மனைவியின் பின் துவாரம் வழியாக உடலுறவு கொள்ளக் கூடாது என்று நபிமொழிகள் உள்ளதாக அறிகின்றோம். ஆனால் குர்ஆன் 2:223 வசனமும் புகாரி 4528 ஹதீசும் பின் துவாரம் வழியாக உடலுறவு கொள்ளலாம் என்ற கருத்தில் அமைந்துள்ளதாகத் தெரிகின்றதே?
எஸ். முஹம்மத் ஸலீம், ஈரோடு
யார் தன்னுடைய மனைவியின் மலத்துவாரத்தில் உடலுறவு கொள்கின்றானோ அவன் சபிக்கப் பட்டவன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : அபூதாவூத் 1847, அஹ்மத் 3356
யார் ஆணிடமோ அல்லது பெண்ணிடமோ மலத்துவாரத்தில் உடலுறவு கொள்கின்றானோ அவனை அல்லாஹ் மறுமையில் பார்க்க மாட்டான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி), நூல் : திர்மிதீ 1086
மலத்துவாரத்தில் உடலுறவு கொள்வதை இந்த ஹதீஸ்கள் கடுமையாகக் கண்டிக்கின்றன. இது தடை செய்யப்பட்ட செயல் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. புகாரியின் 4528வது ஹதீஸில் மலத்துவாரத்தில் உடலுறவு கொள்வது தொடர்பாகக் கூறப்படவில்லை. அதன் பொருளை தவறாக விளங்கிக் கொண்டதால் இந்தக் கேள்வி எழுகின்றது.
ஒருவர் தம் மனைவியிடம் பின்னாலிருந்து (பெண்ணுறுப்பில்) உடலுறவு கொண்டால் குழந்தை மாறு கண் கொண்டதாகப் பிறக்கும் என்று யூதர்கள் சொல்லி வந்தார்கள். எனவே "உங்கள் மனைவியர் உங்களின் விளை நிலங்கள். ஆகவே உங்கள் விளை நிலங்களுக்கு நீங்கள் விரும்பியவாறு செல்லுங்கள்!'' என்ற (2:223வது) வசனம் இறங்கியது.
அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி), நூல் : புகாரி 4528
இந்த ஹதீஸில் பின் பக்கத்திலிருந்து என்பதைக் குறிக்க "மின் வராயிஹா'' என்ற சொல் இடம் பெற்றுள்ளது. இது மலத் துவாரத்தைக் குறிப்பதல்ல. மாறாக பின் பக்கம் (இஹஸ்ரீந்ள்ண்க்ங்) என்பதையே குறிக்கும்.
மனைவியின் பின் புறத்தில் இருந்து கொண்டு பெண்ணுறுப்பில் புணரக் கூடாது என்றும், அவ்வாறு புணர்ந்தால் பிறக்கும் குழந்தை மாறு கண் கொண்டதாகப் பிறக்கும் என்றும் யூதர்கள் நம்பி வந்தனர். இதை மறுக்கும் விதமாக 2:223 வசனம் அருளப் பட்டது. இதைத் தான் இந்த ஹதீஸ் தெரிவிக்கின்றதே தவிர மலத்துவாரத்தில் புணர்வதை இந்த ஹதீஸ் அனுமதிக்கவில்லை.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக