அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

சனி, 24 ஏப்ரல், 2010

இஸ்லாம் வலியுறுத்தும் விளையாட்டுகள்


வீண்விளையாட்டுகளை தடைசெய்யும் திருக்குர்ஆன் நபிமொழிகளை மார்ச் மாத இதழில் பார்த்தோம். அதில் இடம்பெற்றுள்ள அறிவுரைகளையெல்லாம் படித்து விட்டு  பொழுது போக்குக் கூட அனுமதியளிக்காத மனித உணர்வுகளை கட்டி போடும் நடைமுறைப்படுத்த முடியாத மார்க்கம் இஸ்லாம் என்று தவறான முடிவுக்கு வந்துவிடக்கூடாது. மனித உணர்வுகளை மதிக்க தெரிந்த மார்க்கம் இஸ்லாம் மட்டுமே. ஏனென்றால் இஸ்லாமிய மார்க்கம் மனிதர்களையும் அகில உலகத்தையும் படைத்த இறைவனின் மார்க்கம். இறைவனுக்குத் தான் படைத்த மனிதனின் உணர்வுகள் பற்றி தெரியும். இஸ்லாம் விளையாட்டுகளை பொருத்த வரையில் அதிலேயே மூழ்கி கிடந்து அடிமையாகமலும் அடுத்தவர்களுக்கு துன்பம் கொடுக்காத வகையிலும் மோசடி, சூதாட்டம் இல்லாமலும் உடல் ஆரோக்கியத்தையும் சிந்தனைûயும் சீர்படுத்த கூடிய விளையாட்டுகளை அனுமதிக்கவும் செய்து அதை தூண்டவும் செய்கிறது. இன்னும் இஸ்லாத்தில் நம்முடைய உடம்பை பேணுவதையும் வலியுறுத்தியுள்ளது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
உன் உடம்புக்கும் கண்ணுக்கும் செய்ய வேண்டிய கடமைகள் உள்ளன.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னு ஆஸ்(ரலி)
நூல் : புகாரி 1975
இஸ்லாத்தில் மார்க்க வரையறைக்குட்டுபட்டு சந்தோஷமாக கொண்டாட வேண்டிய பண்டிகைகள் நோன்பு பெருநாள், ஹஜ் பெருநாள். இந்த நாட்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளையாட்டுக்காக அல்லாஹ்வால் அருளப்பட்ட நாட்கள் என்றே கூறியுள்ளளார்கள்.
நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த காலகட்டத்தில் மதீனாவாசிகள் இரண்டு நாட்களை தேர்வு செய்து அதிலே வியைôடுபவர்களாக இருந்தார்கள. அப்போது நபி(ஸல்) அவர்கள் இது என்ன நாட்கள் என்று கேட்டார்கள்.அறியாமைக் காலத்திலிருந்து இந்த இரண்டு நாட்களில் தான் விளையாடிகொண்டு வருகிறோம் என்று அவர்கள் சொன்னார்கள் . அதற்கு நபி(ஸல்) அவர்கள் இதற்கு பதிலாக நோன்பு பெருநாள் ஹஜ் பெருநாள் என்ற இரண்டு நாட்களை (விளையாடுவதற்காக) அல்லாஹ் உங்களுக்கு வழங்கியுள்ளான் என்று கூறினார்கள்
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல் : அஹ்மத் 13131
இந்நாட்களில் நபி (ஸல்) அவர்கள் விளையாடுவதற்கு அனுமதி அளித்ததோடு மட்டுமல்லாமல் அவர்களுடைய மனைவியோடு சேர்ந்து அதை நீண்ட நேரம் வேடிக்கையும் பார்த்துள்ளார்கள்.
பள்ளிவாயிலில் கருப்பு நிற வீரர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.நபி(ஸல்) அவர்களோ என்னை அவர்களுடைய மேலாடையால் மறைத்திருந்தார்கள். நான் சலிப்படையும் அளவுக்கு அவர்களின் விளையாட்டை பார்த்தேன். ஒரு பருவ வயதை அடைந்த சிறுமி விளையாட்டை பார்ப்பதற்கு எந்த அளவு ஆர்வமாக இருப்பாளோ அந்த அளவு (நான் பார்த்ததை) கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : புகாரி 5236
விளையாட முன்நின்ற நபிகளார்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அம்பெறிந்து விளையாடக் கூடிய சிலரை கடந்து சென்றார்கள். இஸ்மாயீலின் சந்ததிகளே அம்பெறியுங்கள் ஏனென்றால் உங்கள் தந்தை அம்பெறிபவராகத் தான் இருந்தார்.நீங்களும் எரியுங்கள் நான் இன்ன கூட்டதாருடன் சேர்ந்து கொள்கிறேன்.   என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அந்த இரண்டு கூட்டத்தினரில் ஒரு கூட்டத்தினர் அம்பெறியாமல் நின்றனர்.நீங்கள் ஏன் அம்பெறியவில்லை என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். நீங்கள் அவர்களணியில் இருக்கும் போது நாங்கள் எப்படி அம்பெறிய முடியும். என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் அம்பெறியுங்கள் நான் உங்கள் இருவரின் அணியுடனும் இருக்கிறேன் என்றார்கள்.
அறிவிப்பவர் : ஸலமா இப்னு அல் அக்வா(ரலி)
நூல் : புகாரி 2899
இந்த அம்பெறிகின்ற விளையாட்டு என்பது இன்றைய விளையாட்டை போன்று கிருக்குத் தனமான போதையை உண்டாக்காது. சிந்தனையையும் உடலையும் சீராக்கக்கூடியது. இன்றைக்கு ஒலிம்பிக் போட்டியில் கூட இடம்பெற்றுள்ளது. இன்னும் நபி(ஸல்) அவர்கள் போர்களத்தில் எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்ள மட்டுமே இந்த வில்வித்தையை பயன்படுத்த  அனுமதியளித்துள்ளார்கள். அதுவல்லாமல் எந்த உயிரினத்துக்கும் இந்த விளையாட்டால் தீங்கு செய்வதை தடுத்துள்ளார்கள்.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :
உயிருள்ள பொருள் எதையும் அம்பெறிவதற்கு இலக்காக எடுத்துக் கொள்ளாதீர்கள்
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : முஸ்லிம் 3617
இன்றைக்கு விளையாட்டுகள் என்பது காட்டுமிராண்டிதனத்தை போதிக்கக் கூடியவையாகத்தான் இருக்கிறது. தமிழ் நாட்டில் நடக்கும் ஜல்லிக் கட்டு, ஸ்பெயினில் நடக்கும் காளையடக்கும் போட்டி இவையெல்லாம் உயிருள்ள ஜீவன்களை சித்தரவதை செய்து தன்னுடைய வீரத்தை நிரூபிக்கும் முட்டாள் தனம் தான் நிறைந்துள்ளது. இவை தவிர இதிலே கேவலம் ஒரு விளையாட்டுக்காக விலைமதிப்பற்ற மனித உயிர்கள் பலியாகின்றன. விலங்கின மனித நேய ஆர்வலர்களின் கண்களுக்கு இன்று தான் தெரிந்து அதை எதிர்த்து போராட்டம் நடத்தி வழக்கு தொடர்கின்றனர். ஆனால் இஸ்லாம் அன்றைக்கு இதை தடைசெய்துள்ளது.
இன்னும் இஸ்லாம் உடலை வலுப்படுத்தியும் சிந்தனையை சீராக்கக்கூடிய கலைக்கு மிகுந்த முக்கியத்தவம் கொடுத்துள்ளது.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :
யார் அம்பெறிவதை கற்றுக் கொண்டு பிறகு மறந்துவிடுகிறாரோ அவர் என்னை சார்ந்தவரில்லை.அவர் மாறு செய்துவிட்டார்
அறிவிப்பவர் : உக்பா (ரலி)
நூல் : முஸ்லிம் 3543
இது போன்ற தற்காப்பு கலைகளுக்கு  இந்திய அரசாங்கமே அரசு அனுமதியுடன் இதை கற்றுக் கொள்வதற்கும் தேசிய, உலகளாவிய போட்டிகளில் கலந்து கொள்வதற்கும் பரிசுகளையும் ஊக்கத் தொகைகளையும் வழங்கி ஆர்வமூட்டுகிறது. நம்முடைய பிள்ளைகளுக்கு முட்டாள் தனமான சாகச வீரர்களின் தொடர்களை பார்ப்பதற்கு அனுமதிப்பதற்கு பதிலாக இது போன்ற விளையாட்டுகளை கற்பதை ஆர்வமூட்டினால் அவர்கள் சினமா, ஆபாசம், போதை பழக்கத்திற்கு அடிமையாகுதல்  போன்ற தீமைகளிலிருந்து அது திருப்பும். அவர்கள் அதில் சிறந்து விளங்கினால் அரசாங்கமே அவர்களது படிப்பின் முழுச் செலவையும் ஏற்றுக் கொள்ளும்.
நபி(ஸல்) அவர்கள் தங்கள் வாழ்நாளில் இந்த அம்பெறியும் விளையாட்டை மட்டும் விளையாடவில்லை. பல விளையாட்டுகளில் ஈடுபட்டுள்ளார்கள்.
ஓட்டப் பந்தயம்
நான் நபி(ஸல்) அவர்களுடன் சில பயணங்களில் சென்றிருக்கிறேன்.அப்போது உடல் பருமனில்லாமல் (ஒல்லியாக) இருந்தேன். அப்போது முன்னே செல்லுங்கள்! முன்னே செல்லுங்கள்! என்று நபி(ஸல்) அவர்கள் மக்களிடத்தில் சொôன்னார்கள். பிறகு என்னிடத்தில் என்னுடன் ஒட்டப் பந்தய போட்டிக்கு வா! என்றார்கள். நான் அவர்களுடன் போட்டிக்கு சென்று அவர்களை முந்தினேன். அப்போது (மீண்டும் ஓடுவது பற்றி) என்னிடத்தில் எதுவும் சொல்லவில்லை. என் உடல் பருமனானது.நான் (ஏற்கனவே நடந்த ஓட்டப்பந்தயம் பற்றி) மறந்துவிட்டேன். அவ்வாறே அவர்களுடன் பயணத்தில் சென்றேன். அப்போது அவர்கள் மக்களிடத்தில் சொன்னார்கள் முன்னே செல்லுங்கள்! முன்னே செல்லுங்கள்!  பிறகு என்னிடத்தில் என்னுடன் ஒட்டப் பந்தயத்திற்கு வா என்றார்கள். நான் அவர்களுடன் போட்டி போட்டேன். அவர்கள் என்னை முந்திவிட்டு சிரித்துக் கொண்டே அதற்கு பதிலாக  இது  என்றார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : அஹ்மத் 25075
இந்த ஒட்டப் பந்தயம் தான் உலகநாடுகள் அனைத்திலும் இருக்கக்கூடிய ஒரு போட்டியாக உள்ளது. உடலுக்கு ஆரோக்கியத்தையும சுறுசுறுப்பையும் தரக்கூடியது.
குதிரை பந்தயம்
அப்துல்லாஹ் பின் உமர் (ர-) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மெலிலியவைக்கப்பட்ட (பயிற்சியளிக்கப்பட்ட) குதிரைகளுக்கிடையே "ஹஃப்யா' எனும் இடத்தி-ருந்து பந்தயம் வைத்தார்கள். அவற்றின் (பந்தய) எல்லை "சனிய்யத்துல் வதா' எனும் மலைக் குன்றாகும். மேலும் அவர்கள் மெ-யவைக்கப்படாத (பயிற்சி பெறாத) குதிரைகளுக்கிடையேயும் அந்த சனிய்ய(த்துல்வதா)வி-ருந்து பனூ ஸுரைக் குலத்தாரின் பள்üவாசல் வரை பந்தயம் வைத்தார்கள். (நூல் :புகாரி 420)
நபி (ஸல்) அவர்கள் ஸன்யதுல் விதா என்ற இடத்திலிருந்து ஹஃப்யா என்ற இடம் வரை 5 மைல்கள் சேனம் பூட்டப்பட்ட  குதிரையை குதிரைபந்தயத்தில் ஓட்டி சென்றார்கள். ஸனியாவிலிருந்து பனூ ஸரைக்கின் பள்ளிவாயில் வரை 6 மைல்கள் சேனம் பூட்டப்படாத குதிரையை ஓட்டினார்கள்.
சேனம் பூட்டப்பட்டு குதிரையில் சவாரி செய்வதென்பது அதிலேயே பயிற்சி பெற்ற வீரர்களால் மட்டும் தான் முடியும். நபி(ஸல்) அவர்கள் சேனம் பூட்டப்பட்டாமல் 6 மைல்கள் (இந்த கால கணக்கு படி 9 கி.மீ) குதிரை பந்தயத்தில் சென்றுள்ளாôகளென்றால் அதுவும்  50 வயதுக்கு பின்னால் அவர்களின் உடல் வலிமையை தெரிந்து கொள்ளலாம். நபி(ஸல்) அவர்கள் ஜிப்பா தலைப்பாகையுமாக உடல் உழைப்பை செலுத்தாமல் பள்ளிவாசலுக்குள் முடங்கிகிடக்கவில்லை. பல வீரதீர போட்டிகளில் பங்கெடுத்துள்ளார்கள் என்பது இதிலிருந்து தெரியவருகிறது.
ஒட்டக பந்தயம்
நபி(ஸல்) அவர்கள் குதிரை ஏற்றம், அம்பெறிதல் இவற்றில் மட்டும் வீரராக சிறந்து விளங்கவில்லை. ஒட்டக பந்தயத்திலும் தன் திறமையை காட்டினார்கள்.
நபி(ஸல்) அவர்களுக்கு ஒரு ஒட்டகம் இருந்தது . அதன் பெயர் அழ்பா. அதை யாரும் போட்டியில் தோற்கடிக்க முடியாது. சேனம் பூட்டப்பட்ட ஒட்டகத்தில் அமர்ந்தவாறு ஒரு கிராமவாசி வந்தார். நபி(ஸல்) அவர்களை அவர் போட்டியில் முந்திவிட்டார்.இது முஸ்லிம்களுக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தியது.பைலா தோற்றுவிட்டதே என்று கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வுக்கென்றுள்ள உரிமை அவன் உயர்த்திய எந்த பொருளையும் தாழ்த்துவதாகும். என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ்(ரலி)
நூல் : புகாரி 6501
நபி(ஸல்) அவர்களுடைய ஒட்டகமான அழ்பாவை தோற்க முடியாது என்று அனஸ்(ரலி) அவர்கள் கூறுவதிலிருந்து பலதடவைகள் நபி(ஸல்) அவர்கள் ஒட்டகப்பந்தயத்தில் கலந்து கொண்டுள்ளதாக அறியமுடிகிறது.
இன்னும் நபி(ஸல்) சில விளையாட்டு போட்டிகளுக்கு குறிப்பிட்டு அனுமதியும் வழங்கியுள்ளார்கள்.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்
வெற்றி பரிசு என்பது ஒட்டகப்பந்தயம், குதிரை பந்தயம், அம்பெறிவது இவைகளுக்கு தான் தகுதியானது.
அறிவிப்பவர் :அபூ ஹரைரா (ரலி)
நூல் : அஹ்மத் 9754
நபி(ஸல்) அவர்கள் காலத்தில் போர்களத்தில் இந்த மூன்று திறமைகளும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருந்தன. அதை தூண்டும் வண்ணமாக பரிசுகளும் அதற்கு வழங்கவது தான் சிறந்தது  என்று கூறியுள்ளார்கள்.
இது போன்று பெரியவர்கள் மட்டும்தான் விளையாட்டை விளையாட வேண்டும் என்றல்ல. குழந்தைகளுக்கு ஆரோக்கியமான விளையாட்டுக்கு இஸ்லாம் அனுமதியளித்துள்ளது.
குழந்தைகளின் விளையாட்டுக்கள்
நான் ஆறு வயதுடையவளாக இருந்த போது நபி (ஸல்) அவர்கள் என்னை மணந்து கொண்டார்கள். பிறகு நாங்கள் மதீனா வந்து ஹாரிஸ் பின் கஸ்ரஜ் குலத்தாரிடம் தங்கி னோம். எனக்குக் காய்ச்சல் கண்டு விடவே என் முடிகள் உதிர்ந்து விழுந்தன. பிறகு (என்) முடி வளர்ந்து அதிகமாகி விட்டது. நான் என் தோழிகள் சிலருடன் ஊஞ்சலாடிக் கொண்டிருந்த போது என் தாயார் உம்மு ரூமான் (ர-) அவர்கள் என்னிடம் வந்து என்னைச் சத்தம் போட்டு அழைத்தார்கள். நான் அவர்கüடம் சென்றேன். அவர்கள் என்னிடம் எதை நாடி வந்திருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது. அவர்கள் என் கையைப் பிடித்து (அழைத்துச் சென்று) வீட்டின் கதவருகே என்னை நிறுத்தி விட்டார்கள். நான் (வேகமாக வந்ததால்) எனக்கு மூச்சிறைக்கத் தொடங்கிடவே, அவர்கள் சிறிது தண்ணீரை எடுத்து என் முகத்தையும் தலையையும் துடைத்துப் பிறகு என்னை வீட்டினுள் கொண்டு சென்றார்கள். அங்கு வீட்டில் சில அன்சாரிப் பெண்கள் இருந்தார்கள். அவர்கள், "நன்மையுடனும் அருள்வளத்துடனும் வருக! (அல்லாஹ்வின்) நற்பேறு உண்டாகட்டும்'' என்று (வாழ்த்துக்) கூறினர். உடனே என் தாய் என்னை அப்பெண்கüடம் ஒப்படைக்க, அவர்கள் என்னை அலங்கரித்து (வீடுகூடுவதற்காகத் தயார் படுத்தி) விட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முற்பகல் வேளையில் திடீரென வந்தார்கள். அவர்கüடம் அப் பெண்கள் என்னை ஒப்படைத்தனர். நான் அன்று ஒன்பது வயதுடையவளாக இருந்தேன்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : புகாரி 3894
ஊஞ்சல் வியைôட்டு என்பது பெரியவர்கள் உட்பட சிறியவர்களுக்கும் பிடித்த விளையாட்டு. இது குழந்தைகளின் மனதுக்கும் சந்தோஷத்தையும் உடலுக்கு வலுவையும் தரக்கூடியது. இதை ஆயிஷா(ரலி) அவர்கள் விளையாட நபி(ஸல்) அவர்களும் அனுமதியளித்துள்ளார்கள்.
பொம்மைகளை வைத்து விளையாடுதல்
இஸ்லாத்தில் உருவப்படத்திற்கு தடையிருந்தாலும் குழந்தைகள் பொம்மைகளை வைத்து விளையாடுவதற்கு அனுமதியுள்ளது.
நபி(ஸல்) அவர்கள் கன்தக் போரிலிருந்தோ அல்லது கைபர் போரிலிருந்தோ திரும்ப வந்தார்கள். விளையாட்டு பொருட்கள் உள்ள பெட்டி ஒரு திரையால் மூடப்பட்டிருந்து. காற்றடித்து மூடியிருந்த என்னுடை விளையாட்டு பொருட்களை மூடியிருந்த திரை விலகியது. இது என்ன? ஆயிஷா என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு நான் இது என் விளையாட்டு பொருட்கள் என்று கூறினேன்.அவைகளில் தோலலான இரண்டு இறக்கைகளையுடைய குதிரையை பார்த்தார்கள்.இவைகளின் நடுவில் நான் பார்க்கும் இது என்ன ? என்று கேட்டார்கள். அதற்கு குதிரை என்று நான் பதிலளித்தேன். குதிரைகளுக்கு இறக்கைகளும் இருக்குமோ? என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். சுலைமான் (அலை) அவர்களின் குதிரைகளுக்கு இறக்கைகள் இருப்பதை நீங்கள் கேள்விபட்டதில்லையா? என்று நான் சொன்னேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் தன் கடவாய் பற்கள் தெரியுமளவுக்கு சிரித்தார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : அபூ தாவூத் 4305
நான் நபி(ஸல்) அவர்கள் முன்னிலையில் விளையாட்டு பொருட்களை வைத்து விளையாடுபவளாக இருந்தேன். என்னுடைய தோழிகள்(விளையாடுவதற்காôக) என்னிடத்தில் வருவார்கள். நபி(ஸல்) அவர்ளை  கண்டு அவர்கள் வெட்கப்பட்டு பயந்து ஒழிந்து கொள்வார்கள். நபி(ஸல்) அவர்கள் என்னிடத்தில் அவர் அனுப்பி வைப்பார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : முஸ்லிம் 4480
நபி(ஸல்) அவர்கள் சுலைமான் (அலை) அவர்களின் குதிரைக்கு ஆயிஷா(ரலி) அவர்கள் கூறிய விளக்கத்தை கேட்டு கடவாய் பற்கள் தெரியுமளவுக்கு சிரித்ததும் அவர்களுடைய தோழிகளை விளையாடுவதற்கு அனுப்பி வைத்ததும் பொம்மைகளை வைத்து குழந்தைகள் விளையாடுவதற்கு அனுமதியளித்ததை விளங்கி கொள்ள முடிகிறது. இந்த செய்திகளை அடிப்படையாக வைத்துக்கொண்டு குழந்தைகளின் புத்தியை மழுங்கச் செய்யமாலும் கிறுக்குத்தனமான நடைமுறைகளை தூண்டாமலும் ஆபாசம் இல்லாமலும் இருக்கக்கூடிய கார்ட்டூன் நிகழ்ச்சிகளை பார்த்துக் கொள்ளலாம் என்பதை விளங்கலாம்.
தடைசெய்யப்ட்ட விளையாட்டுகள்
இஸ்லாத்தில் தடைசெய்யப்பட்ட விளையாட்டுகள் என்ன என்பதை சுருக்கமாக சொல்லிவிடலாம். விளையாடுபவர்களுக்கும் விளையாடும் கால்நடைகளுக்கும் உயிர் உறுப்புகள் சேதம் ஏற்படுத்தக்கூடிய மோசடி, சூதாட்டம் இவைகளையே குறிக்கோளாகக் கொண்டவிளையாட்டுகள் இஸ்லாத்தில் தடைசெய்யப்பட்டுள்ளன.
சூதாட்ட விளையாட்டுகள்
பொதுவாக விளையாட்டுகளில் சூதாட்டத்தை மையமாக கொண்டவையாக இருந்தால் அது மார்க்கத்தில் மிகவும் தண்டனைக்குரிய காரியமாகும்.
நம்பிக்கை கொண்டோரே! மது, சூதாட்டம், பலிபீடங்கள், (குறி கேட்பதற்கான) அம்புகள், ஆகியவை அருவருப்பானதும், ஷைத்தானின் நடவடிக்கையுமாகும். எனவே இதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்! வெற்றி பெறுவீர்கள்  (அல் குர்ஆன் 5:90)
மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட எந்த விளையாட்டாக இருந்தாலும் நபி(ஸல்) அவர்கள் தூண்டிய எந்த விளையாட்டுகளாக இருந்தாலும் அவைகளில் சூதாட்டம் கலந்திருந்தால் அவைகள் ஷைத்தானின் செயல்கள்.ஏனென்றால் சூதாட்டம் திறமைக்கு உடலுழைப்புக்கு மதிப்பில்லாமல் குறுக்கு வழியில் பணத்தை உறிஞ்சக்கூடிய ஒரு வாய்க்காலாகவும் உள்ளது.
இன்னும் சில குறிப்பபிட்ட விளையாட்டுகளையும் நபி(ஸல்) அவர்கள் தடைசெய்துள்ளார்கள்.
நபி (ஸல் அவர்கள் கூறினார்கள் :
யார் தாய விளையாட்டை விளையாடுகிறார்களோ பன்றியின் இறைச்சியையும் அதன் இரத்தத்தையும் சாப்பிடுவதற்கு தன் கையில் தயாராக வைத்திருப்பதை போன்றாவார்.
அறிவிப்பவர் : புரைதா (ரலி)
நூல் : முஸ்லிம் 4194
ஏனென்றால் இதில் புத்திக்கும் உடலுக்கும் எந்த வேலையும் இல்லை. சோவியை உருட்டிவிட்டு அதிஷ்டத்தை எதிர்பாக்கக்கூடிய பயனற்ற விளையாட்டாக உள்ளது.
நபி (ஸல்) அவர்கள் வீணாக கற்களை சுண்டி விளையாடவதை தடைசெய்தார்கள்.ஏனென்றால் அது வேட்டையாடவோ எதிரிகளை வீழ்த்தவோ பயன்படாது. கண்ணை பதம்பாக்கவும் பல்லை உடைக்கவும் தான் செய்யும் என்றார்கள்
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் முகஃப்பல்(ரலி)
நூல் : புகாரி 6220
இது போன்ற தேவையில்லாமல் விளையாடி உடலுக்கு பாôதிப்பை உண்டாக்கூடிய விளையாட்களை இஸ்லாம் தடைசெய்துள்ளது. எனவே இஸ்லாம் வணக்க வழிபாட்டிற்காக மார்க்கம். அது ஏழைகளின் வறுமையை போக்கவும் செல்வந்தர்கள் தங்களுடைய பொருளாதாரத்தை பாதுகாத்துக் கொள்ளும் ஒரு பொருளாதார புரட்சியின் சங்கமம். அதுபோல உடலை ஆரோக்கியாக வைக்கவும் தீமைகளையும் தீயவர்களையும் உடல் வலிமையால் பயந்து அதை துணிவுடன் தட்டி கேட்க உருவாக்கம் உடற்பயிற்சி சங்கமம். எனவே இஸ்லாம் கூறிய அனைத்து துறைகளுக்கும் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதை போல இந்தத் துறையிலும் குர்ஆன் ஹதீஸ் நெறிக்குப்பட்டு இந்ததுறையில் நாமும் நமது பிள்ளைகளையும் சங்கமிப்பதற்கு எல்லா வல்லா அல்லாஹ் அருள்புரிவானாக

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites