் இன்று இவ்வாறு கூறக் காரணம் இந்த சுன்னத்தை நாம் அமல் படுத்துகிறோம் என்பதைத் தவிர வேறு இல்லை.
ஏனென்றால் பெருநாள் தொழுகையைத் திட-ல் தொழ வேண்டும் என்ற கருத்தில் தான் இவர்கள் ஏற்கனவே இருந்தனர். தற்போது நாம் அதை நாகர்கோவி-ல் செயல்படுத்திய பிறகு தான் இந்தக் கே-க் கூத்தான கேள்விகளை எல்லாம் கேட்டு, திடல் தொழுகையை மறுக்கின்றார்கள். இதற்கு அவர்களது இதழி-ருந்தே நாம் ஆதாரம் காட்ட முடியும்.
பெருநாள் தொழுகையை திறந்த வெளியில் தான் தொழ வேண்டும்
நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகையை பள்ளியில் தொழுததாக ஆதாரம் இல்லை.
முத-ல் நாம் குறிப்பிட்டுள்ள உம்மு அதிய்யா (ர-) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸில் முஸல்லா தொழும் இடத்திற்குப் புறப்பட்டுச் செல்லுமாறு வந்துள்ளது. பள்ளியாக இருந்தால் மஸ்ஜித் என்ற வாசகம் இடம் பெற்றிருக்கும்.
நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகைக்கு ஒரு வழியில் சென்று மற்றொரு வழியில் திரும்பி வருவார்கள் என்ற புகாரி, முஸ்-மில் வரும் ஹதீஸும் அவர்கள் பள்ளியில் தொழ வைக்கவில்லை என அறிவிக்கின்றது.
ஏனெனில் அவர்களின் வீடு பள்ளிவாச-லேயே அமைந்திருந்தது.
ஒரு பெருநாளில் மழை பெய்ததால் தொழுகையைப் பள்ளிவாச-ல் தொழ வைத்தார்கள் என்று அபூதாவூத், இப்னுமாஜா ஆகிய நூல்களில் வரும் ஹதீஸ் பலவீனமானதாகும். ஏனெனில் ஈஸா பின் அப்துல் அஃலா என்ற ஒருவர் வழியாக இது அறிவிக்கப் பட்டுள்ளது. இவர் யாரென்றே அறியப்படாதவர்.
அல்ஜன்னத் நவம்பர் 2002 இதழில் 24ம் பக்கத்தில் இவ்வாறு எழுதியுள்ளார்கள்.
இந்தக் கட்டுரையைத் தங்கள் இதழில் எழுதிய காலத்திலும் இவர்கள் பள்ளியில் தான் தொழுது கொண்டிருந்தார்கள். ஆனாலும் உள்ளதை மறைக்காமல் அப்படியே எழுதினார்கள். இன்று மாறுகின்றார்கள்; மறுக்கின்றார்கள் என்றால் நாம் இதைக் கோட்டாரில் சொல்-, அங்கேயே  நபிவழிப்படி திடல் தொழுகையைச் செயல்படுத்திக் காட்டியதைத் தான் அவர்களால் தாங்க முடியவில்லை.
தாங்களே கூறி வந்த கருத்துக்கு மாற்றமாக இன்று இவர்கள் திடல் தொழுகையை மறுப்பதற்குத் தனி நபர் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியும், அதற்காக மார்க்கத்தையே மாற்றத் துணிந்ததும் தான் காரணம்.
இதில் இன்னும் வேதனை என்னவென்றால் சில ஜாக் வெறியர்கள், "ஐந்து வேளைத் தொழுகைகளையும் திட-ல் போய் தொழ வேண்டியது தானே?'' என்றும் கே- செய்துள்ளனர்.
இவர்கள் யாரிடம் இந்தக் கேள்வியைக் கேட்கின்றார்கள்? நம்மிடமா? அல்லது நாம் யாரை வழிகாட்டியாகக் கொண்டு இந்த சுன்னத்தை நடைமுறைப் படுத்துகின்றோமோ அந்த அல்லாஹ்வின் தூதரிடம் இந்தக் கேள்வியைக் கேட்கின்றார்களா?
குர்ஆன், ஹதீஸ் என்ற பெயரை வைத்துக் கொண்டு இவர்கள் எந்த நிலைக்குச் சென்று விட்டார்கள் என்று பாருங்கள். திடல் தொழுகையை அறிவித்து நமது ஜமாஅத் சார்பில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளையும் இவர்கள் கிழித்து எறிந்துள்ளனர்.
அஷ்ரப் பள்ளியில் அரங்கேறிய அநியாயம்
அல்லாஹ்வின் பள்ளிவாசல்களில் அவனது பெயர் கூறப்படுவதைத் தடுத்து, அவற்றைப் பாழாக்க முயல்பவனை விட பெரும் அநீதி இழைத்தவன் யார்? பயந்து கொண்டே தவிர அவற்றில் நுழையும் உரிமை அவர்களுக்கு இல்லை. அவர்களுக்கு இவ்வுலகில் இழிவும், மறுமையில் கடுமையான வேதனையுமுண்டு.
(அல்குர்ஆன் 2:114)
இந்த வசனம் தவ்ஹீதுவாதிகள் பலருக்கு மனப்பாடமே ஆகி விட்டது. அந்த அளவுக்கு அந்த வசனத்தைத் திரும்பத் திரும்ப மக்கள் மன்றத்தில் வைத்தோம். காரணம் தவ்ஹீதைச் சொன்னவுடன் முதன்முத-ல் பள்ளிவாச-ல் தொழுவதற்குத் தான் குராபிகள் தடை விதித்தனர்; அடித்து விரட்டினர்; "தொழக் கூடாது'' என்று கரும் பலகைகளில் சாக்பீஸால் எழுதினால் அழிந்து விடும் என்று கருதிப் பெயிண்டால் எழுதி வைத்தனர்.
காவல் துறை, நீதி மன்றம் என்ற இது தொடர்பான வழக்குகள் இன்றும் நிலுவையில் உள்ளன. ஐந்து நேரத் தொழுகைகளின் போது அடிக்கடி இந்த அத்துமீறல்கள், அடிதடித் தகராறுகள், அக்கிரமங்கள் அரங்கேறிக் கொண்ருக்கும் வேளையில் தான் தனிப் பள்ளி கட்டினோம். சில இடங்களில் ஏற்கனவே இருந்த பள்ளிகளும் அல்லாஹ்வின் கிருபையால் நம் கைவசமாயின. அப்படிக் கைவசமான ஒரு பள்ளி தான் கோட்டாரில் உள்ள பள்ளிவாசல்.
இன்று அந்தப் பள்ளியின் அவல நிலையைப் பாருங்கள். வெகு வேகமாக ஏகத்துவம் வளர்ந்து கொண்டிருக்கும் இந்தக் குறுகிய கால கட்டத்திலேயே அல்லாஹ்வின் அருட்கொடையை மறுக்கும் நிலைக்கு ஜாக் சென்று கொண்டிருக்கின்றது.
தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்த ஒரு சகோதரர் அந்தப் பள்ளியில் தொழுது கொண்டிருக்கின்றார். அவர் தொழுது கொண்டிருக்கும் போதே அவரது காதில் விழுமாறு கிண்டல் செய்கின்றனர் ஜாக்கினர்.
குராபிகள் செய்த அதே வேலையை நூற்றுக்கு நூறு அப்படியே பின்பற்றுகின்றனர். தொழுது முடித்தவுடன் பள்ளியின் செயலாளர் - நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். குராபி பள்ளியின் செயலாளர் அல்ல. தவ்ஹீது பள்ளியின் செயலாளர் - தொழுத சகோதரரைப் பார்த்து, "நீ இங்கு தொழ வரக் கூடாது'' என்று எச்சரிக்கை விடுக்கின்றார். அதற்கு அந்தச் சகோதரர் மேலே இடம் பெற்றுள்ள 2:114 வசனத்தைச் சுட்டிக் காட்டியிருக்கின்றார்.
"அந்த வசனம் எங்களுக்குத் தெரியும்'' என்று பதில் அளித்துள்ளார். இதன் பொருள் என்ன? "இந்த வசனத்தின் இறைக் கட்டளையை மறுத்து, நிராகரித்துத் தான் உன்னை வெளியே தூக்கி எறிகின்றேன்'' என்று அவர் எக்காளமிட்டிருக்கின்றார்.
சுன்னத் வல் ஜமாஅத்தில் நடந்த இந்த அட்டூழியங்களை எதிர்த்துத் தானே போர்க் குரல் உயர்த்தி, போர்க் கொடி தூக்கினோம். தனிப் பள்ளி கட்டினோம்.
இன்று இந்த அக்கிரத்தை, அநியாயத்தை, அழிச்சாட்டியத்தை குர்ஆன், ஹதீஸின் படி செயல் படுகின்றோம் என்று ஜம்பம் அடிக்கும் ஜாக்கின் நிர்வாகச் சக்கரவர்த்திகள் அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றனர்.
எனவே தவ்ஹீத் ஜமாஅத்தின் மீது கொண்டுள்ள வெறுப்பிலும், வீராப்பிலும் இவர்கள் எத்தகைய அக்கிரமத்தையும் செய்யத் தயங்க மாட்டார்கள் என்பதற்கு இவை நிதர்சனச் சான்றுகள்; சாட்சியங்கள்.
நம் மீது கொண்டுள்ள வெறுப்பு காரணமாக அல்லாஹ்வின் மீது போர் தொடுக்கும் அநியாயத்தைக் கூட செய்யத் துணிந்து விட்டார்கள் என்பதைப் பார்க்கும் போது, ஜாக் சறுகல் பாதையில் சரியான வேகத்தில் சென்று கொண்டிருக்கின்றது என்பதை நாம் தெளிவாக உணரலாம்


அல்லாஹ்வின் ஆலயத்தை பாழாக்கிய அநியாயக் காரர்கள்
ஏகத்துவக் கொள்கை வளர்ச்சி அடைந்த ஊர்களில் ஒன்று நெல்லை மாவட்டத்தில் உள்ள கடையநல்லூர் ஆகும். அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 1982ம் வருடம் சகோதரர் எம். அப்துல் ஜலீல் மதனீ அவர்களின் தலைமையில் விதைக்கப்பட்ட ஏகத்துவம் என்ற விதை இன்று ஆல் போல் தழைத்து கடையநல்லூரைச் சுற்றிலும் தென்காசி, வடகரை, அச்சன் புதூர், வாவா நகரம், ஆலங்குளம், புளியங்குடி, வாசுதேவ நல்லூர், வீராணம், வல்லம், பொட்டல் புதூர் இன்னும் பற்பல ஊர்களில் சத்திய ஒளி பாய்ச்சிக் கொண்டிருக்கின்றது.
இறையுதவிக்கு அடுத்த படியாக, கடையநல்லூரைச் சார்ந்த தவ்ஹீத் வாதிகளின் மாபெரும் தியாகத்தினாலும், நல்லுள்ளம் கொண்டவர்களின் உதவியினாலும் 1995ம் வருடம் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் உருவாக்கப்பட்டது தான் அல்மஸ்ஜிதுல் முபாரக் பள்ளிவாசலாகும்.
கடந்த 24 ஆண்டுகளில் கடையநல்லூரில் ஏகத்துவவாதிகள் பட்ட கஷ்டங்களையும் துன்பங் களையும் பட்டியலிட்டு விட முடியாது. அடிதடிகள், ஊர் விலக்கம்., மய்யித்தை அடக்குவதற்குத் தடை, தெருமுனைப் பிரச்சாரம் செய்தவற்குத் தடை, சத்திய வழியில் நபியவர்கள் காட்டிய முறைப்படி திருமணம் நடத்துவதற்குத் தடை இன்னும் பற்பல இன்னல்கள்.
இவற்றையெல்லாம் கடந்து, எதிர் நீச்சல் போட்டு தலைநிமிர்ந்து தன்மானத்துடன் தன்னிகரற்ற சேவை கடையநல்லூர் அல்மஸ்ஜிதுல் முபாரக்கின் மூலம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிவாசல்களுக்கும் முன்னுதாரணமாக திகழக் கூடிய வகையில் நடமாடும் நூலகம், கடனுதவித் திட்டம், ஏழைச் சிறுவர்களுக்கு கத்னா செய்வதற்கு உதவி, ஏழை மாணவர்களுக்குக் கல்வி உதவி, ரத்த தானம், பைத்துல் மால், இஸ்லாமியப் புத்தகங்கள், ஆடியோ, வீடியோ, சிடிக்கள் அடங்கிய மாபெரும் இஸ்லாமிய நூலகம், காலையிலும் மாலையிலும் 500 குழந்தைகளுக்கு மேல் பயிலக்கூடிய குழந்தைகள் மதரஸா, இன்னும் பற்பல பணிகள் இந்தப் பள்ளிவாசலை தலைமை இடமாகக் கொண்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இவையெல்லாம் இறையுதவிக்கு அடுத்த படியாக கடையநல்லூரைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் வெளி நாட்டிலும், உள்நாட்டிலும் தங்களுடைய இரத்தத்தை வியர்வையாகச் சிந்தி ஐந்தும் பத்துமாகத் தரும் சில்லரைக் காசுகள் மூலமாகத் தான் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
1989ம் ஆண்டு கடையநல்லூரில் ஒரு பள்ளிவாசலைக் கட்ட வேண்டும் என்று தவ்ஹீத் சகோதரர்கள் முடிவு செய்கின்றனர். சகோதரர் எஸ்.எஸ்.யூ. ஸைஃபுல்லாஹ் ஹாஜா மற்றும் இன்னும் பல சகோதரர்களின் தீவிர முயற்சியின் காரணமாக இறைவனின் உதவியால் 1993ம் ஆண்டு பள்ளி வாசலுக்காக இடம் வாங்கப்படுகிறது.
பள்ளிவாசலுக்குரிய இடத்தை தனிப்பட்ட நபர்களின் பெயரில் வாங்கினால் நாளை ஏதாவது பிரச்சினைகள் ஏற்படலாம் என்று முடிவு செய்து, அன்றைய சூழ்நிலையில் சகோதரர் பி. ஜைனுல் ஆபீதீன் மற்றும் பல மவ்லவிகளின் தீவிர பிரச்சாரத்தின் மூலம் நாம் அழைப்புப் பணி செய்து வந்த, ஜாக் என்ற அமைப்பின் பெயரில் குர்ஆன், ஹதீஸைப் பின்பற்றக்கூடிய கடையநல்லூர் மக்களுக்காக அந்த இடத்தின் பத்திரம் முடிக்கப்பட்டது.
இதைத் தவிர நிர்வாக விஷயத்தில் ஜாக் என்ற அமைப்பிற்கும் கடையநல்லூர் அல்மஸ்ஜிதுல் முபாரக் பள்ளிவாசலுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது. இதனை ஜாக்கும் ஒப்புக் கொண்டு நடைமுறைப் படுத்தியும் வந்துள்ளது.
இதனை உள்நாட்டிலும் வெளி நாட்டிலும் உள்ள கடையநல்லூரைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் அனைவரும் நன்கறிவர்.
பள்ளிவாசல் கட்டப்பட்ட நாள் முதல் இன்று வரை நிர்வாக விஷயமாக இருந்தாலும், மார்க்கப் பணிகளாக இருந்தாலும் ஜாக் அமைப்பைச் சாராத கடையநல்லூர் தவ்ஹீத் மக்கள் தான் முன்னின்று செய்து வருகின்றனர்.
பொதுவாக ஜாக் அமைப்பின் பள்ளிவாசல்களில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தைச் சார்ந்தவர்கள் உரையாற்றக் கூடாது என்றும், பெருநாள் தொழுகை ஒரு நாள் முன்பாகவே நடத்த வேண்டும் என்றும் ஜாக் அமைப்பு முடிவு செய்து, தங்கள் ஆக்கிரமிப்பிலுள்ள அனைத்துப் பள்ளிவாசல்களிலும் இதனை நடைமுறைப்படுத்தி வருகின்றனர். பி.ஜே. அவர்களின் திருக்குர்ஆன் மொழி பெயர்ப்பு மற்றும் அவர் பேசிய மார்க்க சம்பந்தமான ஆடியோ, வீடியோ, சிடிக்கள் ஜாக் அமைப்பைச் சார்ந்த எந்தப் பள்ளிவாசல்களிலும் இருக்கக் கூடாது என்பதை அவர்கள் தங்களுடைய எழுதப்படாத விதியாக நடைமுறைப்படுத்தி வருகின்றனர். ஆனால் இயக்க வெறிபிடித்த இவர்களின் சாயல் சிறிது கூட இல்லாமல் கடையநல்லூர் அல் மஸ்ஜிதுல் முபாரக்கின் பணிகள் தெளிவாக நடைபெற்றுக் கொண்டிருந்தன.
இந்நிலையில் தங்களுடைய கடையநல்லூர் ஜாக் கிளைச் செயலாளர் என்று அவர்கள் பெயரளவில் கருதி வந்த     அப்துல் ஜலீல் மதனீ அவர்கள் கடந்த ஒரு வருட காலமாக உடல் நலக் குறைவின் காரணமாக மருத்துவ சிகிச்சை செய்து கொண்டிருந்த காலகட்டத்தில் கடையநல்லூரில் இல்லாத ஜாக் அமைப்பின் பெயர் பலகையை பள்ளியில் பதிக்க வேண்டும் என்று அதன் மாநிலத் தலைவர் உலக அமீர் (?) எஸ்.கே. மற்றும் அவருடைய அடிவருடிகள் மூலம் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டார். இதனால் மேலும் மனக் கவலைக்கு உள்ளான அப்துல் ஜலீல் மதனீ அவர்கள் மிகுந்த மனப்போரட்டத்திற்கு மத்தியில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக ஜமாத்தினர்களை சமாதானப் படுத்தி அக்கல்வெட்டினை யாருடைய பார்வையும் படாத விதத்தில் பள்ளியில் பதித்தார்.
"அண்ணன் எப்போது போவான், திண்ணை எப்போது காலியாகும்'' என்று காத்துக் கொண்டிருந்ததைப் போல் அப்துல் ஜலீல் மதனீ அவர்கள் உடல் நலக் குறைவினால் ஆபரேஷனுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவுடன், ஜலீல் மதனீ அவர்களுக்கு மிகப் பெரும் விரோதியாகத் திகழ்ந்த, ஏர்வாடியைச் சேர்ந்த ஒருவர்  "கடையநல்லூர் அல் மஸ்ஜிதுல் முபாரக் ஜாக் அமைப்பிற்குத் தான் சொந்தம்'' என்ற மிகப் பெரும் பொய்யை திடீரென்று பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் கூறினார். ஜாக்கின் மாநிலத் தலைவர் கூட அதுவரை கூறாத ஒன்றை கேள்விப்பட்ட ஜமாஅத் நிர்வாகிகள் மிகவும் அதிர்ச்சியடைந்தனர்.
மேலும் கோவையைச் சேர்ந்த ஜாக் நிர்வாகி ஒருவர், காவல் துறையினரிடம் "பள்ளிவாசல் கட்டும் போது இந்த ஊர்க்காரன் யாருமே கிடையாது. நான் தான் சுவர்களுக்கெல்லாம் தண்ணீர் அடித்தேன்'' என்று முழுப் பூசணிக் காயை மொத்தமாக விழுங்கியவன் போல் பொய்யுரைத்ததைக் கேட்ட பள்ளிவாசல் தலைவர் ஒரு கணம் திகைத்தே விட்டார்.
எஸ்.கே. என்பவர் "இந்த ஊர்க்காரர்கள் இந்தப் பள்ளிக்கு ஐந்து காசு கூட கொடுத்தது கிடையாது. நான் தான் கத்தை, கத்தையாக, அள்ளிக் கொடுத்தேன்'' என்று ஒரு அண்டப் புழுகலை தன் பங்கிற்கு காவல் துறை அதிகாரிகளிடம் அவிழ்த்து விட்டார். திகைத்துப் போன ஜமாத்தார்கள் "இவர்கள் தான் குர்ஆன், ஹதீஸ் அமைப்பிற்குச் சொந்தக்காரர்களா? அல்லாஹ் நமதூரை ஜலீல் மதனி இருக்கும் வரை இவர்களை விட்டும் காப்பாற்றி விட்டான். இனியும் இறைவன் இவர்களின் தொடர்பின்றி காப்பாற்ற வேண்டுமே'' என இறைவனிடம் பிரார்த்தனை செய்தனர்.
அப்துல் ஜலீல் மதனீ அவர்கள் மீது அன்பு கொண்ட உள்ளங்கள் எல்லாம் அவர்களுக்காக கண்ணீர் வடித்து, அவர்களுக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருந்த நிலையில் இவர்கள் "பள்ளிவாசல் எங்களுக்குத் தான் சொந்தம், இங்கே நாங்கள் தான் நிர்வாகம் செய்வோம், எங்கள் அமைப்பினரைத் தவிர வேறு யாரும் பயான் செய்யக் கூடாது'' என்றெல்லாம் ஜாக்கின் மாநிலத் தலைவரும் மாவட்டத் தலைவரும் பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் கோரத் தாண்டவம் ஆடினர்.
ஜலீல் மதனீ அவர்கள் இல்லாத நிலையிலும் பள்ளிவாசல் நிர்வாகம் சரியாகத் தான் எவ்வித இடையூறுமின்றி ஜமாஅத்தினரின் உதவியோடு நன்றாக செயல்பட்டு வந்தது. ஆனாலும் இவர்கள் "ஜலீல் மதனீ அவர்கள் கவலைக்கிடம். பள்ளிவாசல் நிர்வாகம் ஸ்தம்பித்து விட்டது'' என்றெல்லாம் கல் நெஞ்சம் கொண்டவர்களை விடக் கடுமையான முறையில் தீர்மானம் நிறைவேற்றி அதில் கையொப்பம் இடுமாறு பள்ளிவாசல் நிர்வாகிகளை மிரட்டினர். அதற்கு  அவர்கள் மறுத்து விட்டனர். மேலும்  நிர்வாகிகளிடம் "ஜலீல் மதனீ ஜாக் மாவட்டப் பொருளாளர், மாவட்டம் சம்பந்தமான தஸ்தாவேஜுகளை எடுக்க வேண்டும்'' என்று கூறி பள்ளிவாசல் பீரோவின் சாவியை ஏமாற்றி வாங்கியதுடன் பள்ளிவாசலின் தஸ்தாவேஜுகளையும் சாவியையும் பள்ளி நிர்வாகிகளுக்குக் கூட தெரியாமல் ஜாக் நிர்வாகி ஒருவர் திருடிச் சென்று விட்டார்.
இவர்களுடைய அடாவடித் தனத்தைக் கண்ட ஜமாஅத் நிர்வாகிகள் அல் மஸ்ஜிதுல் முபாரக் பள்ளிவாசல் பொதுக் குழுவைக் கூட்டினர். ஜலீல் மதனீ அவர்கள் வரும் வரை நிர்வாகத்தைக் கவனிப்பதற்காக ஐந்து நபர்கள் கொண்ட குழுவைத் தேர்ந்தெடுத்தனர். இக்கூட்டத்தில் ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி, அப்துல்லாஹ் உமரி மற்றும் நூருல் அமீன் ஆகிய ஜாக் ஆதரவாளர்களும் கலந்து கொண்டு, அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவினை ஆமோதித்து கையொப்பம் இட்டனர். மறுநாள் வெள்ளிக்கிழமை இது மிகச் சிறந்த முடிவு என்பதை ஆமோதித்து இம்தாதி என்பவர் உரை நிகழ்த்தினார்.
ஆனால் மறுவாரம் வெள்ளிக் கிழமை ஆன போது ஜாக்கின் மாநிலத் தலைவரும், மாவட்டத் தலைவரும் வந்து, இது  ஜாக் பள்ளிவாசல், இங்கே நாங்கள் சொல்பவர்கள் தான் ஜும்ஆ நிகழ்த்த வேண்டும். இல்லையென்றால் வெள்ளிக் கிழமைத் தொழுகையில் பிரச்சினை செய்வோம் என்று பள்ளிவாசல் நிர்வாகிகளை மிரட்டினர்.
மிரண்டு போன பள்ளிவாசல் நிர்வாகிகள் தொழுகையில் பிரச்சினை வந்து விடக் கூடாதே எனப் பயந்து ஜமாத்தினர்களை சமாதானப்படுத்தி அவர்களால் அனுப்பப்பட்டவரையே ஜும்ஆ நடத்த அனுமதித்தனர்.
இவர்களின் இந்த அடாவடித் தனத்தைப் பொறுக்க முடியாத பள்ளிவாசல் நிர்வாகத் தலைவரும், துணைத் தலைவரும் எஸ்.கே. என்பவரைச் சந்தித்து "எங்களுடைய பள்ளியில் பிரச்சனைகளை ஏற்படுத்தாதீர்கள். இதுவரை அப்துல் ஜலீல் மதனீ அவர்கள் பள்ளிவாசலை எப்படி நடத்திச் சென்றார்களோ அப்படியே நாங்கள் நடத்திச் செல்கிறோம். நீங்கள் பிரச்சினை செய்தால் அனைத்து இறைப் பணிகளும் நின்று போய்விடும்'' என்று எவ்வளவோ எடுத்துக் கூறியும் "என் கையில் எதுவுமில்லை. எல்லாமே ஏர்வாடி சிராஜ் தான்'' என்று கூறி விட்டார். இயக்க வெறிபிடித்த இவர்களின் உள்ளங்களில் அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். அவர்கள் சிந்திக்கவில்லை.
இந்நிலையில் தான் பள்ளிவாசல் தலைவர் தலைமையில் மீண்டும் பள்ளிவாசல் பொதுக்குழு கூட்டப் பட்டது. அதில் "இப்பள்ளிவாசல் கடையநல்லூரைச் சார்ந்த குர்ஆன் ஹதீஸைக் கொள்கையாகக் கொண்டவர்களுக்குரியது. இது எந்த இயக்கத்திற்கும் உரிய பள்ளியல்ல. இதுகாலம் வரை அப்துல் ஜலீல் மதனீ அவர்கள் எவ்வாறு நடத்தி வந்தார்களோ அவ்வாறே நாமும் நடத்திச் செல்ல வேண்டும். பள்ளியில் எந்த இயக்கம் சம்பந்தப்பட்ட போஸ்டர்களோ, விளம்பரமோ, பெயர் பலகையோ, கல்வெட்டோ இருக்கக் கூடாது'' என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டதோடு ஜமாத்தினரின் ஆதரவோடு அனைத்தும் அப்புறப் படுத்தப்பட்டது..
பெயரளவில் இருந்த "ஜாக்''கும் சென்று விட்டதை அறிந்த இயக்க வெறிபிடித்த ஜாக் மாநிலத் தலைவர் எஸ்.கே., மாவட்டத் தலைவர் சிராஜ், தமுமுக நெல்லை மாவட்டத் தலைவர் சேட்கான், செயலாளர் பகத்சிங், கோவை அய்யூப், ஹாமித் பக்ரி, அப்துர் ரஹ்மான் ஷிப்லி இன்னும் பலர் அருகிலுள்ள ஊர்களைச் சார்ந்த அறுபதுக்கும் மேற்பட்ட இரத்த வெறிபிடித்த த.மு.மு..க கைக்கூலிகளை துணைக்கு அழைத்துக் கொண்டு பள்ளிவாசலுக்குள் நுழைந்து, ஜமாத்தினரை நோக்கி அசிங்கமான வார்த்தைகளைக் கூறி மிகப்பெரும் இரத்தக் களறிக்குத் திட்டமிட்டனர்.
ஆனால் ஜமாத்தினர் பொறுமை காத்ததால் எவ்வித அசம்பாவிதமும் இன்றி அன்றைய பொழுது கழிந்தது. இது பள்ளிக்குத் தொழவந்த அனைவருக்கும் தெரியும்.
பிறகு ஆர்.டி.ஓ. தலைமையில் நடந்த சமாதானக் கூட்டத்தில் மார்ச் 15ம் தேதி வரை ஜாக்கினர் ஒரு ஜும்ஆவும், பள்ளிவாசல் நிர்வாகத்தினர் ஒரு ஜும்ஆவும் என்ற வகையில் முடிவு செய்யப்பட்டது. இது இதுவரை இல்லாத ஒரு நடைமுறையாகும். அப்துல் ஜலீல் மதனீ அவர்கள் இருக்கின்ற காலத்திலேயே பள்ளிவாசல் ஜும்ஆ பயான்கள் அனைத்தும் எஸ்.எஸ்.யு. ஸைஃபுல்லா ஹாஜா அவர்களால் தான் பல வருடங்களாக முடிவு செய்யப்பட்டு, நடத்தப்பட்டு வருகிறது..
பிறகு மார்ச் 20ம் தேதியன்று நடைபெற்ற ஆர்.டி.ஓ. தலைமையில் நடந்த சமாதானக் கூட்டத்தில் இரு தரப்பாரும் கோர்ட்டில் சென்று பார்த்துக் கொள்ளுங்கள் என்று  ஆர்.டி.ஓ. கூறி விட்டார். எனவே ஏற்கனவே பள்ளிவாசலை நிர்வாகம் செய்து வந்த அல்மஸ்ஜிதுல் முபாரக் கமிட்டியினர் ஜமாஅத்தினர், அப்துல்லாஹ் உமரி  என்பவரை நீக்கி விட்டுப் புதிய இமாமை நியமித்து தொழுகை நடத்த ஆரம்பித்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த அப்துல்லாஹ் உமரி என்பவர் ஸைஃபுல்லாஹ் ஹாஜா அவர்களும், அவருடைய அண்ணன் சேகனா அவர்களும், அப்துந்நாசிர் அவர்களும் தன்னை கடுமையாகத் தாக்கியதாகவும், பிளேடால் கையை அறுத்ததாகவும் காவல் துறையில் பொய்யாக வழக்கை பதிவு செய்து மருத்துவமனையில் இருபத்தி இரண்டு நாட்கள் படுத்துக்கொண்டார்.
இந்நிலையில் கோர்ட்டில் சென்று பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறிய ஆர்.டி.ஓ. என்ன காரணத்தினாலோ  இரண்டு நாட்கள் கழித்து திடீரென்று "பள்ளிவாசல் ஜாக் அமைப்பிற்குரியது தான்'' என்று நியாயமற்ற தீர்ப்பை ஆதாரங்களின்றி இரவோடு இரவாக பிறப்பித்தார். இவ்வாறு தீர்ப்பளிக்க ஆர்.டி.ஓ.க்கு எந்த அதிகாரமும் இல்லை என்பதும், கோர்ட்டில் வழக்கு முடியும் வரை இருக்கும் நிர்வாகத்தின் அடிப்படையிலேயே இயங்க வேண்டும் என்று முடிவு செய்வது தான் ஆர்.டி.ஓ.வின் பணி என்பதும் இங்கு கவனிக்க வேண்டிய விஷயம்.
இதனால் காவல் துறை உதவியோடு த.மு.மு.க வினர் பள்ளியில் நுழைந்து அங்கு இரவில் தங்கியிருந்த சகோதரர் செய்யது அஹ்மது என்பவரை மிரட்டி வெளியேற்றி விட்டு பள்ளிவாசலின் அனைத்துப் பூட்டுக்களையும் அறுத்தெறிந்து மாபெரும் அட்டூழியத்தையும் அநியாயத்தையும் அரங்கேற்றினர்.
தான் அழித்த தீர்ப்பு நியாயமற்றது என்பதை உணர்ந்த ஆர்.டி.ஓ. மறுநாள் உத்தரவை மாற்றி இரு தரப்பாரும் நீதி மன்றத்தை அணுகி பிரச்சனையை தீர்த்துக் கொள்ள வேண்டும், அது வரை பழைய நிர்வாகமே தொடர வேண்டும்  என்றும் உத்தரவு பிறப்பித்தார். இதனால் பள்ளிவாசல் மீண்டும் நிர்வாகிகள் வசம் வந்தது. இந்நிலையை தாங்கிக் கொள்ள முடியாத இரத்த வெறி பிடித்த ஜாக், த.மு.மு.க குண்டர்கள் மிகப்பெரும் களேபரம் ஒன்றிற்குத் திட்டமிட்டு தென்காசி, செங்கோட்டை, புளியங்குடி, சுரண்டை, ஏர்வாடி ஆகிய பகுதிகளிலிருந்து த.மு.மு.க மற்றும், ஜாக் அமைப்பைச் சார்ந்த குண்டர்களை கூலிக்கு அழைத்து வந்தனர்.
அவர்களின் நோக்கம் பள்ளிவாசலை எப்படியாவது இழுத்து மூடி விடவேண்டும் என்பது தான். ஏனெனில் கடையநல்லூரில் ஒரு சில புல்லுருவிகளைத் தவிர வேறு யாரும் ஜாக் என்ற அமைப்பில்  கிடையாது. அவர்களில் சிலர் தொழுகை அற்றவர்கள். சிலர் அறவே கொள்கையற்றவர்கள். அது போன்று தமுமுகவினரும் கடையநல்லூரில் ஒன்றிரண்டு பேரைத் தவிர யாரும் கிடையாது.
இவர்களுக்குப் பள்ளிவாசல் மூடப்படுவதால் எந்தப் பாதிப்பும் இல்லை. எனவே தான்  "மகன் செத்தாலும், மருமகள் விதவையாக வேண்டும்'' என்ற கதையில் நமக்கில்லாத பள்ளி வேறு யாருக்கும் இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில்  லுஹர் நேரத்தில் பள்ளிவாசலுக்குள் நுழைந்த தென்காசியைத் சேர்ந்த ஐந்து த.மு.மு.க குண்டர்கள் அங்கு தொழுகைக்காக வந்திருந்த உள்ளூர் சகோதரர்கள் மீது தேங்காய் கீறும் கம்பியால் அடித்து இரத்தக் களறியை உருவாக்கினர். இதனால் சேகனா அவர்களின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அந்த இரத்தத் துளிகள் இன்று வரை பூட்டப்பட்ட பள்ளிவாசல் பாய்களில் ஆறாத வடுக்களாக சாட்சியளித்துக் கொண்டிருக்கிறது. இன்னும் பல சகோதரர்கள் காயமடைந்தனர்.
காவல் துறையினர் வந்த உடன் ரவுடிக் கும்பலைச் சேர்ந்த அவர்கள், தாங்கள் தாக்கப்பட்டது போல் பாய்களில் படுத்துக் கொண்டும் தங்களின் சட்டைகளைக் கிழித்துக் கொண்டும் போலியாகக் கத்தினர்.
உள்ளூர்    காவல் துறையினர் த.மு.மு.க புரோக்கர்கள் மூலம்  கவனிக்கப்பட்டிருந்ததால் அவர்கள் பள்ளிக்கு தொழுகைக்காக வந்தவர்கள். வெளியில் நின்ற உள்ளூர் மக்கள் உட்பட 28 பேரைக் கைது செய்தனர். பள்ளிவாசல் பூட்டப்பட்டது. இந்த இயக்க வெறியர்களின் முகங்களில் சந்தோஷம் பொங்கியது.
மேலும் காவல் துறையினர் ஜாக் மற்றும் த.மு.மு.க அயோக்கியர்களின் கவனிப்பால், பள்ளிவாசல் நிர்வாகத்தினர் மீதும், ஜமாஅத்தினர் மீதும் 7 பொய் வழக்குகளைப் பதிவு செய்தனர்.
ஜமாஅத் நிர்வாகிகளின் ஒட்டு மொத்த முடிவில் அகற்றப்பட்ட முபாரக் பள்ளிவாசல், மர்யம் பள்ளிவாசல் கல்வெட்டுகளை தவ்ஹீத் ஜமாத்தினர் அகற்றியதாக கதை கட்டி சில வழக்குகளும், கடப்பாரையால் தவ்ஹீத் ஜமாஅத்தினர் தாக்கினார்கள் என்று ஒரு பொய் வழக்கும், அவதூறு நோட்டீஸ் விநியோகம் செய்தார்கள் என்று ஒரு புகாரும், அப்துல்லாவை அடித்தார்கள், பள்ளிவாசல் பொருட்களைத் திருடினார்கள், மர்யம் பள்ளிவாசலில் வேலை செய்ய விடாமல் தடுத்தார்கள் போன்ற நடக்காத விஷயங்களைப் பொய்யாகப் புனைந்து காவல் துறையைக் கவனித்து மொத்தம் 7க்கும் மேற்பட்ட பொய் வழக்குகளைப் போட்டுள்ளார்கள்.
அல்லாஹ்வின் மீது சிறிதளவு கூட அச்சம் இல்லாமல் பொய்களையே மூல தனமாகக் கொண்டுள்ள இவர்களுக்கு மறுமையில் அல்லாஹ் இது பற்றி விசாரிப்பானே என்ற பயம் கொஞ்சம் கூட இல்லையா?
"பூமியில் குழப்பம் செய்யாதீர்கள்!'' என்று அவர்களிடம் கூறப்படும் போது "நாங்கள் சீர்திருத்தம் செய்வோரே'' எனக் கூறுகின்றனர். கவனத்தில் கொள்க! அவர்களே குழப்பம் செய்பவர்கள்; எனினும் உணர மாட்டார்கள்  (அல்குர்ஆன் 2:11,12)
அல்லாஹ்வின் பள்ளிவாசல்களில் அவனது பெயர் கூறப்படுவதைத் தடுத்து, அவற்றைப் பாழாக்க முயல்பவனை விட பெரும் அநீதி இழைத்தவன் யார்? பயந்து கொண்டே தவிர அவற்றில் நுழையும் உரிமை அவர்களுக்கு இல்லை. அவர்களுக்கு இவ்வுலகில் இழிவும், மறுமையில் கடுமையான வேதனையும் உண்டு.  (அல்குர்ஆன் 2:114)

சறுகலை ஒப்புக் கொள்ளும் ஜாக்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக குமரி மாவட்டக் கொள்கைச் சகோதரர்கள் கடந்த ஹஜ் பெருநாளன்று கோட்டாற்றில் முதல் முறையாக நபிவழிப் படி பெருநாள் தொழுகையை திடலில் தொழுதனர்.
கோட்டாற்றில் ஏகத்துவக் கொள்கை தோன்றிய நாள் முதற்கொண்டு இது வரை ஏகத்துவக் கொள்கையாளர்கள் பெருநாள் தொழுகையை திடலில் தொழுததில்லை. பள்ளிகளிலேயே தொழுது கொண்டிருக்கின்றனர். எனவே பெருநாள் தொழுகையைத் திடலில் தொழும் இந்த நபிவழியை அமல்படுத்தும் விதமாக துண்டுப் பிரசுரங்கள், சுவரொட்டிகள் வாயிலாக தவ்ஹீத் ஜமாஅத்தினர் விளம்பரம் செய்தனர்.
அவ்வளவு தான்! கொள்கைச் சகோதரர்களின் இந்தச் செயல் ஜாக் வர்க்கத்தினரிடம் கோபத்தை ஏற்படுத்தியது! கொந்தளிப்பை உருவாக்கியது. அந்த ஆத்திரத்தில் ஜாக் அமீர் சில கேள்விக் கணைகளைத் தொடுத்தார்.
1. நாகர்கோவிலில் குராபிகள் திடலில் தொழுகை நடத்துகிறார்களே! அங்கு போய் இவர்கள் (தவ்ஹீதுவாதிகள்) தொழ வேண்டியது தானே?
2. பள்ளிவாசலில் பெருநாள் தொழுகையைத் தொழுவதற்குத் தடை இருக்கிறதா?
3. நபி (ஸல்) அவர்கள் காலத்தில் பள்ளிகள் சிறியதாக இருந்தன. அதனால் திடலில் தொழுதார்கள்.
4. திடலில் கண்டிப்பாகத் தொழுது தான் ஆக வேண்டுமா?
குர்ஆன் ஹதீஸ் பெயரில் இயக்கம் நடத்தும் இவர் குராபிகளின் பாணியில் குர்ஆன் ஹதீசுக்கு எதிராகக் கிளம்பியிருக்கிறார் என்பதை மேலே கண்ட கேள்விகளைப் படித்தவுடன் விளங்கிக் கொள்ளலாம்.
மார்க்கமா? மனோ இச்சையா?
இவர் முன்னுரிமையும் முதலிடமும் கொடுப்பது மார்க்கத்திற்கா? மனோ இச்சைக்கா? என்றால் மனோ இச்சைக்குத் தான் என்பதை மேற்கண்ட வினாக்களிலிருந்து, விஷம் தோய்ந்த அம்புகளிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.
இவர் எந்தெந்த வகையில் என்னென்ன ஹதீஸ்களை மறுக்கின்றார்; இவரும் இவரைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றும் ஆதரவாளர்களும் எந்த அளவுக்கு குர்ஆன், ஹதீஸ் என்ற வளையத்தை விட்டு வெளியே போய் விட்டார்கள் என்று விவரித்தும், விமர்சித்தும் ஏகத்துவம் பிப்ரவரி 2006 இதழில் எழுதியிருந்தோம். ஜாக் செல்லும் சறுகல் பாதை என்ற அந்த விமர்சனத்தில் மூன்று முக்கியக் குற்றச்சாட்டுகளைக் குறிப்பிட்டு இருந்தோம்.
1. பெருநாள் தொழுகையை நபிவழிப்படி திடலில் தொழாமல் பள்ளிவாசலில் தொழுதல்
2. தொழ வருபவர்களை, பள்ளியில் தொழ விடாமல் தடுத்தல்
3. திருமணத்தின் போது பெண் வீட்டு சார்பில் நடைபெறும் விருந்தில் கலந்து கொள்ளுதல்
ஆகிய மூன்று குற்றச்சாட்டுகளைக் குறிப்பிட்டிருந்தோம்.
இதற்குத் தாங்கள் பதில் எழுதினால் சரிப்பட்டு வராது; சமாளித்து எழுத வேண்டி வரும் என்று கருதி, பதில் எழுதும் பொறுப்பை அஷ்ரப் பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.
ஜாக் எனும் சங்கத்தின் அங்கத்தினராகிய அவர்கள் ஜாக்கின் சறுகலைக் கடுகளவும் குற்ற உணர்வின்றி, குறுகுறுக்கும் உறுத்தல் இன்றி தெளிவாக ஒப்புக் கொண்டுள்ளனர்.
அவற்றை இப்போது ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
நமது விமர்சனத்திற்கு மார்ச் 2006 அல்ஜன்னத்தில் பதில் தந்துள்ளார்கள். இந்தப் பதிலை அவர்கள் நமக்காகத் தந்தாலும் அது அவர்கள் தங்களுக்கே அளித்த பதிலாகி விட்டது.
மார்க்கத்தின் பெயரால் மற்றவர்களைத் தாக்த தற்போது இவர்கள் கையில் எடுத்திருக்கும் ஆயுதம் திடல் தொழுகை. பெருநாள் தொழுகைக்கு இவர்களால் சூட்டப்பட்ட புதிய பெயர். பெருநாள் தொழுகையை மைதானத்தில் தொழுவது மார்க்த்திற்கு விரோதமல்ல. அது சுன்னத் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே...
அல்ஜன்னத், பக்கம் 17, 18
இப்போது சுன்னத் என்கிறார்களா? இதைத் தான் நாம் முதலில் சொன்னோம். நாம் சுன்னத் என்று சொன்ன போது, அவர்கள் "தடையிருக்கின்றதா?'' என்று கேட்டார்கள். அவர்களின் இந்தக் கேள்விக்கு அவர்களே அல்ஜன்னத் நவம்பர் 2002 இதழில் எழுதியதை மேற்கோள் காட்டியதும் இப்போது சுன்னத் என்று சொல்ல முன் வந்திருக்கின்றார்கள்.
அத்துடன், "திடல் கைவசமில்லை'' என்றொரு சப்பைக் கட்டையும் கட்டுகின்றார்கள்.
நாம் திடலில் தொழ ஆரம்பித்த போது, இந்தப் பதிலை அவர்கள் சொல்லியிருந்தால் கூட சரி எனலாம். ஆனால் நாம் திடலில் தொழுவதைக் கேள்விப்பட்டவுடன் தாறுமாறாகக் கேள்விகளை அல்லவா நம்மீது வீசியெறிந்தார்கள்?
சறுகியதற்கு ஜாக் சொல்கின்ற சாக்கு
நாம் பெருநாள் தொழுகையை திடலில் தொழாததற்குக் காரணம் கைவசம் மைதானம் இல்லாததேயாகும். திடலில் தொழுவதை ஃபர்ளு போல சித்தரிப்பவர்கள் கூட தங்களுக்கென நிரந்தரமாக இதுவரை ஒரு மைதானத்தைப் பெற்றிருக்கவில்லை. அதற்காக முயற்சிக்கவுமில்லை. ஆண்டு தோறும் அங்குமிங்குமாக திடலை மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள்.
அல்ஜன்னத், பக்கம் 18
திடல் கைவசம் இல்லாததால் தொழவில்லையாம்! கோட்டாற்றில் செல்வச் சீமான்களைக் கொண்ட ஜமாஅத் அஷ்ரப் பள்ளி ஜமாஅத்! ஒரு சுன்னத்தை நிறைவேற்றுவதற்கு இத்தகைய செலவைச் செய்தால் என்ன? எத்தனையோ பெண் வீட்டு விருந்துகளை ரத்துச் செய்து விட்டு அந்தப் பணத்தை இதற்காக மடை திருப்பி விடலாம் அல்லவா?
குர்ஆன், ஹதீஸ் இயக்கம் என்ற பெயர் வைத்தால் மட்டும் போதுமா? அந்த ஹதீஸைச் செயல்படுத்த வேண்டுமே! அதை யார் செய்வது? குராபிகள் கூட இந்த சுன்னத்தைப் பேணுகின்ற போது, குர்ஆன், ஹதீஸைப் போதிப்பவர்கள் சோடையாகி விடலாமா? மனமிருந்தால் இடமுண்டு! இந்த சுன்னத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணமிருந்தால் இடம் ஒரு பிரச்சனையே இல்லை. ஆனால் அது போன்ற எண்ணம் இவர்களிடம் கடுகளவு கூட கிடையாது.
நபிவழியை அமல்படுத்தத் தான் இல்லை! அதைச் செயல்படுத்துவோரை விமர்சிக்காமலாவது விடலாம்! விமர்சனம் செய்தது மட்டுமல்ல! இந்த நபிவழியைச் செயல்படுத்துவோரைக் கேலியும் கிண்டலும் செய்கின்றனர்.
வாடகைக்குத் திடல் பிடிப்பது என்ன தவறா? மார்க்க அடிப்படையில் குற்றமா? குறையா? இவர்களைப் போன்ற பணக்கார வர்க்கமாக இருந்தால் இந்தப் பொடியன்மார்கள் ஒரு திடலைச் சொந்தமாக வாங்கி இருப்பார்கள். வசதியில்லை! அதனால் இப்போதைக்கு வாடகைக்குப் பிடித்திருக்கிறார்கள். ஒரு சுன்னத்தை நிறைவேற்றுவதற்காக திடலை வாங்கியதும் அதை பெருநாள் தொழுகைக்கும், சமுதாய நலக் காரியங்களுக்கும், விளையாட்டுப் பயிற்சிகளுக்கும் பயன்படுத்துவார்கள், இன்ஷா அல்லாஹ்! நிரந்தரமாக இல்லாததால் அங்கும் இங்கும் அலைகின்றார்கள். அவ்வாறு அலைவதற்கும் இவர்களிடத்திலிருந்து கேலி, கிண்டல் வந்தாலும் அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக இதற்குக் கூலி உண்டு!
இவர்கள் செய்யும் கேலிக்கு அல்லாஹ் தண்டனை அளிக்காமல் இருக்கப் போவதில்லை. நபிவழியைக் கேலியும் கிண்டலும் செய்வது யூத, கிறித்தவர்களின் வேலை! அதை இவர்கள் இப்போது கையில் எடுத்திருக்கிறார்கள். இப்படி நபிவழியைக் கிண்டல் செய்பவர்கள் தான் குர்ஆன், ஹதீஸைப் பின்பற்றுகிறார்களாம்! இவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று உண்மையான ஏகத்துவவாதிகள் விளங்கிக் கொண்டு விட்டார்கள்.
திடல் தொழுகை
அடுத்து, வடிகட்டிய முட்டாள் தனமான வாதம் ஒன்றை எடுத்து வைக்கின்றார்கள். "பெருநாள் தொழுகைக்கு இவர்களால் சூட்டப்பட்ட பெயர் திடல் தொழுகை'' என்ற சொத்தை வாதத்தை வைக்கின்றார்கள். அதாவது பெருநாள் தொழுகைக்கு மாற்றம் செய்து திடல் தொழுகை என்ற ஒன்றை நாம் கண்டுபிடித்திருப்பது போல் இந்த வாதத்தை எழுப்புகின்றார்கள்.
நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் என்று இவர்களும் நாமும் சொல்கின்றோமே இவையெல்லாம் ஹதீஸில் உள்ளவையா? நோன்புக்குப் பிறகு வருவதால் நோன்புப் பெருநாள் என்றும், ஹஜ்ஜை மையமாக வைத்து வருவதால் ஹஜ்ஜுப் பெருநாள் என்றும் கூறுகின்றோம்.
இது போன்று தான் பெருநாள் தொழுகை என்றால் அதற்கு உயிர் நாடியாக அமைவது திடல் தொழுகை தான். அந்தத் தொழுகையைத் திடலில் தான் தொழ வேண்டும். அப்படித் தான் நபி (ஸல்) அவர்கள் தொழுது இருக்கின்றார்கள் என்பதை உணர்த்தும் வண்ணம் திடல் தொழுகை என்ற வார்த்தையைக் குறிப்பிட்டு உள்ளனர். இதில் என்ன குறைபாடு வந்து விட்டது?
பொடியன்மார் இந்தத் தொழுகையை அறிமுகப்படுத்துவதா? அதை நாம் ஏற்பதா? என்ற அகந்தையும் ஆணவமும் தவிர வேறு ஏதாவது இதில் பொருள் இருக்கிறதா? இந்தத் தொழுகையைத் திடலில் தொழுவது சுன்னத் என்றாலும் அதை தவ்ஹீத் ஜமாஅத்தினர் செய்து காட்டியதால் எங்களால் ஒத்துக் கொள்ள முடியவில்லை என்று தாங்கள் சறுகியதை ஒப்புக் கொள்கின்றனர்.
பெண் வீட்டு விருந்து
இவர்களுக்கு எதிராக நாம் எடுத்து வைத்த அடுத்தக் குற்றச்சாட்டு பெண் வீட்டு விருந்து! தங்களைக் குர்ஆன், ஹதீஸ் படி நடப்பவர்கள் என்று பீற்றியும், பிதற்றியும் கொள்கின்ற இவர்கள் பெண் வீட்டு விருந்து எனில் கொள்கையைக் காற்றில் பறக்க விட்டு விடுகின்றனர். அதனால் தான் இதை விமர்சித்து, "சத்தியப் பேச்சு சாப்பாடு என்றால் போச்சு'' என்ற பிரசுரத்தை குமரி மாவட்ட தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்கள் வெளியிட்டனர்.
பெண் வீட்டு விருந்தைச் சாப்பிடுவதில் பேயாக நிற்கும் இவர்கள் அந்த விருந்து கூடும் என்று கூவிக் கொண்டிருக்கின்றார்கள். அந்த நிலைபாட்டிலிருந்து இன்னும் மாறவில்லை. எனவே அதையும் பிப்ரவரி 2006 இதழில் விமர்சித்து எழுதியிருந்தோம். அதற்கு இவர்கள் தரும் பதிலைப் பாருங்கள்.
திருமணத்தில் பெண் வீட்டார் மீது மாப்பிள்ளை வீட்டார் நிர்ப்பந்தமாக எந்தச் செலவினங்களையும் சுமத்தக் கூடாது என்பது தான் நமது தவ்ஹீது பிரச்சாரத்தில் மையக் கரு. எனினும் பெண் வீட்டார் வசதி வாய்ப்புள்ளவர்களாக இருந்து எந்த நிர்பந்தமுமில்லை அவர்களாகவே முன் வந்து எனது பிள்ளை திருமணத்தன்று நடைபெறும் விருந்துபசாரப் பொறுப்பை நானே ஏற்றுக் கொள்கிறேன் என்று கூறி அவர்களாக முன் வந்து விருந்தளித்தால் அந்த விருந்து உபசாரத்தைத் தடுப்பதற்கு என்ன ஆதாரமிருக்கின்றது? த.த.ஜ.வினரின் பாணியில் கேட்பதானால் "இதற்குத் தடை இருக்கின்றதா?'' (ஏனெனில் விருந்தளிப்பு என்பது உலக விஷயம் தானே?)
அல்ஜன்னத், பக்கம் 19
இதில் இரண்டு விஷயங்களை எடுத்து வைக்கின்றார்கள். பெண் வீட்டாரிடம் நிர்ப்பந்திக்கக் கூடாதாம். அது தான் தவ்ஹீது பிரச்சாரத்தின் மையக் கருவாம். எனினும் பெண் வீட்டார் தாமாகக் கொடுத்தால் தப்பில்லையாம்.
வரதட்சணை கூடாது என்று சொன்னதும் குராபிகள் வரதட்சணையை நியாயப்படுத்த எடுத்து வைத்த அதே வாதத்தை இவர்கள் கொஞ்சம் கூட உறுத்தலின்றி அப்படியே எடுத்து வைக்கின்றார்கள். எப்படி ஒரு கேடு கெட்ட கீழ் வழிக்குப் போயிருக்கின்றார்கள் என்று பாருங்கள். தவறான வழிக்குச் சென்றது மட்டுமின்றி அதை நியாயப்படுத்தவும் கிளம்பியிருக்கின்றார்கள்.
அஸ்த் எனும் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதரை (ஜகாத்) வசூலிப்பவராக நபி (ஸல்) அவர்கள் நியமித்தார்கள். அவர் இப்னுல் லுத்பிய்யா என்று அழைக்கப்பட்டு வந்தார். அவர் ஜகாத் வசூலித்துக் கொண்டு வந்த போது, "இது உங்களுக்குரியது. இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது'' என்று கூறினார்.
நபி (ஸல்) அவர்கள், "இவர் தன் தந்தையின் வீட்டில் அல்லது தாயின் வீட்டில் உட்கார்ந்து கொண்டு, தமக்கு அன்பளிப்பு கிடைக்கிறதா? இல்லையா? என்று பார்க்கட்டும். என் உயிரைத் தன் கைவசம் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! உங்களில் யாரேனும் அந்த ஜகாத் பொருளிலிருந்து முறைகேடாக எதனைப் பெற்றாலும் அதை அவர் மறுமை நாளில் தனது பிடரியில் சுமந்து கொண்டு வருவார். அது ஒட்டகமாக இருந்தால் கனைத்துக் கொண்டிருக்கும். பசுவாகவோ, ஆடாகவோ இருந்தால் கத்திக் கொண்டிருக்கும்'' என்று கூறினார்கள்.
பிறகு அவர்களுடைய அக்குள் வெண்மையை நாங்கள் பார்க்கும் அளவுக்குத் தமது கைகளை உயர்த்தி, "இறைவா! நான் எடுத்துரைத்து விட்டேன் அல்லவா? நான் எடுத்துரைத்து விட்டேன் அல்லவா?'' என்று மூன்று முறை கேட்டார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுமைத் அஸ்ஸாயிதி(ரலி)
நூல்: புகாரி 2597, 6636
வசூல் செய்த இந்தத் தோழர், "மக்கள் தாமாகத் தந்தார்கள்'' என்ற சூப்பர் பாயிண்டைத் தான் முன் வைக்கின்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதற்கு மேலான சூப்பர் பாயிண்டைத் தூக்கிப் போடுகின்றார்கள். இவர் வீட்டில் இருந்தால் இது கிடைக்குமா? என்று கேட்கின்றார்கள்.
இது போல் தான் இவர்களிடம் நாம் கேட்பது, "இவர்கள் திருமணம் முடித்ததால் தான் அந்த விருந்தைப் பெண் வீட்டார் வைக்கின்றார்களா? அல்லது வேறு காரணத்திற்காகவா? தன் மகளைக் கட்டிக் கொடுத்திருப்பதால் மாப்பிள்ளை மற்றும் மாப்பிள்ளை வீட்டார் தன் மகளை ஒழுங்காக வைத்துக் காப்பாற்ற வேண்டும் என்ற காரணத்திற்காகத் தான் பெண் வீட்டுக்காரர்கள் இந்த விருந்து, சீதனம், நகை, தொகை எல்லாவற்றையும் கொடுக்கின்றார்கள். எனவே தானாக முன்வந்து கொடுக்கின்றார்கள் என்று இவர்கள் கூறும் காரணம் போலியானது என்பதைத் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம். உண்மையில் பெண் வீட்டுக்காரர்கள் கொடுப்பது ஒரு மறைமுக நிர்ப்பந்தமே! அதை இவர்களும் ஒப்புக் கொள்கின்றார்கள்.
ஒன்றிரண்டு இடங்களில் திருமணச் செலவுகள் நிர்பந்தமாக பெண் வீட்டார் மீது சுமத்தப்படுகிறது என்பது உண்மையே. எனினும் வரதட்சணை பெறாமல் மஹர் கொடுத்து மணம் செய்யும் அளவிற்குப் பக்குவம் பெற்றவர்கள் விரைவிலேயே இதர விஷயங்களிலும் முழுமையான மாற்றத்தைப் பெறுவார்கள் என்ற நம்பிக்கை நமக்குண்டு.
அல்ஜன்னத், பக்கம் 19
நிர்ப்பந்தப்படுத்தி திருமணச் செலவுகளைப் பெண் வீட்டார் மீது திணிப்பது உண்மை தானாம். ஆனால் மஹர் கொடுத்து திருமணம் செய்வதால் அவர்கள் திருந்தி விடுவார்கள் என்று இவர்களுக்கு நம்பிக்கை உள்ளதாம். 
உண்மையில் மஹர் என்ற பெயரில் இது போன்ற மறைமுக வரதட்சணைகள் தான் பல இடங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தொகையாகக் கொடுத்தால் தான் தப்பு, இது போன்று வேறு பெயரில் வாங்கினால் தப்பில்லை என்று சொல்ல வருகின்றார்கள்.
மஹர் என்று சொல்லி, பெயருக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து விட்டு, சீதனம், நகை, வீடு, விருந்து என்ற பெயர்களில் பெண் வீட்டிலிருந்து இலட்சக்கணக்கில் வசூல் செய்பவர்கள் இனி ஜாக் தலைமையை அணுகலாம். 
அடுத்து, பெண் வீட்டார் விருந்தளிக்கத் தடையுள்ளதா? என்று கேட்பதுடன், த.த.ஜ. பாணியில் விருந்து என்பது உலக விஷயம் தானே? என்றும் கிண்டலுடன் கேட்கின்றார்கள்.
யூத, கிறித்தவர்களின் பாதையிலும் பாணியிலும் சென்று விட்டவர்களுக்கு குர்ஆன், ஹதீஸைச் சொல்லும் போது கிண்டல் அடிப்பது என்பது சகஜமான, சர்வ சாதாரணமான ஒன்றாகி விடும்.
ஏற்கனவே, பெருநாள் தொழுகையைப் பள்ளிவாசலில் தொழுவதற்குத் தடை இருக்கின்றதா? என்று இவர்கள் கேட்ட கேள்விக்குத் தான் பிப்ரவரி இதழில் இதை விளக்கி இருந்தோம். இபாதத் விஷயத்தில் தடையிருக்கின்றதா? என்று கேட்கக் கூடாது. உலக விஷயத்தில் தான் தடையிருக்கின்றதா? என்று கேட்க வேண்டும் என்று ஆதாரத்துடன் விளக்கியிருந்தோம். அதற்குப் பதில் சொல்லாத இவர்கள், விருந்து வைப்பது உலக விஷயம் தானே என்று போகின்ற போக்கில் உளறிக் கொட்டி இருக்கின்றார்கள்.
இங்கேயும் தங்களது கூமுட்டைத் தனத்தையும், குருட்டுச் சிந்தனை யையும் வெளிப்படுத்துகின்றனர். இந்த இலட்சணத்தில் நம்மைப் பார்த்து கிண்டல் வேறு செய்து கொள்கிறார்கள்.
வழக்கமும் வணக்கமும்
வழக்கத்திற்கும் வணக்கத்திற்கும் வித்தியாசம் தெரியாததால் அல்லது தெரிந்து கொண்டே மறைப்பதால் இவர்களிடம் இந்தக் கருத்துக் குழப்பம்! சாதாரண அடிப்படையைக் கூட விளங்காமல் இருட்டில் தடுமாறிக் கொண்டிருக்கின்றார்கள் அல்லது திட்டமிட்டு மறைக்கின்றார்கள்.
நபி (ஸல்) அவர்கள் பேரீச்சம்பழம், கோதுமை ரொட்டி போன்றவற்றைச் சாப்பிட்டார்கள். இது அரபு நாட்டு வழக்கம். அதாவது உலக விஷயம். இதை அடிப்படையாகக் கொண்டு தமிழக முஸ்லிம்கள் சோறு சாப்பிடக் கூடாது; அது பித்அத்; காரணம் நபி (ஸல்) அவர்கள் சோறு சாப்பிடவில்லை; பேரீச்சம்பழம் சாப்பிடுவது தான் சுன்னத் என்று கூறக் கூடாது.
காரணம் இவை வழக்கங்கள் ஆகும். எனவே வழக்கங்கள் வணக்கங்கள் ஆகாது. ஆனால் அதில் நபி (ஸல்) அவர்களின் உத்தரவு வந்து விட்டால் அது வணக்கமாகி விடும். பேரீச்சம்பழத்தைச் சாப்பிட்டு நோன்பு துறக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்களின் கட்டளை வந்து விட்டதால், அதைக் கொண்டு நோன்பு துறப்பது நபிவழியாகி விடுகின்றது.
இதே அளவுகோல் கொண்டு திருமண விருந்தை நாம் பார்க்க வேண்டும். பொதுவாக விருந்துகள் கொடுப்பது உலக வழக்கங்களில் உள்ளது தான். அதிலே நபி (ஸல்) அவர்களின் உத்தரவு வந்து விடும் போது அந்த வழக்கம் வணக்கமாகி விடும்.
திருமணம் முடித்த அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களை நோக்கி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், விருந்து கொடுக்குமாறு கட்டளை இட்டதால் அந்த விருந்து சுன்னத் ஆகி விடுகின்றது. அதாவது வணக்கமாகி விடுகின்றது.
நபி (ஸல்) அவர்கள் மணமகனைப் பார்த்து விருந்து வை என்று சொல்லும் போது, அந்த விருந்தை மாப்பிள்ளை  தான் வைக்க வேண்டும்.
அதாவது ஒருவர் திருமணம் முடித்தார் எனில் அவர் விருந்து வைப்பது நபிவழி. அது ஒரு வணக்கம். எனவே இது உலக விஷயங்களில் ஒன்றாக ஆகாது. திருமண விருந்து தொடர்பாக இப்படி ஒரு வழி காட்டுதல் வந்த பிறகு, பெண் வீட்டார் விருந்து வைப்பதற்குத் தடை இருக்கின்றதா? என்று கேட்பதற்குக் காரணம், திருமண விருந்து என்பது இபாதத் இல்லை, உலக விஷயம் என்று இந்த மாமேதைகள் புரிந்ததால் தான்.
தங்களுக்குப் பிடிக்காதவர்களைச் சாடுவதற்கு இவர்கள் ஆயுதமாக எடுத்துக் கொண்டிருப்பது பெண் வீட்டு விருந்து
என்றும் எழுதியுள்ளனர்.
அதாவது இவர்களிடம் இல்லாத ஒன்றை, இவர்களைச் சாடுவதற்காக நாம் பயன்படுத்துகின்றோம் என்ற கருத்தில் எழுதியுள்ளனர். இந்தச் சறுகல் அவர்களிடம் இருப்பதால் தான் நாம் சாடுகின்றோம். பெண் வீட்டு விருந்தை ஆதரித்து இவர்கள் சப்பைக்கட்டு கட்டுவதன் மூலம் நமது குற்றச்சாட்டை அவர்கள் ஒப்புக் கொண்டு, நாம் சொன்னது சரி தான் என்று நிரூபித்துள்ளனர்.
இப்போது அவர்கள் மறுக்கின்ற மூன்றாவது விஷயத்திற்கு வருவோம்.
இவர்களின் மூன்றாவது குற்றச்சாட்டு த.த.ஜ.வைச் சேர்ந்த ஒருவரை அஷ்ரஃப் பள்ளிச் செயலாளர் இங்கு நீ தொழ வரக்கூடாது என்று தடுத்தனர் என்பதாகும். இந்தக் கூற்றில் சிறிதளவும் உண்மையில்லை.
அல்ஜன்னத், பக்கம் 20, முதல் பாரா
இந்தப் பாராவில் மறுத்ததை அடுத்த பாராவில் உடனே ஒத்துக் கொள்கின்றார்கள் பாருங்கள்.
இனி மேற் கொண்டு இரண்டாவது ஜமாஅத் நடத்தக்கூடாது என்று கண்டித்தாரே தவிர இவர்கள் திரித்துக் கூறுவது போல தொழக் கூடாது என்று தடுக்கவில்லை.
அல்ஜன்னத், பக்கம் 20, 2வது பாரா
தொழுவதைத் தடை  செய்யும் அநியாயம்
இன்று சுன்னத் வல் ஜமாஅத் எனப்படுவோர் பள்ளிவாசல்களில் தவ்ஹீதுவாதிகள் தொழுவதற்கு விதிக்கும் தடைகள் இரண்டு விதமாக அமைந்துள்ளன.
1. தனியாகவோ, அல்லது அவர்களது ஜமாஅத்தில் சேர்ந்தோ தொழக் கூடாது.
2. இரண்டாவது ஜமாஅத் நடத்தக் கூடாது.
இதில் அதிகமான பள்ளிகளில் முதல் வகையான தடை இப்போது மிக அரிதாகி விட்டது. ஏகத்துவப் பிரச்சாரம் வளர்ச்சி கண்டுள்ள மேலப்பாளையம் போன்ற ஊர்களில் கூட இப்போது இரண்டாவது ஜமாஅத் நடத்துவதற்குத் தான் தடை விதிக்கப் படுகின்றது. (அதற்கும் நமது ஜமாஅத்தினர் கட்டுப்படுவது கிடையாது என்பது வேறு விஷயம்)
குராபிகள் செய்யும் அதே வேலையைத் தான் தாங்கள் செய்ததாக அஷ்ரஃப் பள்ளி நிர்வாகம் பக்காவாக, ஆவணப்பூர்வமாக, ஆணித்தரமாக, அழுத்தம் திருத்தமாக ஒப்புக் கொள்கின்றது. இது அக்கிரமம், அநியாயம் இல்லாமல் வேறு என்ன வகை?
சு.ஜ.காரர்கள் தங்கள் நிலைபாட்டில் தெளிவாக இருந்து கொண்டு தடுக்கின்றார்கள். இந்த வகையில் அவர்களை நாம் பாராட்டலாம். ஜாக் இயக்க வர்க்கமோ, குர்ஆன், ஹதீஸ் வழி நடக்கிறோம் என்ற போர்வையில் இந்த அக்கிரமத்தைப் பள்ளியில் அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றனர். அது நடப்பு; இது நடிப்பு; அதாவது நயவஞ்சகத்தனம்.
அது மட்டுமின்றி இவர்கள் என்ன பேசினார்கள் என்பதற்கு நம்மிடம் ஒலிநாடாவும் இருக்கின்றது. இதற்கு மேலும் இவர்கள் பொய் பேசினால் நாம் அந்த ஒலிநாடாவை வெளியிட வேண்டிய அவசியம் வரும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு நாம் குறிப்பிட்டதும், இவர்கள் டேப்ரிக்கார்டர் கொண்டு வந்த மர்மம் என்ன? சண்டைக்கு இழுக்க வேண்டும் என்று திட்டமிட்டே வந்திருக்கின்றார்கள் என்று கூறி திசை திருப்பும் வேலையிலும் ஈடுபடுவார்கள் என்பதால் இது குறித்த விளக்கத்தையும் நாம் அளிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
அன்று அரவிந்த கண் மருத்துவ முகாம் நடைபெற்றதால் அந்த நிகழ்ச்சிக்காக நமது சகோதரர்களால் டேப்ரிக்கார்டர் கொண்டு செல்லப் பட்டது. தொழுது முடித்தவுடன் இந்த வாய்த் தகராறு ஏற்பட்டதால் அப்போது இவர்கள் பேசிய பேச்சு பதிவு செய்யப் பட்டுள்ளது. அதை ஆதாரமாகக் கொண்டு தான், அவர்கள் இந்த அக்கிரமப் போக்கை, பள்ளியில் தொழுவதைத் தடுக்கும் விதமாக உதிர்த்த ஆணவ வார்த்தைகளைப் பயன்படுத்தினார்கள் என்று அடித்துச் சொல்கிறோம்.
எனவே இவர்கள் தங்கள் பதிலில் பச்சைப் பொய் சொல்கின்றார்கள் என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகிறோம்.
மேற்குறிப்பிட்ட பொய்கள் அல்லாமல் வேறு சில பொய்களையும் அல்ஜன்னத்தில் அவிழ்த்து விட்டிருக்கின்றார்கள். அள்ளித் தெளித்திருக்கின்றார்கள்.
ஷிர்க்கும், பித்அத்தும், கொடி ஊர்வலமும், யானை ஊர்வலமும், சமாதி வழிபாடும் இன்னமும் நடந்து வருகின்றது. இவை எதுவும் த.த.ஜ.வினரின் கண்களுக்குத் தென்படவில்லை. இவற்றைக் கண்டித்து எந்த வகையான தடுப்புப் பிரச்சாரத்தையும் சமீப காலமாக தவ்ஹீது ஜமாஅத்தினர் மேற் கொள்ளவில்லை.
அல்ஜன்னத், பக்கம் 21
நாம் என்னவோ இவர்களின் குறைகளை ஆராயும் ஒரேயொரு தொழிலை மட்டும் செய்வதாகவும், ஷிர்க், பித்அத், கொடி ஊர்வலம், சமாதி வழிபாடு போன்றவற்றை நாம் கண்டு கொள்ளாது சும்மா இருப்பதும் போல் சித்தரித்திருக்கின்றார்கள்.
நீங்கள் உங்கள் பாட்டுக்கு, குராபிகளின் குறைகளை மட்டும் பார்த்து விட்டுச் சொல்லுங்கள், எங்கள் பக்கம் ஏன் உங்கள் பார்வையைத் திருப்புகின்றீர்கள்? எங்கள் தப்புகளை, தகிடு தத்தங்களைக் கண்டு கொள்ளாதீர்கள் என்பதைத் தான் இந்தச் செய்தியின் மூலம் இவர்கள் நம்மிடமிருந்து எதிர்பார்க்கின்றார்கள்.
குராபிகளிடம் உள்ள ஷிர்க், பித்அத்களைக் கடுமையாக விமர்சிப்போம். அவற்றை விளாசித் தள்ளுவோம். ஆனால் இவர்கள் செய்கின்ற தப்பை இரு மடங்கு விமர்சிப்போம். காரணம், இவர்கள் குர்ஆன், ஹதீஸ் என்ற போர்வையில் அசத்தியத்தை அரங்கேற்றுகின்றனர். குராபிகள் தங்களுக்குரிய தெளிவான நிலைபாட்டில் இருந்து கொண்டு தங்களது பாதையில் செல்கின்றனர். குர்ஆன், ஹதீஸ் படித் தான் நடக்கின்றோம் என்று சொல்லிக் கொண்டு இந்தத் தவறுகளைச் செய்யவில்லை. இது தான் குராபிகளுக்கும் இவர்களுக்கும் உள்ள பெரிய வேறுபாடாகும்.
அடுத்து இவர்களின் குற்றச்சாட்டுக்கு வருவோம்.
சமீப காலமாக தவ்ஹீத் ஜமாஅத்தினர் ஷிர்க், பித்அத்தைக் கண்டித்து எந்தப் பிரச்சாரமும் செய்யவில்லை என்று இவர்கள் கூறுவதும் பச்சைப் பொய்யாகும்.
இவர்கள் தான் பெரும் பெரும் மர்கஸ் கோட்டைகளைக் கட்டிக் கொண்டு, சவூதிச் சம்பளத்திற்குக் கணக்குக் காட்டுவதற்காக சம்பிரதாயத்திற்கு ஏதோ ஒரு சில கூட்டங்கள் போட்டு விட்டு, குறட்டை விட்டுக் கொண்டிருக்கின்றனர்.
அல்லாஹ்வின் மகத்தான அருளைக் கொண்டு, ஜாக் செல்லாத, இதுவரையிலும் போய்ச் சொல்லாத பல இடங்களில் போய் ஏகத்துவப் பிரச்சாரம் செய்து வருகின்றோம். தக்கலை, குளச்சல், புத்தன்துறை, களியக்காவிளை போன்ற ஊர்களில் உள்ளே நுழைந்திருக்கின்றோம். அங்கு சென்று உண்மையை உரைத்திருக் கின்றோம், அல்ஹம்துலில்லாஹ்.
எனவே இந்த விஷயத்திலும் இவர்கள் பொய்யைத் தான் கூறியிருக்கின்றார்கள்.
மணப்பெண் புர்கா இல்லாமல் மண மேடைக்கு அழைத்து வரப்பட்டு வீடியோ சகிதங்களுக்கிடையில் வீற்றிருக்க நமது பள்ளி இமாம் செய்யித் அலி பைஸி குத்பா கொடுத்ததைப் போல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்யப்பட்டுள்ளது. இதுவும் ஒரு பித்தலாட்ட வேலையாகும். அப்படி எந்த தவறும் குத்பா நிகழ்த்தப்படும் போது நடைபெறவே இல்லை.
மணப் பொருத்தம் மார்க்கப் பிடிப்பை அடிப்படையாகக் கொண்டு இருக்க வேண்டும். அந்த வகையில் இந்த மணமகனும் ஒரு தொழுகையாளி என்று கூறியதைத் திரித்துக் கூறியுள்ளனர்.
அல்ஜன்னத், பக்கம் 19
நாம் கூறிய எந்தத் தவறும் குத்பா நிகழ்த்தப்படும் போது நடைபெறவே இல்லை என்று கூறுகின்றனர். நடக்கவேயில்லை என்று மறுக்காமல் குத்பா நடக்கும் போது என்பதையும் சேர்த்துச் சொல்வதிலிருந்து இதையும் அவர்கள் ஒப்புக் கொள்கின்றார்கள் என்பதை அறியலாம்.
மணமகன் தொழுகையாளியாக இருப்பது மட்டும் மார்க்கப் பிடிப்பாகி விடுமா?
தொழுகை வெட்கக்கேடான காரியங்களை விட்டும், தீமையை விட்டும் தடுக்கும். (அல்குர்ஆன் 29:45)
என்று அல்லாஹ் கூறுகின்றான். வரதட்சணையை விட அருவருக்கத் தக்க, வெட்கக்கேடான காரியம் வேறு என்ன இருக்க முடியும்? இந்த மணமகனைப் போய் நமது தவ்ஹீத் ஜமாஅத்தினர் சந்தித்து, பெண் வீட்டு விருந்து வேண்டாம் என்று விளக்கமாகவும் விரிவாகவும் எடுத்துக் கூறிய பின்னரும் பெண் வீட்டு விருந்தைப் போட்டு விளாசுகின்றார் என்றால் இதற்குப் பெயர் மார்க்கப் பற்றா?
இவர்கள் சொல்கின்ற தொழுகையாளி என்ற அளவுகோலை வைத்துப் பார்த்தால் தஹஜ்ஜத் உட்பட அனைத்தும் தொழக் கூடிய தொழுகையாளிகள் தான் ஷிர்க் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே அவர்களையும் மார்க்கப் பற்றுள்ளவர்கள் என்று சொல்வார்களா?
இவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக, நாளுக்கு நாள் அசத்திய சகதியில் சறுகி இறங்கிக் கொண்டிருப்பதால் இவர்களுடைய வார்த்தைகளும் சறுகிக் கொண்டே இருக்கின்றன என்பதற்கு இவை தெளிவான சான்றுகளாகும்.
அடுத்து இவர்கள் எழுப்பும் கேள்வி, சின்னச் சின்ன விஷயங்களுக்காக எல்லாம், நீங்கள் தவ்ஹீதுவாதிகள் இல்லை என்று கூறி வெளியே தள்ளவா முடியும்? என்பதாகும்.
வரதட்சணை போன்ற கொடுமைகளெல்லாம் சமரசம் செய்து கொள்ளக் கூடிய தப்புகள் கிடையாது. பெண் வீட்டு விருந்து போன்றவை ஜீரணிக்கக் கூடிய விஷயமல்ல! இது போன்ற திருமணங்களில் ஒரு ஜமாஅத் கலந்து கொண்டால் இந்தத் தீமையை ஒழிக்கும் பணியிலிருந்து அந்த ஜமாஅத் வெளியே போய் விடும்.
ஜமாஅத் என்பது ஜமாஅத்தாக இருக்க வேண்டும். தீமைகளில் சமரசம் செய்து கொள்ளக் கூடாது. அதனால் தான் இன்று ஜாக் என்ற அமைப்பு பிறர் மனைவியை அபகரித்துச் செல்லும் காமுகர்களின் கூடாரமாகி விட்டது. அதுவும் இத்தகையவர்கள் சாதாரண உறுப்பினர் மட்டத்தில் இல்லாமல் மேல்மட்டப் பிரச்சாரகர் களாக இருக்கின்றனர்.
இது போன்ற கூவத்தில் குளித்துக் கொண்டு எங்களைப் பார்த்து பித்தலாட்டம் என்றால் இன்னும் உங்கள் முகத்திரையைக் கிழிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் என்று எச்சரிக்கை செய்து வைக்கிறோம்.



பள்ளிவாசலை இழுத்து மூட சதி
 ஸபானிய்யாக்களை மறந்த ஜாக் சபையினர்
அன்று ஏகத்துவத்தை மக்களிடம் எடுத்துச் சொன்ன போது எங்கு பார்த்தாலும் அடி, உதை, ஊர் நீக்கம் என்ற கொடுமைகள் நமக்கு எதிராக அணி வகுத்துக் கிளம்பின. அத்துடன் நாம் பள்ளிவாசல்களில் தொழுவதற்கும் தடுக்கப்பட்டோம்; மீறி தொழச் சென்றால் தடியர்களால் தாக்கப் பட்டோம்.
காவல் நிலையம், நீதிமன்றம் என்று வழக்குகளைச் சந்தித்துக் கொண்டிருந்தோம். பாங்கு சொல்லப் பட்டதும் பள்ளியில் போய்த் தொழ வேண்டும் என்று நம் மனம் ஆர்வப் படும். ஆனால் பள்ளியில் போய்த் தொழ முடியாது. அதனால் நமது வீடுகளிலேயே தொழுவோம். என்ன தான் குறித்த நேரத்தில் வீடுகளில் தொழுதாலும் பள்ளியில் தொழுதது போன்ற நிம்மதியிருக்காது. இப்படி ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் அல்லாஹ் நமக்குப் பள்ளிவாசல்களை வழங்கினான்.
அந்தப் பள்ளிகள் நிறுவப்பட்ட பிறகு மாநபி காட்டிய வழிமுறையில் மன நிறைவுடன் தொழுகைகளை நிலை நாட்டினோம். கடைசியில் பள்ளிகள் நிரம்பி வழிந்தன. அந்தப் பள்ளிகள் நமக்குப் போதவில்லை என்றாகி விட்டது. விரிவாக்கத்தில் விரைந்து செயலாற்றிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் குர்ஆன், ஹதீஸை தனக்குப் பெயராக்கிக் கொண்ட ஜாக் என்ற இயக்கம் இன்று பள்ளிவாசல்களை மூடும் மூர்க்கத் தனமான செயலில் இறங்கியிருக்கிறது.
முதல் கட்டமாக மூன்று நாட்கள் மூடுதல்
அதன் தொடக்கமாகவும், முதல் கட்டமாகவும் தென்காசியில் மூன்று நாட்கள் பள்ளிவாசலை மூடி ஒத்திகை பார்த்தார்கள்.
அதன் பின் அந்த ஆலய மூடல் அநியாயத்தை, அக்கிரமத்தை உள்ளத்தில் ஓர் எள்ளளவும் உறுத்தலின்றி கடையநல்லூர் அல்மஸ்ஜிதுல் முபாரக்கில் ஜாக் அரங்கேற்றியது. அதற்காக தமுமுக சங்கத்தைத் துணைக்கு அழைத்துக் கொண்டது. ஏற்கனவே தவ்ஹீதையும், தவ்ஹீது வாதிகளையும் அழிப்பதற்குக் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் தமுமுக இதைத் தக்க தருணமாகக் கருதி ஜாக்குடன் கைகோர்த்துக் களம் இறங்கியது.
முடிவு, அவர்கள் எதிர்பார்த்தபடி அப்பள்ளிவாசல் மூடப்பட்டது. இன்று வரை கடையநல்லூரிலுள்ள  ஏகத்துவவாதிகள் பள்ளியில் போய் தொழ முடியாமல் பரிதவிக்கின்றனர்; அனல் புழுக்களாய் துடிக்கின்றனர். அன்று நாம் பள்ளி இல்லாமல் அலைக்கழிந்த காலத்தையும், இன்று பள்ளி எனும் அருட் கொடை இருந்தும் அலைக்கழிவதையும் எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது.
இத்தனைக்கும் யார் காரணம்? ஜாக்! அன்று சுன்னத் வல்ஜமாஅத்தினர் பள்ளிவாசல்களில் தொழுவதைத் தான் தடுத்தனர். பள்ளிகளை இழுத்து மூடும் துரோகத்திலும் துரைத்தனத்திலும் இறங்கவில்லை.
அல்லாஹ்வின் பள்ளிவாசல்களில் அவனது பெயர் கூறப்படுவதைத் தடுத்து, அவற்றைப் பாழாக்க முயல்பவனை விட பெரும் அநீதி இழைத்தவன் யார்? பயந்து கொண்டே தவிர அவற்றில் நுழையும் உரிமை அவர்களுக்கு இல்லை. அவர்களுக்கு இவ்வுலகில் இழிவும், மறுமையில் கடுமையான வேதனையுமுண்டு. (அல்குர்ஆன் 2:114)
அன்று சு.ஜ.வை எதிர்த்து இந்தத் தீமைக்கு எதிராக, மேற்கண்ட குர்ஆன் வசனத்தை ஆதாரமாகக் கொண்டு பிரச்சாரம் செய்தனர் இந்த ஜாக்கினர். அப்போது நாமும் அவர்களுடன் இருந்தோம். அவர்களை விட அதிகமாக இந்தத் தீமைகளை எதிர்த்து எரிமலையாய் கனன்றோம். நாம் இன்றும் அதே நிலையில் இருக்கிறோம். ஆனால் இவர்களோ சு.ஜ.வினரை விட ஒரு படி தாண்டி, பள்ளிகளை இழுத்து மூடுவது என்ற கொடிய தீமையின் கொடுமுடிக்கே சென்று விட்டனர்.
அபூஜஹ்லின் பாதையில் அடியெடுத்து வைக்கும் ஜாக்
தொழும் அடியாரைத் தடுப்பவனைப் பார்க்கவில்லையா? அவர் நேர் வழியில் இருப்பதையே, அல்லது இறையச்சத்தை ஏவுவதையே அவன் பொய்யெனக் கருதி அலட்சியம் செய்வதை நீர் கவனித்தீரா? அல்லாஹ் பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா? அவ்வாறில்லை. அவன் விலகிக் கொள்ளவில்லையானால் முன் நெற்றியைப் பிடிப்போம். அது குற்றமிழைத்த பொய் கூறிய முன் நெற்றி. அவன் தனது சபையோரை அழைக்கட்டும். நாம் (ஸபானிய்யாக்கள் எனும்) நரகின் காவலர்களை அழைப்போம். எனவே, அவனுக்குக் கட்டுப்படாதீர்! ஸஜ்தாச் செய்வீராக! நெருங்குவீராக! (அல்குர்ஆன் 96:9-19)
இந்த வசனங்கள் யாரைக் குறிக்கின்றன? அபூஜஹ்லைத் தான் என்று நாம் யாவரும் அறிந்து வைத்திருக்கின்றோம். அவனது இந்தப் பாணியைப் பின்பற்றி அவனது பணியைக் கையாண்டு, பொய்யான வழிமுறைகளில் ஜாக் களமிறங்கி உள்ளது.
கடையநல்லூரில் அல்மஸ்ஜிதுல் முபாரக் பள்ளியில் தமுமுகவினருடன் இணைந்து தவ்ஹீத் ஜமாஅத்தினரைத் தாக்கி இரத்தம் குடித்து, ருசி கண்டு, அந்தப் பள்ளியைப் பூட்டிய இந்த ஆக்டோபஸ் ஜாக் இப்போது மேலப்பாளையத்தில் மஸ்ஜிதுர் ரஹ்மானை ஹைஜாக் செய்து இழுத்து மூடுவதற்கு வந்திருக்கின்றது.
மேலப்பாளையத்தில் ஜாக்குக்கு என்று ஆட்கள் கிடையாது. எனவே தமுமுகவின் துணையுடன் இந்த அராஜகத்தை அரங்கேற்ற முயற்சிக்கின்றது.
அவன் தனது சபையோரை அழைக்கட்டும்
என்று அல்லாஹ் சொல்லிக் காட்டுவது போல் தமுமுக போன்ற தவ்ஹீது ஜமாஅத்திற்கு விரோதமான ஜமாஅத்துகளை அழைத்துக் கொண்டது ஜாக்.
அது குற்றமிழைத்த பொய் கூறிய முன் நெற்றி
என்று அல்லாஹ் பட்டியலிடும் தன்மைகளின் படி குற்றமிழைத்து, பல பொய்களில் இறங்குகின்றது.
மறுமை நாளில் ஸபானிய்யாக்களை (நரகக் காவலர்களை) சந்திப்போம் என்பதை மறந்து ஆளும் வர்க்கத்தினரை, ஆட்சியாளர்களை தங்கள் சூழ்ச்சி வலைகளில் வளைக்க முயற்சி செய்தனர்.
ஆனால் எல்லாம் வல்ல அல்லாஹ் சூழ்ச்சியாளர்களுக்கெல்லாம் சூழ்ச்சியாளன் என்பதை அவர்கள் பின்னிய சதி வலைகளின் கண்ணிகளைத் தகர்த்தெறிவதன் மூலம் நிரூபித்துக் கொண்டிருக்கிறான். அவற்றை இப்போது ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
பள்ளிவாசலை இழுத்து மூட
தமுமுக, ஜாக் கூட்டு சதி
மேலப்பாளையத்தில் மஸ்ஜிதுர் ரஹ்மான் என்ற பள்ளிவாசலின் தலைவராகக் கடந்த 12 ஆண்டுகளாக மவ்லவி ஷம்சுல்லுஹா இருந்து வருகிறார். மேலப்பாளையத்தில் வசிக்கும் ஒவ்வொருவரும் இதை அறிவார்கள்.
இந்தப் பள்ளிவாசலில் மவ்லவி ஷம்சுல்லுஹா தலைமையில் பல்வேறு மருத்துவ முகாம்கள், இரத்த தான முகாம்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. அந்த நிகழ்ச்சிகளில் இப்போதைய திமுக அமைச்சரான மைதீன் கான், அதிமுக அமைச்சர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர், காவல்துறை உயர் அதிகாரிகள் பலர் பங்கேற்று உள்ளனர்.
தற்போதும் வாரந்தோறும் குழந்தைகள் நல மருத்துவ முகாம் நடைபெற்று வருகின்றது. இதில் மேலப்பாளையம் மற்றும் சுற்றுப் பகுதிகளிலுள்ள பல்வேறு தரப்பினரும் வந்து பயன் பெறுகின்றனர்.
இந்தப் பள்ளிவாசலில் நடந்த ஏராளமான சமுதாயப் பணிகள் குறித்த செய்திகள் பல்வேறு நாளிதழ்களிலும் வெளியாகியுள்ளன. அந்த நிகழ்ச்சிகள் யாவும் மவ்லவி ஷம்சுல்லுஹா தலைமையில் தான் நடந்துள்ளன.
12 வருடங்களாக இப்பள்ளியில் ஷம்சுல்லுஹா தான் ஜும்ஆ உரை நிகழ்த்தி வருகிறார். இப்பள்ளிக்காகவும் இதர சமுதாயப் பணிகளுக்காகவும் பல்வேறு உதவிகள் வேண்டி ஏகத்துவம், உணர்வு இதழ்களில் விளம்பரங்களும் ஷம்சுல்லுஹா அவர்களால் வெளியிடப்பட்டன.
மேலப்பாளையத்திலுள்ள தவ்ஹீத் சகோதரர்களின் நிர்வாகத்தில் இயங்கி வரும் இப்பள்ளி, மாவட்டத்தின் தவ்ஹீத் பிரச்சாரக் கேந்திரமாகச் செயல்பட்டு வருவதை மேலப் பாளையத்துடன் தொடர்புடைய ஒவ்வொரு முஸ்லிமும் அறிவார்.
ஜும்ஆவில் மக்கள் வெள்ளம் நிரம்பி வழிந்ததால் அருகில் உள்ள இடத்தை உரியவரிடம் பெற்று பள்ளிவாசல் விரிவு படுத்தப்பட்டது.
ஏகத்துவப் பிரச்சாரத்தின் கேந்திரமாகத் திகழும் இந்தப் பள்ளிவாசலை எப்படியாவது இழுத்து மூட வேண்டும் என்று ஜாக் தலைமையும், தமுமுகவும் கூட்டாகத் திட்டம் தீட்டினார்கள். இப்பள்ளிக்குச் சொந்தம் கொண்டாடுவதன் மூலம் பிரச்சனையை ஏற்படுத்தினால் பள்ளிவாசலை இழுத்து மூடிவிடலாம் என்று கணக்குப் போட்டனர்.
ஜாக்கின் மாநிலத் தலைவர் கமாலுத்தீன் மதனீயும், அதன் நெல்லை மாவட்டத் தலைவர் ஏர்வாடி சிராஜுதீன் என்பவரும் சேர்ந்து பள்ளிவாசலை இழுத்து மூட சதித் திட்டம் தீட்டி நெல்லை மாவட்ட சார்பு நீதிமன்றத்தில் ஒரு வழக்கைத் தாக்கல் செய்தனர்.
ஏர்வாடி சிராஜுதீன் என்பவர் தொடர்ந்த அந்த வழக்கில் அவர் அளித்திருந்த ஆணையுறுதிப் பத்திரத்தில் பின் வருமாறு கூறப்பட்டிருந்தது.
தபசில் சொத்தில் எங்கள் சங்கத்தால் மஸ்ஜிதுர்ரஹ்மான் கட்டப்பட்டுள்ளது. மேற்படி மஸ்ஜிதுர்ரஹ்மான் கட்டும் பணிக்கு மேற்பார்வை செய்யும் பொறுப்பாளராகவும் அது போல் தபசில் அமைந்துள்ள மேலப் பாளையம் பகுதியில் எங்கள் சங்கக் கோட்பாடுகளைப் பிரச்சாரம் செய்வதற்கு தாயி எனும் பிரச்சாரக்காரராகவும் வாதி/எங்கள் சங்கத்தால் எதிர் மனுதார் பணியில் சேர்க்கப்பட்டிருந்தார். ஆனால் மேற்படியார் தனக்கு அளிக்கப்பட்ட பொறுப்புக்கு மாறாக நன்கொடை வசூல் செய்தல், ஆவணங்களை அப்புறப்படுத்துதல், சரிவர கணக்கு பராமரிக்காமை போன்ற செயல்களில் செயல்பட்டதால் மேற்படியார் மஸ்ஜிர்ரஹ்மான் பள்ளிவாசல் தொடர்பான அனைத்து பொறுப்புகளிலிருந்தும் 20.11.05ல் நீக்கப்பட்டு, மேற்படியாருக்கு உரிய தகவலும் கொடுக்கப்பட்டு விட்டது. தபசில் சொத்து 30.11.05 முதல் எங்கள் சங்க நேரடி கட்டுப்பாட்டில் அதன் மாவட்டத் தலைவரால் நிர்வகிக்கப்பட்டு வரப்படுகின்றது.
வழக்கு சொத்திற்கும், எதிர் மனுதாருக்கும் அல்லது மேற்படியார் சார்ந்துள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது. மாறாக மேற்படியார் தான் அமைப்பிலிருந்து விடுவிக்கப் பட்டதன் காரணமாக தபசில் சொத்தினை ஆக்கிரமிப்பு செய்யும் கெட்ட நோக்கில் கடந்த 27.06.06ல் தபசில் சொத்தில் அத்துமீறி நுழைந்து தபசில் சொத்தின் சுவாதீனத்தினை எடுக்க எத்தனித்தார். மேற்படி முயற்சி கடும் பிரயாசத்தால் தடுக்கப்பட்டது. இதனால் வர்மம் கொண்ட எதிர் மனுதார் ஒரு மாத காலத்தில், தான் சார்ந்துள்ள அமைப்பு வழி தபசில் சொத்தின் சுவாதீனத்தினை வலுக் கட்டாயமாக எங்கள் சங்க அமைப்பிடமிருந்து எடுக்க இருப்பதாக ஊரில் கடந்த 02.07.06ல் இருந்து பிரஸ்தாபம் செய்து வருகிறார்....
என்று முழுக்க முழுக்க பொய்யை மட்டுமே தன்னுடைய மனுவில் குறிப்பிட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
தன்னுடைய நிர்வாகத்தில் ஷம்சுல்லுஹா தலையிடக் கூடாது என்று இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்குமாறும் அந்த மனுவில் கோரியிருந்தார். (பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டுமாக!)
பொய்க் கடிதம்
குர்ஆன் ஹதீஸ் பெயரைச் சொல்லி இயக்கம் நடத்துவோர் அல்லாஹ்வின் பள்ளிவாசல் விஷயத்தில் எந்த அளவுக்குப்    பொய் சொல்லியுள்ளனர் என்பதை நியாயவான்கள் உணர வேண்டும்.
இந்தப் பொய்யனுக்கு சாட்சியாக கமாலுத்தீன் மதனி கடிதம் அளித்துள்ளார். அக்கடிதத்தில் 20.11.05 அன்று முதல் ஷம்சுல்லுஹாவை நீக்கி விட்டதாகவும், அன்றிலிருந்து ஷம்சுல்லுஹாவுக்குச் சம்பளம் கிடையாது என்றும் கமாலுத்தீன் மதனி  குறிப்பிட்டுள்ளார்.
20.11.05 வரை ஷம்சுல்லுஹாவுக்கு சம்பளம் கொடுத்ததாகப் பச்சைப் பொய்யை எழுத்து மூலம் வழங்கியவர் தான் ஜாக்கின் அகில உலகத்(?) தலைவர். அந்த இயக்கத்தில் இருப்பவர்கள் அதைக் கை கழுவுவதற்கு இந்தப் பொய்யே போதுமானதாகும். கமாலுத்தீன் மதனீ எழுதிய இந்தப் பொய்க் கடிதத்தையும் தங்கள் மனுவில் ஆதாரமாக ஏர்வாடி சிராஜ் சமர்ப்பித்திருந்தார்.
07.07.06 அன்று மனுவைத் தாக்கல் செய்து, அன்றைய தினமே தடையுத்தரவையும் வாங்கி விட்டார்.
மஸ்ஜிதுர்ரஹ்மானை நிர்வகித்து வரும் ஏர்வாடி சிராஜின் (?) நிர்வாகத்தில் 25.07.06 வரை ஷம்சுல்லுஹா தலையிடக் கூடாது என்று இடைக்காலத் தடையை நீதிமன்றம் பிறப்பித்தது.

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites