அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

வெள்ளி, 30 ஏப்ரல், 2010

திருக்குர்ஆன் கூறும் தேனும் தேனீயும்

இது திருக்குர்ஆனில் ஓர் அத்தியாயம்! திருக்குர்ஆனின் 16வது அத்தியாயமான இதன் மொத்த வசனங்களும் தேனீயைப் பற்றிப் பேசவில்லை. 68, 69 ஆகிய இரு வசனங்கள் மட்டுமே தேனையும், தேனீயையும் பற்றிப் பேசுகின்றன.
திருக்குர்ஆனின் நடையைத் தெரிந்தவர்களுக்கு இது நன்கு புரியும். 286 வசனங்கள் கொண்டு, குர்ஆனிலேயே மிகப் பெரும் அத்தியாயமாகத் திகழும் ஓர் அத்தியாயத்திற்கு அல்பகரா - மாடு என்று பெயர். அந்த அத்தியாயத்தில் 67 முதல் 70 வரையிலான வசனங்களில் மாடு தொடர்பான நிகழ்ச்சி இடம் பெறுவதால் இந்தப் பெயர். அது போன்று தான் தேனீ என்ற இந்த அத்தியாயத்தில் 68, 69 ஆகிய இரு வசனங்கள் மட்டும் தேனீயைப் பற்றி - தேனைப் பற்றிப் பேசுகின்றன.
இந்த இரண்டு வசனங்களும் விலங்கியல் - ழர்ர்ப்ர்ஞ்ஹ் என்ற ஒரு துறையே இல்லாத காலத்தில், எதையும் நுணுகிப் பார்க்கும் நுண்ணோக்கிகள் இல்லாத கால கட்டத்தில், இன்றைய அறிவியல் உலகம் அதிர்கின்ற வகையில், தேனீக்கள் பற்றி அன்று வெளிவராத ரகசியங்களை மக்கள் மத்தியில் போட்டு உடைக்கின்றன.
தேனீக்கள் கட்டுகின்ற கூடுகள், அவை சாப்பிடுகின்ற கனிகள், அவை சென்று வருகின்ற பாதைகள் அவற்றின் வயிற்றிலிருந்து வெளிவரும் பானம், அதன் பல வண்ணங்கள், தேனில் ஏற்படும் நிவாரணம் என்று இவ்விரு வசனங்களில் தேனீ மற்றும் தேன் பற்றிய அதிசயங்களையும், அற்புதங்களையும் கூறிய பின்னர், "சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் சான்று உள்ளது' என்று முத்தாய்ப்பாகக் கூறப்படுகிறது. அந்தச் சான்று என்ன? என்பதை அறியவே நமது தேடல் தொடர்கிறது.
படைப்பின் ரகசியங்கள்
பொதுவாகவே உலகிலுள்ள அனைத்துப் பொருட்களும் மனிதனுக்காகவே படைக்கப் பட்டிருக்கின்றன. இதை அல்லாஹ் தனது திருமறையில் இவ்வாறு கூறுகின்றான்.
அவனே பூமியில் உள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான்.
அல்குர்ஆன் 2:29
இதன் படி ஊர்வன, பறப்பன, மிதப்பன மற்றும் மரம், செடி கொடிகள் ஆகிய அனைத்தும் மனிதனுக்காகவே படைக்கப்பட்டிருக்கின்றன.
கால்நடைகள், கடல் மீன்கள் நமக்கு உணவாகப் பயன்படுவதன் மூலம் அவற்றின் பயன்பாடு நமக்கு நேரடியாகத் தெரிகின்றது. அதனால் அவை மட்டும் தான் நமக்குப் பயனுள்ளவை என்று விளங்கி வைத்திருக்கிறோம். ஆனால் உலகில் படைக்கப்பட்ட அனைத்து உயிர் வாழ் இனங்களிலும், உயிரற்ற பொருட்களிலும் நமக்குப் பயன்பாடுகள் இருக்கின்றன. மறைமுகப் பயன் உள்ளவை நமக்குத் தெரிவதில்லை. அவற்றை இன்றைய அறிவியல் உலகம் நமக்குத் தெளிவுபடுத்துகின்றது. இதன் மூலம் உலகில் உள்ள அனைத்துப் பொருட்களின் படைப்பின் ரகசியங்களை நாம் நன்கு உணர்ந்து கொள்ள முடிகிறது.
தாவரம்! இது தருகின்ற ஆக்ஸிஜன் மூலம் தான் மனிதன் உயிர் வாழ முடிகின்றது என்பதை இன்றைய அறிவியல் விளக்குகிறது. ஆனால் இது நமக்கு நேரடியாகத் தெரிவதில்லை. மனித இனத்திற்கு உயிராகவும், கால்நடைகளுக்கு உணவாகவும் உள்ள தவாரம் பெருகுவதற்கு மிக அடிப்படையாக அமைந்திருப்பது மகரந்தச் சேர்க்கை! இந்த மகரந்தச் சேர்க்கைக்கு மிகப் பெரிய அளவில் உதவுவது இந்தத் தேனீக்கள்!
தேனீக்களின் தனித்தன்மை
மகரந்தச் சேர்க்கைக்காக ஆயிரமாயிரம் முகவர்கள் உள்ளனர். மனிதர்கள் அனைவரின் எண்ணத்தைக் கவர்கின்ற வண்ணத்துப் பூச்சிகள், வட்டமடிக்கும் ரீங்கார வண்டுகள், விளக்கு வெளிச்சத்தில் வந்து சாகின்ற விட்டில் பூச்சிகள், ஈக்கள், பறவைகள், பாலூட்டி இனத்தைச் சேர்ந்த வவ்வால்கள், எலிகள் போன்றவை மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் முகவர்கள். காற்றும் இந்த மகரந்தச் சேர்க்ûக்குரிய ஒரு முகவர் தான்.
அறிவியல் கருவுற்றிராத காலத்தில், ஆய்வுக்குரிய கருவிகள் கண்டுபிடிக்கப்படாத காலத்தில், எல்லா பொருட்களிலும் ஜோடியைப் படைத்திருப்பதாக எல்லாம் வல்ல அல்லாஹ் கூறுகின்றான்.
பூமியை விரித்தோம். நாம் அழகுற விரிப்பவர்கள். நீங்கள் சிந்திப்பதற்காக ஒவ்வொரு பொருளிலும் ஜோடிகளைப் படைத்தோம்.
அல்குர்ஆன் 51:48, 49
அதிலும் குறிப்பாக தாவர இனத்திலும் ஜோடி இருப்பதாக மற்றொரு வசனத்தில் கூறுகின்றான்.
பூமி முளைக்கச் செய்வதில் இருந்தும், அவர்களிலிருந்தும், அவர்கள் அறியாதவற்றிலிருந்தும் ஜோடிகள் அனைத்தையும் உருவாக்கியவன் தூயவன்.
அல்குர்ஆன் 36:36
தாவர இனத்தின் இந்த ஜோடிகளை இணைக்கும் பணியை மேலே நாம் பட்டியலிட்ட முகவர்கள் நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றனர். இதற்குப் பெயர் தான் மகரந்தச் சேர்க்கை!
இந்த மகரந்தச் சேர்க்கை இல்லையென்றால் அல்லாஹ் கூறும் ஜோடி என்ற அற்புதம் இல்லை என்றாகி விடும். இந்த ஜோடி என்ற அற்புதம் நிலைக்கவும், நீடிக்கவும் காரணமாக அமைவது மகரந்தச் சேர்க்கை தான்.
ஆகாரமே ஆதாயம்
மகரந்தச் சேர்க்கை மூலம் இரண்டு நன்மைகள் கிடைக்கின்றன. 1. தாவர இனப் பெருக்கம், 2. மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் முகவர்களுக்குத் தேவையான ஆகாரம்.
தாவரத்தால் இந்த முகவர்களுக்கு வாழ்க்கை!
முகவர்களால் தாவரத்திற்கு வாழ்க்கை!
இந்த முகவர்களின் பட்டியலில் தேனீ மட்டும் மற்ற முகவர்களை விட்டும் வேறுபடுகிறது.
தாவர இனப்பெருக்கம், தேனீக்களின் உணவு ஆகிய மேலே கூறிய இரண்டு நன்மைகள் போக தேனீக்கள் சேகரிக்கும் தேன் மனித சமுதாயத்திற்கு உணவாகவும், மருந்தாகவும் பயன்படுகிறது.
இங்கு தான் தேனீ மற்ற முகவர்களை விட வித்தியாசப்படுகிறது. இந்தப் பலன்களையும் இன்னும் ஏராளமான படிப்பினைகளையும், படைப்பின் ரகசியங்களையும் கொண்டே தேனீ பற்றிய திருக்குர்ஆனின் பார்வையும் அமைந்திருக்கின்றது.
இந்த வசனங்களின் இறுதியில் எல்லாம் வல்ல அல்லாஹ், "சிந்திக்கும் சமுதாயத்திற்கு இதில் சான்று இருக்கிறது' என்று குறிப்பிடுவதால் அந்தச் சான்றைப் பார்ப்பது நமது கடமையாகும்.
சிந்திக்கும் சமுதாயத்திற்குச் சான்று என்று அல்லாஹ் திருக்குர்ஆனில் கோடிட்டுக் காட்டும் செய்திகள் எல்லாம் சாதாரண செய்திகளாக இல்லை! அவை மகத்தான விஷயங்களை, படைப்பின் மாபெரும் அற்புதங்களைத் தெரிவிக்கின்றன.
அவனே பூமியை விரித்தான். மலைகளையும், நதிகளையும் அதில் அமைத்தான். ஒவ்வொரு கனிகளிலும் ஒரு ஜோடியை அமைத்தான். இரவைப் பகலால் மூடுகிறான். சிந்திக்கும் சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.
அல்குர்ஆன் 13:3
விரிந்து கிடக்கும் பூமி, உயர்ந்து நிற்கும் மலைகள், ஓடுகின்ற ஆறுகள் போன்றவை பற்றி இந்த வசனம் தெரிவிக்கின்றது.
அதன் மூலம் பயிர்களையும், ஒலிவ மரம், பேரீச்சை, திராட்சை மற்றும் அனைத்துக் கனிகளையும் உங்களுக்காக அவன் முளைக்கச் செய்கிறான். சிந்திக்கும் சமுதாயத்திற்கு இதில் சான்று இருக்கிறது.
அல்குர்ஆன் 16:11
தாவரப் படைப்பின் அற்புதத்தை இந்த வசனம் தெரிவிக்கிறது.
நீங்கள் அமைதி பெற உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும், இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.
அல்குர்ஆன் 30:21
மனித இனத்தில் உள்ள ஜோடிகளைப் பற்றி இந்த வசனம் கூறுகின்றது.
உயிர்களை அவை மரணிக்கும் நேரத்திலும், மரணிக்காதவற்றை அவற்றின் உறக்கத்திலும் அல்லாஹ் கைப்பற்றுகிறான். எதற்கு மரணத்தை விதித்து விட்டானோ அதைத் தனது கைவசத்தில் வைத்துக் கொண்டு மற்றதை குறிப்பிட்ட காலம் வரை விட்டு விடுகிறான். சிந்திக்கின்ற மக்களுக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.
அல்குர்ஆன் 39:42
இவ்வசனம் மனித உயிரின் அற்புதத்தைப் பற்றி விளக்குகிறது.
வானங்களில் உள்ளவை, பூமியில் உள்ளவை அனைத்தையும் அவன் உங்களுக்குப் பயன்படச் செய்தான். சிந்திக்கும் சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன
அல்குர்ஆன் 45:13
வானம், பூமி ஆகியவை மனிதனுக்கு வசப்பட்டிருப்பதைப் பற்றி இந்த வசனம் கூறுகின்றது.
இவ்வுலக வாழ்க்கைக்கு உதாரணம், வானிலிருந்து நாம் இறக்கிய தண்ணீரைப் போன்றது. மனிதர்களும், கால்நடைகளும் உண்ணுகிற பூமியின் தாவரங்களுடன் அத்தண்ணீர் கலக்கிறது. முடிவில் பூமி அலங்காரம் பெற்று கவர்ச்சியாக ஆகிறது. அதன் உரிமையாளர்கள் அதன் மீது தமக்குச் சக்தி இருப்பதாக நினைக்கும் போது நமது கட்டளை இரவிலோ, பகலிலோ அதற்கு (பூமிக்கு) கிடைக்கிறது. உடனே நேற்று அவ்விடத்தில் இல்லாதிருந்தது போல் அறுக்கப் பட்டதாக அதை ஆக்கினோம். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இவ்வாறே சான்றுகளைத் தெளிவு படுத்துகிறோம்.
அல்குர்ஆன் 10:24
இந்த வசனம் விளைச்சலைப் பற்றி விவரிக்கின்றது.
இந்த அனைத்து வசனங்களிலும் இறுதியில் "சிந்திக்கும் சமுதாயத்திற்குச் சான்று இருக்கிறது' என்று கூறுகின்றான். இவ்வாறு அல்லாஹ் பட்டியல் போடுகின்ற அற்புதப் படைப்புகளுக்கு மத்தியில் தான் தேனீயைப் பற்றியும் கூறுகின்றான். அதனால் தேனீயைப் பற்றிய சான்று சமுதாயத்திற்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
சிந்தனையும் ஒரு வணக்கமே!
பொதுவாக, தொழுவது, நோன்பு நோற்பது, ஜகாத் வழங்குவது, ஹஜ் செய்வது போன்றவை தான் வணக்கம் என்று நாம் விளங்கி வைத்திருக்கிறோம். அல்லாஹ்வுடைய படைப்பின் ஆற்றலைப் பற்றியும், அற்புதத்தைப் பற்றியும் நாம் செய்கின்ற சிந்தனையை யாரும் வணக்கமாகக் கருதுவது கிடையாது.
வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும் இரவு, பகல் மாறி மாறி வருவதிலும் அறிவுடைய மக்களுக்குப் பல சான்றுகள் உள்ளன. அவர்கள் நின்றும், அமர்ந்தும், படுத்த நிலையிலும் அல்லாஹ்வை நினைப்பார்கள். வானங்கள் மற்றும் பூமி படைக்கப்பட்டது குறித்துச் சிந்திப்பார்கள். "எங்கள் இறைவா! இதை நீ வீணாகப் படைக்கவில்லை; நீ தூயவன்; எனவே நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!'' (என்று அவர்கள் கூறுவார்கள்)
அல்குர்ஆன் 3:190, 191
இந்த வசனங்களில் அல்லாஹ்வின் படைப்பைப் பற்றி சிந்திப்பதையும் வணக்கத்தின் பட்டியலில் இறைவன் சேர்த்திருக்கிறான். இதன்படி அவனது படைப்பைப் பற்றிய சிந்தனை, ஆய்வு மிகச் சிறந்த வணக்கமாக அமைகின்றது.
அவனுடைய படைப்பாற்றலைப் பற்றி எண்ணி வியப்பது, சுப்ஹானல்லாஹ் எனறு கூறி அவனது படைப்புத் திறமையைப் போற்றுவது நமக்கு நன்மையைப் பெற்றுத் தரும் வணக்கமாக ஆகி விடுகின்றது. அந்த அடிப்படையில் அல்லாஹ் தேனீயில் கூறும் சான்றைக் கொஞ்சம் பார்ப்போம்.
இன்று மனித சமுதாயத்தின் மொத்த உணவு உற்பத்தியில் மூன்றில் ஒரு பகுதி, இந்தப் பூச்சியினங்கள் தாவரத்தில் செய்கின்ற மகரந்தச் சேர்க்கையினால் தான் கிடைக்கின்றது. இந்த மகரந்தச் சேர்க்கையில், மனித சமுதாயத்தின் உணவாக விளங்கும் தாவரங்களின் இனப் பெருக்கத்தில் அதிகமான அளவில் ஈடுபடுவது தேனீ தான் என்று இன்றைய அறிவியல் கூறும் போது அல்லாஹ்வின் இந்தச் சிறிய, அரிய அற்புதப் படைப்பை எண்ணி வியக்கிறோம். சுப்ஹானல்லாஹ் என்று சொல்லி அதிசயிக்கிறோம்.
மகரந்தச் சேர்க்கையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட முகவர்கள் ஈடுபட்டு நிற்கும் போது, இந்தப் பணியில் ஈடுபடுகின்ற தேனீயைப் பற்றி அல்லாஹ் ஏன் சிறப்பித்துக் கூற வேண்டும்? என்ற அறிவியல் சான்றைத் தேடிச் செல்கிறோம்.

அற்பத் தேனியின் அற்புத ஆட்சி
பூமியில் வாழும் உயிரினங்கள், தமது சிறகுகளால் பறந்து செல்லும் பறவைகள் யாவும் உங்களைப் போன்ற சமுதாயங்களே!
அல்குர்ஆன் 6:38
என்று அல்லாஹ் பறவைகளைப் பற்றிக் குறிப்பிடுவதிலிருந்து தமது இறக்கைகள் மூலம் பறந்து செல்லும் தேனீக்கள் உண்மையில் ஒரு வியக்கத்தக்க சமுதாயம் தான். மனிதன் உற்று நோக்க வேண்டிய உன்னத சமுதாயம்.
அறிவியல் அடிப்படையில் தேனீ பூச்சியினமாக இருந்தாலும் திருக்குர்ஆனின் இந்த வசனம், தரையில் வாழ்வன, ஆகாயத்தில் பறப்பன என்ற ரீதியில் தான் பிரித்துக் கூறுகின்றது. அந்த அடிப்படையில் ஆகாயத்தில் பறக்கும் இனமான தேனீ என்ற சமுதாயத்தைப் பற்றி நமது பார்வையைச் செலுத்துவோம்.
நாட்டுக்குள்  ஒரு குடியாட்சி
ஒரு நாடு என்றால் மக்கள் வாழ்வர். அம்மக்களுக்கென்று ஓர் ஆட்சி இருக்கும். அதை ஆள்வதற்கு ஓர் அரசன் அல்லது அரசி அல்லது ஆட்சித் தலைவர் இருப்பார். அவருக்கென்று அதிகாரம் இருக்கும். அதிகாரிகள், அலுவலர்கள் இருப்பார்கள். நாட்டின் எல்லைகளைப் பாதுகாப்பதற்கு இராணுவ வீரர்கள் இருப்பார்கள். உள்நாட்டு விவகாரங்களைக் கவனிப்பதற்குத் தனி அதிகாரிகள், களப்பணியாற்றும் பணியாளர்கள் இருப்பார்கள்.
ஆட்சித் தலைவருக்கென்று கோட்டை, கொத்தளம் இருக்கும். அந்தத் தலைமைச் செயலக செங்கோட்டையிலிருந்து அவர் ஆட்சி செய்து கொண்டிருப்பார். ஆட்சித் தலைவர் தன் நாட்டைக் காப்பதற்காக ஆயுதங்களும் வைத்திருப்பார். போர் வீரர்களும் போர்க் கருவிகளைப் பெற்றிருப்பார்கள்.
அரசாங்கம் என்று ஒன்று இருக்கும் போது, மக்களுக்குத் தேவையான கருவூலங்களையும், மக்களுக்குத் தேவையான உணவுகளையும் காலம் காலம் காக்கின்ற உணவுக் களஞ்சியங்கள், நிதியாதாரங்களைக் காக்கின்ற வங்கிகள் போன்றவற்றை அந்த அரசாங்கம் தன்னகத்தே கொண்டிருக்கும்.
இதுவெல்லாம், தான் கண்டிருக்கும் சமூகக் கட்டமைப்பு என்று நாட்டுக்குள் வாழும் மனித சமுதாயம் தன்னைத் தானே மெச்சிக் கொண்டிருக்கின்றது. அடுக்கடுக்கான ஆட்சிக் கூட்டமைப்புகளை எண்ணிப் பார்த்து மனிதன் பெருமையடைந்து கொள்கிறான்.
கூட்டுக்குள் ஒரு குடியாட்சி
ஆனால் அல்லாஹ்வின் இந்த அற்புதப் படைப்பான தேனீயானது, மனிதன் கொண்டிருக்கும், இப்போது புதிது புதிதாகக் கண்டிருக்கும் நிர்வாக சீராட்சி, சிறப்பாட்சியை என்றோ கண்டிருக்கின்றது.
ஆட்சியின் அலுவல்களை, அதற்கான அமைச்சகங்களைப் பிரித்துப் பணியாற்றும் இந்த அற்புதக் கலையை தேனீக்கள் தாம் வாழ்கின்ற கூட்டுக்குள் கொண்டிருக்கின்றன. தேனீக்களின் கூட்டு வாழ்க்கைக்குள் கொஞ்சம் நாம் உள்ளே போய் வந்தால் இந்த உண்மை நமக்குப் புரியும்.
தேனீக்களின் ராணி
தேனீக்களின் இந்தச் சமுதாயத்திற்கு ராணி இருக்கின்றது என்று இன்றைய அறிவியல் உலகம் கூறுகின்றது. ஆனால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இதை அன்றே கூறியிருக்கின்றார்கள்.
"மழை பொழியுமாறு தஜ்ஜால் வானத்திற்குக் கட்டளையிடுவான். அது மழை பொழியும். முளைப்பிக்குமாறு பூமிக்குக் கட்டளையிடுவான். அது முளைப்பிக்கும். பின்னர் மக்களிடம் வந்து (தன்னைக் கடவுள் என்று ஏற்குமாறு) அழைப்பு விடுவான். அவனை ஏற்க மக்கள் மறுப்பார்கள். அவர்களை விட்டு அவன் விலகி விடுவான். காலையில் அம்மக்கள் தங்கள் அனைத்துச் செல்வங்களையும் இழந்து விடுவார்கள். பாழடைந்த இடத்திற்குச் சென்று, "உன்னுடைய புதையல்களை வெளிப்படுத்து'' என்று கூறுவான். அதன் புதையல்கள் தேனீக்களின் ராணிகள் போன்று அவனைப் பின் தொடரும்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தஜ்ஜாலைப் பற்றிக் கூறினார்கள்.
அறிவிப்பவர்: நவ்வாஸ் பின்         ஸம்ஆன் (ரலி)
நூல்: முஸ்லிம் 5228
இந்த ஹதீஸில் யஆஸிபி நஹ்ல் - தேனீக்களின் ராணிகள் என்ற வார்த்தையை நபி (ஸல்) அவர்கள் பயன்படுத்துகிறார்கள்.
தேனீக்கள் (கிளம்புவது) போல்... என்று சொல்லாமல், தேனீக்களின் ராணிகள் (கிளம்புவது) போல்... என்று குறிப்பிடுகின்றார்கள்.
ராணி தேனீக்கள் கிளம்பி விட்டால் மற்ற தேனீக்களும் கிளம்பி விடுகின்றன. ராணி தேனீக்கள் கிளம்பவில்லை என்றால் மற்ற தேனீக்கள் கிளம்புவதில்லை. அதனால் தான் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு குறிப்பிடுகின்றார்கள் என்பதை நாம் விளங்க முடிகின்றது.
இன்றைய அறிவியல் உலகம் இதை உறுதி செய்கின்றது.
ராணித் தேனீயின் பணி
ராணித் தேனீயின் தலையாய பணி நிர்வாகம் தான். உடையவன் இல்லை என்றால் ஒரு முழம் கட்டை என்று ஒரு பழமொழி சொல்வார்கள். ஒரு காரியம் உருப்பட வேண்டும் என்றால் உடையவன் இருக்க வேண்டும். தான் இருப்பதாக அவன் உணர்த்திக் கொண்டு இருக்க வேண்டும்.
வீட்டு நிர்வாகத்தில் வீட்டுத் தலைவன், தான் இருப்பதை பிள்ளைகளிடம் உணர்த்திக் கொண்டிருக்க வேண்டும். இல்லையெனில் அவர்கள் ஆட்டம் தாங்க முடியாமல் வீடு அமர்க்களப்படும். இது போல் ஒரு நாட்டுத் தலைவன், தான் இருப்பதாக உணர்த்த வேண்டும். அப்போது தான் நாடு உருப்படும்.
சுலைமான் நபியவர்களுக்கு அல்லாஹ் மாபெரும் ஆட்சியை வழங்கியிருந்தான். ஜின்களும் அவர்களுடைய ஆட்சியின் கட்டுப்பாட்டில் இருந்தன. பைத்துல் மக்தஸைக் கட்டும் பணியில் ஜின்கள் ஈடுபட்டிருந்த போது சுலைமான் நபியவர்கள் இறந்து விடுகின்றார்கள். அவர் இறந்து விட்டது தெரியாமலேயே ஜின்கள் தங்கள் வேலையைச் செய்து கொண்டிருந்தன.
அவருக்கு நாம் மரணத்தை ஏற்படுத்திய போது பூமியில் ஊர்ந்து செல்லும் உயிரினம் (கரையான்) தான் அவரது மரணத்தைக் காட்டிக் கொடுத்தது. அது அவரது கைத்தடியைச் சாப்பிட்டது. அவர் கீழே விழுந்ததும் "நமக்கு மறைவானவை தெரிந்திருந்தால் இழிவு தரும் இத்துன்பத்தில் இருந்திருக்க மாட்டோமே'' என்பதை ஜின்கள் விளங்கிக் கொண்டன.
அல்குர்ஆன் 34:11-14
தங்களைக் கண்காணிக்க எவருமில்லை என்றிருந்தால் பணியாளர்கள் பணி புரிய மாட்டார்கள் என்ற உண்மையை மேற்கண்ட வசனம் தெளிவுபடுத்துகின்றது. இந்தக் கண்காணிப்புப் பணியைத் தான் ராணித் தேனீ மிக அற்புதமாகத் தன் கூட்டுக்குள் செய்கிறது.
மக்களைக் கட்டுப்படுத்த மன்னர்களிடம் அதிகாரம் இருக்கின்றது. இந்த ராணியிடம் தனக்குக் கீழுள்ள தேனீக்களைக் கட்டுப்படுத்த, ஆட்சி செலுத்த என்ன இருக்கின்றது?
ஓர் ஆரோக்கியமான தேன் கூட்டில் மொய்த்து நிற்கும் தேனீக்களின் எண்ணிக்கை இருபதாயிரம் முதல் எண்பதாயிரம் அல்லது ஒரு லட்சம் ஆகும். இந்த அளவுக்கு உள்ள கூட்டத்தைத் தான் இந்த ராணித் தேனீ கட்டுப்படுத்த வேண்டும்.
அவ்வாறு கட்டுப் படுத்துவதற்கு ராணித் தேனீயிடம் என்ன உள்ளது? மாயக் கோலா? அல்லது மந்திரச் சொல்லா? இரண்டுமல்ல! மாறாக, டட்ங்ழ்ர்ம்ர்ய்ங் என்று சொல்லப்படும் வேதிப் பொருள் உள்ளது. இது திரவம் அல்லது ஆவி வடிவத்தில் வெளிப்படுகிறது. இதை வேதியியல் வாசனை அல்லது இரசாயன செய்தித் தூதர் என்று கூறலாம்.
தேனீக்கள் இந்தச் செய்தித் தூதுக்களை தங்களிடம் உள்ள ஆண்டெனா (தகவல் பெறும் உணர்வு இழைகள்) மூலமும் மற்ற உறுப்புகள் மூலமும் பெற்றுக் கொள்கின்றன.
இது தேனீயின் தலையிலிருந்து வாய்க்கு அருகில் தொங்குகின்ற தாடை சுரப்பிகளிலிருந்து சுரக்கின்றது. இது தான் ராணித் தேனீயின் செங்கோலாக செயல்படுகிறது. தேன் கூட்டின் சட்ட ஒழுங்கைக் காக்கும் கட்டுப்பாட்டுக் கருவியாகச் செயல்படுகின்றது. ராணித் தேனீக்கு உள்ள வேதியியல் பொருள் மற்ற தேனீக்களுக்கும் உண்டு. ஆனால் அந்தந்த தேனீயின் பணிக்குத் தக்க அமைந்து விடுகின்றது.
ஆனால் ராணித் தேனீயிடம் கிளம்புகின்ற இந்த வேதியியல் தூது கொஞ்சம் வித்தியாசமானது. இரு வகையானது.
ஒன்று தேனீக்களின் தற்காலிக மாற்றத்தையும் தாக்கத்தையும் தரக் கூடியது. உதாரணமாக தேன் கூட்டிற்குள் அந்நிய சக்திகள், மிருகங்கள், மனிதர்கள், பிற தேனீக்கள், குளவிகள் வந்தால் உடனே இரசாயன தூதுச் செய்தி ராணித் தேனீயிடமிருந்து மின்னல் வேகத்தில் பறக்கும்.
உடனே அந்த அந்நிய சக்திகள் தாக்கப்படுவார்கள். ஆக்கிரமிப்பு அல்லது அபகரிப்பு செய்வதை விட்டும் எதிரிகள் தடுத்து நிறுத்தப்படுவார்கள். இது தற்காலிகமான தாக்கத்தைத் தரக் கூடிய இராசயன தூதுச் செய்தி ஆகும். இதை இங்ட்ஹஸ்ண்ர்ழ்ஹப் டட்ங்ழ்ர்ம்ர்ய்ங்ள் என்று குறிப்பிடப்படுகின்றது.
மற்றொன்று நிரந்தர தாக்கத்தைத் தரக் கூடியது.
தன்னுடன் பாட்டாளித் தேனீக்களை இனச் சேர்க்கைக்கு அழைப்பது, தேன் கூட்டைப் பராமரிப்பது, பாட்டாளித் தேனீக்களை சுயமாகக் கருவுற்று இனப்பெருக்கம் செய்யாமல் தடுத்து, தான் மட்டுமே இனப் பெருக்க சக்தியாக இருக்கும் ஏகபோக உரிமையைத் தக்க வைப்பது போன்ற காரியங்களை இந்த வேதியியல் திரவம் அல்லது ஆவியின் மூலம் செய்து தேன் கூட்டை நிர்வகித்து வருகின்றது.
மொத்தத்தில் இனச் சேர்க்கை, எச்சரிக்கை, பாதுகாப்பு, உணவு உற்பத்தி, இலட்சக்கணக்கில் வாழும் தேனீக்களின் செயல்பாடுகளை ஒருங்கிணைத்தல் போன்ற மனித சமுதாயத்திற்கு அறைகூவல் விடுக்கும் அரியணை ஆட்சியை ராணித் தேனீ நடத்துகின்றது.
இதனால் தான் அல்லாஹ் இந்தத் தேனீயைப் பற்றி ஆராய்ச்சி செய்கின்ற வகையில் அத்தாட்சி மிக்க அற்புதப் படைப்பாகப் படைத்திருக்கிறான். இந்த வகையில் தேனீக்கள் மனித சமுதாயத்தை விஞ்சி நிற்கின்றது.
ராணித் தேனியின் ராணுவ ஆட்சி
ஆட்சித் தலைவர் வரும் போது அவருடன் முப்படைகளும், அதிகாரிகளும் அலுலவர்களும் உடன் வருவர். சமூகப் பிராணியான மனித சமுதாயத்தில் மட்டும் தான் இது உள்ளது என்று நினைக்காதீர்கள். பூச்சியினத்தில் சமூகப் பூச்சி என்றழைக்கப்படும் தேனீக்களிடமும் இது உள்ளது.
கூட்டில் வலம் வந்து ஆட்சி செலுத்தும் இந்த ராணித் தேனீயுடன் சதாவும் காவலாளி, எடுபிடித் தேனீக்கள், பாட்டாளித் தேனீக்கள் மொய்த்துக் கொண்டு நிற்கின்றன. ராணித் தேனீயின் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றிக் கொடுக்கின்றன. இதற்கெல்லாம் அடிப்படையாக விளங்குவது டட்ங்ழ்ர்ம்ர்ய்ங் என்ற வேதியியல் திரவம் அல்லது ஆவி தான்.
மனிதனுக்கு உயிர் எப்படி அவசியமோ அது போன்று ஓர் அரசாங்கத்திற்கு, அதை ஆள்கின்ற ஆட்சித் தலைவனுக்கு அதிகாரம் மிக மிக அவசியமாகும். அந்த அதிகாரம் இல்லையெனில் ஆட்சித் தலைவன் பிணத்திற்குச் சமம். உடனே குடிமக்கள் புதியதொரு அரசாங்கத்தை நிறுவி, புதிய ஆட்சித் தலைவரைத் தேர்வு செய்கின்றனர்.
இந்தப் புத்திசாலித்தனம் மனித இனத்திற்குத் தான் சொந்தம்      என்று மனிதன் பெருமைப்பட்டுக் கொள்வானானால் அது பைத்தியக்காரத் தனமாகும். காரணம், இந்தப் புத்திசாலித்தனம் சமூகப் பூச்சியான தேனீக்களிடம் மிகச் சிறப்பான முறையில் செயல்படுகின்றது.
அரியணை ஏறும் இளைய ராணி
ராணித் தேனீயிடம் டட்ங்ழ்ர்ம்ர்ய்ங் என்ற வேதிப்பொருள் வெளிப்பட வில்லையாயின் அது ராணியாக நீடிப்பதற்குரிய தகுதியை இழந்து விடுகின்றது; அது ஆள்வதற்கான அதிகாரத்தை இழந்து விடுகின்றது. காரணம், இந்த வேதியியல் சுரப்பி தான் கூட்டின் மொத்த நிர்வாகத்தையும் கட்டுப்படுத்தும் மையமாகும். அது பாதிக்கப்பட்டு விட்டால் கூட்டின் நிர்வாகம், உள்நாட்டு விவகாரம், வெளி விவகாரம் எல்லாம் ஸ்தம்பித்து விடும். இது போன்ற நிர்வாகச் செயலின்மை தொடரலாகாது என்று பாட்டாளி வர்க்கத் தேனீக்கள் அதிரடி நடவடிக்கையில் இறங்குகின்றன.
உள்நாட்டு நிர்வாகம் எனும் போது ராணித் தேனீயின் முக்கியப் பணியே பாட்டாளித் தேனீக்கள் முட்டை பொரிக்காமல் தடுப்பது தான். இந்தப் பாட்டாளித் தேனீக்கள், ராணித் தேனீயை நக்குகின்ற போது ராணித் தேனீயிடமிருந்து வெளியாகும் வேதிப் பொருள், பாட்டாளித் தேனீக்கள் முட்டை பொரிப்பதைத் தடுத்து நிறுத்துகின்றது. அந்த வேதிப் பொருள் ராணித் தேனீயிடம் சுரக்கவில்லை எனில், பாட்டாளித் தேனீக்கள் முட்டையிட்டு, அதனால் தேன் கூட்டின் நிர்வாகம் நிர்மூலமாக நேரிடும். இது தேன்கூட்டின் உள்நாட்டு விவகாரமாகும்.
வெளி விவகாரம் எனும் போது, மலர்களிலிருந்து தேன் கொண்டு வரும் பணியைக் குறிப்பிடலாம். இதையெல்லாம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது எல்லாமே ராணித் தேனீயிடமிருந்து சுரக்கும் வேதிப் பொருள் தான்.
இப்படி ஒரு நிர்வாகச் சீர்குலைவு ஏற்படுவதைப் பாட்டாளித் தேனீக்கள் பார்த்துக் கொண்டிருப்பதில்லை. அடுத்த கட்ட ஆட்சித் தலைவியை, ராணித் தேனீயை உருவாக்கும் பணியில் அவசரமாக ஈடுபடுகின்றன. நிர்வாகம் ஸ்தம்பித்து விடாமல் இருக்க, பாட்டாளித் தேனீக்கள் அதிரடி நடவடிக்கையில் இறங்குகின்றன.
ஏற்கனவே ராணித் தேனீ இட்டிருக்கும் முட்டைகளிலிருந்து ராணிக்களை உருவாக்குகின்றன. இந்த முட்டைகளிலிருந்து வெளிவரும் கன்னி ராணி அடுத்த கட்ட ராணியாக அரியணை ஏறுகின்றது. எப்படி?
ஒரே சமுதாயம்! ஒரே தலைமை!
இலங்கையில் இன வாதத்திற்காகப் போராடி வரும் விடுதலைப் புலிகள் அமைப்பை உலகம் மறக்காது. அன்றிலிருந்து இன்று வரை அந்த அமைப்பின் தலைவர் பிரபாகரன் தான். தனக்கு எதிராக யார் கிளம்பினாலும் அவரைத் தீர்த்துக் கட்டி விடுவார். அதனால் தான் இப்போதும் அந்த அமைப்பின் தலைவராக நீடித்துக் கொண்டிருக்கிறார். இந்த அமைப்பு இன வாதத்தை அடிப்படையாகக் கொண்டது என்றாலும், ஒரே உறைக்குள் இரண்டு வாள்கள் இருக்க முடியாது என்ற நிலைபாட்டிற்காக அவரை இங்கு உதாரணம் காட்டியுள்ளோம்.
இந்த நிலைபாடு பிரபாகரன் கண்டுபிடித்ததல்ல! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உலகிற்குக் கற்றுத் தந்த அரசியல் வழிகாட்டல் ஆகும்.
"யார் ஓர் ஆட்சியாளரிடம் பைஅத் செய்து, அவரிடம் கைப்பிடித்து உளமாற உறுதி வழங்கி விடுகிறாரோ அவர் இயன்ற வரை அந்த ஆட்சியாளருக்குக் கட்டுப்படுவாராக! அவருக்குப் போட்டியாக இன்னொருவர் கிளம்பி விட்டால் அந்தப் போட்டியாளரின் கழுத்தைத் துண்டித்து விடுங்கள்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: முஸ்லிம் 3431
சீர்மிகு சமுதாயத்தை வழி நடத்திச் செல்வோருக்கு, சமுதாயத்தைக் கட்டுக்கோப்பாக நடத்துவதற்கு இந்த வழிகாட்டல் துணை புரியும். இப்படியொரு வழிகாட்டலை இறைவன் சின்னஞ்சிறு தேனீக்கும் வழங்கி உள்ளான். அந்த வழிகாட்டலைப் பெற்ற தேனீக்கள் அதைத் திறம்படவே செயல்படுத்துகின்றன.
முட்டையிலிருந்து வெளிவந்த கன்னி ராணி, முதன்முதலில் செய்கின்ற வேலை, குழந்தையாக உள்ள அதாவது முட்டைக்குள் உள்ள மற்ற ராணித் தேனீக்களைக் கொல்வது தான். இது தான் அதன் முதல்கட்டப் பணி! அதற்கு அடுத்த கட்டப் பணி, தனது தாய் ராணியின் பக்கம் திரும்புகின்றது. ஒன்று, அந்தத் தாய் ராணி தானாகச் சாக வேண்டும். அல்லது புதுக் கூட்டைக் கட்டுவதற்கு வேறு இடத்தை நோக்கிப் புறப்பட வேண்டும். இல்லையெனில் தாய் என்றும் பார்க்காமல் அதை இந்தக் கன்னி ராணி கொன்று விடும்.
அடுத்து, முட்டைகளிலிருந்து ராணிக்களாக வெளிவந்த தேனீக்களைக் கொல்லும் பணியில் கன்னி ராணி ஈடுபடுகின்றது.
இவ்வாறு தனக்கு எதிராகக் கிளம்பவிருக்கும் அத்தனை சக்திகளையும் அழித்து விட்டு, தனியொரு ராஜாங்கத்தை நடத்துகின்றது.
மனித இனத்தில் ராணுவத் தளபதிகள் நடத்துகின்ற, ராணுவ ஆட்சியை மிஞ்சுகின்ற வகையில் ராணித் தேனீயின் ராணுவ ஆட்சி அமைந்திருக்கின்றது.
இப்படி ஒரு புத்திசாலித்தனத்தை இந்தச் சின்னஞ்சிறு பூச்சியினத்திற்குக் கொடுத்தவன் யார்? எல்லாம் வல்ல அல்லாஹ் அல்லவா? இந்த அருளைத் தான் வல்ல அல்லாஹ் தன் திருமறையில் கூறிக் காட்டுகின்றான்.
மிக உயர்ந்த உமது இறைவனின் பெயரைத் துதிப்பீராக! அவனே படைத்தான். ஒழுங்குற அமைத்தான். அவனே நிர்ணயித்தான். வழி காட்டினான்.
அல்குர்ஆன் 87:1, 2, 3
தனது படைப்பாற்றலைக் கூறி தன்னை துதிபாடச் சொல்கிறான். அல்லாஹ்வின் இந்தப் படைப்பாற்றலை உணர்த்தும் விதமாக, நபி (ஸல்) அவர்கள் தம்முடைய தொழுகையில் ஸஜ்தாவின் போது, "மிக உயர்ந்த எனது இறைவன் தூய்மையானவன்'' என்று பணிந்து போற்றுகின்றார்கள்.
மனிதன் நாட்டுக்குள் ஆட்சி செலுத்தும் தன் திறமைகளைக் கண்டு வியந்து கொண்டிருக்கிறான். ஆனால் இவனது கண்களால் காண முடியாத ஒரு பேராட்சி இந்தத் தேன் கூட்டுக்குள் நடந்து கொண்டிருக்கின்றது.
இப்படிப்பட்ட ஓர் ஆட்சியை நடத்துபவன் யார்? மாபெரும் அரசனான அந்த அல்லாஹ் தான். அதனால் தான் அவன் தனக்குப் பங்காளன் இல்லை என்று கூறுகின்றான்.
அவனுக்கே வானங்கள் மற்றும் பூமியின் அதிகாரம் உள்ளது. அவன் பிள்ளையை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அதிகாரத்தில் அவனுக்கு எந்தப் பங்காளியும் இல்லை. அவன் ஒவ்வொரு பொருளையும் படைத்தான். அதைத் திட்டமிட்டு அமைத்தான்.
அல்குர்ஆன் 25:2
ஒவ்வொரு பொருளையும் படைத்து, அதைத் திட்டமிட்டு அமைத்த அந்த அல்லாஹ், அவனுடைய படைப்பின் அற்புதத்தை, தேன் கூட்டுக்குள் நடக்கும் ஆட்சியின் அதிசயங்களை தேனீ என்ற அத்தியாயத்தின் மூலம் ஆராய்ந்து பார்க்கச் செய்கிறான்.

தேனீக்களின் தேனிலவு
நீங்கள் அமைதி பெற உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும், இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.
அல்குர்ஆன் 30:21
இல்லற வாழ்க்கை என்பது ஒரு மனிதனுக்குக் கிடைக்கும் மன அமைதியாகும். இதன் துவக்கம் தான் திருமணம். இதில் ஆணும், பெண்ணும் இணைகின்றனர். திருமணம் முடிந்ததும் தம்பதியர்கள் தங்கள் இல்லற சுகத்தை அனுபவிப்பதற்குச் செல்லும் சுற்றுலாவிற்கு, தேனிலவு என்று பெயர். இதற்காக ஊட்டி, கொடைக்கானல் போன்ற இடங்களுக்குச் சுற்றுலா சென்று வருகின்றனர். தாம்பத்திய உறவு மனிதர்களுக்குத் தேனாக இனிப்பதால் இதற்குத் தேனிலவு என்று மிகப் பொருத்தமாகவே பெயரிட்டுள்ளனர்.
இந்த இன்பம் தேனைத் தருகின்ற அந்தத் தேனீக்களுக்கு இருக்காதா? அதற்கும் உண்டு! ஆனால் ஒரு வித்தியாசம்!
மனிதர்களுக்கு மத்தியில் திருமணத்தின் மூலம் மலர்கின்ற உடலுறவு வெறுமனே உடல் ரீதியாக மட்டும் அமைந்து விடுவதில்லை. அவர்களுடைய உள்ளங்களுக்கு மத்தியில் தொடர்பை ஏற்படுத்தும் பாசக் கயிறாக அமைகின்றது.
திருமணத்திற்குப் பின் பிறக்கும் குழந்தைகள் அந்தப் பாசக் கயிற்றை மேலும் முறுக்கேற்றி பலப்படுத்தி விடுகின்றனர். அந்தப் பிள்ளைகள் பெரியவர்களாகி அவர்களுக்குத் திருமணம், குழந்தைகள் என்று திருமண வாழ்வு ஒரு வரலாற்றைப் படைத்து விடுகின்றது.
ஆனால் தேனீக்களின் உடலுறவு அப்படி அமைவதில்லை. அதிலும் குறிப்பாக, பல்லாயிரக்கணக்கான தாவர இனங்களுக்கு மத்தியில் மகரந்தச் சேர்க்கை என்ற திருமண உறவை ஏற்படுத்துகின்ற இந்தத் தேனீக்களின் திருமண வாழ்க்கை மிகவும் பரிதாபத்துக்குரியதாக அமைந்திருக்கின்றது.
மனிதர்களின் மண வாழ்வைப் போன்று சுக முடிவில் அமைவதில்லை. சோக முடிவில் அமைந்து விடுகின்றது. இது எல்லாம் வல்ல அல்லாஹ்வின் ஏற்பாடு!
உடலுறவும் உயிர் துறவும்
நமது விழிப் பார்வைகளை வியப்புடன் பார்க்க வைக்கும் அந்த விந்தையை இப்போது பார்ப்போம்.
முட்டையிலிருந்து வெளி வருவதற்கு முன்பாகவே ராணித் தேனீயானது, தான் வெளி வரப்போவதாக ஓர் அறிக்கை விடுகின்றது. இதன் பின் முட்டையிலிருந்து ராணித் தேனீ வெளிவருகின்றது.
வந்த பின் மறு அறிக்கை ஒன்று வெளியாகின்றது. அதற்கு ஆங்கிலத்தில் டஒடஒசஏ என்று பெயர். இந்த அறிக்கை, முட்டைக்குள் கருவாக இருக்கும் போட்டி ராணிக்களுக்குப் போய்ச் சேருகின்றது. ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருக்கும் இளைய ராணித் தேனீக்கு அவை பதிலும் அளிக்கின்றன. அதற்கு ணமஆஈஃஒசஏ என்று பெயர்.
ராணித் தேனீயின் முதல் வேலை முட்டையிலிருந்து வெளியே வந்த மற்ற குஞ்சு ராணித் தேனீக்களைக் கொல்வதாகும். அடுத்தக்கட்ட வேலை, முட்டைக்குள் பொரியாமல் இருக்கும் குஞ்சுகளைக் கொல்வதாகும். தன்னைப் பெற்றெடுத்த மூத்த ராணித் தேனீயின் கதையையும் முடிக்காமல் விடுவதில்லை.
அதன் பின்னர் தான் ராணித் தேனீ, தேனிலவுக்குத் தயாராகின்றது. ஆண் தேனீக்கள் சங்கமிக்கும் பகுதிக்கு ராணித் தேனீ வருகையளிக்கின்றது. அங்கு அந்தரத்தில் தேன் கூட்டிலிருந்து சுமார் முப்பது அடி உயரத்தில் ஆண் தேனீ, ராணித் தேனீயிடம் உறவு கொள்கிறது. அப்போது ராணித் தேனீயின் வயது 9 நாள்! உறவு கொண்ட மாத்திரத்திலேயே ஆண் தேனீயின் அடிவயிறு கிழிந்து மல்லாக்க விழுந்து இறந்து விடுகின்றது. ஏன்? அது தன் உறுப்பை, ராணித் தேனீயிடம் செலுத்திய பிறகு அதைத் திரும்ப எடுக்க முடிவதில்லை. காரணம் அது வெளியே எடுக்க முடியாத அளவுக்கு அம்பு போன்ற வடிவத்தைப் பெற்றிருப்பது தான். அதிலுள்ள கடைசிச் சொட்டு விந்துத் துளி ராணித் தேனீயின் கர்ப்பக் குழாயில் இறங்கும் வரை அதிலேயே ஊடுறுவி நிற்கின்றது. இது போன்று மற்ற ஆண் தேனீக்களும் ராணித் தேனீயிடம் உடலுறவு கொள்கின்றன. அவ்வாறு உடலுறவு கொள்வதற்கு முன்னால் அங்கு ஏற்கனவே பதிந்திருக்கும் ஆண் தேனீயின் உறுப்பை அகற்றிக் கொள்கிறது. அதன் பின் முந்தைய ஆண் தேனீயைப் போன்றே இதுவும் உடலுறவு கொண்டு உயிரை மாய்க்கின்றது. இப்படி சுமார் 10க்கும் மேற்பட்ட தேனீக்கள் உடலுறவு கொள்கின்றன. உண்மையில் இது அல்லாஹ்வின் படைப்பில் விந்தையும் விநோதமும் ஆகும்.
உடலுறவின் போது ஆண் தேனீக்களிடமிருந்து செலுத்தப் படுகின்ற விந்தின் அணுக்கள் ராணித் தேனீயின் கருக்குழாயில் சேமிக்கப்படுகின்றன. சேமிக்கப்படும் விந்து அணுக்களின் அளவு 90 மில்லியன்கள். இவற்றில் சுமார் ஏழு லட்சம் விந்தணுக்கள் மட்டும் ராணித் தேனீயின் உடற்கூறில் உள்ள ஒரு தனிப் பையில் சேமிக்கப்படுகின்றது. இந்தச் சிறப்புப் பைக்கு நடஊதஙஆபஐஊஈஆ என்று பெயர்.
இவ்வாறு கருவுற்ற பின்னர் இன்னொரு முறை ஆண் தேனீயுடன் உடலுறவு கொள்ள முனைப்பு காட்டுவதில்லை.
சேமிக்கப்பட்ட இந்த விந்தணுக்கள் அழிந்து போகாமல் இருப்பதற்காக ராணித் தேனீயின் உடலுக்குள்ளாகவே புரதச் சத்து அமைக்கப்பட்டுள்ளது. இது அந்த விந்தணுக்கள் அழுகிப் போகாமல் பாதுகாக்கின்றது.
இப்படி ஒரு பாதுகாப்பைப் பெற்ற ராணித் தேனீ, இல்லை! இறைவனின் அதிசயமிக்க ராட்சத இயந்திரம் விந்தைச் சுமந்த பத்து நாட்களுக்குப் பின் தேன் கூட்டுக்குள் முட்டையிட வருகின்றது. வந்ததும் கண்ட இடத்திலும் கொட்டி விட்டுச் செல்கின்ற குப்பை லாரி போன்று அல்லாமல் கூட்டின் ஒவ்வொரு அறைக்கும் வருகையளித்து, அறையின் மறு முனை வரை பார்த்து, தூய்மையாகவும் துப்புரவாகவும் இருக்கும் அறையில் தான் முட்டையிடுகின்றது. தன் மனதிற்குத் திருப்தியடையாத வரை அது அங்கு முட்டையிடுவதில்லை. இதற்காக ராணித் தேனீ அதிகக் கவனம் எடுத்துக் கொள்கிறது.
அறையின் தூய்மையை உறுதி செய்த பின் பசை போன்ற ஒரு திரவத்தை முதலில் சுரக்கின்றது. தான் இடுகின்ற முட்டை அந்தப் பசையில் ஒட்டிக் கொள்வதற்காக இந்தத் திரவத்தைச் சுரக்கின்றது. ஒவ்வொரு அறைக்குள்ளும் சென்று இவ்வாறு நின்ற நிலையிலேயே முட்டையிடுகின்றது.
24 மணி நேரமும்   இயங்கும் ராணி
ஒரு நாளில் 24 மணி நேரமும் சுமார் இரண்டாயிரம் முட்டைகளை இட்டுக் கொண்டேயிருக்கின்றது. இந்த வேளையில் ராணித் தேனீக்கு ஓய்வே இல்லை. உணவு உண்பதற்குக் கூட நேரமில்லை. மனித வாழ்வில் தாய் தான் தன் பிள்ளைகளுக்கு உணவு ஊட்டக் கண்டிருக்கிறோம். ஆனால் தேனீயின் வாழ்வில் பிள்ளைகள் தான், அதாவது பாட்டாளித் தேனீக்கள் தான் ராணித் தேனீக்கு உணவு ஊட்டுகின்றன. ஒவ்வொரு கூட்டிலும் முட்டையிட்ட பிறகு இந்த உணவூட்டும் வைபவம் நடக்கின்றது. அத்துடன் அது கழிக்கின்ற கழிவுகளையும் பாட்டாளித் தேனீக்கள் சுத்தம் செய்கின்றன.
இப்படி எத்தனை நாட்கள் முட்டையிடுகின்றது? அதன் ஆயுட்காலமான சுமார் ஐந்தாண்டுகள் வரை! தேனீயின் சரமாரியான இந்த சந்ததிப் பெருக்கம் அல்லாஹ்வின் படைப்பாற்றலைப் பறைசாற்றுகின்றது. இது ஓர் அபாரமான, அற்புதமான படைப்பு என்பதை எடுத்துக் காட்டுகின்றது. இந்த அற்புதப் படைப்பின் அதிசயங்களைத் தொடர்ந்து பார்ப்போம்.
நாள் ஒன்றுக்கு 1500 அல்லது 2000 முட்டைகள் வீதம் ஆண்டுக்கு லட்சக்கணக்கான, மில்லியன் கணக்கான முட்டைகளை இடுகிறது. இவ்வளவு முட்டைகளை இடுவதற்காகத் தான் ராணித் தேனீயின் கருக்குழாயிலும், இதற்கென தேனடையில் வைக்கப்பட்டிருக்கும் பையிலும் மில்லியன் கணக்கில் விந்தணுக்கள் சேமிக்கப்படுகின்றன.
ஒரு நாளைக்கு ராணித் தேனீ இடுகின்ற முட்டைகளின் கனம் ராணித் தேனீயின் உடலை விடக் கனமானது என்பது அதிசயிக்க வைக்கும் உண்மையாகும்.
ராணித் தேனீயின் உடற் கூட்டுக்குள்ளேயே முட்டைகள் இருக்கின்றன. முட்டைக் கருக்களும் இருக்கின்றன. இவ்விரண்டில் ஒன்று மற்றொன்றுடன் கலந்து விடுவதற்கும் அல்லது தடுப்பதற்கும் வசதியாக தேனீயின் உடற்கூட்டில் ஒரு வால்வு இருக்கின்றது.
ராணித் தேனீயானது பாட்டாளித் தேனீக்கான அறையில் முட்டை யிட்டு, அதனுடன் விந்தணுவையும் சேர்த்து விட்டால் அது பாட்டாளித் தேனீயாக உருவெடுக்கின்றது. விந்தணுக்கள் இல்லாமல் வெறுமனே முட்டை மட்டும் இட்டால் அது ஆண் தேனீயாக உருவெடுக்கின்றது.
இவ்வாறு தேனீயின் இனப் பெருக்கத்திலுள்ள ஒவ்வொரு அம்சமும், அதன் அறிவாற்றலும் நாம் அதிசயிக்கத்தக்க வகையில் அமைந்திருக்கின்றன. மனித இனத்தின் பகுத்தறிவை மிஞ்சுகின்ற வகையில் அமைந்துள்ள தேனீக்களின் இந்த இனப்பெருக்க முறையைக் காணும் போது, இது நிச்சயமாக அனைத்தையும் அறிந்த ஓர் இறைவன் வழங்கிய ஆற்றல் தான் என்று நாம் அவனிடமே  நமது வியப்பைத் தெரிவிக்க வேண்டியுள்ளது.
அழகிய படைப்பாளனாகிய அல்லாஹ் பாக்கியசாலியாவான். (அல்குர்ஆன் 23:14) என்று திருக்குர்ஆன் கூறுவது போல் அவன் அழகிய படைப்பாளனே!

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites