ஒருவர் தவறான கொள்கையில் இருந்து அதை விளங்கி சரியான கொள்கையில் வரும் போது முன்னர் அவர் செய்த நல்லறங்கள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அதற்குரிய கூலியும் கிடைக்கும் என்பதைப் பின்வரும் நபிமொழி தெளிவுபடுத்துகிறது.
"அல்லாஹ்வின் தூதரே! நான் அறியாமைக் காலத்தில் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும் முன், அடிமைகளை விடுதலை செய்தல், உறவினருடன் சோந்து வாழுதல் போன்ற நல்ல காரியங்களைச் செய்துள்ளேன். அவற்றிற்கு (மறுமையில் எனக்கு) நன்மை ஏதும் உண்டா?'' என நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "நீர் முன்னர் செய்த நற்செயல்(களுக்குரிய நற்கூலி)களுடனேயே இஸ்லாத்தைத் தழுவியுள்ளீர்'' என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: ஹகீம் பின் ஹிஷாம் (ரலி)
நூல்: புகாரி 1436
0 கருத்துகள்:
கருத்துரையிடுக