அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

செவ்வாய், 4 மே, 2010

முரண்பாடுகள் தோன்றியது எப்படி?

1400 ஆண்டுகளுக்கு முன் இறுதித் தூதராக இவ்வுலகத்திற்கு வருகை தந்த நபி (ஸல்) அவர்கள், அன்றைய அரபுலகத்தில் இருந்த அறியாமை இருளை நீக்கி, இஸ்லாம் என்ற ஒளியை ஏற்றி வைத்தார்கள்.  இவ்வுலகத்தில் வாழும் அனைவரும் இறைவனின் வேதமான திருக்குர்ஆன் அடிப்படையிலும் தனது வழிமுறையின் அடிப்படையிலும் மட்டுமே வாழ வேண்டும் என்று கட்டளையிட்டு மனித வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து சட்டங்களின் அடிப்படைகளையும் விளக்கிச் சென்றார்கள்.
அவர்களின் இருபத்து மூன்று ஆண்டு கால நபித்துவ வாழ்க்கையில் இலட்சக்கணக்கான தொண்டர்களை, தோழர்களை உருவாக்கிச் சென்றார்கள்.  அந்த அன்புத் தோழர்களின் அறப் பணியால் இன்று உலகம் முழுவதும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட முஸ்-ம்கள் பரவி உள்ளனர்.
இன்று உலகம் முழுவதும் முஸ்-ம்கள் இருந்தாலும் அனைவரும் ஒரே முறையில் அனைத்துக் காரியங்களையும் நிறைவேற்றுவதில்லை.  ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் வணக்க வழிபாடுகளை அமைத்துக் கொண்டு பல புதிய பெயர்களில் செயல்படுகின்றனர்.
இவ்வாறு பல பிரிவாகி ஒவ்வொரு பிரிவினரும் புதிய புதிய வணக்க வழிபாடுகளை அமைத்துக் கொள்ள நபி (ஸல்) அவர்கள் அனுமதியளித்துள்ளார்களா? அறவே இல்லையே! அப்படியானால்        முஸ்-ம்களில் ஏராளமான பிரிவுகள் வந்ததன் காரணம் என்ன?
அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! இதனால் அருள் செய்யப்படுவீர்கள். (அல்குர்ஆன் 3:132)
அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவோரை சொர்க்கச் சோலைகளில் அவன் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி.
அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்து அவனது வரம்புகளை மீறுபவனை நரகில் நுழையச் செய்வான். அதில் அவன் நிரந்தரமாக இருப்பான். அவனுக்கு இழிவு தரும் வேதனை உண்டு.  (அல்குர்ஆன் 4:13,14)
அவர்களிடையே தீர்ப்பு வழங்கு வதற்காக அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் அழைக்கப்படும் போது "செவியுற்றோம்; கட்டுப்பட்டோம்'' என்பதே நம்பிக்கை கொண்டோரின் கூற்றாக இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.  அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு, அல்லாஹ்வை அஞ்சி பயப்படுவோரே வெற்றி பெற்றோர்.  (அல்குர்ஆன் 24:51,52)
அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும் போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுய விருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழி கெட்டு விட்டார்.  (அல்குர்ஆன் 33:36)
"மக்களே! நான் உங்களிடம் இரண்டு விஷயங்களை விட்டுச் செல்கின்றேன்.  அதைப் பற்றிப் பிடித்திருக்கும் காலமெல்லாம் ஒரு போதும் வழி தவற மாட்டீர்கள்.  1. அல்லாஹ்வின் வேதம்  2.  அவனது தூதரின் வழிமுறை'' என்று நபி (ஸல்) அவர்கள் இறுதி ஹஜ்ஜில் ஆற்றிய பேருரையில் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ர-), நூல் : ஹாகிம் (318)
"என் சமுதாயத்தினர் அனைவரும் சொர்க்கம் செல்வார்கள்.  ஏற்க மறுத்தவரைத் தவிர'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  "அல்லாஹ்வின் தூதரே! ஏற்க மறுத்தவர் யார்?'' என்று மக்கள் கேட்டார்கள்.  அதற்கு நபி (ஸல்) அவர்கள், "எனக்குக் கீழ்ப்படிந்தவர் சுவர்க்கம் புகுவார்.  எனக்கு மாறு செய்தவர் ஏற்க மறுத்தவர் ஆவார்'' என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர-), நூல் : புகாரி (7280)
நம்முடைய அங்கீகாரம் இல்லாத ஒரு செயலை (மார்க்கக் கடமையெனக் கருதி) செய்தால் அது நிராகரிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ர-),  நூல் : முஸ்-ம் (3243)
"(மார்க்கத்தில்) புதிதாக உருவாக்கப்படும் ஒவ்வொன்றும் பித்அத் (நூதனப் பழக்கம்) ஆகும்.  ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும்.  ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு போய் சேர்க்கும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ர-), நூல் : நஸயீ (1560)
இவ்வாறு திருமறைக் குர்ஆனும் நபிமொழிகளும் குர்ஆன் ஹதீஸை மட்டும் அடிப்படையாக வைத்து வாழ வேண்டும் என்று மிகத் தெளிவாகக் கட்டளையிடுகின்றன.  ஆனால் மக்கள் இஷ்டப்படி தங்கள் மார்க்கக் கடமைகளைப் பலவிதமாக அமைத்துக் கொண்டு இவ்வாறு பல பிரிவுகளாக மாறியதற்குக் காரணம் என்ன?
இக்கேள்விக்குப் பவலவிதமான பதில்களைக் கூறலாம்.  அதில் முக்கியமான காரணம்,  முன்னோர்களையும் ஊர்ப்பழக்கங்களையும் மார்க்கத்தின் அளவுகோலாக எடுத்துக் கொண்டது தான்.
இவ்வாறு முன்னோர்களையும் ஊர்ப்பழக்கங்களையும் முன்மாதிரியாக எடுத்துக் கொள்வதால் இஸ்லாத்தில் பல பிரிவுகள் உண்டாயின.  ஆனால் சில பிரிவினர் தாங்கள் செய்யும் காரியங்களுக்கு நபிமொழிகளையும் திருக்குர்ஆன் வசனங்களையும் ஆதாரம் காட்டுகின்றர்.
முரண்பட்ட கொள்கைகளுக்கும் மாறுபட்ட சட்டங்களுக்கும் நபிமொழிகளில் ஆதாரம் இருக்குமா? என்ற நியாயமான கேள்வி எழலாம்.  இருக்காது என்று நாம் கூறினாலும் மாறுபட்ட சட்டங்களுக்கு ஒவ்வொருவரும் சில நபிமொழிகளை ஆதாரம் காட்டத் தான் செய்கின்றனர்.  இப்படிப்பட்ட நிலை எதனால் ஏற்படுகின்றது?  இதற்குப் பல காரணங்கள் உள்ளன.
நபி (ஸல்) அவர்கள் ஆரம்ப காலத்தில் ஒரு சட்டத்தைக் கூறியிருப்பார்கள்.  பின்னர் நபி (ஸல்) அவர்களாலேயே அது மாற்றப்பட்டிருக்கும்.  இந்நிலையில் மாற்றப்பட்ட செய்தியை அறியாதவர் நபி (ஸல்) அவர்களின் முந்தைய காலச் சட்டத்தை அறிவிப்பார்.  சிலர் இதை மட்டும் வைத்து சட்டம் சொல்- விடுவர்.
நபி (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! ஒருவர் தமது மனைவியிடம் உடலுறவு கொண்ட பின்னரும் இந்திரியம் வெளியாகாமல் இருந்தால் அவர் மீது குளிப்பு கடமையாகுமா?'' என்று கேட்டேன்.  அதற்கு "மனைவியிடமிருந்து பட்ட இடத்தைக் கழுவ வேண்டும்.  பின்னர் உளூச் செய்து தொழுது கொள்ளலாம்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : உபை பின் கஅப் (ர-), நூல் : புகாரி (293)
உடலுறவு கொண்ட பின்னர் இந்திரியம் வெளியாகா விட்டால் குளிப்பு கடமை இல்லை என்பது நபி (ஸல்) அவர்கள் ஆரம்ப காலத்தில் இட்ட கட்டளையாகும்.  பின்னர் இச்சட்டத்தை நபி (ஸல்) அவர்கள் மாற்றி விட்டார்கள்.
"பெண்ணுறுப்பை ஆணுறுப்பு கடந்து விட்டால் குளிப்பு கடமையாகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ர-), நூல் : முஸ்-ம் (526), திர்மிதீ (102)
இந்த இரண்டு செய்திகளையும் கவனத்தில் கொள்ளாதவர்கள் ஆரம்ப காலச் சட்டத்தைக் கூறி அதற்குரிய சான்றை மட்டும் கூறுவதால் மாறுபட்ட சட்டத்திற்கு நபிமொழியில் ஆதாரம் இருப்பதைப் போன்று தோற்றம் ஏற்படுகின்றது.
இதைப் போன்று நெருப்பால் சமைக்கப்பட்ட உணவுகளைச் சாப்பிட்டவரின் உளூ முறியுமா? அல்லது முறியாதா? என்பதிலும் இரண்டு கருத்துக்கள் இரண்டு நபிமொழிகளை எடுத்துரைத்து ஆதாரம் காட்டுகின்றன.
"நெருப்பு தீண்டியவற்றில் உளூச் செய்யுங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர-)
நூல்கள் : முஸ்-ம் (527, 529), இப்னுமாஜா (478), அஹ்மத் (23439)
நபி (ஸல்) அவர்கள் வெளியே புறப்பட்ட போது நானும் அவர்களுடன் சென்றேன்.  அன்சாரிகளைச் சேர்ந்த ஒரு பெண்மணியின் இல்லத்தில் அவர்கள் நுழைந்தார்கள்.  அந்தப் பெண் நபி (ஸல்) அவர்களுக்காக ஓர் ஆட்டை அறுத்து விருந்து படைத்தார்.  நபி (ஸல்) அவர்கள் அதைச் சாப்பிட்டார்கள்.  பேரீச்சம்பழங்கள் நிறைந்த தட்டு ஒன்றையும் அந்தப் பெண் வைத்தார்.  அதையும் சாப்பிட்டார்கள்.  பின்னர் லுஹர் தொழுகைக்காக உளூச் செய்து தொழுதார்கள்.  பின்பு (மீதமிருந்த) இறைச்சியில் சிறிதளவை அந்தப் பெண் வைத்தார்.  நபி (ஸல்) அவர்கள் அதைச் சாப்பிட்ட பின் உளூச் செய்யாமல் அஸர் தொழுதார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ர-)
நூல்கள் : திர்மிதீ (75), அபூதாவூத் 163), அஹ்மத் (13931)
இந்த இரண்டு செய்திகளில் ஒருவர் ஒரு செய்தியையும் மற்றொருவர் இன்னொரு செய்தியையும் வைத்து சட்டம் சொல்-யுள்ளனர்.  ஆனால் பின்வரும் செய்தியை கவனிக்கத் தவறி விட்டனர்.
"இரண்டு விஷயங்களில் நெருப்பு தீண்டியவைகளில் உளூச் செய்யாமல் இருப்பது தான் நபி (ஸல்) அவர்களின் கடைசியான செயலாகும்''
அறிவிப்பவர் : ஜாபிர் (ர-)
நூல்கள் : நஸயீ (185), இப்னு ஹுஸைமா (43), இப்னு ஹிப்பான் (1134)
ஒரே சட்டம் தொடர்பான சில ஹதீஸ்கள் ஆதாரப் பூர்வமானவையாகவும் சில ஹதீஸ்கள் பலவீனமானவையாகவும் இடம் பெற்றிருக்கும்.  சிலர் தமது மத்ஹபை நிலைநாட்ட பலவீனமான ஹதீஸ்களை ஆதாரமாக எடுத்துக் கொள்கின்றனர்.
ஸஹ்ல் பின் பைளா (ர-) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாச-ல் தான் (ஜனாஸா) தொழுவித்தார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ர-), நூல் : முஸ்-ம் (1615)
"யார் பள்ளியில் மய்யித்திற்குத் தொழுவிப்பாரோ அவருக்கு எந்த ஒன்றும் கிடையாது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர-)
நூல்கள் : அபூதாவூத் (2776), இப்னுமாஜா (1506), அஹ்மத் (9353)
இந்த செய்தி பலவீனமானதாகும்.  இதில் இடம் பெற்றுள்ள            ஸா-ஹ் என்பவர் பலவீனமானவர் என்று ஹதீஸ் கலை அறிஞர்களால் விமர்சிக்கப்பட்டவர்.
ஆதாரப்பூர்வமான செய்தியை எடுத்துக் கொள்ளாமல் பலவீனமான செய்திகளை எடுப்பதால் சட்டத்தில் இரு வேறுபட்ட வடிவங்கள் தெரிகின்றன.
திருக்குர்ஆன் நபிமொழியின் அடிப்படையில் தான் சட்டங்களை வகுக்க வேண்டுமென்ற நிலையி-ருந்து இறங்கி, நபித்தோழர்களின் கூற்றுக்களையும் ஏற்றுக் கொள்வதால் முரண்பட்ட சட்டங்கள் ஏற்படுகின்றன.
நபி(ஸல்) அவர்கள் காலத்திலும் அபூபக்ர் (ர-) அவர்களின் ஆட்சிக் காலத்திலும் உமர் (ர-) அவர்களின் முதல் இரண்டு ஆண்டு காலத்திலும் முத்தலாக் என்பது ஒரு தலாக்காகவே கருதப்பட்டு வந்தது.  உமர் (ர-) அவர்கள், "நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு விஷயத்தில் மக்கள் அவசரப்படுகின்றனர்.  அவர்கள் மீது நாம் சட்டமாக்கி விட்டால் (என்ன செய்வார்கள்?)'' என்று கூறி சட்டமாக்கி விட்டார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ர-), நூல் : முஸ்-ம் (2689)
முத்தலாக் என்று கூறினால் அதை நபி (ஸல்) அவர்கள் ஒரு தலாக்காகவே எடுத்திருக்கின்றார்கள் என்று தெளிவாகக் கூறப்பட்ட பின்னர் சிலர், உமர் (ர-) அவர்களின் சட்டத்தின் அடிப்படையில் முத்தலாக் என்று கூறினாலும் மூன்று தலாக்காகவே எடுக்கப்படும் என்று கூறுகின்றனர்.
நபித்தோழர்களும் மனிதர்கள் தாம்.  அவர்களிடமும் தவறுகள் ஏற்படும் என்பதைக் கவனிக்கத் தவறிவிட்டனர்.  ஆனால் நபி (ஸல்) அவர்களிடம் பாடம் பயின்ற நபித்தோழர்கள் இதைக் கவனித்து செயல்பட்டுள்ளனர்.
நான் உஸ்மான் (ர-) உடனும், அலீ (ர-) உடனும் ஹஜ் செய்துள்ளேன்.  உஸ்மான் (ர-) அவர்கள் ஹஜ், உம்ரா இரண்டையும் சேர்த்து (கிரான்) செய்வதையும், உம்ரா முடித்து ஹஜ் (தமத்துஉ) செய்வதையும் தடுத்தார்கள்.  இதைக் கண்ட அலீ (ர-) ஹஜ், உம்ரா இரண்டிற்கும் இஹ்ராம் அணிந்து, "லப்பைக்க பி உம்ரதின் வஹஜ்ஜதின்'' என்று கூறிவிட்டு, "நபி (ஸல்) அவர்களுடைய வழிமுறையை யாருடைய சொல்-ற்காகவும் நான் விட்டு விட மாட்டேன்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : மர்வான் பின் ஹகம், நூல் : புகாரி (1563)
அன்றைய ஜனாதிபதியாக இருந்த உஸ்மான் (ர-) அவர்கள், தமத்துஉ என்ற ஹஜ் செய்யக் கூடாது என்று கூறிய போது, "நபி (ஸல்) அவர்கள் செய்த செயலை எந்த மனிதரின் சொல்-ற்காகவும் விட மாட்டேன்' என்று கூறி நபி (ஸல்) அவர்களின் கூற்றே முதன்மையானது, பின்பற்ற ஏற்றது என்பதை அலீ (ர-) தெளிவுபடுத்துகின்றார்கள்.
ஹஜ் மாதத்தில் உம்ராவை முடித்து இஹ்ராமைக் களைந்து ஹஜ்ஜுக்காக தனியாக இஹ்ராம் கட்டுவது பற்றி அப்துல்லாஹ் பின் உமர் (ர-) இடம் ஷாம் நாட்டைச் சேர்ந்த மனிதர் கேட்டார்.  அதற்கு அவர், "அது அனுமதிக்கப்பட்டதே!'' என்று கூறினார். அதற்கு ஷாம் நாட்டைச் சேர்ந்த அம்மனிதர், "உங்கள் தந்தை (உமர்) அதைத் தடை செய்திருக்கின்றாரே!'' என்று கூறினார்.
அதற்கு இப்னு உமர் (ர-), "என் தந்தை ஒரு காரியத்தைத் தடுத்து அதை நபி (ஸல்) அவர்கள் செய்திருந்தால் அப்போது என் தந்தையின் கட்டளையைப் பின்பற்ற வேண்டுமா? அல்லது நபி (ஸல்) அவர்களின் கட்டளையைப் பின்பற்ற வேண்டுமா?'' என்று கேட்டார்.  அதற்கு அம்மனிதர், "நபி (ஸல்) அவர்களின் கட்டளையைத் தான் பின்பற்ற வேண்டும்'' என்றார்.  அப்போது இப்னு உமர் (ர-), "நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு செய்துள்ளார்கள்'' என்று விடையளித்தார்.
அறிவிப்பவர் : ஸா-ம், நூல் : திர்மிதீ (753)
அன்றைய ஜனாதிபதியும் தமது தந்தையுமான உமர் (ர-) அவர்களின் கூற்றை இப்னு உமர் (ர-) புறக்கணித்ததி-ருந்து நபித்தோழர்களின் கூற்று ஆதாரமாகாது என்பதை விளங்கிக் கொள்ள முடிகின்றது.
இது போன்ற காரணத்துக்காகத் தான் இஸ்லாமிய சட்டங்களில் மாறுபட்ட கருத்துக்களைக் காண்கின்றோம்.  இந்நிலையில் உண்மையில் நாம் பின்பற்ற வேண்டிய நபிமொழிகள் எவை? என்பதைத் தெளிவாக அறிவதற்காகத் தான் இந்தப் பகுதி ஆரம்பம் செய்யப்படுகின்றது.
இத்தொடரில் நம்மிடம் மாறுபட்ட கருத்துள்ள சட்டங்களின் ஹதீஸ்களை எடுத்துரைத்து அதில் சரியான கருத்து என்னவென்பதை இன்ஷா அல்லாஹ் தெளிவுபடுத்துவோம்.
மேலும் அந்த ஹதீஸ்களின் அரபி மூலத்தையும் வெளியிட்டு தெளிவு படுத்துவோம்.  இதனால் சரியான சட்டங்களை அறிந்து நாம் செயல்படுத்த மிக உதவியாக இருக்கும் என்று நம்புகின்றோம்.

கூட்டு துஆ

தன்னை விட சக்தி படைத்த ஒருவன் இருக்கின்றான் என்பதை மனிதன் ஒப்புக் கொண்டுள்ளான் என்பதற்கு பிரார்த்தனை சிறந்த எடுத்துக்காட்டு!
தான் பலவீனமானவன் என்பதையும், இறைவன் சர்வ சக்தி படைத்தவன் என்பதையும் பிரார்த்தனையின் மூலம் மனிதன் ஒப்புக் கொள்கின்றான்.  எனவே அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுமாறு திருக்குர்ஆனில் பல இடங்களில் கூறப்பட்டுள்ளது.  மேலும் நபி (ஸல்) அவர்களும் இதை வ-யுறுத்தியுள்ளார்கள்.
حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ مَنْصُورٍ عَنْ ذَرٍّ عَنْ يُسَيْعٍ الْحَضْرَمِيِّ عَنْ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الدُّعَاءُ هُوَ الْعِبَادَةُ قَالَ رَبُّكُمْ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ رواه ابوداود
"பிரார்த்தனை தான் வணக்கமாகும்.  (ஏனெனில்) உங்கள் இறைவன் கூறுகின்றான்: என்னை அழையுங்கள்! உங்களுக்குப் பதிலளிக்கின்றேன்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : நுஃமான் பின் பஷீர் (ர-),    நூற்கள் : அபூதாவூத் (1264), திர்மிதீ (2895, 3170, 3294), இப்னுமாஜா (3818), அஹ்மத் (17629)
வணக்கமாகக் கருதப்படும் பிரார்த்தனையை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை திருமறைக் குர்ஆனும் நபிமொழிகளும் நமக்கு வழிகாட்டுகின்றன.
பிரார்த்தனை செய்பவரிடம் முக்கியமாக பின்வரும் காரியங்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று குர்ஆனும் நபிமொழிகளும் நமக்குக் கட்டளையிடுகின்றன.
1. பணிவுடன் கேட்க வேண்டும்; அதிகார தோரணையில் பிரார்த்தனை அமையக் கூடாது.
2. ஆசையோடு கேட்க வேண்டும்.
3. தன்னைப் படைத்த இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றோம் என்ற பயம் இருக்க வேண்டும்.
4. தன் கோரிக்கையை அல்லாஹ் நிறைவேற்றி வைப்பான் என்ற மன உறுதி வர வேண்டும்.
5. பிரார்த்தனை அடுத்தவர் கேட்கும் வண்ணம் இல்லாமல் மெதுவாக இருக்க வேண்டும்.
மேற்குறிப்பிட்ட முக்கியமான இந்த ஐந்து நிபந்தனைகளுக்குரிய ஆதாரங்கள்:
ادْعُوا رَبَّكُمْ تَضَرُّعًا وَخُفْيَةً إِنَّهُ لَا يُحِبُّ الْمُعْتَدِينَ(55) سورة الأعراف
உங்கள் இறைவனைப் பணிவுடனும், இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள்! வரம்பு மீறியோரை அவன் நேசிக்க மாட்டான்.  (அல்குர்ஆன் 7:55)
وَادْعُوهُ خَوْفًا وَطَمَعًا إِنَّ رَحْمَةَ اللَّهِ قَرِيبٌ مِنْ الْمُحْسِنِينَ(56) سورة الأعراف

அச்சத்துடனும், நம்பிக்கையுடனும் அவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்! அல்லாஹ்வின் அருள் நன்மை செய்வோருக்கு அருகில் உள்ளது.  (அல்குர்ஆன் 7:56)

تَتَجَافَى جُنُوبُهُمْ عَنْ الْمَضَاجِعِ يَدْعُونَ رَبَّهُمْ خَوْفًا وَطَمَعًا وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنفِقُونَ(16)
அச்சத்துடனும், எதிர்பார்ப்புடனும் தமது இறைவனைப் பிரார்த்திக்க அவர்களின் விலாப்புறங்கள் படுக்கைகளிலிருந்து விலகும். நாம் வழங்கியவற்றிலிருந்து (நல் வழியில்) செலவிடுவார்கள்.  (அல்குர்ஆன் 32:16)
إِذْ نَادَى رَبَّهُ نِدَاءً خَفِيًّا(3) سورة مريم
அவர் (ஜக்கரியா) தமது இறைவனை இரகசியமாக அழைத்துப் பிரார்த்தித்தார்.  (அல்குர்ஆன் 19:3)
6338حَدَّثَنَا مُسَدَّدٌ حَدَّثَنَا إِسْمَاعِيلُ أَخْبَرَنَا عَبْدُ الْعَزِيزِ عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَعَا أَحَدُكُمْ فَلْيَعْزِمْ الْمَسْأَلَةَ وَلَا يَقُولَنَّ اللَّهُمَّ إِنْ شِئْتَ فَأَعْطِنِي فَإِنَّهُ لَا مُسْتَكْرِهَ لَهُ رواه البخاري
"நீங்கள் பிரார்த்தித்தால் (உங்கள்) கோரிக்கையை வ-யுறுத்திக் கேளுங்கள்.  "அல்லாஹ்வே! நீ நினைத்தால் எனக்கு வழங்கு' என்று சொல்ல வேண்டாம்.  (வ-யுறுத்திக் கேட்பது இறைவனை நிர்ப்பந்திப்பது ஆகாது.)  ஏனெனில் அவனை நிர்ப்பந்திப்பவர் எவருமில்லை'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ர-)
நூல்கள் : புகாரி (6338), முஸ்-ம் (4837)

4838 حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ وَقُتَيْبَةُ وَابْنُ حُجْرٍ قَالُوا حَدَّثَنَا إِسْمَعِيلُ يَعْنُونَ ابْنَ جَعْفَرٍ عَنْ الْعَلَاءِ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا دَعَا أَحَدُكُمْ فَلَا يَقُلْ اللَّهُمَّ اغْفِرْ لِي إِنْ شِئْتَ وَلَكِنْ لِيَعْزِمْ الْمَسْأَلَةَ وَلْيُعَظِّمْ الرَّغْبَةَ فَإِنَّ اللَّهَ لَا يَتَعَاظَمُهُ شَيْءٌ أَعْطَاهُ رواه مسلم
உங்களில் எவரேனும் பிரார்த்தித்தால், "நீ நாடினால் என்னை மன்னிப்பாயாக!' என்று கேட்க வேண்டாம்.  (உங்கள்) கோரிக்கையை வ-யுறுத்திக் கேளுங்கள்.  மகத்துவம் மிக்கதைக் கேளுங்கள்.  ஏனெனில் அல்லாஹ் வழங்கிய எந்த ஒன்றும் அவனுக்குப் பெரிதாகத் தெரிவதில்லை என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர-)
நூல் : முஸ்-ம் (4838)
2992 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ عَاصِمٍ عَنْ أَبِي عُثْمَانَ عَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَكُنَّا إِذَا أَشْرَفْنَا عَلَى وَادٍ هَلَّلْنَا وَكَبَّرْنَا ارْتَفَعَتْ أَصْوَاتُنَا فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا أَيُّهَا النَّاسُ ارْبَعُوا عَلَى أَنْفُسِكُمْ فَإِنَّكُمْ لَا تَدْعُونَ أَصَمَّ وَلَا غَائِبًا إِنَّهُ مَعَكُمْ إِنَّهُ سَمِيعٌ قَرِيبٌ تَبَارَكَ اسْمُهُ وَتَعَالَى جَدُّهُ رواه البخاري
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம்.  நாங்கள் ஒரு பள்ளத்தாக்கில் (மேடான பகுதியில்) ஏறும் போது, "லாயிலாஹ இல்லல்லாஹ் - வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை' என்றும் "அல்லாஹு அக்பர் - அல்லாஹ் மிகப் பெரியவன்' என்றும் கூறி வந்தோம்.  (ஒரு கட்டத்தில்) எங்கள் குரல்கள் உயர்ந்து விட்டன.  அப்போது நபி (ஸல்) அவர்கள் "மக்களே! மெதுவாகக் கூறுங்கள்! ஏனெனில் நீங்கள் காது கேட்காதவனையோ, அல்லது மறைந்திருப்பவனையோ அழைக்கவில்லை. அவன் உங்களுடனே இருக்கின்றான். அவன் செவியேற்பவன்;  அருகி-ருப்பவன்; அவனது பெயர் நிறைவானது.  அவனது மதிப்பு உயர்ந்தது'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் :  அபூ மூஸா (ர-),   நூல்கள் : புகாரி (2992, 4205, 6384, 6409, 6610, 7386), முஸ்-ம் (4873, 4874)
முஸ்-மின் (4874வது) அறிவிப்பில் "லாயிலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர்' என்று அழைத்ததாக இடம் பெற்றுள்ளது.
மேற்கூறப்பட்ட குர்ஆன் வசனங்கள், நபிமொழிகளின் மூலம் விளங்கப்படும் பிரார்த்தனை ஒழுங்குகளில் ஒன்றான "இரகசியமாகக் கேட்க வேண்டும்' என்ற ஒழுங்கை பல்வேறு இடங்களில் முஸ்-ம்கள் மீறுவதைப் பார்க்கின்றோம்.
ஐவேளைத் தெழுகைக்குப் பிறகு இமாம் மைக் வைத்து சப்தமிட்டு துஆச் செய்வதையும், பின்னால் உள்ளவர்கள் (அதன் பொருள் கூட விளங்காமல்) ஆமீன் என்று சப்தமிட்டுக் கூறுவதையும் பார்க்கிறோம்.
மேலும் மாநாடு, பொதுக்கூட்டங்கள் முடிவிலும் ஒருவர் சப்தமிட்டு துஆ கேட்க மற்றவர்கள் சப்தமிட்டு ஆமீன் கூறுவதையும் காண்கிறோம்.
இதைப் போன்று குர்ஆன் ஓதி முடிக்கும் போது, கத்தம் ஃபாத்திஹாக்கள் என்ற பித்அத்தை நிறைவேற்றும் போது, வீடு குடி புகும் போது, மவ்-து ஓதும் போது, திருமணம் நடக்கும் போது, மண்ணறையில் அடக்கம் செய்யும் போது இப்படிப் பல இடங்களில் திருமறைக் குர்ஆனின் (7:55) வசனத்தை நேரடியாக மீறுவதைக் காண்கிறோம்.
பொதுவாக பிரார்த்தனையை இரகசியமாகக் கேட்க வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்.  எந்த வகைப் பிரார்த்தனையாக இருந்தாலும் இரகசியமாகவே கேட்க வேண்டும்.  இதற்கு மாற்றமாக சப்தமிட்டுக் கேட்க வேண்டுமானால் அந்த வகைப் பிரார்த்தனைக்கு தெளிவான சான்று குர்ஆன், நபிமொழிகளில் இருக்க வேண்டும்.
எதற்கு சப்தமிட்டுக் கேட்க அனுமதிக்கப் படுகின்றதோ அந்தப் பிரார்த்தனையைத் தவிர வேறு எதற்கும் இதைச் சான்றாக எடுத்துக் கொள்ளவும் கூடாது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
குர்ஆனிலும், நபிமொழித் தொகுப்புகளிலும் ஒருவர் துஆச் செய்ய மற்றவர் ஆமீன் கூற ஆதாரம் உள்ளது என்று சிலர் கூறுகின்றார்கள்.  அவ்வாறு பொது மேடைகளிலும், துண்டுப் பிரசுரங்களிலும் கூறியுள்ளனர்.  அவர்களின் கூற்றை இப்போது பார்ப்போம்.
ஆதாரம் எண்: 1
وَقَالَ مُوسَى رَبَّنَا إِنَّكَ آتَيْتَ فِرْعَوْنَ وَمَلَأَهُ زِينَةً وَأَمْوَالًا فِي الْحَيَاةِ الدُّنْيَا رَبَّنَا لِيُضِلُّوا عَنْ سَبِيلِكَ رَبَّنَا اطْمِسْ عَلَى أَمْوَالِهِمْ وَاشْدُدْ عَلَى قُلُوبِهِمْ فَلَا يُؤْمِنُوا حَتَّى يَرَوْا الْعَذَابَ الْأَلِيمَ (88)قَالَ قَدْ أُجِيبَتْ دَعْوَتُكُمَا فَاسْتَقِيمَا وَلَا تَتَّبِعَانِ سَبِيلَ الَّذِينَ لَا يَعْلَمُونَ(89) سورة يونس
"எங்கள் இறைவா! ஃபிர்அவ்னுக்கும், அவனது சபையோருக்கும் இவ்வுலக வாழ்க்கையில் அலங்காரத்தையும், செல்வங்களையும் அளித்திருக்கிறாய்! எங்கள் இறைவா! உன் பாதையிலிருந்து அவர்களை வழி கெடுக்கவே (இது பயன்படுகிறது). எங்கள் இறைவா! அவர்களின் செல்வங்களை அழித்து, அவர்களின் உள்ளங்களையும் கடினமாக்குவாயாக! துன்புறுத்தும் வேதனையைக் காணாமல் அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்'' என்று மூஸா கூறினார்.
"உங்கள் இருவரின் பிரார்த்தனை ஏற்கப்பட்டது. இருவரும் உறுதியாக நில்லுங்கள்! அறியாதோரின் பாதையை இருவரும் பின்பற்றாதீர்கள்!'' என்று (இறைவன்) கூறினான்.(அல்குர்ஆன் 10:88,89)
10:88வது வசனத்தில் மூஸா (அலை) அவர்கள் தான் பிரார்த்தனை செய்ததாக அல்லாஹ் கூறுகின்றான்.  ஆனால் அதற்கடுத்த வசனத்தில் "உங்கள் இருவரின் பிரார்த்தனை ஏற்கப்பட்டது'' என்று அல்லாஹ் கூறுகின்றான்.
ஒருவர் துஆச் செய்ய, இருவரின் பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டதாக எப்படிக் கூற முடியும்?  மூஸா (அலை) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள்.  ஹாரூன் (அலை) அவர்கள் "ஆமீன்' சொன்னார்கள்.  எனவே தான் அல்லாஹ் இருவரின் பிரார்த்தனையை ஏற்றுக் கொள்வதாகக் கூறுகின்றான் என்று கூறி பின்வரும் செய்தியை ஆதாரமாகக் குறிப்பிடுகின்றார்கள்.
1586 أنا أبو طاهر نا أبو بكر نا محمد بن معمر القيسي نا أبو عامر وثنا محمد بن معمر أيضا ثنا حرمي بن عمارة عن زربي مولى لآل المهب قال سمعت أنس بن مالك يقول كنا عند النبي  صلى الله عليه وسلم  جلوسا فقال إن الله   أعطاني خصالا  ثلاثة فقال رجل من جلسائه وما هذه الخصال يا رسول الله قال أعطاني صلاة في الصفوف وأعطاني التحية إنها لتحية أهل الجنة وأعطاني التأمين ولم يعطه أحدا من النبيين قبل إلا أن يكون الله أعطى هارون يدعو موسى ويؤمن هارون  (صحيح ابن خزيمة ج: 3 ص: 39) باب ذكر ما كان الله عز وجل خص نبيه  صلى الله عليه وسلم  بالتأمين فلم يعطه أحدا من النبيين قبله خلا هارون حين دعا موسى  فأمن هارون أن ثبت الخبر
நாங்கள் நபி (ஸல்) அவர்களின் அவையில் இருந்த போது நபி (ஸல்) அவர்கள் "எனக்கு மூன்று பாக்கியங்களை அல்லாஹ் வழங்கியுள்ளான்' என்று கூறினார்கள்.  அவ்வவையில் இருந்த ஒருவர், அல்லாஹ்வின் தூதரே! அந்தப் பாக்கியங்கள் என்ன? என்று வினவினார்.
1. ஸஃப்பில் (வரிசையில்) நின்று தொழும் பாக்கியத்தை வழங்கியுள்ளான்.
2. ஸலாம் சொல்லும் பாக்கியத்தை வழங்கியுள்ளான்.  இது சொர்க்கவாசிகளின் காணிக்கையாகும்.
3.  ஆமீன் சொல்லும் பாக்கியத்தை வழங்கியுள்ளான்.  எனக்கு முன்னர் அனுப்பப்பட்ட இறைத்தூதர்களில் ஹாரூன் (அலை) அவர்களைத் தவிர வேறு எவருக்கும் வழங்கவில்லை.  மூஸா (அலை) துஆச் செய்தார்கள்.  ஹாரூன் (அலை) ஆமீன் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ர-),  நூல் : இப்னு ஹுஸைமா (1586)
இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதல்ல!  இச்செய்தியின் இரண்டாவது அறிவிப்பாளரான ஸுரபி என்பவர் பலவீனமானவராவார்.  இவர் விஷயத்தில் ஆட்சேபணை உள்ளது என்று இமாம் புகாரியும், இவர் அனஸ் (ர-) மற்றும் இவரல்லாதவர்கள் வழியாக பல மறுக்கப்பட வேண்டிய செய்திகளை அறிவித்துள்ளார் என்று இமாம் திர்மிதியும், இவரது செய்தியின் மூலத்தில் சில மறுக்கப்பட வேண்டியவைகள் உள்ளன என்று இமாம் இப்னு அதீயும், இவர் அனஸ் (ர-) அவர்கள் வழியாக அடிப்படையில்லாத செய்திகளை அறிவித்துள்ளார். இவர் ஆதாரத்திற்குரியவர் அல்ல! என்று இமாம் இப்னு ஹிப்பானும், பலவீனமானவர் என்று உகைலீயும் குறிப்பிட்டுள்ளனர்.  (தஹ்தீபுத் தஹ்தீப்)
இச்செய்தியைப் பதிவு செய்த இமாம் இப்னு ஹுஸைமா அவர்கள் கூட,
இச்செய்தி உறுதியானதாக இருந்தால் மூஸா (அலை) துஆச் செய்யும் போது ஹாரூன் (அலை) தவிர, மற்ற இறைத்தூதர்கள் எவருக்கும் வழங்காமல் நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் ஆமீனை அல்லாஹ் குறிப்பாக்கியுள்ளான் என்பது பற்றிய பாடம்
என்று கூறி இதில் குறைபாடு இருக்க வாய்ப்புள்ளது என்பதை, இச்செய்தி உறுதியானதாக இருந்தால் என்ற வாசகத்தின் மூலமாக சுட்டிக் காட்டியுள்ளார்கள்.  எனவே பலவீனமான இச்செய்தியை வைத்துக் கொண்டு ஒரு கருத்தை நிலை நிறுத்த முடியாது.
ஹாரூன் (அலை), அவர்கள் "ஆமீன்' கூறவில்லை என்றால், "உங்கள் இருவரின் துஆவை ஏற்றுக் கொண்டேன்' என்று அல்லாஹ் கூறுவதன் பொருள் என்ன என்ற கேள்வி நமக்கு எழலாம்.
பலரின் கருத்தை ஒருவரிடம் கூற வேண்டுமானால் ஒருவர் மட்டும் அச்செய்தியைக் கூற மற்றவர் அங்கு இருந்தாலே அனைவரும் அக்கருத்தைக் கூறியதாகத் தான் அதைக் கேட்பவர் எடுத்துக் கொள்வார்.
மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மக்கள் சார்பாக ஒரு கோரிக்கை வைக்கச் செல்லும் போது, ஒரு பெரும் கூட்டமே அங்கு செல்லும்.  அப்போது ஒருவர் மட்டுமே கோரிக்கையை எடுத்துச் சொல்வார்.  மற்றறவர்கள் அமைதியாக இருப்பார்கள்.  அப்போது கோரிக்கை சொன்னவர் ஒருவராக இருந்தாலும் மற்றவர்களும் அங்கு இருந்ததால் அனைவரும் அக்கோரிக்கையை வைத்ததாகத் தான் மாவட்ட ஆட்சித் தலைவர் எடுத்துக் கொள்வார்.
இதைப் போன்றே மூஸா (அலை) அவர்களுடன் ஹாரூன் (அலை) அவர்களும் ஃபிர்அவ்ன் மூலம் ஏற்படும் பிரச்சனைகளை உணர்ந்து அல்லாஹ்விடம் முறையிட எண்ணுகின்றனர்.  ஹாரூன் (அலை) சார்பாக மூஸா (அலை) அவர்கள் துஆச் செய்கின்றார்கள்.  எனவே தான் அல்லாஹ் உங்கள் இருவரின் துஆவை ஏற்றுக் கொண்டேன் என்று கூறுகின்றான்.
இக்கருத்துக்குச் சான்றாக பின்வரும் வசனங்களும் உள்ளன.
وَإِذْ نَادَى رَبُّكَ مُوسَى أَنْ ائْتِ الْقَوْمَ الظَّالِمِينَ(10)قَوْمَ فِرْعَوْنَ أَلَا يَتَّقُونَ(11)قَالَ رَبِّ إِنِّي أَخَافُ أَنْ يُكَذِّبُونِي(12)وَيَضِيقُ صَدْرِي وَلَا يَنْطَلِقُ لِسَانِي فَأَرْسِلْ إِلَى هَارُونَ(13)وَلَهُمْ عَلَيَّ ذَنْبٌ فَأَخَافُ أَنْ يَقْتُلُونِي(14)قَالَ كَلَّا فَاذْهَبَا بِآيَاتِنَا إِنَّا مَعَكُمْ مُسْتَمِعُونَ(15)فَأْتِيَا فِرْعَوْنَ فَقُولَا إِنَّا رَسُولُ رَبِّ الْعَالَمِينَ(16)أَنْ أَرْسِلْ مَعَنَا بَنِي إِسْرَائِيلَ    (17) سورة الشعراء
"அநீதி இழைக்கும் கூட்டமான ஃபிர்அவ்னுடைய சமுதாயத்தவரிடம் செல்! அவர்கள் அஞ்ச வேண்டாமா?'' என்று உமது இறைவன் மூஸாவை அழைத்த போது "என் இறைவா! அவர்கள் என்னைப் பொய்யரெனக் கருதுவார்கள் என நான் அஞ்சுகிறேன்'' என்று அவர் கூறினார்.  "என் உள்ளம் நெருக்கடிக்கு உள்ளாகும்.  என் நாவும் எழாது. எனவே ஹாரூனைத் தூதராக அனுப்புவாயாக!  அவர்களிடம் என் மீது ஒரு (கொலைக்) குற்றச் சாட்டு உள்ளது. எனவே அவர்கள் என்னைக் கொன்று விடுவார்கள் என அஞ்சுகிறேன்'' (என்றும் கூறினார்.)
"அவ்வாறில்லை! நமது சான்றுகளுடன் இருவரும் செல்லுங்கள்! நாம் உங்களுடன் செவியுற்றுக் கொண்டிருப்போம். ஃபிர்அவ்னிடம் சென்று "நாங்கள் அகிலத்தின் இறைவனுடைய தூதர்களாவோம். எங்களுடன் இஸ்ராயீலின் மக்களை அனுப்பி விடு!' என்று கூறுங்கள்!'' என்று (இறைவன்) கூறினான்.  (அல்குர்ஆன் 26:10-17)
இவ்வசனங்களில் "நாங்கள் அகிலத்தின் இறைவனுடைய தூதர்களாவோம்.  எங்களுடன் இஸ்ராயீ-ன் மக்களை அனுப்பி விடு'' என்று இருவரும் கூற வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிடுகின்றான்.  ஆனால் ஃபிர்அவ்னிடத்தில் இக்கோரிக்கையை வைத்துப் பேசியது மூஸா (அலை) அவர்கள் மட்டும் தான் என்று இன்னொரு வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

وَقَالَ مُوسَى يَافِرْعَوْنُ إِنِّي رَسُولٌ مِنْ رَبِّ الْعَالَمِينَ(104)حَقِيقٌ عَلَى أَنْ لَا أَقُولَ عَلَى اللَّهِ إِلَّا الْحَقَّ قَدْ جِئْتُكُمْ بِبَيِّنَةٍ مِنْ رَبِّكُمْ فَأَرْسِلْ مَعِي بَنِي إِسْرَائِيلَ(105) سورة الأعراف
"ஃபிர்அவ்னே! நான் அகிலத்தாருடைய இறைவனின் தூதர்.  அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர (வேறெதனையும்) கூறாதிருக்கக் கடமைப்பட்டவன். உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான சான்றை உங்களிடம் கொண்டு வந்துள்ளேன். எனவே என்னுடன் இஸ்ராயீலின் மக்களை அனுப்பு!'' என்று மூஸா கூறினார். (அல்குர்ஆன் 7:104, 105)
"நாங்கள் அகிலத்தின் இறைவனுடைய தூதர்களாவோம், எங்களுடன் இஸ்ராயீ-ன் மக்களை அனுப்பி விடு'' என்ற அல்லாஹ்வின் கட்டளையை ஹாரூன் (அலை) அவர்கள் மீறினார்கள் என்றோ அல்லது மூஸா (அலை) அவர்கள் இக்கோரிக்கை வைத்த போது ஹாரூன் (அலை) அவர்கள் ஆமீன் கூறினார்கள் என்றோ கூற முடியுமா?  ஃபிர்அவ்னிடம் இக்கோரிக்கையை வைக்க இருவரும் சென்றனர்.  மூஸா (அலை) அவர்கள் கோரிக்கை வைத்தார்கள்.  அப்போது ஹாரூன் (அலை) அவர்கள் அதை அங்கீகரிப்பது போல் அங்கு இருந்தார்கள்.  இது, ஹாரூன் (அலை) அவர்களும் அக்கோரிக்கை வைத்ததைப் போன்று தான் என்பதை அறிவுடையோர் விளங்கிக் கொள்வர்.
இதைப் போன்று தான் ஹாரூன் (அலை) அவர்கள் சார்பாகவும் மூஸா (அலை) அவர்கள் துஆச் செய்கின்றார்கள்.  எனவே தான் அல்லாஹ் உங்கள் இருவரின் துஆவை ஏற்றுக் கொண்டேன் என்று கூறுகின்றான்.
அடுத்து கூட்டு துஆவிற்கு அவர்கள் எடுத்து வைக்கும் ஆதாரத்தையும் அதற்குரிய பதிலையும் அடுத்த இதழில் இன்ஷா அல்லாஹ் பார்ப்போம்.

கூட்டு துஆ செய்யலாம் என்று கூறுபவர்கள் எடுத்து வைக்கும் இரண்டாவது ஆதாரம்:
6158 حدثنا أبو عبد الله محمد بن عبد الله الأصبهاني ثنا الحسين بن حفص ثنا حماد بن شعيب عن إسماعيل بن أمية أن محمد بن قيس بن مخرمة حدثه أن رجلا جاء زيد بن ثابت فسأله عن شيء فقال له زيد عليك بأبي هريرة فإنه بينا أنا وأبو هريرة وفلان في المسجد ذات يوم ندعو الله تعالى ونذكر ربنا خرج علينا رسول الله  صلى الله عليه وسلم  حتى جلس إلينا قال فجلس وسكتنا فقال عودوا للذي كنتم فيه قال زيد   فدعوت أنا  وصاحبي قبل أبي هريرة وجعل رسول الله  صلى الله عليه وسلم  يؤمن على دعائنا قال ثم دعا أبو هريرة فقال اللهم إني أسألك مثل الذي سألك صاحباي هذان وأسألك علما لا ينسى فقال رسول الله  صلى الله عليه وسلم  آمين فقلنا يا رسول الله ونحن نسأل الله علما لا ينسى فقال سبقكما بها الدوسي صحيح الإسناد ولم يخرجاه (المستدرك على الصحيحين ج: 3 ص: 582)

நான், அபூஹுரைரா (ர-) மற்றும் இன்னொரு மனிதரும் பள்ளியில் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து கொண்டும் எங்கள் இறைவனை நினைவு கூர்ந்து கொண்டும் இருந்த போது நபி (ஸல்) அவர்கள் வந்து எங்களிடம் அமர்ந்து கொண்டார்கள்.  அவர்கள் அமர்ந்த போது நாங்கள் அமைதியானோம்.  அப்போது நீங்கள் செய்து கொண்டிருந்ததின் பால் திரும்புங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  நானும் என் தோழரும் அபூஹுரைரா (ர-) அவர்களுக்கு முன்னால் பிரார்த்தனை செய்தோம்.  நபி (ஸல்) அவர்கள் எங்கள் பிரார்த்தனைக்கு "ஆமீன்'' கூறினார்கள்.  பின்னர் அபூஹுரைரா (ர-), "இறைவா! என்னுடைய இந்த இரண்டு தோழர்கள் கேட்டதைப் போன்றும் மறக்காத கல்வியையும் உன்னிடம் கேட்கின்றேன்'' என்று கூறினார்.  நபி (ஸல்) அவர்கள், "ஆமீன்'' என்றார்கள்.  அப்போது "அல்லாஹ்வின் தூதரே! நாங்களும் மறக்காத கல்வியை அல்லாஹ்விடம் கேட்கிறோம்'' என்றோம்.  "இப்பிரார்த்தனையின் பால் உங்கள் இருவரையும் தவ்ஸி (என்ற கோத்திரப் பெயருடைய அபூஹுரைரா) முந்தி விட்டார்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஸைத் பின் ஸாபித் (ர-),  நூல் : ஹாகிம் 6158
ஸைத் பின் ஸாபித் (ர-), அபூஹுரைரா (ர-) ஆகியோரின் துஆவிற்கு நபி (ஸல்) அவர்களே "ஆமீன்'' கூறியிருப்பதால் கூட்டு துஆவிற்கு இந்த ஹதீஸ் மிகத் தெளிவான சான்றாகும் என்று சிலர் கூறுகின்றார்கள்.
கூட்டு துஆவிற்கு ஆதாரமாக எடுத்து வைக்கப்படும் இந்தச் செய்தி ஆதாரப்பூர்வமானது அல்ல!
ஹாகிமில் இடம் பெறும் அறிவிப்பாளரில் மூன்றாவது அறிவிப்பாளர் ஹம்மாத் பின் ஷுஐப் பலவீனமானவராவார்.
இமாம் தஹபி அவர்கள் ஸியரு அஃலாமின் நுபலா என்ற தமது வரலாற்று நூ-ல் ஹாகிமில் இடம் பெற்ற இந்தச் செய்தியைப் பதிவு செய்த பின்னர், இதில் ஹம்மாத் பின் ஷுஐப் என்ற பலவீனமானவர் இடம் பெற்றுள்ளார் என்று குறிப்பிடுகின்றார்.
.... فقلنا ونحن نسأل الله علما لا ينسى فقال سبقكما بها الدوسي   أخرجه الحاكم في مستدركه لكن حماد ضعيف (سير أعلام النبلاء ج: 2 ص: 600)

...நாங்கள் அல்லாஹ்விடம் மறக்காத கல்வியைக் கேட்கிறோம் என்று கூறினோம்.  அப்போது இதில் உங்கள் இருவரையும் தவ்ஸி (அபூஹுரைரா) முந்தி விட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  இச்செய்தியை ஹாகிம் பதிவு செய்துள்ளார்கள்.  எனினும் (இதில் இடம் பெறும்) ஹம்மாத் பலவீனமானவர் ஆவார்.
101   حماد بن شعيب  التميمي أبو شعيب الحماني عن أبي الزبير يعد في الكوفيين فيه نظر (التاريخ الكبير ج: 3 ص: 25)
இவரிடத்தில் குறைபாடு உள்ளது என்று இமாம் புகாரி குறிப்பிட்டுள்ளார்கள்.
அத்தாரீகுல் கபீர்

135   حماد بن شعيب  ضعيف كوفي (الضعفاء والمتروكين للنسائي ج: 1 ص: 31)
ஹம்மாத் பின் ஷுஐப் பலவீனமானவர் என்று இமாம் நஸயீ குறிப்பிட்டுள்ளார்கள்.
அல்லுஅஃபாவு வல் மத்ருகீன் பாகம் : 1, பக்கம் : 31

  995 حماد بن شعيب أبو شعيب الحماني التميمي الكوفي ... وقال ابن حبان يقلب الأخبار ويرويها جهتها (الضعفاء والمتروكين لابن الجوزي ج: 1 ص: 233)

இவர் செய்திகளை மாற்றி அதனுடைய கோவணத்தை அறிவிப்பார் என்று இப்னு ஹிப்பான் குறிப்பிடுகின்றார்கள்.
அல்லுஅஃபாவு வல் மத்ருகீன்- இப்னுல் ஜவ்ஸி 995
1604 سمعت يحيى يقول حماد بن شعيب ضعيف (تاريخ ابن معين (رواية الدوري) ج: 3 ص: 333)

ஹம்மாத் பின் ஷுஐப் பலவீனமானவர் என்று புகாரி இமாமின் ஆசிரியர் இப்னு முயீன் குறிப்பிடுகின்றார்கள்.
தாரீக் இப்னு முயீன், பாகம் : 3, பக்கம் : 333

2374 سمعت يحيى يقول حماد بن شعيب  ليس بشيء  يقال أبو شعيب الحماني وهو كوفي (تاريخ ابن معين (رواية الدوري) ج: 3 ص: 485)
மற்றோர் இடத்தில் ஹம்மாத் பின் ஷுஐப் ஒரு பொருட்டாகக் கருதப்பட மாட்டார் என்று இப்னு முயீன் குறிப்பிட்டுள்ளார்கள்.
தாரீக் இப்னு முயீன்
94 وسئل أبو داود عن حماد بن شعيب  فقال تركوا حديثه (سؤالات أبي عبيد الآجري ج: 1 ص: 138)
ஹம்மாத் பின் ஷுஐப் என்பரைப் பற்றி இமாம் அபூதாவூத் அவர்களிடம் கேட்ட போது, அவருடைய ஹதீஸ்களை (ஹதீஸ்கலை வல்லுனர்கள்) விட்டு விட்டனர் என்று கூறினார்.
ஸுவாலாத்து அபீ உபைத் அல் ஆஜிரீ, பாகம் : 1, பக்கம் : 138

419   حماد بن شعيب الحماني التميمي الغرماء أبا شعيب كوفي الغرماء أبا شعيب كوفي ثنا علي بن احمد بن سليمان حدثنا احمد بن سعد سألت يحيى بن معين عن حماد بن شعيب  فقال ليس بشيء ولا يكتب حديثه (الكامل في ضعفاء الرجال ج: 2 ص: 242)
யஹ்யா பின் முயீன் அவர்களிடம் ஹம்மாத் பின் ஷுஐப் என்பவரைப் பற்றிக் கேட்ட போது, "அவர் ஒரு பொருட்டாகக் கருதப் பட மாட்டார்.  இவருடைய ஹதீஸ்கள் பதிவு செய்யப்படாது'' என்று கூறியதாக அஹ்மத் பின் ஸஅத் குறிப்பிடுகின்றார்கள்.
அல்காமில் ஃபீ லுஅஃபாயிர் ரிஜால், பாகம் : 2, பக்கம் : 242

حدثنا عبد الرحمن قال سئل أبو زرعة عن حماد بن شعيب فقال كوفي ضعيف الحديث ( الجرح والتعديل ج: 3 ص: 142)
ஹம்மாத் பின் ஷுஐப் என்பவரைப் பற்றி அபூஸுர்ஆ அவர்களிடம் கேட்ட போது இவர் கூஃபாவைச் சேர்ந்த பலவீனமானவர் என்றார்கள்.
அல்ஜரஹு வத்தஃதீல், பாகம் : 3, பக்கம் : 142

  2257 حماد بن شعيب الحماني الكوفي عن أبي الزبير وغيره ...  وقال ابن عدي أكثر حديثه مما لا يتابع عليه (ميزان الإعتدال في نقد الرجال ج: 2 ص: 366)

இவர் அறிவிக்கும் பெரும்பாலான ஹதீஸ்களை மற்ற எவரும் அறிவித்திருக்க மாட்டார்கள்.
மீஸானுல் இஃதிதால், பாகம் : 2, பக்கம் 366
1413 حماد بن شعيب الحماني الكوفي ... ونقل بن الجارود عن البخاري أنه قال فيه منكر الحديث وفي موضع آخر تركوا حديثه وقال الساجي فيه ضعف قلت وأخرج له مع هذا الحاكم في مستدركه (لسان الميزان ج: 2 ص: 348)
ஹதீஸ் துறையில் மறுக்கப்பட வேண்டியவர் என்று இமாம் புகாரி கூறினார்கள்.  மற்றோர் இடத்தில் இவருடைய ஹதீஸ்கைளை (அறிஞர்கள்) விட்டு விட்டார்கள் என்றும் இமாம் புகாரி கூறியுள்ளதாக இப்னுல் ஜாரூத் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.  இவர் பலவீனமானவர் என்று ஸாஜி கூறியுள்ளார்கள்.  இதோடு, (இத்தனை விமர்சனங்களுடன்) ஹாகிம் அவர்கள் தன்னுடைய முஸ்தத்ரக் (ஹாகிமில்) இவருடைய செய்திகளைப் பதிவு செய்துள்ளார்கள் என்று நான் (இப்னு ஹஜர்) கூறுகின்றேன்.
-ஸானுல் மீஸான், பாகம் : 2, பக்கம் : 348
ஹம்மாத் பின் ஷுஐப் என்பவர் பலவீனமானவர் என்று ஹதீஸ் கலை அறிஞர்கள் உறுதி செய்துள்ளதால் ஹாகிமில் இடம் பெறும் செய்தியை ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடிடியாது.
இதே செய்தி ஹம்மாத் பின் ஷுஐப் இடம் பெறாமல் வேறு அறிவிப்பாளர் வரிசையில் வேறு சில நூற்களில் இடம் பெற்றுள்ளது.  அந்த ஹதீஸ்களின் தரத்தையும் நாம் ஆராய்வோம்.
இமாம் நஸயீ அவர்களின் "அஸ்ஸுனனுல் குப்ரா' எனும் நூ-ல் இடம் பெறும் செய்தி

5870 أنبأ محمد بن إبراهيم قال حدثنا الفضل بن العلاء قال حدثنا إسماعيل بن أمية عن محمد بن قيس عن أبيه أنه أخبره ثم أن رجلا جاء زيد بن ثابت فسأله عن شيء فقال له زيد عليك أبا هريرة فإني بينما أنا وأبو هريرة وفلان في المسجد ذات يوم ندعو الله ونذكر ربنا خرج علينا رسول الله  صلى الله عليه وسلم  حتى جلس إلينا فسكتنا فقال عودوا للذي كنتم فيه قال زيد   فدعوت أنا  وصاحبي قبل أبي هريرة وجعل رسول الله  صلى الله عليه وسلم  يؤمن على دعائنا ثم دعا أبو هريرة فقال اللهم إني أسألك مثل ما سألك صاحباي هذان وأسألك علما لا ينسى فقال رسول الله  صلى الله عليه وسلم آمين فقال يا رسول الله ونحن نسأل الله علما لا ينسى فقال سبقكم بها الغلام الدوسي (السنن الكبرى ج: 3 ص: 440)
தப்ரானியின் "அல்முஃஜமுல் அவ்ஸத்'-ல் இடம் பெறும் செய்தி :

1228حدثنا أحمد قال حدثنا محمد بن صدران قال حدثنا الفضل بن العلاء عن إسماعيل بن أمية عن محمد بن قيس عن أبيه ثم أن رجلا جاء زيد بن ثابت فسأله عن شيء فقال له زيد عليك بأبي هريرة فإني بينا إذا وأبو هريرة وفلان ذات يوم في المسجد ندعوا ونذكر ربنا إذ خرج علينا رسول الله حتى جلس إلينا فسكتنا فقال عودوا للذي كنتم فيه قال زيد   فدعوت أنا  وصاحبي قبل أبي هريرة وجعل النبي يؤمن على دعائنا ثم دعا أبو هريرة فقال اللهم إني أسألك مثل ما سألك صاحباي وأسألك علما لا ينسى فقال النبي آمين فقلنا يا رسول الله نحن نسأل الله علما لا ينسى فقال رسول الله سبقكما بها الغلام الدوسي لم يرو هذا الحديث عن إسماعيل إلا الفضل ولا يروى عن زيد بن ثابت إلا بهذا الإسناد (المعجم الأوسط ج: 2 ص: 54)
இந்த இரண்டு நூற்களில் ஹம்மாத் பின் ஷுஐப் இடம் பெறாவிட்டாலும் ஃபழ்ல் பின் அல்அலா என்பவர் இடம் பெற்றுள்ளார்.  இவரைப் பற்றிய விமர்சனங்களைக் காண்போம்.

520 خ س البخاري والنسائي الفضل بن العلاء أبو العباس ويقال أبو العلاء الكوفي نزيل البصرة ... وقال الدارقطني كان كثير الوهم  (تهذيب التهذيب ج: 8 ص: 254)
 (ஃபழ்ல் பின் அலா நம்பகமானவர் என்று ஹதீஸ் கலை அறிஞர்கள் கூறும் செய்திகளுடன் பின்வரும் விமர்சனம் இடம் பெற்றுள்ளது)
........இவர் அதிகம் சந்தேகம் கொள்பவர் (பெரும்பாலான செய்திகளைத் தெளிவாகக் கூறமாட்டார்) என்று இமாம் தாரகுத்னீ அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். (தஹ்தீபுத் தஹ்தீப், பாகம்:8, பக்கம்:254)
5412 الفضل بن العلاء  أبو العباس ويقال أبو العلاء الكوفي نزيل البصرة صدوق له أوهام من التاسعة خ س (تقريب التهذيب ج: 1 ص: 446)
"ஃபழ்ல் பின் அலா என்பவர் நல்லவர், இவர் விஷயத்தில் சில சந்தேகங்கள் உள்ளன'' என்று ஹாஃபிழ் இப்னு ஹஜர் அவர்கள் இறுதியாக ஒரு முடிவை வழங்கியுள்ளார்கள்.
தக்ரீபுத் தஹ்தீப், பாகம் : 1, பக்கம் : 446
ஃபழ்ல் பின் அலா என்பவர் நல்ல மனிதர் என்றாலும் இவர் பல செய்திகளை தெளிவற்ற முறையில் சந்தேகத்திற்கிடமான முறையில் அறிவிப்பவர்.  இப்படிப்பட்டவரை ஹதீஸ் துறையில் ஆதாரமாகக் கொள்ள மாட்டார்கள்.  எனவே தான் இமாம் புகாரி அவர்கள் இவருடைய ஒரே ஹதீஸை (7372) மட்டும் பதிவு செய்துள்ளார்கள்.  இவருடைய ஹதீஸை வலுப்படுத்த இவரல்லாதவர் அறிவித்த செய்திகளையும் சேர்த்தே (1395, 1458, 1496) அறிவித்துள்ளார்கள்.
எனவே ஃபழ்ல் பின் அலா அறிவிக்கும் இச்செய்தியின் கருத்து திருமறைக் குர்ஆனுக்கும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்கும் மாற்றமாக இருப்பதாலும், இவரைப் பற்றி ஹதீஸ் கலை அறிஞர்கள் குறை கூறியிருப்பதாலும் இச்செய்தியை ஆதாரமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.            - வளரும் இன்ஷா அல்லாஹ்
கூட்டு துஆவிற்கு எடுத்து வைக்கப்படும் அடுத்த ஆதாரம்:


5478 أخبرنا الشيخ الإمام أبو بكر بن إسحاق أنا بشر بن موسى ثنا أبو عبد الرحمن المقري ثنا ابن لهيعة قال حدثني أبو هبيرة عن حبيب بن مسلمة الفهري وكان مجاب الدعوة أنه أمر على جيش فدرب الدروب فلما أتى العدو قال سمعت رسول الله  صلى الله عليه وسلم يقول ثم لا يجتمع ملأ فيدعو بعضهم  ويؤمن البعض إلا أجابهم الله ثم إنه حمد الله وأثنى عليه ثم قال اللهم احقن دماءنا واجعل أجورنا أجور الشهداء فبينما هم على ذلك إذ نزل الهنباط أمير العدو فدخل على حبيب سرادقه ( المستدرك على الصحيحين ج: 3 ص: 390)
  "ஒரு கூட்டத்தினர் ஒன்றிணைந்து அவர்களில் சிலர் பிரார்த்தனை செய்ய மற்றவர்கள் ஆமீன் கூறினால் அவர்களின் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதில்லை'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஹபீப் பின் மஸ்லமா (ர-),  நூல் : ஹாகிம் 5478
இதே செய்தி இமாம் தப்ரானியின் அல்முஃஜமுல் கபீர் என்ற நூ-லும் பதிவு செய்யப் பட்டுள்ளது.
3536 حدثنا بشر بن موسى ثنا أبو عبد الرحمن المقري ثنا ابن لهيعة حدثني بن هبيرة عن حبيب بن مسلمة الفهري وكان مستجابا أنه أمر على جيش فدرب الدروب فلما لقي العدو قال للناس سمعت رسول الله  صلى الله عليه وسلم يقول ثم لا يجتمع ملأ فيدعو بعضهم  ويؤمن سائرهم إلا أجابهم الله ثم أنه حمد الله وأثنى عليه فقال اللهم احقن دماءنا واجعل أجورنا أجور الشهداء فبينا هم على ذلك إذ نزل الهنباط أمير العدو فدخل على حبيب سرادقة قال أبو القاسم الهنباط بالرومية صاحب الجيش ( المعجم الكبير ج: 4 ص: 21)
இந்த இரண்டு நூற்களிலும் மூன்றாவது அறிவிப்பாளராக "இப்னு லஹீஆ' என்பவர் இடம் பெறுகின்றார்.  இவரின் தரம் என்னவென்பதைப் பார்ப்போம்.
  346 عبد الله بن لهيعة بن عقبة أبو عبد الرحمن البصري ضعيف (الضعفاء والمتروكين للنسائي ج: 1 ص: 64)
அப்துல்லாஹ் பின் லஹீஆ என்பவர் பலவீனமானவர் என்று இமாம் நஸயீ கூறினார்கள்.
நூல் : அல்லுஅஃபாவு வல் மத்ரூகீன், பாகம் : 1, பக்கம் : 64

533 قلت كيف رواية بن لهيعة عن أبي الزبير عن جابر فقال ابن  لهيعة  ضعيف الحديث  (تاريخ ابن معين (رواية عثمان الدارمي) ج: 1 ص: 153)
அபூஸுபைர் வழியாக இப்னு லஹீஆ அறிவிக்கும் செய்தி பற்றி நான் கேட்டேன்.  அதற்கு இப்னு முயீன் அவர்கள், இப்னு லஹீஆ ஹதீஸ் துறையில் பலவீனமானவர் என்று கூறினார்கள்.
நூல் : தாரீக் இப்னு முயீன், பாகம் : 1, பக்கம் : 153

5388 سمعت يحيى يقول ابن لهيعة لا يحتج بحديثه (تاريخ ابن معين (رواية الدوري) ج: 4 ص: 481)
இப்னு லஹீஆ என்பவரின் ஹதீஸ் ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்படாது என்று யஹ்யா (பின் முயீன்) கூறியதை நான் செவியுற்றுள்ளேன்.
நூல் : தாரீக் இப்னு முயீன், பாகம் : 1, பக்கம் : 481

140 عبد الله بن لهيعة  الحضرمي قاضي مصر اختلط في آخر عمره وكثر عنه المناكير في روايته  (طبقات المدلسين ج: 1 ص: 54)
அப்துல்லாஹ் பின் லஹீஆ என்பவர் எகிப்தின் நீதிபதியாக இருந்தார்.  இறுதிக் காலத்தில் மூளை குழம்பி விட்டது.  எனவே அவருடைய அறிவிப்புகளில் மறுக்கப் பட வேண்டியவை அதிகமாக உள்ளன.
நூல் : தபகாத்துல் முதல்-ஸீன், பாகம் : 1, பக்கம் : 54

  538 عبد الله بن لهيعة  بن عقبة الحضرمي الغافقي قاضي مصر كنيته أبو عبد الرحمن ... قال عبد الرحمن بن مهدي لا أحمل عن بن لهيعة قليلا ولا كثيرا ... قال يحيى بن سعيد قال لي بشر بن السري لو رأيت بن لهيعة لم تحمل عنه حرفا ... قال أبو حاتم وأما رواية المتأخرين عنه بعد احتراق كتبه ففيها مناكير كثيرة (المجروحين ج: 2 ص: 14)
"இப்னு லஹீஆ வழியாக குறைவாகவோ, அதிகமாகவோ (எதையும்) எடுத்துக் கொள்ள மாட்டேன்' என்று அப்துர்ரஹ்மான் பின் மஹ்தி கூறுகின்றார்கள்.  "நீ இப்னு லஹீஆவைப் பார்த்தால் அவரிடமிருந்து ஒரு எழுத்தைக் கூட எடுத்துக் கொள்ளாதே என்று பிஷ்ர் என்னிடம் கூறினார்' என்று யஹ்யா பின் ஸயீத் கூறுகின்றார்கள்.  "அவருடைய நூல் எரிக்கப்பட்ட பிறகு பிற்காலத்தில் அறிவித்த செய்திகளில் ஏராளமான மறுக்கப்பட வேண்டிய செய்திகள் உள்ளன' என்று அபூஹாத்தம் கூறுகின்றார்கள்.
நூல் : அல்மஜ்ரூஹீன், பாகம் : 2, பக்கம் : 14

وقال البخاري عن يحيى بن بكير احترقت منزل ابن لهيعة وكتبه في سنة سبعين ومئة (تهذيب الكمال ج: 15 ص: 496)
இப்னு லஹீஆவின் வீடும் அவரது நூற்களும் ஹிஜ்ரி 170ல் எரிக்கப்பட்டது என்று யஹ்யா பின் புகைர் வழியாக இமாம் புகாரி அறிவிக்கின்றார்கள்.  (நூல்:தஹ்தீபுல்கமால், பாகம்:15, பக்கம்: 496(
3563 عبد الله بن لهيعة  بفتح اللام وكسر بن عقبة الحضرمي أبو عبد الرحمن المصري القاضي صدوق من السابعة خلط بعد احتراق كتبه ورواية بن المبارك وابن وهب عنه أعدل من غيرهما وله في مسلم بعض شيء مقرون (تقريب التهذيب ج: 1 ص: 319)
அப்துல்லாஹ் பின் லஹீஆ, எகிப்து நாட்டைச் சார்ந்த நீதிபதியாவார்.  அவர் நல்லவர். அவருடைய நூற்கள் எரிந்த பிறகு மூளை குழம்பி விட்டது.  (இவரிடமிருந்து) இப்னுல் முபாரக், இப்னு வஹப் ஆகியோர் அறிவிப்பது இவ்விருவர் அல்லாதோர் அறிவிப்பை விட உறுதியானது, வலுவானது.  (இவரல்லாத மற்றவர்கள் இவருடைய செயதியைப் போன்று அறிவிக்கும் போது) இணைப்பாக இவருடைய சில செய்திகள் முஸ்-ம என்ற நூ-ல் இடம் பெற்றுள்ளது என்று ஹாபிழ் இப்னு ஹஜர் குறிப்பிடுகின்றார்கள்.
நூல் : தக்ரீபுத் தஹ்தீப், பாகம் : 1, பக்கம் : 319
இப்னு லஹீஆ என்பவர் மூத்த தாபியீன் ஆவார்.  இவர் தனக்குக் கிடைத்த செய்திகளை எழுதி வைத்துக் கொண்டு அதி-ருந்து அறிவித்து வந்தார்.  ஒருநாள் அவருடைய வீடு எரிந்த போது அவர் எழுதி வைத்த நூற்களும் சாம்பலாயின!  பின்னர் அவர் மூளை குழம்பி விட்டார்.  இதனால் இவருடைய பிந்திய அறிவிப்புக்கள் மிகவும் குளறுபடி நிறைந்ததாக காணப்பட்டது.  எனவே இவருடைய ஹதீஸ்களை ஹதீஸ் கலை அறிஞர்கள் நிராகரித்தனர். மூளை குழம்புவதற்கும், இவரது நூற்கள் எரிவதற்கும் முன்பு இவரிடம் கேட்ட இப்னுல் முபாரக், இப்னு வஹப் ஆகியோரின் செய்திகளை மட்டுமே ஏற்கலாம் என்று  சிலர் முடிவு செய்தனர்.  பெரும்பாலும் இவருடைய செய்திகளை ஹதீஸ கலை அறிஞர்கள் நிராகரித்துள்ளனர்.  இவரைப் பலவீனமானவர் என்றே கூறியுள்ளனர்.
ஹதீஸ் கலை மேதை ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் தமது புகாரியின் விரிவுரை நூலான ஃபத்ஹுல் பாரியில் பல இடங்களில் இவரைப் பலவீனமானவர் என்று கூறியுள்ளார்கள்.  அதில் ஒன்று இதோ:
وأخرجه الطبري من طريق أبي سلمة عن عائشة مرفوعا أيضا وفيه ابن   لهيعة وهو ضعيف (فتح الباري ج: 4 ص: 184)
அபூ ஸலமா வழியாக ஆயிஷா (ர-) அவர்கள் மூலம் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக (ஒரு செய்தியை) தப்ரீ பதிவு செய்துள்ளார்கள்.  இதில் இப்னு லஹீஆ இடம் பெற்றுள்ளார்.  இவர் பலவீனமானவர்.
ஃபத்ஹுல் பாரி, பாகம் : 4, பக்கம் : 184
ஹைஸமி அவர்கள் தமது மஜ்மவுஸ் ஸவாயித் என்ற நூ-ல் பல இடங்களில் இவரைப் பலவீனமானவர் என்று சுட்டிக் காட்டியுள்ளார்கள்.  அவற்றில் ஒன்று:

وعن أبي هريرة أن رسول الله  صلى الله عليه وسلم  قال لا يجتمع الكفر والإيمان في قلب امريء ولا يجتمع الصدق والكذب جميعا ولا تجتمع الخيانة والأمانة جميعا رواه أحمد وفيه ابن لهيعة وهو ضعيف (مجمع الزوائد ج: 1 ص: 93)
ஒரு மனிதனின் உள்ளத்தில் ஈமானும் குஃப்ரும் ஒன்றிணையாது.  உண்மையும் பொய்யும் ஒன்றிணையாது.  மோசடியும் அமானிதமும் ஒன்றிணையாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ர-) அறிவிக்கின்றார்கள்.  இதை அஹ்மத் இமாம் பதிவு செய்துள்ளார்கள்.  இதில் இப்னு லஹீஆ என்பவர் இடம் பெற்றுள்ளார்.  இவர் பலவீனமானவராவார்.
மஜ்மவுஸ் ஸவாயித், பாகம் : 1, பக்கம் : 93
இதைப் போன்றே திர்மிதி இமாம் அவர்களும் பல இடங்களில் இவரைப் பலவீனமானவர் என்று கூறியுள்ளார்கள்.

10 وَقَدْ رَوَى هَذَا الْحَدِيثَ ابْنُ لَهِيعَةَ عَنْ أَبِي الزُّبَيْرِ عَنْ جَابِرٍ عَنْ أَبِي قَتَادَةَ أَنَّهُ رَأَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَبُولُ مُسْتَقْبِلَ الْقِبْلَةِ حَدَّثَنَا بِذَلِكَ قُتَيْبَةُ حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ وَحَدِيثُ جَابِرٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَصَحُّ مِنْ حَدِيثِ ابْنِ لَهِيعَةَ وَابْنُ لَهِيعَةَ ضَعِيفٌ عِنْدَ أَهْلِ الْحَدِيثِ ضَعَّفَهُ يَحْيَى بْنُ سَعِيدٍ الْقَطَّانُ وَغَيْرُهُ مِنْ قِبَلِ حِفْظِهِ رواه الترمذي
நபி (ஸல்) அவர்கள் கிப்லாவை நோக்கி சிறுநீர் கழிப்பதை நான் கண்டேன் என்று அபூகதாதா (ர-) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
நபி (ஸல்) அவர்கள் மூலம் ஜாபிர் (ர-) அறிவிக்கும் (9வது) ஹதீஸ், இப்னு லஹீஆ இடம் பெறும் இந்த ஹதீஸை விட மிகவும் ஆதாரப்பூர்வமானதாகும்.  இப்னு லஹீஆ என்பவர் ஹதீஸ் கலை வல்லுனர்களிடம் பலவீனமானவர்.  யஹ்யா பின் ஸயீத் அல் கத்தானும் மற்றும் பலரும் இவரது நினைவாற்றல் அடிப்படையில் இவரைப் பலவீனமானவர் என்று முடிவு செய்துள்ளனர்.  (திர்மிதீ10)
மேலும் திர்மிதீ ஹதீஸ் எண் 576, 1036 ஆகிய ஹதீஸ்களைப் பார்வையிடுக!
ஸஹீஹ் முஸ்-மிலும் இப்னு லஹீஆவின் அறிவிப்பு இடம் பெறுகின்றது.  எனினும் இமாம் முஸ்-ம் அவர்கள் இப்னு லஹீஆவின் அறிவிப்பை இணைப்புச் செய்தியாகவே கொடுத்துள்ளார்கள்.
அஸர் தொழுகையை முன் நேரத்தில் தொழுவது தொடர்பான செய்தியில் அம்ர் பின் அல்ஹாரிஸ் என்ற நம்பகமான அறிவிப்பாளர் வழியாக அறிவித்து விட்டு அம்ர் பின் அல்ஹாரிஸ் என்ற அறிவிப்பாளர் வரும் இடத்தில் இப்னு லஹீஆ இடம் பெற்றும் அறிவிக்கின்றார் என்றே குறிப்பிட்டுள்ளார்.
பார்க்க ஸஹீஹ் முஸ்-ம் (தமிழாக்கம்) ஹதீஸ் எண் 1099
மேற் கூறப்பட்ட இப்னு லஹீஆ என்பவரைப் பற்றிய விமர்சனங்கள் அவர் பலவீனமானவர் என்பதைத் தெளிவு படுத்துகின்றது.  அவரின் அறிவிப்பை ஏற்றுக் கொள்ள வேண்டுமானால் (சிலரின் கூற்றுப் படி) இப்னுல் முபாரக், இப்னு வஹப் ஆகியோர் அவரிடமிருந்து அறிவித்திருக்க வேண்டும்.
கூட்டு துஆவிற்கு ஆதாரமாக எடுத்துக் காட்டப்படும் ஹாகிம், தப்ரானியில் இடம் பெறும் செய்தியில் இவ்விருவரில் ஒருவர் மூலம் அறிவிக்கப் படாததால் இச்செய்தி முற்றிலும் பலவீனமானதாகி விடுகின்றது.  எனவே இச்செய்தியை ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது.
ஒருவர் துஆச் செய்ய மற்றவர் ஆமீன் கூறுவதற்கு ஹதீஸ் நூற்களில் ஆதாரம் உண்டு என்று கூறுபவர்கள் எடுத்து வைக்கும் அடுத்த ஆதாரம்:




حدثنا عبدالله بن محمد بن جعفر ثنا عبدالله بن محمد بن العباس ثنا سلمة ابن شبيب ثنا إبراهيم بن الجنيد ثنا القواريري ثنا أبو عمران التمار قال غدوت يوما قبل الفجر إلى مسجد الحفري فإذا باب المسجد مغلق وإذا حسن جالس يدعو وإذا ضجة في المسجد وجماعة يؤمنون على دعائه والحسن يدعو قال فجلست على باب المسجد حتى فرغ من دعائه فقام فأذن وفتح باب المسجد فدخلت فلم أر في المسجد أحدا فلما أصبح وتفرق عنه الناس قلت له يا أبا سعيد إني والله رأيت عجبا قال وما رأيت فأخبرته بالذي رأيت وسمعت فقال أولئك جن من أهل نصيبين يجيئون فيشهدون معي ختم القرآن كل ليلة جمعة ثم ينصرفون   (حلية الأولياء ج: 10 ص: 140- صفوة الصفوة ج: 3 ص: 363 ج: 4 ص: 446)
ஒருநாள் நான் ஃபஜ்ருக்கு முன்னால் மஸ்ஜிதுல் ஹஃப்ரிக்குச் சென்றேன்.  அப்போது பள்ளிவாச-ன் கதவு மூடப்பட்டிருந்தது.  அங்கு (பள்ளியின் உள்ளே) ஹஸன் பஸரீ அவர்கள் துஆச் செய்து கொண்டிருந்தார்கள்.  ஒரு கூட்டத்தினர் அவருடைய துஆவிற்கு ஆமீன் என்று கூறிக் கொண்டிருந்தார்கள்.  பெரும் சப்தம் பள்ளியில் ஏற்பட்டது.  நான் பள்ளியின் வாச-ல் அமர்ந்து கொண்டேன்.  அவர் துஆவை முடித்த போது அவர் எழுந்து பாங்கு சொன்ன பின்னர் பள்ளி வாயிலைத் திறந்தார்.  அங்கு சென்ற போது ஒருவரும் இல்லை.
காலையில் மக்கள் அவரை விட்டுப் பிரிந்த போது "அபூஸயீத் (ஹஸன் பஸரீ) அவர்களே! அல்லாஹ்வின் மீது ஆûணாயக! நான் ஆச்சரியமான ஒரு விஷயத்தைக் கண்டேன்' என்றேன்.  நீர் என்ன கண்டீர்? என்று கேட்டார்கள்.  நான் பார்த்ததையும், கேட்டதையும் கூறினேன்.  அதற்கு (ஹஸன் பஸரீ) அவர்கள், "அந்தக் கூட்டம் நஸீபைன் என்ற பகுதியைச் சேர்ந்த ஜின்கள் ஆகும்.  அவை ஒவ்வொரு வெள்ளிக் கிழமை இரவும் குர்ஆனை முடிக்கும் போது என்னிடம் வருகை தருவார்கள்.  பின்னர் சென்று விடுவார்கள்'' என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : அபூஇம்ரான் அத்திமார்
நூற்கள் : ஹில்யத்துல் அவ்-யா பாகம் : 10, பக்கம் 140
ஹஃப்வத்துஸ் ஸஃப்வா பாகம் : 3, பக்கம் : 362, பாகம் : 4, பக்கம் : 446
ஹஸன் பஸரீ அவர்கள் துஆச் செய்ய ஒரு பெரும் கூட்டத்தினர் ஆமீன் கூறியுள்ளதால் இது கூட்டு துஆவிற்குத் தெளிவான ஆதாரம் என்று கூறுகின்றனர்.
இவர்கள் எடுத்து வைக்கும் இந்தச் செய்தி நபி (ஸல்) அவர்கள் தொடர்புடையது அல்ல!  நபித் தோழர்கள் கூட இதில் இடம் பெறவில்லை.  ஹஸன் பஸரீ என்பவர் தாபியீ (நபித்தோழர்கள் காலத்தில் வாழ்ந்தவர்) ஆவார்.  குர்ஆன், ஹதீஸ் ஆதாரமில்லாமல் இவர் செய்ததை ஆதாரமாக ஏற்றுக் கொள்ள முடியாது.  நபி (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் மட்டுமே பின்பற்றுவதற்கு தகுதியானதாகும்.
அடுத்து அவர்கள் கூட்டு துஆவிற்கு எடுத்துக் காட்டும் ஆதாரம்:

حدثنا أحمد بن إسحاق ثنا عبدالله بن سليمان ثنا عبد الجبار بن يحيى ثنا عقبة بن علقمة عن الأوزاعي قال لقي حسان بن عطية راهبا فجعل الراهب يدعو له وحسان يقول آمين فقالوا يا أبا بكر تؤمن على دعائه  قال أرجو أن يستجيب الله له في ولا يستجيب له في نفسه (حلية الأولياء ج: 6 ص: 73)
ஹஸ்ஸான் பின் அத்திய்யா அவர்கள் ஒரு துறவியைச் சந்தித்தார்கள்.  அந்தத் துறவி தனக்காக துஆச் செய்தார்.  ஹஸ்ஸான் ஆமீன் என்று கூறினார்.  அப்போது (அங்கிருந்தவர்கள், ஹஸ்ஸான் என்ற) "அபூபக்ரே! இவருடைய துஆவிற்கு நீங்கள் ஏன் ஆமீன் கூறுகின்றீர்கள்?'' என்று கேட்டனர்.  அதற்கு அவர், "அவருக்கு மட்டும் அல்லாஹ் பதிலளிக்காமல் எனக்கும் அவருக்கும் சேர்த்து அல்லாஹ் பதிலளிக்க வேண்டுமென நான் ஆதரவு வைக்கின்றேன்'' என்று பதிலளித்தார்.
அறிவிப்பவர் : அவ்ஸாயீ,  நூல் : ஹில்யத்துல் அவ்-யா, பாகம்: 6, பக்கம் : 73
இச்செய்தி நபிமொழி அல்ல!  இச்செய்தியில் இடம் பெறும் ஹஸ்ஸான் பின் அத்திய்யா என்பவர் நபித்தோழர் கூட கிடையாது.  தாபியீ ஆவார்.  தாபியீன்களின் செயல்பாடுகள் மார்க்கத்திற்கு ஆதாரமாகாது.  மேலும் இச்செய்தியில் இடம் பெறும் உக்பா பின் அல்கமா என்பவரைப் பற்றி ஹதீஸ் கலை வல்லுனர்கள் இவ்வாறு கூறுகின்றனர்.
2330   عقبة بن علقمة  المعافري البيروتي قال ابن عدي يروي عن الأوزاعي مالم يوافقه أحد عليه (الضعفاء والمتروكين لابن الجوزي ج: 2 ص: 181)
உக்பா பின் அல்கமா என்பவர் அவ்ஸாயீ மூலமாக வேறு எவரும் இவரைப் பற்றி தெரிவிக்காத செய்திகளை இவர் அறிவிப்பார்'' என்று இப்னு அதீ அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
நூல் : அல்லுஅஃபாவு வல் மத்ரூகீன், பாகம் : 2, பக்கம் : 181
இச்செய்தியையும் உக்பா என்பவர் அவ்ஸாயீ மூலமே அறிவிக்கின்றார்.  எனவே இச்செய்தி மேலும் பலவீனமடைகின்றது.  தாபியீன்களின் சொல் செயல் மார்க்கத்தின் அங்கீகாரமாக எடுத்துக் கொள்ளப்படாது என்ற அடிப்படையிலும் இந்தச் சான்று கூட்டு துஆவிற்கு ஆதாரமாக நிற்காது.

ஒருவர் துஆச் செய்ய மற்றவர்கள் ஆமீன் கூறுவதற்கு எடுத்து வைக்கப்படும் ஆதாரங்களையும் அதற்கான பதில்களையும் நாம் பார்த்து வருகின்றோம்.  கூட்டு துஆவிற்கு எடுத்து வைக்கப்படும் இன்னோர் ஆதாரத்தை இப்போது பார்ப்போம்.


ثنا الحسين بن عبد الله بن يزيد ثنا محمد بن يحيى بن فياض ثنا يوسف بن عطية ثنا ثابت عن أنس قال جاء شاب الى رسول الله  صلى الله عليه وسلم  فقال   أريد سفرا  فادع الله لي قال النبي  صلى الله عليه وسلم  ادع حتى أؤمن فقال اللهم وفقه فقال الشاب اللهم اجمع على الهدى أمرنا واجعل التقوى زادنا واجعل الجنة مآبنا ورسول الله  صلى الله عليه وسلم  يؤمن على دعائه  (الكامل في ضعفاء الرجال ج: 7 ص: 153)

ஓர் இளைஞர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "நான் பயணம் மேற்கொள்ள எண்ணியுள்ளேன்.  எனவே எனக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்'' என்று கூறினார்.  அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நீர் பிரார்த்தனை செய்யும்.  நான் ஆமீன் கூறுகின்றேன்'' என்று கூறிவிட்டு, "இறைவா! இவருக்கு நல்வாய்ப்பு வழங்கு!' என்று கூறினார்கள்.  அப்போது அந்த இளைஞர், "இறைவா! எங்கள் பணிகளை நல்வழியில் ஒருமுகப்படுத்துவாயாக! (உன்னைப் பற்றிய) அச்சத்தை எங்கள் மறுமைச் சேமிப்பாக ஆக்குவாயாக! சொர்க்கத்தை எங்கள்              புக-டமாக ஆக்குவாயாக!'' என்று பிரார்த்தனை செய்தார்.  நபி (ஸல்) அவர்கள் அவருடைய பிரார்த்தனைக்கு ஆமீன் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ர-),  நூல் : அல்காமில் (பாகம் 8, பக்கம் 153)
ஓர் இளைஞரின் பிரார்த்தனைக்கு நபி (ஸல்) அவர்கள் ஆமீன் கூறியுள்ளதால் நாமும் கூட்டு துஆ செய்யலாம் என்று இந்தச் செய்தியை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.
கூட்டு துஆவிற்கு ஆதாரமாக எடுத்து வைக்கப்படும் இந்தச் செய்தி ஆதாரப்பூர்வமான செய்தி அல்ல!
இச்செய்தியின் மூன்றாவது அறிவிப்பாளர் யூசுஃப் பின் அதிய்யா என்பவர் பலவீனமானவர்.  இவரைப் பல ஹதீஸ் கலை அறிஞர்கள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.

617   يوسف بن عطية  متروك الحديث بصري  (الضعفاء والمتروكين للنسائي ج: 1 ص: 106)
யூசுஃப் பின் அதிய்யா என்பவர் ஹதீஸ் துறையில் விடப்பட்டவர் என்று இமாம் நஸயீ அவர்கள் கூறியுள்ளார்கள்.
நூல் : அல்லுஅஃபாவு வல் மத்ரூகீன், பாகம் 1, பக்கம் 106

2382 عبد المنعم بن نعيم أبو سعيد حدثنا يحيى بن مسلم سمع منه معلى بن أسد البصري منكر الحديث (التاريخ الصغير ج: 2 ص: 223)
இமாம் புகாரி அவர்கள், "இவர் ஹதீஸ் துறையில் மறுக்கப் படுபவர்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
நூல் : அத்தாரிகுஸ் ஸகீர், பாகம் 2, பக்கம் 223

1234   يوسف بن عطية  الصفار السعدي كنيته أبو سهل من أهل البصرة يروي عن قتادة وثابت روى عنه إسحاق بن إبراهيم الحنظلي وأهل العراق كان ممن يقلب الأسانيد ويلزق المتون الموضوعة بالأسانيد الصحيحة ويحدث بها لا يجوز الاحتجاج به بحال (المجروحين لإبن حبان ج: 3 ص: 134)
"இவர் அறிவிப்பாளர் வரிசைகளை மாற்றி, இட்டுக் கட்டப்பட்ட செய்திகளுக்கு ஆதாரப்பூர்வமான அறிவிப்பாளர் வரிசைகளைக் கொடுப்பவர்களில் உள்ளவர்.  எந்த நிலையிலும் ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாத செய்திகளை அறிவிப்பவர்'' என்று இப்னு ஹிப்பான் கூறுகின்றார்கள்.
நூல் : அல்மஜ்ரூஹீன், பாகம் 3, பக்கம் 134

3994 سمعت يحيى يقول يوسف بن عطية ليس بشيء (تاريخ ابن معين (رواية الدوري) ج: 4 ص: 209)
"இவர் ஒரு பொருட்டாகக் கருதப்பட மாட்டார்'' என்று இமாம் யஹ்யா பின் முயீன் குறிப்பிடுகின்றார்கள்.
நூல் : தாரீக் இப்னு முயீன், பாகம் 4, பக்கம் 209

350 سئل أبو داود عن يوسف بن عطية فقال ليس بشيء (سؤالات أبي عبيد الآجري ج: 1 ص: 259)
"இவர் ஒரு பொருட்டாகக் கருதப்பட மாட்டார்'' என்று இமாம் அபூதாவூத் அவர்களும் குறிப்பிட்டுள்ளார்கள்.
நூல் : ஸுவாலாத்து அபீ உபைத் அல் ஆஜிரி, பாகம் 1, பக்கம் 259

229 ... يوسف بن عطية  الصفار أبو سهل البصري السعدي روى عن ثابت البناني أحاديث مناكير (المدخل إلى الصحيح للحاكم ج: 1 ص: 231)

இவர் ஸாபித் அவர்கள் மூலம் மறுக்கப்பட வேண்டிய பல செய்திகளை அறிவித்துள்ளார் என்று இமாம் ஹாகிம் குறிப்பிடுகின்றார்கள்.
நூல் : அல் மத்கல் இலஸ் ஸஹீஹ், பாகம் 1, பக்கம் 231
716 فق ابن ماجة في التفسير يوسف بن عطية بن ثابت الصفار الأنصاري السعدي مولاهم أبو سهل البصري الجفري روى عن ثابت البناني ...وقال أبو حاتم وأبو زرعة والدارقطني ضعيف الحديث (تهذيب التهذيب ج: 11 ص: 367)
அபூஹாத்தம், அபூஸுர்ஆ, தாரகுத்னீ ஆகியோர் இவரை பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.
நூல் : தஹ்தீபுத் தஹ்தீப், பாகம் 11, பக்கம் 367
பல்வேறு ஹதீஸ் கலை அறிஞர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ள யூசுஃப் பின் அதிய்யா இடம் பெற்றுள்ள இந்தச் செய்தியை ஆதாரமாகக் கொள்ள முடியாது.
அடுத்து கூட்டு துஆவிற்கு எடுத்து வைக்கப்படும் ஆதாரம் மிகவும் பிரபலமான பல ஹதீஸ் நூற்களில் இடம் பெற்ற செய்தியாகும்.
1888 حدثنا الربيع بن سليمان أنا بن وهب أخبرني سليمان وهو بن بلال عن كثير بن زيد عن الوليد بن رباح عن أبي هريرة أن رسول الله  صلى الله عليه وسلم رقي المنبر فقال آمين آمين آمين فقيل له يا رسول الله ما كنت تصنع هذا فقال قال لي جبريل أرغم الله أنف عبد أو بعد دخل رمضان فلم يغفر له فقلت آمين ثم قال   رغم أنف  عبد أو بعد أدرك والديه أو أحدهما لم يدخله الجنة فقلت آمين ثم قال   رغم أنف  عبد أو بعد ذكرت عنده فلم يصل عليك فقلت آمين (صحيح ابن خزيمة ج: 3 ص: 192)
நபி (ஸல்) அவர்கள் மிம்பரில் ஏறி, "ஆமீன், ஆமீன், ஆமீன்' என்று கூறினார்கள்.  அல்லாஹ்வின் தூதரே! ஏன் இவ்வாறு செய்தீர்கள் என்று கேட்கப்பட்டது.  அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறியதாவது: என்னிடம் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து, "ரமலான் மாதம் வந்த பின்பு எவனுடைய பாவங்கள் மன்னிக்கப் படவில்லையோ அந்த அடியானின் மூக்கு மண்ணைக் கவ்வட்டும் (அழிந்து போகட்டும்)'' என்று கூறினார்கள்.  நான் ஆமீன் என்று கூறினேன்.  பின்னர், "எவன் பெற்றோர் இருவரையோ அல்லது ஒருவரையோ பெற்று (அவர்களுக்கு நன்மை செய்வதன் மூலம்) சொர்க்கம் செல்லவில்லையோ அந்த அடியானின் மூக்கு மண்ணைக் கவ்வட்டும்'' என்று கூறினார்கள்.  நான் ஆமீன் என்று கூறிúன்.  பின்னர், "என்னைப் பற்றிக் கூறப்பட்டு யார் ஸலவாத் கூறவில்லையோ அந்த அடியானின் மூக்கு மண்ணைக் கவ்வட்டும்'' என்று கூறினார்கள்.  நான் ஆமீன் என்று கூறினேன்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர-)
நூல் : இப்னு குஸைமா, பாகம் 3, பக்கம் 192
இதே கருத்துள்ள ஹதீஸ் இப்னு ஹிப்பான், மவாரிதுல் லம்ஆன், பைஹகீ, முஸ்னதுல் பஸ்ஸார், தப்ரானீ - அவ்ஸத், கபீர், ஷுஅபுல் ஈமான் - பைஹகீ, அதபுல் முப்ரத், ஹாகிம், முஸ்னத் அபீயஃலா ஆகிய நூற்களிலும் இடம் பெற்றுள்ளது.
இச்செய்தியை அபூஹுரைரா (ர-) அவர்கள் உட்பட மா-க் பின் ஹுவைரிஸ், ஜாபிர் பின் ஸமுரா, அம்மார் பின் யாஸிர், இப்னு அப்பாஸ், அப்துல்லாஹ் பின் அல்ஹாரிஸ் அஸ்ஸுபைதீ, அனஸ், கஅப் பின் உஜ்ரா, அப்துல்லாஹ் பின் மஸ்ஊத், ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ர-) ஆகிய நபித்தோழர்களும் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பான ஹதீஸ்களில் சில பலவீனமானவையாகவும், சில ஆதாரப் பூர்வமானவையாகவும் உள்ளன.
ஆதாரப்பூர்வமான செய்தியை அடிப்படையாகக் கொண்டு, ஜிப்ரீல் (அலை) அவர்கள் துஆ கேட்க, நபி (ஸல்) அவர்கள் ஆமீன் கூறியிருப்பதால் நாமும் கூட்டு துஆ கேட்கலாம் என்று வாதிடுகின்றனர்.
இவர்கள் எடுத்து வைக்கும் இந்த ஹதீஸ் மனிதர்களில் ஒருவர் துஆச் செய்ய மற்றவர்கள் ஆமீன் கூறுவதற்கு ஆதாரமாக அமையவில்லை.  வானவர்கள் துஆச் செய்ய மனிதர்கள் ஆமீன் கூறலாம் என்பதற்குத் தான் இந்தச் செய்தி ஆதாரமாக அமையும்.  ஏனெனில் ஜிப்ரீல் (அலை) என்ற வானவர்களின் தலைவர் துஆச் செய்ய நபி (ஸல்) அவர்கள் ஆமீன் கூறியிருக்கின்றார்கள்.  எனவே இதை இங்கு நடைபெறும் கூட்டு துஆவிற்கு ஆதாரமாகக் காட்ட முடியாது.
கூட்டு துஆவிற்கு ஆதாரமாகக் காட்டப்படும் இந்தச் செய்தியில் நபி (ஸல்) அவர்களாக ஆமீன் என்று கூறவில்லை.  ஜிப்ரீல் (அலை) அவர்கள் "ஆமீன் என்று கூறும்' என்று கட்டளையிட்ட பின்னர் தான் நபி (ஸல்) அவர்கள் ஆமீன் கூறினார்கள் என்று சில அறிவிப்புக்களில் காணப்படுகின்றது.
907 أخبرنا أبو يعلى قال أخبرنا أبو معمر قال حدثنا حفص بن غياث عن محمد بن عمرو عن أبي سلمة عن أبي هريرة  أن النبي  صلى الله عليه وسلم صعد المنبر فقال آمين آمين آمين قيل يا رسول الله إنك حين صعدت المنبر قلت آمين آمين آمين قال إن جبريل أتاني فقال من أدرك شهر رمضان ولم يغفر له فدخل النار فأبعده الله  قل آمين  فقلت آمين ومن أدرك أبويه أو أحدهما فلم يبرهما فمات فدخل النار فأبعده الله   قل آمين  فقلت آمين ومن ذكرت عنده فلم يصل عليك فمات فدخل النار فأبعده الله  قل آمين  فقلت آمين  (صحيح ابن حبان ج: 3 ص: 188- موارد الظمآن ج : 1ص : 497 - مسند أبي يعلى ج: 10 ص : 328 - مسند البزار ج:5 ص : 404- المعجم الكبير ج:2 ص:243)
"நபி (ஸல்) அவர்கள் மிம்பரில் ஏறி, "ஆமீன், ஆமீன், ஆமீன்' என்று கூறினார்கள்.  அப்போது, அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் மிம்பரில் ஏறும் போது ஆமீன், ஆமீன், ஆமீன் என்று கூறினீர்களே! என்று கேட்கப்பட்டது.
அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறியதாவது:  ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னிடம் வந்து, "எவர் ரமலான் மாதத்தை அடைந்து அவருடைய பாவங்கள் மன்னிக்கப்படாமல் நரகம் புகுவாரோ அவரை அல்லாஹ் (தன் அருளி-ருந்து) தூரமாக்கட்டும்' என்று கூறி, "ஆமீன் என்று சொல்லுங்கள்' என்றார்கள்.  நான் ஆமீன் என்றேன்.    "எவருக்குப் பெற்றோர் இருவருமோ அல்லது ஒருவரோ இருந்து அவர்களுக்குப் பணிவிடை செய்யாமல் இறந்து நரகம் செல்வாரோ அவரை அல்லாஹ் (தன் அருளி-ருந்து) தூரமாக்கட்டும்' என்று கூறி, "ஆமீன் என்று சொல்லுங்கள்' என்றார்கள்.  நான் ஆமீன் என்றேன்  "எவரிடம் உங்களைப் பற்றி கூறப்பட்டு, உங்கள் மீது ஸலவாத் கூறவில்லையோ அவரை அல்லாஹ் (தன் அருளி-ருந்து) தூரமாக்கட்டும்' என்று கூறி, "ஆமீன் என்று சொல்லுங்கள்' என்றார்கள்.  நான் ஆமீன் என்றேன்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர-)
நூற்கள் : இப்னு ஹிப்பான் - பாகம்: 3, பக்கம்:188, மவாரிதுல் லம்ஆன் - பாகம்:1, பக்கம்: 497, முஸ்னத் அபீயஃலா - பாகம்: 10, பக்கம்: 328, முஸ்னத் பஸ்ஸார் - பாகம்: 5, பக்கம்: 404, தப்ரானீ கபீர் - பாகம்: 2, பக்கம்: 243
மேற்கூறப்பட்ட ஹதீஸ்களைக் கவனிக்கும் போது இப்போது செய்யப்படும் கூட்டு துஆவிற்கு இந்த ஹதீஸில் எந்த ஆதாரமும் இல்லை என்பதை அறியலாம்.

ஒருவர் பிரார்த்தனை செய்ய மற்றவர் ஆமீன் கூறலாம் என்ற கருத்துள்ளவர்கள் எடுத்து வைக்கும் அடுத்த ஆதாரம்:

     3093 ابن عباس : الداعي والمؤمن  شريكان في الأجر والقارىء والمستمع في الأجر شريكان والعالم والمتعلم في الأجر شريكان (الفردوس بمأثور الخطاب ج: 2 ص: 225)
பிரார்த்தனை செய்பவரும் (அதற்கு) ஆமீன் கூறுபவரும்  கூ-யில் கூட்டாளியாவார்.  ஓதுபவரும் (அதை) கேட்பவரும் கூ-யில் கூட்டாளியாவார்.  கற்றுக் கொடுப்பவரும் கற்பவரும் கூ-யில் கூட்டாளியாவார். (நூல்:அல்ஃபிர்தவ்ஸ், பாகம் 2, பக்கம்225)
தைலமீ அவர்கள் தனது நூ-ல் இச்செய்தியை அறிவிப்பாளர் வரிசையில்லாமல் பதிவு செய்திருந்தாலும், இமாம் சுயூத்தி அவர்கள் தமது அல்ஜாமிவுஸ்ஸகீர் எனும் நூ-ல் அறிவிப்பாளர் வரிசையுடன் பதிவு செய்துள்ளார்கள்.
துஆச் செய்யும் போது ஆமீன் சொல்பவருக்குக் கூ- உண்டு என்று நபி (ஸல்) அவர்களே தெளிவாக கூறியிருப்பதால் நாம் கூட்டு துஆ செய்யலாம் என்று மாற்றுக் கருத்துடையவர்கள் கூறுகின்றார்கள்.
நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியது உறுதியாகுமானால் நன்மை கிடைக்கும் இக்காரியத்தைச் செய்ய வேண்டும், மற்றவர்களையும் செய்யத் தூண்ட வேண்டும்.  ஆனால் இச்செய்தி ஆதாரப்பூர்வமானது அல்ல!
இச்செய்தி இடம் பெற்ற ஜாமிவுஸ்ஸகீர் என்ற நூலுக்கு விரிவுரை எழுதிய மானாவீ அவர்கள் தமது பைளுல் கதீர் என்ற நூ-ல் இச்செய்தியைப் பின்வருமாறு விமர்சனம் செய்கின்றார்.
... وفيه إسماعيل الشامي قال الذهبي ممن يضع الحديث قال الدارقطني وجويبر بن سعيد وقال الدارقطني وغيره متروك (فيض القدير ج: 3 ص: 536)
இச்செய்தியில் இஸ்மாயீல் அஷ்ஷாமீ என்பவர் இடம் பெறுகின்றார்.  ஹதீஸ்களை இட்டுக்கட்டிக் கூறுபவர்களில் இவரும் ஒருவர் என்று தஹபீ அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.  மேலும் இதில் இடம் பெறும் ஜுவைபிர் பின் ஸயீத் என்பவரை "ஹதீஸ் துறையில் விடப்பட்டவர்' என்று தாரகுத்னீ மற்றும் பலர் கூறியுள்ளார்கள் என்று கூறி இச்செய்தி ஆதாரத்திற்கு ஏற்றதல்ல என்பதைத் தெளிவு படுத்தியுள்ளார்கள்.
4913 حَدَّثَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ أَخْبَرَنَا النَّضْرُ بْنُ شُمَيْلٍ حَدَّثَنَا مُوسَى بْنُ سَرْوَانَ الْمُعَلِّمُ حَدَّثَنِي طَلْحَةُ بْنُ عُبَيْدِ اللَّهِ بْنِ كَرِيزٍ قَالَ حَدَّثَتْنِي أُمُّ الدَّرْدَاءِ قَالَتْ حَدَّثَنِي سَيِّدِي أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ دَعَا لِأَخِيهِ بِظَهْرِ الْغَيْبِ قَالَ الْمَلَكُ الْمُوَكَّلُ بِهِ آمِينَ وَلَكَ بِمِثْلٍ  رواه مسلم (كتاب الذكر والدعاء والتوبة والإستغفار - باب فضل الدعاء للمسلمين بظهر الغيب) وابوداود وابن ماجة واحمد
தன் சகோதரனுக்காக அவன் அல்லாத போது ஒருவன் பிரார்த்தனை செய்தால், அவனிடம் நியமிக்கப்பட்டுள்ள வானவர், "ஆமீன்' என்று கூறி, "உனக்கும் அதுபோன்று உண்டு' என்பார்.
அறிவிப்பவர் : அபூதர்தா (ர-), நூல்கள் : முஸ்-ம் 4913, 4914, அபூதாவூத் 1311, இப்னுமாஜா 2886, அஹ்மத் 20717, 23279
ஒருவர் தன் சகோதரருக்காக பிரார்த்தனை செய்யும் போது வானவர்கள் ஆமீன் கூறுவதால் நாமும் மற்றவர்கள் பிரார்த்தனை செய்யும் போது ஆமீன் கூறலாம் என்று கூறுகின்றனர்.
மேற்கூறப்பட்ட ஹதீஸ் மனிதர்களின் பிரார்த்தனைக்கு சில நேரங்களில் வானவர்கள் ஆமீன் கூறுவார்கள் என்றே கூறப்பட்டுள்ளது.  இந்த ஹதீஸில் இருந்து மனிதர்களின் பிரார்த்தனைக்கு மலக்குகள் ஆமீன் கூறலாம் என்று வேண்டுமானால் சட்டம் எடுக்கலாமே தவிர, மனிதர்கள் செய்யும் பிரார்த்தனைக்கு மனிதர்கள் ஆமீன் கூறலாம் என்று சட்டம் எடுக்க முடியாது.  மேலும் இந்த ஹதீஸ் மறைவாக இருக்கும் தம் சகோதரரின் நலனுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று ஆர்வமூட்டுகின்றதே தவிர கூட்டு துஆவிற்காக சொல்லப்பட்டது அல்ல!
3345 ثَنَا عَمْرُو بْنُ حَمَّادٍ حَدَّثَنَا قَزَعَةُ بْنُ سُوَيْدٍ عَنْ حُمَيْدٍ الْأَعْرَجِ قَالَ مَنْ قَرَأَ الْقُرْآنَ ثُمَّ دَعَا أَمَّنَ عَلَى دُعَائِهِ أَرْبَعَةُ آلَافِ مَلَكٍ رواه الدارمي (كتاب فضائل القرآن - باب في ختم القرآن)
ஒருவர் குர்ஆனை ஓதி பின்னர் பிரார்த்தனை செய்தால் அவரின் பிரார்த்தனைக்கு நான்காயிரம் வானவர்கள் ஆமீன் கூறுவார்கள்.
அறிவிப்பவர் : ஹுமைத் அல் அஃரஜ்,  நூல் : தாரமீ 3345
இச்செய்தியிலும் மனிதர்களின் பிரார்த்தனைக்கு மலக்குகள் ஆமீன் கூறுவார்கள் என்றே கூறப்பட்டுள்ளது.  மேலும் இச்செய்தி நபி (ஸல்) அவர்கள் கூறிய செய்தி அல்ல!  நபித்தோழர்கள் கூட இச்செய்தியைக் கூறவில்லை.  ஹுமைத் அல் அஃரஜ் என்ற தாபியியே கூறியுள்ளார்.  தாபியீன்களின் கூற்று மார்க்கத்திற்கு ஆதாரமாகாது.  மேலும் இச்செய்தி பலவீனமானதும் கூட.
இச்செய்தியின் இரண்டாவது அறிவிப்பாளர் கஸஆ பின் ஸுவைத் என்பவர் பலவீனமானவர்.

854   قزعة بن سويد  بن حجير الباهلي وهو قزعة بن أبي قزعة البصري عن حميد بن قيس وليس هو بذاك القوي (التاريخ الكبير ج: 7 ص: 192)
இமாம் புகாரி அவர்கள் கஸஆ பின் ஸுவைத் என்பவர் பலமானவர் அல்ல என்று குறிப்பிடுகின்றார்கள்.
நூல் : அத்தாரிகுல் கபீர், பாகம் 7, பக்கம் 192

قزعة بن سويد  بن حجير ضعيف بصري (الضعفاء والمتروكين للنسائي ج: 1 ص: 88)

இமாம் நஸயீ அவர்கள் கஸஆ பின் ஸுவைத் என்பவர் பலவீனமானவர் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
நூல் : அல்லுஅஃபாவு வல் மத்ரூகீன், பாகம் 1, பக்கம் 88

وروى عن بن أبى مليكة ومحمد بن المنكدر نا عبد الرحمن نا محمد بن حمويه بن الحسن قال سمعت أبا طالب قال قال احمد بن حنبل   قزعة بن سويد  مضطرب الحديث  (الجرح والتعديل ج: 7 ص: 139)
கஸஆ பின் ஸுவைத் என்பவர் ஹதீஸ்களைக் குழப்பி அறிவிப்பவர் என்று இமாம் அஹ்மத் பின் ஹம்பல் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
நூல் : அல்ஜரஹு வத்தஃதீல், பாகம் 7, பக்கம் 139
886 قزعة بن سويد بن حجير الباهلي وهذا الذي يقال له قزعة بن أبي قزعة من أهل البصرة يروي عن عبيد الله بن عمر وحميد بن قيس كان كثير الخطأ فاحش الوهم فلما كثر ذلك في روايته سقط الاحتجاج بأخباره (المجروحين ج: 2 ص: 216)
கஸஆ பின் ஸுவைத் என்பவர் அதிகம் தவறிழைப்பவர்.  மிக மிக அதிகமாக சந்தேகம் உடையதாக அறிவிப்பவர்.  அவருடைய அறிவிப்பில் இவை அதிகமானதால் அவரது செய்திகள் ஆதாரத்திற்கு நிற்காமல் போய் விட்டது என்று இப்னு ஹிப்பான் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். (நூல்: அல்மஜ்ரூஹீன், பாகம் 2, பக்கம் 216)
1. கூட்டு துஆவிற்கு ஆதாரமாகக் காட்டும் இச்செய்தி நபிமொழியல்ல!
2. அறிவிப்பாளர் வரிசையில் குறைபாடு உள்ளது.
3. இச்செய்தி கூட்டு துஆவின் கருத்தைத் தரவில்லை.
ஆகிய காரணங்ளால் இச்செய்தி நிராகரிக்கப் படுகின்றது.

780 حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ قَالَ أَخْبَرَنَا مَالِكٌ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ وَأَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ أَنَّهُمَا أَخْبَرَاهُ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا أَمَّنَ الْإِمَامُ فَأَمِّنُوا فَإِنَّهُ مَنْ وَافَقَ تَأْمِينُهُ تَأْمِينَ الْمَلَائِكَةِ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ وَقَالَ ابْنُ شِهَابٍ وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ آمِينَ رواه البخاري (كتاب الأذان - باب جهر الإمام بالتأمين) ومسلم
"இமாம் ஆமீன் கூறும் போது நீங்களும் ஆமீன் கூறுங்கள்.  எவர் கூறும் ஆமீன் மலக்குகள் கூறும் ஆமீனுடன் ஒத்து அமைகின்றதோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப் படுகின்றன'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர-),  நூல் : புகாரி 780, முஸ்-ம் 688

781 حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ أَخْبَرَنَا مَالِكٌ عَنْ أَبِي الزِّنَادِ عَنْ الْأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا قَالَ أَحَدُكُمْ آمِينَ وَقَالَتْ الْمَلَائِكَةُ فِي السَّمَاءِ آمِينَ فَوَافَقَتْ إِحْدَاهُمَا الْأُخْرَى غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ رواه البخاري (كتاب الأذان - باب فضل التأمين) ومسلم
"உங்களில் யாரேனும் ஆமீன் என்று கூறினால் வானுலகத்தில் மலக்குகளும் ஆமீன் கூறுகின்றனர்.  இவ்வாறு மலக்குகள் கூறும் ஆமீனுடன் எவரது ஆமீன் ஒத்து விடுகின்றதோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப் படுகின்றன'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர-),  நூல் : புகாரி 781, முஸ்-ம் 691

782 حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ عَنْ مَالِكٍ عَنْ سُمَيٍّ مَوْلَى أَبِي بَكْرٍ عَنْ أَبِي صَالِحٍ السَّمَّانِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا قَالَ الْإِمَامُ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ فَقُولُوا آمِينَ فَإِنَّهُ مَنْ وَافَقَ قَوْلُهُ قَوْلَ الْمَلَائِكَةِ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ تَابَعَهُ مُحَمَّدُ بْنُ عَمْرٍو عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنُعَيْمٌ الْمُجْمِرُ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ رواه البخاري (كتاب الأذان - باب جهر المأموم بالتأمين) ومسلم
"இமாம் "கைருல் மக்லூபி அலைஹிம் வலழ் ழால்லீன்' என்று கூறும் போது நீங்கள் ஆமீன் கூறுங்கள்.  ஏனெனில் எவர் கூறும் ஆமீன் மலக்குகள் கூறும் ஆமீனுடன் ஒத்து அமைந்து விடுகின்றதோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப் படுகின்றன'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர-),  நூல் : புகாரி 782
சூரத்துல் ஃபாத்திஹா ஓதி முடிக்கும் போது பின்பற்றித் தொழுபவர்கள் ஆமீன் கூற வேண்டுமென்ற நபிமொழியை வைத்து கூட்டு துஆ செய்யலாம் என்று வாதிடுகின்றனர்.  பல காரணங்களால் இக்கருத்து ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில் உள்ளது.
இக்கட்டளை தொழுகைக்கு மட்டும் குறிப்பான ஒன்றாகும்.  சூரத்துல் ஃபாத்திஹா எப்போது யார் ஓதினாலும் ஆமீன் கூற வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடவில்லை.  இமாம் சப்தமிட்டு ஓதும் போது மட்டுமே இவ்வாறு கூறச் சொல்-யிருக்கின்றார்கள்.  "இமாம், கைருல் மக்லூபி அலைஹிம் வலழ்ழால்லீன் என்று கூறும் போது நீங்கள் ஆமீன் கூறுங்கள்'' என்ற வாசகம் இக்கருத்தை நமக்குத் தெளிவு படுத்தும்.
மேலும் தொழுகையில் இமாமோடு ஆமீன் கூறும் போது, வானத்தில் உள்ள வானவர்கள் ஆமீன் கூறுவார்கள்.  இருவருடைய ஆமீனும் ஒத்து வந்து விட்டால் நம்முடைய முன் பாவங்கள் மன்னிக்கப் பட்டு விடும் என்ற தனிச்சிறப்பு சூரத்துல் ஃபாத்திஹாவிற்கு இருக்கின்றது.  நாம் கேட்கும் கூட்டு துஆவிற்கு இச்சிறப்பு இருப்பதாகக் கூறப்படவில்லை.  எனவே இது கூட்டுத் தொழுகையில் கிடைக்கும் தனிச் சிறப்பாகும்.  இதி-ருந்து மற்றவற்றிற்குச் சட்டம் எடுக்க முடியாது.

இறைவன் ஏற்றுக் கொள்வானா?
கூட்டு துஆ செய்வதற்கு ஆதாரமாக சில சான்றுகளை மாற்றுக் கருத்துள்ளவர்கள் எடுத்து வைத்தார்கள்.  அவை சரியான சான்றுகள் இல்லை என்பதை முந்தைய இதழ்களில் தெளிவு படுத்தியுள்ளோம்.
இந்த இதழில் அவர்கள் எடுத்து வைக்கும் பொதுவான சான்றுகளையும், அவற்றின் விளக்கத்தையும் பார்ப்போம்.  இதற்கு முந்தைய இதழ்களில் கூட்டு துஆவிற்கு நேரடியாக ஆதாரம் உள்ளது போன்ற செய்திகளும் அதற்குரிய பதில்களும் இடம் பெற்றன.  இப்போது கூட்டு துஆவை மட்டும் குறிப்பிட்டுக் கூறப்படாமல் பொதுவாக மக்கள் செய்யும் அனைத்திற்கும் மார்க்க அங்கீகாரம் அளிப்பது போன்றுள்ள ஆதாரங்களையும் அவற்றிற்கான பதில்களையும் காண்போம்.
3418 حَدَّثَنَا أَبُو بَكْرٍ حَدَّثَنَا عَاصِمٌ عَنْ زِرِّ بْنِ حُبَيْشٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ إِنَّ اللَّهَ نَظَرَ فِي قُلُوبِ الْعِبَادِ فَوَجَدَ قَلْبَ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَيْرَ قُلُوبِ الْعِبَادِ فَاصْطَفَاهُ لِنَفْسِهِ فَابْتَعَثَهُ بِرِسَالَتِهِ ثُمَّ نَظَرَ فِي قُلُوبِ الْعِبَادِ بَعْدَ قَلْبِ مُحَمَّدٍ فَوَجَدَ قُلُوبَ أَصْحَابِهِ خَيْرَ قُلُوبِ الْعِبَادِ فَجَعَلَهُمْ وُزَرَاءَ نَبِيِّهِ يُقَاتِلُونَ عَلَى دِينِهِ فَمَا رَأَى الْمُسْلِمُونَ حَسَنًا فَهُوَ عِنْدَ اللَّهِ حَسَنٌ وَمَا رَأَوْا سَيِّئًا فَهُوَ عِنْدَ اللَّهِ سَيِّئٌ رواه احمد
"அல்லாஹுத் தஆலா அடியார்களின் உள்ளங்களைப் பார்த்தான்.  அப்போது முஹம்மது (ஸல்) அவர்களின் உள்ளம் அடியார்களின் உள்ளங்களில் சிறந்ததாகக் கண்டான்.  எனவே அவரை தனக்காக தேர்வு செய்து,  தனது தூதுத்துவத்தைக் கொண்டு (நபியாக) அனுப்பினான்.  முஹம்மது (ஸல்) அவர்களின் உள்ளத்திற்குப் பிறகு அடியார்களின் உள்ளங்களைக் கவனித்தான்.  நபியவர்களின் தோழர்களின் உள்ளங்களை சிறந்த உள்ளங்களாகக் கண்டான்.  அவர்களை நபியின் தனி உதவியாளர்களாக ஆக்கினான்.  அவர்கள் அவரின் மார்க்கத்திற்காக போரிடுவார்கள்.  முஸ்-ம்கள் எதை நல்லதாகக் கருதுகின்றார்களோ அது அல்லாஹ்விடம் நல்லதாக இருக்கும்.  அவர்கள் எதைத் தீயதாகக் கருதுகின்றார்களோ அது அல்லாஹ்விடம் தீயதாக இருக்கும்'' என்று இப்னு மஸ்ஊத்(ர-) கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஸிர்,  நூல் : அஹ்மத் 3418
இதே செய்தி சில வார்த்தை மாற்றங்களுடன் ஹாகிம் (4465), முஸ்னதுல் பஸ்ஸார் (பாகம்:4, பக்கம்:212), தப்ரானி அவ்ஸத் (பாகம்:4, பக்கம்:58), முஸ்னத் தயா-ஸீ (பாகம்:1, பக்கம்:33),  தப்ரானீ கபீர் (பாகம்:9, பக்கம்:112) ஆகிய நூற்களிலும் இடம் பெற்றுள்ளது.
முஸ்-ம்கள் எதை நல்லதாகக் கருதுகின்றார்களோ அது அல்லாஹ்விடம் நல்லதாக இருக்கும்.  அவர்கள் எதைத் தீயதாகக் கருதுகின்றார்களோ அது அல்லாஹ்விடம் தீயதாக இருக்கும் என்ற வாசகம் முஸ்-ம் சமுதாயம் எதைச் சரி கண்டாலும் அது அல்லாஹ்வினால் ஏற்கப்படும் என்பதைத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது.  முஸ்-ம் சமுதாயம் கூட்டு துஆவை நல்ல அமலாக அங்கீகரித்துள்ளது.  எனவே இந்த ஹதீஸின் அடிப்படையில் கூட்டு துஆ ஓதலாம் என்று வாதிடுகின்றனர்.
இக்கருத்து பல வகைகளில் ஏற்புடையதாக இல்லை.  முத-ல் இவர்கள் சமர்ப்பித்த செய்தி நபிமொழி அல்ல!  இப்னு மஸ்ஊத் (ர-) அவர்களின் சொந்தக் கூற்றாகும்.  மார்க்க ஆதாரங்களாக நபித்தோழர்களின் சொந்தக் கூற்றுகள் நிற்காது.  எனவே இது அடிப்படையிலேயே தவறாக அமைந்து விட்டது.
மேலும் மனிதர்களின் விருப்பம் எல்லாம் மார்க்கம் என்றால் நபி (ஸல்) அவர்கள் காட்டிய சுன்னத்துக்கள் அனைத்தும் மறைந்து புதுமையான செயல்களே மிகைத்து நின்று விடும்.
உதாரணமாக மக்ரிப் தொழுகைக்கு முன்பு நபி (ஸல்) அவர்கள் காலத்தில் முன் சுன்னத் தொழப்பட்டு வந்துள்ளது என்பதற்கு புகாரி, முஸ்-ம் உட்பட பல ஆதாரப்பூர்வமான நூற்களில் சான்றுகள் உள்ளன.  ஆனால் இன்று முஸ்-ம் சமுதாயம் மக்ரிப் தொழுகைக்கு பாங்கு சொன்னவுடன் சுன்னத் தொழுவதற்கு நேரம் வழங்காமல் உடனே இகாமத் சொல்-, நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த ஒரு சுன்னத் அடியோடு ஒழிக்கப்பட்டுள்ளது.  இதை அங்கீகரிக்க முடியுமா?
பூமிக்கு மேல் உயரமான கப்ருகளை உடைக்குமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.  ஆனால் இன்று அது ஒரு நல்ல அமலாக மக்களால் அங்கீகரிக்கப் பட்டுள்ளது.
இவ்வாறு பல காரியங்களில் நபிவழி நிராகரிக்கப் பட்டு, மனித கருத்துக்கள் மார்க்கமாக ஆக்கப்பட்டுள்ளது.  இதை ஏற்றுக் கொள்ள முடியுமா?
மேலும் இச்செய்தியின் மூன்றாவது அறிவிப்பாளர் ஆஸிம் பின் பஹ்தலா என்பவர் புகாரி உட்பட பல நூற்களின் அறிவிப்பாளராக இருந்தாலும் அவரைப் பற்றி பலர் விமர்சனமும் செய்துள்ளனர்.
இவரைப் பற்றிய விமர்சனம் புகாரியின் சிறப்பு மிக்க விரிவுரை நூலான ஃபத்ஹுல் பாரியில் இடம் பெற்றுள்ளது.
ع عاصم بن أبي النجود المقري أبو بكر واسم أبي النجود بهدلة في قول الجمهور ...وقال يعقوب بن سفيان في حديثه اضطراب وهو ثقة وقال أبو حاتم محله والصدق وليس محله أن يقال هو ثقة ولم يكن بالحافظ وقد تكلم فيه بن علية وقال العقيلي لم يكن فيه إلا سوء الحفظ ... قلت ماله في الصحيحين سوى حديثين كلاهما من روايته عن   زر بن حبيش  عن أبي بن كعب قرنه في كل من هما بغيره  (مقدمة فتح الباري ج: 1 ص: 411)

"இவர் நம்பகமானவர் எனினும், இவருடைய ஹதீஸில் குளறுபடிகள் உள்ளன'' என்று யஃகூப் பின் சுஃப்யான் அவர்களும், "இவர் நல்லவர் எனினும் நம்பகமானவர் என்று சொல்லும் அளவுக்கு இவர் நினைவாற்றல் நிறைந்தவராக இல்லை. இவரை இப்னு உலைய்யா குறை கூறியுள்ளார்'' என்று அபூஹாத்தம் அவர்களும் கூறியுள்ளார்கள்.  இவரிடத்தில் நினைவாற்றல் குறைவாகவே உள்ளது என்று உகைலீ கூறுகின்றார்.
நான் (இப்னு ஹஜர்) கூறுகின்றேன்: இவருடைய ஹதீஸ்கள் புகாரி, முஸ்-மில் இரண்டைத் தவிர வேறு இடம் பெறவில்லை.  அவை இரண்டும் உபை பின் கஅப் மற்றும் ஸிர் பின் ஹுபைஷ் ஆகியோர் வழியாக இடம் பெற்றுள்ளது.  இவ்விருவரி-ருந்து அறிவிக்கப்படும் (ஆஸிம்) இடத்தில் மற்றொருவரை இணைத்தே இடம் பெற்றுள்ளது.
நூல் : முகத்திமா ஃபத்ஹுல் பாரி, பாகம் : 1, பக்கம் : 411
இமாம் புகாரி அவர்கள் ஆஸிம் பின் பஹ்தலாவுடைய ஹதீஸ்களை இரண்டு இடத்தில் (4976, 4977) பதிவு செய்துள்ளார்கள்.  இந்த எண்களில் ஆஸிம் வரும் இடத்தில் அப்தா என்பவரும் அறிவித்துள்ளார் என்பதை இணைத்தே கூறியுள்ளார்கள்.  ஹதீஸ் எண் 7067ல் ஆஸிம் வரக்கூடிய இடத்தில் வாஸில் என்பவர் அறிவித்துள்ளார் என்பதையும் இணைத்தே கூறியுள்ளார்கள்.  எனவே புகாரி இமாம் கூட இவர் விஷயத்தில் கவனமாக இருந்துள்ளார்கள் என்பதை அறிய முடிகின்றது.
எனவே அஹ்மதில் இடம் பெறும் செய்தியில் குறை இருப்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம்.
முஸ்-ம்கள் எதை நல்லதாகக் கருதுகின்றார்களோ அது அல்லாஹ்விடம் நல்லதாக இருக்கும்.  அவர்கள் எதைத் தீயதாகக் கருதுகின்றார்களோ அது அல்லாஹ்விடம் தீயதாக இருக்கும் என்ற கருத்து இப்னு மஸ்ஊத் (ர-) அவர்களின் சொந்தக் கூற்றாக இடம் பெற்றுள்ளதை நாம் பார்த்தோம்.  ஆனால் சிலர் இதை நபி (ஸல்) அவர்களின் கூற்றாகச் சொல்-யுள்ளனர்.
ஹனஃபி மத்ஹபின் முக்கிய நூற்களில் ஒன்றான ஹிதாயா என்ற நூ-ல் (பாகம் : 3, பக்கம் : 287) இது நபி (ஸல்) அவர்களின் கூற்றாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஹாஃபிழ் இப்னு ஹஜர் அவர்கள் ஹிதாயாவில் உள்ள ஹதீஸ்களை ஆய்வு செய்து எழுதிய "அத்திராயா' என்ற நூ-ல், "இக்கருத்து நபி (ஸல்) அவர்கள் கூறியதாக நாம் காணவில்லை' என்று குறிப்பிட்டுள்ளார்கள்.  இது ஹிதாயாவின் ஓர உரையிலும் அதே பாகம் அதே பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹாஃபிழ் இப்னு ஹஜர் அவர்கள் கூறுவதைப் போன்று, ஹனஃபி மத்ஹபைச் சேர்ந்த "ஸைலஈ' என்ற பெயரில் பிரபலமான ஜமாலுத்தீன் என்பவரும் தனது, "நஸ்புர் ராயா' என்ற நூ-ல், "இக்கருத்து நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம் பெற்றிருப்பது அரிதான செய்தியாகும். நாம் அவ்வாறு பெற்றுக் கொள்ளவில்லை' என்று குறிப்பிட்டுள்ளார்கள்.  (பாகம் : 4, பக்கம் : 133)
நாம் ஆய்வு செய்த வகையில், இக்கருத்தை நபி (ஸல்) அவர்கள் கூறியதாக தாரீக் பக்தாத் என்ற நூ-ல் பதிவு செய்யப்பட்டுள்ளது.  இது இட்டுக் கட்டப் பட்ட பொய்யான செய்தியாகும்.
1843 احمد بن أبى زهير البخاري قدم بغداد وحدث بها عن على بن إسماعيل أظنه بخاريا روى عنه يوسف بن عمر القواس أخبرنا محمد بن إسماعيل بن عمر البجلي أخبرنا يوسف بن عمر القواس قال قرئ على احمد بن أبى زهير البخاري وانا اسمع واصله في كتابي قيل له حدثكم على بن إسماعيل حدثنا أبو معاذ رجاء بن معبد حدثنا سليمان بن عمرو النخعي حدثنا أبان بن أبى عياش وحميد الطويل عن أنس بن مالك قال قال رسول الله  صلى الله عليه وسلم ان الله نظر في قلوب العباد فلم يجد قلبا اتقى من أصحابي ولذلك اختارهم فجعلهم اصحابا فما استحسنوا فهو عند   الله حسن  وما استقبحوا فهو عند الله قبيح تفرد به أبو داود النخعي (تاريخ بغداد ج: 4 ص: 165)
இச்செய்தி அனஸ் (ர-) அவர்கள் மூலம் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம் பெற்றுள்ளது.  இச்செய்தியின் நான்காவது அறிவிப்பாளர், "சுலைமான் பின் அம்ர் அந்நகயீ' என்பவர் பொய்யர் என்று ஹதீஸ் கலை அறிஞர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.  இச்செய்தியைப் பதிவு செய்த அல்கதீப் பக்தாதீ அவர்கள் அச்செய்தியின் கீழ், "(சுலைமான் பின் அம்ர் என்ற) அபூதாவூத் அந்நகயீ என்பவர் இதில் தனித்து அறிவிக்கின்றார்'' என்று மற்ற செய்திகளுக்கு இது மாற்றமாக அமைந்துள்ளது என்பதைச் சுட்டிக் காட்டுகின்றார்.
இவரைப் பற்றி இமாம் புகாரி அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள்.

4747ற1853 سليمان بن عمرو الكوفي أبوداود النخعي : معروف بالكذب قاله قتيبة وإسحاق ( كتاب التاريخ الكبير ج:4 ص:46)

சுலைமான் பின் அம்ர் அல்கூஃபீ அபூதாவூத் அந்நகயீ என்பவர் பொய்யர் என்று அறியப்பட்டவர்.  இதை குதைபா, இஸ்ஹாக் ஆகியோர் கூறுகின்றனர்.
(நூல் : கிதாபு தாரிகுல் கபீர்,  பாகம் : 4, பக்கம் : 46)
யஹ்யா பின் முயீன் அவர்கள் இவ்வாறு விமர்சனம் செய்கின்றார்கள்:
2716 سمعت يحيى يقول وأبو داود النخعي اسمه   سليمان بن عمرو  كان رجل سوء كذاب خبيث قدري ولم يكن ببغداد رجل إلا وهو خير من أبي داود النخعي كان يضع الحديث (تاريخ ابن معين (رواية الدوري) ج: 3 ص: 554)
கெட்ட மனிதர், மோசமான பொய்யர், விதியை மறுப்பவர், பக்தாத் நகரில் இருக்கும் எந்த மனிதரானாலும் அபூதாவூத் அந்நகயீ என்பரை விட நல்லவராகவே இருப்பார்.  இவர் ஹதீஸ்களை இட்டுக் கட்டி சொல்பவர்.
(நூல் : தாரீக் இப்னு முயீன், பாகம் : 3, பக்கம் : 554)

حدثنا عبد الرحمن نا محمد بن حمويه بن حسن قال سمعت أبا طالب قال قلت حصول بن حنبل أبو داود النخعي قال كان يضع الأحاديث الكاذبة (الجرح والتعديل ج: 4 ص: 132)
அபூதாவூத் அந்நகயீ என்பவர் பொய்யான ஹதீஸ்களை இட்டுக் கட்டி கூறுபவர் என்று அஹ்மத் பின் ஹன்பல் மூலம் கிடைத்துள்ளது என்று அபூதா-ப் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். 
(நூல் : அல்ஜரஹ் வத்தஃதீல், பாகம் : 4, பக்கம் : 132)

حدثنا عبد الرحمن قال سئل أبو زرعة عن سليمان بن عمرو فقال كان اية وذكر عنه أشياء منكرة وغلظ القول فيه جدا  (الجرح والتعديل ج: 4 ص: 132)
சுலைமான் பின் அம்ர் என்பவரைப் பற்றி அபூசுர்ஆ அவர்களிடம் கேட்கப் பட்ட போது, "இவர் (மோசமானவருக்கு) அடையாளமாவார்'' என்று கூறி அவர் மூலமாக வந்துள்ள மறுக்கப் படவேண்டிய விஷயங்களைக் கூறினார்கள்.  அவர் விஷயத்தில் மிகக் கடுமையான வார்த்தையைப் பயன்படுத்தினார்கள். 
(நூல் : அல்ஜரஹ் வத்தஃதீல்,  பாகம் : 4, பக்கம் : 132)

8 سليمان بن عمرو أبو داود النخعي الكذاب ...وقال يزيد بن هارون لا يحل لأحد أن يروي عنه (ميزان الإعتدال في نقد الرجال ج: 3 ص: 305)
இவர் மூலமாக அறிவிப்பது எவருக்கும் அனுமதி இல்லை என்று யஸீத் பின் ஹாரூன் என்பவர் குறிப்பிட்டுள்ளார். 
(நூல் : மீஸானுல் இஃதிதால், பாகம் : 3, பக்கம் : 305)
416 سليمان بن عمرو وأبو داود النخعي الشامي من أهل بغداد كان ينزل ثم درب البقر يروي عن أبي حازم وغيره وكان رجلا صالحا في الظاهر  إلا أنه كان يضع الحديث وضعا وكا قدريا (المجروحين ج: 1 ص: 333)
சுலைமான் பின் அம்ர் என்பவர் வெளிப்படையில் நல்லவராகத் தோன்றினாலும் ஹதீஸ்களை இட்டுக் கட்டிக் கூறுபவர்.  விதியை மறுப்பவர் என்று இப்னு ஹிப்பான் அவர்கள் கூறுகின்றார்கள். 
(நூல் : அல்மஜ்ரூஹீன், பாகம் : 1, பக்கம் : 333)
قال الشيخ وسليمان بن عمرو اجتمعوا على أنه يضع الحديث (الكامل في ضعفاء الرجال ج: 3 ص: 249)
சுலைமான் பின் அம்ர் என்பவர் இட்டுக் கட்டிக் கூறுபவர் என்பதில் (ஹதீஸ் கலை அறிஞர்கள்) அனைவரும் ஒன்று பட்டுள்ளனர் என்று இப்னு அதீ அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
(நூல் : அல்காமில், பாகம் : 3, பக்கம் : 249)
மேற்கூறப்பட்ட விமர்சனங்களைக் கவனிக்கும் போது, முஸ்-ம்கள் எதை நல்லதாகக் கருதுகின்றார்களோ அது அல்லாஹ்விடம் நல்லதாக இருக்கும்.  அவர்கள் எதைத் தீயதாகக் கருதுகின்றார்களோ அது அல்லாஹ்விடம் தீயதாக இருக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக வரும் செய்தி இட்டுக் கட்டப்பட்ட பொய்யான செய்தியாகும் என்பது உறுதியாகின்றது.
இப்னு மஸ்ஊத் (ர-) அவர்களின் சொந்தக் கூற்றாக வரும் செய்தியும் கருத்து அடிப்படையிலும் அறிவிப்பாளர் வரிசை அடிப்படையிலும் குறைபாடு உடையதாகவே உள்ளது.  எனவே இதை ஆதாரமாக வைத்து கூட்டு துஆவை நியாயப் படுத்த முடியாது.
பெரும்பான்மையை ஏற்றுக் கொள்ளலாமா?
கூட்டு துஆ செய்வதற்குப் பொதுவான சில ஆதாரங்களை எடுத்து வைத்து தங்கள் வாதங்களை நிலை நாட்ட சிலர் முயல்வதையும் அதற்குரிய சரியான பதிலையும் நாம் கண்டோம்.  சென்ற இதழில் அவர்கள் எடுத்துக் காட்டியதைப் போன்று இன்னும் சில பொதுவான ஆதாரங்களை எடுத்து வைக்கின்றனர். அவற்றின் விளக்கத்தைப் பார்ப்போம்.
2093 حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ نَافِعٍ الْبَصْرِيُّ حَدَّثَنِي الْمُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ حَدَّثَنَا سُلَيْمَانُ الْمَدَنِيُّ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ عَنْ ابْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ اللَّهَ لَا يَجْمَعُ أُمَّتِي أَوْ قَالَ أُمَّةَ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى ضَلَالَةٍ وَيَدُ اللَّهِ مَعَ الْجَمَاعَةِ وَمَنْ شَذَّ شَذَّ إِلَى النَّارِ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ وَسُلَيْمَانُ الْمَدَنِيُّ هُوَ عِنْدِي سُلَيْمَانُ بْنُ سُفْيَانَ وَقَدْ رَوَى عَنْهُ أَبُو دَاوُدَ الطَّيَالِسِيُّ وَأَبُو عَامِرٍ الْعَقَدِيُّ وَغَيْرُ وَاحِدٍ مِنْ أَهْلِ الْعِلْمِ قَالَ أَبُو عِيسَى وَتَفْسِيرُ الْجَمَاعَةِ عِنْدَ أَهْلِ الْعِلْمِ هُمْ أَهْلُ الْفِقْهِ وَالْعِلْمِ وَالْحَدِيثِ قَالَ و سَمِعْت الْجَارُودَ بْنَ مُعَاذٍ يَقُولُ سَمِعْتُ عَلِيَّ بْنَ الْحَسَنِ يَقُولُ سَأَلْتُ عَبْدَ اللَّهِ بْنَ الْمُبَارَكِ مَنْ الْجَمَاعَةُ فَقَالَ أَبُو بَكْرٍ وَعُمَرُ قِيلَ لَهُ قَدْ مَاتَ أَبُو بَكْرٍ وَعُمَرُ قَالَ فُلَانٌ وَفُلَانٌ قِيلَ لَهُ قَدْ مَاتَ فُلَانٌ وَفُلَانٌ فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ وَأَبُو حَمْزَةَ السُّكَّرِيُّ جَمَاعَةٌ قَالَ أَبُو عِيسَى وَأَبُو حَمْزَةَ هُوَ مُحَمَّدُ بْنُ مَيْمُونٍ وَكَانَ شَيْخًا صَالِحًا وَإِنَّمَا قَالَ هَذَا فِي حَيَاتِهِ عِنْدَنَا رواه الترمذي وكذا رواه الحاكم
"நிச்சயமாக அல்லாஹ் தஆலா, என்னுடைய உம்மத்தை (அல்லது) முஹம்மதுடைய சமுதாயத்தை வழிகேட்டில் ஒன்றிணைக்க மாட்டான்.  அல்லாஹ்வின் கை ஜமாஅத்துடன் (கூட்டமைப்புடன்) உள்ளது.  எவன் தனித்து விடுவானோ அவன் நரகில் தனித்திருப்பான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ர-)
நூல்கள் : திர்மிதீ (2093), ஹாகிம் (391, 392, 394, 395, 396, 397)
"பெரும்பான்மை மக்களுடனே அல்லாஹ் இருப்பான்; பெரும்பான்மை மக்கள் சத்தியத்தில் இருப்பார்கள்; பெரும்பான்மை மக்களின் கருத்துக்கு மாற்றமாக நடப்பது நரகத்தில் கொண்டு சேர்க்கும்'' என நபி (ஸல்) அவர்களே மேற்கூறிய ஹதீஸில் தெளிவு படுத்தி விட்டார்கள்.  எனவே பெரும்பான்மை மக்களின் செயல்பாடாக உள்ள கூட்டு துஆவை ஏற்றுச் செயல்பட வேண்டுமென வாதிடுகின்றனர்.
திர்மிதீ, ஹாகிமில் இடம் பெற்றுள்ள அந்த ஹதீஸ் இவர்கள் சொன்னபடி கருத்து உள்ளதா என்பதை ஆய்வு செய்வதற்கு முன்னால் இந்த ஹதீஸின் தரம் என்னவென்பதைப் பார்ப்போம்.
இச்செய்தியின் மூன்றாவது அறிவிப்பாளராக சுலைமான் பின் சுஃப்யான் அல்மதனீ என்பவர் இடம் பெறுகின்றார். இவரைப் பற்றி ஹதீஸ் கலை அறிஞர்கள் என்ன கூறுகின்றார்கள் என்று பார்ப்போம்.

249 سليمان بن سفيان  ليس بثقة (الضعفاء والمتروكين للنسائي ج: 1 ص: 48)
"சுலைமான் பின் சுஃப்யான் என்பவர் நம்பகமானவர் இல்லை'' என்று இமாம் நஸயீ குறிப்பிடுகின்றார்கள்.
(நூல் : அல்லுஅஃபாவு வல்மத்ரூகீன், பாகம்: 1, பக்கம்: 48)

1102 سمعت يحيى يقول   سليمان بن سفيان  مدني يروى عنه أبو عامر العقدى حديث الهلال وليس بثقة (تاريخ ابن معين (رواية الدوري) ج: 3 ص: 236)
"சுலைமான் பின் சுஃப்யான் என்பவர் நம்பகமானவர் இல்லை'' என்று இப்னு முயீன் குறிப்பிடுகின்றார்கள்.
(நூல் : தாரீக் இப்னு முயீன், பாகம்: 3, பக்கம்: 236)

9 ت الترمذي   سليمان بن سفيان  التيمي أبو سفيان المدني مولى آل طلحة بن عبيد الله ...وقال بن المديني روى أحاديث منكرة وقال أبو حاتم ضعيف الحديث يروي عن الثقات أحاديث مناكير وقال أبو زرعة منكر الحديث روى عن عبد الله بن دينار ثلاثة أحاديث كلها يعني مناكير ... وقال الدارقطني ضعيف (تهذيب التهذيب ج: 4 ص: 170)
"இவர் மறுக்கப் பட வேண்டிய செய்திகளை அறிவித்தவர்'' என்று இப்னு மதீனீ அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். "இவர் பலவீனமானவர்; நம்பகமானவர்கள் பெயரைப் பயன்படுத்தி மறுக்கப் படவேண்டிய ஹதீஸ்களை அறிவிப்பவர்'' என்று அபூஹாத்தம் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.  "இவர் ஹதீஸ் கலையில் மறுக்கப்பட வேண்டியவர்; இவர் அப்துல்லாஹ் பின் தீனார் வழியாக மூன்று செய்திகளை அறிவித்துள்ளார்;  அவை அனைத்தும் மறுக்கப் பட வேண்டியவையாகும்'' என்று அபூஸுர்ஆ கூறுகின்றார்கள்.  "இவர் பலவீனமானவர்'' என்று இமாம் தாரகுத்னீ குறிப்பிடுகின்றார்கள்.
(நூல் : தஹ்தீபுத் தஹ்தீப், பாகம்:4, பக்கம்: 170)

سألت محمدا عن هذا الحديث فقال سليمان المدني هذا منكر الحديث (علل الترمذي الكبير ج : 2 ص :817)
"இமாம் புகாரி அவர்களிடம் இந்த ஹதீஸ் தொடர்பாக நான் கேட்ட போது, "சுலைமான் அல் மதனீ என்பார் ஹதீஸ் துறையில் மறுக்கப் பட்டவர்' என்று இமாம் புகாரி பதிலளித்தார்கள்'' என்று இமாம் திர்மிதீ அவர்களே குறிப்பிடுகின்றார்கள்.  (நூல் : இலலுத் திர்மிதீ அல்கபீர், பாகம்:2, பக்கம்: 817)
பெரும்பான்மை மக்கள் செய்வதெல்லாம் சரி என்பதற்கு ஆதாரமாக அவர்கள் எடுத்து வைக்கும் செய்தியைப் பதிவு செய்துள்ள இமாம் திர்மிதீ உட்பட பல அறிஞர்கள் இந்த ஹதீஸில் இடம் பெற்றுள்ள சுலைமான் பின் சுஃப்யான் என்பவரை பலவீனமானவர் என்று குறிப்பிட்டுள்ளதால் இதை ஆதாரத்திற்கு எடுத்துக் கொள்ள முடியாது.
மேலும் இதே கருத்தில் வரக் கூடிய செய்திகளைப் பற்றி ஹதீஸ் கலை மேதை ஹாஃபிழ் இப்னு ஹஜர் அவர்களின் கூற்றும் கவனிக்கத்தக்கதாகும்.

1474 وأمته معصومة لا تجتمع على الضلالة  هذا في حديث مشهور له طرق كثيرة لا يخلو واحد منها من مقال (تلخيص الحبير ج: 3 ص: 141)
"முஹம்மது (ஸல்) அவர்களின் சமூகத்தினர் பாதுகாக்கப்பட்டவர்கள்; அவர்கள் வழிகேட்டில் ஒன்றிணைய மாட்டார்கள்' என்ற இந்தச் செய்தி பிரபலமானதாகும்.  இவை அதிகமான வழிகளில் அறிவிக்கப் பட்டுள்ளது.  (எனினும்) அதில் எந்த ஒன்றும் விமர்சனம் இல்லாமல் (குறை இல்லாமல்) இல்லை.  (நூல் : தல்கீஸுல் கபீர், பாகம்: 3, பக்கம்: 141)
மேலும் திர்மிதீ, ஹாகிமில் இடம் பெறும் ஹதீஸில் கூட இவர்கள் சொன்ன கருத்தில் கூறப்படவில்லை.  இஸ்லாமிய சமுதாயம் சிதறிப் போய் விடக் கூடாது;  ஒற்றுமையுடன் கூட்டமைப்பாகச் செயல்பட வேண்டும்; ஆட்சித் தலைவருக்கு எதிராக புரட்சி செய்யக் கூடாது; கூட்டமைப்பை உடைக்கக் கூடாது என்றே அந்த ஹதீஸ் குறிப்பிடுகின்றது.  நாம் கூறிய இந்தக் கருத்தை வலுவூட்டும் வண்ணம் பின்வரும் ஹதீஸ்கள் இடம் பெறுகின்றன.

7054 حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ الْجَعْدِ أَبِي عُثْمَانَ حَدَّثَنِي أَبُو رَجَاءٍ الْعُطَارِدِيُّ قَالَ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ رَأَى مِنْ أَمِيرِهِ شَيْئًا يَكْرَهُهُ فَلْيَصْبِرْ عَلَيْهِ فَإِنَّهُ مَنْ فَارَقَ الْجَمَاعَةَ شِبْرًا فَمَاتَ إِلَّا مَاتَ مِيتَةً جَاهِلِيَّةً رواه البخاري ومسلم (3438)
"எவர் தம் ஆட்சித் தலைவரிடமிருந்து தமக்குப் பிடிக்காத ஒன்றைக் காண்கின்றாரோ அவர் அதைப் பொறுத்துக் கொள்ளட்டும். ஏனெனில் (இஸ்லாமிய) கூட்டமைப்பி-ருந்து பிரிந்து (அதே நிலையில்) ஒருவர் இறந்து விட்டால் அஞ்ஞான கால மரணத்தையே அவர் சந்திப்பார்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ர-),  நூல்கள் : புகாரி 7054, முஸ்-ம் 3438
இதே கருத்தில் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் ஏராளம் உள்ளன.  எனவே திர்மிதீ, ஹாகிமில் இடம் பெற்றுள்ள ஹதீஸின் கருத்து இஸ்லாமிய கூட்டமைப்போடு சேர்ந்து வாழ வேண்டும் என்று கூறுகின்றதே தவிர மார்க்க விஷயத்தில் அவர்கள் காட்டும் வழிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு நடங்கள் என்று கூறவில்லை.
3940 حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ عُثْمَانَ الدِّمَشْقِيُّ حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ حَدَّثَنَا مُعَانُ بْنُ رِفَاعَةَ السَّلَامِيُّ حَدَّثَنِي أَبُو خَلَفٍ الْأَعْمَى قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِنَّ أُمَّتِي لَا تَجْتَمِعُ عَلَى ضَلَالَةٍ فَإِذَا رَأَيْتُمْ اخْتِلَافًا فَعَلَيْكُمْ بِالسَّوَادِ الْأَعْظَمِ رواه ابن ماجة
"என்னுடைய சமுதாயத்தினர் வழிகேட்டில் ஒன்றிணைய மாட்டார்கள். நீங்கள் கருத்து வேறுபாட்டைக் கண்டால் பெரும் கூட்டத்தைப் பற்றிக் கொள்ளுங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ர-)
நூல்கள் : இப்னுமாஜா 3940, முஸ்னத் அப்து பின் ஹுமைத் 1220
"கருத்து வேறுபாடுகள் வரும் போது பெரும் கூட்டத்தினரின் கருத்தைப் பின்பற்ற வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்; கூட்டு துஆ சம்பந்தமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது; எனவே நபி (ஸல்) அவர்களின் கருத்துப் படி பெரும் கூட்டத்தினர் அங்கீகரித்த கூட்டு துஆ கூடும் என்ற கருத்தை ஏற்க வேண்டும்'' என்றும் வாதிடுகின்றனர்.
இவர்கள் எடுத்துக் காட்டும் இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது இல்லை. மேலும் குர்ஆன் வசனத்துடன் நேரடியாகவும் மோதுகின்றது. அதன் விபரத்தைப் பார்ப்போம்.
இச்செய்தியில் இடம் பெற்றிருக்கும் இரண்டாவது அறிவிப்பாளர் "அபூ கலஃப் அஃமா' என்ற ஹாஸிம் பின் அதா என்பவர் பலவீனமானவர்.
1243 حازم بن عطاء أبو خلف الأعمى شامي  .. شيخ منكر الحديث ليس بالقوي (الجرح والتعديل ج: 3 ص: 278)
"ஹதீஸ் கலையில் மறுக்கப்பட்டவர், பலமானவர் அல்லர்'' என்று அபூஹாத்தம் குறிப்பிடுகின்றார்கள்.

273 حازم بن أبي عطاء   أبو خلف الأعمى ... يأتي بأشياء لا تشبه حديث الأثبات (المجروحين ج: 1 ص: 267)
"உறுதியான செய்திகளுடன் ஒத்துப்  போகாத (மாற்றமான) செய்திகளைக் கொண்டு வருவார்'' என்று இப்னு ஹிப்பான் குறிப்பிடுகின்றார்கள்.  (நூல்: அல்மஜ்ரூஹீன், பாகம்:1, பக்கம்: 268)
380 ق بن ماجة   أبو خلف الأعمى  البصري خادم أنس نزل الموصل قيل اسمه حازم بن عطاء  ...ونقل بن الجوزي عن بن معين أنه قال في الأعمى الراوي عن أنس كذاب وجزم الدارقطني في الأفراد (تهذيب التهذيب ج: 12 ص: 95)

இவர் பொய்யர் என்று இப்னு முயீன் கூறியதாக இப்னுல் ஜவ்ஸீ அவர்கள் எடுத்தெழுதியுள்ளார்கள்.  இதை இமாம் தாரகுத்னீ அவர்கள் (தமது) அல் அஃப்ராத் என்ற நூ-ல் உறுதி செய்துள்ளார்கள்.
(நூல் : தஹ்தீபுத் தஹ்தீப், பாகம்: 12, பக்கம்: 95)
இதே போல் இச்செய்தியில் இடம் பெற்றிருக்கும் மூன்றாவது அறிவிப்பாளர் "முஆன் பின் ரிஃபாஆ அஸ்ஸலாமீ' என்பவரும் பலவீனமானவராவார்.

1919 معان بن رفاعة  السلامى الدمشقي ... يكتب حديثه ولا يحتج به (الجرح والتعديل ج: 8 ص: 421)
"இவருடைய ஹதீஸ்களை எழுதிக் கொள்ளலாம்; ஆனால் ஆதாரமாக எடுத்துக் கொள்ளக் கூடாது'' என்று அபூஹாத்தம் குறிப்பிடுகின்றார்கள். (நூல்: அல்ஜரஹ் வத்தஃதீல், பாகம்: 8, பக்கம்:421)

1081 معان بن رفاعة  السلامي من أهل دمشق ...ويحدث عن أقوام مجاهيل لا يشبه حديثه حديث الأثبات فلما صار الغالب على روايته ما تنكر القلوب استحق ترك الاحتجاج (المجروحين ج: 3 ص: 36)
"இவர் யார் என்று அறியப்படாத கூட்டத்தினரிடமிருந்து அறிவிப்பார்.  இவருடைய செய்திகள் உறுதியான ஹதீஸ்களுக்கு ஒப்பானதாக இருக்காது.  இவருடைய அறிவிப்புக்கள் பெரும்பாலானவை உள்ளங்கள் மறுக்கக் கூடியவையாக ஆனதால் இவரை ஆதாரமாக எடுத்துக் கொள்ளாமல் விடுவது உறுதியாகி விட்டது'' என்று இப்னு ஹிப்பான் குறிப்பிட்டுள்ளார்கள்.
(நூல் : அல்மஜ்ரூஹீன், பாகம்:3, பக்கம்: 36)

5134 ومعان بن رفاعة  ضعيف   (تاريخ ابن معين (رواية الدوري) ج: 4 ص: 429)
"முஆன் பின் ரிஃபாஆ என்பவர் பலவீனமானவர்'' என்று இப்னு முயீன் குறிப்பிட்டுள்ளார்கள்.
(நூல் : தாரீக் இப்னு முயீன், பாகம்: 4, பக்கம்: 429)

1808   معان بن رفاعة  ... قال السعدي معان بن رفاعة  السلامي ليس بحجة ... ومعان بن رفاعة عامة ما يرويه لا يتابع عليه (الكامل في ضعفاء الرجال ج: 6 ص: 328)
"முஆன் பின் ரிஃபாஆ என்பவர் ஆதாரத்திற்கு உரியவர் அல்லர்'' என்று அஸ்ஸஃஅதீ குறிப்பிட்டுள்ளார்கள்.  "இவருடைய பெரும்பான்மையான செய்திகளுக்கு ஒப்பாக மற்றவர்கள் அறிவித்திருக்க மாட்டார்கள்'' என்று இப்னு அதீ குறிப்பிட்டுள்ளார்கள்.
(நூல் : அல்காமில், பாகம்: 6, பக்கம்: 328)
கருத்து வேறுபாடு வரும் போது பெரும் கூட்டத்தினரைப் பின்பற்ற வேண்டும் என்ற செய்தியில் இரண்டு அறிவிப்பாளர்கள் பலவீனமானவர்களாக இருப்பதால் அதை நாம் ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது.  மேலும் இந்தச் செய்தி திருமறைக் குர்ஆனின் கட்டளைக்கும் மாற்றமாக அமைந்துள்ளது.
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி இருந்தால் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும், (முஹம்மதுக்கும்) உங்களில் அதிகாரம் உடையோருக்கும் கட்டுப்படுங்கள்! ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் முரண் பட்டால் அதை அல்லாஹ்விடமும், இத் தூதரிடமும் கொண்டு செல்லுங்கள்! இதுவே சிறந்ததும், மிக அழகிய விளக்கமுமாகும்.(அல்குர்ஆன் 4:59)
கருத்து வேறுபாடு ஏற்படும் போது அல்லாஹ்விடம் - அதாவது அவனது சொல்லான திருமறைக் குர்ஆனிடமும், அவனது தூதரிடம் - அதாவது நபிமொழியிடம் செல்ல வேண்டும்.  அதில் என்ன விளக்கம், சட்டம் கூறப்பட்டுள்ளதோ அதையே பின்பற்ற வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்.  பெரும்பான்மை மக்களின் கருத்தைப் பின்பற்றச் சொல்லவில்லை.  எனவே அந்தச் செய்தி மேலும் பலவீனமடைகின்றது.  எனவே இதை அடிப்படையாக வைத்து கூட்டு துஆவை ஆதரிக்க முடியாது.
கூட்டு துஆவை நியாயப்படுத்த அவர்கள் எடுத்து வைக்கும் அடுத்த ஆதாரம்:
நேர் வழி தனக்குத் தெளிவான பின் இத்தூதருக்கு மாறு செய்து நம்பிக்கை கொண்டோரின் வழியல்லாத (வேறு) வழியைப் பின்பற்றுபவரை, அவர் செல்லும் வழியில் விட்டு விடுவோம். நரகத்திலும் அவரை நுழையச் செய்வோம். தங்குமிடங்களில் அது மிகவும் கெட்டது.  (அல்குர்ஆன் 4:115)
நம்பிக்கை கொண்டோரின் வழியல்லாத வேறு வழியைப் பின்பற்றுபவன் நரகம் செல்வான் என்ற இந்த வசனத்தை எடுத்து வைத்து, பெரும்பான்மை முஸ்-ம்கள் செல்லும் வழியே சரியான வழி! அவர்களின் நடைமுறையையே பின்பற்ற வேண்டும்.  அதன்படி கூட்டு துஆவும் கூடும் என்று வாதிடுகின்றனர்.
நம்பிக்கை கொண்டோரின் வழி என்பது இன்றைய முஸ்-ம்களின் வழி என்று அல்லாஹ் கூறவில்லை.  மாறாக நம்பிக்கை கொண்டோரின் வழி என்னவென்பதை குர்ஆனின் பல இடங்களில் தெளிவு படுத்தியுள்ளான்.
அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் அழைக்கப்படும் போது "செவியுற்றோம்; கட்டுப்பட்டோம்'' என்பதே நம்பிக்கை கொண்டோரின் கூற்றாக இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.(அல்குர்ஆன் 24:51)
அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும் போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுய விருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழி கெட்டு விட்டார்.  (அல்குர்ஆன் 33:36)
மேற்கூறப்பட்ட இரண்டு வசனங்களும் முஃமின்களின் வழி எது என்பதைத் தெளிவாக விளக்குகின்றன.  கூட்டு துஆ கூடுமா? கூடாதா? என்பதில் கருத்து வேறுபாடு ஏற்படும் போது அல்லாஹ்வும் அவனது தூதரும் இதற்கு என்ன முடிவு செய்துள்ளார்கள் என்பதை அறிந்து அதற்குக் கட்டுப்படுவது தான் முஃமின்களின் வழியே தவிர பெரும்பான்மை          முஸ்-ம்களின் வழி அல்லாஹ் சொன்ன வழியாக அமையாது.
நான்கு மத்ஹபுகளில் ஒன்றைத் தான் பின்பற்ற வேண்டும் என்று முழக்கமிடுபவர்கள் கூட்டு துஆவில் அதைக் கடைப்பிடிக்கின்றார்களா?  கூட்டு துஆ தொடர்பாக மத்ஹபுகள் என்ன கூறுகின்றன?

والإخفاء في الدعاء أولى قال الله تعالى ادعوا ربكم تضرعا وخفية (الأعراف 55) وقال عليه الصلاة والسلام خير الدعاء الخفي وخير الرزق (المبسوط للسرخسي ج: 1 ص: 33)

துஆவில் இரகசியமாகச் செய்வதே சிறந்ததாகும்.  ஏனெனில் அல்லாஹ் கூறுகின்றான்: "உங்கள் இறைவனை பணிவுடனும் இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள்'' என்று ஹனஃபி மத்ஹப் நூலான அல்மப்ஸுத் என்ற நூ-ல் கூறப்பட்டுள்ளது.
இதே அடிப்படையில் இந்தியாவின் வட மாநிலங்களில் ஹனஃபி பள்ளிகளில் கூட்டு துஆ ஓதப்படுவதில்லை.  இதை இன்றும் நாம் காணலாம்.
இமாம் ஷாஃபி அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள்.
وأختار للامام والمأموم أن يذكر الله بعد الانصراف من الصلاة ويخفيان الذكر إلا أن يكون إماما يجب أن يتعلم منه  فيجهر حتى يرى أنه قد تعلم منه ثم يسر (الأم ج: 1 ص: 127)

தொழுகை முடிந்ததற்குப் பிறகு இமாமும் பின்பற்றித் தொழுபவர்களும் அல்லாஹ்வை இரகசியமாக நினைவு கூர்வதை நான் தேர்வு செய்கின்றேன்.  எனினும் இமாமாக இருப்பவர் (மற்றவர்கள் பிரார்த்தனையைக் கற்றுக் கொள்வதற்காக) சப்தமிட்டு ஓதுவது அவசியமாகும்; (மக்கள்) கற்றுக் கொண்டு விட்டார்கள் என்று அவர் எண்ணும் போது அவரும் இரகசியமாகக் கூற வேண்டும்.
(நூல் : அல் உம்மு, பாகம்: 1, பக்கம்: 127)
ثُمَّ يَنْوِي الدُّعَاءَ بَعْدَ الصَّلَاةِ أَيْضًا ; لِأَنَّهُ مِنْ السُّنَّةِ أَعْنِي دُعَاءَ كُلِّ إنْسَانٍ فِي سِرِّهِ لِنَفْسِهِ وَلِإِخْوَانِهِ دُونَ جَهْرٍ اللَّهُمَّ إلَّا أَنْ يَكُونَ إمَامًا وَيُرِيدَ أَنْ يُعَلِّمَ الْمَأْمُومِينَ عَلَى مَا قَالَهُ الشَّافِعِيُّ رحمه الله فَإِذَا رَأَى أَنَّهُمْ قَدْ تَعَلَّمُوا سَكَتَ (المدخل)
"(தொழுகை முடிந்தவுடன்) துஆச் செய்ய எண்ண வேண்டும்.  ஒவ்வொரு மனிதனும் தனக்காகவும் தனது சகோதரனுக்காகவும் இரகசியமாக துஆச் செய்வது சுன்னத் ஆகும்.  எனினும் இமாமாக இருப்பவர் பின்பற்றித் தொழுபவருக்கு கற்றுக் கொடுக்க நாடினால் இமாம் ஷாஃபி அவர்களின் கூற்றுப்படி நடக்கலாம்.  அவர்கள் கற்றுக் கொண்டு விட்டார்கள் என்று எண்ணும் போது அவர் மவுனமாக (சப்தமில்லாமல் துஆச் செய்ய) வேண்டும்'' என்று மா-க் மத்ஹபின் சட்ட நூலான அல்மத்கல் என்ற நூ-ல் இடம் பெற்றுள்ளது.
மத்ஹபு நூல்கள் கூட இந்தக் கூட்டு துஆவை ஆதரிக்காத போது குர்ஆனுக்கும் நபிமொழிக்கும் மாற்றமான இக்காரியத்தை நாம் ஏன் பின்பற்ற வேண்டும்?

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites