உருது மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்களில் சிலர் குர்ஆனை ஓதும் போது சில உச்சரிப்புகளை மாற்றி ஓதுகிறார்களே இது சரியா ?
? நாங்கள் உருதைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். நாங்கள் அரபி ஓதும் பொழுது, ஹ ங் ந ஆகிய மூன்று எழுத்துக்களையும் ழ உச்சரிப்பில் ஓதி வருகின்றோம். இவ்வாறு ஓதுவது சரியா?
ஏ. பல்கீஸ் பானு, அஷ்ரபுத்தீன், பண்டாரவாடை
குர்ஆன் வசனங்களை ஓதும் போது வார்த்தை, உச்சரிப்பு போன்றவற்றை இயன்ற வரை சரியாக ஓத வேண்டும். திருக்குர்ஆனும் இதையே வலியுறுத்துகின்றது.
குர்ஆனைத் திருத்தமாக ஓதுவீராக! (அல்குர்ஆன் 73:4)
பொதுவாகவே உருது பேசும் மக்களிடம் நீங்கள் குறிப்பிடுவது போன்று அரபு எழுத்துக்களை உச்சரிக்கும் வழக்கம் உள்ளது. அரபு மொழியின் உச்சரிப்புகளைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு அரபு மக்கள் எப்படி அந்த மொழியைப் பயன்படுத்துகின்றார்கள் என்பதைத் தான் பார்க்க வேண்டும். அந்த அடிப்படையில் பார்த்தால் மேற்குறிப்பிட்ட எழுத்துக்களை நீங்கள் குறிப்பிடும் விதத்தில் அரபு மக்கள் உச்சரிப்பதில்லை.
இந்த எழுத்துக்களின் சரியான உச்சரிப்பைத் தெரிந்து கொள்வதற்கு எழுத்து வடிவில் எழுத முடியாது. பல்வேறு காரிகள் ஓதிய கிராஅத் கேஸட்டுக்கள் மற்றும் உச்சரிப்புடன் கூடிய அரபு மொழி அகராதி சிடிக்கள் போன்றவை உள்ளன. இதைக் கேட்பதன் மூலம் இந்த உச்சரிப்புகளின் சரியான பதத்தை அறிந்து கொள்ள முடியும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக