அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

செவ்வாய், 20 ஏப்ரல், 2010

மதக்கலவரங்களை தடுக்க என்ன வழி ?

மதச் சார்பற்ற நாடாக உலக அரங்கில் பேசப்படும் இந்தியாவில் தான் ஏராளமான மதக் கலவரங்கள் நடைபெற்று வருகின்றன. அவற்றால் மதிப்பற்ற உயிர் இழப்புகள் ஏற்படுகின்றன. குறிப்பாக சிறுபான்மை சமூகத்தினர் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர்.எத்தனை மதக் கலவரங்கள் நடந்தாலும் அதைத் தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகள் உருப்படியான எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. அரசியல், ஜாதி, ஓட்டுகள் ஆகியவற்றைக் கவனத்தில் கொண்டே நடவடிக்கைகள் அமைகின்றன.
சமீபத்தில் கர்நாடக மாநிலம் மங்களூர் மற்றும் அதனை சுற்றியுள்ள முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளில் மதக் கலவரம் உருவாக்கப்பட்டு முஸ்லிம்களின் உயிர்கள் மற்றும் சொத்துக்கள் சூறையாடப்பட்டுள்ளன.
நவராத்திரி விழாவைக் கொண்டியவர்கள், துர்காதேவி சிலையை நோக்கி முஸ்லிம் பெரியவர் கையேந்தி பிரார்த்தனை செய்வது போல் சிலை வடித்திருந்தனர். இதற்கு முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இதைக் காரணமாக வைத்து தான் மங்களூர் பகுதியில் இந்துத்துவாவினர் மதக் கலவரத்தை ஏற்படுத்தினர்.
முஸ்லிம்களின் நியாயமான கோரிக்கையை ஏற்க மறுத்து, சிலரின் தூண்டுதல் தான் இந்தக் கலவரத்திற்குக் காரணம். அமைதி வழியைப் பின்பற்றி நடக்கும் முஸ்லிம்களின் உயிர்கள், உடமைகள் இதனால் பறிபோய் நிம்மதி இழந்து தவிக்கின்றனர். இது போன்று நாட்டின் பல பகுதிகளில் நடப்பதைத் தடுக்க என்ன தான் வழி?
மதக் கலவரங்கள் நடக்க முக்கியமாக இரண்டு காரணங்கள் தான் உள்ளன. இந்த இரண்டு காரணங்களையும் சரி செய்து விட்டால் மதக் கலவரங்களைத் தடுத்து விடலாம்.
ஒன்று, மதக் கலவரங்களை தூண்டுவதற்கு என்றே சிலர் உலா வந்து கொண்டிருக்கின்றனர்.
அடுத்து, மதக் கலவரங்கள் நடக்கும் போது அரசும் காவல்துறையினரும் நேர்மையாக, கடும் நடவடிக்கைகள் எடுப்பதில்லை.
இந்த இரண்டு காரணங்கள் தான் மதக் கலவரத்திற்குத் தூண்டுகோலாக உள்ளது.
மதக் கலவரங்களை தூண்டும் விதமாக துண்டுப் பிரசுரங்கள், வால் போஸ்டர் அடிப்பது, அடுத்தவர்களின் கடவுள்களை இழிவு படுத்தும் வண்ணம் பேசுவது, வழிபாட்டுத் தலங்களுக்கு முன்னால் அவர்களை ஆத்திரமூட்டும் விதமாக நடந்து கொள்வது என்று ஏராளமான காரியங்களை சிலர் செய்து மதத் கலவரங்களைத் தூண்டுகிறார்கள். அனைவரும் அல்ல! எல்லா மதங்களிலும் ஏராளமான நல்லவர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள்.
இவர்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் கடுமையான பிரிவில் வழக்குப் பதிவு செய்து, கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும். இந்தத் தண்டனை மதக் கலவரங்களைத் தூண்டுபவர்களுக்கு சரியான எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மதம் தொடர்பான விஷயங்களில் அரசும் காவல்துறையும் நேர்மையாக நடக்க வேண்டும். ஒரு சார்பாக நடக்கக் கூடாது. ஆளும் கட்சி, எதிர்க் கட்சி, நமது மதம் என்ற பாகுபாடுகள் காட்டக் கூடாது. பல இடங்களில் காவல்துறையினர் பாரபட்சமாக நடந்து கொள்வதால் கலவரத்தீ மீண்டும் நடக்கக் காரணமாக அமைகிறது.
ஒரு சார்பாக நடந்து கலவரக் காரர்களை அடக்காமல், கண்டிக்காமல், தண்டிக்காமல் விடும் போது கலவரக் காரர்களுக்கு இது நல்ல ஊக்கமாக அமைகிறது. காவல்துறையில் இருப்பவர்கள் மனித உயிர்களை மதித்து, மதக் கலவரங்களைத் தூண்டுபவர்களை கடுமையாகத் தண்டித்து, நிரபராதிகளை விடுவித்தால் மதக் கலவரங்களை முழுமையாகத் தடுத்து நிறுத்தலாம்.

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites