ஜும்ஆ அன்று மிம்பரில் ஒரு பயானும் தரையில் இருந்தாவறு ஒரு பயானும் செய்கிறார்களே இதற்கு மார்க்கத்தில் அனுமதி உண்டா?
ஜும்ஆவில் மிம்பரில் நின்று பயான் செய்வதே நபிவழியாகும். தரையிலி நின்று பயான் செய்வது பித்அத்தாகும். தவிர்க்கப்பட வேண்டியதாகும்.
நபி(ஸல்) அவர்கள் காலத்தில் மக்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டது. நபி(ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமையன்று மிம்பரில் உரை நிகழ்த்திக் கொண்டிருந்த போது ஒரு கிராமவாசி எழுந்தார்...
அறிவிப்பவர்: அனஸ்(ரலி)
நூல்: புகாரி(1033)
சாயிப் பின் யஸீத் (ர-) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களது காலத்திலும் அபூபக்ர் (ர-), உமர் (ர-) ஆகியோரது காலத்திலும் ஜுமுஆ நாüன் முதல்பாங்கு இமாம் சொற்பொழிவுமேடை மீது அமர்ந்ததும் சொல்லப்பட்டுவந்தது. (புகாரி 912)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக