சூரத்துல் கஹ்ஃப் அத்தியாயத்தை ஓதினால் அவருக்கு அடுத்த ஜும்ஆ வரை பிரகாசம் நீடிக்கின்றது என்று ஹதீஸ் உள்ளது. பிரகாசம் என்றால் ஒளி என்று அறிவோம். இதன் நன்மைகள் என்ன? அரபியில் ஓதினால் தான் இந்த நன்மைகளை அடைய முடியுமா? தமிழில் படித்தாலும் நன்மை கிடைக்குமா? விளக்கம் தரவும்.
ஏ. மாலிக், கோவை.
ஜும்ஆ நாளில் யாரேனும் கஹ்ஃப் (18வது) அத்தியாயத்தை ஓதினால் அடுத்த ஜும்ஆ வரை அவருக்குப் பிரகாசம் நீடிக்கிறது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஸயீது (ரலி), நூல் : ஹாகிம்
இந்த ஹதீஸில் பிரகாசம் நீடிக்கின்றது என்று தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். இதன் நன்மைகள் என்ன என்று இந்த ஹதீஸிலோ அல்லது வேறு ஹதீஸ்களிலோ விளக்கம் கூறவில்லை. நபி (ஸல்) அவர்கள் நன்மை எதையும் வரையறுத்துச் சொல்லாத ஒன்றுக்கு நாம் வரையறுக்க முடியாது. பொதுவாக குர்ஆன் ஹதீஸில் பிரகாசம், ஒளி போன்ற வார்த்தைகள் நேர்வழியுடன் தொடர்பு படுத்தி இலக்கியமாகக் கூறப்படுவதால் அதிகமான நன்மை என்று மட்டும் கூற முடியும்.
அரபு மொழியில் தான் ஓத வேண்டும் என்பதற்கான விளக்கத்தை முந்தைய கேள்விக்கான பதிலில் பார்க்கவும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக